பிஸினஸில் ஜெயிக்க 8 தியாகங்கள்…
1.நேரம்:
தொழில் முனைவோரானாலே உங்கள் நேரம் உங்கள் கையில் இல்லை. உங்கள் பிஸினஸை ஓரளவுக்கு நல்ல நிலைக்குக் கொண்டுவரும் வரை நேரம் உங்களை முழுமையாக கையில் எடுத்துக் கொள்ளும். கல்யாணம் காட்சி, ஊரில் திருவிழா,பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங், சினிமா, பார்க் என்பதெல்லாம்கூட ஆரம்ப கட்டத்தில் முற்றிலும் மறக்க வேண்டியதுதான்.
2. உறவுகள்:
உறவுகள் மேம்பட பணம் காசு தேவையில்லை. நேரம் ஒதுக்குவதுதான் முக்கியம்.மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் நீங்கள்உடனிருந்தால்தான் உறவுகள் மேம்படும். உங்கள் தொழில் உங்கள் தினசரி காலண்டரை நிர்வாகம் செய்தால், தொழில் மட்டும்தான் மேம்படுமே தவிர உறவுகள் அல்ல. தொழில் நிலைத்து நிற்கும் வரை உறவுகளை மறக்க வேண்டியிருக்கும்.
3. உடல் நலம்:
ஆரம்ப காலத்தில் 24 x 7 வேலை என்றிருக்க வேண்டியிருக்கும். பின்னர் அதுபழகிப்போய்விடும்Ð இப்படி 24 மணிநேரமும் முழுகியிருக்கும்போது உங்கள்உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக டாக்டரிடம் போகவே மாட்டீர்கள்.அப்புறம் என்ன பெரிய ரிப்பேர்தான் உங்களை கட்டாய ஓய்வெடுக்க வைக்கும்.உடலுக்கு ஓய்வு, பராமரிப்பு மற்றும் மனதுக்கு என்டர்டெய்ன்மென்ட் போன்றவைஅவசியம். ஹெல்த்தைப் பார்க்காமல் தொழில் நிலைகொள்ளும் வரைஓடிக்கொண்டேயிருக்க வேண்டியிருக்கும்.
4. வாய்ப்புகள்:
இருக்கும் தொழில் தவிர மற்றவற்றில் நிறைய வாய்ப்புகள் கண் முன்னே தெரிந்தபோதிலும் அவற்றைச் செயல்படுத்த முடியாமல் போகும். பிள்ளையை நல்ல ஸ்கூலில் சேர்க்க அப்ளிகேஷன் வாங்கும் தேதியைத் தவறவிடுவதிலிருந்து, நல்ல இடத்தில் விலைக்கு வரும் வீட்டுமனையைத் தவறவிடுவது வரை பல்வேறு வாய்ப்புகள் கை நழுவிப்போகும்.
5. பணம்:
பணம் சம்பாதிக்கத்தானே தொழில் என்கின்றீர்களா? அது உண்மை தான். ஆனால்,புதிய தொழில்முனைவோர்கள் பல்வேறு விதத்திலும் பணத்தினை இழக்கவேண்டியிருக்கும். நிறைய விஷயத்தைப் புதிதாகச் செய்வதால் ஒன்றுக்கு ரெண்டாகபல இடங்களில் செலவாகும்.
6. சகிப்புத் தன்மை:
புதுத்தொழில் அல்லவா? நம்மிடம் வேலைக்கு இருக்கும் நபர்கள் கூட கொஞ்சம்இளக்காரமாகப் பார்க்கும் காலமாக இருக்கும். செலவுகளுக்குத் தடுமாறும்போது(குறிப்பாக சம்பள நாட்களில்) இந்த கம்பெனி எத்தனை நாளைக்கு ஓடும் என்றஇளக்காரம் ஆபீஸ் பையன் முதல் சப்ளையர் வரை பலருக்கும் இருக்கும். அதைஎல்லாம் புன்முறுவலோடு சகித்துக்கொள்கிற தன்மை வரவேண்டும்.
7. நான் என்கிற எண்ணம்:
உங்கள் புராடக்ட் தரமானதாக இருந்தாலும் புதுசா அதை எடுத்துக்கொண்டு போய்மார்க்கெட் செய்யும்போது படும் கஷ்டமும் அவமானமும் சொல்லிமாளாது. ‘என்னகுவாலிட்டிÐ அடிமாட்டு விலைக்குத் தர்றேன். கடைக்காரர் கண்டுக்கவேமாட்டேங்குறாரேД என்று குமைந்து போவீர்கள். நான் என்கிற எண்ணத்தைஒழித்துக்கட்டிவிட்டால், நம்மையோ நம் பொருட்களையோ தவறாகப் பேசினாலும்கோபப்படாமல், அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவோம்.
8. மானம் மரியாதை:
மூன்று வருஷ குடும்ப மற்றும் தொழில் ரீதியான செலவுக்குத் தேவையான முழுப்பணத்தையும் பேங்கில் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வைத்துக்கொண்டு யாரும்பிஸினஸ் ஆரம்பிக்க முடியாது.
கடனை உடனை வாங்கித்தான் பிஸினஸ் நடத்த முடியும். சப்ளையரிலிருந்து வீட்டுச் செலவு வரை பணம் தேதியில் தராவிட்டால் கொஞ்சம் மரியாதைக் குறையத்தான் செய்யும். அதையும் தியாகம் செய்யத்தான் வேண்டும்.
இப்படிப் பால தியாகங்களைச் செய்து தொழில் முனைந்தால் தான் பங்களா, கார் என பல வசதிகள் கிடைக்கும். இந்தத் தியாகங்களைச் செய்ய மனம் வராவிட்டால்உங்களுக்கு மிஞ்சுவது தொழிலதிபராக வேண்டும் என்கிற தாகம் மட்டுமே.
Yours Happily
Jc.Dr.Star Anandram
www.v4all.org
cell -97900444225
Yours Happily
Jc.Dr.Star Anandram
www.v4all.org
cell -97900444225
No comments:
Post a Comment