Sunday, July 13, 2014

100th post spl - தோல்விக்குகாரணம் அதன்பெயர்தான் என்று விற்ற அந்தப்பெயர் கொக்கா கோலா...

தவறுகளும் பெரும் வரங்களாகும் சரித்திரங்கள் இந்த உலகத்தில் நடக்காமல் போனது கிடையாது. தவறுகளைக்கூட இன்னொரு பரினாமத்திற்கு இட்டுச்சென்று அந்தப்பரினாமத்தில் வெற்றி பெறமுடியுமா? என சிந்திப்பவனுக்குப்பெயர்தான் விவேகி. உங்கள் ஒவ்வொரு தவறுகளினபோதும் நீங்கள் விவேகி ஆக முயற்சித்தது உண்டா?

1886
ஆம் ஆண்டு மருந்து தயாரிப்பாளர் ஒருவர் தலைவலிக்கான திரவமருந்து ஒன்றை உருவாக்கினார். அதை நோயாளிகளுக்கு அளித்தபோது, அதனால் ஒரு பலனும் ஏற்படவில்லை. மனமொடிந்து போய் இருந்த அந்த மருந்து தயாரிப்பாளர், தன்னை சந்திக்கவந்த நண்பர் ஒருவருக்கு பானம் கொடுப்பதற்குப்பதில் தனது புதிய மருந்தை பானம் என கொடுத்துவிட்டார். 
ஆனால் அதை அருந்திய அவரது நண்பர், இந்தப்பானம் வித்தியாமான சுவையாக இருப்பதாகவும் தனக்கு இன்னும் ஒரு குவளை பானம் தருமாறும் கேட்டார்.

அந்த மருந்து தயாரிப்பாளரும் மிச்மிருந்த அந்த மருந்தினுள், ஐஸ்கட்டிகளை இட்டும், தண்ணீருக்குப்பதிலாக மீண்டும் ஒரு தவறாக அருகில் இருந்த வெற்று சோடா திரவத்தையும் ஊற்றிவிட்டார். மருந்துக்குப்பதில் ஒரு சுவையான குளிர்பானத்தை அந்தக்கணத்தில் உருவாக்கினார் அவர்.

இப்படி ஏதேட்iசாயகத் தயாரான தனது வித்தியாசமான குளிர்பானத்தை எப்படியாவது விற்று சாசு பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தார் அவர்.
தொடக்கத்தில் அவரது குளிர்பானம் எதிர்பார்த்த வெற்றியினைப்பெறவில்லை.
அதற்குக்காரணம் அதன் பெயர்தான் என எண்ணிய அவர், அந்த நிறுவனத்தை விற்றுவிட்டு 'ரொஸ்பெரி கோலா' நிறுவனம் என புதியதொன்றை ஆரம்பித்தார்.

அப்படி தோல்விக்குகாரணம் அதன்பெயர்தான் என்று விற்ற அந்தப்பெயர்தான் கொக்கா கோலா...

இத்தனை தவறுகளில் உருவான இந்த கொக்கா கோலா நிறுவனம் செய்த இன்னும் ஒரு தவறு இன்று இன்னும் ஒரு பெரும் போட்டி நிறுவனத்தை வளர ஏதுவாக அமைந்துவிட்டது.
கோக் நிறுவனம் பெரும் வெற்றிபெற்றதன் பின்னர் சார்லஸ் க்ரூத் என்பவர் தனது நட்டமடைந்த குளிர்பான நிறுவனத்தை வெறும் ஆயிரம் டொலர்களுக்கு கொக் கோலா நிறுவனத்திற்கு விற்க முன்வந்தார். ஆனால் குளிர்பான உலகத்தில் போட்டியே இன்றி ஏகபோக வெற்றிக்கொடி கட்டிக்கொண்ட கோலா நிறுவனம் உங்கள் நட்டமடைந்த நிறுவனம் எங்களுக்குத்தேவையில்லை என அறிவித்தது.
ஆனால் கொக் கோலா நிறுவனத்திற்கு அன்று தெரியவில்லை அந்த நட்டமடைந்த சிறு நிறுவனம்தான் பின்றாளில் தனக்கு நேர்ப்போட்டியாளனாக வரப்போகும் பெப்ஸி

Ur s- www.v4all.org 

No comments:

Post a Comment