சிங்கத்தையும்,
மயிலையும் கூண்டில் அடைக்கத் தெரிந்த மனிதர்களாகிய நாம்-
புலம்பல் என்ற ஒரு பெரிய
கூண்டை உருவாக்கி அதில் நாமே மாட்டிக்
கொண்டிருக்கிறோம். சரி இந்த கூண்டிலிருந்து
எப்படி வெளியேறுவது? கூண்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் முதலில்
நாம் கூண்டிற்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறோம்
என்ற விழிப்புணர்வு முக்கியம்.
அடைபட்டுக்
கிடப்பது என்பது ஒருவிதமான மனநோய்,
அதன் அறிகுறியை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவரை
பார்த்து இப்படி ஆகிவிட வேண்டும்,
அப்படி வாழ வேண்டும் என்ற
நினைப்பு தான் அது. ஆனால்
வெற்றி பெற்றவர்களைப் பார்த்து அதே போல் ஆக
வேண்டும் என்று நினைப்பது ஒரு
ஆரோக்கியமான சிந்தனை தானே, அது
எப்படி மனநோயாக இருக்க முடியும்
என கேட்கலாம்.
எந்த ஒரு விஷயமும் சுயமாக
ஆராய்ந்து, முடிவு எடுக்காமல், பிறரைப்
பார்த்து எடுப்பது என்பது நிச்சயம் ஒரு
சமயத்தில் குழப்பத்தை தந்து காலை வாரிவிட்டு
விடும். இன்னொரு பக்கம், உங்களுக்கே
உரித்தான, நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய
காரியத்தையும், நீங்கள் மட்டுமே அடையக்
கூடிய அந்த அனுபவத்தையும் நிச்சயமாகத்
தவற விடுவீர்கள்.
இந்த வெற்றி, தோல்வி கண்ணோட்டம்
பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாகி, ஓய்வு பெறும் வயது
வரை உங்களை பாடாய்ப்படுத்துகிறது என்பதை தெளிவாக
புரிந்து கொள்ள வேண்டும். எது
எது சந்தோஷம் தருகின்றதோ, அவைகளுக்கு வெற்றி என்று பெயர்
சூட்டியும், எது எது துக்கம்
தருகின்றதோ, அவைகளுக்கு தோல்வி என்று பெயர்
சூட்டியும் பழகி விட்டோம்.
இதற்கு
ஆரம்ப வித்து பள்ளியில் இருந்தே
முளைவிடத் தொடங்கியது. ‘கிளாஸ் பர்ஸ்ட், ஸ்கூல்
பர்ஸ்ட், ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்”
”ஒரு என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆயிரணும்” ஓ.கே. இந்த
விதிமுறைகள் ஒன்றும் தப்பில்லை ‘பாசிட்டிவ்’
சிந்தனைகள் தான். ஆனால், பொதுவான
ஒரு விதிமுறையை நாம் கவனிப்பது இல்லை.
அனைவரும்
நன்றாக படித்து சென்டம் வாங்கினால்
யார் கிளாஸ் பர்ஸ்ட்? அப்படி
ஒரு சம்பவம் எப்பொழுதும் நடப்பதில்லை.
மாணவர்களைச் சுற்றி ‘மெஷின் கன்’னை வைத்து கொண்டு
மிரட்டி படிக்க சொன்னால் கூட,
உயிருக்கு பயந்து கூட அனைவரும்
‘முதல் ரேங்க்’ எடுக்க மாட்டார்கள்.
எடுக்கவும் முடியாது.
எவருமே சாதாரண நபர்களில்லை, ஒரே
மாதிரி நபர்களுமில்லை… ஒரு மனிதனோட கட்டைவிரல்
ரேகை மாதிரி, இன்னொரு மனிதனுக்கு
இருக்காது. 700 கோடி கட்டை விரல்
ரேகைகளும் வேறு தான்… இயற்கையே
இவ்வளவு ‘சிம்பிள்’ஆக சொல்லி விட்ட
பிறகும் கூட நாம் தான்
முதல் இடம், இரண்டாம் இடம்
என்று அடித்துக் கொண்டிருக்கிறோம்.
சிந்தனையை
ஒருமுகமாக்கி எடுத்துக் கொண்ட செயல்களில் முழுமையாக
நம்மை ஒப்படைக்கும்போது நாம் முயற்சிக்கும் எந்தவொரு
செயலுக்கும் எப்படியும் வெற்றி வந்தே தீரும்.
அதனால்
முதல் இடமே லட்சியம் என்ற
சிந்தனையை தோளில் தூக்கி சுமந்து
திரியாமல் காரியமாற்றினால் அப்போது அதுவாகவே தேடிவரும்.
அந்தநேரத்தில் அந்த வெற்றி உங்களுக்கு
சாதாரணமாகவே படும் என்பது தான்
ஆச்சரியம். பக்குவப்பட்ட வெற்றி எப்போதுமே அகந்தை
தராது என்பது இதில் உணரவேண்டிய
உண்மை.
No comments:
Post a Comment