Showing posts with label goal setting. Show all posts
Showing posts with label goal setting. Show all posts

Thursday, March 10, 2016

விருப்பத்தை நிறைவேற்றும் பிரிஞ்சி இலை

விருப்பத்தை நிறைவேற்றும் பிரிஞ்சி இலை


கிரகங்களில் சூரியனின் ஆகர்ஷன சக்தியை பெற்றது 'பே லீவ்ஸ்' எனப்படும் பிரிஞ்சி இலை. இதை பொடித்து நீரில் கரைத்து நாம் வசிக்கும் வீடு/ தொழில் இடங்களில் தெளித்து வர எதிர் மறை சக்திகள் விலகும். மேலும் இந்த இலையில் நம் விருப்பம் ஏதேனும் ஒன்றை எழுதி சூரியனை தியானித்து விளக்கு ஒளியில் காட்டி எரிக்க விரைவில் விருப்பம் நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.

Monday, July 27, 2015

ஏழை அப்பா… பணக்கார அப்பா!


ஏழை அப்பா… பணக்கார அப்பா! - 

WWW.HAPPY4ALL.ORG

‘‘பணக்காரர்கள் மட்டுமே பணக்காரர்களாகிறார்கள். ஏழைகளும், மிடில் கிளாஸ் மக்களும் தொடர்ந்து அப்படியேதான் இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா?’ என்று ராபர்ட் சொல்ல ஆரம்பித்தார்…
‘‘பணத்தை எப்படிக் கையாள்வது… அதை எப்படிப் பெருக்குவது? என்றெல்லாம் எந்தப் பள்ளிக்கூடத்திலுமே சொல்லிக் கொடுப்பதில்லை. இதையெல்லாம் பிள்ளைகள், தங்களின் பெற்றோரைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் பணக்காரர்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் படிக்கிறார்களோ இல்லையோ… மீன் குஞ்சுக்குத் தானாகவே நீச்சல் வருவது மாதிரி அவர்களுக்குச் செல்வத்தைப் பெருக்கும் கலை தானாகவே வந்துவிடுகிறது. ஆனால் மிடில் கிளாஸ் வீட்டுப் பிள்ளைகள், என்னதான் நன்றாகப் படித்தாலும் அவர்களால் பணக்காரர்களாக முடிவதில்லை!’’ என்றார் ராபர்ட்.
‘‘பள்ளிக்கூடம் போகப் போவதில்லை. பணக்காரனாகப் போகிறேன் என்று சொன்ன உனது மகன் மாதிரிதான் சிறுவனாக இருந்தபோது நானும் என் அப்பாவிடம் சொன்னேன். அது இருக்கட்டும்… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு இரண்டு அப்பாக்கள். ஒரு அப்பா ஏழை! இன்னொரு அப்பா பணக்காரர்!’’ என்று எடுத்த எடுப்பிலேயே புதிர் போட்டார் ராபர்ட்.
அவரே அதை அவிழ்க்க ஆரம்பித்தார்… ‘‘பேப்பர் படித்துக் கொண்டிருந்த என் ஏழை அப்பாவிடம், ‘பணக்காரனாக வேண்டும். அதற்கு என்ன வழி?’ என்று ஒருநாள் கேட்டேன். ‘ஏன் இப்படிக் கேட்கிறாய்?’ என்று என்னிடம் கேட்டார் அப்பா. ‘இன்று என் நண்பன் ஒரு பார்ட்டிக்காக வகுப்பில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தான். ஆனால், என்னையும் என் இன்னொரு நண்பனான மைக்கையும் மட்டும் அவன் அழைக்கவில்லை’ என்றேன்.
‘ஏன் அழைக்கவில்லை?’ என்று கேட்டார் அப்பா. ‘காரணம், நாங்கள் இருவரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அதனால்தான் கேட்கிறேன்… நான் பணக்காரனாக என்ன வழி?’
இந்தக் கேள்விக்கு என் அப்பா பதிலேதும் சொல்லவில்லை. அப்போது எனக்கு வயது ஒன்பது. அடுத்த நாள் என்னைப் போலவே பார்ட்டிக்கு அழைப்பு கிடைக்காத என் நண்பன் மைக்கைச் சந்தித்தேன்.
‘பணக்காரன் ஆவது எப்படி?’ என்ற கேள்வி என்னைப் போலவே மைக்கின் மனதிலும் ஒரு உறுத்தலாக உட்கார்ந்து இருந்தது. அப்போது மைக்கின் அப்பாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என் அப்பா மாதிரி அதிகம் படித்தவர் இல்லை. ஆனால், என் அப்பாவைவிட அதிகமாகச் சம்பாதிப்பவர். பெரிய பணக்காரர் இல்லை. ஆனால், பணக்காராக ஆகிக் கொண்டிருப்பவர். கட்டட காண்ட்ராக்டராக இருக்கிறார். ஒரு மளிகைக் கடையும் நடத்துகிறார். அடுத்த ஊரில் புதிதாக ஒரு ஓட்டல்கூட ஆரம்பித்திருப்பதாக மைக் சொன்னான். என் அப்பாவிடம் கேட்ட அதே கேள்வியை மைக்கின் அப்பாவிடமும் கேட்டேன். ‘உன் கேள்வி எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், பணக்காரனாவது எப்படி என்பதை, நான் வகுப்பறையில் உட்காரவைத்து உனக்குப் பாடம் எடுப்பது மாதிரி சொல்லிக்கொடுக்க மாட்டேன். விடுமுறை நாட்களில் எனது மளிகைக் கடைக்கு வா. இருவரும் வந்து வேலை பழகுங்கள். அப்படி வந்தால், பணக்காரனாவது எப்படி என்று நான் கற்றுத்தருகிறேன்’ என்றார்.
ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் கற்றுக்கொடுத்த பாடம்தான் அவரை நான் ‘என் பணக்கார அப்பா’ என்று இப்போதும் பெருமையோடு சொல்லிக்கொள்ளக் காரணம்’’ என்றார் ராபர்ட்

Friday, July 10, 2015

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,
சூட்சுமமாக இருந்து நம்மைக்
காக்கும் மகான்களின் ஜீவசமாதிகளை
வழிபடும் சூட்சும வழிபாட்டு
முறை: சில ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்புவரையிலும், ஆவி
வழிபாடுதான் நமது தமிழ்நாட்டில்
இருந்துவந்தது.அக்காலத்தில் இருந்த
ஆன்மீக அருளாளர்கள் " கலிகாலத்தில்
மனிதர்களின் வாழ்க்கை,சிந்தனை
முறை எப்படி இருக்கும்?" என்பதை
சிந்தித்தன் விளைவாக ஆவி
வழிபாட்டு ஸ்தலங்களான ஜீவசமாதிகள்
மற்றும் சித்தர்களின் ஜீவசமாதிகளை
கோவில்களாக மாற்றினார்கள்.எந்த
மகான் எந்த கடவுளின் மீது பிரியமாக
இருந்தாரோ, அல்லது எந்த கடவுளை
வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை
அவரது ஜீவசமாதியின் மீது அல்லது
அருகில் பிரதிஷ்டை
செய்யப்பட்டது.பெரும்பாலான
மகான்களும்,சித்தர்களும் சிவனை
வழிபட்டிருக்கின்றனர்.அபூர்வமான
சிலர் விநாயகரையும்,
முருகக்கடவுளையும்,சக்தியையும்,
முனீஸ்வரரையும்,
கருப்பசாமியையும்
வழிபட்டிருக்கின்றனர்.அதனால்,அந்த
ஜீவசமாதிகளின் மீது அல்லது அருகில்
(ஒரே கோவிலுக்குள்) உரிய
தெய்வங்கள் அமைக்கப்பட்டு,கோவில்களாக
மாற்றப்பட்டுள்ளன.
உதாரணமாக சித்தர் போகரின்
வழிபாடு முருகக்கடவுளின்
வழிபாடு
ஆகும்.அதனால்,பழனிமலையில்
முருகக்கடவுளின் கோவில்
உருவானது.நாம் பழனி
முருகக்கடவுளை
தொடர்ந்து,முருகக்கடவுளின்
வழிபாட்டுமுறைகளுக்கு ஏற்றவாறு
வழிபட்டால்,போகர் அகமகிழ்ந்து,நமது
கோரிக்கைகளை
நிறைவேற்றுவார்;பிரச்னைகளைத்
தீர்ப்பார்;நோய்களைக்
குணப்படுத்துவார்;துன்பங்களை
நீக்குவார்;
ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட
வேண்டும்?
முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால்
கட்டப்பட்ட மாலை,ஒருகிலோவுக்கு
குறையாமல் டையமண்டு
கல்கண்டு,அரை கிலோவுக்குக்
குறையாமல் விதையில்லாத கறுப்பு
திராட்சைப்பழங்கள்,கொஞ்சம்
விதையில்லாத பேரீட்சைப்பழங்கள்
இத்துடன் கொஞ்சம்
வெற்றிலையும்,கொட்டைப்
பாக்கும்,சந்தனபத்திக் கட்டும்,ஆறு
நாட்டு வாழைப்பழங்களும் கொண்டு
வந்து பத்தி பொருத்தி,தேங்காய்
உடைத்து,கற்பூரம்
கொளுத்தி,சிகப்பு ரோஜாக்களால்
கட்டப்பட்ட மாலையை ஜீவசமாதியில்
உள்ள தெய்வச்சிலைக்கு அணிவிக்க
வேண்டும். நெய்தீபம் ஜீவசமாதியின்
முன்பு ஏற்ற வேண்டும்.
எந்த எந்த நாட்களில் ஜீவசமாதி
வழிபாடு செய்யலாம்?
பகைவரோடு போராடி,போராடி
களைத்துபோன நேர்மையாளர்கள்,
தங்களது நியாயமான பிரச்னைகள் தீர
திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7
மணிக்குள் இவ்வாறு 8
திங்கட்கிழமைகளுக்கு மட்டும்
வழிபாடு செய்ய வேண்டும்;
குலதெய்வம்
தெரியாதவர்கள்,குலதெய்வத்தின்
கோபத்துக்கு
ஆளானவர்கள்,குலதெய்வ வழிபாட்டை
மறந்தவர்கள்,குல தெய்வத்தை
அறியாமல் இருந்து ,அதனால்
கஷ்டப்படுபவர்கள் அனைவரும்
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு
மேல் 7 மணிக்குள் இவ்வாறு
வழிபாடு செய்ய வேண்டும்;இப்படி 8
செவ்வாய்க்கிழமைகளுக்கு
தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய
வேண்டும்;
வேலைக்குப்
போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும்
சுயதொழில் செய்பவர்கள்
பொருளாதார முன்னேற்றம் அடைய
விரும்புவோர்,புதன் கிழமைகளில்
மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள்
இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய
வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 8
புதன்கிழமைகளுக்குச் செய்து வர
,நல்ல பொருளாதாரத் தன்னிறைவை
அடைய முடியும்.
தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு
தகுந்த குருவைத்
தேடுபவர்கள்,வியாழக்கிழமைகளில்
மாலை 5 முதல் 7 மணிக்குள்
இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய
வேண்டும்.இப்படி 8
வியாழக்கிழமைகளுக்கு மட்டும்
வழிபாடு செய்தாலே போதுமானது;
பணரீதியான பிரச்னைகள்
இருப்போர்,பண நெருக்கடியில்
இருப்பவர்கள் அதிலிருந்து மீள
வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7
மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி
வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி
தொடர்ந்து 8
வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும்
வழிபாடு செய்தாலே போதுமானது;
பண நெருக்கடி,தொழில்
மந்தநிலை,குடும்பப் பிரச்னைகள் என
எல்லாவிதமான பிரச்னைகளும் தீர
விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5
முதல் 7 மணிக்குள் இவ்வாறு
ஜீவசமாதி வழிபாடு செய்துவர
வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8
சனிக்கிழமைகளுக்கு மட்டும்
வழிபாடு செய்துவிட்டாலே
போதுமானது.
நீண்டகாலமாக வழக்குடன்
போராடிக்கொண்டிருப்பவர்கள்(எந்தப்
பிரச்னையாக இருந்தாலும் சரி)
ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள்
மேற்கூறியவாறு ஜீவசமாதி
வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு
தொடர்ந்து 8
ஞாயிற்றுக்கிழமைகளுக்கு
வழிபாடு செய்தால் போதுமானது.
இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள்
யாராக இருந்தாலும் சரி,அவர்கள்
கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை
அடியோடு நிறுத்தியாக
வேண்டும்;இது ரொம்ப
முக்கியம்.முட்டை,முட்டை கலந்த
கேக்,புரோட்டா என மறைமுக அசைவ
உணவுகளையும் தவிர்த்துவிட்டே
இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய
வேண்டும்.யார் எந்த ஊரில்
இருக்கிறார்களோ,அந்த ஊரில்
இருக்கும் ஏதாவது ஒரு
ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை
முடிக்கலாம்;துக்கம்,பிறப்பு
முதலியவற்றால் தொடர்ந்து 8
வாரங்கள் செய்ய
முடியாவிட்டாலும்,விட்டு விட்டு
செய்தாலும் போதுமானது.அதே
சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ
சமாதி வழிபாடுகளை பின்பற்றக்
கூடாது.எச்சரிக்கை!!!

Monday, July 14, 2014

தன்னம்பிக்கை திமிரா?: வைரமுத்து - பாரதிராஜா போட்ட நட்புச்சண்டை! - வைரமுத்து மணி விழா கவிஞர்கள் திருநாள்

வைரமுத்து மணி விழா கவிஞர்கள் திருநாள்

"வயதோ அறுபது... வாலிபமோ இருபது... நோபல் பரிசுதான் இனி வருவது...!" -  60 வயதை தொட்டு விட்ட கவிஞர் வைரமுத்து, கோவையில் தனது மணி விழாவை நேற்று கோலாகலமாக கொண்டாடியபோது அவருக்கு விழுந்த பாராட்டு மழையில் ஒரு துளிதான் இது.

வைரமுத்துவுக்காக அவரது மணி விழாவினை கவிஞர்கள் திருநாள், கலை இலக்கிய திருவிழாவாக கோவையில் கொண்டாடியது வெற்றித்தமிழர் பேரவை. இரு தினங்கள் கோவையில் கவிஞர்களும், எழுத்தாளர்களும், உலகத்தமிழர்களும் வைரமுத்து வாழ்த்து பாடினார்கள்.

ஒரு கவிஞருக்காக இத்தனை பேர் கூடுவார்கள் என்பதே விழாவின் வெற்றி. விழாவின் முதல்நாளான 12ம் தேதி தமிழ் நடை பேரணி நடக்கும் என அறிவிக்க, மாணவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என பல்லாயிரம் பேர் திரண்டனர். இடைவிடாது தூறிய மழையையும் துளியும் பொருட்படுத்தாமல் நனைந்தபடி, தமிழ் நடை போட்டது ஒட்டுமொத்த கூட்டமும்.

மறுநாள் காலை கோவை கொடிசியா அரங்கில் கவிஞர்கள் திருநாளாய் தொடர்ந்தது மணி விழா.  பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் என வரிசையாக அலங்கரித்த ஓவியங்களில் அவர்களுக்கு அடுத்து நான்காவது இடத்தில் வைரமுத்து ஓவியம் இடம்பெற்றிருக்க பிரம்மாண்டமாய் இருந்தது மேடை.

துவக்க நிகழ்வாக நடந்த கருத்தரங்கத்தில் அப்துல் கலாம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விமலா, மலேசியா அமைச்சர் டத்தோ சரவணன் ஆகியோர் பேச, அதைத்தொடர்ந்து உலகத்தமிழர் வாழ்த்தரங்கம், படைப்பரங்கம், கலையுலக வாழ்த்தரங்கம் என நாள் முழுவதும் நடந்த அரங்குகளில் வைரமுத்துவும், அவரின் படைப்புகளும் சிலாகிக்கப்பட்டன. இரவு கலையுலக வாழ்த்தரங்கத்தில் பங்கேற்க இயக்குனர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோர் மேடையேற பரபரத்தது கூட்டம்.
முதலில் பேசிய மணிரத்னம், "வைரமுத்துவின் "நான் பாடும்... மெளனராகம் கேட்டதில்லையா..."ங்கற பாட்டுல இருந்துதான் எனக்கு மெளனராகம் அப்படீங்கற டைட்டிலே கிடைச்சது. அதுக்கு அப்புறம் ரோஜாவுலதான் நாங்க முதன் முதலா சேர்ந்து வேலை பாத்தோம். இங்கே வைரமுத்துவை நான் வாழ்த்த வரலை. அவர்கிட்ட வேண்டிக்க வந்திருக்கேன். இப்போ தமிழ் சினிமாவுல இருக்கற பாடலாசிரியர்கள்ல அவரோட பாதிப்பு இல்லாத பாடலாசிரியர்கள் இல்லை. அது மட்டும் போதாது. தமிழ் பாடலுக்கும், தமிழ் கவிதைக்கும் உள்ள இடைவெளியை முழுமையாக மறைச்சுடணும்," என முடித்தார்.

"கண்ணதாசனுக்கு பின்பு நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் வைரமுத்து. எங்களது தயாரிப்பான ரோஜா படத்தில இவர் பாடல் எழுதட்டும்னு மணிரத்னம்கிட்ட அழைச்சுட்டு போனேன். அப்போ யோசிச்சார் மணிரத்னம். இப்போ அவரோட எல்லா படத்துக்கும் இவர்தான் பாட்டு எழுதறார். அந்தளவுக்கு எல்லோருக்கும் பிடிச்ச கவிஞர் வைரமுத்து," என்றார் பாலச்சந்தர்.

அடுத்து பாரதிராஜா மைக் பிடிக்க பரபரத்தது கூட்டம். "ஒரு விஷயத்தை பகிரங்கமாக சொல்லி விட்டு பேசுகிறேன். ஒலி பெருக்கி முன்னால் பேசும்போது, நிறைய பொய் பேசி இருக்கிறேன். எவ்வளவு அதிகமாக பொய் பேசி இருக்கிறோமோ, அவ்வளவு அதிகம் கை தட்டல் கிடைத்திருக்கிறது. வெளிப்படையாக பேசினால் நான் விமர்சிக்கப்படுவேன். அதனால் சமீபகாலமாக நான் எந்த நிகழ்ச்சியிலும் பேசுவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் இந்த நிகழ்ச்சியை நான் நிராகரிக்க முடியவில்லை.
இந்த மேடையில் நான் பயப்படாமல் ஒருவனை நான் விமர்சிக்க முடியும் என்றால் அது வைரமுத்துவைத்தான். என்னதான் மிகப்பெரிய இலக்கியவாதியாக இருந்தாலும், சிறந்த எழுத்தாளனாக இருந்தாலும் ஊடகத்தின் மூலமாகத்தான் அவன் வெளிப்பட முடியும். வைரமுத்து என்ற மகா கவிஞன், திரைத்துறைக்கு வராமல் இருந்திருந்தால், அவரது  இலக்கியங்கள் அடையாளம் காணப்படாமல் போய் இருக்கும். 'என்னை தங்க கூண்டில் அடைத்து விட்டார்கள்' என்கிறார் வைரமுத்து. தங்க கூண்டில் உன்னை வைத்ததால்தான் உன்னை எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள்.

நான் அறிமுகப்படுத்தியவன் என்ற தகுதியை விட, சுயம்புவாக உன்னை நீயே வளர்த்துக்கொண்டாய் அதுதான் உன் தகுதி. விதைத்தவன் யார் என்பது முக்கியமல்ல.விதை வீரீயமாக இருக்கிறதா, நிலம் பண்பட்டிருக்கிறதா என்பதுதான் முக்கியம். இந்த விதை வீரியமுள்ள விதை என்பதால் தான், விருட்சமாக நிற்கிறது.

வைரமுத்து என்னை சந்தித்த நாட்கள் இருக்கிறதே..பெரிய திமிர் அவனுக்கு. என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தவன், 'புத்தகத்தை கொடுத்து, என்னை பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என்றான். உன் புத்தகத்தை விமானத்தில் படித்தேன் என்றபோது, உயர்ந்த விஷயத்தை உயர்ந்த இடத்தில் இருந்துதான் படிக்க முடியும் என்றான்.  எனக்கு அவன் தண்ணி வண்டினு பேர் வைச்சிருக்கான். தண்ணி வண்டி தடுமாறாது. அதே மாதிரி எந்த இடத்திலும் நான் தடுமாறுவதில்லையே. கவிஞர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

எனக்கும், அவனுக்கும் கருத்தில் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஆனால் அது கருத்தில் மட்டும்தான். அவன் கெட்டிக்காரன். எழுத்தில் எவ்வளவு வலிமையாக செயல்படுகிறானோ. அதே போல் செயலிலும் வலிமையாக செயல்படுகிறான். அற்புதமான மூலிகை, மனிதனை தேடிப்போவதில்லை. மூலிகையை தேடித்தான் மனிதர்கள் போவார்கள். நீங்கள் வைரமுத்துவை தேடி வந்திருக்கிறீர்கள்," என பேசி முடித்தார்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய வைரமுத்து, பாரதிராஜாவுக்கு பதில் அளித்து பேசத்துவங்கினார். "நான் பொய் சொல்வதை நிறுத்தி விட்டேன் என்கிறார் பாரதிராஜா. வாழ்க்கை சின்ன சின்ன பொய்களால்தான் இயங்குகிறது. உங்கள் படம் போல் எடுக்க இனி ஆளில்லை என்ற பொய்தான் உங்களை வாழ வைக்கிறது. என்னை பாராட்டிய வார்த்தைதான் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

என்னை சுயம்பு என்றீர்கள். வீரிய வித்து என்றார்கள். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒரு விதை முளைக்க மண், காற்று, வெப்பம், நீர் நான்கு காரணிகள் தேவை. விதை முளைக்க எத்தனை காரணிகள் தேவை?

திமிர் பிடித்தவனா இந்த வைரமுத்து? என்னை விட எளிமையானவன் உண்டா? தன்னம்பிக்கைக்கு பெயர் திமிர் என வைப்பதா? புதிய வார்ப்புகள் பார்த்து மிரண்டேன். பாரதிராஜாவை பார்த்து ஒன்று சொன்னேன். 'உங்கள் படத்தில் எல்லாம் மாறி இருக்கிறது. திரைப்பாட்டு மொழியை தவிர. எனக்கு வாய்ப்பு கொடுத்தால் அதை மாற்றிக்காட்டுவேன்'  என்றேன்.
உடனே என்னை அழைத்தார். இளையராஜாவிடம் அறிமுகப்படுத்தினார். என்ன இவன் பாட்டு எழுதுவானா? என இளையராஜா கேட்டபோது, 'பாப்போம்டா.. இருடா' என உரிமையோடு பேசினார். அந்த வாடா, போடா உரிமையை வேலையிலும் பயன்படுத்துவதுதான் தப்பு. அறையில் பயன்படுத்துவது அன்பு. வேலையில் பயன்படுத்துவது வம்பு," என வைரமுத்து பேசிக்கொண்டிருக்க, இடையில் மைக் பிடித்த பாரதிராஜா, "உங்களைப்போல தமிழில் பேச என்னால் முடியாது. நான் பாமரன். எனக்கு தெரிந்த தெரிந்த உண்மையை சொன்னேன். அவ்வளவுதான். வருகிறேன்" என சொல்லி விட்டு அரங்கை விட்டு வெளியேறினார்.

தொடர்ந்து பேசிய வைரமுத்து, "பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா என்பவர்கள் வேறு வேறு தாய் பெற்ற 3 சகோதரர்கள். என்னை கொண்டாட வேண்டுமென்றால் கொண்டாடப்பட வேண்டியவர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னமும்தான்.

சினிமாவில் பாடாலாசிரியர்கள் சிறுபான்மையின சாதி. கடைசியில் தேவைப்படுகிறான். அவன் முக்கியம் என அவனே நினைத்துக்கொள்கிறான். முக்கியமில்லை என சினிமா நினைக்கிறது. நான் முக்கியமானவன் என நிரூபிக்க 34 ஆண்டுகள் போராடினேன்.
பாலச்சந்தரை நான் மறக்கவே முடியாது பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நான், சில ஆண்டுகளில் ஒரு சிக்கலை சந்தித்தேன். என்னை சுற்றி பின்னப்பட்ட சூழ்ச்சியில் சிக்கி, தனித்து விடப்பட்டேன். அப்போது பாலச்சந்தர் 3 படங்கள் தயாரித்தார். அந்த 3 படங்களிலும் நான்தான் பாடலாசிரியர். 3 படங்களும் தோற்றால் வடுகபட்டிக்கு சென்று விவசாயம் பார்க்கப்போகிறேன் என்றேன். 3 படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரோஜா மூலம் ஏ.ஆர்.ரகுமான் எனும் மிகச்சிறந்த இசையமைப்பாளர் கிடைத்தார்.  அவரைக்கொண்டு பல சாதனைகள் படைத்தோம். பாண்டிய நாட்டில் பிறந்த எனக்கு கொங்கு நாடு விழா எடுக்கிறது. விழா எடுத்தவர்களுக்கு நன்றி," என பேசி முடித்தார். 
நன்றி - news.vikatan.com


Wednesday, June 18, 2014

பெரிதாக குறிவை !! THINK BIG !!!பெரிதாக குறிவை !! THINK BIG !!

பெரிதாக குறிவை !! THINK BIG 


‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.
நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ‘ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!
மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!
இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.
o வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.
o ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
o டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே ‘அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள்.
இது ‘ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள். நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.


மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.
தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.
வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.
வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.

YourS Happily 
Jc.Dr.Star Anandram
www.v4all.org 
cell-9790044225