Showing posts with label Corporate Training Company. Show all posts
Showing posts with label Corporate Training Company. Show all posts

Thursday, July 16, 2015

பிரச்சனைகள் தீர 12 இராசிகளுக்கும் ரகசிய வெற்றிலை வழிபட்டு முறைகள்

பிரச்சனைகள் தீர 12 இராசிகளுக்கும் ரகசிய வெற்றிலை வழிபட்டு முறைகள்
(share) செய்யுங்கள்)
.மேசம்:
மாம்பழம் வெற்றிலையில் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிடவும். துனபங்கள் அகலும்.
ரிசபம்:
மிளகு வெற்றிலையில் வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
மிதுனம்:
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.
கடகம்:
வெற்றிலையில் மாதுழை பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.
சிம்மம்:
வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழங்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.
கன்னி:
வெற்றிலையில் மிளகு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
துலாம்:
வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.
விருச்சிகம்:
வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.
தனுசு:
வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மகரம்:
வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
கும்பம்:
வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
மீனம்:
வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.
Mantric   மாந்திரீகம்'s photo.


Monday, June 15, 2015

நவரத்தினம்னா என்ன?


நவரத்தினம்னா என்ன? - www.v4all.org
நவம்ன்னா ஒன்பது. ஒன்பது வகையான கல் என்று அர்த்தம். இதைதான் ஜாதிக்கல் என்றும் சொல்வார்கள்.
அந்த நவரத்தின கற்களின் பெயர்கள் இதுதான்.
மாணிக்கம், மரகதம், கனகபுஷ்பராகம், வைரம், வைடுரியம், முத்து, பவழம், நீலக்கல், கோமேதகம். இதை தவிர்த்து உபரத்தின கற்கள் என்று சற்றேறக்குறைய நூற்றுக்கும் சற்று அதிகமான கற்கள் இருக்கிறது. இது விலையும் மலிவு, நிறையவும் கிடைக்கிறது.
அது என்ன நாகரத்தினம்.....
அதா.....தன் வாழ்நாளில் நூறு வயதை தொட்ட நாகபாம்பு, தன் வாழ்நாளில் தன் விஷபையில் இருந்து விஷத்தை இழக்காத நாக பாம்புகளுக்கு, விஷ பையில் விஷம் இறுகி கெட்டியாகி நாகரத்தினமாக மாறுமாம்.
அது நாகபாம்பிடம் இருந்து கிடைப்பதால் அதை நாகரத்தினம் என்றும், நாகமாணிக்கம் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னும் இருக்கு கேளுங்க.
அந்த வகை பாம்புகள் பச்சை தவளைகள் வசிக்கும் பகுதில் தான் வாழுமாம். அப்படி நூறு வயதை தொட்ட நாகபாம்பு, உடல் சுருங்கி, தளர்ந்து, குட்டையாக போய்விடுமாம். .
பாம்புகளின் செவித்திறனே............ தரையில் ஏற்படும் அதிர்வுகளை வைத்தே மற்ற ஜீவராசிகளின் நடமாட்டத்தை கண்டு கொள்ளும். ஆனால் முதுமையை எட்டும் இந்த பாம்புகள் மிகவும் கஷ்டப்படுமாம்.
அந்த நேரத்தில் தன் வாயில் இருக்கும் நாகரத்தினத்தை வெளியே கக்கி, அந்தவெளிச்சத்தில் தான் இறை தேடும் என்பார்கள். இரையை உண்டு முடித்ததும், மீண்டும் தன் வாயுள் நாகரத்தினத்தை சேமித்து வைத்து கொள்ளுமாம்.
கொடிய கோவம் கொண்ட அந்த நாகம் ..... காற்றில் பறக்கும் சக்தி கூட உண்டாம். அதனால் அந்த நாகரத்தினத்தை மனிதன் எடுக்க வேண்டுமானால், பாம்பு இறை தேடும் நேரத்தில், வெளியே துப்பிய நாகரத்தினத்தின் மீது, பச்சை பசும் சாணத்தை வீசினால் ரத்தினத்தின் ஒளி மறைந்து விடும்.
அப்போது பறக்கும் சக்தி கொண்ட அந்த பாம்புக்கு கூட கண் தெரியாது. அந்த சமயம் பார்த்து நாகரத்தினத்தை எடுத்து விடலாம் என்பார்கள்.
கிட்டத்தட்ட நீயா படத்தின் கதை மாதிரிதான் இது.
சரி... இது அனைத்தும் உண்மை என்று வைத்து கொண்டால், இது வரை நாக ரத்தினத்தை வைத்துருப்பது யார்?
அது எங்கே இருக்கிறது? யாரிடம் இருக்கிறது?
இது தான் நாகரத்தினம் என்று அடையாளம் காட்ட ஏதாவது வழி இருக்கிறதா? என்றால் இல்லை என்பதே என் பதில்.
மாணிக்க கற்களில் பல பிரிவுகள் இருப்பது போல், ஒரு வகை மாணிக்கத்தை இதுதான் நாக ரத்தினம் என்று சொல்லி நம்மை நாமே ஏமாற்றி கொள்ளலாம். ஆனால் அது உண்மை இல்லை
ஆதாரம் எதுவும் கிடையாது. எழுத்து வடிவமோ, ஓலை சுவடி ஆதாரமோ, கல்வெட்டுகளோ இல்லை. வழக்கு மொழியாக, செவி வழி செய்தியாக, எந்த ஆதாரமும் இல்லாமல் நீண்ட நாட்களாய் வழக்கத்தில் இருக்கிறது என்றால், அதற்கு கர்ண பரம்பரை............


Sunday, June 14, 2015

இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
” எனக்கு இரத்தம் கொடுங்கள். உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன் ” – இந்திய புரட்சி நாயகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எம்மில் பலரும் , ஏனைய இந்திய ,உலக மக்களாலும்   நம்பபட்டு கொண்டு இருபது இந்திய சுதந்திரம் அடைந்தது காந்தியின் சத்திய கிரக அகிம்சை போராட்டத்தில் மட்டும்   தான் என்று. அந்த பொய் தன்மையை மிகவும் ஆதரமாக உலக்குக்கு எடுத்துக் காட்டி  இருக்கிறது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற மாவீரனின் வாழ்கை வரலாறு .
அவரின் வரலாற்று பதிவை பார்பதட்க்கு முன் எதட்காக எனது தேடல் இந்த புரட்சி நாயகன் பக்கம் திரும்பியது என்று உங்களுகுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன் . எமது  தமிழின எழுச்சி போராட்டம் இன்று சர்வதேச மயமாக்கபட்டு மிகவும் எழுச்சியாக அதன்   பாதை மாறினாலும் அதன் இலட்சியம் மாறாமல் கட்டு கோப்புடன் பயணிக்கிறது என்பதே உண்மை நன்கு உணர்ந்த யதார்த்த வாதிகளுக்கு நன்கு தெரியும் . அதட்கு பலமான அத்திவாரம் போட்டு அதனை மாயமாக  வழிநடத்தி வருபவர் எம் தமிழின தேசிய தலைவரே அன்றி வேறு யாரும் இல்லை .
துல்லியமான கால கணிப்பு , உலக அரங்கில் உலக நாடுகளினதும் , இலங்கை அரசாங்கத்தினதும் நிலைபாடுகளின் இராயதந்திர  நகவுகளின் தீர்க்க தரிசன பார்வை ,அதை விட காலத்துக்கு ஏற்றால்  போல் தமது போராடத்தின் வடிவை நேர்மையான கட்டமைப்புடன் மாத்தும் தன்மை , மாற்றபட்ட போராடத்தின் வடிவை எவ்வாறு எழுச்சியா மாற்றி மக்களை ஒன்று திரட்டி சர்வதேசத்தையும் , இலங்கையையும் திரும்பி பார்க்க வைக்கும் தன்மை . ” இது எவ்வாறு சாத்தியமாகும் ? ” என்பதே என் மனதில் எழுந்த மிகப்பெரிய கேள்வி . அதுக்கான பதில் தேசிய தலைவரின் வரலாற்று பதிவில் அவரின் சிறுவயதில் அவர் மனதை கவர்ந்த மாவீரர்களில் ஒருவராக ” நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ” இருந்து இருக்கிறார் என்ற உண்மை  வியப்பாக இருந்தது ;அது எனது தேடல் புள்ளிகளில் ஒன்று .
அடுத்து எதட்காக தலைவர் இந்தியாவின் தேச பிதா என்று எல்லோரும் போற்றிய காந்தியின் பாதையை  உள்வாங்காது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பாதையை விரும்பினார் என்று ஆராய முட்பட்ட போதுதான் அந்த மாவீரனின் வாழ்க்கை வரலாறு என் மனதையும் ஆழ ஊடுருவியது . நேர்மை ,கட்டுப்பாடு ,அடிமையை வாழ்க்கையை விரும்பாத வீரம் , தன்னலம் அற்ற தன்மை , கொண்ட இலட்சியத்தில் இருந்து சற்றும் விடுபடாது எந்த விட்டு கொடுப்புகளும் இன்றி இறுதி இலட்சியம் வெல்லும் வரை போராடும் மனோ பலம் . இன்னும் பல அவரின் சரித்திரம் என்னை புடம் போட்டு எடுத்தது .
இன்னும் ஒரு உண்மை ; உண்மையான தலைவன் எப்போதும் தான் தலைவன் ஆகும் ஆசையை கொண்டிருக்க மாட்டன் என்ற உண்மையை காந்தியின் வரலாற்றுடன் ஒப்பிடும் போது ” நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ” தலை நிமிர்த்து நிற்கிறார் . காந்தியை மகானாக ஆக்கியது வேறு யாரும் அல்ல பிரித்தானிய அரசாங்கம் மட்டுமே  ; அத்துடன் காந்தி தான் ஒரு தலைவனாக வரவேண்டும் என்று மட்டுமே  மனதில் கொண்டு இந்திய  சுதந்திர போராடத்தை நடத்தினார் .ஆனால் சுபாஷ் சந்திர போஸ் தனது நாடு அந்நியன் பிடியில் இருந்து முற்றாக விடுதலை அடைய வேண்டும் என்று போராடினாரே ஒழிய தன் ஒரு தலைவனாக இருக்கவேண்டும் என்று அவர் இறுதி வரை விருப்ப வில்லை .
இனி அந்த புட்சி நாயகனின் சரித்திரத்தை பார்போம்:
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – உறுதிபடுத்தப்படவில்லை) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார்.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது.
இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.
இந்தியாவில் ஒரிசா (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் வங்காள இந்து குடும்பத்தில் சுபாஸ் சந்திரபோஸ் பிறந்தார்.


இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.இவரது தாயார் பிரபாவதிதேவி “தத்” எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தவரே சுபாஸ் சந்திரபோஸ்.
சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.
ஐந்து வயதான போது கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ் ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர் தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ் 1913 ஆம் ஆண்டுத் தேர்வில் கொல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார்.
இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார்; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார்.
எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார். தன் மானசீக ஆசானாக விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.
துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ் ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார்.
அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில் பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக சுபாஸ் சந்திர போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.
இதனால் தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன் 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.
அக்காலத்தில் நாட்டுச் சூழ்நிலை பற்றி அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார் இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது லண்டனுக்கு ஐ.சி.எஸ் தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார்.
தன் படிப்பை தொடர்ந்த போஸ் லண்டனில் நடந்த 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான (“இந்தியக் குடிமைப் பணி” எனப்படும் ஐசிஎஸ் தேர்வு) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார்.
வழக்குரைஞரான சி. ஆர். தாஸ் தன் தொழிலை விட்டுவிட்டு ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ் கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம் தான் தாய் நாடு திரும்பியதும் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால் தான் ஏற்றுகொள்வதாகவும் பதவி துறந்ததைப் பாராட்டியும் சி. ஆர். தாஸும் மறுகடிதம் அனுப்பினார்.
இக்காலகட்டத்தில் தான் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்த காந்தியும் இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும் காங்கிரசின் தலைமையின் கீழ் சுதந்திர எழுச்சி பெற்றிருந்தனர். 1921 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ் மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார்.
போஸ் சித்தரஞ்சன்தாஸின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்று கொண்ட சி.ஆர்.தாஸும் அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன் திறமைமிக்க அவரது குடும்ப பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ் தான் நிறுவிய “தேசியக் கல்லூரியின்” தலைவராக 25 வயதே நிரம்பிய போஸை நியமித்திருந்தார்.
லண்டனில் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ் தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றியதுடன் பாடமும் கற்பித்தார்.
1922 இல் வேல்ஸ் எனும் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால் சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர்.
மும்பை துறைமுகத்தை வேல்ஸ் இளவரசர் வந்தடையும் போது நாடு முழுதும் எதிர்க்க காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கில அரசாங்கம் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.
இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும் வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது கல்கத்தாவில் மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்து. கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோஸை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு போஸின் தலைமையிலான தொண்டர் படையை சட்ட விரோதமானது என அறிவித்து, போஸையும் சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது.
மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் ஜவகர்லால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கைதானதால் மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின.
மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும் கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடக்கப் பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ் 1922 ஆம் ஆண்டு அக்டோபரில் விடுதலையானபோது காந்தியும் ஒத்துழையாமை இயக்கத்தையும், வரிகொடா இயக்கத்தையும் விரிவுபடுத்தியிருந்தார்.
இடையில் சில காரணங்களுக்காக போராட்டத்தை நிறுத்தியதால் காந்திக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. 1922 ஆம் ஆண்டு சிறையிலிருந்து வெளியான சித்தரஞ்சன் தாஸ் கயையில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கினார். சட்ட சபைத் தேர்தல்களில் இந்தியர்கள் போட்டியிட்டு சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் தான் இந்திய சுதந்திரத்தை விரைவில் பெறமுடியும் என சி.ஆர்.தாஸும் மோதிலால் நேருவும் கருதினர்.
ஆனால் இதை காந்தி ஆதரவாளர்கள் எதிர்த்தனர். தாஸுக்கும் காந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரஸில் இருந்தபடி சுயாட்சிக் கட்சி என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார்.
காந்திக்கு பதிலடி தர “சுயராஜ்யா என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஆசிரியர் பொறுப்பை போஸிடம் ஒப்படைத்தார்.
ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம்சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம்சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போஸுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.
1928 ல் கொல்கத்தாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர்.
கொல்கத்தா மாகாண தலைவரான போஸ் எழுந்தார் காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து காங்கிரஸில் இருந்தபடி விடுதலைச் சங்கம் என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர்.

காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால் திட்டமிட்டே காரிய கமிட்டியில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல் சென்னை மாகாணத்தை சேர்ந்த சீனிவாச அய்யரும் நீக்கப்பட்டார். உடனே போஸ், காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது; அங்கு எங்களுக்கு வேலையில்லை எனக் கட்சியிலிருந்து விலகி, சீனுவாச அய்யரைத் தலைவராகக் கொண்டு ‘காங்கிரஸ் ஜனநாயக கட்சி’யைத் தொடங்கினார்.
1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போஸின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், ஜவஹர்லால் நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார்.
அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
காங்கிரஸ் ஜனநாயக கட்சியின் “பார்வட் ” எனும் ஆங்கில இதழில் ஆசிரியாரான நேதாஜி உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இதைத் தொடர்ந்து தேர்தல்களில் மத்திய மாகாணசபைக்கும்,கல்கத்தா மாநகராட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போஸும் தெரிந்தெடுக்கப்பட்டனர். கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெற்றனர்.

இதனைக் கண்ட அரசு, நேதாஜியை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 ஆம் ஆண்டு ஐப்பசி 25 ஆம் நாள் கைது செய்து கொல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. மேலும் வங்கத்தில் பிரித்தானிய ஆட்சியை கவிழ்க்க சதிகார இயக்கம் ஓன்று தோன்றி இருப்பதையும் அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கையை வெளியிட்டது.
நேதாஜிக்கு ஆதராவாய் மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். கொல்கத்தா விரைந்த காந்தி உட்பட பல தலைவர்களும் நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான் சுயராஜ்ஜியக் கட்சி சட்டசபைகளில் வெற்றி பெற்று ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும் பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி ‘சட்டசபை வெளியேற்றம்’ எனும் கொள்கையைக் கைவிட்டு சுஜராட்சிய கட்சியின் கொள்கையே காங்கிரசின் கொள்கை எனக் கூறி இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.
போஸிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரிட்டிஷ் அரசும் அவரை கடல் கடந்து மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால் அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது. நோயின் தீவிரம் அதிகரித்ததால் சுபாஷும் படுத்த படுக்கையானார். ஆனால் அரசு மருத்துவ பரிசோதனைக்குகூட அவரை அனுமதிக்கவில்லை.
இதனால் காங்கிரசு அவரை வெளிக்கொணர ஒரே வழி 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது நேதாஜியும் தன் சேவையைக் கருதி அதற்கு உடன் பட்டார். இதனால் சிறையிலிருந்தவாறே வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அனால் அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது.
வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ நேதாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு “கொல்கத்தா வராமல் சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும் 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்” என்றும் இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்ய தயார் என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.
இதனால் சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து நேதாஜியைப் படுக்கையில் தள்ளீயது. இச்செய்தி வெளியில் பரவி “சுபாஷ் பிழைப்பதே அரிது” என்றும் “அவர் சிறையிலேயே மரணித்து விட்டார் ” என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம் அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது.
ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி அவர் இனி பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம் அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும் படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும் 1930 சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார்.1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக 1940 ஜுலையில் நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.

உலகப்போரின் ஆரம்பத்தில், பிரித்தானிய படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரிட்டனின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார்.
சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது.
வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசியக் காவலர்கள் சாதாரண உடையில் 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர். எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.
1941-ம் ஆண்டு ஜனவரி 15-ம் நாள் நேதாஜி ஒரு முஸ்லிம் போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார். ஒரு காரில், கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். பெசாவர் நகரை (தற்போது இது பாகிஸ்தானில் உள்ளது) அடைந்து இந்தியாவின் எல்லையைக் கடந்தனர்.
பின்னர் ஆப்கானிஸ்தான் சென்றார். அங்கு இத்தாலி நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார். ரஷ்யா வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக ஜெர்மனிக்கு வருமாறு ஹிட்லரிடமிருந்து அழைப்பு வந்தது.
அதை ஏற்ற நேதாஜி, தொடர்வண்டி மூலம் மாஸ்கோ சென்று அங்கிருந்து ஜெர்மன் தலைநகரான பெர்லினுக்குப் போய்ச்சேர்ந்தார். அவர் ஜெர்மனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனி பத்திரிகைகள் வெளியிட்டன.
அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விடயமே பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது. ஜெர்மனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதி அளித்தார்.
 
நவம்பர் 1943இல் பெரும் கிழக்கு ஆசிய மகாநாடு, வலது பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ்
1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
ஜெர்மனி, இத்தாலியின் உதவி கிடைக்காது என தெரிந்தபின் ஜப்பான் செல்ல முடிவு செய்து, போர் காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் சென்று ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை மீள் உருவாக்கம் செய்து அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்கு போராடி நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி பயிற்சி அளிக்கப்பட்டது.
சப்பானிய நீர்மூழ்கி ஐ-29 இருந்த நீர்மூழ்கி ஓட்டுனர்கள் செருமன் நீர்மூழ்கி யு-180ஐ மடகாசுகின் தென் கிழக்கில் 300 சட்ட மைலில் சந்தித்துக் கொண்டபோது. முன்வரிசையில் வலப்பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ். திகதி: 28 ஏப்ரல் 1943
1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. பர்மாவில் இருந்தபடி தேசிய படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார்.
“தாக்குண்டால் புழு கூட
தரை விட்டு தீ துள்ளும்
கழுகு தூக்கினும் குஞ்சுக்காக
துடித்து எழும் கோழி
சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது
முயல் கூட திருப்பித்தாக்கும்
சாக்கடை புழுக்கள்ல்ல நாங்கள்
சரித்திரத்தின் சக்கரங்கள்”
அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது – எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ – அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது… ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை…. சலோ டெல்லி
பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையேநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!

ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல் இப்படை தவித்தது. மனம் தளராமல் இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது. அது மட்டுமல்ல ஜப்பான் இரண்டாம் உலக போரில் சரணடைந்தது எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.
13 பிப்ரவரி 1933ல் உடல் நிலை சரியில்லை என வியன்னா சென்றவர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான செக்கோசிலோவாக்கியா, போலந்து, ஹங்கேரி, இத்தாலி, ஜெர்மனி என பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து நாட்டின் விடுதலையை பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார்.
ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார்.
按此在新窗口浏览图片

பயணத்தில் ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரை தனது உதவியாளராக்கிக்கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27ல் எமிலியை போஸ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1942-ல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் பிறந்தார் .
போஸ் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற முழுவிடுதலை வேண்டும் என்ற உறுதியுடன் அதற்கான பரப்புரையைச் செய்தார். அதே நேரத்தில் இந்திய காங்கிரஸ் சபை படிப்படியாக விடுதலை பெறுவதை ஆதரித்தது. மேலும் முழு விடுதலைக்குப் பதில் பிரித்தானியாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இந்தியா இருக்க விரும்பியது. லாகூரில் நடைபெற்ற காங்கிரசு கருத்தரங்கில் முழுவிடுதலை பெறுவதைத் தன் குறிக்கோளாக ஏற்றுக்கொண்டது.
போஸ் இரு முறை தொடர்ச்சியாகக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகினார். விலகியதும் கட்டுப்பாடுகள் தகர்ந்ததால் காங்கிரசின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் தவறானவை எனக் கண்டித்தார்.
காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது என்றும் பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவதே விடுதலைக்கான வழி என்றும் கருதினார். இவர் பார்வட் பிளாக் என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார்.
இரத்தத்தை தாருங்கள் உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன் என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது.
இரண்டாம் உலகப்போரின் போதும் இவர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது பிரித்தானியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து சோவியத் ஒன்றியம், நாட்சி ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து இந்தியாவில் பிரித்தானியரைத் தோற்கடிக்க உதவி வேண்டினார்.
ஜப்பானியர்களின் துணையுடன் தென்கிழக்கு ஆசியாவில் இருந்த இந்திய தொழிலாளர்களைக் கொண்டும் ஜப்பான் பிடித்து வைத்திருந்த பிரித்தானியப் படையில் இருந்த இந்திய போர்க்கைதிகளைக் கொண்டும் இந்திய தேசிய இராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்தினார்.
சுபாஷ் சந்திர போஸ் பிரித்தானியாவிற்கெதிரான போராட்டத்திற்கான பெரும் தூண்டுதல் மூலமாக பகவத் கீதையைக் கருதினார். சுவாமி விவேகானந்தரின் சர்வமயவாதம் பற்றிய கற்பித்தலும் தேசியவாத, சமூக சிந்தனையும் சீரமைப்பு எண்ணங்களும் சிறு வயதிலேயே இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தின.
இந்து சமய ஆன்மீக் கருத்துக்களே இவரின் பின்னாளைய அரசியல், சமூக எண்ணங்களுக்கு வித்திட்டதாக பல அறிஞர்கள் கருதுகிறார்கள். இந்து ஆன்மீகத்தின் தாக்கம் இருந்தாலும் இவரிடம் மதவெறியோ பழைமைவாதமோ இருக்கவில்லை . சுபாஷ் தன்னை சமதர்மவாதி என அழைத்துக்கொண்டார். இந்தியாவில் சமதர்மக் கொள்கையின் முன்னோடி சுவாமி விவேகானந்தர் என நம்பினார்.
இவர் தன் இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கென தனிப் பிரிவான ஜான்சி ராணி படையை தொடங்கியவர். ஒரு முறை ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் இவர் நுழைந்ததை வேறு யாரோ என்று எண்ணி கோவிந்தம்மாள் என்னும் பெண் அதிகாரி அவரைத் தடுத்து நிறுத்தினார். அதைப் பொருட்படுத்தாமல் அவருக்கே அப்படையின் உயரிய விருதானலாண்ட்சு நாயக் விருதை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலகப்போரில் செர்மனி, இத்தாலி தோற்கடிக்கப்பட்டு அச்சு நாடுகள் சார்பில் ஜப்பான் மட்டுமே போரில் இருந்தது. ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மஞ்சூரியா மேல் ருசியா படையெடுத்து அதை ஆகசுட்டு 9-20, 1945 வரை நடந்த போரில் முழுமையாக கைப்பற்றிக்கொண்டது.
பாங்காகில் இருந்த ஜப்பானிய தொடர்பு அதிகாரி நேதாஜி பாங்காக்கில் இருந்து டோக்கியோ வழியாக மஞ்சூரியாவை அடைந்து அங்கிருந்து இருசியாவை அடைய ஒத்துக்கொண்டார். நேதாஜியின் கடைசி புகைப்படம் சைகோன் (தற்போதைய கோ சு மிங் ஆகசுட்டு 17, 1945) நகரில் எடுக்கப்பட்டதாகும் . ஆகசுட்டு 23, 1945 அன்று ஜப்பானிய செய்தி நிறுவனம் ஆகசுட்டு 18, 1945 அன்று தாய்பெயில் வானூர்தி தளத்தில் நடந்த விபத்தில் போஸ் இறந்ததாக அறிவித்தது . ஆனால் தைவான் நாடு அப்படி ஒரு வானூர்தி விபத்து நடக்கவில்லை எனக் கூறி மறுத்தது.
ரெங்கோயி கோயில், யப்பான்
இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதைப் பலர் நம்பவில்லை. “நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?” என்று கேட்டனர்.
ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்-வுர்-ரகிமான், “நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்” என்று கூறினார். ஆயினும், பல தலைவர்கள், “நேதாஜி உயிருடன் இருக்கிறார்” என்றே கூறி வந்தனர். சிலர் அவர் துறவி வேடத்தில் இந்தியாவில் வசிப்பதாகவும் சிலர் அவர் சோவியத் ஒன்றியத்துக்குத் தப்பி சென்று விட்டதாகவும் நம்புகின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956 ஏப்ரல் மாதம், முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போது நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஷாநவாஸ் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது.
இறுதியில், ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை, டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான் என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார்.
அதன்படி 1970-ம் ஆண்டு ஜுலை மாதம் முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியின் போது ஓய்வு பெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. டி. கோசலாவைக் கொண்ட “ஒரு நபர் விசாரணை ஆணையம்” அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, “வானூர்தி விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை” என்று உறுதி செய்து அறிக்கை தந்தார்.
按此在新窗口浏览图片
1999-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின் போது , ‘முகர்ஜி ஆணையம்’, என மூன்று ஆணையங்கள் நியமிக்கப்பட்டது. இதில் முகர்ஜி ஆணைய அறிக்கை 2006-ம் ஆண்டு மே 17-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனாலும் நேதாஜி மரணம் குறித்து தெளிவான முடிவுக்கு வரவில்லை.
உத்திரப் பிரதேசத்தில் 1985 வரை வாழ்ந்த இந்துத் துறவி பகவான்ஜி அல்லது ‘கும்னமி பாபா’ என்பது சுபாஷ் சந்திர போஸ் என சிலர் நம்புகின்றனர். நான்கு சம்பவங்கள் அத்துறவி போஸ்தான் என நம்பக் காரணமாகின.
அத்துறவியின் மரணத்தின் பின், அவரது உடமைகள் நீதிமன்ற உத்தரவின்படி உடமையாக்கப்பட்டன. இவை பின்பு முகர்ஜி ஆணையத்தினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
துறவி மரணமானதும், முகம் அமிலம் மூலம் சிதைக்கப்பட்டு எரியூட்டப்பட்ட சம்பவம் ஐயப்பாட்டிற்குக் காரணமாகியது.
கையெழுத்தியல் நிபுணர் பி. லால் வாக்குமூலத்தில் பகவான்ஜி மற்றும் போஸின் கையெழுத்துக்கள் ஒத்துப் போயின என்றார்.
ஆயினும், முகர்ஜி ஆணையம் மேலதிக சான்று வேண்டுமென அதனை நிராகரித்த அதேவேளை, இந்திய அரசின் போஸின் இறப்பு 1945ம் ஆண்டில் நடைபெற்றது என்ற பார்வையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, பகவான்ஜிதான் போஸ் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பட்டது.

இறுதி உரை
இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா,
“நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!”

1992-ல்சுபாஷ் சந்திரபோஸுக்கு இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.

Saturday, March 7, 2015

சிக்கல்களும் நமக்கு வாய்ப்புகளே !


Turn Problem Into Opportunity
                           இந்த உலகத்தில் பல சிக்கல்களும்  உருவாகி கொண்டே இருக்கின்றன .இந்த    சிக்கல்களை தீர்ப்பதற்கான தீர்வுகளும்  தேவைப்பட்டு கொண்டே இருக்கின்றன .   அந்த மற்றும் சிக்கல்கள்தான் நம் தொழில்   வாய்ப்புகள் , அதன் தீர்வுகள் தான் நம்  தொழில்கள் .
                          அந்த மூன்று நண்பர்கள் தீபாவளிக்கு விடுமுறைக்கு  வீடு செல்ல ஆயத்தமாயினர். அவர்கள் பெங்களூர்  போக்குவரத்து நெருக்கடியை தாண்டி   பேருந்து நிலையம் வருவதற்குள் பேருந்து டிக்கெட் எல்லாம் விற்று தீர்ந்துவிட்டது . இதனால் அவர்கள் வீடு செல்ல முடியவில்லை . இந்த சிக்கலை தீர்க்க தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள் . அந்த தீர்வுதான் ஆன்லையனில்  டிக்கெட் பதிவு செய்ய உதவும் RedBus.Com என்ற இணையதளம்.
       
           வாகனங்களாகட்டும்,தொலைதொடர்பு சாதனங்களாகட்டும், மின் மற்றும் மின்னனு சாதனங்களாகட்டும் எல்லாம் ஒரு வித பிரச்சனைகளை சரி செய்ய கண்டுபிடிக்கப்பட்ட  தீர்வுகளே . சிக்கல்கள்தான்  பல வித கண்டுபிடிப்புகளுக்கும் ,தொழில்களுக்கும் மூலக்காரணம்.  
            என்ன தொழில் செய்வது என்றே  தெரியாத நம்மில் பல பேருக்கு ,  நம்மை சுற்றி இருக்கிற இன்னப் பிற தொழில் வாய்ப்புகளையும் மறந்துவிடுகிறோம். இந்த உலகம் நமக்கு உதவும் வகையில் நம்மை சுற்றி யோசனைகளையும், வாய்ப்புகளையும் நிரப்பிவைத்துள்ளது. 
“The World around You is filled with ideas that can be helpful”
                                               - Andy Boyton,Co-Author of Idea Hunter 
     
நமக்கு தேவையான தொழில் ஐடியாக்களை நம் சொந்த அனுபவத்திலிருந்தே பெறலாம் . நம்மை நிலைகுலைய வைத்த பிரச்சனைகள்  , நமது வாய்ப்புகளை தவற விட காரணமாக இருந்த சிக்கல்கள் , அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் இதிலிருந்தும் தொழில் ஐடியாக்கள் பிறக்கின்றன .
             
        
                         
          இப்போதுள்ள மின்வெட்டு  பிரச்னையை தீர்க்க  உதவும் சூரிய ஒளிகலன்கள் (Solar Panel & Battery) போன்றவை சிக்கல்களின் தீர்வுகளே மற்றும் Online Flight & Bus TicketBooking ,
 Online purchasing,  Matrimonial Websites இவை போன்றவை எல்லாம் பல  சிக்கல்களின் தீர்வுகளே.
  ‘சிக்கல்கள்  மற்றும் பிரச்சனைகளை வாய்ப்புகளாக மாற்றுவோம்!’   
urs
www.v4all.org 

Wednesday, November 12, 2014

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் !

வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள் !



வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு கூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது,
என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில் எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால் அவர்களின் முகப்பொலிவு கூடும்
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு ஏற்றும்படி பணிக்க வேண்டும். இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல் அவர்களின் தேஜசும் (அதாவது முகபொலிவும்) கூடுகிறது.
இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம் அவளது முக பொலிவை முகம் பார்க்கும் கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின் மூலையில் குறித்து வையுங்கள்.
சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும் உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள். நீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள் இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால் உணர முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் வியப்பூட்டும் வகையில் கூடும் விளக்கேற்றவேண்டிய நேரம் விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச் சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’ என்கின்ற இரவின் விடியலாகத் திகழும் அருணம், என்கின்ற அருணோதய காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித யோகத்தையும் பெறலாம். அதேபோல் மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும். சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும். மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும் பெறலாம்.
பொதுவான விதிமுறைகள்
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர் அனைவரின் மன இருளையும் அகற்றி, தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான அமைதியைத் தரும்.
4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.
5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும்
நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின் கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம் பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம் காண்போம் எந்தெந்த எண்ணைகளில்
விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும். நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப் படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம். எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும். முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவது நல்லது. நாராயணனுக்கு நல்லெண்ணெய் ஏற்றதாகும். மகாலட்சுமிக்கு நெய் உபயோகப்படுத்தலாம். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. குலதெய்வத்திற்கு இலுப்பை எண்ணெய், நெய் மற்றும் நல்லெண்ணெய் இவை மூன்றும் உபயோகிக்கலாம். கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது. திசைகள் கிழக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும். வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன் தொல்லை, சனிபீடை, கிரகதோஷம் பங்களிப்பதை இவை நீங்கும். வடக்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும், மங்கலமும் பெருகும். தெற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றக்கூடாது.
என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்? தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித் தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.
பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையானோர் பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.
வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.
சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும். மஞ்சள் துணியாலான திரி : இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும் திரி எனலாம்.
வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கெரிக்க பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி, குடும்ப அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.
வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு நீடிக்கும்.
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் கீடா: பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷõ:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!! பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்விளக்கினின் முன்னே வேதனை மாறும்விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே! - Author : kathiravan sun

Sunday, November 9, 2014

வியாபார நுணுக்கங்கள் - Must read artcile for Business people

வியாபார நுணுக்கங்கள்

Articleசுத்தம் 
சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது.
வரவேற்பு
ஒரு வாடிக்கையாளர் கடையில் முதன்முறையாக நுழையும் போது அவரை விருந்தாளிகளை வரவேற்பது போன்று அன்புடன் வரவேற்க வேண்டும். அவரை முதலாவதாக சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். இப்படி கூறி சிறிது நேரம் சென்ற பின் என்ன தேவைக்காக வந்திருக்கின்றீர்கள் என்று வினவ வேண்டும். எனக்கு இன்ன பொருள் தேவைப்படுகிறது என்று கூறியதும், நான் எடுத்து தருகிறேன் என்று கூறாமல் நாம் சேர்ந்தே தேர்ந்தெடுப்போம் என்று கூறினால் வாடிக்கையாளர் மிக்க சந்தோஷமடைவார்.
தொடர்புடைய சாதனங்களை பரிந்துரை செய்தல்
வாடிக்கையாளர் தனக்கு தேவைப்பட்ட பொருட்களை தேர்ந்தெடுத்த பின் விற்பனையாளர் அத்துடன் முடித்துக் கொள்ளாமல் தொடர்புடைய சாதனங்களைப் பரிந்துரை செய்ய வேண்டும். உதாரணமாக, சட்டை துணியை தேர்ந்தெடுத்த பின் அதற்கு இணையாக வேஷ்டி, துண்டு மற்றும் பனியன் போன்ற உள்ளாடை முதலியவற்றை வாங்குமாறு பரிந்துரை செய்ய வேண்டும். இந்த முயற்சி வியாபாரத்தில் நல்ல பலன்களை கொடுக்கும். தேர்ந்தெடுத்த பின் வாடிக்கையாளர் புறப்பட தாயாராகும் போது, எங்கள் நிறுவனத்தில் தாங்கள் தேவைக்கேற்ற சாதனங்களைத் தேர்ந்தெடுத்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எங்கள் நிறுவனத்தை அறிமுகம் செய்து வையுங்கள் என்றும், மறவாமல் முகவரியையும் கேட்டு குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் வாடிக்கையாளருடன் நல்ல நட்புறவு ஏற்படின் அவர்கள் தங்கள் வீட்டின் விஷேசத்திற்கு தங்களை அழைத்தால் வியாபார நேரத்திலும் அங்கு சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்கள் மூலம் உங்கள் நிறுவனத்தின் அறிமுகம் மேலும் பல வாடிக்கையாளர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த ஏதுவாக இருக்கும்.
மேலும், விழாக்காலங்களில் தள்ளுபடி அறிவித்தாலும் அதை கடிதம் மூலம் தெரியப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். அவர்களுடைய பண்டிகை மற்றும் விழாக்களிலும் மறவாமல் வாழ்த்து அனுப்பும் போதும் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய நல்ல எண்ணம் அவர்கள் மத்தியில் உயரும்.
உண்மை கூறி, வாடிக்கையாளர் எளிதாக எடுக்கும் வண்ணம் பொருட்களை வைத்தல்
சில கெட்டுப் போகின்ற பொருள்களின் உற்பத்தி மற்றும் காலாவதி ஆகின்ற தேதிகள் பொருள்களின் மேலோ அல்லது மேல் உறையிலோ அச்சிடப்பட்டிருக்கும். அவைகள் தெளிவாக தெரியும் விதமாகவும் வைத்து பொருட்களின் தரத்தை மிகைப்படுத்தி கூறாமல் உண்மை நிலையினை கூறி, வாடிக்கையாளர்கள் எளிதாக எடுக்கும் வண்ணம் காட்சிப் பொருளாக வைக்க வேண்டும்.
ஒரு வியாபாரி தன்னுடைய விற்பனையை அதிகரிக்க விரும்பினால் கூடியவரை பொருட்களை வாடிக்கையாளர்கள் எடுத்துப் பார்ப்பதை அனுமதிக்க வேண்டும். முதலில் சாதாரண பொருட்களை காட்டி விட்டு படிப்படியாக விலை உயர்ந்த பொருட்களை காட்ட வேண்டும். விற்பனையாளர் பொருளின் தகுதியை விளக்கமாகவும், உற்சாகமாகவும் எடுத்துரைக்க வேண்டும். அவர் அதனை எடுத்துரைக்கும் முறையிலேயே வாடிக்கையாளர் அதன் தரத்தை உணர்ந்து, அதிக விலை கொடுத்தும் வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டும். எனவே, விற்பனையாளர்கள் பொருள்களின் தரத்தையும், மதிப்பையும் பற்றி தெள்ளத் தெளிவாக அறிந்தவராக இருக்க வேண்டும்.
மேலும், முடிந்தால் விற்பனையாளர் பொருள்களின் தன்மையை உபயோகத்தின் மூலம் எடுத்துக் காட்டலாம். இந்த முயற்சி அந்த பொருள்களின் மீது இருந்த சந்தேகத்தை வாங்குபவருக்கு தெளிவுபடுத்திவிடும். உதாரணமாக ஒரு புத்தகத்தை விற்பனை செய்கின்றார் என்றால் அவர் இப்படிக் கூற வேண்டும்!
‘தயவு செய்து அதன் பக்கங்களை சிறிது புரட்டிப் பாருங்கள்!’ உங்கள் அறிவிற்க்கு நல்ல விருந்தாக அமையும் என்று.
விளம்பரம்
எந்த ஒரு வியாபாரத்திலும் விளம்பரம் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பொருள்களை அவர்களுக்கு நினைவு படுத்துவதற்காக ஒரு பலகை தொங்க விடப்பட்டிருக்கின்றது அதில் ‘இந்தச் பொருள்கள் உங்களுக்குத் தேவையல்லவா? இவற்றை நீங்கள் வாங்கிவிட்டீர்களா?’ என்று சிந்தனையை தூண்டும் விதத்திலும் பொருட்களை வாங்குவதற்கு வாசகம் எழுதப்பட்டிருக்கின்றது விளம்பரம் செய்யாத ஒரு வியாபாரம் வாயில்லா ஊமையேயன்றி வேறில்லை. வியாபாரத்தின் வாய் விளம்பரமேயாகும்.
விளம்பரத்தின் நோக்கமே ஒரு தொழிலுக்கு அங்கு உற்சாகத்துடன் செய்யப்படும் பொருட்களுக்கு மக்களிடையே நன்மதிப்பை ஏற்படுத்தி, குறைந்த விலைக்கு அதிகமான பொருள்களை விற்பனை செய்வதேயாகும், ஒரு விளம்பரம் அவ்விதம் செய்யத் தவறினால் அது போலி விளம்பரமேயன்றி வேறில்லை. ஒரு வியாபாரி சக்தியுள்ள விளம்பரம் ஒன்றைச் செய்ய நினைத்தால் அவர் தனக்கு விருப்பமான விஷயங்களை கூறாது மற்றவர்களுக்கு விருப்பமானதையே கூற வேண்டும். விளம்பரம் என்பது சுருக்கமாகவும் சுவாரஸ்யத்துடன் இருக்குமாறு அமைத்தல் வேண்டும். பொருள்கள் பற்றிய படங்களுடன் கண்கவர் விதத்தில் இருந்தாலும் இன்னும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும். விளம்பரம் என்பது வீணான பெருமைச் சொற்களால் நிரம்பியிராமல் தெளிவானதாகவும், எளிதானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.
கொள்முதல்
வியாபாரத்தில் கூடியவரை ரொக்கத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் ரொக்கத்திற்கு நேரடியாக பணம் கொடுத்து வாங்கும் போது மிக மலிவாக பேரம் பேசி வாங்க முடியும். இப்படிச் செய்தால் மற்றவர்களை விட விலை சிறிது குறைத்து உங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியும். எந்தப் பொருளின் தேவை மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கின்றதோ அதை கொள்முதல் செய்கின்ற போது 5 பெட்டி வாங்கினால் 1 பெட்டி இலவசம் என்று வரும் பொழுது அதிகப்படியாக கொள்முதல் செய்து இலவச பெட்டியின் அடக்க விலையை மற்ற பெட்டிகளில் சரிசமமாகப் பிரித்து இன்னும் வாடிக்கையாளர்களுக்கு மிகமிக குறைந்த விலைக்கு கொடுக்கலாம்.
மேலும் ஒரு வியாபாரி பொருள்களை கொள்முதல் செய்யுமுன் பல்வேறு விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியம். தரத்தைப் பற்றியும் விலையைப் பற்றியும் அறிவதுதான் மிக முக்கியம். யாரிடம் நல்ல பொருள்கள் கிடைக்கும் என்பதை நேரிலோ, கடிதம் மூலமோ அறிந்துக் கொள்ள வேண்டும். அதன் பின் யாரிடம் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துதல்
பொதுமக்களுக்கு தேவையான எல்லா பொருட்களையும் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த கடைக்கு சென்றால் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று மக்கள் நம்பி வருமாறு செய்து கொள்ள வேண்டும். ஒருவர் கேட்கும் பொருள் இல்லை என்றால் அதனை வேறு கடைக்கு ஆள் அனுப்பி வாங்கி கொடுக்க வேண்டும். அவ்விதம் செய்தால் வருங்காலத்தில் மதிப்புள்ள வாடிக்கையாளர்களை சேர்த்து தரும். ஒரு நூதனமான பொருள் சந்தைக்கு வந்திருப்பின் எல்லோருக்கும் முன்பாக சிறிது கொள்முதல் செய்து அவற்றை தம்முடைய வாடிக்கையாளர்களுக்கு காண்பித்து அதை வாங்குமாறு செய்ய வேண்டும்.
மேலும், விற்கப்பட்ட பொருள்கள் பழுது ஏற்பட்டு வாடிக்கையாளர் திரும்ப வந்து அதை கூறும் போது, இன் முகத்துடன் பெற்றுக் கொண்டு மாற்றுப் பொருள் கொடுப்பின் அவர் மகிழ்ச்சியடைந்து பலரிடம் இதைப்பற்றி கூறி நமக்கு நல்ல பெயரையும், புது வாடிக்கையாளர்களையும் பெற்று தரும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும், குறித்த நேரத்தில் கடையை திறந்து இரவு மூடிய பின்பும் யாரேனும் ஒரு சின்ன பொருளை கேட்டு வந்தாலும் முகம் கோணாமல் திறந்து எடுத்துக் கொடுத்தால் தன்னுடைய கடையின் மேல் நம்பிக்கை மென்மேலும் வளரும் என்பதில் சந்தேகமில்லை.
For business consulting