Showing posts with label yoga master in coimbatore. Show all posts
Showing posts with label yoga master in coimbatore. Show all posts

Tuesday, March 8, 2016

வாரன் பப்பட்"

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான
"வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..!

1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....

2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்

3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை

4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது

5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....

6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....

7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது

(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது

(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது

8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....

9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....

10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க

நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது

எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :

1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது

2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்

3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்

4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......

5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்

6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே,,,ராஜா!!!

Wednesday, August 20, 2014

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வமசாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரது தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்பு குறித்து அவர் கூறுகையில், கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர். இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 3 மடங்கு அதிகமாகும். அவர்களில் நகர்ப்புறங்கள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர்கள் மிக இளம் வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Beer
மனநல பாதிப்பு இந்த ஆய்விற்காக வடக்கு கோவாவை சேர்ந்த 20-49 வயது உடைய 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் அடங்குவர். அவர்களிடம், மதுபானத்தை எந்த வயதில் குடிக்க ஆரம்பித்தீர்கள்?, எவ்வளவு மதுபானம் எடுத்து கொண்டீர்கள்? மற்றும் குடிப்பதால் காயம் எதுவும் ஏற்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களின் மனநல பாதிப்பு குறித்தும் தகுதி வாய்ந்த நபரால் ஆய்வின்போது கணிக்கப்பட்டன. இளம் வயதில் குடிக்க தொடங்காதவர்களை காட்டிலும், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு மற்றும் மதுபானத்திற்கு அடிமையாவது என்பது இளைஞர்களிடையே இரு மடங்காக உள்ளது. அவர்கள் குடிப்பதன் காரணமாக 3 மடங்கு காயம் அடைந்து உள்ளனர்.
இளம் வயதில் குடிக்க தொடங்குவதால் வாழ்நாளில் அது தொடர்பான காயங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இருந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முடிவுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட இந்தியா போன்ற நாடுகளிலும் இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை என்று ஆய்வு குறித்து அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவின்படி, இளம் வயதில் மதுபானம் குடிக்க தொடங்குவதால் வாழ்நாள் முழுவதும் அதனை சார்ந்து இருக்கும் சூழல் அதிகமாக உருவாகிறது. குடிப்பதால் ஏற்படும் துன்பம், மதுபானம் தொடர்பால் ஏற்படும் காயங்கள் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் வயதான காலத்தில் அதிகரிக்கின்றன என்பதும் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மதுபான நுகர்வு ம்ற்றும் அதனால் ஏற்படும் தீங்கு தரும் விளைவுகள் ஆகியவை இந்தியாவில் மிக பெரும் பொது சுகாதார பிரச்சனையாக விளங்குவதுடன் இந்த கலாசாரம் ஆபத்தை உணர்த்துவதாகவும் உள்ளது என ஆய்வின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த ஆய்வு முடிவுகள், இளம் வயதில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது. மேலும், இளம் வயதில் மதுபானம் குடிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவும் வலியுறுத்துகிறது.

Wednesday, July 23, 2014

திருபாய் அம்பானியின் வெற்றிக்கான நான்கு காரணம்

திருபாய் அம்பானியின் வெற்றிக்கான நான்கு காரணம்


1. பிரம்மாண்டமாக சிந்தியுங்கள்.
2. 
வேகமாக சிந்தியுங்கள்.
3. 
வேகமாக செயலாற்றுங்கள்.
4. 
வேகமாக இலக்கை அடையுங்கள். மற்றவர்கள் சிந்திக்க துவங்கும் முன் இலக்கை அடைந்து விடுங்கள்.

இந்த வரிகளை வாழ்க்கையின் தாரக மந்திரமாக ஏற்றுவளமான வல்லரசு பாரதத்தை உருவாக்க பாடுபடுவோம்.

urs 

Dr.Star Anand Ram

www.v4all.org 

Tuesday, July 15, 2014

எந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்படையும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் !!!


எந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்படையும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

இன்று மருந்துகள் என்னும் பெயரில் நாம் எடுக்கும் விஷங்கள் எந்த எந்த உறுப்புகளை கெடுக்கிறது என்பதனை பட்டியல் இட்டு வெளியிட்டுள்ளனர் ஆராய்சியாளா்கள். இதனை பார்த்த பின்பும் நீங்கள் மருந்துகள் உண்டால் அதற்கு பெயர் நிச்சயம் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை என்றும் தமது பதிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.

ரசாயன நஞ்சுகளால் பாதிப்படையும் பகுதிகள் :

அம்மோனியம் சல்பேட்வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்

பீட்டா பிராபியோலாக்டோன்கல்லீரல், வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் கண்டறியப்படவில்லை

விலங்கு, பாக்டீரிய வைரஸ் டி.என். மரபணுக்களில் சிதைவை ஏற்படுத்தும்

லாட்டக்ஸ் ரப்பர்திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு

எம்.எஸ்.ஜிபிறவிக்கோளாறு மற்றும் ஒவ்வாமை

அலுமினியம்அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா

ஃபார்மால்டிஹைட்மூளை மற்றும் குடல் புற்றுநோய்

பாலிசோர்பேட் 60 – நிரூபிக்கப்பட்ட புற்று நோய் காரணி

டிரைபுடைல் பாஸ்பேட்சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு

ஜெலடின்ஒவ்வாமை

ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பிஒவ்வாமை

பாதரசம்வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்பூழ் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்

நியோமைசின் சல்பேட்சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்

பினால் (கார்பாலிக் அமிலம்)/

எதிலின்கிளைகால்/ பினோஜைதனால்செல்களை பாதிக்கும் விஷம்

குளுதரால்டிஹைட்பிறவிகுறைபாடுகளை ஏற்படுத்தும்

போரக்ஸ்எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்…!

இந்த விஷங்களை கொண்டு நோய்களை குணப்படுத்துவதாக கூறுவது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை

Sunday, July 13, 2014

வலதுகைப் பழக்கம், இடதுகைப் பழக்கம் இவையெல்லாம் எதைப் பொருத்து அமைகின்றன?

சில நாடுகளில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ம் தேதி, இடக்கைப் பழக்கமுள்ளவர்கள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் இடக்கை  பழக்கமுள்ளவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

நம்மில் அதிகமானோர் வலதுகைப் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறோம். இடது கைப்பழக்கமுடையோர் செயல்களைக் கண்டு வியக்கிறோம். உலக மக்களில்  நூற்றுக்கு நான்கு பேர் இடது கைப் பழக்கமுள்ளோர்களாக இருக்கின்றார்கள் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

வலதுகைப் பழக்கம், இடதுகைப் பழக்கம் இவையெல்லாம் எதைப் பொருத்து அமைகின்றன? மூளையைக் கட்டுப்படுத்தும் பகுதியைப் பொருத்தே அமைகின்றன.

இடதுகைப் பழக்கம் பல பிரபலங்களுக்கு இருந்திருக்கிறது. மாவீரன் அலெக்ஸாண்டர், ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ, லியனார்டோ டாவின்ஸி, விஞ்ஞானி  பெஞ்சமின் ஃபிராங்க்ளின், புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின், டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா, நடிகை மர்லின் மன்றோ,  அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் - இப்படி ஒவ்வொரு துறையிலும் இடக்கை பழக்கமுடையோர் இருக்கின்றனர்.

இந்தப் பட்டியலில் லியனார்டோ டாவின்சி மேலும் ஒரு சிறப்புப் பெறுகிறார். அது என்ன சிறப்பு?

பொதுவாக வலக்கையாலே கண்ணாடி பிம்பம் போல எழுதுவது கடினம். ஆனால் டாவின்சியோ கண்ணாடி பிம்பம் போல இடது கையால் எழுதும் ஆற்றல்  பெற்றவராம்.

பொதுவாக நமது மூளையின் வலது பக்கம் உடலின் இடது பக்கத்திற்கும் மூளையின் இடது பக்கம் உடலின் வலது பக்கத்திற்கும் சமிக்ஞைகளை அனுப்பிக்  கட்டுப்படுத்துகின்றன. மூளைக்கும் உடலின் பக்கத்திற்கும் என்ன தொடர்பு?

மூளையின் ஒரு பகுதியில் உள்ள சில நரம்புகள் கழுத்துப் பகுதி வழியே கடந்து உடலின் எதிர் பாகத்தில் முடிவடையும். மூளையில் உள்ள இந்த நரம்புகள்தான்  நம் கைப்பழக்கத்தை உண்டாக்குகின்றன என்பது ஒரு ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

1648ம் ஆண்டு சர் தாமஸ் பிரவுன் என்பவர் எழுதிய வல்கர் எர்ரர்ஸ் (Vulgar Errors) என்ற நூலில் முதன்முதலாக இடக்கைப் பழக்கத்திற்கும் மூளைக்கும்  உள்ள தொடர்பைப் பொது மக்களுக்குத் தெரிவித்தார்.

இடக்கைப் பழக்கம் பற்றிப் பலர் ஆய்வு செய்துள்ளனர். அன்னீட் (Anneet) என்பவர் செய்த ஆய்வின்படி இடக்கைப் பழக்கமுள்ளோர்களை இரு வகையாகப்  பிரித்தார். இடக்கைப் பழக்கம் பரம்பரையாகத் தோன்றுகிறது என்றும் பரம்பரைக் காரணமில்லாமல் தனித்தும் தோன்றுகிறது என்றும் வகைப்படுத்தினார்.

மெக்கால் (Mchal) என்பவர் நடத்திய ஆய்வின்படி வலக்கைப் பழக்கமுடையோரின் மூளையின் சிறு கிளைகள் (Occipital Horns), பக்கவாட்டு இரத்தக் குழாய்கள்  ஆகியவை மூளையின் இடப்பக்கத்தில் இருந்தவற்றைக் காட்டிலும் ஐந்து மடங்கு நீளமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இடக்கைப் பழக்கமுடையோர்களுக்கு இந்த  அமைப்பு நேர்மாறாக இருக்கிறதாம்!

நரம்புக் கோளாறுடைய குழந்தைகள் பெரும்பாலோர் இடக்கைப் பழக்கம் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். இடக்கைப் பழக்கமுள்ள குழந்தைகள்  பெரும்பாலோர் பிறப்பு காலத்தில் டிரோமா (Birth Trauma) என்ற தாக்குதலுக்கு உட்படுவதாக பாகான் (Bakan) என்ற மருத்துவர் கூறுகிறார்.

இடக்கைப் பழக்கமுடையோரை வலக்கைப் பழக்கத்திற்கு மாற்றினால் சிலருக்குத் திடீர் என திக்குவாயாக மாறிட வாய்ப்பு உள்ளதாம். உதாரணம்: இங்கிலாந்தை  ஆண்ட ஆறாம் ஜார்ஜ் மன்னர்.

பெரும்பாலான பொருட்கள் வலக்கைப் பழக்கமுடையோர் பயன்படுத்தக் கூடியன வாகவே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சில வெளிநாடுகளில் கத்திரிக்கோல்,  கோல்ஃப் விளையாட்டு விளையாடப் பயன்படும் மட்டை போன்ற பொருட்கள் இடக்கைப் பழக்கமுடையோர் பயன்படுத்த ஏதுவாகவும் தனிப்பட்ட முறையில்  தயாரிக்கப்படுகின்றன. இது இடக்கைப் பழக்கமுடையோருக்கு ஒரு ஆதரவான இன்பச் செய்தி!

எது சரியான உணவு - சரியான உணவு பற்றி குறிப்புகள்

எது சரியான உணவு - www.v4all.org 


நாம் வாழும் வாழ்க்கையின் முழுப் பலனைப் பெற, உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சுவரில்லாமல் சித்திரமில்லை. ஆரோக்கியமான உடலுக்கு தேவை உணவு. அதாவது தேவையான எல்லா சத்துக்களும் சேர்ந்த நல் உணவு. உணவே கடவுள். உணவே மருந்து. உணவை சீர்திருத்தினால், ஆரோக்கியம் பெருகும். ஆயுள் உயரும். பெட்ரோல் போடாத வண்டி ஒடாது. காருக்கு எப்படி பெட்ரோலோ, உடலுக்கு உணவு. உணவை கண்டபடி உண்ணமால் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும். வயதிற்கேற்ப உணவு கட்டுப்பாடுகள் அவச¤யம¢. ஆரோக்கியத்திற்கு தேவை சத்துள்ள, ருசிமிக்க, சரிசம விகித உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்
புரதம்,  மாவுச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், உப்பு, உலோக தாதுப் பொருட்கள் இவை உடலுக்கு தேவையான சத்துப் பொருள்கள். உடலுக்கு தேவையான எரிசக்தியை கலோரி என்று கணக்கிடுகிறோம். ஒரு மனிதனுக்கு தேவையான கலோரிகள் எவ்வளவு என்று நிர்ணயிப்பது அவன் செய்யும் வேலையைப் பொருத்தது.
இவை கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு இன்னும் அதிக கலோரிகள் தேவை.
சரியான உணவு பற்றி குறிப்புகள்
நோயாளிகளுக்கு மட்டுமல்ல, சராசரி மனிதனுக்கும் உணவுக்கட்டுப்பாடு தேவை. கல்லூரி செல்லும் மாணவ மாணவியர்களுக்கு தேவையான உணவு 60 வயதுள்ளவர்களுக்கு ஒத்து வராது. வயது ஏற ஏற உணவுக்கட்டுப்பாடு மிக அவசியம். 60 வயதானவர்களின் அன்றாட வேலை குறைவு. அவர்களுக்கு 1550 கலோரி போதுமானது.
பசிக்கும் போது உண்ண வேண்டும். வயிறு புடைக்க அளவில்லாமல் உண்ணுவது கூடாது. அவசர அவசரமாக சாப்பிடக்கூடாது. நன்கு மென்று உண்ண வேண்டும்.
நல்ல தரம் உடைய, இயற்கையான, முழுமையான உணவுப் பதார்த்தங்களை தேர்ந்தெடுத்து உண்ணவும்.
சமையல் விஸ்தாரமாக செய்யாமல், குறைவான நேரத்தில் சமையலை முடியுங்கள். அதிக நேரம் அடுப்பில் சுட வைத்தால் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் இவை அழிந்து விடும்.
பழரசமாக மாற்றுவதை விட, பழங்களை நேரடியாக சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து முழுமையாக கிடைக்கும்.
பல தரப்பட்ட உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ளவும்.
பூரித (Saturated) கொழுப்பை தவிர்க்கவும்.
புகையிலை, சிகரெட், மது வேண்டாம்.
தினமும் 6 - 8 டம்ளர் தண்ணீர் பருகவும்.
உண்ணும் போது பாதி வயிற்றில் காய்கறிகள், பழங்கள் தெளிவான ரசம், வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர் இவற்றால் நிரப்பி, கால் வயிற்றில் அரிசி அல்லது கோதுமை பண்டங்களால் நிரப்பி பாக்கியை காலியாக வைக்கவும்.
எந்த வேளை உணவையும் முழுமையாக தவிர்க்க வேண்டாம். காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம்.
அதிகமாக எப்போதாவது சாப்பிட்டால், அதிகப்படி கலோரிகளை எரிக்க அதிக உடல் உழைப்பு தேவை.

முதுகு லியை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்பதற்கு சில டிப்ஸ் .....




முதுகு வலியை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்பதற்கு சில டிப்ஸ் ..... 





1. நாற்காலியில் அமரும்போது, நன்றாக சாய்ந்து, உங்கள் முதுகுப் பகுதி நாற்காலியோடு ஒட்டி இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது, கால்களை கீழே தரையில் வைக்காமல், ஏதாவது பலகை அல்லது பெட்டியின் மீது வைத்துக் கொள்ளுங்கள்.

2.கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஏதாவது ஒரு பேடை எடுத்துவைத்து, அதில் கீபேடை வைத்து டைப் செய்யுங்கள். அதேபோல், உங்கள் கண்ணும் கம்ப்யூட்டர் திரையும் இணைகோட்டில் இருப்பதுபோல பார்த்துக் கொள்ளுங்கள். கழுத்தை நிமிர்த்தியோ, அல்லது குனிந்தோ திரையை பார்க்க வேண்டாம் (பார்க்க: படம் 3).

3.அமர்ந்திருக்கும் சேரில் இருந்தபடி கழுத்தைத் திருப்பி ஏதாவது பொருட்களை எடுப்பது, இடுப்பை மட்டும் திருப்பி டெலிபோன் எடுப்பது போன்ற செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள். எந்தப் பொருளை எடுப்பதாக இருந்தாலும் மொத்த உடம்பையும் திருப்பி எடுங்கள் (பார்க்க: படம் 2).

4.படுத்துக்கொண்டு படிப்பது, சேரில் உட்கார்ந்து கொண்டே டேபிளில் கவிழ்ந்தபடி படிப்பது.. இவை எல்லாம் அப்போதைக்கு வசதியாகத் தோன்றினாலும் வயதாகும்போது முதுகுவலியில் கொண்டு போய் விட்டுவிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

5.ஒரே இடத்திலோ... அல்லது ஒரே நாற்காலியிலோ நீண்டநேரம் உட்கார்ந்திருந்தால், முதுகு வலி வரலாம். எனவே, அவ்வப்போது எழுந்து ஒரு ‘வாக்’ போய் வாருங்கள்.

6. அதிக எடை உள்ள பொருட்களை தூக்கும்போது, சரியான முறையில் தூக்காவிட்டால், நிச்சயம் முதுகு வலி ஏற்படும். அவற்றைத் தூக்கும்போது இடுப்பை வளைக்காமல், முழங்கால்களை மட்டும் வளைத்துத் தூக்குங்கள் (பார்க்க: படம் 4). பொருளை மார்புக்குக் கீழே, உடம்புக்கு நெருக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். பொதுவாகவே, கனமான பொருட்களை, தூக்குவதைவிட இழுத்துச் செல்லுவது நல்லது.

7. நிமிர்ந்து நேராக நிற்கும்போது, ஒரு பாதம் முன்னேயும், அந்தப் பாதத்தின் முட்டுப் பகுதி சிறிது வளைந்தும் இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள். அதிக நேரம் நிற்க வேண்டியிருந்தால், பாதங்களில் ஒன்றைவிட மற்றதை உயரமாக ஒரு பலகையின் மேல் இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள் (பார்க்க: படம் 1). நீங்கள் நின்றுகொண்டிருக்கும் நிலையை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது.

8.பொதுவாக, நம் எடையை உடல் முழுவதுமே சேர்ந்து சமமாகத் தாங்குகிறது. ஹை ஹீல்ஸ் அணியும்போது விரல் மட்டும்தான் மொத்த பாரத்தையும் சுமக்க வேண்டியதாகிறது. அதனால், முதுகுக்கு அழுத்தம் அதிகரித்து முதுகு வலி ஏற்படுகிறது. ஆகவே, முதுகு வலி வேண்டாம் என்று நினைக்கிறவர்கள் ஹை ஹீல்ஸ் செருப்புகளுக்கும் ஒரு பெரிய கும்பிடு போட வேண்டும்

Tuesday, July 8, 2014

தியானம் எனப்படும் மன ஒருமைப்பாடு. - மனம் என்கிற இந்த கருவி

தியானம் எனப்படும் மன ஒருமைப்பாடு.



மனஉளைச்சல்களை அதிகம் தருகிற வாழ்க்கை முறையாக நமது வாழ்க்கை முறைகளை தற்போது நாமே மாற்றிக் கொண்டு விட்டோம். ஸ்ட்ரெஸ் (stress) என்னும் இந்த மன உளைச்சல் மனிதனை படாத பாடு படுத்தி கொண்டிருக்கிறது. இல்லாத வியாதிகளை வரவழைக்கச் செய்கிறது இந்த மன உளைச்சல். ஏற்கனவே வியாதியால் பீடிக்கப்பட்டிருப்போரை அதிக வியாதிகளை தந்து மேலும் துன்பத்தில் ஆழ்த்துகிறது.

மனம் என்கிற இந்த கருவியினை முறைப்படியாக செப்பனிடத் தவறினால் ஏற்படும் துன்பங்களை நாம் உணரத் தவறி விட்டோம். அதனால் மனித வாழ்வில் துன்பங்கள் தொடர்கதைகளாகிப் போயின. மன உளைச்சலை நீக்கிக் கொள்ள மிகச் சிறந்த வழியாக தியானம் போற்றப்படுகிறது. அறிவியல் ரீதியாக தியானம் மிகச் சிறந்த மன ஒருமைப்பாட்டினைத் தரும் முறையாக உலகில் உள்ள எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்தத் தியானம் என்கிற அற்புத மன ஒருமைப்பாட்டுக் கலையினை அஷ்டாங்க யோகம் எனும் யோக முறையின் எட்டுப் படிகளில் ஒன்றாக ஏழாவது படியில் வைத்து தமது யோகசூத்திரங்களின் மூலம் விளக்கி அருளி இருக்கிறார் யோகக் கலையின் பிதாமகர் என எல்லோராலும் போற்றி வணங்கப்படும் பதஞ்சலி முனிவர். தலைசிறந்த சிவராஜ யோகியான திருமூலரும் அஷ்டாங்க யோகத்தின் படிநிலைகளை தமது திருமந்திரம் எனும் புகழ் பெற்ற யோகசாத்திர நூலில் விளக்கி உள்ளார்.

யோகம் என்றால் என்ன? என்று கேட்டால் பலரும்  பலவிதமாக சொல்வார்கள்.

ஆனால் யோகம் என்றால் என்ன என்பதை பதஞ்சலி தனது இரண்டாவது சூத்திரமாக இவ்வாறு சொல்லுகிறார்..

யோகஸ்சித்தவ்ருத்தி நிரோதஹ’ – அதாவது மனதில் தோன்றும் எண்ண அலைகளை நிறுத்துவதே யோகம் எனப்படுவது என்கிறார் பதஞ்சலி.

அப்படி எனில் யோகம் என்பது கையைக் காலை உடலை வளைத்து செய்யும் ஆசனம் இல்லையா? ஆசனம் மட்டுமே யோகம் இல்லை என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ளவேண்டும்யோகம் என்பது எட்டு நிலைகளை கொண்டது. அதனை அட்டாங்க யோகம் என்று அழைக்கிறார்கள். அட்டாங்க யோகம் எனப்படும் எட்டுப்படி நிலைகளை நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

1.  இயமம்.
2.  நியமம்
3.  ஆதனம்
4.  பிராணாயாமம்
5.  பிரத்தியாகாரம்
6.  தாரணை
7.  தியானம்
8.  சமாதி

எனப்படும் எட்டுப் படிநிலைகள் மூலம் ஒரு சாதகன் பெறக் கூடிய பயன் என்பது மனத்தின் () சித்தத்தின் எண்ண அலைகளை நிறுத்துவதே என்கிறார் பதஞ்சலி முனிவர். மனம் என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு கருவி. அதனை சிந்தனை செய்யாதே! உன் எண்ண அலைகளை நிறுத்தி விடு! என்று அந்த மனத்திடம் நாம் கட்டளையிட்டால் அது கேட்குமா?

தாயுமானவர் எனும் ஞானியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தாயுமானவரின் தந்தை கேடிலியப்ப பிள்ளையின் காலத்திற்கு பிறகு திருச்சிராப்பள்ளியில் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சியில் பெருங்கணக்கராக இருந்தார் தாயுமானவர். அரசு பணிகளை செவ்வனே செய்து வந்த போதிலும், அவருள்ளம் இறையருள் நாட்டத்திலேயே இருந்தது. அவர் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானசுவாமி கோயிலுக்கு தினமும் சென்று வழிபடுவது வழக்கம். சுவாமியை தரிசித்து விட்டு வலம் வருகையில் தட்சிணாமூர்த்தி சுவாமியின் சன்னதியில் சென்று வழிபடுவதையும் வழக்கமாக கொண்டவர். ஒரு நாள் அப்படி வலம் வந்து தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு வந்த தாயுமானவரை ஒரு ஞானி கவர்ந்தார். தட்சிணாமூர்த்தி சன்னதியில் தட்சிணாமூர்த்தி திருஉருவுக்கு நேராக எதிர்ப்புறத்தில் அமர்ந்திருந்த அந்த ஞானியின் பெயர் மௌனகுரு ஸ்வாமிகள். மௌனமே வடிவாக இந்த ஞானி அமர்ந்திருப்பது தென்முகக் கடவுள் என்று நாம் வழிபடுகின்ற தட்சிணாமூர்த்தியைப் பார்த்தபடி.

இறைவடிவினரான அந்த தட்சிணாமூர்த்தி எப்படி அமர்ந்திருக்கிறார் தெரியுமா? கல்லாலின் அடியில் சனகாதி முனிவருக்கு ஞானத்தை போதிக்கிறார். அங்கே சொற்கள் இல்லை. சின் முத்திரையைக் காட்டி அருட்பார்வையால் நான்கு வேதங்களையும், உபநிடதங்களையும், அனைத்து தத்துவங்களையும், ஞானத்தையும் சில நொடிகளில் போதிக்கிறாராம் தட்சிணாமூர்த்தி சுவாமி. யோகீஸ்வரன் என்று நாம் வணங்கும் சிவனின் ஒரு வடிவான தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள் தான் மௌனகுரு வடிவில் வந்து தாயுமானவரை ஆட்கொள்கிறார். அவர் பின்னாலேயே சென்ற தாயுமானவர் துறவியாகி விட்டார். பதவி, பொன், பொருள், வீடு, மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்ற பந்தங்களை துறந்து அவரும் ஒரு துறவி ஆகிவிட்டார். அந்த தாயுமானவர் மனசைப் பற்றி தனது தேஜோமயானந்தம் எனும் பாடலில் சொல்கிறார்.

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்; கரடிவெம் புலிவாயையும்கட்டலாம்;
ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்; கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலோ கத்தையும் வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம் விண்ணவரையேவல் கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்;
மற்றொரு சரீரத்தி னும்புகுதலாம்;சலமே னடக்கலாம்; கனன்மே லிருக்கலாம்,
தன்னிகரில் சித்தி பெறலாம்; சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற திறமரிது;
சத்தாகியென் சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே! தேசோமயானந்தமே  
- தாயுமானவர் (கிபி 1608 - 1662)

இந்த அருமையான பாடலின் சுருக்கமான பொருள் இதோ:- குதிரை, மதயானையை நம் வசமாக்கி நடத்தலாம். கரடி, வெண்புலி வாயையும் கட்டலாம். ஒரு சிங்கத்தின் மேலேறி உட்கார்ந்து கொள்ளலாம். பாம்பை (கட்செவி) நம் இஷ்டப்படி ஆட்டுதல் கூடும். நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலோகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம். வேறு யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம். தேவர்களை (விண்ணவர்களை) வேலை வாங்கலாம். சதாகாலமும் இளமையோட இருக்கலாம். வேறொரு உடலில் புகுந்து கொள்ளலாம். நீரின் (சலம் - ஜலம்) மேல் நடக்கலாம். நெருப்பின் (கனன் - கனல்) மேல் தங்கி இருக்கலாம்தமக்கும் மேலான பிற சித்திகளைப் பெறலாம். ஆனால், மிக்க கடினம் யாதெனில் ''மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் அரிது' உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே,தேசோமயானந்தமே என்றெல்லாம் பாடுகின்ற தாயுமான சுவாமிகள்  நாம் அட்டமாசித்தியைக் கூட அடைந்து விடலாம். ஆனால் இந்த மனத்தை அடக்கி சும்மா இருப்பது என்பது கடினமே என்கிறார்.

ஆனானப்பட்ட அந்த தாயுமானவரே மனசை அடக்குவது கடினம் என்று சொல்லி விட்டார் நமக்கு எதற்கு இதெல்லாம் என்ற பயந்து விடாதீர்கள். மனசை வசப்படுத்தும் இந்த திறனை யோகத்தின் படிநிலைகளில் ஒன்றான தியானம் மூலமாக அடையலாம்; அட்டாங்க யோகத்தின் மூலம் எண்ண அலைகளின் வளர்ச்சியை நிறுத்துவது இயலும் என்கிறார் பதஞ்சலி முனிவர்.

மனசை வசப்படுத்துவது என்பது கொக்கு பிடிப்பது போலத்தான்.!

கொக்கை எப்படிப் பிடிப்பது?’ என்று ஒருவன் ஒரு அதி புத்திசாலியிடம் கேட்டானாம். கொக்குதானே பிடிக்கணும்? ரொம்ப சுலபம். கொக்கு தலையில் கொஞ்சம் வெண்ணையை வைக்கணும். கொஞ்ச நேரம் கழித்து வெண்ணை உருகி கொக்கின் கண்ணை மறைக்கும். அப்போது கொக்கு திகைத்து போய் பறக்க இயலாமல் நிற்கும். அப்போ கொக்கை கப் என்று பிடித்து விடலாம்என்றானாம் அந்த அதிபுத்திசாலி. அது சரி. கொக்கை வெண்ணை தலையில் வைக்கும் போதே அதைப் பிடித்து விடலாமே. இவனிடம் போய் யோசனை கேட்டோமேஎன்று நினைத்தானாம் கேள்வி கேட்டவன்.

என்னடா இது? இந்த ஆள் கொக்கு வெண்ணை என்று சம்பந்தமே இல்லாமல் சொல்கிறானே என்று யாரும் தயவு செய்து நினைக்க வேண்டாம். எல்லாவற்றுக்கும் தொடர்பு இருக்கிறது. உடல் மனம் ஆன்மா மூன்றையும் இணைப்பதுதான் யோகம் என்று முதலில் பார்த்தோம் அல்லவா?. யோகம் என்றால் மனசின் எண்ண அலைகளை தடுத்து நிறுத்துவது என்று இரண்டாவதாக பார்த்தோம். அட்டாங்க யோகம் என்பது என்ன என்றும் பார்த்தோம்.

எண்ண அலைகளை தடுத்து நிறுத்தும் இந்த படிநிலை ஏழாவது படிநிலையான தியானத்தை அடுத்து வரும் எட்டாவது படியான சமாதி நிலை.

இந்த சமாதி நிலையில் தான். மனசை கட்டவேண்டும் என்றால், அசையாத நிலையை உருவாக்கவேண்டும் என்றால், முதலாவதாக நாம் இயமம் என்கிற சமூக ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்.. இரண்டாவதாக நாம் நியமம் என்கிற தனி மனித ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும். மூன்றாவதாக இந்த உடலை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆசனங்களை பயில வேண்டும். நான்காவதாக மனதை கட்டுக்குள் கொண்டு வர பிரணாயாமம் (மூச்சைக் கட்டு), ஐந்தாவதாக பிரத்தியாகாரம் (ஐம்புலன் ஒழுக்கம்), ஆறாவதாக தாரணம்(ஐம்புலன் ஒடுக்கம்), ஏழாவதாக தியானம்(ஏழாவது அறிவு) போன்ற படி நிலைகளைக் கடக்க வேண்டும். அப்போது தான் அந்த மனமற்ற (எண்ணமற்ற) சமாதி நிலை கிட்டும் என்பதால் தான் மனமென்னும் அந்த கொக்கைப் பிடிக்க அட்டாங்க யோகம் எனப்படும் வெண்ணையை அதன் தலையில் வைக்கவேண்டும் என்ற பொருளில் அந்த அதிபுத்திசாலி சொல்லி இருப்பான் என்று நான் நினைக்கிறேன்.

ஆக பதஞ்சலி சொல்கிற மாதிரி எண்ண அலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அட்டாங்க யோகத்தினை பயில வேண்டும். அந்த எட்டுப்படி நிலைகளை கடக்க வேண்டும். தாயுமானவருக்கு கிடைத்தது போல சரியான ஒரு நல்லாசான் கிடைத்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இந்த பிறவியிலேயே மனமற்ற நிலையை அடைய வழி வகுக்கும் சில பயிற்சிகள் உங்களுக்கு கைகூடலாம். இவற்றின் துணை கொண்டு இந்த பிறவியை வெல்லக்கூடிய உபாயங்கள் பிற்காலத்தில் உங்களுக்கு கிடைக்கலாம். அந்த இனிய நிலை அதாவது சமாதி நிலை உங்களது தேவைகளை தேடல்களை அடிப்படையாக கொண்டது. வாழ்க்கையை நலமாக, வளமாக வாழ வேண்டும்... எனக்கு இந்த சமாதி நிலையெல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு நல்ல உடல், நல்ல மனம் என்கிற அருமையான வாழும் கலையை கற்றுக் கொள்ள தியானப் பயிற்சிகள் உதவும். ஒரு புதையலின் அருகே உங்களை அழைத்துச் செல்லும் போது அந்த செல்வத்தை எந்த அளவுக்கு அள்ளிக் கொள்ள வேண்டும் என்பதை... கை நிறையவா? பை நிறையவா? மூட்டை மூட்டையாகவா, லாரி லாரியாகவா? நீள நீள கண்டெயினர்களிலா? என்பதையெல்லாம் நீங்கள்தான் முடிவு செய்து கொள்ளவேண்டும்.

எப்படியோ, நாம் கற்றுக் கொள்ளப் போகிற செய்திகள், இது வரை நாம் வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொண்ட விஷயங்களை, நமது பழக்க வழக்கங்களை, சிந்தனை அமைப்புக்களை எல்லாவற்றையும புரட்டிப் போடக் கூடியதாக இருக்கும் என்று மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். 'நன்றிது தேர்ந்திடல் வேண்டும்; இந்த ஞானம் வந்தார்ப் பின்னர் வேறென்ன வேண்டும்? என்பார் மஹாகவி பாரதி. ஞானம் என்கிற அந்த விழிப்புணர்வினை நீங்கள் பெற்று விட்டால் உங்களை நீங்கள் வெற்றி கொள்ள முடியும். உங்களை வெற்றி கொண்ட பின்னரே உலகை வெல்ல முடியும் என்பதுதான் இரகசியம்.

நமது வாழி நலம் சூழ வலைப்பூவில் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வரும் யோகாசன ஆசிரியரும், இயற்கை நலவாழ்வியல் நெறியாளருமான பொறியாளர் பிக்ஷுஅடிப்பொடி திரு. .மெய்யப்பன், B.E., M.B.A., PG Dip(Yoga&Naturopathy) அவர்கள் குபேரத் தியானம் எனும் தலைப்பில் எவ்வாறு நீங்கள் மனதில் நினைத்ததை மனதின் துணை கொண்டு தியானத்தின் மூலமாக அடையலாம் என்று எதிர் வரும் தொடர்களில் விளக்கவுள்ளார். நான்கு பகுதிகளில் வர இருக்கும் அந்தத் தொடரின் அறிமுகக் கட்டுரையாக இதனைக் கருதி, தொடர்ந்து குபேர நிலைத் தியானம் எனும் தலைப்பில் வர இருக்கும் பதிவுகளைப் படித்து பயன் பெற உங்களை அழைக்கிறேன்.


நன்றி. - www.v4all.org