Showing posts with label yoga teacher in coimbatore.yoga therpy. Show all posts
Showing posts with label yoga teacher in coimbatore.yoga therpy. Show all posts

Saturday, September 6, 2014

பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் ! ஃபாஸ்ட் ஃபுட் பிரியர்களுக்கு... ஒரு முறை இதைப் பாருங்கள். ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடவே மாட்டீங்க... இத்தனை கொடுமையானதா இது... *** பார்த்து முடிச்சதும், லைக் பண்ணிட்டு, அப்புறமா ஷேர் பண்ணுங்கப்பா... ப்ளீஸ்..

பாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் !
1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக உபயோகிக்கிறோம்.. அதை வினிகரில் கழுவி உபயோகிக்கும் போது அந்த கேட்டு போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை …
2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை உபயோகிக்கிறோம்.. பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ???
3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே உபயோகிப்பதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் உபயோகித்த .. என்னையோ கலந்து செய்றோம் ..
4) எந்த பாஸ்ட் புட் கடையிலும் சன் பிளவர் எண்ணை உபயோகிப்பதில்லை .. .. பாமாயில் தான் உபயோகிக்கிறோம்.
5) ரைஸ் கடாயில் உபயோகிக்கும் பொது சோரு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம் ..
6)இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க … அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயீலை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம் .. காரணம் அதில் உள்ள என்னை பசை போக கூடாது என்பதற்காக .. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் வேஸ்டாகிவிடும் ..
7)அஜினமோட்டோ .. இதை அதிகமாக உபயோகிக்கிறோம் .. அது உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள் .. இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும் .. சோதித்து பாருங்கள் ..
8)வெள்ளை பெப்பர் .. இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது .. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம் ..
9)தக்காளி சாஸ் .. இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த , காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை உபயோகிக்கிறோம்..
10)சில்லி சாஸ் .. அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கெட்ட வாடை அடிக்கும் ..
இது தான் .. நாங்கள் பாஸ்ட் பபுட் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் .. 5 நிமிசத்துல 8 plate போடுவோம் .. ஒன்னு 50 ருபாயினு வித்தா 400 ருபாய் சம்பாரிப்போம் .. அத நானும் சாப்பிட்டு என் உடலும் கெட்டு விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குரோமேனு என என் மனசாட்சி உறுத்தியது .. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன் …
நன்றி – தினேஷ் (பாஸ்ட் புட் கடை வைத்து இருந்தவர் )

Urs - Dr.Star Anand Ram
Naturopathy Dr
Happy welnes Center
www.v4all.org 

Wednesday, August 20, 2014

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது

இந்தியாவில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது 3 மடங்காக அதிகரித்துள்ளது என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலை கழகத்தின் பொது சுகாதார பிரிவை சேர்ந்த ஆய்வாளர்கள் இந்திய வமசாவளியை சேர்ந்த அரவிந்த் என்பவரது தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்பு குறித்து அவர் கூறுகையில், கடந்த 1956-1960ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் மதுவுக்கு அடிமையானவர்கள் 19.5 சதவீதமாக இருந்தனர். இந்த விகிதாச்சாரம் 1981-85ம் ஆண்டிற்கு உட்பட்ட காலத்தில் பிறந்த இளைஞர்களிடையே 74.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது 3 மடங்கு அதிகமாகும். அவர்களில் நகர்ப்புறங்கள் மற்றும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருபவர்கள் மிக இளம் வயதிலேயே இந்த பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
Beer
மனநல பாதிப்பு இந்த ஆய்விற்காக வடக்கு கோவாவை சேர்ந்த 20-49 வயது உடைய 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்கள் அடங்குவர். அவர்களிடம், மதுபானத்தை எந்த வயதில் குடிக்க ஆரம்பித்தீர்கள்?, எவ்வளவு மதுபானம் எடுத்து கொண்டீர்கள்? மற்றும் குடிப்பதால் காயம் எதுவும் ஏற்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களின் மனநல பாதிப்பு குறித்தும் தகுதி வாய்ந்த நபரால் ஆய்வின்போது கணிக்கப்பட்டன. இளம் வயதில் குடிக்க தொடங்காதவர்களை காட்டிலும், மனதளவில் அதிகமாக பாதிக்கப்பட்டு மற்றும் மதுபானத்திற்கு அடிமையாவது என்பது இளைஞர்களிடையே இரு மடங்காக உள்ளது. அவர்கள் குடிப்பதன் காரணமாக 3 மடங்கு காயம் அடைந்து உள்ளனர்.
இளம் வயதில் குடிக்க தொடங்குவதால் வாழ்நாளில் அது தொடர்பான காயங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக அதிக வருவாய் கொண்ட நாடுகளில் இருந்து வரும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முடிவுகள் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட இந்தியா போன்ற நாடுகளிலும் இருக்கிறதா என்பது தெளிவாக தெரியவில்லை என்று ஆய்வு குறித்து அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வு முடிவின்படி, இளம் வயதில் மதுபானம் குடிக்க தொடங்குவதால் வாழ்நாள் முழுவதும் அதனை சார்ந்து இருக்கும் சூழல் அதிகமாக உருவாகிறது. குடிப்பதால் ஏற்படும் துன்பம், மதுபானம் தொடர்பால் ஏற்படும் காயங்கள் மற்றும் மனநலம் சார்ந்த பாதிப்புகள் வயதான காலத்தில் அதிகரிக்கின்றன என்பதும் அதிக வருவாய் கொண்ட நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மதுபான நுகர்வு ம்ற்றும் அதனால் ஏற்படும் தீங்கு தரும் விளைவுகள் ஆகியவை இந்தியாவில் மிக பெரும் பொது சுகாதார பிரச்சனையாக விளங்குவதுடன் இந்த கலாசாரம் ஆபத்தை உணர்த்துவதாகவும் உள்ளது என ஆய்வின் தலைவர் தெரிவித்துள்ளார்.இந்த ஆய்வு முடிவுகள், இளம் வயதில் மதுபானம் குடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதன் அவசியத்தை மேற்கோள் காட்டுகிறது. மேலும், இளம் வயதில் மதுபானம் குடிப்பதை கட்டுப்படுத்துவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவும் வலியுறுத்துகிறது.

Friday, August 8, 2014

செல்வ வளம் தரும் வரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும்

செல்வ வளம் தரும் வரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும் 

வரலட்சுமி 





விரத நாளான இன்று சுமங்கலிப் பெண்கள் வீடுகளை அலங்கரித்து அம்மனுக்கு படையலிட்டு உற்சாகமாக கொண்டாடினர்செல்வ வளம் தரும் வரலட்சுமியை வணங்கினால் குறையாத செல்வம் கிடைக்கும் என்பது நம்பிக்கைஇதனைக் கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஆடி அல்லது ஆவணி மாதங்களில் வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறதுஎட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குபவள் அன்னை லட்சுமிமஞ்சள் பட்டு உடுத்தி மகாவிஷ்ணுவின் திருமார்பில் குடியிருப்பவள் லட்சுமி தேவிமகாலட்சுமியை தனலட்சுமிதான்யலட்சுமிதைரியலட்சுமிஜெயலட்சுமிவீரலட்சுமிசந்தானலட்சுமிகஜலட்சுமிவித்யாலட்சுமி என அஷ்ட லட்சுமிகளாக வழிபடுவர்இவ்வாறு அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்கிறது சாஸ்திரம்.



 எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைத்து வழிபடுகின்றனர். வரலட்சுமி விரதத்தின் மேன்மையைச் சொல்லும் புராணக் கதைகள் நிறைய உண்டு. சௌராஷ்டிர நாட்டின் ராணியாக இருந்த சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால் ஒருமுறை மகாலட்சுமியை அவமதித்தாள். கர்வம் கொண்டு அன்னை லட்சுமியை அவமதித்ததால், செல்வம் அனைத்தும் இழந்து வாடினாள். ராணி சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வாதீனமாக ஒருமுறை வரலட்சுமி விரதம் பற்றி அறிந்தாள். அதுமுதல் அந்த விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினாள். சாருமதியின் இந்த விரதத்தால் மகிழ்ந்த அன்னை லட்சுமி, அவளுக்கு நலன்கள் அனைத்தும் அருளினாள். தன் மகளின் நிலையைப் பார்த்து, அவள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தை தானும் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றாள் சுசந்திரா. அவள் வாழ்வு மீண்டும் வளம் நிறைந்ததாக ஆனது என்கிறது புராணகதை. சென்னை நகரில் இந்த விரதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வரலட்சுமி விரதத்தை ஒட்டி வியாழக்கிழமை மாலையே அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் கும்பத்தில் தேங்காய் வைத்து அதில் மஞ்சளில் முகம் உருவாக்கி வைத்திருந்தனர். அம்மனுக்கு நகைகள், பூமாலைகள் அணிவித்து பிரமாண்டமாக அலங்காரம் செய்து வைத்திருந்தனர். அம்மனுக்கு பிடித்தமான பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு போன்ற பல பொருட்களை நிவேதனமாக படைத்திருந்தனர். ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை உள்ளிட்ட நிவேதனப் பொருள்களை கலசத்துக்கு முன்னர் வைத்து வழிபட்டனர். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம், மஞ்சள் கயிறு, பிரசாதம் வழங்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜையில் இருக்கும் அம்மன் அலங்காரம் சனிக்கிழமை காலையில் வடக்கு திசையில் சற்று நகர்த்தி வைக்கப்படும். இரவில் அம்மன் முகத்தை எடுத்து அரிசி பானையில் வைத்து விட்டு அலங்காரத்தை கலைப்பார்கள். வரலட்சுமி விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை தமிழ்நாடு மட்டுமல்லாது வடஇந்தியமக்களும் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

Yours Happily
Dr.Star AnadRam
Happy money magnet 
www.v4ll.org 

பிள்ளையார் \ அருணாசல புராணத்தில் ஒரு பாடல் ...

பிள்ளையார்
\
அருணாசல புராணத்தில் ஒரு பாடல் ...

மதமூன்று மாறக
வருங்களிற்று முகத்தானை மனத்தினி லேதான்
பதமூன்று மருந்தவர்க்குப் பதமூன்றுங் கடந்தபதம்
பாலிப் பானை
விதமூன்று பரங்கடிந்தா ரளித்தருளு வேரோ டேசஞ்
சிதமூன்று பிறப்பொழிக்கு மானைதிறை கொண்டவனைச்
சிந்தை சேர்ப்பாம்.

இந்த பாடலின் பொருள்
மும் மதங்களும் ஆறாகி ஒடிவருகின்ற
யானை முகமுள்ள வரும்,
மனதில் தம்முடைய திருவடிகளை நாட்டிச்
சிந்திக்கின்ற அரிய தவத்தையுடையவர்களுக்குச்
சாலோகம், சாமீபம், சாரூபம் என்னும்
மூன்று பதங்களுக்கும் மேற்பட்ட நான்காம் பதமாகிய
சாயுச்சியத்தைக் கொடுப்பவரும்,
முப்புரத்தை நீறு செய்த சிவபெருமானீன்றருளிய
ஒப்பற்ற முதல் கடவுளும்,
சஞ்சிதம் பிராரத்தம், ஆகாமிய மென்னும்
மூவகைப்பட்ட வினைகாரணமாக உண்டாகும் பிறவித்
துன்பத்தை யடியோடு நீக்குபவருமாகிய
யானை திறை கொண்டவரென்னும் விநாயகக் கடவுளை
மனத்தில் சேர்த்துக் கொள்வோம்.

வன்னிமர பிள்ளையார் :
இவர் வலஞ்சுழியாக இருப்பது விசேஷம். அதிலும்
வடக்கு திசை நோக்கி அருள் பாலித்தால் இன்னும்
விசேஷம். அவிட்டம் நட்சத்திரம் அன்று இவரை நெல்
பொரியால் அர்சித்து அபிஷேகம்
செய்து வழிபடுவதோடு கன்னிப் பெண்களுக்கு தானம்
கொடுத்தால் திருமணம் ஆகாதவரகளுக்கு நல்ல வரன்
கிடைத்து சட்டென்று திருமணம் நடைபெறும்.

வில்வமர பிள்ளையார் :
இவர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு
சித்திரை நட்சத்திரம்
அன்று மளிகை பொருட்களை ஏழைகளுக்கு தானமாக
வழங்கி இந்த விநாயகரை வலம் வந்தால் பிரிந்த
கணவன் மனைவியர் விரைவில்
ஒன்று சேர்ந்துவிடுவார்கள்
இதே விநாயகருக்கு வியாழன் புதன் கிழமைகளில்
சந்தனத்தால் அலங்காரம் செய்து வழிபட படிக்க
பிடிக்காத பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம்
அதிகரிக்கும்.

அரசமர பிள்ளையார் :
இவர் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு
பூசம் நட்சத்திரம் அன்று இவருக்கு அன்னாபிஷேகம்
செய்தால் பயிர் விளைச்சல் பெருகும்
உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி உடனே கிட்டும்
பணக்கஷடம் தீரும்.

ஆலமர பிள்ளையார் :
இவர் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு மகம்
நட்சத்திரம் அன்று இவருக்கு 5 வகை சித்திரான்கள்
படைத்து தானம் செய்தால் கடுமையான நோய்கள்
விலகிவிடும்.

வேப்பமர பிள்ளையார் :
இவர் கிழக்கு நோக்கி இருப்பது விசேஷம்
உத்திராட்டதி நட்சத்திரம்
அன்று இவருக்கு தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய்
இலுப்பை எண்ணெய்,விளக்கெண்ணெய், பசுநெய் ஆகிய 5
வித எண்ணெய் தீபமான "பஞ்சதீபம்" ஏற்றி வழிபட
மனத்திற்க்கு பிடித்த வரன் அமையும், அலுவலகத்தில்
மேலதிகாரியின் அடிமையாக செயல்புரியும்
நிலை அகலும்.

நெல்லிமர பிள்ளையார் :
பரணி நட்சத்திரம் அன்று இவருக்கு தேங்காய்
எண்ணெயை கொண்டு 108 விளக்குகள்
ஏற்றி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ
உதவி செய்தால் இரும்பு தொழில் அமோகமாக
நடைபெறும் பெண் குழந்தைக்காக
ஏங்குபவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும். மன
சாந்தியும் கிடைக்கும்.

மாமர பிள்ளையார் :
கேட்டை நட்சத்திரம் அன்று இந்த
விநாயகருக்கு விபூதி காப்பிட்ட 3
ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு உணவு ஆடை தானம்
செய்ய பிறரின் பகைமை பொறாமையால் பாதிக்கப்பட்ட
வியாபாரம் மறுபடியும் சிறக்கும் விரக்தியால்
உருவாகும் தற்கொலை மனப்பான்மை தணிந்து வாழ்வில்
உறுதி ஏற்படும்.

நாவல்மர பிள்ளையார் :
இவர் வடக்கு நோக்கி இருப்பது விசேஷம்
ரோகினி நட்சத்திரம் அன்று புனித நதிக்கரையில்
ஏழைச் சிறுவர்களுக்கு வெண்ணெய் தானம்
அளித்து இவரை வழிபட்டுவர பிரிந்த தம்பதியினர்
குடுங்பங்கள் உறவுகள் ஒன்று சேருவர்.

புன்னைமர பிள்ளையார் :
ஆயில்யம் நட்சத்திரம் அன்று இவருக்கு இளநீர்
அபிஷேகம்
செய்வதோடு ஏழை நோயாளிக்களுக்கு ஆடை தானம்
செய்தால் கணவன் மனைவி இடையே உள்ள மனக்கசப்புகள்
நீங்கும் தாம்பத்திய வாழ்க்கை வளமாகும்.

இலுப்பை மர பிள்ளையார் :
ரேவதி நட்சத்திரம் அன்றும் செவ்வாய்கிழமைகளிலும்
இவருக்கு பசு நெய்யை கொண்டு தீபம் ஏற்றி மஞ்சள்
நிற ஆடைகளை 10 வயதிற்கு உட்பட்ட
சிறுமியரகளுக்கு அளித்துவர தனித்து வாழும்
முதியவர்கள்
பெண்களுக்கு தற்காப்பு சக்தி கிடைக்கும் மிக
உயர்ந்த கட்டிடம் கட்டுபவர்கள் எந்தவித
விபத்துக்கள் இன்றி நஷ்டம்
இன்றி அதை கட்டி முடிக்க முடியும்.

மகிழமர பிள்ளையார் :
அரிய விநாயகரான இவரை அனுஷம் நட்சத்திரம்
அன்று மாதுளம் பழ முத்துக்களால் அபிஷேகம்
செய்துவர ராணுவம் வெளிநாடுகளில் உள்ளோர்
நலமாக இருப்பார்கள் ராணுவத்தில் உள்ளவர்கள்
பாதுகாப்பான வாழ்வை பெறுவார்கள்.

சந்தனமர பிள்ளையார் :
மிக மிக அபூர்வ விநாயகரான இவருக்கு
சதுர்த்தி திதிகளில் பசும்பால் கொண்டு அபிஷேகம்
செய்து வழிபட அரி அபூர்வ சாதனைகளை நிகழ்த்தும்
வலிமை கிடைக்கும் புதியதாக ஆரம்பிக்கும்
வியாபாரம் அமோகமாக நடைபெறும்.

Wednesday, July 30, 2014

அடைபட்டுக் கிடப்பது என்பது ஒருவிதமான மனநோய்



சிங்கத்தையும், மயிலையும் கூண்டில் அடைக்கத் தெரிந்த மனிதர்களாகிய நாம்- புலம்பல் என்ற ஒரு பெரிய கூண்டை உருவாக்கி அதில் நாமே மாட்டிக் கொண்டிருக்கிறோம். சரி இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியேறுவது? கூண்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் முதலில் நாம் கூண்டிற்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறோம் என்ற விழிப்புணர்வு முக்கியம்.

அடைபட்டுக் கிடப்பது என்பது ஒருவிதமான மனநோய், அதன் அறிகுறியை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவரை பார்த்து இப்படி ஆகிவிட வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்ற நினைப்பு தான் அது. ஆனால் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து அதே போல் ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு ஆரோக்கியமான சிந்தனை தானே, அது எப்படி மனநோயாக இருக்க முடியும் என கேட்கலாம்.

எந்த ஒரு விஷயமும் சுயமாக ஆராய்ந்து, முடிவு எடுக்காமல், பிறரைப் பார்த்து எடுப்பது என்பது நிச்சயம் ஒரு சமயத்தில் குழப்பத்தை தந்து காலை வாரிவிட்டு விடும். இன்னொரு பக்கம், உங்களுக்கே உரித்தான, நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியத்தையும், நீங்கள் மட்டுமே அடையக் கூடிய அந்த அனுபவத்தையும் நிச்சயமாகத் தவற விடுவீர்கள்.

இந்த வெற்றி, தோல்வி கண்ணோட்டம் பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாகி, ஓய்வு பெறும் வயது வரை உங்களை பாடாய்ப்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எது எது சந்தோஷம் தருகின்றதோ, அவைகளுக்கு வெற்றி என்று பெயர் சூட்டியும், எது எது துக்கம் தருகின்றதோ, அவைகளுக்கு தோல்வி என்று பெயர் சூட்டியும் பழகி விட்டோம்.

இதற்கு ஆரம்ப வித்து பள்ளியில் இருந்தே முளைவிடத் தொடங்கியது. ‘கிளாஸ் பர்ஸ்ட், ஸ்கூல் பர்ஸ்ட், ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்” ”ஒரு என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆயிரணும்.கே. இந்த விதிமுறைகள் ஒன்றும் தப்பில்லைபாசிட்டிவ்சிந்தனைகள் தான். ஆனால், பொதுவான ஒரு விதிமுறையை நாம் கவனிப்பது இல்லை.

அனைவரும் நன்றாக படித்து சென்டம் வாங்கினால் யார் கிளாஸ் பர்ஸ்ட்? அப்படி ஒரு சம்பவம் எப்பொழுதும் நடப்பதில்லை. மாணவர்களைச் சுற்றிமெஷின் கன்னை வைத்து கொண்டு மிரட்டி படிக்க சொன்னால் கூட, உயிருக்கு பயந்து கூட அனைவரும்முதல் ரேங்க்எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் முடியாது.

வருமே சாதாரண நபர்களில்லை, ஒரே மாதிரி நபர்களுமில்லைஒரு மனிதனோட கட்டைவிரல் ரேகை மாதிரி, இன்னொரு மனிதனுக்கு இருக்காது. 700 கோடி கட்டை விரல் ரேகைகளும் வேறு தான்இயற்கையே இவ்வளவுசிம்பிள்ஆக சொல்லி விட்ட பிறகும் கூட நாம் தான் முதல் இடம், இரண்டாம் இடம் என்று அடித்துக் கொண்டிருக்கிறோம்.

சிந்தனையை ஒருமுகமாக்கி எடுத்துக் கொண்ட செயல்களில் முழுமையாக நம்மை ஒப்படைக்கும்போது நாம் முயற்சிக்கும் எந்தவொரு செயலுக்கும் எப்படியும் வெற்றி வந்தே தீரும்.

அதனால் முதல் இடமே லட்சியம் என்ற சிந்தனையை தோளில் தூக்கி சுமந்து திரியாமல் காரியமாற்றினால் அப்போது அதுவாகவே தேடிவரும். அந்தநேரத்தில் அந்த வெற்றி உங்களுக்கு சாதாரணமாகவே படும் என்பது தான் ஆச்சரியம். பக்குவப்பட்ட வெற்றி எப்போதுமே அகந்தை தராது என்பது இதில் உணரவேண்டிய உண்மை.

அன்பால் வெற்றி கொள்!- சாய்பாபா



எதை எதிர்பார்க்கிறாயோஅதை கடவுளிடமிருந்து பெற்றுத் தரும் சக்தி நம்பிக்கைக்கு உண்டு.
சந்தேகம் என்னும் அரக்கனை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். நம்பிக்கை முன்வாசலில் நுழைந்தால்சந்தேகம் பின்வாசலில் வெளியேறி விடும்.


சந்தோஷச் சிறகுகளை வெட்டி விடும் சந்தேகத்தை தூக்கி எறியுங்கள். நம்பிக்கையை நலிவடையச் செய்யும் சந்தேகம் நமக்கு வேண்டவே வேண்டாம்.
தேடும் இயல்புள்ளவர்கள் தடைகள் பலவற்றை எதிர் கொள்ளத்தான் வேண்டும்.ஒவ்வொன்றும் ஒரு சவால் போலத் தான். இருந்தாலும் முயற்சியைத் தொடர்ந்தால்வெற்றி கிடைத்து விடும்.
ஒருமுறை கோபம் வந்தால் மூன்று மாத ஆரோக்கியம் போய் விடும். கோபத்தை தைரியத்தாலும்பொறாமையை அன்பாலும் வெற்றி கொள்ள வேண்டும்.
- 
சாய்பாபா

Wednesday, July 23, 2014

திருபாய் அம்பானியின் வெற்றிக்கான நான்கு காரணம்

திருபாய் அம்பானியின் வெற்றிக்கான நான்கு காரணம்


1. பிரம்மாண்டமாக சிந்தியுங்கள்.
2. 
வேகமாக சிந்தியுங்கள்.
3. 
வேகமாக செயலாற்றுங்கள்.
4. 
வேகமாக இலக்கை அடையுங்கள். மற்றவர்கள் சிந்திக்க துவங்கும் முன் இலக்கை அடைந்து விடுங்கள்.

இந்த வரிகளை வாழ்க்கையின் தாரக மந்திரமாக ஏற்றுவளமான வல்லரசு பாரதத்தை உருவாக்க பாடுபடுவோம்.

urs 

Dr.Star Anand Ram

www.v4all.org 

Saturday, July 19, 2014

ஆழ்மனதின் அற்புத சக்திகள். சில எளிய தியானப் பயிற்சிகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள்.
சில எளிய தியானப் பயிற்சிகள்


தியானம் உள்நோக்கிச் செல்லும் ஒரு நெடும்பயணம். விண்வெளிப் பயணம் செல்பவன் காணும் பிரம்மாண்டங்களைக் காட்டிலும் உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணத்தில் அதிகமாக நாம் காண முடியும். நம்மில் நாம் அறியாத எத்தனையோ ரகசியங்கள் புதைந்து இருக்கின்றன. கோடிக்கணக்கில் செல்வத்தைப் புதைத்து வைத்து விட்டு அதை மறந்து போய் பிச்சைக்காரர்களாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் போலத் தான் நாமும் இருக்கிறோம். அந்தப் புதையலுக்கு நம்மை அழைத்துப் போகும் மார்க்கம் தான் தியானம்.
ஆரம்பத்தில் அந்த தியானம் கைகூடுவது அவ்வளவு சுலபமில்லை. மனம் வெளியே தான் எல்லா சுவாரசியமான விஷயங்களும் இருக்கின்றன என்ற தவறான அபிப்பிராயத்தில் இருக்கிறது. எனவே இந்த உள்நோக்கிய பயணத்தை அதை சுவாரசியமேயில்லாத செயலாக எண்ணி முரண்டு பிடிக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன் அபிப்பிராயங்களை அலட்சியம் செய்து உறுதியாக ஆரம்பித்து அதை விட உறுதியாகத் தொடர்ந்து முயன்றால் ஒழிய இதில் வெற்றி அடைய முடியாது. இதை ஆரம்பத்திலேயே மனதிற்குள் உறுதிப் படுத்திக் கொள்வது முக்கியம்.
முதலில் எளிமையான சில தியானப் பயிற்சிகளை அறிந்து கொள்வோம். மனதைத் தியானத்தில் லயிக்க வைப்பதில் ஓரளவு வெற்றி பெற்ற பின் மற்ற மேலான தியானப் ப்யிற்சிகளுக்குச் செல்லலாம்.
முதல் தியானம் மூச்சின் மீது கவனம் வைக்கும் தியானம். இது கிட்டத்தட்ட ஆல்ஃபா அலைவரிசைக்குச் செல்லச் செய்த பயிற்சியைப் போன்றது தான்.
1) அமைதியாக ஓரு அமைதியான இடத்தில் அமருங்கள். தரையில் சம்மணமிட்டு அமர முடிந்தவர்கள் அப்படி அமரலாம். முடியாதவர்கள் ஒரு நாற்காலியிலும் அமர்ந்து கொள்ளலாம். முடிந்த வரை நேராக நிமிர்ந்து இருங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும்.
2) மூச்சு உங்கள் மூக்கின் வழியாக உள்ளே சென்று வெளி வரும் பயணம் வரை அதன் மீதே உங்கள் கவனத்தை வைத்திருங்கள். மூச்சு முழுமையாகவும் சீராகவும் மாற ஆரம்பிக்கும்.
3) இனி மூச்சை எண்ண ஆரம்பியுங்கள்.
4) மூச்சை உள்ளிழுங்கள். ஒன்று. வெளியே விடுங்கள். இரண்டு. மீண்டும் உள்ளே இழுங்கள். மூன்று. வெளியே விடுங்கள். நான்கு........
5) உங்கள் கவனம் ஆரம்பங்களில் கண்டிப்பாக மூச்சை விட்டு மற்ற விஷயங்களுக்குச் செல்லலாம். அதை உணர்ந்த உடனேயே மீண்டும் மூச்சிற்கே கொண்டு வாருங்கள். எண்ணிக்கையைத் தொடருங்கள்.
6) உங்கள் மூச்சு தானாக ஆழமாகும், அமைதியாகும், வேகம் குறையும். எண்ணிக்கையைத் தொடருங்கள். நூறு ஆகும் வரை எண்ணி விட்டு நிறுத்துங்கள். பின் கண்களைத் திறந்து, நிதானமாக எழுந்து தியானத்தை முடியுங்கள்.
7) இந்த தியானத்தின் போது உடலில் பல்வேறு உணர்வுகளை நீங்கள் உணர்வீர்கள். மூச்சு மூக்கு தொண்டை பகுதிகளில் சென்று வரும் போதும், நுரையீரல், வயிற்றுப் பகுதிகளை நிறைத்து திரும்பும் போதும் இது வரை உணர்ந்திராத சில நுண்ணிய உணர்வுகளை நீங்கள் உணர ஆரம்பிக்கலாம். அதை உணரும் போதும் உங்கள் எண்ணிக்க்கையை நிறுத்தி விடாதீர்கள்.
ஆரம்ப காலங்களில் சிலருக்கு தசைப்பிடிப்பு போன்ற அசௌகரியங்கள் ஏற்படலாம். நீங்கள் உட்காரும் நிலையை சற்று மாற்றிக் கொள்வதில் தவறில்லை. ஆனால் மூச்சின் எண்ணிக்கை செய்வது தடைப்படாமல் இருக்கட்டும்.
இன்னொரு எளிய தியானத்தையும் அறிந்து கொள்ளலாம். இது தீப ஒளிச்சுடர் தியானம்.
இந்த தியானத்தை அரையிருட்டு அறையில் செய்வது நல்லது. உங்கள் கண்பார்வைக்கு நேரான ஓரிடத்தில் இரண்டு அல்லது மூன்று அடிகள் தூரத்தில் மெழுகு வர்த்தி அல்லது விளக்கு பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.
மேலே சொன்ன தியானத்தின் முதலிரண்டு படிகள் இந்தத் தியானத்திற்கும் பொருந்தும். முறையாக அமர்ந்து, கண்களை மூடி மூச்சை சீராக்கிக் கொள்ளுங்கள். மூன்றாவதாக மூச்சில் முழுக்கவனம் வைப்பதற்குப் பதிலாக, கண்களைத் திறந்து அந்த எரியும் தீபத்தின் ஒளிச்சுடரில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். எண்ணங்கள் அந்த தீப ஒளியை விட்டு ஓட ஆரம்பிக்கும் போதெல்லாம் மனதை மென்மையாக திரும்பவும் அந்த தீப ஒளிக்கே கொண்டு வந்து விடுங்கள். மனம் மெழுகுவர்த்தி பற்றியோ, விளக்கு பற்றியோ எண்ணக் கூட விடாதீர்கள். அந்த சுடர் மிகப்பிரகாசமாக எரிகின்றது, மிக மங்கலாக எரிகின்றது என்பது போன்ற எண்ணங்களைக் கூட வளர்த்தாதீர்கள். உடனே அதனுடன் சம்பந்தப்பட்ட மற்ற எண்ணங்கள் நம் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடக்கூடும். தீப ஒளியில் மனம் லயிக்கப் பாருங்கள். மனம் அதை விட்டுச் செல்லும் போதெல்லாம் சலிக்காமல் அந்த தீபச்சுடருக்கே திரும்பக் கொண்டு வாருங்கள். நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்று அறிந்த பின் உங்கள் மனம் சிறிது சிறிதாக அலைவதை நிறுத்தி வசப்படும். தியான நிலை கைகூடும். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் இந்த தியானத்தைச் செய்து முடியுங்கள்.
இந்த இரண்டு தியானங்களையும் முடித்த பின்னரும் தடாலென்று எழுவது, உடனே பரபரப்பான சூழ்நிலைக்கு மாறுவது கூடாது. சற்று நிதானமாக தியான நிலையில் இருந்து இயல்பான நிலைக்குத் திரும்புங்கள்.அப்போது தான் அந்த தியானத்தால் பெற்ற அமைதியின் ஒரு பகுதியை மனதின் ஆழத்தில் நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
தினமும் இரு முறை தியானம் செய்ய முடிந்தவர்கள் காலை ஒரு தியானமும், மாலை ஒரு தியானமும் செய்யலாம். அப்படி இரண்டு முறை செய்ய முடியாதவர்கள் இந்த இரண்டு தியானங்களில் ஒன்றையாவது தினமும் செய்யுங்கள்.

Yours Happily 
Jc.Dr.Star anandram
cell-9790044225 
www.v4all.org 

Tuesday, July 15, 2014

எந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்படையும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் !!!


எந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்படையும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

இன்று மருந்துகள் என்னும் பெயரில் நாம் எடுக்கும் விஷங்கள் எந்த எந்த உறுப்புகளை கெடுக்கிறது என்பதனை பட்டியல் இட்டு வெளியிட்டுள்ளனர் ஆராய்சியாளா்கள். இதனை பார்த்த பின்பும் நீங்கள் மருந்துகள் உண்டால் அதற்கு பெயர் நிச்சயம் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை என்றும் தமது பதிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.

ரசாயன நஞ்சுகளால் பாதிப்படையும் பகுதிகள் :

அம்மோனியம் சல்பேட்வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்

பீட்டா பிராபியோலாக்டோன்கல்லீரல், வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் கண்டறியப்படவில்லை

விலங்கு, பாக்டீரிய வைரஸ் டி.என். மரபணுக்களில் சிதைவை ஏற்படுத்தும்

லாட்டக்ஸ் ரப்பர்திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு

எம்.எஸ்.ஜிபிறவிக்கோளாறு மற்றும் ஒவ்வாமை

அலுமினியம்அலிமியர்ஸ் நோய், டிமென்ட்சியா, வலிப்பு, கோமா

ஃபார்மால்டிஹைட்மூளை மற்றும் குடல் புற்றுநோய்

பாலிசோர்பேட் 60 – நிரூபிக்கப்பட்ட புற்று நோய் காரணி

டிரைபுடைல் பாஸ்பேட்சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு

ஜெலடின்ஒவ்வாமை

ஜெந்தாமைசின் சல்பேட் மற்றும் பாலிமைக்சின் பிஒவ்வாமை

பாதரசம்வரலாற்றிலேயே கொடிய விஷமாகக் குறிப்பிடப்படுவது. மூளை, நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொப்பூழ் கொடி வழியாகக் கருவில் வளரும் சிசுவை அடையும்

நியோமைசின் சல்பேட்சத்துக்கள் உறிஞ்சப்படுவதில் தடையை ஏற்படுத்தும், வலிப்பு மற்றும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டை ஏற்படுத்தும்

பினால் (கார்பாலிக் அமிலம்)/

எதிலின்கிளைகால்/ பினோஜைதனால்செல்களை பாதிக்கும் விஷம்

குளுதரால்டிஹைட்பிறவிகுறைபாடுகளை ஏற்படுத்தும்

போரக்ஸ்எறும்புகளைக் கொல்லப் பயன்படும் விஷம்…!

இந்த விஷங்களை கொண்டு நோய்களை குணப்படுத்துவதாக கூறுவது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை