Showing posts with label coimbatore leader. Show all posts
Showing posts with label coimbatore leader. Show all posts

Thursday, February 12, 2015

இளம்பெண்களே! உங்க 2 மார்பகங்களும் ஒரே அளவில் இல்லாமல், வெவ்வெறு அளவாக இருக்கிறதா?

இளம்பெண்களே! உங்க 2 மார்பகங்களும் ஒரே அளவில் இல்லாமல், வெவ்வெறு அளவாக இருக்கிறதா?

இளம்பெண்களே! உங்களில் பலருக்கு இரண்டு மார்ப கங்களும் ஒரே அளவில் இல்லாமல், வெவ்வெறு அளவாக இருக்கிறதா?
இளம்பெண்களில் பலருக்கு அவர்களது இரண்டு மார்பகங்களும் ஒரே மாதிரியான
அளவாக இல்லாமல், வெவ்வெறு அளவாக அதாவது ஒரு பக்க‍ம் மார்பகம் சிறியதாக வும், இன்னொறு மார்பகம் பெரியதாகவும் இருக்கும்.
இது மருத்துவரீதியாக உண்மை தான் என்றால் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை . இது எதனால் ஏற்படுகிறது என் றால், இரண்டு மார்பகமும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில் லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலக்கட்டத் தில் இன்னொரு மார்பகம் வளர்ச் சியை நிறைவு செய்திருக்கும். அதனால்தான் இந்த சிறிய வித்தி யாசம். இதற்கு கவலைப்பட வே ண்டியதில்லை. அளவு, வடிவத் தில் பெரிய அளவில் வித்தியாச ம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

Sunday, July 20, 2014

எழுத்தாளர் சுஜாதாவிடம் “இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீகளே .. உங்களுக்கு இது கஷ்டமாக இல்லையா “ என்று கேட்டதற்கு,”இதை வேலையாகச் செய்கிறவனுக்குத்தான் இது கஷ்டம். நான் எனது விருப்பமாக இதைச் செய்கிறேன்” என்றார் .



சாதாரண விசயத்தைக்கூட  நீங்கள் கஷ்டப்பட்டுதான் செய்வீர்கள் என்றால் அதற்குப் பெயர் திறமைக் குறைவு என்பது தானே அன்றி கடின உழைப்பு  என்பது அல்லஒருவேலையை கடினம் என்று நீங்கள் நினைக்கின்றபோதே அதை நீங்கள் இஷ்டப்பட்டு செய்யவில்லை என்பதாகதானே  அர்த்தம் . தாங்கள் அனுபவித்துச் செய்கிற எந்த வேலையையும் கஷ்டப்பட்டு செய்ததாய் வெற்றி பெற்றவர்கள் சொல்வதில்லை 

எழுத்தாளர் சுஜாதாவிடம்  இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீகளே .. உங்களுக்கு இது கஷ்டமாக இல்லையா  என்று கேட்டதற்கு,”இதை வேலையாகச் செய்கிறவனுக்குத்தான் இது கஷ்டம். நான் எனது விருப்பமாக இதைச் செய்கிறேன்” என்றார் . விருப்பத்தோடு செய்கிறயாரும் “மிகக் கடினம் ” என்று அங்கலாய்த்துக் கொள்வதில்லை. 

 “கஷ்டப்பட்டு உங்களை யார் அந்த வேலையைப் பார்க்கச் சொன்னதுஇதே வேலையை இஷ்டப்பட்டு செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்களே. அவர்களிடம் அதைவிட்டு விடலாமே. 

ஒரு வேலையை விரும்பி செய்கிறபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை. வருந்தி செய்கிறபோது உங்கள் கஷ்டம் பல மடங்காகிறது. நீங்கள்அழுதாலும்,புரண்டாலும் ஒரு வேலையை நீங்கள்தான் செய்தாக வேண்டும் என்றால் ஏன் அதற்காக அழ வேண்டும். அதை ரசித்து செய்தால் நீங்கள் ஆசைப்படுகிற விஷயம் உங்களுக்கு மிகவும் அருகில் வரும். 

Thursday, July 17, 2014

சுயமாக முன்னேறுவது எப்படி? உங்கள் வீச்சின் தூரம்

உங்கள் வீச்சின் தூரம்
அந்தக் காரியாலயத்தில் 15 ஆபீசர்கள் இருந்தனர். கம்பெனியின் வெற்றிக்கு அவர்கள்பாடுபடுகிறவர்கள்தான். ஆனாலும் அவர்களின் திறமையானவர்கள் யார் என்பதைக்கண்டறிய இப்படி ஒருசோதனை வைக்கப்பட்டது.
அடுத்த அறையில் ஒரு ஸ்டான்ட். மொட்டைக் குச்சி ஒன்று அதில் செருகப்பட்டிருந்தது. அந்தக் குச்சியை நோக்கித் தூரத்திலிருந்து ஒரு வளையத்தை எறிய வேண்டும். வளையத்தின் மையத்தில் குச்சி இருக்கும்படி வீச வேண்டும்.
எவ்வளவு தூரத்திலிருந்து வேண்டுமானாலும் வீசலாம். எங்கிருந்து வீசினால் குச்சியைச்சுற்றிக் கரெக்டாக வளையம் விழும் என்பதைவீசுபவர் தனது இஷ்டத்துக்குநிர்ணயித்துக்கொள்ளலாம்.
சிலர் சாலஞ்சாகப் பத்தடி தூரத்தில் நின்று வீசிப் பார்த்தனர். தோற்றுப் போனார்கள். சிலர் ஆறடி தூரத்திலிருந்து வீசினர். சிலரோ வெகு குறைவான தூரமாக இரண்டடி மூன்றடி தூரத்திலிருந்து வீசினர். நமது முயற்சிகளும் இப்படித்தான். அடையவேண்டிய லட்சியத்தை அல்லது இலக்கை நிர்ணயித்துக் கொண்டவுடன் நமது திறமைக்கேற்ற அணுகுமுறையை கையாள்வது வெற்றியைத் தரும்.
ஒன்றை நினைவு கொள்ளுங்கள்
எல்லாமே தொலைந்தது என்று நிலை வரும்போது ஒன்றே ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். 'நாளைஎன்ற ஒன்று இருக்கிறது.

முதல் பொறுமை
எல்லாவற்றிலும்எல்லாரிடத்திலும் பொறுமை காட்ட வேண்டும். ஆனால் முதல் பொறுமை உங்களிடமே காட்டிக் கொள்ள வேண்டும்.
அதுவும் வேண்டும்
எல்லாரும் தலைவனாக இருந்துவிட முடியாது. சில பேர் தொழிலாளியாகவும் இருக்கத்தான் வேண்டும்.
மாற்றான் வீட்டு...
அயலார் வீட்டுக் குழந்தையானாலும் அதனிடமும் சிறிது கொஞ்சுங்கள்.
வேண்டாம் வெறி

எல்லாவற்றையும் இன்றைக்கே பண்ணி முடிக்க வேண்டும் என்ற வெறி வேண்டாம். சிலதை நாளைக்கு என்று ஒதுக்கிக் கொள்ளலாம்.
டாட்டா பை பை!
குடும்பத்தோடு வெளியூருக்குப் போய் வாருங்கள் - ஓரிரு நாள் என்றாலும் பரவாயில்லை.
அது அது அந்த அந்த....

முதலில் உன்னை organise பண்ணிக்கொள். உங்கள் ஆபீசில் அந்தந்த அயிட்டத்தை அந்தந்த இடத்திலே வைக்கிறதை வழக்கமாக்கிக்கொள்.
எங்கிருந்து விலகல்

Avoid selfish People. 
சுயநலக்காரர்களையும்தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்கிறவர்களிடமிருந்து விலகிக்கொள்.
ஓடிப் பிடிக்க
குழந்தைகளுடன் கொஞ்ச நேரமாவது ஓடிப் பிடித்து விளையாடுங்கள்.

சரியான லூஸ்!
லூஸான காட்டன் கிளாத்ஸ் அணியுங்கள்.

சின்னச் சின்ன
ஆபீஸ் போகிறதுக்கு முன் ஏதாவது சிறிய உடற்பயிற்சி பண்ணி விட்டுச் செல்லுங்கள்.
பங்கீடு

90% 
உன்னுடைய வேலையை உன் ஊழியர்கள் செய்யலாம். 10% உங்கள் மேற்பார்வை இருந்தால் போதும்.

90% 
வொர்க் ரொடீன். மிச்சம் 10% தான் உங்கள் ஒரிஜினல் work தேவைப்படும்.

எழுத்து வடிவம்
பரஸ்பர பிஸினஸ் பேச்சு வார்த்தைகள் எழுத்தில் வடிக்கப் பெறவேண்டும்.

எது எதிர்காலம்?
எதிர்காலம் என்கிறது செய்கிற வேலையில் இல்லை. செய்கிற ஆள்கிட்டேதான் இருக்கிறது.

உணர்ச்சி போதுமா?
தொழில் துவக்குவதற்கு உணர்ச்சி இருந்தால் போதும். நடத்துவதற்கு கெட்டிக்காரத்தனம் தேவை.

ஒப்படைப்பது யாரிடம்?
ஒரு தொழிலாளி சின்னக் காரியத்துக்குப் பெரிய கவனத்தைச் செலுத்தினால்அவனிடம் பெரிய பொறுப்புக்களை ஒப்படைக்கலாம்.

Friday, July 11, 2014

ஞாபகசக்தி,அதிகரிக்க விஸ்வநாதன் ஆனந்த் தரும் டிப்ஸ்:

ஞாபகசக்தி,அதிகரிக்க விஸ்வநாதன் ஆனந்த் தரும் டிப்ஸ்:
மனதில் எந்த விஷயம் தோன்றுகிறதோ, அதை உடனே ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பும், பரிட்சை எழுதப் போவதற்கு முன்பும் எழுதி வைத்த விஷயங்களை திரும்பத் திரும்பப் படித்து பாருங்கள்.
ஒரு பேப்பரைப் படிக்கிறோம். அதில் உள்ள செய்திகள் நம் மனதில் பதிந்துவிடுகிறது. திரும்ப அதை நினைத்துப் பார்க்கும்போது பேப்பரின் இடப்பக்கம் வலப்பக்கம், பக்க எண் உட்பட நம்மால் சொல்ல முடிகிறது. அதுபோல்தான் ஆர்வத்துடன் படித்து, உடனே குறித்து வைத்துக் கொள்வதுகூட ஆழமாய் மனதில் பதிந்துவிடும்.
கம்ப்யூட்டர் போன் மெமரியில் பதிந்து, பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் அலர்ட் சவுண்ட் வைத்துக் கொள்ளலாம்.
செஸ் விளையாடுவது குழந்தைகளுக்குப் பொழுது போக்கு மட்டுமல்ல. அவர்களது மூளையில் யோசிக்கும் திறனையும், கிரகிக்கும் திறனையும் நிச்சயம் அதிகரிக்கும்.

urs - www.v4all.org 

UNION BUDGET 2014-2015 HIGHLIGHTS RELATED WITH TAXES

UNION BUDGET 2014-2015 
HIGHLIGHTS  RELATED  WITH TAXES
*No changes in tax rates for individuals.
*Tax exemption limit for small and marginal changed from Rs 2 lakh to Rs 2.5 lakh and for senior tax payers Changed to 3Lakhs.
*Investment limit under 80C raised from Rs 1 lakh to Rs 1.5 lakh.
*Govt to provide investment allowance at 15% for 3 years to manufacturing company which invest more than Rs 25 crore in plant and machinery.
*Housing loan rebate to raised from 1.5 lakh to 2 lakh: Jaitley
*60 more 'Ayakar Sewa Kendras' to be set up.
*Income tax department is expected to function not only as an enforcement dept but also as a facilitator says Arun Jaitley
*Arun Jaitley raises PPF ceiling to Rs 1.5 lakh
*Goods and Services tax , VAT should come to end - FM
*Personal computers, electronic goods to be cheaper. FM announces proposals to make CRT TVs cheaper.*Basic custom duty on LED panel below 19 inch made NIL
*Soaps and oil products to become cheaper.
*Excise duty on footwear reduced from 12% to 6%.
*Jaitley announces reduction in excise duty(VAT) for specified food package industry from 10% to 6%.
*Excise duty raised on tobacco products and aerated water products with added sugar.
*To broaden tax base, negative list for service tax has been reviewed: FM
*Cigarettes, pan masalas to be costlier: FM
* Annual PPF ceiling to be raised to Rs 1.5 lakh, from Rs 1 lakh.
* No changes in taxes retrospectively and also there is no changes in tax rates.
* Goods and Services tax , VAT should come to end

OTHERS
-Uniform KYC across the finance sector
- Govt to set up 4 more AIIMS
- Rs 3600 crore set aside for National Rural Drinking Water.
- 12 more medical colleges with dental facilities as well
- Govt proposes to set up 5 new IIMs and 5 new IITs.
- There should be at least 2 bank accounts in each household says FM.. Govt to provide all households with banking facilities to empower the weaker sections.
- To allocate Rs 150 crore to boost women's safety
- Rs 1,000 crore for 'one rank, one pension' scheme.
- Rs 2.29 lakh crore allocated for defence sector.
- Rs 500 crore for digital India programme to ensure broadband connectivity at village level, transparency in VAIBHAV governance.
- Sports university to be set up in Manipur, Rs 100 crore to be provided for this.
- Rs 100 crore for training of sportspersons for upcoming Asian Games.
- FM propose Rs 200 crore for power reforms, and Rs 500 crore for water reforms in Delhi
- Rs 100 crore set aside for Metro scheme in Ahmedabad and Lucknow.
- The govt is notifying Rs 1000 pension per subscriber of EP scheme. Rs 50 crores being set aside for this
- Rs 200 crore set aside to support Gujarat govt in the Sardar Patel statue installtion
- FM propose Rs 7060 crores for the development of 100 smart cities
- Jaitley announces schemes for disabled persons in the country.
- Jaitley announces 'Beti padhao, beti badhao yojana', sets aside Rs 100 crore for this.
- Govt to provide finance to 5 lakh landless farmers through NABARD
- Govt to set up Industrial Smart Cities in 7 cities.
- Rs 200 crore allocated for 6 more textile clusters in Rae Bareily, Lucknow, Surat and Bhagalpur.
- 16 new ports to be set up. Rs 11,000 crore to be allocated for this..
- FM : Bank to be encouraged to give long term funds and loans to infrastructure sector.
- EPFO will launch a unified account scheme for portability of Provident Fund accounts
- In order to give major boost to tourism, E-visas would be introduced at 9 airports. This will facilitate visas on arrival
- Indian citizen will hold shares in public sector banks directly rather than indirectly at present
- FDI is an additional support. India needs a boost in job creation.

தோற்கலாம் வாங்க 3 - முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி திருவினையாக்கும்!

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்று சொல்வார்கள். நம்மால் இது நிச்சயம் முடியாது என்று எண்ணும் கடினமான காரியங்களைக்கூட திரும்பத் திரும்ப விடாமுயற்சியுடன் செய்தால் கட்டாயம் வெற்றி அடைய முடியும். அது நமக்கு மேலும் நம்பிக்கையை ஊட்டும். 

ரால்ப் எமர்சன், "எந்தச் செயலைச் செய்வதற்கு விடாமுயற்சி எடுக்கிறோமோ அதனை சாதிக்க முடிகிறது; சாதிக்கிறபோது அந்தச் செயல் ஒன்றும் எளிமையாகி விடவில்லை; நமது முயற்சி அதனை செய்து முடிக்க எளிதாக்குகிறது" என்கிறார். 

எந்தக் காரியமுமே ஆரம்பிக்கும்போது மலைப்பாகத்தான் தோன்றும். குழந்தைகள்கூட நடக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் விழுந்து எழுந்துதான் நடை பயிலுகின்றன்ன. கீழே விழுகிறோமே என்று அவர்கள் முயற்சிக்காமல் விடுவதில்லை. விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால் பல சாதனைகள் நிகழ்ந்திருக்க மாட்டா.

தாமஸ் ஆல்வா எடிசன் சொல்கிறார், "ஒரு தோல்வி ஏற்பட்டால் மேலே முயற்சி செய்யாமல் இருப்பதுதான் நமது பலவீனமே. இன்னுமொருமுறை முயற்சி செய்து பார்ப்போமே எனும் எண்ணம்தான் வெற்றிக்கு நிச்சயமானவை" என்று. 

புத்தகங்களைத் தொடர்ந்து படித்து வந்தால் பல அறிஞர்களின் பொக்கிஷங்களை நம்மால் அறிய முடியும். நாம் எல்லாம் படித்து முடித்துவிட்டோம் என்று எண்ணுவது சுலபம். ஆனால் கற்றது கைம்மண்ணளவுதான் என்று புத்தகச் சுரங்கங்களைத் தோண்டத் தோண்டப் புரியும். ஒவ்வொரு சாதனையாளரும் ஆரம்பத்தில் எவ்வளவு சோதனைகளை சந்தித்திருக்கிறார்கள்! அரசியல், ஆராய்ச்சி, இலக்கியம், இசை என்று எந்தத் துறையிலும் சரித்திரப் புகழ் பெறுவதற்கு முன்னால் எத்தனை முறை தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள் என்பதும் தெரியும். 

1936ல் தியோடர் சேயஸ் கீசல் எனும் நாவலாசிரியர் ஐரோப்பாவிற்குக் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது கப்பல் எஞ்சின் சத்தத்தின் தாளகதி அவரை ஒரு பாடலை எழுதத் தூண்டியது. அதை அடிப்படையாக வைத்து ஒரு நாவலை எழுதினார். அந்த நாவல் பதிப்பாளர்களால் 27 முறை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பப்பட்டது. பலர் இரண்டு மூன்று முறை தோல்வி கிடைத்தபின் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று விட்டு விடுவார்கள். ஆனால் 27 முறை தோல்விக்குப் பிறகு அவரது நண்பர் ஒருவர் அவருக்காக அந்த நாவலைப் புத்தகமாக வெளியிட்டார்; வெற்றியும் அடைந்தார். எழுதிய டாக்டர் சேயஸ் 1991ம் ஆண்டு இறந்தார். அதற்குள் அவரது புத்தகம் 200 மில்லியன் பிரதிகள் 15 மொழிகளில் விற்றிருந்தன. அவரது இறப்பிற்குப் பிறகு மேலும் 22 மில்லியன் பிரதிகள் விற்றன.

'மல்பெரி தெருவில் அதைப் பார்த்தேன் என்று நினைக்கும்போது' என்ற தலைப்பிலான அந்தப் புத்தகத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துக் குழந்தைகளின் மனதிலும் குதூகலத்தை ஏற்படுத்தியது. அந்த எழுத்தாளரின் விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசு இது. 

ஹாரிபாட்டரை உருவாக்கிய ஜே.கே.ரௌலிங்கைப் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மணமுறிவானதால் நிலைகுலைந்திருந்த பெண்மணி. கீசலைப்போலவே இவருக்கும் குழந்தைகளுக்கான புத்தகம் எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. போதுமான பண வசதியில்லாததால் கிடைக்கும் நன்கொடைகள் மூலமே வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனாலும் தான் எழுதவேண்டும் என்ற முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக தனது ஹாரிபாட்டர் கதையைப் பல வருடங்கள் தொடர்ந்து எழுதினார். அவருக்குத் தான் எழுதும் கதை மற்றவர்களுக்குப் பிடிக்குமா என்று சந்தேகம்! யாராவது பிரசுரிக்க மாட்டார்களா? என்ற ஆர்வம் மட்டும் இருந்தது. அவர் சொல்கிறார், "நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு என்ன படிக்கப் பிடிக்குமோ அதைத்தான் நான் எழுதினேன்' என்று.

பல பதிப்பாளர்கள் அவரது புத்தகத்தைப் பிரசுரிக்க மறுத்துவிட்டார்கள் ஒருவரைத் தவிர. ஹாரிபாட்டர் புத்தகங்கள் இன்று எவ்வளவு பிரபலமானவை என்று நாம் அனைவரும் அறிவோம்.

2004ம் ஆண்டுக்குள் நூற்றுக்கணக்கான கோடி டாலர்கள் அவருக்குக் கிடைத்தது. லட்சக்கணக்கானோர் அவரது புத்தகங்களை வரிசையில் காத்து நின்று வாங்கினார்கள். அவரது விடாத முயற்சி அவருக்கு அலாவுதீனின் அற்புத விளக்காக இருந்தது. அவரது விடாமுயற்சிக்கு முன்னால் ஹாரிபாட்டரின் மந்திர வித்தைகள் கூட ஒன்றுமே இல்லை எனலாம்!

வெற்றிக்குப் பிறகு அவர் சொன்னார், "எனது புத்தகம் பிரசுரமானதே ஓர் அற்புதமான நிகழ்வுதான். ஆனால் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு வாசகர்கள் காட்டும் உற்சாகம்தான்". டி,வியின் முன்னால் கட்டுண்டு கிடந்த குழந்தைகளை தனது புத்தகங்களின் மூலம் மீட்டெடுத்ததே அவர்தான். பல லட்சக்கணக்கானோருக்குப் படிப்பதால் ஏற்படும் சந்தோஷத்தைத் தன் புத்தகங்கள் மூலம் காட்டினார்.

தோல்விகள் கதவை மூடும்போது தொடர்ந்து விடாமுயற்சியுடன் கதவுகளைத் தட்டித் திறப்பதுதான் வெற்றிக்கான சாவி. விவேகானந்தர் சொல்கிறார், "வெற்றி பெறுவதற்கு தேவையானது முடிவில்லா விடாமுயற்சியும், அதீதமான நம்பிக்கையும்தான்! விடாமுயற்சி கொண்டவன், 'நான் சமுத்திரத்தையும் உட்கொள்வேன்', 'என் சங்கல்ப சக்தியால் மலைகளும் நொறுங்கி விழுந்துவிடும்' என்று சொல்வான். அது போன்ற சக்தியை கொண்டிரு, அது போன்ற மன உறுதியைக் கொண்டிரு; நன்றாக உழைத்திரு, உனது குறிக்கோளை நிச்சயம் நீ அடைவாய்".

கடலை நோக்கி மலை சொல்லியது. "நான் உன்னைவிட பலசாலி. என்னை யாரும் அழிக்க முடியாது" என்று. ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளில் கடலின் அலைகளால் மலை மறைந்தது; கடல் அலைகள் தொடர்ந்தன. 

ஓரிரு முறை தோல்வியை சந்தித்துவிட்டால் பின் துவண்டுவிடாதே! தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக்கொண்டு அதிலிருந்து மீண்டு முன்னேறு...! ஆனால் ஒருபோதும் முயற்சி செய்ய மறக்காதே...!" இதனை மறவாமல் இருந்தாலே வெற்றி நம் காலடியில் சரணடையும்.

நம் நாட்டின் நோபல் பரிசாளர் தாகூரின் ஆரம்ப காலத்துக் கவிதைகளை வங்கமொழி அறிஞர்கள் பிழைதிருத்தத்திற்கு எடுத்துக் கொடுப்பார்கள். அவ்வளவு அவமானப்பட்டவர்தான் தாகூர். அவரது மேதாவிலாசத்தை விடவும் அவரது விடாமுயற்சியே அவருக்கு நோபல் பரிசைக் கொண்டுவந்து கொடுத்தது.

பெர்னாட்ஷாவின் வாழ்க்கை கொடுமையான வறுமை நிறைந்த வாழ்க்கை. அவரது அறிவோடு தினம் ஐந்து பக்கம் எழுதும் விடாமுயற்சியை அவரை உலக அறிஞராக்கியது. விடாமுயற்சிக்கு உதாரணங்களாக, மேடம் கியூரி – மார்க்கபோலோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம். காந்திஜியின் விடாப்பிடியான அஹிம்சை கொள்கைதானே நமக்கு சுதந்திரத்தையே வாங்கித் தந்தது! உலகில் சாதனையாளர்கள் எல்லாரிடத்திலும் அவரவர் துறைசார் அறிவோடு விடாமுயற்சியும் இருந்து வருகிறது. அதனாலே அவர்கள் வெற்றி பெற்றார்கள்; சாதனை படைத்தார்கள்; தொடர்ந்தும் வருகிறார்கள்.

வெற்றிக்கான பாதையாக எடிசன் கூறுவது : "தேவையானது ஒரு சதவிகிதம் ஊக்கம் - 99 சதவிகிதம் விடாமுயற்சி"

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கூலிடிஸ் சொல்கிறார், "இந்த உலகில் முயற்சியை விட வேறொன்றும் சிறந்த இடத்தைப் பெற்றுவிட முடியாது. திறமை, மேதைத்தனம், கல்வி இவ்வளவு இருந்தாலும் அதனுடன் விடாமுயற்சியும், எதை அடையவேண்டும் என்ற தெளிவான முடிவும் மட்டுமே வெற்றிக்கு வழிகாட்டும் சர்வ வல்லமை படைத்தது" என்று. 

நம்ம ஊர் வள்ளுவரும் இதைத்தானே சொல்கிறார், "முயற்சி திருவினை ஆக்கும்; முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்" என்று!

நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். சிகரங்கள் காத்திருக்கின்றன - சிகரங்களை எட்ட நீங்கள் தயாராகுங்கள்.

Monday, July 7, 2014

மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை - Excess sizeஐ Excersie மூலம் குறைத்தார் - Dr.Star Anand -www.v4all.org

மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை - Excess size Excersie மூலம் குறைத்தார்

எல்லோரையும் போல் தானும் அழகாக வேண்டும் என்று நினைத்த ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று,
எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார். உடனே
"
தொப்பையை குறை" என்று மருத்துவர் ஆலோசனை செய்தார்.
அன்று முதல் தன் Excess size Excersie மூலம் குறைத்தார், கரைத்தார். உடம்பு அழகானது, முகம் மட்டும் அழகாக வில்லை.
மீண்டும் வருத்தது டன் அந்த ஊரில் உள்ள ஞானியிடம் சென்று, மருத்துவரிடம் சொன்னது போன்றே
"எல்லோரும் அழகா இருக்காங்க, நா மட்டும் அழகில்லை, மற்றவர்களை விட அழகாக வேண்டும், ஆலோசனை சொல்லுங்கள் என்றார்". உடனே அந்த ஞானி
"குப்பையை குறை" என்றார்.
ஐயா "குப்பையை குறைப்பதா" என்று சந்தேகத்துடன் கேட்டார்.
ஆம் அடுத்தவன் அழகாக இருக்கிறான் என்று உன் உள்ளம் நினைக்கிறதே அந்த குப்பையை அகற்று அழகாகி விடுவாய் என்றார்.
ஆம், மனிதர்களாகிய நமக்கு உள்ள ஒரே பிரச்சினை நாம் ஏழை என்பதல்ல, அடுத்தவன் பணக்கரனாக இருப்பது தான். அதுவே நாளடைவில் மன நோயாக மாறிவிடும்.
உடல் நோயிக்குத்தான் Medication மன நோய் போக்க Meditation.
காந்தி அழகான ஆடை உடுத்தி இருக்கும் சிறு வயசு புகைப்படத்தை விட, அவர் கோவணத்தோடும், பொக்கைவாயுடனும் இருக்கும் வயதான புகைப்படம் அழகாக இருக்கும். அந்த அழகு மனக்குப்பைகளை Meditation மூலம்அகற்றியதால் வந்தது. பணத்தாசை இல்லாத அவரின் புகைப்படம்,இன்று இந்திய ரூபாய் நோட்டை அலங்கரிகிறது.
அகவே
அடுத்தவரை பார்த்து ஏங்கும் எண்ணத்தை தவிர்த்து
அடுத்தவரை தாங்கும் எண்ணத்தை உருவாக்குவோம்
அதுவும் முடியவில்லையா
அடுத்தவரை தாக்காமல் இருக்கவாவது கற்று கொள்வோம்.
பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கச்
சிறந்த வழி மெளனம்;
பல பிரச்சனைகளைத் தவிர்க்க
மிகச் சிறந்த ஆயுதம் புன்னகை.