Tuesday, July 21, 2015

உயர்வு

உயர்வு

உயர்வு

விவேகானந்தரின் குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் காலத்தில் வாழ்ந்தவர் அறிஞர் ஈசுவர வித்யாசாகர். அவர் எப்பொழுதும் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவார் மற்றும் ஏழைகளுக்கு உதவிடுவார். ஒரு நாள் வகுப்பறையில் கரும்பலகையில் ஒரு நேர்கோடு ஒன்று போட்டு விட்டு இதை அழிக்காமல் சிறியதாக்கி விட முடியுமா என்று கேட்டார். அனைத்து மாணவர்களும் யோசித்தார்கள். “அழிக்காமல் எப்படி சிறியதாக்குவது?” எப்படி என்று.
ஒரு பையன் எழுந்து வந்தான். கரும்பலகையில் உள்ள அவர் போட்ட கோட்டிற்கு பக்கத்தில் அதை விட பெரிய கோடு ஒன்று வரைந்தான். இப்பொழுது வித்தியாசாகர் போட்ட கோடு சிறயதாயிற்று. அப்பொழுது அறிஞர் அந்த மாணவனை பாராட்டிவிட்டு சொன்னார்.
“மாணவர்களே இந்தக் கோட்டின் மூலம் வாழ்க்கையைய் புரிந்து கொள்ளுங்கள்”.
“ஒரு கோட்டினை அழித்து மறு கோடு உயரவில்லை! அது போல ஒருவனை அழித்து நாம் உயரக்கூடாது. 
நம் உயர்வே, பிறரை பணியவைக்கும்”.

No comments:

Post a Comment