Friday, January 30, 2015

Alan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள்

Alan Sugar
Alan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள்
1.உங்களுக்கு அனுபவம் இருக்கும் விசயத்திலேயே தொழிலைத் தொடங்குங்கள். இந்த அனுபவம் ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்ததின் மூலம் பெற்றதாக இருக்கலாம் அல்லது உங்களது பொழுதுபோக்கின் மூலம் கிடைத்த அனுபவமாக இருக்கலாம். (Only set up in a business you know something about. You can’t just wake up one day and think you’ve come up with the best thing since sliced bread if you’ve got no experience in that area. It may be an industry you have been working in for years or a hobby you have.)
2.உங்கள் தொழிலுக்கான சந்தையை முழுவதும் ஆராய்ந்து பாருங்கள். சந்தையில் உங்கள் தொழிலை போன்ற மற்ற தொழில்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்துங்கள். உங்கள் தொழிலை ஒத்த தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே இருக்குமென்றால், வாடிக்கையாளர்கள் உங்களிடம் ஏன் வாங்க வேண்டும்? என்று ஆராயுங்கள். (Research your market thoroughly. Make sure that there isn’t something similar on the market already. Why would anyone want to buy something from you if it’s already out there?)
3.உங்கள் தொழில் சார்ந்த வல்லுனர்களிடம் அறிவுரை கேளுங்கள். நண்பர்களிடமோ, உறவினர்களிடமோ கேட்காதீர்கள்- அவர்கள் உங்களுக்கு பிடிக்கும் மாதிரியான அறிவுரை மட்டுமே கூறுவார்கள்.(Listen to experts in the relevant industry. Don’t ask friends and relatives for their opinions – they will only tell you what you want to hear just to be nice to you.)
4.முறையான தொழில் திட்டத்தை உருவாக்குங்கள். இந்த தொழில் திட்டம் நீங்கள் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை காட்டும் மற்றும் சந்தையை புரிந்துகொள்ளவதற்கு உதவும். மற்றவர்கள் செயலை தீவிரமாக செய்ய உதவும். (Draw up a proper business plan. You will need this to show you know where you are heading and you understand the market. It will help to make others take you more seriously.)
5.ஒரே நேரத்தில் ஒவ்வொரு அடியாக வையுங்கள். நீங்கள் நடக்க முடியும் முன் ஓட முயற்சிக்க வேண்டாம். சிறியதாக ஆரம்பியுங்கள். ஒன்று கிடைத்தபின் அடுத்த அடியை வைத்து வளருங்கள். (Take things one step at a time. Don’t try to run before you can walk. Start small. Get it right and then grow when you’re ready for the next step.)
6.பின்னடைவுகளுக்கு தயாராக இருங்கள். உங்கள் திட்டத்தில் நம்பிக்கை, நோக்கத்தில் உறுதி, தீவிர உணர்ச்சி கொண்டிருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். (Be prepared for lots of setbacks. Not everyone will be as enthusiastic as you are, but if you really believe in your idea and you have the determination and passion you will succeed.)
7.உங்களுக்கென்று தனித்துவமான பாணியை கண்டுபிடியுங்கள். அது புதியதாக இருக்கவேண்டும் என்பதில்லை. பல விஷயங்கள் முன்பே செய்தவைதான். செய்யும் விதத்தை சிறந்ததாக செய்யுங்கள். (Find a niche. It doesn’t always have to be something brand new. There’s not many things that haven’t been done before – just come up with something better or a better way of doing it.)
8.வங்கிகள் உங்களுக்கு பணம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். தொழிலில் உங்கள் பணத்தை போடுங்கள். தொழிலில் துணிகர முயற்சி எடுக்க தயாராக இருப்பதை அவர்களுக்கு நிரூபியுங்கள். நீங்கள் தொழிலில் எவ்வளவு தீவிர ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தினால், அவர்களுக்கு தயக்கம் குறைந்து பணத்தை கொடுப்பார்கள். (Don’t expect the banks to throw cash at you. You have to put your money where your mouth is and prove to them that you are prepared to take a major risk. If you show them how seriously committed you are, then they will be less hesitant to cough up.)
9.பல்வேறு ஆதாரங்களிலிருந்து அறிவுரைகளை இருங்கள். (Get advice from lots of different sources. From small business advisers at your bank to organisations such as Business Link.)
10.யதார்த்தமாக இருங்கள். உங்களுக்கு தோன்றிய ஐடியா சிறந்தது என்று நினைக்கலாம். ஆனால் அந்த ஐடியா யாருக்காவது தேவைப்படுமா, செலவு குறைந்ததா, நடைமுறையில் செயபடுத்த முடியுமா? என்பதை யோசியுங்கள். (Be realistic. You may think you’ve come up with a great idea, But will anyone really want it? Do they really need it? Is it cost-effective? Is it practical to produce?)

Sunday, January 25, 2015

பொய்யா, கற்பனைத் திறனா?



பொய்யா, கற்பனைத் திறனா?


ஆசிரியை: சாம் ஏன் ஸ்கூலுக்கு லேட்டு?
சாம் (8 வயது): மிஸ்… நான் ஸ்கூல் பஸ்ஸை விட்டு இறங்கினேனா…அப்ப ஒரு பெரிய, அழகான சிவப்பு கலர் பலூன் மரக் கிளையில மாட்டித் தொங்கிக்கிட்டு இருந்துச்சு...
ஆசிரியை: சரி அதுக்கென்ன?
சாம்: அந்தச் சிவப்பு கலர் பலூனோட கயிற்றை எட்டிப் பிடிச்சு இழுத்தவுடனே என் கிட்ட வந்திருச்சு.
ஆசிரியை (கோபமாக): ஏன் லேட்டா வந்தேன்னு கேட்டேன்?
சாம்: கேளுங்க மிஸ்…பலூனோட கயிற்றை இறுக்கமாப் பிடிச்சுக்கிட்டு நடந்து வரும்போது, திடீருனு காத்தடிச்சதும் பலூன் நூலை விட்டுட்டேன். ஆனால் பலூன் எங்கேயும் பறந்து போகவே இல்ல. என் பக்கத்திலேயே நின்னுச்சு… எட்டிப் பிடிக்கலாம்னு பார்த்தா கைக்கு வரவே இல்லை. நான் எட்ட எட்ட பலூன் கொஞ்சம் கொஞ்சமா மேல மேல போச்சு. “என்கிட்ட வரமாட்டியா? போ” அப்படீன்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சேன். நான் நடக்க நடக்க என் பின்னாலேயே பலூனும் காற்றில் மிதந்து வந்துச்சு.
டக்குனு வேற தெருவுல நுழைஞ்சு மறைவா நின்னுக்கிட்டேன். பலூன் இங்கேயும் அங்கேயும் அலைஞ்சு, என்னைத் தேட ஆரம்பிச்சிடுச்சு. என்னைக் காணோம்னு பலூன் தேடிக்கிட்டிருக்கும்போது பாய்ந்து பிடிச்சிட்டேன். அப்ப ப்ரியா புளூ கலர் பலூனோட எதிரே வந்தாளா….உடனே என்னோட பலூன் திரும்பவும் என் கையைவிட்டுப் பறந்து ப்ரியாவோட பலூன் கூட விளையாட ஆரம்பிச்சிடுச்சு. சரி சொல்லிட்டு கிளாஸுக்கு வந்தேன்
ஆசிரியர்: ஒழுங்கா ஸ்கூலுக்கு வந்து படிக்கச் சொன்னா, தெரு தெருவா சுற்றி வந்து விளையாடிட்டு, பொய்யா சொல்லுற? இப்படித்தான் போன வாரம் வேற கதை சொன்ன, உன் வாயைத் திறந்தாலே பொய்தான் வரும். ‘இனிமேல் இப்படி பொய் சொல்ல மாட்டேன்’ என 1000 முறை இம்போசிஷன் எழுதிட்டு வகுப்புக்குள்ள வா.
சாம் சிவப்பு பலூன் கதை சொல்லக் காரணம் என்ன? அவன் பொய் சொல்லும் பழக்கம் உடையவன் என்பதா? அல்லது கற்பனைத் திறன் மிக்கவன் என்பதா?
றெக்கைக் கட்டிப் பறக்கும் மனசு
குழந்தைகளுக்கு கற்பனை வளம் அதிகம். அவர்கள் காணும் ஒவ்வொன்றும் புதிது என்பதால் அதனை மேலும் விரித்துப் பார்க்க மனம் தூண்டும். அதிலும் சாம் போன்றவர்கள் காட்சி ரீதியான அறிவுத்திறன் படைத்தவர்கள். மரத்தில் தொங்கும் ஒரு சிவப்பு பலூனை பார்த்தவுடன் சாம் மனம் சிலிர்த்துக் கொண்டு உற்சாகமாகச் சிறகை விரித்துக் கற்பனை வானில் பறக்கத் தொடங்கிவிட்டது.
அதன் விளைவாக ஒரு அற்புதமான குழந்தை கதைச்சித்திரம் உயிர் பெற்றது. இப்படிப்பட்ட அறிவு உடையவர்களுக்குள் காட்சி ரீதியாகப் பல விஷயங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். அவர்கள் எப்போதும் முப்பரிமாணங்களில் கற்பனை செய்வார்கள். பல வண்ணங்கள், பல விதமான வடிவங்களால் ஈர்க்கப்படுவார்கள். வெட்ட வெளியில் புதிய உலகை படைப்பார்கள்.
புதியதோர் உலகு செய்வோர்
காட்சி ரீதியான அறிவாற்றலை அரும்பிலிருந்தே ஊக்குவித்தால் அற்புதமான மல்டிமீடியா கலைஞர், கிராபிக்ஸ் கலைஞர், திரைப்படக் கலைஞர், நுண் கலை நிபுணர், கேலிச்சித்திர ஓவியர், கட்டிடக் கலை நிபுணர், புகைப்படக் கலைஞர், சிற்பி, ஆடை வடிவமைப்பாளர் போன்ற படைப்பாளிகள் எதிர்காலத்தில் கிடைப்பார்கள்.
ஆனால் ஒற்றைப் பரிமாணப் பார்வை கொண்ட கல்வி அமைப்பு காட்சிரீதியான அறிவுத்திறனை முளையிலேயே கிள்ளி எறிகிறது. வழக்கமான கல்வி முறையின் கணிப்பில் இவர்கள் அறிவிலிகளாக முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறார்கள். வழக்கமான அறிவாற்றல்களில் மிகவும் பின் தங்கியவர்கள்தான் உண்மையிலேயே அபாரத் திறன் படைத்தவர்கள் என்கிறார் கார்டனர். காட்சி ரீதியான அறிவுத்திறனில் நம்மை ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் இன்னும் பல உள்ளன.

நீங்கள் உங்கள் மீதே நம்பிக்கையிழக்கும்போதும் உங்களை நம்புவன்தான் நண்பன்.



ஒரு நண்பன் என்பவன் உங்களை அழிக்கக்கூடிய அளவுக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவன். ஆனால் அழிக்க மாட்டான்.
நீங்கள் உங்கள் மீதே நம்பிக்கையிழக்கும்போதும் உங்களை நம்புவன்தான் நண்பன்.
ஒரு நண்பன் என்பவன் கடவுள் அனுப்பியதுபோல எல்லா வகையிலும் உதவுபவன். எதிரி என்பவன் உங்களை உங்கள் லட்சியத்தை அடைய விடாமல் செய்பவன். நண்பன் உங்களை நல்வழி நோக்கித் தள்ளக்கூடியவனாக இருப்பான். எதிரி உங்களை நல்வழியிலிருந்து விலக்குபவனாக இருப்பான்.
ஒரு நண்பன் என்பவன், ஒரு நபராகவோ, இடமாகவோ அல்லது பொருளாகவோ இருக்கலாம். உங்களை
மேலும் நல்ல மனிதனாக மாற்றுவதற்கு உதவுவான். நீங்கள் போகும் இடங்கள் உங்களைச் சிறப்பான நபராக மாற்றியுள்ளனவா? நீங்கள் யாருடன் பழகுகிறீர்களோ அவர்கள் உங்களைச்
சிறப்பான நபராக மாற்றுகிறார்களா?
யாருடன் வெற்றிகளைக் கொண்டாட முடியாது?
நான் ஒரு புதிய வகைக் காரை வாங்கியபோது என் மனக் கிளர்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினேன். நான் என் மனைவியை முதலில் அழைத்தேன். அவள் என்னைக் குறித்து மிகவும் பெருமைப்பட்டாள். அவள் என் உண்மையான தோழி. அவள் என்னைக் கொண்டாடினாள்.
எனது நிலையைப் பார்த்து உண்மையிலேயே சந்தோஷப்படும் மற்றொரு நபரைப் பற்றி யோசிப்பதுகூட எனக்குச் சவாலாக இருந்தது. புதிய காரைச் சில குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் காண் பித்தேன். ஆனால் ஒரு சிலரே என்னைக்குறித்துப் பெருமைப்பட்டனர்.
நான் அதற்காக ஏங்கவில்லை. ஆனால் ஒரு நாய்க்குக்கூட அவ்வப்போது தலையில் ஒரு செல்லத் தட்டு தேவைப்படுகிறது.
என் சந்தோஷத்தை யாரிடம் பகிர்ந்துகொள்ளலாம், யாருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்பது ஏற்கனவே என் ஆழ்மனதிற்குத் தெரிந்தே இருந்தது. யாருடன் நான் என் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள முடிந்ததோ அவர்களிடத்தில் நான் நானாகவே இருந்தேன். யாருடன் என் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லையோ அவர்களிடம் என் வெற்றிக்காக மன்னிப்புக் கோரும் விதத்தில் நடந்துகொண்டேன். அதாவது, நான் ஏதோ தப்பு செய்துவிட்டு அவர்களிடம் விளக்கம் அளிப்பதைப் போன்ற மனநிலையை உணர்ந்தேன்.
கார் பற்றியும் அதன் வசதிகள் பற்றியும் பேசவில்லை. எப்படி மலிவான விலைக்கு அதை என்னால் வாங்க முடிந்தது என்று விளக்கினேன். நான் வெற்றி பெற்று அதன் விளைவாக கார் வாங்கியதாகச் சொல்லவில்லை. பேரம் நன்றாக இருந்ததால் வாங்கியதாகச் சொன்னேன்.
உங்கள் வெற்றியைப் பற்றிப் பேசாமல் நீங்கள் அடைந்த பொருளின் மதிப்பைக் குறித்தும் அதை ஏன் வாங்கினேன் என்பது குறித்தும் ஒருவரிடம் விளக்க முனைகிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு எதிரியுடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நன்றாக கவனியுங்கள். இந்தக் குறிப்பிட்ட வகை எதிரிகள் உங்களது நண்பர்கள் அல்ல என்று நான் சொல்லவில்லை. அவர்கள் உண்மையான நண்பர்கள் இல்லையென்று சொல்கிறேன். அவர்களுடன் இருக்கும்போது நீங்கள் இயல்பாக இருக்க முடியாது. நீங்கள் உங்களின் லட்சியத்தை அடைய விடாமல் அவர்கள் தடுப்பார்கள். உங்கள் இலக்கை அடைவதில் உங்களைத் தாமதம் செய்வார்கள்.
அமெரிக்க தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி. விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான், சென்னை வெளியிட்டுள்ள from the HOOO to doing GOOD எனும் நூலிலிருந்து தொகுப்பு : நீதி

ஹிட்லரை அடிபணிய வைத்த ஒரு தமிழனின் பெருமையை பறைசாற்றும் சம்பவம் இது!

ஹிட்லரை அடிபணிய வைத்த ஒரு தமிழனின் பெருமையை பறைசாற்றும் சம்பவம் இது!

பெருமையை உலகுக்கு பறைச்சாற் றும் சம்பவம் இது!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந் திய விடுதலைப்போராட்டத்தின்போ து ‘ஜெய்ஹிந்த்’ என்ற ஒற்றை வாச கம்தான், தாய்நாட்டின் மீது பற்றும் பாசமும் கொண்ட ஒவ்வொரு இந் தியரின் பேச்சிலும், மூச்சிலும் உ றைந்துபோய் இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இந்த அற்புத வாசகத்தை உருவாக்கி, மக்களிடையே பரவசெ ய்து, விடுதலைக்கான வீர தீப்பொறியை பரவச் செய்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற நம்பிக்கையும் இந்திய
மக்களின் கருத்தில் விதைக்கப்பட்டது.
இந்த தகவலுக்கு மாறாக, ‘ஜெய் ஹிந்த்’ என்ற வாசகத்தை முதலில் அறிவித்து பிரகட ணப்படுத்தியவர் ஒரு தமி ழர்தான் என்ற அரிய செ ய்தியும், அந்த வீர தமிழனி டம் உலகை யே ஆட் டிப் படைத்த சர்வாதிகாரியா ன ஹிட்லர் மன்னிப்புக் கே ட்ட பெருமைக்குரிய வர லாறும் தற்போது தெரிய வந்துள் ளது.
‘ஜெய் ஹிந்த் செண்பகராமன்’ என்ற நூலி னை வரலாற்று ஆசிரியர் ‘ரகமி’ என்பவர் எழுதியுள்ளார். இந்த நூலில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருட்டடிப்பு செய்யப்ப ட்ட அந்த பெருமைக்குரிய தமிழனின்பெரும்பங்கு ஆதார த்துடன் பதிவுசெய்யப்பட்டு ள்ளது.
குமரியில் பிறந்த செண்பக ராமன் சிலகாலத்திற்குபின் திரு வனந்தபுரத்தில் பள்ளி ப்படிப்பை முடித்திருக்கிறா ர்.மாணவராக இருந்த கால ங்களிலேயே இந்திய விடுத லைக்காக பல்வேறு போரா ட்டங்களில் செண்பகராம ன் ஈடுபட்டார்.
இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டு உளவாளி யான ‘சேர் வால்டர் வில்லி யம் ஸ்ரிக்லாண்ட்’, செண்பகராமனின் நடவடிக்கைகளில் இருந்த உறுதியான கொள்கைப்பிடிப்பையும், துணிச்சலை யும், ஆர்வத்தையும் கண்டு பலவகைகளில் அவருக்கு உதவி செய்தார்.
அவரது உதவியுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய செண்பகராம ன் இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்ம னி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்திரு க்கிறார். இத்தாலியில் இருந்தபோது இத்தாலிய இலக்கியம், விஞ்ஞானம் போன்றவற்றை படித்தார். பின்னர், சுவிட்சர்லாந்திலும் படிப்பை தொட ர்ந்திருக்கிறார். அதன்பின் ஜெர்மனி யின் தலைநகரான பெர்லினில் பொ றியியல் துறையின் டாக்டர் பட்டம் பெற்றார்.
பட்டப்படிப்புக்கு பிறகு, ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே இந்திய ஆதரவு சர்வதே ச கமிட்டிமூலம் இந்திய விடுதலைக்கு செண்பக ராமன் ஆதரவு திரட்டத் தொடங்கினார். அந்த காலக்கட்டத்தில் ஜெர்ம னி மன்னர் கெய்சரின் நட்பு அவருக்கு கிடைத்த து. 1930-இல் இந்திய வர் த்தகசபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக செண்பகரா மன் நியமிக்கப்பட்டார்.
1933-இல் ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி ஏற்பட்டபோது அவருடன் செண்பகராமனுக்கு நட்பு ஏற்பட்ட து. 1933-இல் வியன்னாவில் நடை பெற்ற ஓர் மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸை முதன்முறையாக சந்தித்தார், செண்பகராமன். இந்தி ய தேசியத் தொண்டர் படை (பின் நாட்களில் இதுவே இந்திய தேசிய ராணுவமாக உருவெடுத்தது) திட் டம்பற்றி கேள்விப்பட்டிருந்த சுபா ஷ் சந்திரபோஸ், தன்னுடைய இந் திய தேசியப் படை குறித்து செண் பகராமனுடன் கலந்தா லோசித்து இருக்கிறார்.
அந்த சந்திப்பின் முடிவில், தான் எப்போதும் சொல்லும் ‘ஜெ ய் ஹிந்த்’ என்ற மந்திர வார்த்தையை செண்பகராமன் உச் சரித்து இருக்கிறார். அந்த வாசகம் சுபாஷ் சந்திரபோசை வெகுவாக ஈர்த்தது. அதனையே தனது தேசிய ப்படையின் தாரக மந்திரமாக்கினா ர். அதுவே நாளடைவில் இமயம் வரையில் ஒலிக்க ஆரம்பித்தது.
செண்பகராமனைப் பற்றிய இன் னொரு சம்பவமும் இந்நூலில் பதி வு செய்யப்பட்டுள்ளது. தமிழனின் பெருமையை உலகுக்கு பறை சாற் றம் அந்த உன்னத சம்பவம் ஒன்று போதும்; ‘தமிழன் என்று சொல்ல டா-தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற அற்புத வரிகளி ன் முழு பொருளையும் நாம் உணர் ந்துக் கொள்ள முடி யும்.
ஒருமுறை ஹிட்லர் தன் நண்பர்களுடன் பேசிக்கொ ண்டிருந்தபோது “சுதந்திர ம் பெறக்கூடிய தகுதி இந்தி யர்களுக்கு கிடையாது” எ ன்று கூறினார். இந்த கருத் து அருகில் இருந்த செண் பகராமனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. “இந்தியா வின் பாரம்பரியம், இந்தியத்தலைவர்களின் திறமைக ளைப்பற்றி தரக்குறைவாக நீங்கள்பேசுவதை என்னால் அனுமதிக்கமுடியாது” என்று ஆவேசமாக கூறிய செண்பக ராமன், சற்றும் அஞ்சாமல் அனைவரின் முன்னிலையி லும் உலகமே பார்த்து மிரண் ட சர்வாதிகாரி ஹிட்லருடன் இதுதொடர்பாக நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்.
அடுக்கடுக்கான ஆதாரங்களுட னான செண்பகராமனின் வாத திறமையை கண்டுவியந்துபோ ன ஹிட்லர், இறுதியில் பணிந் தார். தன்னை மன்னித்துக் கொ ள்ளும்படி அவர்கேட்க செண்பக ராமனோ, வார்த்தைகளால் மன் னிப்பு கேட்பதைவிட எழுத்துப்பூ ர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்த, ஹிட்லரும் அப்படியே செய்திருக்கிறார்.
இச்சம்பவம் நாஜிக்களுக்கு மத்தியில் பெரும்கோபத்தை ஏற்படுத்தியது. செண்பக ரா மனை கொல்ல சதிசெய் து சாப்பாட்டில் விஷத்தை வைத்து அவரை கொன்ற னர். செண்பகரா மன் 26-5-1934அன்று மரணம் அடை ந்தார்.
“தொட்டிலில் அழும் பிள் ளைகள் கூட ஹிட்லரின் பேரைக் கேட்டால் வாயை மூடிக்கொள்ளும்” என ஜெர்மனி யில் ஒரு சொல் வழக்கு உண்டு. அப்படிப்பட்ட கொடுங்கோலனான ஹிட்லரை நேருக்கு நேராக நின்று எதிர்த்து பேசு வதென்றால் சாதாரண காரியமா?
அறிவிலும், துணிவிலும் ஈடு இணையற்ற ஓர் தமிழனாக ஜெர்மனியில் இருந்தபடி, இந்திய விடுதலைக்கு போராடிய மாவீரன் செண்பகரா மனைப்பற்றி ஜெய்ஹிந்த்’ புத்தகத்தின் வாயிலா க வரலாற்று ஆசிரியரான ரகமி, மேலும் பல அருமையாக நிகழ்ச்சிகளை யும் வெளி உலகத்திற்கு தெ ரிவித்திருக்கிறார்.
செண்பகராமனைப் போல் வரலாறுகளி ல் மறைக்கப்பட்ட பல தமிழ் மாவீரர்க ளை நினைத்து வேதனைப்படும் முற் போக்கு சிந்தனையாளரும், பிரபல எழு த்தாளருமான தமிழச்சி என்பவர் இந்த அரிய தகவலை சமூக வலைதளம் ஒன் றில் வெளியிட்டுள்ளார்.
மாலையில் மலர்ந்த மலரில் . . .