Monday, September 10, 2018

பணவளக்கலையின் -- பருவத்தே பணம் செய்

பணவளக்கலையின் -- பருவத்தே பணம் செய்

செலவை குறைக்க வரவை உயர்த்த செல்வதை பெறுக்க

தினசரி நாம் செய்யும் செலவு களைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்குக் கிடையாது. இதனால் என்னதான் நாம் சம்பாதித்தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனை யும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவு செய்தோம் என்று தெரியாமல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது குறித்து வைத்துச் சொன்னால் நன்றாக இருக்குமே! அதனோடு நாம் சேமிக்க வேண்டிய தொகை என்ன, கட்ட வேண்டிய கடன் எவ்வளவு என்பதையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா?

ஆம் என்றால் உங்களுக்கான கையேடு



உங்கள் பணத்தை கணக்கு எழுதுவது மூலம் 25% பெருக்கலாம்
மேலும் விபரங்கள்



Jc.Dr.Star Anand ram
Money Attraction Coach
call - 98946 24425
www.moneyattraction.in

பிள்ளைகளை போட்டு பாடாய் படுத்துகிறோம் வீட்டுக் கணக்கு போடு போடு என்று.

பிள்ளைகளை போட்டு பாடாய் படுத்துகிறோம்  வீட்டுக் கணக்கு போடு போடு என்று.

     நம்மில் எத்தனை பேர் வீட்டு கணக்கு போடுகிறோம். அதங்க பட்ஜட் பட்ஜட் என்று ஒன்று இருக்கிறதே அதுதாங்கோ !

     இந்த பட்ஜட் போட்டு குடுமபம் நடத்தும் பாடு நடுத்தர வர்க்கத்திற்கு படாத பாடு.  

     வாங்கும் சம்பளம் இப்படியும் அப்படியும். இதில் சிலவுகள் சென்னங்குன்னி மீனைப்போல் வந்து நம்மை அரித்து எடுத்துவிடும்

     பக்கத்தில் அம்மாவீட்டில்,மாமியார் வீட்டில் உதவிக்கரங்கள் நீட்டினால் நம்பாடு ஜாலித்தான். இவர்களை நம்பாமல் நாமே பாடுப்பட்டு மண்புழு போல இருக்க வேண்டும் என்று நினைத்தால்,…..
இதில் மிக கஷ்டம் இருக்கும். 

     மற்றவர் கைகளை எதிர் பார்க்காமல் வாழ்க்கற்றுக்கொள்வதுதான் நல்லது. அதுதான் நகரிகம்.
அப்படி அவர்கள் கைகளை நம்பி வாழ பழகிக்கொண்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நம் பாடு எதிகாலத்தில் அரோக்கராதான்.

     அடுதவர்கள் கொடுப்பது எவ்வளவு நாளக்கு அது நிலையான வருமானம் இல்லை. இது இப்போத்து வாங்கி செலவு செய்யும்போது,நம் வருமானத்திற்கு மேல் ஜாலியாக செலவு செய்வோம். அந்த வருமானம் திடீர் என்று நின்று விட்ட்டால்,நம் வருமானத்திற்க்குள் செலவு செய்யும் நிலையில், நாம் நிலைக்குலைத்து போய் விடுவோம்.

     நம்மில் எத்தனைப்பேர் வரவு எட்டணா செலவு பத்தனா என்று இருக்கிறோம்!

     திட்டமிட்டு செலவுகள் செய்தால், நிம்மதியாக இருக்கலாம். குடும்பத்தில் நிம்மதி வேண்டும். பணத்தால் சண்டை சச்சரவுகள் தேவையா?

காசு,பணம் ,துட்டு மணி மணி….

     இதில் நான் சொல்ல வந்தது,எப்படி வரவு செலவு திட்டம் போடலாம் என்றுதான்

     முதலில் ஒரு நோட்டையும் போனாவையும், கேல்குலேட்டைரையும்  எடுத்துக்கொள்ளுங்கள்
ரெடியா?


     உங்கள் வருமானத்தை  நோட்டின் முதல் பக்கத்தில் எழுதுங்கள். இதில் வீட்டிற்குள் வரும் எல்லா வருமானங்களும் இருக்க வேண்டும்.

     உதாரணத்திற்கு  உங்கள் வங்கியிலிருந்து எதோ வருமனம் வரலாம் .. வீட்டை வாடகைக்கு விட்டு அதன் வருமானம் வரலாம்.

     இதில் நீங்கள் இருவர் சம்பாதிப்பவர்களாக இருந்தால்,உங்களிருவரின் வருமானத்தையும் எழுதுங்கள்.

      சிலர் இருவர் சம்பாதிதாலும் தனித்தனியாக செலவு செய்வர்கள் அப்படி என்றால், இருவரும் வேறு வேறு நோட்டை வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் தனித்தனி வரவு செலவுகள்.

      அம்மா அப்பாவிடம் நீங்கள் உங்கள் வருமானத்தை அப்படியே கொடுத்துவிட்டாலும். எல்லா செலவுக்கும் கணக்கு எழுதுவது நல்லது.

     கூட்டு குடும்பமாக இருந்தாலும் , எல்லாருடைய வரவையும் எழுதி எல்லோருமாக வரவு செலவு பார்ப்பது நல்லது. 
  
     எல்லோரும் எல்லாரையும் நம்பி இருக்கக்கூடாது. வீட்டு நடப்புகள் எல்லாருக்கும் தெரிய வேண்டும்.

     ஏன் என்றால் பணத்தால் பகை வரும் குடும்பங்கள் நிறைய உள்ளது. 

     நல்ல கணக்கு நல்ல சினேகிதம். என்பார்கள். தாயும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயுரும் வேறு என்பார்கள்.

      குடுப்பத்தின் கணக்கை எல்லோருமாக பார்த்து செய்வதில் நிறைய நன்மைகள் இருக்கிறது.

       ஒருவரே குடும்ப பாரத்தை தூக்கி போட்டுக்கொள்ளாமல், அனைவரும்பகிர்ந்து செய்யலாம்.

     வீட்டிலுள்ள அனைவருக்கும் அதில் பங்குப்பெற்றல்தான் ஒரு பொறுப்பும் வரும்.

     குறைந்தது, அன்று நடந்த செலவுகளையும் வரவுகளையும் பற்றி சொல்லுங்கள். இது தனியாக குடும்பம் நடத்தும் தம்பதியர்களுக்கு பொருந்தும்.

      கூட்டுக்குடும்பாக இருந்தால், ஒரு வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து வரவு செலவுகளை பார்த்து விடுங்கள்

     அட இதுக்கும் நேரம் இல்லை என்றால், மாதம் ஒருமுறை கண்டுப்பாக வரவு செலவுகளை குடும்பமாக உட்கார்ந்து பாருங்கள். இதனை எவ்வேளை எப்படியிருந்தாலும் செய்து விடுங்கள்.

     அப்படி பார்த்தால்தான் ஒரு மாததிற்கு வரும் வருமானத்திற்குள் நாம் குடும்பம் நடத்துகிறோமா? இல்லையா என்று தெள்ள தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

       வருமானதிற்குள் இல்லாமல் அதை தாண்டி செலவுகள் வந்தது என்றால், எந்த எந்த செலவுகள் அதிகம் என்று பார்த்து அதனைக்குறைத்துக்கொள்ளுங்கள்.

     வருமானதிற்குள் இல்லாமல் அதை தாண்டி செலவுகள் வந்தது என்றால், எந்த எந்த செலவுகள் அதிகம் என்று பார்த்து அதனைக்குறைத்துக்கொள்ளுங்கள்.

    ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். செலவுகள் என்று சொன்னேன் அல்லவா? அதில் நீங்கள் சேமிப்பிற்காக வங்கியில் போடலாம். அல்லது இன்ஷுரன்ஸ் கட்டலாம். இது உங்கள் வருமானமாக இருந்தாலும் 

        இப்போது அது உங்கள் வரவை விட்டு போகிறது அல்லவா? அதனால் இப்பொதைக்கு அது உங்கள் செலவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

     உங்கள் வருமானம் அனைத்தையும் முதல் பக்கத்தில் எழுதி வீட்டீர்களா?

ஒரு மாதத்திற்கு ஆகும் செலவுகள் :

1)கண்டிப்பாக ஆகும் செலவுகள் :

இதை கண்டிப்பாக கட்டியே ஆக வேண்டும் என்ற கட்டயாத்தில் இருக்கும் செலவுகள்

  • வாடகை வீட்டில் குடியிருந்தால் வீட்டு வாடகை
  •  கரண்ட் வரி
  •  தண்ணீர் வரி
  • தொலைபேசி வரி
  • கடன் வாங்கியிருந்தால் அதன் கட்டணம்
  • இன்ஷுரன்ஸ்
  • பிள்ளைகள் தனியார் பள்ளியில் படித்தால் பள்ளிக்கட்டணம்




2)நடைமுறை செலவுகள் :

இந்த செலவுகள் நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும் தான் இருந்தாலும் மிச்சமும் பிடிக்கலாம் அல்லவா?

  • சாப்பாட்டு செலவுகள்
  • மருந்து செலவுகள்
  • கார், மோட்டர் வாகனம் இருந்தால் அதற்கு போடும் எண்ணெய் செலவு
  • சோப்பு,பல் விலக்கும் பேஸ்ட்….

3)இதர செலவுகள் :

இந்த செலவு எப்போதோ ஒருமுறை வருவது.

  • வீட்டுக்கு அழுகு படுத்தும் பொருட்கள்
  • மின்ப்பொருள் சாதனங்கள்
  • சமையல் உபகரணங்கள்
  • பரிசுப்பொருட்கள்
  • சுற்றுலா
  • உடைகள்
  • ஓட்டல்,சினிமா..


வருடத்திற்கு ஒருமுறை வரும் செலவுகள்

  • வீட்டு விஷெங்கள்
  • பண்டிகை கால செலவுகள்
  • பிள்ளைகளை பள்ளி  செலவுகள்


      இதில் நான் கொடுத்திருப்பது எனக்கு தெரிந்த சில செலவுகள்தான்  செலவுகள் செய்வது குடும்பத்திற்கு குடும்பம் வித்தியாசப்படும்.

     நான் கொடுத்திருப்பதிலிருந்து நீங்கள் உங்கள் செலவுகளை கூட்டியோ குறைத்தோ எழுதி செலவுகளை பார்த்துக்கொள்ளுங்கள்

     ஒவ்வொரு மாதமும் நீங்கள் உங்கள் வரவு செலவுகளை பார்த்தால், எதனால் உங்கள் பட்ஜெட் மாதக்கடைசியில் இடிக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

     வருடம் முடிந்ததும் கடைசியாக கணக்கள் பார்த்து முடித்துவிட்டால். உங்கள் வருட வரவு செலவுகள் அழகாக தெரிந்துக்கொள்ளலாம்.

    
     வருடக்கணக்கினை பார்க்கும் போது, வரவுக்குள் செலவுகள் செய்திருந்தால், உங்கள் மனம் என்ன சொல்கிறது என்று கேட்டு செய்யுங்கள்.

     செலவுகளை குறைத்து இன்னும் சேர்க்கலாம் என்றால் செலவுகளை எப்படி குறைக்கலாம் என்று பாருங்கள். இல்லை இன்னும் ஏதாவது செலவுகள் செய்யல்லாம் என்றால் செலவு செய்யுங்கள்.

       உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முடியுமா? என்று பாருங்கள்

      எப்போதுமே நாம் வரவு செலவுகளை அவ்வப்போது போட்டு பார்த்துக்கொண்டோம் என்றால், ஒவ்வொரு மாதமும் செலவுகளை குறைக்கலாமா? என்று புரிந்துவிடும்.


      
     ஒரு மாதத்திற்கும் அல்லது வருடத்திற்காகன செலவுகள் கூடியிருந்தாலும்,நாம் எதை கூட்டியுள்ளோம். என்பது தெரியும்.. அதற்க்கேற்ப அடுத்தமுறை குறைத்தோ, ஏற்றியோ செலவிடலாம்.


      கடனுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்றால் முதலில் அதற்கான காசை செய்துக்கொண்டு  வாங்கினால் நல்லது. கடனிலிருந்து தப்பிக்கலாம்.

      அடுத்தவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று காப்பி அடித்து வாங்காமலிருந்தாலும்  நம்முடைய் காசுக்கு ஆப்பு இல்லை

     அடுத்தவருக்காக வாழவேண்டாம். உங்களுக்காக வாழுங்கள். 

      அடுத்தவர்கள் உங்களை பார்த்து,உங்கள் குடும்பத்தை பார்த்து காப்பி அடிக்கும்படி வாழவேண்டும்.

     கடன் இருந்தால் ஒன்று அடைந்ததும் இன்னொன்று வாங்குங்கள். ஒரே நேரத்தில் கடன் நிறைய வாங்கினால்  அதனால் பாதிக்க படுவது நம் குடும்பம்தான்.

       கடன் வாங்கும்போது நமக்கு  சந்தோஷமாகத்தான் இருக்கும். கடன் கொடுப்பவர்களுக்கும் சந்தோஷம் தான்.

      கடனை திருப்பி கொடுக்க தினரும் போது நமக்கும் தின்ட்டம். கடன் கொடுத்தவர்களும் கஷ்டம்தான்.

     கடன் இல்லாத குடுமபங்கள் கிடையாது

     யோசித்து பாருங்கள் சில முக்கிய நேரத்திற்க்காக நாம் வாங்கும் கடன் கொஞ்சமாகத்தான் இருக்கும்.

       ஆடம்பர செலவுக்காக நாம் வாங்கும் கடன்கள்தான்  அதிகமாக இருக்கும்.

       கூடுமானவரையில் நம் விரலுக்கு தகுந்த வீக்கமாக வாழ்ந்தால்,நிம்மதியாக இருக்கலாம்.

     குடும்பம் நடத்தும் போது நமக்கு ஆயிரம் சுமைகள் சுற்றி வரும்; இதில் கடன்,வரவுக்கு மீறி செலவுகள் செய்து ஆயிரத்தி ஒனறாக கஷ்டங்களை தலயில் தூக்கிப்போட்டு.. தேவையா?

Monday, December 12, 2016

செல்வம் தரும் மாதம் மகாலட்சுமி வீடு தேடி வரும் மாதம்

மகாலட்சுமி வீடு தேடி வரும் மாதம்

செல்வம் தரும்  மாதம் மகாலட்சுமி வீடு தேடி வரும் மாதம்

இறைவனுக்கும் இறைவழிபாட்டிற்கும் உகந்த மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளது. "மாதங்களில் நான் மார்கழி"... என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார். இந்த மாதத்தில் அதிகாலை நீராடி ஆலய தரிசனம் செய்வது சிறப்பு. இதனால் தீராத நோய்களும், பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கை. மகத்துவம் நிறைந்த மாதம் மார்கழி மாதம் எண்ணற்ற மகத்துவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான மாதமாகும். அதனால்தான் அதனை பீடுடைய அதாவது செல்வம் மிகுந்த மாதம் என்று அழைக்கின்றனர். மார்கழி மாதம் மகத்துவம் நிறைந்தது. எனவே நம் வாழ்வை அர்த்தமுள்ள தாக்கி கொள்ளவேண்டுமானால், இம்மாதத்தில் சரணாகதி என்னும் உயர் தத்துவத்தை கடை பிடிக்கவேண்டும். ஒரு ஆண்டில் 11 மாதங்கள் கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மார்கழி மாதம் மட்டும் கோவிலுக்கு சென்றாலே வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற பலன் கிடைத்துவிடும். திருப்பாவை திருவெம்பாவை தமிழகத்தில் மார்கழி மாதம் வந்துவிட்டாலே அதிகாலை வேளையில் வைணவக் கோயில்கள் மட்டுமின்றி அனைத்து ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகளும், பக்தி இசையும் மணக்கத் தொடங்கிவிடும். இதற்காகவே, ஆண்டாளும், மாணிக்கவாசகரும், திருப்பாவை, திருவெம்பாவை பாடி, நமக்கு வழிகாட்டியுள்ளனர். வழிபாட்டிற்கு உகந்தது நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அதில் உத்தராயணம் பகல் என்றும், தட்சணாயனம் இரவென்றும் கூறுவார்கள். இந்த நிலையில் தைமாதத்திற்கு முந்திய மாதம் மார்கழிமாதம் தேவர்களுக்கு வைகறைப் பொழுது. இது தனுர்மாதம் என்றழைக்கப்படுகிறது. விடியற்காலை என்றாலே மங்களகரமானது தானே? எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, "மார்கசீர்ஷம்" என்று வட மொழியில் சொல்வர். "மார்கம்" என்றால், வழி- "சீர்ஷம்" என்றால், உயர்ந்த- "வழிகளுக்குள் தலைசிறந்தது" என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. செல்வம் தரும் நோன்பு மார்கழி மாதம் விரதம் இருந்து விஷ்ணுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கி செல்வ செழிப்பை பெறுவர். திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழிலில் நஷ்டம் நீங்கி லாபம் பெருகும். மார்கழி மாத நோன்பு, மிகவும் சிறந்தது. மார்கழி மாத வழிபாடு வழி வழியாகத் தொடர்கிறது. மார்கழி அதிகாலை 4.30 மணிக்கே எழுந்து விடவேண்டும். வீட்டை சுத்தம் செய்து, நீராடி, கோலமிட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களைப் பாட வேண்டும். மகாலட்சுமி வாசம் செய்வாள் மார்கழி மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது நம்பிக்கை. இதனால் பெரும்பாலானோர் மார்கழியில் கோலமிடுகின்றனர். மார்கழியில் காலையில் எழுந்து வெளியே நடந்தால் ஓசோன் வாயு நுரையீரலுக்கு என்று புத்துணர்ச்சி தரும். மார்கழி மாத காற்று சருமத்திற்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய்களுக்கும், உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. இது விஞ்ஞான பூர்வமான அறிவியல் உண்மை.மனம் தூய்மையாகும். கோலமும், பாடலும் மனதை ஒருமைப்படுத்தி உணர்வுகளைச் செம்மைப்படுத்தும். மார்கழி மாதம் முழுதும் அதிகாலை எழுந்து கோவிலுக்கு செல்ல விரும்புகிறவர்கள் தனிமையாக செல்வதைவிட ஒரு சிறு குழுவாக அல்லது நண்பர்கள் வட்டமாக செல்லலாம் இன்னும் சௌகரியமாக சுறுசுறுப்பாக இருக்கும். எனவே குளிர்கிறதே என்று இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்காமல் அதிகாலை எழுந்து நீராடி திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை தரிசனம் செய்யுங்கள்.

உங்களுக்கு சகல ஐஸ்வர்யமும் உண்டாகட்டும்.
பயிற்சி + முயற்சி + தொடர்ச்சி = வெற்றி
Jc.Dr.Star Anand Ram
Money attraction Consultant
98946 24425
97900 44225

Monday, November 14, 2016

குபேர கிரிவலம் யாத்திரை

குபேர கிரிவலம் யாத்திரை 

வளமான வாழ்க்கைக்கு தெய்வீக ரகசியம்

10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள்


கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குபேரன் தமது குபேரப் பட்டணத்தில் இருந்து பூமிக்கு வருகின்றார்; வந்து, திருஅண்ணாமலையில் இருக்கும் குபேர லிங்கத்தினை சூட்சுமமாக வழிபடுகின்றார்; அதன் பிறகு, அவர் அங்கிருந்து கிரிவலம் புறப்படுகின்றார்; இதுதான் அந்த தெய்வீக ரகசியம்;*

நாமும் அதே நேரத்தில் குபேரலிங்கத்தில் ஒரு மணி நேரம் இருந்து நமது தேவைகளை பிராத்தனையாக வைப்போம்; அதன் பிறகு அங்கிருந்து நாமும் கிரிவலம் குபேரலிங்கத்தில் ஆரம்பித்து, குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்வோம்; இப்படிச் செய்துவிட்டு, வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லக் கூடாது; எவர் வீட்டிற்கும் செல்லக் கூடாது; நேராக நமதுவீட்டிற்குச் செல்ல வேண்டும்; அப்படி சென்றுவிட்டால், அடுத்த ஓராண்டுக்கு நமது வளர்ச்சி அபரிதமாக இருக்கும்; கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள்


ஒவ்வரு வருடமும் கார்த்திகை மாதத்தில் தேய்பிறை சிவராத்திரியில் குபேரன் அருவ வடிவத்தில் அருணாச்சலேஸ்வரர் பெரிய கோவிலில் பிரதோஷ பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் )வழிபட்டுவிட்டு கிரிவலபாதையில் உள்ள (தான் பிரதிக்ஷை செய்த சிவலிங்கத்தில் ) குபேர சன்னதியில் வழிபட்டுவிட்டு கிரிவலம் வந்து அதன் பின்பு திருப்பதி செல்வதாக ஐதிகம்/நம்பிக்கை. இந்த நாளில் பெரியகோவிலில் பிரதோஷ பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை தரிசித்துவிட்டு) அருணாச்சலேஸ்வரரை வழிபட்டுவிட்டு குபேர சன்னதிக்கு வந்து குபேர லிங்கத்தை வணங்கிவிட்டு கிரிவலம் வருவது பொருளாதார ரீதியாக பெரிய அபிவிருத்தியை தரும் என்பதுஒரு நம்பிக்கை. 
அந்த வகையில், கோவிலில் (ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில்) 4 மணிக்கு நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை முழுமையாய் தரிசித்துவிட்டு -நமதுபிரார்த்தனைகளை முழுமையாய் வெளிப் படுத்திவிட்டு அருணாச்சலேஸ்வரரை அனைத்து சித்தர்களுடன் வணங்கி பின்னர் கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்தில் வணங்கிவிட்டு கிரிவலம் செல்வதே மிகச் சிறப்பு... குருவோரையில் குபேர லிங்கத்தில் வணங்குவதும் நமது வேண்டுதல்கள் முழுமையாய் நிறைவேறி குபேரனின் அருள் நூறு சதவிதம் கிட்டும்.




குபேர கிரிவலத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் 
கிரிவலம் வரும்பொழுது நவதானியங்கள் (சுமார் அரை கிலோ ) மற்றும் டைமன்டு diamond கல்கண்டு அரை கிலோ ஆகியவற்றை கிரிவல பாதையில் (வலது பக்க மண்ணில்) தூவியபடி வருவது நமது கர்மாக்கள் நீங்கி -பல நூறு அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த புண்ணியமும் கிட்டும்.


நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை முழுமையாய் தரிசித்துவிட்டு (நமது பிரார்த்தனைகளை முழு பக்தியுடன் வெளிப் படுத்திவிட்டு )அதன் பின்னர் கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்தை அடைந்து வணங்கிவிட்டு கிரிவலத்தை துவங்கவேண்டும்..!!மஞ்சள்உடை அணிந்துவருவதும் கூடுதல் சிறப்பு..


சிவனை வணங்குவதற்கு முன்பு நந்தியை வணங்கி வழிபட்டுவிட்டு சென்றால்தான் நமது பிரார்த்தனைகள் முழுமையாய் பலிக்கும்!!



-இந்த வருடம் குபேரகிரிவலம் 27.11.16 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைந்திருக்கின்றது;இந்த நாளில் மாலை 6 முதல் 7 மணி வரை நாம் குபேரலிங்கத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வோம்;*அதன் பிறகு, அங்கிருந்து கிரிவலம் புறப்படுவோம்; குபேரலிங்கத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வோம்; பிறகு, நமது வீடுகளுக்குச் செல்வோம். 

Starting time from coimbatore (Singanalloer bus stop) 26.11.16 evening 9 pm. 

குபேர கிரிவலம் யாத்திரை 

திருநாவளூர் - Morning 6 to 8 am 
ஆதி திருவரங்கம் - Morning 8 to 10 am 
திருஅண்ணாமலை - குபேர கிரிவலம் 12 to 11 pm 
returning to coimbatore 


For 
குபேர கிரிவலம் யாத்திரை 
Jc.Dr.Star Anand 
details call - 98946 24425 & 94875 96625 
www.moneyattraction.in

குபேர கிரிவலம் வளமான வாழ்க்கைக்கு தெய்வீக ரகசியம்


குபேர கிரிவலம் யாத்திரை

வளமான வாழ்க்கைக்கு தெய்வீக ரகசியம்

10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள்


கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி அன்று ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குபேரன் தமது குபேரப் பட்டணத்தில் இருந்து பூமிக்கு வருகின்றார்; வந்து, திருஅண்ணாமலையில் இருக்கும் குபேர லிங்கத்தினை சூட்சுமமாக வழிபடுகின்றார்; அதன் பிறகு, அவர் அங்கிருந்து கிரிவலம் புறப்படுகின்றார்; இதுதான் அந்த தெய்வீக ரகசியம்;*

நாமும் அதே நேரத்தில் குபேரலிங்கத்தில் ஒரு மணி நேரம் இருந்து நமது தேவைகளை பிராத்தனையாக வைப்போம்; அதன் பிறகு அங்கிருந்து நாமும் கிரிவலம் குபேரலிங்கத்தில் ஆரம்பித்து, குபேரலிங்கத்திலேயே நிறைவு செய்வோம்; இப்படிச் செய்துவிட்டு, வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லக் கூடாது; எவர் வீட்டிற்கும் செல்லக் கூடாது; நேராக நமதுவீட்டிற்குச் செல்ல வேண்டும்; அப்படி சென்றுவிட்டால், அடுத்த ஓராண்டுக்கு நமது வளர்ச்சி அபரிதமாக இருக்கும்; கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானவர்கள் குபேரகிரிவலம் வருகை தந்து வளமான வாழ்க்கையை அருணாச்சலேஸ்வரர் அருளாலும், குபேரலிங்கத்தின் ஆசியாலும் பெற்றுள்ளார்கள்


ஒவ்வரு வருடமும் கார்த்திகை மாதத்தில் தேய்பிறை சிவராத்திரியில் குபேரன் அருவ வடிவத்தில் அருணாச்சலேஸ்வரர் பெரிய கோவிலில் பிரதோஷ பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் )வழிபட்டுவிட்டு கிரிவலபாதையில் உள்ள (தான் பிரதிக்ஷை செய்த சிவலிங்கத்தில் ) குபேர சன்னதியில் வழிபட்டுவிட்டு கிரிவலம் வந்து அதன் பின்பு திருப்பதி செல்வதாக ஐதிகம்/நம்பிக்கை. இந்த நாளில் பெரியகோவிலில் பிரதோஷ பூஜையில் (பெரிய நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை தரிசித்துவிட்டு) அருணாச்சலேஸ்வரரை வழிபட்டுவிட்டு குபேர சன்னதிக்கு வந்து குபேர லிங்கத்தை வணங்கிவிட்டு கிரிவலம் வருவது பொருளாதார ரீதியாக பெரிய அபிவிருத்தியை தரும் என்பதுஒரு நம்பிக்கை.
அந்த வகையில், கோவிலில் (ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவிலில்) 4 மணிக்கு நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை முழுமையாய் தரிசித்துவிட்டு -நமதுபிரார்த்தனைகளை முழுமையாய் வெளிப் படுத்திவிட்டு அருணாச்சலேஸ்வரரை அனைத்து சித்தர்களுடன் வணங்கி பின்னர் கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்தில் வணங்கிவிட்டு கிரிவலம் செல்வதே மிகச் சிறப்பு... குருவோரையில் குபேர லிங்கத்தில் வணங்குவதும் நமது வேண்டுதல்கள் முழுமையாய் நிறைவேறி குபேரனின் அருள் நூறு சதவிதம் கிட்டும்.




குபேர கிரிவலத்திற்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்
கிரிவலம் வரும்பொழுது நவதானியங்கள் (சுமார் அரை கிலோ ) மற்றும் டைமன்டு diamond கல்கண்டு அரை கிலோ ஆகியவற்றை கிரிவல பாதையில் (வலது பக்க மண்ணில்) தூவியபடி வருவது நமது கர்மாக்கள் நீங்கி -பல நூறு அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த புண்ணியமும் கிட்டும்.


நந்திக்கு அபிஷேகம் நடைபெறுவதை முழுமையாய் தரிசித்துவிட்டு (நமது பிரார்த்தனைகளை முழு பக்தியுடன் வெளிப் படுத்திவிட்டு )அதன் பின்னர் கிரிவல பாதையில் உள்ள குபேர லிங்கத்தை அடைந்து வணங்கிவிட்டு கிரிவலத்தை துவங்கவேண்டும்..!!மஞ்சள்உடை அணிந்துவருவதும் கூடுதல் சிறப்பு..


சிவனை வணங்குவதற்கு முன்பு நந்தியை வணங்கி வழிபட்டுவிட்டு சென்றால்தான் நமது பிரார்த்தனைகள் முழுமையாய் பலிக்கும்!!



-இந்த வருடம் குபேரகிரிவலம் 27.11.16 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைந்திருக்கின்றது;இந்த நாளில் மாலை 6 முதல் 7 மணி வரை நாம் குபேரலிங்கத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்வோம்;*அதன் பிறகு, அங்கிருந்து கிரிவலம் புறப்படுவோம்; குபேரலிங்கத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்வோம்; பிறகு, நமது வீடுகளுக்குச் செல்வோம்.

Starting time from coimbatore (Singanalloer bus stop) 26.11.16 evening 9 pm.

குபேர கிரிவலம் யாத்திரை

திருநாவளூர் - Morning 6 to 8 am
ஆதி திருவரங்கம் - Morning 8 to 10 am
திருஅண்ணாமலை - குபேர கிரிவலம் 12 to 11 pm
returning to coimbatore


For
குபேர கிரிவலம் யாத்திரை
Jc.Dr.Star Anand
details call - 98946 24425 & 94875 96625
www.moneyattraction.in





Saturday, October 29, 2016

சித்தர் மூல மந்திரம்

சித்தர் மூல மந்திரம்

சித்தர் மூல மந்திரம்.
--------------------------------
ஓம் பசு பரபதி பஷராஜ
நிரதிசய சித்ரூப ஞானமூர்த்தோய தீர்க்கநேத்ராய
கணகண் கம்கங் ,கெங்லங்
லிங் லங் லாலீலம்,ஆவ்.பாவ் ஆம் .ஊம் .பார்கவிய
ஜோதிமய வரப்பிரசன்ன பாததெரிஷய
கோரக்க சரண்யா நமஸ்து !
1. சித்தர்களின் மூல மந்திரம்.
---------------------------------------------
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"
அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"
போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"
கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"
தேரையர் மூல மந்திரம்...
. ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"
சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"
புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"
காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"
இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"
சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"
கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"
சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"
உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"
குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"
கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"
முக்கிய சிவ மந்திரம்.
-------------------------------
மகான் ஸ்ரீ கோரக்கர்
ஓம் கிரீங்.ரீங்.கிரீங் சிம்.சிம்.சிவயநம
ஓம்.உம்.கிலி.அங்.லங்.அங் சிவயநம
ஓம்.வங்.சிங்.யங்.ரங்.ரங்.சிவயநம
ஓம்.வயநமசி.உம்.உம்.லிங்.லிங்.சிவயநம
ஓம் நங்கிலி.நௌ.மௌ.ரங்.யங்.சிவயநம
ஓம்.நசிமசி.வசி.மசி.சிவ.சிவயநம
ஓம்.அங்.அங்.கங்.கெங் ரிங் சிவயநம
ஓம் அம் உம் நம் லம் சிம் சிவயநம
ஓம் சிங் கிலி கிலி நம் நம் சிவயநம
ஓம் சிவ சிவ.நசி மசி.சிவயநம
ஓம் மங் கிலி.ஸ்ரீங் சிங் சிங் சிவயநம
ஓம் மசிமசி வயநமசி லிங் லிங் சிவயநம
ஓம் சிங்சிவ மங்மங் வசி சிவயநம
ஓம் லங்லங் ரூங் ரூங் ரீங் சிவயநம
ஓம் லா லி லூ.லம்.சிங் சிவயநம
தியான மந்திரம்.
---------------------------
ஓம் சிங் ரங் அங் சிங் கோரக்க தெய்வமே நம!
அம்பாள் மந்திரம்.
----------------------------
ஓம் அம் உம் நம் லம் லிங்
கங் டங் ரங் சிங் வங்
கா லீ கம் கம் ரீம் கிலீம் சுவாஹா.
108 கோரக்கர் போற்றி.
-----------------------------------
ஓம் கோரக்கர் திருவடிவடிகள் போற்றி ! ஓம்
ஓம் கோரையில் பிறந்தவனே போற்றி ! ஓம்
ஓம் மட்டையில் பிறந்த மகானே போற்றி ! ஓம்
ஓம் திருநீரில் பிறந்த தேவனே போற்றி ! ஓம்
ஓம் சிவபுரத்தில் உதித்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் சிவசமயம் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் சிவனருள் பெற்றாய் போற்றி ! ஓம்
ஓம் மச்சேந்திரனின் மைந்தா போற்றி ! ஓம்
ஓம் மலையில் வாழ்ந்த மகானே போற்றி ! ஓம்
ஓம் திக்கெல்லாம் புகழ்பெற்ற கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் அற்புதங்கள் நிகழ்த்திய அண்ணலே போற்றி ! ஓம்
ஓம் சித்துக்கள் செய்த செம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பிணிகளை அறுக்க வந்த பேரருளே போற்றி ! ஓம்
ஓம் சித்தர்களின் முதல்வனே போற்றி ! ஓம்
ஓம் சிந்தை தெளிந்தவனே போற்றி ! ஓம்
ஓம் சிவ ஒளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் ஞான ஒளி பெற்ற நாயகரே போற்றி ! ஓம்
ஓம் யோகநெறி கண்ட யோகியே போற்றி ! ஓம்
ஓம் தவநெறி கண்ட தமயனே போற்றி ! ஓம்
ஓம் சித்தமருத்துவம் கண்ட சித்தரே போற்றி ! ஓம்
ஓம் சிவநெறி கண்ட சிவபுரத்தானே போற்றி ! ஓம்
ஓம் பேரொளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரஒளி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரம்பொருள் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் வெட்டவெளியில் நின்றாய் போற்றி ! ஓம்
ஓம் வேண்டும் வரம் அளிப்பாய் போற்றி ! ஓம்
ஓம் ஆணவம் அகன்றாய் போற்றி ! ஓம்
ஓம் கன்மம் கரைந்தாய் போற்றி ! ஓம்
ஓம் கர்மவினை தீர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் கொல்லிமலை சித்தரே போற்றி ! ஓம்
ஓம் சதுரகிரியை ஆண்டாய் போற்றி ! ஓம்
ஓம் கோரக்கர் குண்டம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பொதிகைமலை கண்டவனே போற்றி ! ஓம்
ஓம் திருப்பதி மலை கண்ட தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் அண்ணாமலையாரின் அன்பரே போற்றி ! ஓம்
ஓம் பழனிமலை கண்ட பாவலரே போற்றி ! ஓம்
ஓம் போகரின் தோழா போற்றி ! ஓம்
ஓம் வெற்றியின் வேந்தரே போற்றி ! ஓம்
ஓம் யாகத்தின் தலைவனே போற்றி ! ஓம்
ஓம் குருவுக்கு கண் கொடுத்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் குருவாரம் கண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் குருவருள் தருவாய் போற்றி ! ஓம்
ஓம் செம்பை பொன்னாக்கிய சித்தரே போற்றி ! ஓம்
ஓம் குன்றை பொன்னாக்கி கொடுத்தவனே போற்றி ! ஓம்
ஓம் குறை தீர்க்க வந்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் சீன தேசத்தின் தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் வாலாம்பிகை அருள் பெற்ற வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் ஞானப்பாலுண்ட ஞானியே போற்றி ! ஓம்
ஓம் காயகல்பம் செய்த வித்தகரே போற்றி ! ஓம்
ஓம் சந்திரரேகை படைத்த சீலரே போற்றி ! ஓம்
ஓம் ரவிமேகலை மந்திரம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் முத்தாரம் நூல் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பரூரில் சமாதி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பாவத்தை அறுக்க வந்த பாவலரே போற்றி ! ஓம்
ஓம் பொய்கைநல்லூரில் வாழ்ந்த கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் மருத்துவநூல் படைத்த மருத்துவரே போற்றி ! ஓம்
ஓம் யோகநிலை உணர்த்திய உத்தமரே போற்றி ! ஓம்
ஓம் ஞானநெறி கண்ட நாயகரே போற்றி ! ஓம்
ஓம் சித்தர் பூரண பொக்கிஷம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் காட்மாண்டில் குடிகொண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் பதினெண் சித்தர்களின் பாவலரே போற்றி ! ஓம்
ஓம் ககனமார்கம் கண்ட காவலரே போற்றி ! ஓம்
ஓம் மாயபிறப்பறுக்கும் மகானே போற்றி ! ஓம்
ஓம் அருஉருவம் படைத்த அண்ணலே போற்றி ! ஓம்
ஓம் சிவயோகியான சிவபாலா போற்றி ! ஓம்
ஓம் புலிமேல் அமர்ந்த புலவரே போற்றி ! ஓம்
ஓம் சன்மார்க்கம் கண்ட சமத்துவமே போற்றி ! ஓம்
ஓம் அருள் ஞானம் படைத்த அரசே போற்றி ! ஓம்
ஓம் முதுமை நீங்க மூலிகை படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் வாசியோகம் கண்ட வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் இல்லறமே நல்லறம் என்று உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சுழிமுனையின் சூட்ச்சமம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சூட்ச்சமத்தின் பொருள் கண்டாய் போற்றி ! ஓம்
ஓம் மரணமில்லா வாழ்வு பெற வழிகண்டாய் போற்றி ! ஓம்
ஓம் கலியுகத்தை காக்க வந்த காவலரே போற்றி ! ஓம்
ஓம் காயத்ரி மந்திரம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் அண்ட வெளியில் நின்றாய் போற்றி போற்றி ! ஓம்
ஓம் அருள் ஒளி தருவாய் போற்றி ! ஓம்
ஓம் பஞசாக்கரத்தினை உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் தியான நிலை கண்ட தெய்வமே போற்றி ! ஓம்
ஓம் தீராத வினை எல்லாம் தீர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் நவகண்ட யோகம் படைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் கையாந்திர மூலிகை கண்டாய் போற்றி ! ஓம்
ஓம் பரிபாஷை கண்ட பாலகா போற்றி ! ஓம்
ஓம் குருமூலி கண்ட கோரக்கா போற்றி ! ஓம்
ஓம் அருட்பெரும் ஜோதியானாய் போற்றி ! ஓம்
ஓம் அருள்ளாலரின் அன்பராய் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் அருளாட்சிக்கு வழி சொன்ன வள்ளலே போற்றி ! ஓம்
ஓம் சத்தியசீலரே போற்றி ! ஓம்
ஓம் சங்கடம் தவிர்ப்பாய் போற்றி ! ஓம்
ஓம் சமதர்மம் ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் மும்மலத்தை வென்றவனே போற்றி ! ஓம்
ஓம் முக்திக்கு வழி கண்ட முதல்வா போற்றி ! ஓம்
ஓம் முழுமுதற் பரம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பரூரின் நாயகனே போற்றி ! ஓம்
ஓம் பாமரர் துயர் துடைப்பாய் போற்றி ! ஓம்
ஓம் ஹரி சிவனுக்கு இடையே அமர்ந்தாய் போற்றி ! ஓம்
ஓம் அமர்ந்த நிலை சமாதி ஆனாய் போற்றி ! ஓம்
ஓம் பரூரில் சூட்சமம் உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் பரிபாஷையில் அருள்வாக்கு உரைத்தாய் போற்றி ! ஓம்
ஓம் சுக்கும சரீரம் கொண்டாய் போற்றி ! ஓம்
ஓம் அட்டாங்க யோகம் அடைந்தாய் போற்றி ! ஓம்
ஓம் பக்தி நெறி அறிவித்த பரம்பொருளே போற்றி ! ஓம்
ஓம் பக்தர்களின் குறை களைவாய் போற்றி ! ஓம்
ஓம் மக்களை காப்பாய் போற்றி ! ஓம்
ஓம் மகான் அருள் தருவாய் போற்றி ! ஓம்
ஓம் எண்ணில்லா கோடி சித்த ரிஷி கணங்களின்
திருவடிகள் போற்றி! போற்றி! போற்றி!
ஓம் சித்தாய நம ஓம் மஹா சித்தா
கோரட்சநாதாய நம
ஓம் ஸ்ரீம் கலம் ஸ்ரீ கோரக்கா சித்த சாமியே போற்றி .
Om Nama Shivaya - ஓம் நம சிவாய
---------------------------------------------------
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.
ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி.
சித்தர்களின் காப்புக் கவசம்.
-------------------------------------------
காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பான கொங்கணரும் பிரம்மசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்திதேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடார் சண்டிகேசர்
வப்பான வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத்தானே
( ரோமரிஷி பூஜாவிதி )
நிறைவுப் பாடல்.
---------------------------
முகாசபரூரின் முதலே போற்றி
முன்வினை அறுப்பாய் போற்றி
கோப்பெரும் குருவே போற்றி
கோரக்கர் அருளே போற்றி
சீர்பெற எனையோர் வாழ்க்கை
சிவ சிவ சிவனே போற்றி
பேர் பெறும் பெரியபரூரின்
பேரின்ப சுடரே போற்றி!போற்றி
" ஓம் சிங் ரங் அங் சிங் கோரக்கர்
தெய்வமே சரணம் "

கேதார கெளரி விரதம் உருவான கதை!

உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம்வல்ல பரம்பொருளான சிவபெருமானுடைய அருட்சக்தியான எழில் மிகு அம்பிகை உமையவளைக் குறித்து அனுட்டிக்கப்படுகின்ற மகிமையும் மகோன்னதமும் மிக்க விரதம்கேதார  கெளரி விரதமாகும். இது மிகவும் பக்திபூர்வமாக அனுட்டிக்கப்பட வேண்டிய ஒரு சிறப்புமிக்க நன்மை பயக்கும் விரதமாகும்.
இந்த விரதம் அனுட்டிக்க விரும்புவோர் இருபத்தொரு நாள் உபவாசமிருந்து உமையம்மையை நினைந்து வணங்குவதோடு சிவபெருமானையும், சேர்த்து வழிபாடியற்றுதல் வேண்டும். இவ்விரதம் புரட்டாதி மாதத்தில் சுக்கில பட்சத்து தசமி முதலாக ஆரம்பமாகி தீபாவளிப் பண்டிகை நாளில் பூர்த்தியாகும்.
இருபத்தொரு நாள் உபவாசமென்றால் சாப்பாடு இல்லாமலே இருத்தல் என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. அதாவது பகலிலே சாப்பிடாமலிருந்து தினமும் அந்திப் பொழுதில் பூஜை வழிபாடு ஆராதனைகளை முடித்துக் கொண்டு இறைவன் இறைவிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருள்களை மட்டும் உட்கொண்டு விட்டு தண்ணீர் அருந்துவது விசேஷம்.
முடியுமாயின் தினமும் அதாவது ஒவ்வொரு நாளும் இறைவனுக்கும் இறைவிக்கும் மஞ்சள் உருண்டை, எள்ளுருண்டை, அரியதரம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை வகைக்கு ஒவ்வொன்றாகப் படைத்து குத்து விளக்கேற்றி தூபதீபம் காட்டி பக்திப் பனுவல்களைப் பாராயணஞ் செய்தல் வேண்டும்.
இந்த விரதமிருப்பவர்கள் தினமும் காலை எழுந்து புனித புண்ணிய நீராடித் தோய்த்துலர்ந்த வஸ்திரந்தரித்து சந்தியாவந்தனம் முடித்து வீட்டிலோ அல்லது ஓர் ஆலயத்திலோ இருபத்தொரு இழைகள் கொண்ட நூலைக் கும்பத்திலோ அன்றி லிங்கத்திலோ சாத்தி பூஜை வழிபாடு ஆராதனையின் பின்பு பூவும் நீரும் கொண்டு வலம் வந்து மிக்க பயபக்தியுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடிச்சுப் போடுதல் வேண்டும். இது மிகவும் பக்குவமாகப் பக்தியுடன் செய்யப்பட வேண்டும்.
இறுதியாக இருபத்தோராம் நாள் காப்பு நூல் கட்டும் போது முதல் வருடம் கையிற் கட்டியிருந்த காப்பை நீக்கிவிட்டு புதுக்காப்பைக் கட்டிக் கொள்ளுதல் வேண்டும். கடந்த வருடம் கட்டிய காப்பு நூலையும் பூஜித்த லிங்கத்தையும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இவ்விரதத்தை தொடர்ந்து 21 வருடம் அனுட்டிக்க வேண்டும். அதுவே ஆன்ம ஈடேற்றம் தரவல்லது.
சிலபேர் இருபத்தொரு வருடம் என்றில்லாது வாழ்நாள் முழுவதும் நிறுத்தாமல் அனுட்டிப்பர். இருபத்தொரு நாளும் வழிபாடியற்றிய விரதகாரர் இறுதி நாளில் முழு நேரமும் உபவாசமிருந்து அடுத்தநாள் அதிகாலை இந்த விரதமிருந்த நற்பயனை எனக்குத் தர வேண்டுமென்று மானசீகமாக விண்ணப்பித்து வேண்டிக் கொண்டு பாறணை பண்ணலாம்.
இந்த விரதத்தை முறைப்படி அனுட்டித்தவர்களுக்கு நல்ல சிறப்பான மங்களம் நிறைந்த இல்லற வாழ்க்கையும் நன்மக்கட்பேறும் நிச்சயம் கிடைக்கும். மேலும் இடை நடுவில் தடைப்பட்ட திருமணங்கள் நல்லமுறையில் மங்களகரமாக நிறைவேறும். அது மாத்திரமன்றி பெண்களுக்கு அவர்கள் விரும்பய மாதிரி கணவரும் புத்திரப் பேறும் கிட்டும் என்று நம்பப்படுகிறது.
மேலும் இந்த விரதம் பற்றிய ஒரு பூர்வீகக் கதையும் வழக்கிலிருக்கிறது. அதாவது முன்னொரு காலத்தில் திருக்கயிலாய மலையின் மீது சிவனும் சக்தியும் வீற்றிருக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் பிரம்ம விட்டுணுக்களும் தும்புரு, நாரதர் முதலானோரும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகளும் இருவரையும் வணங்கிச் சென்றனராம்.
அப்போது அங்கு வந்த பிருங்கி முனிவர் சிவனை மாத்திரம் வழிபட்டு விட்டு அம்பிகையை வணங்காமல் சென்றுவிட்டார். அதைக் கண்ணுற்ற உமையவள் தமது பிராணநாயகராகிய சிவபெருமானைப் பார்த்து, “ஐயனே! பிரபுவே! மன்னிக்கவும், நான் இப்படிக் கேட்டதைத் தவறாக எண்ணாமல், அது என்ன? விபரீதச் செயல்; என்னை வணங்காமல் தங்களை மட்டும் வணங்கி விட்டுச் செல்கிறாரே! காரணம் தாங்கள் அறியாததா?” என்று வினவி நின்றார். அதைக் கேட்ட சிவன் சிரித்துக் கொண்டே “தேவி! பிருங்கி முனிவருக்கு எந்தப் பாக்கியமும் தேவையில்லை. மோட்சத்தை மட்டுமே விரும்பிய அவர் உன்னை விடுத்து, என்னை வணங்கிச் செல்கின்றார். இதிலென்ன?” என்றார்.
அதைக் கேட்ட உமையவள், “அப்படியா! சங்கதி!!” என்று கூறியவண்ணம் பிருங்கி முனிவரிடம் சென்று “ஏ! பிருங்கி முனிவரே! உம்முடம்பிலுள்ள இரத்தம், மாமிச இறைச்சி’ முதலியன என்னுடையவை. ஆகவே, அவற்றைக் கொடுத்து விடு” என்று கட்டளையிட்டார். உடனே பிருங்கி முனிவர் தம்முடம்பிலுள்ள தசை, நார், இரத்தம் என்பவற்றை உதறிக்கொட்டிவிட்டார்.
இரத்தம் முதலானவை இல்லாமற் போனதால் பிருங்கி முனவரின் உடல் தளர்ந்து நடக்க முடியாமல் தள்ளாடினார். நிலை தடுமாரிய பிருங்கியைப் பார்த்து சிவபெருமான், “அட பிருங்கி முனிவரே! நீர் ஏன் அசத்தனானீர்?” என்று வினவினார். அதற்கு அவர் “சர்வேஸ்வரனே! சிறியேன் சக்தியை விட்டுவிட்டுத் தங்களை மாத்திரம் வணங்கியதால் வந்த வினை” என்று கூறி அங்கலாய்த்தார்.
உடனே சிவபெருமான் பிருங்கி முனிவருக்கு ஒரு தண்டை எடுத்து ஊன்று கோலாகக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்ட பிருங்கி முனிவர் அதனை ஊன்றி நடந்து தனது ஆச்சிரமத்தை அடைந்தார். இப்படி நடந்ததைக் கண்ணுற்ற உமையம்மை இந்த அவமதிப்பைத் தாங்க முடியாமல் சிவபெருமானுடன் கோபித்துக் கொண்டு விண்ணுலகான கைலயங்கிரியை விட்டு நீங்கிப் பூலோகம் சென்றார். பின்பு அவர் கெளதம முனிவருடைய ஆச்சிரமத்தையடைந்து ஒரு மரநிழலில் அமர்ந்திருந்தார்.
மழையின்மையால் வாடிப்போயிருந்த கெளதம முனிவரது ஆச்சிரமத்துப் பூச்செடிகளெல்லாம் அம்பிகையின் வரவால் பூத்துக் குலுங்கின. அழகான புஸ்பங்கள் மலர்ந்து அந்த ஆச்சிரமம் முழுவதும் நறுமணம் வீசியது.
தம்முடைய ஆச்சிரமம் திடீரென்று அழகுமிக்கதாக பூக்கள் மலர்ந்து நறுணம் வீசியதைக் கண்ட கெளதம முனிவர் அதிசயித்து வெளியில் வந்து பார்த்த போது, அம்பிகை அமர்ந்திருப்பதைக் கண்டு “தாயே! லோகமாதா! ஆதிபராசக்தியே! உமையவளே! தாங்கள் என் ஆச்சிரமத்துக்கு வந்த காரணம் யாதோ?” என்று பணிவுடன் வினவி நின்றார். அவருக்கு நடந்தவற்றை விவரமாகக் கூறிய அம்பிகையை கெளதம முனிவர் ஓர் அழகிய சிம்மாசனத்தை வரவழைத்து அதில் அம்பாளை எழுந்தருளச் செய்து வணங்கி நின்றார்.
அந்நேரம் அம்பிகையானவள் மகிழ்ச்சியடைந்து “ஓ முனிவரே! யான் ஒரு விரதம் அனுட்டித்து இறைவனை அடைய நீர்தான் வழிகாட்ட வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டாள். அதைக் கேட்ட கெளதமரும்” தேவி! பூமியில் ஒரு நல்ல விரதம் உண்டு. அதுதான் கேதாரகெளரி விரதம். அதனை அனுட்டித்தால் தாங்கள் சிவபெருமான¨ச் சென்றடையலாம். இதோ அதற்கான விதிமுறைகளைக் கூறுகிறேன். கேட்பீர்களாக!” என்று கூறி கேதாரகெளரி விரதம் அனுட்டிக்கும் விதிமுறைகளையும் சொல்லி வைத்தார்.
அதைக்கேட்ட அம்பிகையானவள் உடனே அந்த விரதத்தை முறைப்படி நோற்று சிவபெருமானிடம் சென்றடைந்தார். சிவபெருமானும் அம்பிகையை ஏற்றுக் கொண்டு அவருக்கு வாமபாகத்தைக் கொடுத்து அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
இடபாரூடராகக் காட்சி கொடுத்த சிவபெருமானிடம், “ஐயனே! இந்த விரதத்தை முறையாக அனுட்டிப்பவர்களுக்கு சகல செளபாக்கியங்களையும் தேவரீர் வழங்கியருள வேண்டும்” என்று உமையவள் விண்ணபிப்பித்து நின்றார். அது கேட்ட சிவபெருமானும்” அப்படியே ஆகட்டும், தேவி! உமையவளே! உன் விரும்பப்படியே இந்தக் கேதார கெளரி விரதத்தை முறையாக அனுட்டிப்பவர்கள் இப்பூவுலகில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெற்றுச் சகல செளபாக்கியங்களுடன் வாழ்வர்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
ஆதலால் இந்தக் கெளரி விரதத்தை சைவமக்கள் ஒவ்வொருவரும் முறையாக அனுட்டித்து மனித வாழ்வில் சகல ஐசுவரியங்களையும் பெற்றுச் சீரோடுஞ் சிறப்போடும் வாழ தம்மைத் தாமே தயார்படுத்திக் கொள்வார்களாக…!

ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்

ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும்
ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார். பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. "சித்தன் அருளை" வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன்.
தேவையானவை:-
வாழை இலை
பச்சை கற்பூரம்
சீரகம்
பருத்திக் கொட்டை
கல் உப்பு
மிளகு
நவ தான்யங்கள்
கோதுமை
நெல் (அவிக்காதது)
முழு துவரை
முழு பச்சை பயிறு
கொண்ட கடலை
மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது)
முழு வெள்ளை மொச்சை
கருப்பு எள்
முழு கொள்ளு
முழு கருப்பு உளுந்து
விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42
தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21
செய்யும் முறை:-
எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.
துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி, நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதிலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி கோட்டை, கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும். இந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் போகிறது.
ஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில், தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும். பிறகு 21 விளக்குகளையும் தனித்தனியாக வைத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும்.அதன் மேல் ஒவ்வொரு விளக்குக்கும், ஒரு விளக்காக மீதம் உள்ள விளக்குகளையும் வைக்க வேண்டும். நெய் நன்றாக நிரப்பப்பட வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
தீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பார்ப்பதற்கு லிங்கம் போல் காட்சி கிடைக்கும். பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).
இறுதியாக இறைவனிடம் "இறைவா, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி, சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம். மேலும் இந்த பூசையை செய்வதும், செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே" என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். வேண்டுமானால், உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.
மறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும். இது கட்டாயம்.
ஒரு அருள் வாக்கில் அகத்தியப் பெருமான் ஒவ்வொரு பொருளும் ஏன் ஒவ்வொரு எள்ளும் கூட ஒரு ஆத்மா என்று கூறி உள்ளார். அதனால், கண்டிப்பாக ஆற்றில் சேர்க்கவும். கோவிலில் முன் அனுமதி பெறுவது மிக முக்கியம்
# Nanrigal kodi siththanarul
About temple & Details - Divine Mr.Sathasivam - 81448 42722
பணவளக்கலை - 98946 24425

கந்தர் கலிவெண்பா

கந்தர் கலிவெண்பா !


1. திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா

(ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)


(குறிப்பு: எங்கெங்கு பதம் பிறிப்பதனால் பொருள் மாறுபடவில்லையோ அங்கெல்லாம் பதம் பிறிக்கப்பட்டுள்ளது.)
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமும் நாதாந்த(1) முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத(2) போதமாய் - ஆதிநடு
.1
(1) நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த
(2) போதமுங் காணாத

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு
.2

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத .
.3

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியல்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும்
.4

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்
போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து .
5

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்
.6

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்
7

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய ..
.8

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னுால் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னுால் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னுால் .
9

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
சரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு
சாலோக சாமீப சர்ரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் .
.10

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி - உலவா
.11

தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் .
.12

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமுன்றும் - பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் ..
.13

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்த தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் ..
.14

வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துஉலவா இன்பம் -மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் .
.15

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து (1)உள்நின்று
ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு ..
.16
(1) கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின்

முன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேயிருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும்
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக - ஞானம் .
.17

திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமே
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் .
.18

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட .
.19

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் ..
.20

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் .
.21

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்
பாச இருள்துரந்து (1) பல்கதிரில் சோதிவிடும்
.22
(1) பாச விருடுரந்து ப்ல்கதிரிற் சோதிவிடும்

வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்
.23

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்
.24

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
.25

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர்
.26

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்
.27

புரிநுாலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்
நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி .
.28

இளம்பருதி நுாறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து
.29

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்
30

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த
கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி .
31

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ
32

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்
33

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்
34

ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ .
35

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் -சந்ததமும்
36

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ்
37

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து
38

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் .
39

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று .
40

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்
41

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய .
42

முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி .
43

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்து
44

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன்
விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்
45

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்
46

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியும் துாளாக
வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த்
47

தெள்ளு திரை கொழிக்கும் செந்துாரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம்
48

சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய
வீரனைத் துாதாக விடுத்தோனே - காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு .
49

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன்
50

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு .
51

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மோலோனே - மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம்
52

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு .
53

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து .
54

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்
கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் .
55

பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்
பூதமுந்தீீ நீரும் பொருபடையும் - தீது அகலா .
56

வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத்
57

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் .
58

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை
59

எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து
60

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று
61