Please Read....
சற்று பெரிது. சுருக்க முடியவில்லை. படியுங்கள். அருமை மட்டுமல்ல . மனதையும் நெகிழச்செய்யும்......
ஆசிரியை....கல்லூரி.மாணவர்.... உரையாடல்..
ஆசிரியை , ஒரு மாணவனைக் கூப்பிட்டு BOARD ல்
அவனுக்குப் பிடித்த 3O பேர்களின் பெயர் எழுதச்சொன்னார்.
அவனும் எழுதினான். குடும்பம், அப்பா, அம்மா, மகன்,மகள், மனைவி, நண்பர்கள், தோழர்கள்,
உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், போன்ற பெயர்களை.
அதில் மூன்று பேர்களை எடுத்துவிடச் சொன்னார்.
அவனும் எடுத்துவிட்டான்பக்கத்து வீட்டுக்காரர்கள் பெயரை.......
மீண்டும் சில எடுக்கச் சொன்னார் . அவனும் தோழர்கள் பெயரை எடுத்து விட்டான்....இப்படி ஆசிரியர் சொல்ல சொல்ல , எல்லா
பெயர்களும் எடுத்த பின் மீதம் இருந்தது அப்பா, அம்மா, மகன், மகள், மனைவி, தான்...
அதிலும் இரு பெயர்களை எடுக்கச் சொன்னார்.
மிகவும் வேதனையுடன் தன் அப்பா, அம்மா பெயர்களை எடுத்தான். இப்போ இருப்பது BOARD ல் மகனும், மகளும், மனைவியும் தான்..
மீண்டும் ஆசிரியர் இதில் ஒரு பெயரை எடுக்கச் சொன்னார்....
கல்லூரி வகுப்பறையே TENSION ஆகி விட்டது. அவன்
என்ன செய்யப்போகிறான் என்று. ஏன் என்றால் இருப்பதோ
மகன், மகள் மற்றும் மனைவிதான்......
மாணவனும் மிகவும் வருத்தப்பட்டு, மனம் கலங்கி
தன் மகன், மகள், பெயரை எடுத்து விட்டான்...
ஆசிரியை ஆடிப்போய் விட்டாள்....என்ன செய்கிறாய் நீ.. என்று...
அப்பா, அம்மா , பரவாயில்லை வயதானவர்கள். மகனோ, மகளோ, உன்னால் பிறந்தவர்கள் . .. அதையும் எடுத்துவிட்டு மனைவி பெயர் மட்டும் வைத்திருக்கிறாயே ஏன்.....என்று மனம் கலங்கி கேட்டாள்........அந்த மாணவன் சொன்னான்:::::::
அப்பா, அம்மா , சரி பெரியவர்கள். என் மகனோ ,வளர்ந்து,
திருமணம் செய்து கொண்டு மனைவியுடனும், குழந்தைகளுடனும், பிறகு தன் தொழிலைப்பார்த்துக் கொண்டும்
இருந்து விடுவான்.........அதனால் அதுவும் சரி...மகளும் திருமணம் ஆன பின் வேறு ஒருவருக்கு சொந்தம்.,.ஆனால்
என் மனைவி பெயர் எடுக்காத காரணம்.......
எனக்கு எல்லாமே அவள்தான். என் சகல வாழ்விலும் பங்கு கொள்கிறாள்....உறுதுணையாகவும் இருக்கிறாள்...நான் ஒருவனே
தெய்வம் என்று எண்ணுகிறாள்....அவள் வாழ்க்கையே
எனக்காகத்தானே.. ...................என்றான்....
மொத்த வகுப்பறையும் எழுந்து நின்று கை தட்டியது...
நண்பர்களே இது ........... கணவர்களுக்கும், ..........
மனைவிகளுக்கும்......... பொருந்தும்.......
நான் இப்பதிவினைப் போட்டு பரிகாரம் தேடிக்கொண்டேன்.
எனக்கே புல்லரித்தது........
No comments:
Post a Comment