Showing posts with label Law of attraction tamil. Show all posts
Showing posts with label Law of attraction tamil. Show all posts

Friday, June 17, 2016

பிரபஞ்சப் பாதையிலே....ஆழ்மனத் தொடர்பு

பிரபஞ்சப் பாதையிலே....ஆழ்மனத் தொடர்பு



நம்மில் பெரும்பாலோர், மேற்கத்திய பானியின் தாக்கத்தால் இன்று இந்நவீன உலகில் சிக்குண்டு இருக்கின்றோம். தெரிந்தோ தெரியாமலோ ஒருவகை
மனப்பாதிப்புக்கும், சில சமயம் உளைச்சலுக்கும் ஆளாகிறோம். சில சமயம் என்ன இது செக்கு மாட்டு வாழ்க்கை ? என்று நொந்துகொள்கிறோம். ஏன் ?


நமக்குப் பல கடமைகள். நம் பணி, நம் குடும்பம், நம் நண்பர்கள் வட்டம், நம் சமூகக்கடப்பாடு மற்றும் அரசியல் என்று தொடர்பு ஏற்படுத்தி
விரிவுபடுத்திக் கொண்டு இருக்கிறோம். சாதாரண பொழுது போக்குக் காரியங்களில் கூட நம் செயல்பாடும் சக்தியும் மிகுதியாகத் தேவைபடுகிறது.


ஏன் இந்நிலை ? ஏனெனில், நாம் அளவுக்கு அதிகமாக வெளிநோக்கிய விசயங்களில் மூழ்கியுள்ளோம். வெளிநோக்கிய பயணக் களைப்பை ஈடுசெய்ய உள்நோக்கியப் பயணம் (inner journey) தேவைப்படுகிறது.
உடனடி நிவாரணம் ஒன்று இருக்கிறது. நம் ஆதாரத்துடம் தொடர்பு கொண்டு உயர் உணர்வுகளின் சக்திகளைப் பெறுவதைத் தவிர வேறொன்றுமில்லை!
நம் ஒவ்வொருவரின் மனமும் மகத்தான சக்தி படைத்தது என்பதை மனோவியல் அறிஞர்கள் மற்றுமன்றி ஆன்மீக குருமார்களும் நிரூபித்து
வருகிறார்கள். 


வாழ்க்கைப் பாதையில் எல்லாமே மகிழ்ச்சி நிறைந்தவையாக இருப்பதில்லை! சில இடர்பாடுகளும் சோதனைகளும் இருக்கத்தான் செய்கிறது. பார்க்கின்ற கோணதில் அந்தந்த சமயத்தில் நம் மனநிலை எப்படி இருக்கிறதோ அவ்வாறே பிரதிபலிக்கின்றோம். 

சில சம்யங்களில் அளவுக்கு அதிகமாக வெளி விசயங்களில் சுழன்றுக் கொண்டிருப்பதால் ஆழ்மனத் தொடர்பு தடைபடுகிறது. தற்காலிகமாக பிரபஞ்சப் பேருணர்வின் தொடர்பிலிருந்து விடுபட்டுள்ளோம். ஆழ்மனதிற்கும்( subconscious mind ) பிரபஞ்ச மனதிற்கும் ( cosmic conscious mind ) உள்ள தொடர்பு, அது சம்பந்தமான அறிவு எல்லாம் நம் பள்ளிகளில் இன்னும் போதிக்கப்படவில்லை. வருங்காலங்களில் அவை முக்கியத்துவம் பெறலாம்! நமக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது.

ஆழ்மனதுடன் தொடர்பு கொள்வதற்கும் நமக்குப் பொறுமையும் நிதானமும் தேவைப்படுகிறது. உள் மன உயர் உணர்வுடன் கலக்க சிறிது காலம் நம்மையே சுய சோதனைக்கு ஆளாக்க வேண்டியுள்ளது.நமக்கும் புற சூழ்நிலையில் ஏற்படுகின்ற மாற்றஙகளையும் கூர்ந்து கவனிக்க விழிப்புணர்வும் அவசியம்.


ஆழ்மனதையும் பிரபஞ்ச அறிவையும் திறக்கும் நல்ல திறவுகொல் - தியானம் மட்டுமே! பிரார்த்தனை, தியானம், யோகம் இவையெல்லாம் பத்திரமான திறவுகோல்கள். இவற்றுடன் மனதைப்பற்றியும்,எண்ணங்களைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மிகுந்த பயிற்சியும்,பொறுமையும்,
ஆதரவும் தேவைப்படுகிறது. 


உண்மையிலேயே இது இயற்கையான ஒன்று. நம் சமூகத்தினர் "அர்ப்பணிப்பு"எனும் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தவகள். முயற்சிக்கு, வெற்றி - தோல்வி என்ற இரண்டு முடிவுகள் உண்டு. "அர்ப்பணிப்புக்கு" வெற்றி என்ற ஒரு முடிவுதான் இருக்க முடியும். அத்தகைய மனநிலை வாய்க்க, அல்லது பழக்கப்படுத்திக்கொள்ள விழைவது நன்மை பயக்கும். ஆழ்மனத் தொடர்பும், பிரபஞ்சத் தொடர்பும் கிட்ட வேண்டும் என்ற மனதைக் கடந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் காரியங்கள் ஆற்றும் போது,இயற்கை அந்தப் பிரபஞ்ச பேராற்றல் நமக்குப் பலனை வாரி வழங்கும்! அதன் பிறகு, அப்பேராற்றலோடு தொடர்ந்து பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் அவா கூடுவதை மெய்யாக உணரலாம். உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாமே பேசும். 

'நாம்தான் இந்தப் பிரபஞ்சம்; இப்பிரபஞ்சம்தான் நாம்' - அண்டத்திலுள்ளதே பிண்டம்; பிண்டத்திலுள்ளதே அண்டம்! என்பதைப் போல உயர் சிந்தனை-
உயர் எண்ன அலைகள் நம்மைச் சுழ்ந்திருக்கும்.


Monday, June 6, 2016

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

பத்து கட்டளைகள்:

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!

மனதையும் நெகிழச்செய்யும்...

Please   Read....

சற்று பெரிது.   சுருக்க முடியவில்லை.   படியுங்கள். அருமை மட்டுமல்ல .  மனதையும் நெகிழச்செய்யும்......

ஆசிரியை....கல்லூரி.மாணவர்....  உரையாடல்..
ஆசிரியை   ,  ஒரு மாணவனைக்   கூப்பிட்டு    BOARD  ல்   
அவனுக்குப் பிடித்த  3O   பேர்களின்     பெயர் எழுதச்சொன்னார்.

அவனும்   எழுதினான்.    குடும்பம், அப்பா,  அம்மா,  மகன்,மகள்,   மனைவி, நண்பர்கள்,   தோழர்கள்,  
உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள்,  போன்ற பெயர்களை.
அதில்  மூன்று   பேர்களை    எடுத்துவிடச் சொன்னார். 
அவனும் எடுத்துவிட்டான்பக்கத்து வீட்டுக்காரர்கள் பெயரை.......
மீண்டும்  சில எடுக்கச் சொன்னார் .  அவனும் தோழர்கள் பெயரை எடுத்து விட்டான்....இப்படி ஆசிரியர் சொல்ல சொல்ல  ,  எல்லா
பெயர்களும் எடுத்த பின் மீதம் இருந்தது அப்பா,  அம்மா,  மகன், மகள், மனைவி,    தான்...
அதிலும் இரு பெயர்களை எடுக்கச் சொன்னார்.   
மிகவும் வேதனையுடன் தன் அப்பா,  அம்மா  பெயர்களை எடுத்தான்.    இப்போ இருப்பது BOARD  ல்    மகனும், மகளும், மனைவியும் தான்..  
மீண்டும் ஆசிரியர் இதில்   ஒரு பெயரை எடுக்கச் சொன்னார்....
கல்லூரி வகுப்பறையே    TENSION   ஆகி விட்டது.   அவன்
என்ன செய்யப்போகிறான் என்று.  ஏன்    என்றால்    இருப்பதோ
மகன்,  மகள்    மற்றும்    மனைவிதான்......
மாணவனும் மிகவும் வருத்தப்பட்டு,  மனம் கலங்கி  
தன்   மகன்,  மகள்,    பெயரை எடுத்து விட்டான்...

ஆசிரியை ஆடிப்போய் விட்டாள்....என்ன செய்கிறாய் நீ.. என்று...
அப்பா,  அம்மா  , பரவாயில்லை  வயதானவர்கள்.  மகனோ,  மகளோ,    உன்னால் பிறந்தவர்கள்    .   ..  அதையும் எடுத்துவிட்டு மனைவி பெயர் மட்டும்  வைத்திருக்கிறாயே  ஏன்.....என்று    மனம் கலங்கி கேட்டாள்........அந்த மாணவன் சொன்னான்:::::::

அப்பா,  அம்மா    ,  சரி பெரியவர்கள்.      என் மகனோ ,வளர்ந்து, 
திருமணம் செய்து கொண்டு மனைவியுடனும்,  குழந்தைகளுடனும், பிறகு தன்  தொழிலைப்பார்த்துக் கொண்டும்
இருந்து விடுவான்.........அதனால் அதுவும் சரி...மகளும்  திருமணம் ஆன பின்   வேறு  ஒருவருக்கு  சொந்தம்.,.ஆனால்  
என் மனைவி பெயர் எடுக்காத காரணம்.......

எனக்கு எல்லாமே அவள்தான்.   என் சகல வாழ்விலும்    பங்கு கொள்கிறாள்....உறுதுணையாகவும்  இருக்கிறாள்...நான் ஒருவனே
தெய்வம்  என்று  எண்ணுகிறாள்....அவள் வாழ்க்கையே
எனக்காகத்தானே..  ...................என்றான்....

மொத்த வகுப்பறையும் எழுந்து நின்று      கை   தட்டியது...

நண்பர்களே இது   ........... கணவர்களுக்கும்,   ..........
மனைவிகளுக்கும்......... பொருந்தும்.......

நான் இப்பதிவினைப்   போட்டு     பரிகாரம் தேடிக்கொண்டேன்.

எனக்கே புல்லரித்தது........

Wednesday, March 9, 2016

நிரந்தர பண வரவை தரும் லவங்கப்பட்டை


பண பற்றாகுறை எப்போதும் இருந்து கொண்டே இருப்பவர்கள், வியாபாரத்தில் ஏற்ற இறக்கம் எப்பொதும் இருந்து கொண்டே இருக்கும் நிலையில் உள்ளோர் மற்றும் வறுமை நிலையில் உள்ளோர்கள் :
மிக சிறிய அளவில் சிகப்பு துணி (முடிந்தவர்கள் பட்டு துணி உபயோகப்படுத்தலாம், பயன் விரைவில் வரும்) 2 எடுத்து கொண்டு அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு லவங்க பட்டைகளை வைத்து மடித்து வீட்டின் வாசற்கதவின் மேல் பக்கம் ஒன்றும் அதே போல் வீட்டின் உள் பக்கம் ஒன்றும் கட்டி வைக்கவும். இதை செவ்வாய் கிழமை மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மணியளவில் செய்ய பலன் கூடும்.மாதம் ஒரு முறை துணியை துவைத்து வேறு லவங்க பட்ட வைத்து கட்டிவிடவும். நிரந்தர பண வரவை ஏற்படுத்தும் முறை இது.