Showing posts with label soft skills trainer in chennai. Show all posts
Showing posts with label soft skills trainer in chennai. Show all posts

Saturday, August 1, 2015

அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்!

அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்!


அ-
+
Temple images

அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது இவற்றை விட முக்கியமானது, தானமளிப்பதும், முன்னோர் கடன்களைச் செய்வதும்தான். இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.
தூவுங்க சாணம்! சூடுங்க மாலை: சித்திரையில் வரும் அட்சயதிரிதியை, புரட்டாசியில் வரும் விஜயதசமி ஆகிய இருநாட்களிலும் பாவ கிரகங்களின் ஆதிக்கமே கிடையாது. இந்த நாட்கள் சுபம் நடத்துவதற்கேற்ற முகூர்த்தநாட்கள். எந்த சுபவிஷயத்தையும் இந்நாளில் தொடங்கலாம். கன்னிப்பெண்கள் இந்தநாளில் நல்லகணவர் அமைய வேண்டி எருவை(காய்ந்த மாட்டுச்சாணம்) சந்திரனை நோக்கி தூவி மூன்றாம்பிறையை தரிசிக்க வேண்டும்.  வழிபாட்டை முடித்ததும், சிவன்கோயிலில் இருக்கும் அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வணங்க வேண்டும்.
பிற மாநிலங்களில் அட்சய திரிதியை: ஒடிசாவில் அட்சயதிரிதியை அன்று நிலத்தை உழுது விவசாயப்பணியை தொடங்குகின்றனர். பூரி ஜெகந்நாதர்  கோயிலில் அட்சயதிரிதியை ரதயாத்திரை சிறப்பாக நடக்கும். வங்காளத்தில் வியாபாரிகள் காலத்தில் புதுக்கணக்குகளை இந்த நாளிலேயே தொடங்கி வந்தனர் (தற்போது லட்சுமி பூஜை மட்டும் செய்கின்றனர்) மத்தியபிரதேசம், உஜ்ஜயினியில் இந்நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்து மதம் மட்டுமில்லாமல், சமண (ஜெயின்) மதத்தினரும் இந்நாளில் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவரை வணங்கி  தானம் செய்கின்றனர்.
அட்சயதிருதியை நன்னாளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சுவர்ண கவுரி விரதம் அனுஷ்டிக்கின்றனர். இந்த நாளில் கவுரி எனப்படும் பார்வதி தேவி தன் பிறந்த வீட்டிற்கு வருவதாகவும் அடுத்த நாள் விநாயகர் வருவதாகவும் ஐதிகம். அன்றைய தினம் குழந்தை பேறு, சுமங்கலி பாக்யம் உடல்நலம் ஆகியவற்றின் பொருட்டு சுமங்கலிப் பெண்கள் பல வகை தான தர்மங்கள் செய்கின்றனர். அட்சயத் திருதியை அன்று மஹா லக்ஷ்மியை தரிசிப்பதும் வழிபடுவதும் மிகவும் விசேஷமாகும். கேரளா மாநிலம் அடுவாச்சேரி என்ற இடத்தில் வாசுதேவ புரம், மஹா விஷ்ணு கோயிலில் அருள்பாலிக்கும் மஹாலக்ஷ்மியை அட்சய திருதியை முதல் தொடர்ந்து எட்டு நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும் மற்ற நாட்களில் இந்த தேவி மஹா விஷ்ணுவுக்கு பணிவிடை செய்வதாக ஐதீகம்.
புத்தமதத்தில் குபேரன்: சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் குபேரனை சிரிக்கும் சிருஷ்டியாக வணங்குகின்றனர். குள்ளமான, கள்ளமில்லாத, சிரித்த முகமாக கனத்த தொப்பையும், கையில் கலசமும், பொன்மூட்டை, ஆபரணங்கள் என ஸ்வர்ண நிறமாக பல்வேறு அமைப்புகளில் ஆராதிக்கின்றனர். மதங்கள் மாறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். புத்தமதத்திலும் குபேர வழிபாடு இருப்பதால், சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர்.
அத்தனை பேருக்கும் படியளப்பவள்: உலக உயிர்களுக்கு படியளிக்கும் அம்பிகை அன்னபூரணியாக  விளங்குகிறாள். அன்னபூரணி தன்னுடைய பாத்திரத்திலிந்து உலகிற்கு அன்னம் வழங்கிய நாள்  என்பதால், தயிர்ச்சாதம் தானம் செய்வது புண்ணியமானது ஆகும். அவள் வைத்திருக்கும் அன்னபாத்திரம் அள்ள அள்ளக் குறையாது. இந்நாளில் செய்யும் தானம், தர்மம், யாகம் இவற்றுக்கு மிகுந்த புண்ணியம் உண்டு. அன்னதானம் அளித்தல், கோடையின்  வெப்பம் தணிக்க தண்ணீர் பந்தல், நீர்மோர், பானகம் கொடுத்தல், குடை, காலணி வழங்குதல் ஆகியவையும் தானதர்மத்தில் அடங்கும்.
அட்சய திரிதியை சுபநிகழ்ச்சிகள்: புதுவீடு குடியேறுதல்,  வியாபாரம் தொடங்குதல், கல்வி,கலை பயில ஆரம்பித்தல் போன்ற சுபநிகழ்ச்சிகள்  செய்வதும் அட்சயதிரிதியையில் மேற்கொள்வது சிறப்பு. அட்சய திரிதியை நாளுக்கு எந்த கிரக தோஷமும் கிடையாது. எனவே, இந்த நாள் அக்னி நட்சத்திர காலத்தில்  வந்தாலும் கூட, சுபநிகழ்ச்சிகளை தடையின்றி செய்யலாம்
லட்சுமி காசு வாங்குவோமா!
வைகுண்ட வாசனான விஷ்ணுவை மகாலட்சுமி தங்கக்காசுகளால் பூஜிக்கும் நாள் அட்சயதிரிதியை. இந்நாளில் லட்சுமி படம் பொறித்த தங்க காசுகளை வாங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும். பெருமாள் கோயிலில் தாயார் சந்நிதியில் நெய் தீபமேற்றி வழிபட வாழ்வு சிறக்கும்.
பரசுராமர்  பிறந்தநாள்: பரசுராமர் பிறந்த நாள் தந்தை சொல்லே மந்திரம் என்று வாழ்ந்து காட்டிய பரசுராமர் அவதரித்த நன்னாள், பலராமர் தோன்றிய பொன்னாள் அட்சய திருதியையே!
மூன்றாம் நிலவே!
அமாவாசையில் இருந்து மூன்றாம்நாள் வரும் திதி திரிதியை. இவற்றில் மிக உயர்ந்தது அட்சய திரிதியை. மூன்றாம் பிறை பார்த்தால் செல்வவளம் பெருகும். மூன்றாம் பிறை என்றால் என்ன தெரியுமா?  சந்திரனுக்கு தட்சன் தன் 27 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களில் ரோகிணி, கார்த்திகை ஆகிய மனைவிகள் மீது மட்டும் அதிக பாசம் கொண்டார். இதனால், மனம் வருந்திய மற்ற மனைவிகள் தங்கள் தந்தையிடம் புகார் செய்தனர். நீ அழகாய் இருப்பதால் தானே ஆட்டம் போடுகிறாய். உன் முகப் பிரகாசம் மறையட்டும், என்று சாபமிட்டார். இதையறிந்த ரோகிணியும், கார்த்திகையும் தட்சனிடம் சென்று அவரது சாபத்தை திரும்பப்பெற வலியுறுத்தினர். தட்சனுக்கு அப்போது தவவலிமை குறைந்திருந்ததால் அவனால் சாபத்தை திரும்பப் பெற முடியவில்லை. உடனே அந்தப் பெண்கள் சிவனை நினைத்து கடும் தவத்தில் ஈடுபட்டனர். மகிழ்ந்த சிவன் அவர்களுக்கு காட்சியளித்தார். சந்திரனை தன் சிரசில் மூன்றாம் பிறையாக அமரும் பாக்கியத்தை அருளினார்.  திரிதியை அன்று சந்திரப்பிறையை வணங்கினால், சிவனின் சிரசையே நேரில் கண்டதாக அர்த்தம். இதைப் பார்ப்பவர்கள் சகல செல்வமும் கிடைக்கும். - www.happy4all.org 

Thursday, July 16, 2015

நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?"

" The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?). 

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்
கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள். 

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே. 

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுதம் முட்டாளாய் இருக்க நேரிடும். 

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம். 

11. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள். 

16. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள். 

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள். 

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும். 

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்கள

Friday, July 10, 2015

பாம்பன் சுவாமிகள் அருளிய துவிதநாக பந்தம்.

பாம்பன் சுவாமிகள் அருளிய துவிதநாக பந்தம்.
(share) செய்யுங்கள்)
நாம் காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும்.
துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும். இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.
நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
அதற்கு பொருள் செலவு அதிகம். செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.
வசதி படைத்தவரகள் வெள்ளியில் நாகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.
அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று.
அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம்.
அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று கண்டிப்பாக உடலுறவு கூடாது.
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
Mantric   மாந்திரீகம்'s photo.

Wednesday, July 1, 2015

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்று நிறைய பேர் புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். ஏதோ உலகத்திலேயே பெரிய கஷ்டம் அவர்களுக்கத்தான் வந்தது போல் இருக்கும் அவர்கள் போடும்பீடிகையைப்பார்க்கும் போது. விசாரித்தால் சக்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும். அல்லது அவர்கள் பையன் முதல் மதிப்பெண் வாங்கத்தவறியிருப்பான். அல்லது பெண்ணுக்கு வந்த சில வரன்கள் கிட்டே வந்து தப்பி போயிருக்கும். இதற்கு இவ்வளவு கூப்பாடு தேவையா?
சொந்தக்காரர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?' என்று புலம்பித் தீர்ப்பார்கள். சின்ன பிரச்சினைகளை பூதக்கண்ணாடி வைத்து பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது அல்லவா?
இவர்களுக்கே எத்தனையோ முறை பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கலாம். சில அதிர்ஷ்டங்கள் அடித்திருக்கலாம். அதையெல்லாம் 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நல்லது நடக்கிறது' என்று சொல்லவே மாட்டார்கள். நல்ல விஷயங்கள் மறக்கப்படுவதும், மறைக்கப்படுவதும், கெட்ட விஷயங்கள் பிரபலப்படுத்தப்படுவதும் இப்பொழுது சகஜமாகிப் போய் விட்டன.
கஷ்டங்கள், பிரச்சினைகள்,தோல்விகள் அவமானங்கள் இல்லாத வாழ்க்கை எங்கே இருக்கிறது? எப்பொழுதுமே நல்லதே நடந்தால் வாழ்க்கை 'போர்' அடித்து விடும் அல்லவா? துன்பங்கள் வரும்போது துவண்டு விடாதீர்கள். அதையும் வேண்டப்பட்ட விருந்தாளி போல் வாழ்க்கையில் வந்து செல்ல அனுமதியுங்கள். துன்பங்களும், தோல்விகளும் வாழ்க்கையின் அங்கங்களே என்பதனை உணர்ந்தால் நல்லது என்றே நினைக்கிறேன். தோல்விகளிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் செய்த தவறுகளை கண்டுபிடித்து திருத்திக்கொள்ளுங்கள். வாழ்க்கை வசந்தமாகும்.
வாழ்க வளமுடன்!


Tuesday, June 23, 2015

சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன?

சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன? - www.v4all.org
``காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்‘‘- என்கிறார் சேக்கிழார்.
திருமந்திரத்திலும் சிவலிங்கத் தத்துவம் குறித்து பல்வேறு கருத்துகள் உரைக்கப்பட்டுள்ளன.
தத்துவம்
கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது.
பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
பிருகு முனிவரின் சாபத்தால் சிவலிங்க வழிபாடு ஏற்பட்டதாக புராணங்கள் சிலவற்றில் சொல்லப்படுவதும் இடைச்செருகலே என்பது ஞானிகளின் கருத்தாக உள்ளது. தட்சிணாமூர்த்தியாய் உள்ள கால காலனை சபிக்கக்கூடிய ஆற்றல் எந்த முனிவருக்குத் தான் இருந்து விட முடியும்?
லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.
தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது.
லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.
இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம்.
இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது.


சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன?

சிவலிங்கத் தோற்றத்தின் தத்துவம் என்ன? - www.v4all.org
``காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்‘‘- என்கிறார் சேக்கிழார்.
திருமந்திரத்திலும் சிவலிங்கத் தத்துவம் குறித்து பல்வேறு கருத்துகள் உரைக்கப்பட்டுள்ளன.
தத்துவம்
கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும் இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறது.
பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய், ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
பிருகு முனிவரின் சாபத்தால் சிவலிங்க வழிபாடு ஏற்பட்டதாக புராணங்கள் சிலவற்றில் சொல்லப்படுவதும் இடைச்செருகலே என்பது ஞானிகளின் கருத்தாக உள்ளது. தட்சிணாமூர்த்தியாய் உள்ள கால காலனை சபிக்கக்கூடிய ஆற்றல் எந்த முனிவருக்குத் தான் இருந்து விட முடியும்?
லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள் அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.
தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது.
லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும், ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.
இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும் அடங்கியிருப்பதை உணர்கிறோம்.
இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம். சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும் ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது.


Saturday, June 20, 2015

கலிலியோ

பெரும்பாலான மனிதர்கள் காலத்தோடு ஒத்துப் போகிறார்கள். எல்லோரையும் போல சிந்திப்பது, செயல்படுவது, எல்லோரும் எப்படி வாழ்கிறார்களோ அப்படியே வாழ்வது என்று இருந்து விடுகிறார்கள். அவர்கள் வித்தியாசமாக சிந்தித்து, செயல்பட்டு, வாழ்ந்து சமூகத்தை பயமுறுத்துவதில்லை. சமூகத்தை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவதில்லை. ஆனால் எல்லோராலும் அப்படி இருக்க முடிவதில்லை. சிலர் விதிவிலக்குகளாக இருந்து தனிக்குரல் எழுப்புகிறார்கள். அந்தத் தனிக்குரல் சமூகத்தின் காதுகளில் நாராசமாக ஒலிக்கிறது. அந்தத் தனிக்குரலை ஒடுக்க சமூகம் பாடுபட ஆரம்பித்து, பெரும்பாலான சமயங்களில் வெற்றியும் பெற்று விடுகிறது. ஆனாலும் அந்த தனிக்குரல் பல நூற்றாண்டுகள் கழித்தும் ஒலிப்பதுண்டு. அந்தக் குரலுக்கு பிற்கால சமூகம் செவி சாய்ப்பதுண்டு. அப்போது அந்தத் தனிக்குரல் சரித்திரம் படைக்கிறது. மனித குலத்தின் மகத்தான அத்தனை முன்னேற்றங்களுக்கும் இது போன்ற தனிக்குரல்களே மூல காரணமாக இருந்திருக்கின்றன.
பதினாறாம் நூற்றாண்டில் இத்தாலியில் ஒலித்த அப்படிப்பட்ட ஒரு தனிக்குரல் கலிலியோ கலிலி(Galileo Galilei) என்ற அறிஞருடையது. கி.பி 1564 ஆம் ஆண்டு பிறந்த கலிலியோ எதையும் மிக நுணுக்கமாக கவனிப்பவராக விளங்கினார். கிறித்துவக் கோயிலுக்கு அவர் சென்றிருந்த ஒரு சமயத்தில் தொங்கு விளக்கு ஒன்று காற்றால் ஆடிக் கொண்டு இருந்தது. காற்று வேகமாக வீசுகையில் விளக்கு வேகமாகவும், வேகம் குறைவாக வீசும் போது விளக்கு குறைவான வேகத்துடனும் ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டே இருந்த கலிலியோவுக்கு அதில் மாறாத ஒரு விஷயம் இருப்பது கவனத்தைக் கவர்ந்தது.
தன் நாடியைப் பிடித்து அந்த விளக்கின் அசைவுகளை கலிலியோ ஆராய்ந்தார். வேகமாக அசையும் போதும் சரி, நிதானமாக அசையும் போதும் சரி அந்த விளக்கு ஒவ்வொரு முறையும் போய் திரும்பி வர ஒரே கால அவகாசத்தை எடுத்துக் கொண்டது அவருக்கு வியப்பை அளித்தது. அந்தக் கண்டுபிடிப்பு ஊசல் விதியாக எடுத்துக் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் கடிகாரங்களை உருவாக்க உதவியது. அவர் அந்த ஊசல் விதி கண்டு பிடித்த போது அவருக்கு வயது இருபது.
அரிஸ்டாட்டில் சொன்ன விதி ஒன்று யாராலும் கலிலியோவின் காலம் வரை சரியா என்று ஆராயப்படாமலேயே இருந்தது. அது ‘எடை கூடிய பொருள்கள் எடை குறைந்த பொருள்களை விட வேகமாய் கீழே விழக் கூடியவை’ என்பது தான். கலிலியோவிற்கு அது சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை. எனவே அவர் பல வித எடைகளில் இரும்புக் குண்டுகளை எடுத்துக் கொண்டு பைசா கோபுரத்தின் மேலே சென்று ஒவ்வொன்றையும் கீழே போட்டுப் பார்த்தார். எல்லாம் கீழே விழ ஒரே நேரத்தை எடுத்துக் கொண்டன. இதன் மூலம் அது வரை நம்பப்பட்டு வந்த அரிஸ்டாட்டிலின் அந்த குறிப்பிட்ட விதி தவறென்று கலிலியோ நிரூபித்துக் காட்டினார்.
கலிலியோ பல்கலைக் கழகப் படிப்பை நிறைவு செய்யவில்லை. காரணம் அவருக்கு கல்வியில் கணிதம் தவிர வேறெந்த துறையிலும் ஈடுபாடு இருக்கவில்லை. அவருடைய காலத்தில் ஒற்றர் கண்ணாடி (spy glass) என்றழைக்கப்பட்ட ஒரு விதக் கண்ணாடி வெகு தொலைவில் இருப்பதையும் அருகில் இருப்பதாகக் காட்ட வல்லது என்றும் அதை ஒரு டச்சு கண்ணாடித் தயாரிப்பாளர் செய்திருக்கிறார் என்றும் கலிலியோ கேள்விப்பட்டார். அதுவரை அந்தக் கண்ணாடியைக் கண்டிராத அவர் அந்த சாத்தியக் கூறால் கவரப்பட்டு கேள்விப்பட்ட சில விஷயங்களையும் தன் உள்ளுணர்வுகளையும் வைத்து அது போன்ற ஒரு கண்ணாடியை உருவாக்கினார். அதன் சக்தியை அதிகரித்துக் கொண்டே போய் மிக சக்தி வாய்ந்த கண்ணாடியை உருவாக்கினார். அது தான் பிற்காலத்தில் டெலஸ்கோப் என்று அழைக்கப்பட்டது.
அதை வெனிஸ் நகர செனெட்டில் கொண்டு போய் கலிலியோ காட்டினார். அது செனெட்டின் பேராதரவைப் பெற்றது. அவருடைய புகழ் நாடெங்கும் பரவியது. அதோடு அவர் நிறுத்தியிருந்தால் அவர் புகழோடும், செல்வத்தோடும் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அவர் பெயர் சரித்திரத்தில் சிறிதாகத் தான் எழுதப்பட்டிருக்கும். அவர் தன் அறிவியல் ஆராய்ச்சியின் அடுத்த கட்டங்களுக்குச் சென்றார். அது அவருடைய பிரச்னைகளுக்கு அஸ்திவாரம் போட்டது.
அந்த டெலஸ்கோப்பால் சந்திரனைப் பார்த்தார். சந்திரன் மிக அழகாக சமதளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அதில் பாறைகளும், மலைகளும், மேடு பள்ளங்களும் இருப்பது வியப்பாய் இருந்தது. தன் டெலெஸ்கோப்பின் சக்தியை மேலும் பன்மடங்கு கூட்டி ஜனவரி 7, 1610 அன்று அந்த டெலஸ்கோப்பை ஜூபிடர் கிரகம் பக்கம் திருப்பினார். ஜூபிடர் கிரகம் அருகில் மூன்று நட்சத்திரங்கள் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். சிறிது நேரம் கழித்துப் பார்க்கையில் அந்த நட்சத்திரங்கள் இடம் மாறி அதே போல் நேர்கோட்டில் இருப்பதைக் கண்டார். அப்போது தான் அவை ஜூபிடரின் உபகிரகங்கள் என்றும் அவை ஜூபிடரைச் சுற்றி சுழன்று கொண்டு இருக்கின்றன என்றும் அவர் முடிவுக்கு வந்தார். அந்த சித்தாந்தத்தை மேலும் சிந்தித்துப் பார்த்த போது கோபர்நிகஸ் பூமியைப் பற்றி சொன்னது உண்மை என்ற முடிவுக்கு வந்தார். கோபர்நிகஸ் பூமியைச் சுற்றி சூரியன் சுழல்வதில்லை., சூரியனைச் சுற்றியே பூமி சுழல்கிறது என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருந்தார்.
கலிலியோ கோபர்நிகஸ் சொன்னது சரியே, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று கூறியதுடன் அந்த கண்டுபிடிப்புகளை ஒரு புத்தகமாக கிபி 1610ல் வெளியிட்டது அவருக்கு வினையாயிற்று. கி.பி.1600ல் கியார்டானோ ப்ரூனோ (Giordano Bruno)என்ற நபர் இதை நம்பியதற்கும், பூமியைப் போல் பல்லாயிரக் கணக்கான கோள்கள் பிரபஞ்சத்தில் உள்ளன என்று சொன்னதற்கும் உயிரோடு எரிக்கப்பட்டிருந்தார். பைபிளில் சொல்லி இருப்பதற்கு எதிர்மாறாக அவன் சொல்வதாகக் காரணம் சொல்லி அவனை எரித்தவர்கள் கலிலியோவையும் விடவில்லை. அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இனி கோபர்நிகஸ் சொன்னதை பிரபலப்படுத்தக் கூடாது என்று சொல்லி அவரை விடுதலை செய்தார்கள்.
கலிலியோ தன் ஆய்வுகளைத் தொடர்ந்தார். அவர் மேலும் கண்ட உண்மைகள் அவரை சும்மா இருக்க விடவில்லை. தன் ஆய்வுகளை “Dialogue” புத்தகத்தில் மூன்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பேசிக் கொள்வது போல எழுதினார். ஒரு கதாபாத்திரம் இவரது கருத்துகளை அறிவுபூர்வமாகப் பேசுவது போலவும், ஒரு கதாபாத்திரம் முட்டாள்தனமாக எதிர்ப்பது போலவும், இன்னொரு கதாபாத்திரம் திறந்த மனதுடன் அவற்றை பரிசீலிப்பது போலவும் எழுதினார். உடனடியாக அந்த நூலைத் தடை செய்து, அவரைக் கைது செய்து அவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
தனியே ஒரு குரல்!!!
68 வயதாகி இருந்த கலிலியோவிற்கு கண்பார்வையும் மங்க ஆரம்பித்திருந்தது. அவர் நோய்வாய்ப்பட்டும் இருந்தார். இந்த நிலையில் அவரை சித்திரவதைப் படுத்துவோம் என்று அதிகாரவர்க்கம் அச்சுறுத்தவே தான் சொன்னது எல்லாம் தவறென்று கலிலியோ பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். பூமி அசையாமல் இருந்த இடத்தில் இருக்க சூரியனே அதைச் சுற்றி வருகிறது என்று பூமியைப் பற்றிச் சத்தமாகச் சொன்ன அந்த நேரத்தில், கடைசியில் “ஆனாலும் அது நகர்கிறது” என்று முணுமுணுத்ததாக சிலர் சொல்வதுண்டு. வீட்டு சிறையிலேயே தன் மீதமுள்ள வாழ்நாளைக் கழிக்க வேண்டி வந்த கலிலியோ இந்த வானவியல் ஆராய்ச்சிகளை விட்டு மற்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தன்னை மரணம் வரை ஈடுபடுத்திக் கொண்டார்.
கோபர்நிகஸின் கண்டுபிடிப்பு சரியே என்பது பிற்காலத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டதால் 1822 ஆம் ஆண்டு அவருடைய “Dialogue” நூலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. பின்னர் சில நூற்றாணடுகள் கழித்து வாடிகன் 1992 ஆம் ஆண்டு பகிரங்கமாக கலிலியோ குற்றமற்றவர் என்றும், அவரை விசாரித்து சிறைப்படுத்தியது தவறு என்றும் ஒத்துக் கொண்டது.
சில நேரங்களில் உண்மை என்று உணர்வதை வெளியே சொல்லும் போது அது அக்கால கட்டத்தில் இருப்போரின் அந்த சூழ்நிலைக்கு ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனாலும் உண்மை அப்படி தனியாகவே ஒரு குரலில் ஒலித்தாலும், பிற்காலத்தில் அந்த தனிக்குரல் உண்மையென்று அனைவரும் உணரும் நிலை வருவது நிச்சயம்.
எனவே சில நேரங்களில் தனிக்குரலாக உங்கள் கருத்து ஒலிப்பதில் வெட்கம் கொள்ளாதீர்கள். அக்குரல் உங்களை வரலாற்றுப் பக்கங்களில் பதிய வைக்கும் குரலாகக் கூட இருக்கலாம்.
urs
www.v4all.org

Friday, June 19, 2015

தீர்மானமான முடிவெடுக்க மாத்தியோசியுங்கள்

மனப் பயிற்சி என்னும்போது, வேலையில் திறமை என்பதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும்.  நீங்கள் எவ்வளவு கடுமையாக வேலை செய்தபோதும் சிலசமயங்களில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது என்று நினைப்பதுண்டு. இவ்வாறு சிந்திப்பவர்கள் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி, அதன் காரணமாகஅவர்களின் வேலையில் திறமை என்பது மிகவும் குறைந்து விடுகிறது.
இத்தகைய மனிதரால் கவலையின்றி உட்கார்ந்து வாழ்க்கையை அனுபவிப்பது எப்படிஎன்று தெரியாது.  ஒரு கோடைக்கால விடுமுறைக்கும் போக மாட்டார்.  உலகின் பலபகுதிகளில் இது ஏற்றுக் கொள்ளப்படலாம்.  விடுமுறைகளில் கூட வேலைபார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.  ஒரு நாள் விடுமுறை எடுத்தால், வேறு யாராவது அந்த வேலையைச் செய்ய நேரிடும்.  அது சரி அல்ல என்று நினைக்கிறார்கள்.  இத்தகைய மனப்பான்மை உடையவர்கள் விடுமுறையே எடுக்காமல் இருப்பது வியப்பைத் தராது. மற்றவர்களைப் பார்த்து விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.  ஆனால் அவர்களால் மட்டும் முடியவே முடியாது என்று நினைப்பார்கள்.  மெல்ல மெல்ல இத்தகைய உணர்வு அவர்கள் மனதைக் குடைந்து ஒருவிதமான சுய தண்டனையாகமாறிவிடும்.  மற்றவர் வேலைகளை செய்யத் தயாராக இருக்கும் இத்தகையமனிதர்கள் தங்களுடைய வேலையில் திறமை குறைந்தவர்களாக ஆகிவிடுவார்கள்.
இந்தச் சூழ்நிலையில் நீங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு போனால், என்ன ஆகும்என்பதை நினைத்துப் பாருங்கள்.  மூன்று நாட்கள் விடுமுறை என்பதே அதிகபட்சம்என்று நினைக்கும் நிறுவனங்களில் இதைவிட அதிகமாக விடுமுறைஎடுத்துக்கொண்டால், அது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று தெரிந்தும், ஒரு முழு வாரம் போய்வர நினைக்கிறார்கள்.  உண்மையிலேயே ஒரு வாரம்போய்விட்டால் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலை மலைபோல் குவியும். அதன் விளைவாக உங்களுடைய சக ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்ற எண்ணம் தான் முதலில் உங்கள் மனதில் உதிக்கும்.
அடுத்து மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நீங்கள் விடுமுறையில் போகாமல் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.