Monday, September 29, 2014

History of Google - கூகிள் உருவான கதை மற்றும் வரலாறு

History of Google - கூகிள் உருவான கதை மற்றும் வரலாறு

Google.png

தொடக்கம் : மென்லோ பார்க்,கலிபோர்னியா

தொடங்கிய ஆண்டு : செப்டம்பர் 7 1998

தலைமையகம் : மவுன்டன் வியூ,கலிபோர்னியா,ஐக்கிய அமெரிக்கா

டைரக்டர் எரிக் ஷ்மித் ( Eric Schmidt- CEO ) 


தொழில்நுட்ப தலைவர் : சேர்ஜி பிரின் ( Sergey Brin )  மற்றும் லாரி பேஜ் ( Larry Page ) 

 

தொழில்துறை : இணையம் ( Internet),மென்பொருள் ( Software Products) 


Google கூகிள் வரலாறு : 


கூகிள் 1996ம் வருடம் சனவரி மாதம், லாரி பேஜ் (Larry Page) மற்றும் அவரது சக மாணவரான சேர்ஜி பிரின் ( Sergey Brin ) என்பவரும் தங்கள் Ph.D. பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தினால் (Stanford University) வழங்கப்பட்ட ஆராய்ச்சிக்கான தலைப்பின் (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு முடிவில் தோன்றியதாகும். 
ஆரம்பத்தில் லாரி பேஜின் மட்டுமே இதில் இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜி பிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய Search Engine -கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். 
இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி Search Engine -ல் தேடப்படும்Information எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து Search Results பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இந்த முறையே சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைபெயராக பாக்ரப்("BackRub") என்ற பெயரை சூட்டியிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல (backlinks) இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறு அர்த்தத்தில் குறிப்பிடனர். 
 இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பத்ற்கு அந்த காலகட்டத்தில் சிறிய சர்ச் என்ஜின் ராங்டெக்ஸ்(RankDex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்களக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு கூகிள் தோன்றவும் அடிகோலினர். 
ஆரம்பத்தில் ஸ்ரான்போர்ட் பல்கலைக்கழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்காக google.stanford.edu என்ற பெயர் பாவிக்கப்பட்ட போதிலும் பின்னர் கூகிள்.கொம்(google.com) என 1997ம் ஆண்டு செப்ரம்பர் 15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998 செப்ரம்பர் 15ம் நாள் கூகிள் தனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.
 1998 செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் Car Shed- ல் கூகிள் வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர்.
கூகோல் என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது Silicon Valley பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை. எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு ( Typo Error )  செய்தபோது பிறந்ததே "கூகிள்" என்ற புதிய சொல். 
கூகிள் தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. 
ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பமானதுGoto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். Goto.com என்ற இதன் பெயர் (Overture Services)ஆகவும் பின்நாளில் YAHOO! இனால் கொள்முதல் செய்யப்பட்டு Yahoo! Search Marketing ஆயிற்று. கூகிளுடன் போட்டி ஆகி இருந்த பல நிறுவனங்களும் தோற்று விட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக வெற்றியீட்டி வருகிறது.
ஆரம்பத்தில் "கூகோல்" (googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்" என்பது மிக பிரபலம் ஆயிற்று.

urs Happily 
Dr.Star Anand ram
www.v4all.org

Sunday, September 28, 2014

ஆகாது-முடியாது-நடக்காது !!!

ஆகாது-முடியாது-நடக்காது !!!
.
.
நீராவிப் படகை(Steam Boat) கண்டு பிடித்த ராபர்ட் புல்டன் (Robert Fulton) முதன் முதலில் அதைப் பொது மக்கள் மத்தியில் செயல்படுத்திக் காட்ட முயன்ற போது அது உடனடியாகக் கிளம்பவில்லை. ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் “இதெல்லாம் ஸ்டார்ட் ஆகாது. இந்தப் புதிய வகைப் படகு வேலை செய்யக் கூடியதல்ல. வேண்டுமானால் பாருங்களேன்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அவர்கள் சொன்னது போல அது கிளம்ப நேரம் ஆகியது. நேரம் ஆக ஆக முடியாது என்று சொல்பவர்கள்எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது.
.
திடீரென்று படகு பெரும் சத்தத்துடன் கிளம்பியது. அதைக் கண்டு ஓரிரு நிமிடங்கள் வாயடைத்து நின்றவர்கள் பின்பு சொல்ல ஆரம்பித்தார்கள். “ஏதோ கிளம்பி விட்டது. ஆனாலிதை நிறுத்த முடியாது. வேண்டுமானால் பாருங்கள்”
.
இப்படிப்பட்ட விமரிசகர்கள், ஆகாது-முடியாது-நடக்காது என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டிருப்பவர்கள் உலகில் என்றும் எங்கும் அதிகமாகவே இருக்கத் தான் செய்கிறார்கள். ஒரு வேளை யாராவது நடத்திக் காட்டி விட்டாலும் ‘இதெல்லாம் ரொம்ப நாளைக்கு நடக்காது” என்றோ, செய்து காட்டியதில் உள்ள சின்னச் சின்ன குறைகளைத் தேடிப்பிடித்து சுட்டிக்காட்டியோ திருப்திப்படும் NEGATIVE மனிதர்கள் இவர்கள்.
.
# தங்கள் பாதையில் அளவு கடந்த நம்பிக்கையும், சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உடையவர்கள் மட்டும் இது போன்றவர்களின் கருத்துகளால் பெரிதும் பாதிக்கப்படுவதில்லை


urs Happily 
Dr.Star Anand ram
www.v4all.org 

Friday, September 26, 2014

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது.
ஏன் தெரியுமா?
புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.
இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.
அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.
துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

உலகசாதனை புத்தகம் உருவான கதை தெரியுமா?

உலகசாதனை புத்தகம் உருவான கதை தெரியுமா?




1951ம் வருடம் ஒரு நாள் மாலைப்பொழுது, அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘கின்னஸ் வாட் சாலைஎன்ற அமைப்பிற்கு நிர்வாக இயக்குநராக இருந்தவர் ‘சர்க்யூ பீவர்’. இவர் வேட்டையாடுவதற்காக ஒரு நதிக் கரையோரம் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆகாயத்தில் ஒரு நீண்ட கோடு போல ஏராளமான பறவைகள் பறந்து சென்று கொண்டிருந்தன. அவர், உடனே அவற்றை சுட எண்ணி, குனிந்து தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தார்.
எடுத்து நிமிர்ந்தவர் அந்தப் பறவைக்கூட்டம் கண்ணுக்கே தெரியாத தொலைவுக்குச் சென்று விட்டதை அறிந்தார். வியப்பில் உறைந்து போனார். என்ன ஒரு வேகம்! ‘கோல்டன் பிளவர்’ என்ற பறவையினம் அவை. அப்போதுதான் அவருக்கு ஒரு சிந்தனை பளிச்சிட்டது. ஒருவேளை உலகிலேயே மிகவும் வேகமாகப் பறக்கும் பறவையினம் இவையாகத்தான் இருக்குமோ என்று எண்ணினார். பலரிடம் பல புத்தகங்களிலும் விடை தேடினார்.
பலன்தான் இல்லை. இது குறித்து நாமே ஒரு புத்தகம் வெளியிட்டால் என்ன என்று யோசித்தார். அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார். தனது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் அவர்களால் வெளியிடப்பட்டது.
உலகிலேயே மிகவும் பெரியது. மிகவும் சிறியது ஆகிய விவரங்கள் இதில் அடங்கியிருந்தன. மேலும் அவ்வாண்டு வெளியான புத்தகங்களில் அமோக விற்பனையான புத்தகம் என்ற பெருமையும் கின்னஸ் புத்தகத்திற்குக் கிடைத்தது. அன்று தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது சாதனை புரிந்தவர்களைப் பற்றிய செய்திகளோடு புத்தகம் வெளிவந்தது. தொடர்ந்து ஆண்டுதோறும் வெளிவரும் கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளிவரவில்லை.
இதற்கான காரணம் தெரியவில்லை. தனிப்பட்ட நபரின் எந்த ஒரு புதிய சாதனையையும் கின்னஸ் புத்தகத்திற்கு அனுப்பலாம். இதற்கான தகுந்த ஆதாரங்களைக் காட்டவேண்டும் எப்படி? என பார்ப்போம். சாதனையாளரின் சாதனை பற்றிய பத்திரிகை செய்திகள், பார்வையாளர்களாக இருந்த பொறுப்பானவர்களின் கையெழுத்துத் தொகுப்பு, இவை உண்மைதான் என்று ஒரு பொறுப்பான நிறுவனத்தின் தலைவர் வழங்கும் உறுதிமொழி.
இவ்வளவும் அனுப்ப வேண்டும். புதிய சாதனை முந்தைய சாதனையை முறியடிப்பதற்காக இருந்தால் அந்தச் செய்தியும் சாதனையாளர் பற்றிய தகவலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும். கின்னஸ் புத்தகத்தில் சாதனை நிகழ்ச்சிகளை வெளியிடுவார்களே தவிர, யாரையும் சாதனைபுரியத் தூண்டமாட்டார்கள். கின்னஸ் புத்தகம் பற்றிக் கூட கின்னஸ் புத்தகத்தில் 1974ல் இடம் பெற்றது. அது உலகிலேயே அதிகமாக விற்பனையான புத்தகம் என்ற வரிசையில்தான். முதலில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த புத்தகம் விரைவிலேயே 35 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

urs - www.v4all.org 

Wednesday, September 24, 2014

மனமும் மனோசக்தியும்

மனோசக்தி



மனமும் மனோசக்தியும்
   

  நாம் முதலாவது மனம் என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதன் உண்மையைத் தேரிந்துக் கொண்டால் பிறகு அதனுடைய சக்திகள் என்பதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனிபோல சுலபமாகத் தெரிந்துக் கொள்ளலாம். உலக வாழ்க்கையில் மனம் என்றால் பல அநேகருக்குத் தெரியவே தெரியாது. என்றாலும் அவர்கள் எல்லாம் என்மனதிலேயிருக்குது என்பார்கள் அவ்வாறு சொல்வதெல்லாம் இயற்கை வழக்கச் சொல்லேயாகும்.


 


  மனம் என்பது ஒரு சிலருக்கே தெரியும் அவர்களைத்தான் அறிவுடையோர் என்றும் கற்றவர்கள் என்றும் சித்தர்கள் என்றும் ரிஷிகள் யோகிகள் தபசிகள் ஞானிகள் என்றும் சொல்கிறோம். மனம் என்னும் வஸ்துவை பகீர்முக உருவமாக காணமுடியாது. அந்தர்முக சுட்சம சக்தியால்தான் அறியமுடியும் அறியலாம் காணலாம். அசைவற்ற ஆத்மாவின் அசையும் சக்தி எதுவோ அதுவே மனம் என்று சொல்லப்படும். அதன் விருத்தி பலவாகி மனம் என்றும் உடலேன்றும் முச்சென்றும் நினைவென்றும் தொழில்முறை இயக்கத்தால் கூறப்படும்.  


  


  மனதுக்கு அந்தர்யாமி ஆத்மா ஆத்மாவுக்கு அந்தர்யாமி மனம் இந்த இரண்டிற்கும் தொடர்பு நடுநிலை யெதுவோ அதுவே அறிவாகும். மனம் அறியும் சக்தியை அடையும்போது அதை அறிவென்று சொல்லப்படும். முறையே ஆத்மாவின் விருத்தி உணர்வு, உணர்வின் விருத்தி அறிவு, அறிவின் விருத்தி மனம், மனத்தின் விருத்தி செயல் எனப்படும். மனத்தின் உருவத்தையும் அதன் வர்ணத்தையும் பிரதிபலிக்கும்படி நிருபித்து காட்ட முடியாது. ஆனால் சாஷி ருபமாகத்தான் நிருபிக்கமுடியும். அது உருவமற்றது, நிறமற்றது, தோற்றமற்றது, ஆதியும் அநாதியுமானது நினைவு எதுவோ அதுவே மனம், சிந்தனை எதுவோ அதுவே மனம், எண்ணம் எதுவோ அதுவே மனம் என்பது சித்தாந்த உண்மை.


   
  மனதுக்கு அடிப்படை ஆசார இருப்பிடம் பொதுவாக சரீரமேயாகும். சரீரத்தில் எங்கும் வியாபித்துள்ளது உயிர்பின் சக்தியாகிய மனம் செவியில் ஓசையாகவும் கண்ணில் தோற்றமாகவும் நாசியில் வாசனையாகவும் நாவில் சுவையாகவும் உடலில் பரிசமாகவும் பிரதிபலிக்கின்றது. மனமும் புத்தியும் இந்திரியங்களும் அகங்காரங்களும் அந்தக்கரணமும் உட்கருவி யெனப்படும். இவைகள் யாவும் ஒன்று கூடியதே சித்தமெனப்படும். இந்த சித்தத்துக்கு அதிகாரி மனம். மனதுக்கு அதிகாரி அறிவும் ஆன்மாவும் இதையே தாயுமானவர் சித்த மறியாதபடி சித்தத்தில் நின்றிலங்கும் திவ்ய தேஜோமயம் என்றார். இந்த சித்தத்தில் எழும் விருத்திகளே எண்ணங்கள் எனப்படும் மனம் எண்னுவதிலே எண்ணமென்றும் சிந்திப்பதினாலே சிந்தையென்றும் பெயர் பெறும்.   

 


   எண்ணம் என்பது பொருந்தும் ஆற்றல் பிரிக்கும் ஆற்றல்போன்ற ஒருவகை சக்தியாகும் அதையே மனேசக்தியென்றும் சொல்லப்படும். இயற்கையிலுள்ள சக்திகளஞ்சியத்திலிருந்து சித்தமெனும் கருவியானது சிலவற்றையெடுத்து தொழிற்படுத்தி எண்ணங்களாக வெளியே செலுத்துகின்றது. எண்ணங்கள் வெளியே சென்று மகா பஞ்சபூத சக்தியில் கலந்து உறவாடி செயல்களாகமாறி தொழில் புரிகின்றன. அதுகள் எண்ணத்துக்கு தக்கவாறு நன்மையாகவும் தீமையாகவும் செயல்புரிவது அதன் இயற்கையாகும். முதலாவது மனம் என்றால் என்ன என்பதையும் இரண்டாவது மனோவிருத்தி யென்னும் சத்தியென்றால் என்ன வென்பதையும் முன்றாவது எண்ணம் என்பது என்ன என்பதையும் நான்காவது மனோவசிய சக்திக்கு அடிப்படையாகிய மகா அமைதியென்பது எத்தகையது என்பதையும் அறிய வேண்டியது முதற் கடமையாகும். மனத்தின் சக்தியையும் எண்ணத்தின் சக்தியையும் அறியாது அடையாது செயல் நடத்துவது அநேகமாகத் துன்பத்துகே  ஆளாவான் என்பது சித்தாந்த உண்மை.

urs - www.v4all.org 

அர்னால்டு...நான் சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க …

அர்னால்டு...
என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க …
ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.!
என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க …
நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.!
அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க …
நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.!
சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்படினு சொல்லி சிரிச்சாங்க …
நான் மீண்டும் மீண்டு வந்தேன்.!
என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க …
நான் கவர்னர் ஆனேன்.!
இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் … அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க…
தன்னம்பிக்கையாலும் என்னோட கடின உழைப்பாலையும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.!
எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.!
அது அவர்களின் வியாதி நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது.!
- கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு
நாளை நான் ..........என் மனதில் .........தொடரும்

urs 
www.v4all.org 

யோகா செய்யும்போது கடைபிடிக்க வேண்டியவை என்ன?

யோகா செய்யும்போது கடைபிடிக்க வேண்டியவை என்ன? 

யோகப் பயிற்சிகள் செய்ய வேண்டுமென்றால், உடலளவிலும், வெளிநிலையும் சில விதிமுறைகள் நாம் கடைபிடிக்க வேண்டியது மிக மிக முக்கியம். அந்த விதிமுறைகள் என்னென்ன என்பதை சத்குரு இதில் தெளிவுபடுத்துகிறார். காலி வயிறு நிலை யோகாசனங்கள் செய்யும்போது, நீங்கள் காலிவயிறு நிலையில் இருந்தால் மட்டும் போதாது, உங்கல் குடலும் காலியாக இருக்க வேண்டும். உங்கள் சக்தி மேல்நோக்கி நகர வேண்டுமென்றால், உடல் அல்லாத பொருட்கள் உடலை விட்டு வெளியேற வேண்டும். யோகப் பயிற்சிகள் வெறும் உடற்பயிற்சிகள் அல்ல, உங்கள் உடலை மறு கட்டமைப்பு செய்து, உங்களை எப்படி வேண்டுமோ அப்படி உருவாக்கும் வழிமுறைகள். அப்படிப்பட்ட செயல் நடக்க வேண்டுமென்றால், உடல் அல்லாத வேறு எதுவும் அங்கே இருக்கக் கூடாது. உங்கள் செல்களின் கட்டமைப்பு சக்தியூட்டப்பட்டால், நீண்ட காலத்திற்கு அது இளமையாக இருக்கும். யோகா என்றால், படைத்தவருடன் ஒரு கூட்டு அமைக்க தொடங்குகிறீர்கள். இதை நீங்களாகவே செய்ய முடியாது, ஆனால் அவரைச் செய்வதற்கு ஒரு சூழ்நிலை நீங்கள் உருவாக்க முடியும். படைப்பின் மூலத்துடன் கூட்டமைப்பதென்பது, பெரும் அறிவாற்றலை உங்களுடன் இணைக்கும் செயல். உங்களால் நம்ப முடியாத அளவிளான அறிவாற்றல் அது. இந்த செயல் நடக்க வேண்டுமென்றால், அங்கே எந்த தடையும் இருக்கக் கூடாது – நீங்கள் உள்ளே அனுப்பிய உணவோ அல்லது நீங்கள் உருவாக்கிய கழிவோ, இவை இரண்டும் வெளியேற்றப்பட வேண்டும். குளிர்ந்த நீர் பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்பு, அறையின் வெப்பநிலையைவிட 5லிருந்து 8 டிகிரீ சென்டிகிரேடு குறைந்த அளவில் உள்ள தண்ணீரில் குளிப்பது உகந்தது. இப்படி செய்வதன் மூலம், தோல் செல்களுக்கு இடையே உள்ள நுண்துளைகள் திறக்கப்படும். யோகப் பயிற்சி செய்வதற்கு இது மிகவும் உகந்தது, ஏனென்றால் உங்கள் செல்களின் கட்டமைப்பு வேறு ஒரு பரிமாணத்தில் சக்தியூட்டப்பட வேண்டும். ஏன் ஒருவர் மற்றவரைவிட மிக உயிரோட்டமாக காணப்படுகிறார் என்றால், இதனால்தான். உங்கள் செல்களின் கட்டமைப்பு சக்தியூட்டப்பட்டால், நீண்ட காலத்திற்கு அது இளமையாக இருக்கும். கண்கள் மூடி இருத்தல் ஒரு மனிதனுக்கு பார்வை அமைப்புதான் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றது. நீங்கள் கண்களை மூடும்போது, உலகம் மறைந்துவிடுகிறது. நம்முள்ளே நடக்கும் நிகழ்வுகளுக்கு, காட்சி அமைப்புகள் இயல்பாகவே மூடிக்கொள்ளும். ஏனென்றால், காட்சி அமைப்புகள் வெளியுலகிற்கு மட்டும்தான் நம்மை ஈடுபடுத்தும். அவைகளை மூடிவிட்டாலும் உங்களுக்கு நறுமணம், தொடு உணர்வு, கேட்பது எல்லாமும் நடக்கும், ஆனால் பாதி உலகம் மூடப்பட்டுவிடும். எனவே உள்நோக்குதல் என்பது உங்கள் கண்கள் மூடப்பட்டால்தான் திறம்பட நடக்கும். நீங்கள் ஆசனங்கள் செய்யும்போது அனைத்தையும் உள்முகமாக்க வேண்டும். கண்ணாடி பயன்படுத்துதல்/இசை கேட்டல் ஹடயோகப் பயிற்சி செய்யும்போது அங்கே கண்ணாடியோ இல்லை இசையோ இருக்கவே கூடாது. கண்ணாடியைப் பயன்படுத்தும் கலாச்சாரம், பாடி பில்டிங் மற்றும் ஜிம்னேஷியத்திலிருந்து வந்தது. ஏனென்றால் தங்கள் உடலை அவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்பதற்காக அவைகளை வைத்துக் கொண்டார்கள். யோகாவில் இந்த அணுகுமுறை இருக்கக் கூடாது. பல யோகிகளின் உடல் கட்டமைப்பு தடகள வீரர்களைப்போல அல்லாமல் மிகச் சாதாரணமாகத்தான் இருக்கும். நிறைய பேருக்கு பானை வயிறும் கூட இருப்பதைப் பார்க்கமுடியும். ஏனென்றால், அவர்கள் கண்ணாடியைப் பார்ப்பதில்லை, அவர்களுடைய நோக்கமே தாங்கள் வளர வேண்டும் என்பது மட்டும்தான். இந்தப் படைப்பின் மூலத்துடன் நீங்கள் ஈடுபட வேண்டுமென்றால், உங்கள் உடல், மனம், சக்தி, உயிர் எல்லாமே முழுக்க முழுக்க ஈடுபட வேண்டும். இதே கண்ணாடியைப் பார்த்தால், மற்றவர்களைத் தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீகள். ஆசனப் பயிற்சிகள் செய்யும்போது, உங்கள் மனக்குவிப்பு மிகவும் முக்கியம். பேச்சு ஆசனம் என்பது தியானம் செய்ய ஒரு ஆற்றல்மிக்க வழிமுறை. உங்களால் ஸ்திரமாக உட்கார முடியாததால், தியான நிலையை அடைய வேறு ஒன்றைச் செய்கிறீர்கள். எது சௌகரியமகவும், நிலையாகவும் உள்ளதோ அதுதான் உங்கள் ஆசனம். உங்கள் உடல் மனம் சௌக்கியமாகவும், உங்கள் சக்தி சமநிலையுடனும் அதிர்வுடனும் இருந்து, பிறகு நீங்கள் ஒருவிதமாக உட்கார்ந்தால், இயல்பாகவே நீங்கள் தியான நிலையில் இருப்பீர்கள். அந்த இயற்கையான தியான நிலைக்கு நீங்கள் வர, ஆசனம் என்பது ஒரு தயார்படுத்தும் படிநிலை. எனவே, ஒருவிதத்தில் ஆசனம் என்பது தியானம் செய்ய ஆற்றல் மிக்க வழிமுறை. ஆசனம் செய்யும்போது நீங்கள் பேசினால், உங்கள் உடலளவில் மட்டுமல்ல, சக்திநிலையிலும் பல மாற்றம் ஏற்படும். எனவே ஆசனம் செய்யும்போது பேசக்கூடாது என்பது ஒரு கட்டாயம் மட்டுமில்லை, அது ஒரு விதிமுறையும் கூட. ஆசன நிலையில் நீங்கள் எப்போதும் பேசவே கூடாது, ஏனென்றால் உங்களின் சக்திநிலையில், கவனத்தில், சுவாசத்தில் நடப்பது எல்லமே மிக மிக முக்கியம், இல்லையென்றால் அது உங்கள் உடலில் தொந்தரவு ஏற்படும். நீங்கள் பேச வேண்டுமென்றால், ஆசனா செய்யத் தேவையில்லை, ஜாக்கிங் செய்துகொண்டு ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளலாம்.


Tuesday, September 23, 2014

காயத்திரி மந்திரம் - இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும்

காயத்திரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும்சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத  எனப்படும்.

இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில்  காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:

யோ                     -எவர்
                           -நம்முடைய
தியோ                 -புத்தியை
தத்                        -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத்    -தூண்டுகிறாரோ
தேவஸ்ய          -ஒளிமிக்கவராக
ஸவிது               -உலகைப் படைத்த
வரேண்யம்        -மிகவும் உயர்ந்ததான
பர்கோ                  -சக்தியை
தீமஹி                -தியானிக்கிறோம்

நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.