ஆன்லைனில் ஷாப்பிங்! ஆகாயத்தில் டெலிவரி?? அமேசானின் புதுமை!
நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு ஒரு பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்கிறீர்கள். அரை மணி நேரத்துக்குள் அந்தப் பொருள் உங்கள் கையில் நேரடியாக வந்தடைகிறது?? நம்பமுடிகிறதா?? இப்படி ஒன்று நடந்தால் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவீர்கள்? அந்த அளவுக்கு உங்களை மகிழ்விக்க அமேஸான் நிறுவனம் முடிவு செய்துவிட்டது.
அமேஸான்.காம் இணைய தளம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த இருக்கிறது. ப்ரைம் ஏர் (Prime Air) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் ஒரு ஆன்லைன் வாடிக்கையாளர் பொருளை ஆர்டர் செய்த அரை மணி நேரத்துக்குள் அந்தப் பொருள் அவர் கையில் நேரடியாக வந்து சேரும். இதற்கு ட்ரோன் (Drone) போன்ற சிறிய தானியங்கி கருவிகள் (விமானங்கள் போன்ற ROBOTS) பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் சுமார் 2.5 கிலோ எடை வரையிலான பொருட்களை 'ப்ரைம் ஏர்' மூலமாக டெலிவரி செய்ய முடியும். அமேசான் விற்கும் பொருகளில் 86% , 2.5 கிலோவிற்கு கீழ் உள்ளது என்பது குறுப்பிடத்தக்கது!
இந்த சேவை டிசம்பர் 2015க்குள் தொடங்கிவிடும் என்று அமேஸான் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை எப்படி இருக்கும் என்பதை விளக்கும் காணொளி ஒன்றை ப்ளூம்பெர்க் (Bloomberg) வெளியிட்டுள்ளது. இதில் ஒரு கடைக்காரருக்கு ஒரு தானியங்கி விமான பொருட்களை வழங்கிச் செல்வதைப் போல் படமாக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்தவர்கள் வியப்பில் இதே போன்ற சேவை தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆவலாக எதிர்பார்க்கிறார்கள். அமேஸானின் இந்த புதுத் திட்டத்தைச் சுற்றி பரவலான எதிர்பார்ப்பு குவிந்திருக்கிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. க்வார்ட்ஸ் (Quartz) என்ற டிஜிட்டல் செய்தி நிறுவனம், ”இந்த தானியங்கி விமானங்கள் வேறு எதன் மீதாவது மோதி விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று கேட்கிறது மேலும் தானியங்கி விமானங்களை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான சட்ட அங்கீகாரம் குறித்தும் கேள்வி எழுப்புகிறது. ஆனால் பிஸினஸ் வீக் இதழைச் சேர்ந்த பிராட் ஸ்டோன் அமேஸானின் இந்தத் திட்டம் மிகச் சிறந்தது என்று பாராட்டியுள்ளார் “இது அமேஸானின் பொருட்களை கொண்டு சேர்க்கும் வசதியை மேம்படுத்தும் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் அந்த நிறுவனத்தின் நூதனமான அணுகுமுறை வாடிக்கையாளர்களின் மதிப்பைப் பெற்றுத் தரும். விடுமுறை ஷாப்பிங்கை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் குணாதிசியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எனவே இந்த புது திட்டம் அமல்படுத்தப்படுமானால் அமேஸான்.காமின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்” என்கிறார் அவர்.
வீட்டிலிருந்துகொண்டே எதை வேண்டுமானாலும் வாங்கித் தரலாம் என்ற வசதியைத் தருவதால் ஆன்லைன் ஷாப்பிங்குக்கு மவுசு கூடிவருகிறது. இதனால் அமேஸான் ஞாயிற்றுக் கிழமைகளும் டெலிவரி சேவை உண்டு என்று அமெரிக்க தபால்துறையின் உதவியோடு உறுதியளித்திருக்கிறது. அதோடு இந்த ’அரை மணிநேர ஆகாய டெலிவரி’ சேவையும் சேர்ந்துகொண்டால் அமேசானின் வியாபாரம் பெருகும் என்பதில் ஐயமில்லை.
இது நடைமுறைக்கு சாத்தியப்பட்டால், நகரம் முழுதும் இந்த சிறிய விமானம் போன்ற தாங்கிகள், ஊர்க்குருவிகள் போல் பறந்து கொண்டிருக்கும். நினைத்தாலே வியப்பாக உள்ளது அல்லவா?
urs Happily
www.v4all.org
urs Happily
www.v4all.org
No comments:
Post a Comment