அன்பே எங்கள் உலக தத்துவம்.
நாட்டுப் பற்று அவசியமா?ஒன்றே குலம் ,ஒருவனே தேவன் என்று படித்திருக்கின்றோம் ,யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றும் படித்திருக்கின்றோம் .இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்கள் மேலும் ,உயிர்கள் மேலும் அன்பு செலுத்து என்று படித்திருக்கின்றோம் .
இவ்வாறு இருக்கையில் நான் இந்தக் குறிப்பிட்ட நாட்டுக்காரன் ,இந்த என்னுடைய நாடு இது மட்டும் நன்றாக இருக்க வேண்டும் ,எனது நாடு மட்டும் வல்லரசாக ஆக வேண்டும் .மற்ற நாடுகளும் நாட்டு மக்களும் என்னுடைய நாட்டினை விடவும் , நாட்டு மக்களை விடவும் கீழ்நிலையில் இருக்க வேண்டும் என்பது சரியா?
இது ஒரு நல்ல மன நிலையா?உலகில் உள்ள எல்லா நாடுகளும் வல்லரசு எனப்படும் , மற்ற நாடுகள் ,நமது எல்லா ஆளுகைக்கும் உட்பட்டு இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடைபெறக்கூடிய காரியமா?
இது எதில் போய் முடியும் ,சண்டையில் தான் முடியும் .மூன்றாம் உலக்ப் போர் மூழும் .இதனால் உலக மக்கள் அனைவருக்கும் இதில் ஏதும் நன்மை விளையப் போகின்றதா?அப்புறம் ஏன் இந்த நாட்டுப் பற்று என்னும் எண்ணங்களும் ,என் நாட்டை நீ ஆக்கிரமிப்பு செய்தாய்,உன் நாட்டை நான் ஆக்கிரமிப்பு செய்தேன் என்று?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் நமது இந்திய திருநாட்டில் தான் இருக்கின்றது.உலகில் உள்ள பெரும்பாண்மையான நாடுகளில்உள்ள மக்கள்ஒரேஇனம், மொழி, கலாசாரம்,மதத்தை
சேர்ந்தவர்களாகவாழ்ந்திருக்கநமதுநாட்டில்மட்டுமேஇதற்குமாறாகபல்வேறுஇனம்,மொழி,
கலாசாரம்,மதம் எல்லாம் ஒற்றுமையாக நாம் அனைவரும் இந்தியர் என்னும் குடையின் கீழ் வாழ்ந்து வருகின்றோம்.
இப்படி இந்த உலகம் முழுவதும் ஒரே மனித இனமாக வாழ வேண்டிய காலம் ஒன்று வரும் அப்பொழுது இந்தியாவின் இந்த நிலை அனைத்து நாடுகளுக்கும் ,மக்களுக்கும் ஒரு எடுத்துக் காட்டாக விளங்கும்.உலகம் முழுவதும் ஒரே நாடாக உலக மக்கள் அனைவரும் ஒரே இனமாக இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு மாதிரியாக விளங்கும்.
மனிதா உனது எல்லைகள் இந்த பிரபஞ்சத்தின் கடைசிப் புள்ளி வரை உள்ளது ,நீயோ பூமியில் எல்லைகளை வகுத்துக் கொண்டு ,தேசப் படங்களைக் கையில் வைத்துக் கொண்டு திரிகின்றாய் .உனது சகோதரத்துவம் நாடுகளைத் தாண்டியது .இதனை விடுத்து ஒரு குறிப்பிட்ட எல்லைகள் மட்டும் எனக்குச் சொந்தமானது என்று வாழும் மனித நிலை சரியா?
தனது உடலையும் ,மனத்தையும்,குடும்பத்தையும் பேனத்தெரியாதவன் எப்படி மற்றவர்களுக்காகவும் தனக்காகவும் சமூகத்தில் வாழ முடியும் .ஆகவே ஒவ்வொருவரும் நமது உடல்,மனம் ,குடும்பத்தை பேணி வருகின்றோம் .
இந்த நிலையில் தான் நாட்டுப்பற்று ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையே ஒழிய அது ஒரு தீவிரவாதமாக மற்ற நாடுகளையும் ,மற்ற மனிதர்களையும் துன்பத்தில் ஆழ்த்துவதாக இருக்கக்கூடாது.

No comments:
Post a Comment