Monday, September 1, 2014

ராமாயணம் எழுதுவதற்கு முன் வால்மீகி திருடனாக இருந்திருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா?

ராமாயணம் எழுதுவதற்கு முன் வால்மீகி திருடனாக இருந்திருக்கிறார் என்பதை நம்ப முடிகிறதா?
.
வால்மீகியின் இயற்பெயர் ரத்னாகர். 
.
குடும்ப வறுமை காரணமாகத் திருட்டுத் தொழிலுக்குப் போனார். காடுகளில் பதுங்கியிருந்து வழிப்போக்கர்களிடம் பணம், நகை பறித்து தன்னுடைய குடும்பத்துக்கு உதவிசெய்து வந்தார். ஒருநாள் அந்தக் காட்டின் வழியாக ஒரு முனிவர் போனார். அவரையும் வால்மீகி வழிமறித்தார். அப்போது அந்த முனிவர், 'எதற்காகத் திருடுகிறாய்?’ என்று கேட்டார். 'என் குடும்பத்தை வாழவைக்க இதுதான் வழி’ என்று சொன்னார் வால்மீகி. 'அப்படியானால் இந்த பாவங்களுக்கு உனது குடும்பத்தினரும் பங்கு ஏற்றுக் கொள்வார்கள்தானே?’ என்று கேட்டார் முனிவர்.
.
'ஆமாம்’ என்றார் வால்மீகி.
.
'இதை உன் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்களா என்று கேட்டு வா’ என்றார் முனிவர்.
.
உடனே முனிவரைக் கட்டிப் போட்டுவிட்டு தனது வீட்டுக்கு வால்மீகி போனார். குடும்பத்தினரிடம் இந்தக் கேள்வியை கேட்டார். 'பணம் கொண்டுவந்து கொடுக்க வேண்டியது உன்னுடைய கடமை. அதற்காக நீ செய்யும் பாவங்களை நாங்கள் சுமக்க முடியாது’ என்று குடும்பத்தினர் சொன்னார்கள். இதுதான் வால்மீகியின் மனதை மாற்றியது. முனிவரிடம் வந்தார். அவரை அவிழ்த்துவிட்டார். மனம் மாறினார்.
.
# உயிர் பிழைக்க உதவி செய்வதாக இருந்தாலும் அறத்துக்கு மாறானதைச் செய்யாதே என்பதுதான் வால்மீகியிடம் நாம் படிக்க வேண்டிய பாடம்.

No comments:

Post a Comment