Saturday, September 20, 2014

முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம்

எந்த காரியத்திலும் மனிதனின் முதல் தேவை  பயிற்சி.முறையாக பயிற்சி.பெற்றால் தான் அந்த காரியத்தை இறுதியில் சிறப்பாக முடிக்க முடியும். பயிற்சி.பெற்ற பின் சம்பந்தப்பட்ட நிகழ்வு உயரினக்களுக்கு பழக்கமாகி விடும். மறுபடி செய்ய சிரமமோ சலிப்போ தோன்றுவது இல்லை.

       பயிற்சிக்கு முன் முயற்சி தேவை. முயற்சி பயிற்சியாகி பழக்கமாகிறது. 
           
    பழக்கமாகி தொடர்ந்து செய்யும் போது அது வழக்கமாகிறது.ஒரு மனிதனின் இயல்பு கூட அவனுடைய  வழக்கத்திலிருந்து தான் கணிக்கப் படுகிறது. பழக்க
வழக்கம் மனிதனின் உள்மனதில் ஆள் மனதில் பதிந்த பின் அது அவனின் அனிச்சை செயலாக மாறுகிறது.

 அப்படியானால் ஆரம்பம் முயற்சி பயிற்சி. அது பழக்கமாகி வழக்கமாக மாரி மனிதனின் அனிச்சை செயலாகிறது. அதுவே அவனின் இயல்பாக சமூகத்தில் காட்டப் படுகிறது. அதனால் மனிதனுக்கு ஆரம்ப பயிற்சி முக்கியம்.

உடலையும் மனதையும் நலமாக வைப்பதில் நல்ல விசயங்களில் பயிற்சி முக்கியம். அது மனிதனின் செயல திறனை அதிகமாக்கி மனிதனை நல்ல இடத்தில் அமர்த்தும்.

    அதனால் தான் முயற்சி பின் பயிற்சி தேவை என்கிறோம். பயிற்சி பழக்கமாகி
வழக்கமாகிறது. வழக்கம் அனிச்சை செயலாகிறது.

urs Happily 
Dr.Star Anand ram
www.v4all.org 

No comments:

Post a Comment