இந்த உலகில் எல்லோருமே விற்பனையாளர்கள்தான்.
அறிவை, திறமையை அல்லது பொருளை
விற்பனை செய்து தொழில் செய்கிறோம்.
நம் தொழிலில் வெற்றிபெற விற்பனை உத்திகளைத் தெரிந்து
கொள்வது மிக அவசியம். சிறந்த
விற்பனையாளர் ஆவதற்கு கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுக.
1. மனதளவில் 100 சதம் அதற்கு நீங்கள்
தாயாராக வேண்டும்.
ஏனென்றால்
உலகச் சாதனையாளர் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் மனம்தான் அனைத்திற்கும் காரணம் என்று புரிகிறது.
உலகில்
எவ்வளவோ வழிமுறைக்ள, அணுகுமறைகள், பயிற்சிகள், கருத்துக்களை அறிந்து கொள்ளலாம் அல்லது
பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அதை எடுத்து
சரியான முறையில் பயன்படுத்த மனம் தாயாராக இருக்க
வேண்டும். பல சாதனையாளர்கள், அவர்கள்
மனம் முழுமையாக இலட்சியத்தை நோக்கிச் செலுத்தப்பட்டதால் புதுப்புது வழிமுறைகளையும், அணுகு முறைகளையும் அவர்களே
கண்டுபிடுத்தார்கள். மேலும் அதை நடைமுறைப்படுத்தி
வெற்றி பெற்றார்கள். எனவே உங்களிடம் மறைந்துள்ள
மாபெரும் மனஆற்றலை மூளைத்திறனை நீங்கள் முழுமையாக நம்பி
ஒரு சிறிதும் கலக்கமில்லாமல், விடாமல் தொடர்ந்து முயன்றால்
நீங்கள் அதற்குப் பெற்ற கருத்துக்களும் பயிற்சிகளும்
துணைபுரியும். உங்கள் மனம் அதற்குத்
தயாரா?
2. ஒவ்வொரு நாளும் இரவில்
நாளைய நமது திட்டம் என்ன?
என்பதை விபரமாக எழுதுங்கள். பிறகு
முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் வைத்து அதை வரிசைப்
படுத்துங்கள். அவற்றை செய்யும் நேரத்தைத்
தீர்மானியுங்கள்.
அடுத்த
நாள் காலையில் மீண்டும் ஒரு முறை எழுதி
வைத்ததைப் படியுங்கள் ஏதேனும் விட்டுப் போயிருந்தால்
அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்(ஏனென்றால் காலையில் மனம் புத்துணர்வுடன் இருப்பதால்
பல புதிய திட்டங்கள் அல்லது
விட்டுப்போனவை நினைவில் வரும்)
பிறகு ஒவ்வொரு செயலையும் கண்களை
மூடிக்கொண்டு வெற்றியாக அந்தச் செயல்கள் முடித்தது
போல மனக்காட்சிகளாகப் பார்க்கவும். இவை உள்மனத்தில் பதியும்.
திட்டமிட்டுள்ளபடி
முழு ஈடுபாட்டுடன் ஒவ்வொரு செயலையும் செய்க
இரவு அந்த எழுதிய திட்டப்பட்டியல்
முடித்த செயல்களை டிக் செய்க. முடியாத
செயல்களுக்கு என்ன காரணம் என்று
ஆராய்க. உண்மையான காரணமாக இருந்தால் ஏற்றுக்
கொள்க. கற்பிக்கப்பட்ட காரணங்களாய், குறைகளாய் இருந்தால் திருத்திக் கொள்க.
3. மனித மனத்தில் சோம்பேறித்தனமும்,
காரியங்களைத் தள்ளிப்போடும் குணமும் எதனால் உருவாகிறது?
அதைப் போக்க என்ன செய்ய
வேண்டும்?
மனிதர்கள்
இன்பமாக இருப்பதையே விரும்புகிறார்கள். துன்பத்தைத் தவிர்க்க நினைக்கிறார்கள்.
” இன்பநாட்டம்
உயிர்களின் இயற்கை”
- தொல்காப்பியம்
ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பு மனித மனத்தில்
இரண்டு காட்சிகள் வருகின்றது. ஒன்று செய்து முடித்தபின்
கிடைக்கின்ற பலனால் வருகின்ற இன்பம்.
இரண்டு செயலைச் செய்கின்ற போது
வரும் துன்பம்.
இவற்றில்
சாதனையாளர்கள் அந்தச் செயலால் வருகின்ற
துன்பத்தை விட இன்பத்தைப் பெரிதுபடுத்திப்
பார்க்கிறார்கள். ஆனால் சோம்பேறிகளும் தள்ளிப்போடுகிறவர்களும்
செயலால் வருகிற இன்பத்தைவிடத் துன்பத்தைப்
பெரிதுபடுத்திப் பார்க்கிறார்கள். அதனால் செயல் செய்வதால்
வருகின்ற துன்பத்தைத் தவிர்த்துத் தற்காலிக இன்பத்திற்காகச் செயலைத் தள்ளிப் போடுகிறார்கள்.
மனச்சாட்சிக்கும்
மற்றவர்களுக்கும் பதில் சொல்லக் காரணத்தைத்
தேடுகிறார்கள். எனவே நணபர்களே! எந்தச்
செயலைச் செய்யும் முன்பு அதனால் உங்களுக்கும்
– மற்றவர்களுக்கும் கிடைக்கும் நன்மைகளைப் பெரிதுபடுத்திப் பாருங்கள். செயலைத்தள்ளிப் போடத் தள்ளிப்போட அது
சுமையாக மாறி, துன்பமாவதை எண்ணிப்
பாருங்கள்.
4. தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி? நாம் ஒரு
செயலைச் செய்கிறோம். எதிர்பார்த்த முடிவு கிடைத்தால் வெற்றி
என்கிறோம். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால்
தோல்வி என்கிறோம். வெற்றி பெற்றால் மகிழ்ச்சியும்,
தோல்வியடையும் போது தளர்வும் மனிதர்கள்
அடைகிறார்கள். ஒரே ஒருமுறை முயன்றாலே
வெற்றியடைந்து விடவேண்டும் என்றஎதிர்பார்ப்பு நம் அனைவரிடமும் உள்ளது
ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. தோல்வி
என்பது நமது செயலின் வழிமுறைகளின்
தவற்றால் ஏற்பட்டது என்பதைத் தெரிவிக்க வந்த மறுசெய்தி. வழுமுறை
– அணுகுமுறையில் உள்ள தவற்றை நீக்கி
மீண்டும் மீண்டும் முயன்றால் வெற்றியடைவது திண்ணம்.
வெற்றியடையும்
வரை ஓயமாட்டேன் என்ற சளைக்காத மனம்
இருந்தால் தோல்விகளைச் சவாலாக ஏற்கும் திறன்
இருந்தால் நீங்கள் வெற்றியடைவது நிச்சயம்.
5. வாடிக்கையாளர்களுடன் பேசும் பொழுது அவர்கள்
உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுங்கள். எந்த வகையிலும் அவர்கள்
மனம் காயப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் மனம் காயப்படாமல்
பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் சொல்வதை முழுமையாக,
கவனமாகக் கேளுங்கள். அவர்கள் பேசும் பொழுதும்,
நீங்கள் அவர்களிடம் பேசும் பொழுதும், கண்களையும்
முகத்தையும் பார்த்துப் பேசுங்கள். மாறுபட்ட கருத்துக்கள் ஏற்படும்போது விவாதம் செய்வதைத் தவிர்த்து
விடுங்கள். நீங்கள் சொல்கிற கருத்துக்களுக்கு
ஆதாரங்களை விளக்கங்களை படிப்படியாகத் தெளிவாக அவர்கள் புரிந்து
கொள்ளுபடி கூறுங்கள்.
7. நீங்கள்
தொழிலில் வெற்றிபெற கஷ்டப்பட்டுக் செய்ய வேண்டாம் இஷ்டப்பட்டுச்
செய்யுங்கள்.
8. புதிய
மனிதர்களை அணுகும் போது கூச்சம்
தயக்கம் வேண்டாம். எல்லா மனிதர்களுமே இந்த
உலகத்திற்கு வந்ததற்குப் பிறகுதான் புதிய மனிதர்களை அறிமுகப்படுத்தப்பட்டு
பழகிய மனிதர்களானார்கள். ஆகவே எல்லோரிடமும் பழகி
நண்பர்களாக ஆக்கிக் கொள்வது நம்
கையில்தான் உள்ளது. விற்பனை வளர
வேண்டுமென்றால் கேளுங்கள்! கேளுங்கள்!! கேளுங்கள்!!!
“தட்டுங்கள்
திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்”
urs Happily
Dr.Star anand Ram
www.v4all.org
urs Happily
Dr.Star anand Ram
www.v4all.org
No comments:
Post a Comment