Monday, September 22, 2014

வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்கை பாடமே தோல்வி காட்டும் ஞானம் புது வேதம் ஆகுமே - with video

" குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ""
............பாடல் வரி : முத்துலிங்கம்...
எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை
எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை

வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்கை பாடமே
தோல்வி காட்டும் ஞானம் புது வேதம் ஆகுமே
எது வந்த போதும் அதை ஏற்றுகொள்வாய்
இருள் கூட ஒளி வீசும் துணிந்தே செல்வாய்
எதற்கும் ஓர் நாள் உண்டு
எல்லோர்க்கும் வாழ்வுண்டு

கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே

மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ
வலை விண்ணில் வீசினாலும் வான்மீன்கள் வீழுமோ
உழைப்பார்க்கு என்றும் இழப்பேதும் இல்லை
இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார் கண்ணா
தளராது புயல்போலே
வரலாறு படைப்பாரே

மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா


urs Happily 
Dr.Star Anand ram
www.v4all.org 

No comments:

Post a Comment