செயல் | ||||
கடல் பரந்த உப்பு செயல்படாத அறிவு போல பயன்படாதது | ||||
விரல் பிடித்த உப்பு செயல்படும் அறிவு போல வீண்படாது | ||||
புகழ் என்பது நமது நல்ல செயல்களின் அறுவடையே | ||||
இகழ் என்பது நமது தீய செயல்களின் எதிரொலியே | ||||
நமது சொல்லுக்கு பதில் இன்று கிடைக்கும் | ||||
நமது செய்லுக்கு பலன் நாளை கிடைக்கும் | ||||
ஒடாதி இயந்திரமும் உழைக்காத மனிதரும் குப்பைக்கே | ||||
பாடாத குயிலும் பழகாத மனிதரும் தெரியாதே போவார் | ||||
சிலர் அறிவுள்ளவர் அவர் பயன்பட்டால் விரும்பப்படுவார் | ||||
சிலர் பல்னுள்ளவர் அவர் அறிவுற்றிருந்தால் மிகவும் விரும்பப்படுவார் | ||||
ஒடாத முயலை விட ஊர்ந்து வரும் நத்தையே மேல் | ||||
உருப்படாத பேரறிவை விட உதவ வரும் சிற்றறிவே மேல் | ||||
மரத்தை உலுக்குபவன் மூடன் அதை | ||||
ஏறிப்பறிப்பவன் மனிதன் அதை | ||||
எட்டிப்பார்ப்பவன் அறிஞ்ன் அதை | ||||
தட்டிப்பரிப்பவன் கயவன் | ||||
ஒழக்கமுள்ளவனால் வளரும் உலகம் ஒழக்கமில்லாதவனால் அழியும் | ||||
உழைப்பவரால் வளரும் நன்மை உழைப்பில்லாதவரால் சிதையும் | ||||
நிறைய சிந்திப்பவர் குறைவாகவே செயல்படுகிறார் | ||||
நிறைய சம்பாதிப்பவர் குறைவாகவே செலவிடுகிறார். | ||||
-------------------------------------------------------- உழைப்பு | ||||
உணவை குறைத்து உழைப்பை அதிகரித்தால் நோய் வராது | ||||
உறக்கத்தை குறைத்து உழைப்பை அதிகரித்தால் வறுமை வராது | ||||
எந்த தொழிலும் செய்வதினால் இழிவு கேவலமல்ல | ||||
எந்த தொழிலும் செய்யாமலிருப்பதுதான் இழிவு கேவலாமகும் | ||||
கடந்த காலத்தில் உழைக்காதவருக்கு நிகழ்காலமில்லை | ||||
நிகழ் காலத்தில் உழைக்காதவருக்கு எதிகாலமில்லை | ||||
உழைக்காத உடலின் சந்தனத்தின் மனத்தை விட | ||||
உழைத்தவன் உடலின் வியர்வை மனம் உயர்ந்தது | ||||
நாற்பது வயதிலே இருபது சுறுசுறுப்புள்ளவன் நல்ல தொழிலாலி | ||||
இருபது வயதிலே நாற்பது வயது அறிவிருப்பவன் நல்ல முதலாளி | ||||
நல்ல கால்களிருந்தும் நடக்காதவர் முடவரிலும் மோசம் | ||||
நல்ல கைகளிருந்தும் உழைக்காதவன் பிறந்ததே நாசம் | ||||
விருந்தாளியை போற்றிய முதலாளிக்கு என்றும் துக்கமில்லை | ||||
தொழிலாளியை போற்றிய முதலாலிக்கு என்றும் தோல்வியில்லை | ||||
வேர்களுக்கு புகழில்லை | ||||
வேரில்லாமல் மலருமில்லை | ||||
தொழிலாளிக்கு விளம்பரமில்லை | ||||
அவனில்லாமல் விளைச்சலுமில்லை | ||||
உழைத்து பிழைத்தவனுக்கே உணவு உண்ண உரிமையுண்டு | ||||
உழைத்து களைத்தவனுக்கே ஒய்வு எடுக்க உரிமையுண்டு | ||||
----------------------------------------------- பயிற்சி | ||||
பயிற்சி என்பது உடலை வலுப்படுத்தும் | ||||
முயற்சி என்பது உள்ளத்தை வலுப்படுத்தும் | ||||
முயற்சியும் பயிற்சியும் வளர்ச்சியின் படிக்கட்டுகள் | ||||
அயர்ச்சியும் தளர்ச்சியும் இகழ்ச்சிக்கு வழிகாட்டிகள் | ||||
சிந்தை செய்யும் சித்திகளெல்லாம் வருவதும் முயற்சியாலே | ||||
விந்தை செய்யும் விந்தைகளெல்லாம் கற்பதும் பயிற்சியாலே | ||||
அயர்ச்சியினால் தளர்ச்சி வரும் | ||||
தளர்ச்சியினால் தாழ்வு வரும் | ||||
முயற்சியினால் பயிற்சி வரும் | ||||
பயிற்சியினால் வளர்ச்சி வரும் | ||||
ஒழுக்கமில்லாதவன் உயர்வு ஙாலறுந்த பட்டமென வீழும் | ||||
பழக்கமில்லாதவன் முயற்சி வாலறுந்த மந்தியென ஒடும் | ||||
நிற்பதற்கு பழகிய பிந்தானே நடக்க முடியும் | ||||
நடப்பதற்கு பழகிய பிந்தானே பறக்க முடியும் | ||||
ஆயிரம் புத்தகப் படிப்பை விட சிறு தழும்பு அனுபவமானது | ||||
ஆயிரம் பேரின் ஆலோசனையை விட சிறு பயிற்சி உபயோகமானாது | ||||
விலங்குகள் பின்னாலிருந்து அவைகளை மேய்க்க வேண்டும் | ||||
மாணவர்களை முன்னாலிருந்து அவர்களை நடந்த வேண்டும் | ||||
பண்பு என்பது நல்ல பயிற்சியினால் விளைவது | ||||
பதவி என்பது உண்மை முயற்சியினால் அடைவது | ||||
-------------------------------------------------------- முயற்சி | ||||
தள்ர்ச்சி என்பது தேயும் நிலவு போல இருள் தரும் | ||||
முயற்சி என்பது வளரும் நிலவு போல அருள் தரும் | ||||
முயற்சியுடைய கனவுகள் எல்லால் கடலென்றாகும் | ||||
முயற்சியில்லாத கனவுகள் எல்லாம் கானலென்றாகும் | ||||
முயற்சியே செய்யாமல் முன்னேற ஆசைப்படுவான் மூடன் | ||||
உழைப்பே இல்லாமல் உயர விரும்புவன் திருடன் | ||||
அசையை மறுப்பவனுக்கு காற்று கூட உதவ முடியாது | ||||
முயற்சிக்க மறுப்பவனுக்கு கடவுள் கூட உதவ முடியாது | ||||
தோல்விகள் தொடரலாம் நமது தோள்கள் தளரலாமோ | ||||
முயர்சிகள் தோற்கலாம் நாம் முயற்சிக்க தவறலாமோ | ||||
இயலாமையினால் செய்த குற்றங்களை மன்னிக்க முடியுமா? | ||||
விறகாவதும் வெற்றிவீரனாவதும் மனிதனின் முயற்சி இல்லமலில்லையே | ||||
இல்லையென்ற சொல் எந்த மொழியிலும் இருக்கவும் கூடாதே | ||||
இயலாதென்ற சொல் எந்த நாவிலும் வரவும் கூடாதே | ||||
தெரிந்தது என்று நாம் பாடுவது எல்லாம் ஒன்றும் பயிலதததுதான் | ||||
இயலாதது என்று நாம் சொல்வது எல்லாம் ஒன்றும் முயலாததுதான் | ||||
எழாமல் படுத்திருந்தவனை விட நடந்து விழ்ந்தவன் நல்லவன் | ||||
முயலாமல் கிடந்தவனை விட முயன்று தோற்றவன் வல்லவன் www.v4all.org |
"மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்: கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும்; தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்; பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும் ஓம் ஓம் ஓம் ஓம்!"
Thursday, September 11, 2014
செயல்,உழைப்பு, பயிற்சி ,முயற்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment