Showing posts with label sales trainer in chennai. Show all posts
Showing posts with label sales trainer in chennai. Show all posts

Wednesday, July 8, 2015

தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம்

தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்பதே மன்னரின் சந்தேகம்.  அரசரின் சந்தேகத்திற்கான பதிலை சிற்பி ஒருவர், ஒரு சிலையின் மூலமாக விளக்கினார். அதை கேட்டு இராஜராஜ சோழன் மகிழ்ந்து, ஆயிரம் பொன் பரிசு தந்து, தஞ்சை பெரிய கோவிலுக்கான சிற்ப வேலைகளுக்கான பொறுப்புகளையும் அந்த சிற்பிக்கே தந்தார். இராஜராஜ சோழனின் கேள்விக்கு விடை தந்த சிற்பி வடித்த சிலை என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும். ஆயிரம் பொன் பரிசு மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு கேள்வி எழுந்தது. உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடிய பொருள் எது என்பதே அவர் கேள்வி.    “மன்னரின் கேள்விக்கான சரியான விளக்கத்தை அறிஞர்கள் மட்டுமல்லாமல் மக்களும் அளிக்கலாம். அனைவரையும் மகிழ்விக்கும் பொருளை அரண்மனையில் இருக்கும் கொலுமண்டபத்தில் வைத்து விடுங்கள், யாருடைய பொருள் அரசருடைய சந்தேகத்திற்கு சரியான விடை தருகிறதோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு.” என அறிவிக்கப்பட்டது. மக்களும் யோசித்து, அவர்களுக்கு தெரிந்து மகிழ்ச்சியை தரும் பொருட்கள் எவையோ அவற்றை கொண்டு வந்து அரண்மனை கொலு மண்டபத்தில் வைத்துவிட்டு ஆயிரம் பொற்காசுகள் பரிசுக்காக காத்திருந்தார்கள். மறுநாள், மன்னர் ராஜராஜ சோழர் கொலு மண்டபத்திற்கு வந்து பார்த்தார். மக்கள் வைத்த பொருட்கள் மண்டபத்தில் நிரம்பி இருந்தது. ஒவ்வொரு பொருட்களாக அரசர் பார்த்துக் கொண்டே வந்தார். முதலில், சிறிய அளவு பொன் இருந்தது. அதன் கீழே, “செல்வமே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “செல்வந்தர்களுக்கும், நோயாளிகளுக்கும் செல்வம் எப்படி மகிழ்ச்சியை தரும்?” அதனால் இது சரியான விளக்கம் அல்ல.” என அதை நிராகரித்தார் மன்னர். அடுத்ததாக, இசை கருவி இருந்தது. அதன் கீழே, “இசையே மகிழ்ச்சி தரக்கூடியது” என எழுதப்பட்டிருந்தது. ஆனால், “காது கேட்காதவர்களுக்கு இந்த இசை எப்படி மகிழ்ச்சியை தர முடியும்? இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என நிராகரித்தார். அடுத்து, அழகான மலர்கள் இருந்தன. “இவை, கண் தெரியாதவர்களுக்கு எப்படி மகிழ்ச்சியை தர முடியும்?. அதனால் இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது” அடுத்து, இனிப்பான பலகாரங்கள் இருந்தது. “நோயாளிகளுக்கு  எப்படி இனிப்பு மகிழ்ச்சியை தரும்?” என்று கூறி அதனையும் நிராகரித்த மன்னர் இராஜராஜ சோழர், அடுத்தாக ஒரு பெரிய சிவலிங்கத்தின் அருகில் வந்தார். அந்த சிவலிங்கத்தின் கீழே ஒரு சிற்பம். அதில் ஒரு தாய், பசியில் இருக்கும் ஒரு சிறுவனுக்கு உணவு தருவது போல அந்த சிற்பம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்த சிற்பத்தின் கீழே “அன்பே சிவம்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த சிலையை வைத்த சிற்பியை அழைத்து வாருங்கள் என்றார் மன்னர். வறுமை தின்ற உடலுடன் ஒரு ஏழை சிற்பி, மன்னரின் முன் அழைத்து வரப்பட்டார். “நீங்கள்தான் இந்த சிலையை இங்கு வைத்தீரா? இதன் பொருள் என்ன என்பதை விளக்கமாக சொல்லுங்கள்.” என்றார் மன்னர் அந்த சிற்பியிடம். “அரசே நான் ஒரு சிற்பி, இந்த சிலையை வடிவமைத்தது அடியேன்தான். சிவலிங்கத்தின் கீழே ஒரு பெண்மணி அன்போடு ஒரு சிறுவனுக்கு உணவு தருகிறாள். இந்த உலகில் அன்பை மட்டும்தான், கண் தெரியாதவர்ளும், காது கேட்காதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உணர முடியும். அதேபோல் உடல்நலம் இல்லாதவர்களும் அன்பைதான் எதிர்பார்க்கிறார்கள். அன்பு மட்டுமே உலகில் சிறந்தது. அன்பிருந்தால் எதிரியையும் நண்பனாக்கும். அன்பு இல்லையெனில் நண்பனையும் எதிரியாக்கும். உலகில் சிறந்ததும், அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதும்  அன்பு. அன்புதான் இறைவன். அதனால்தான் சிவலிங்கத்தின் கீழே தாயன்பு கொண்ட ஒரு பெண்மணியை வடிவமைத்து, ”அன்பே சிவம்” என்று எழுதி வைத்தேன்.” என விளக்கினார் சிற்பி. இதை கேட்ட அரசர் மிகவும் மகிழ்ந்தார். “உலகத்திலேயே அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடியது எது என்ற  என் சந்தேகத்திற்கு அற்புதமான விளக்கம். நீங்கள் ஒரு சிற்பி என்பதால் நான் கட்டும் தஞ்சை கோவிலுக்கு நீங்களே சிற்ப வேலையை செய்யுங்கள்.” என்று கூறி ஆயிரம் பொன்னையும் பரிசாக சிற்பிக்கு தந்து, ஏழை சிற்பியின் வாழ்க்கை தரத்தை உயர்த்தினார் அரசர். அன்புக்கு கட்டுப்படாதவர்கள் இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?. அன்புதான் அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது. அன்பே சிவம்.!

Tuesday, July 7, 2015

உண்மையான சுகம் தான் என்ன?

உண்மையான சுகம் தான் என்ன? - www.v4all.org 
உண்மையான சந்தோஷம் அடைவது எப்படி என்பதை அறிவதற்கு முன்னால் உண்மையான சந்தோசம் என்பது என்ன என்பதைப் பற்றி சற்று பார்ப்போம். எது நிலையானதோ அதுவே உண்மையானது ஆகும். நிலையான சந்தோஷம் தான் உண்மையான சந்தோசம் ஆகும். அதை அடைவது எப்படி?
உயிர் போகும் பசி எடுக்கும் போது ஒரு கவளம் சோறு அமிர்தமாய் ருசிக்கிறது. சொர்க்கமே அந்த ஒரு கவளச் சோற்றில் தெரிகிறது. அதே சோறு நீங்கள் வயிறு புடைக்க சாப்பிட்டபின் அதே சந்தோஷத்தைக் கொடுக்க முடியுமா? ஒரு பருக்கை சோறு கூட ஒரு நிலைக்கு பின் சாப்பிட முடியாது அல்லவா? வாந்தி எடுக்கும் நிலை ஏற்படும். சந்தோஷத்தைக் கொடுத்த அதே சோறு அப்போது நரகமாகிப் போகும். நிரந்தரமற்ற அது உண்மையான சுகம் அல்ல.
காம சுகமும் அப்படியே. சொர்க்கமாய் தெரியும் கட்டில் சுகம் அளவுக்கு அதிகமாய் ஒரே மூச்சில் தொடரப்படும் போது காமம் கசந்து தள்ளிப் படுக்கும் நிலை வந்து விடும். காமம் நிரந்தர சுகம் அல்ல. உண்மையான சுகமும் அல்ல.
பணம் கொடுக்கும் சுகம், மது கொடுக்கும் சுகம், மற்றைய போதை வஸ்த்துக்கள் கொடுக்கும் சுகங்களும் அப்படியே நிரந்தரமற்றவை. உண்மையான் சுகத்தைக் கொடுக்கமுடியாதவை அவை.
அப்படியானால் நிரந்தரமான, உண்மையான சுகம் தான் என்ன? நாம் நம்மை உணரும் போது, நம்முள் இருக்கும் இறை சக்தியை உணரும் போது, அந்த இறைவனுடன் தொடர்பு கொள்ளும்போது பேரின்பம் கிடைக்கும். அந்த இன்பம் துய்க்க துய்க்க சலிக்காது. இன்பமும் குறையாது. அது தான் நிலையான உண்மையான சந்தோஷம் ஆகும்.
தினமும் சிரத்தையோடு தியானம் செய்தால் நாம் நம்மை உணரலாம். நம்முள் இருக்கும் இறை சக்தியை உணரலாம். பேரின்பத்தை அனுபவிக்கலாம். உண்மையான சந்தோஷம் நமக்கு வசப்படும். அது ஒன்றும் எளிதான காரியம் அல்ல என்று எனக்கும் தெரியும். எந்த பெரிய சாதனைகளும் சிறிய முயற்சிகளில் தான் ஆரம்பிக்கின்றன. தியானம் செய்வோம். உண்மையான சந்தோஷத்தை அனுபவிப்போம்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Saturday, July 4, 2015

அறிய வேண்டிய ஆளுமைகள் !

அறிய வேண்டிய ஆளுமைகள் ! - www.v4all.org


மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த ஆப்பிள்கள் மூன்று. ஆதாம் ஏவாள் கண்ட ஆப்பிள். ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள். கடவுளின் உலகத்தில் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் உலகத்திலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகி விட்டதுதான் ஆச்சரியம். ‘கம்ப்யூட்டர்’ என்கிற சொல்லை உச்சரிக்க உலகத்தின் உதடுகள் எழுத்துக் கூட்டியபோது, அதன் சுவையை உணர்த்திய பெயரே ஆப்பிள்தான்!
கையாளச் சிரமமான காரியம் என்று கம்ப்யூட்டர் குறித்த கருதுகோளை உடைத்தது கூட, ஆப்பிள் செய்த அரிய சாதனைதான். வெற்றியின் உச்சத்தில் இருந்த ‘ஆப்பிள்’ விழுந்த கதைகூட, வெல்ல நினைப்பவர்களும் சொல்லும் பாடம்தான்.
ஆப்பிள் என்கிற அதிசயக் கனவு மலர அடித்தளமாய் விழுந்த விதைகளும், பிறகுவளர்ந்த நிலைகளும், வளர்ந்த நிலையில் எழுந்த விரிசல் களும், ஒரு நாடகத்தின் சுவாரஸ்யத்தோடு நடந்தேறின.
சான்பிரான் ஸிகோவிலிருந்து நாற்பது மைல் தொலைவில் சிலிகான் பள்ளத்தாக்கின் சிறிய நகரமொன்றில், தன் பட்டப்படிப்பை முடித்தபிறகு 1975-இல் என்ன செய்வதென்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த இளைஞர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இந்தியாவில் கொஞ்ச காலம் சுற்றித் திரிந்து விட்டுத் திரும்பியிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அட்டாரியில், வீடியோ கேம் புரோகிராமராகப் பகுதி நேரப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
கம்ப்யூட்டரை ஒரு பயனுள்ள பொழுது போக்காகக் கருதிக் கொண்டிருந்த இளைஞர்கள் இணைந்து ‘ஹோம்ப் ரூ கம்ப்யூட்டர் கிளப்’ என்கிற பெயரில்


ஒரு கம்ப்யூட்டரை தானே உருவாக்க முடியாத ஸ்டீவ் ஜாப்ஸ், அந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்த ஸ்டீவ் வோஸானியா என்கிற இளைஞரின் துணை மேற்கொண்டார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி இருந்த வோஸானியா, கம்ப்யூட்டர் உருவாக்குவதில் கெட்டிக்காரராய் இருந்தார்.
ஒரு சங்கம் வைத்திருந்தார்க்ள். அதில் சங்கமித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
இரண்டு கைகளும் இணைந்தன. ஸ்டீவ் ஜாப் தன் வோஸ்க்ஸ் வேகன் காரை விற்றார். வோஸானியா என்கிற வோஸ், தனது கால்குலேட்டரை விற்றார்.
கலிபோர்னியாவில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் கார்ஷெட்டில் இவர்களின் கம்ப்யூட்டர் பயணம் ஆரம்பமானது. வோஸ் வடிவமைத்த ஐம்பது சர்க்யூட் போர்டுகளை விற்கத் தொடங்கினார்கள். ஒவ்வொன்றும் 500 டாலர்களுக்கு விலை போயிற்று.
பீட்டில்ஸ் இசைக் குழுவின் ரசிகராகிய ஸ்டீவ் ஜாப்ஸ், அவர்களின் ‘ஆப்பிள்’ இசைத் தொகுப்பின் நினைவாக, தன் நிறுவனத்திற்கு ஆப்பிள் என்று பெயர் வைத்தார். 1976 ஏப்ரல் 6-இல் ‘ஆப்பிள்’ உதயமானது.
அப்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வயது 21. வோஸ் வயதோ 26, வணிகத்தில் நல்ல அனுபவமுள்ள மூன்றாவது பங்கு தாரரை உள்ளே கொண்டுவர முடிவு செய்தார்கள். அப்போது அறிமுகமானவர்தான் மைக் மார்க்குலா.
இன்டெல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவை கவனித்துக்கொண்டிருந்தார் மார்க்குலா. அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தார். அதன்மூலம் இலட்சக்கணக்கான டாலர்களுக்கு அதிபதியாகி விட்ட மார்க்குலாவிற்கு அப்போது வயது 33.
மார்க்குலா ஒரு நல்ல வணிகத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். அமெரிக்க வங்கியிடம் கடனுதவி பெற்றுத் தந்ததோடு தானே 91,000 டாலர்களை முதலீடு செய்தார்.
வசீகரமான தோற்றத்தில் எளிய செயல் பாட்டு அம்சங்களுடன் வோஸ் வடிவமைத்த ஆப்பிள் ஐஐ பெரும் வெற்றி பெற்றது. 1980-க்குள் நான்கே ஆண்டுகளில் நிகரற்ற வளர்ச்சியைக் கண்டது ஆப்பிள்.
ஜாப்ஸின் கம்ப்யூட்டர் கனவுகளில் மேகின்டாஷ் முக்கியமானது. நவீன அம்சங்களும், விளையாட்டுத்தனமான வெளிப்பாடுகளும் கொண்ட மேக், கம்ப்யூட்டர் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் தீர்மானத்தோடு உருவாகிக் கொண்டிருந்தது. மேக் உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்குக் கண்மூடித்தனமாக ஆதரவு தந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஆப்பிள் ஐஐ குழுவினரைத் தாழ்த்தும் விதமாக ஜாப்ஸ் செயல்பட்டு வந்தது பலரின் மனங்களையும் புண்படுத்தியது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு வசீகர காந்தமாய் விளங்கியவர். தொழில்நுட்பத் தேர்ச்சி இல்லாதபோதும்கூட எல்லோரையும் ஈர்க்கும சக்தி இருந்ததென்னவோ உண்மைதான்.
ஆனால், தன் அலுவலர்களை சரிவர நடத்தத் தெரியவில்லை அவருக்கு. ஓர் அலுவலரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொல்வது பிடிக்காவிட்டல் மேசையின் மேல் தன் காலைத் தூக்கி வைத்து, அவர் முகத்துக்கு நேரே நீட்டுவார் ஜாப்ஸ்.
மேகின்டோஷ் உருவாகும் முன்னரே, ஆப்பிள் ஐஐ குழுவினர் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டனர். இதற்கிடையே ஒரு நிர்வாகியை நியமிக்க முடிவு செய்தனர். மைக்ஸ் காட் என்பவரை நியமித்த மார்க்குலா இரண்டே ஆண்டுகளில் அவரைப் பணியை விட்டு நீக்கினார்.
பிறகு வந்தவர்தான் ஜான் ஸ்கல்லி, பெப்ஸி நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக விளங்கியவர். ஜான் ஸ்கல்லி மீது ஜாப்ஸ் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து ஆப்பிள் வளர்ச்சியின் அசுர அத்தியாயங் களை உருவாக்கினார்கள்.
1984இல், மேகின்டோஷ் அறிமுகத்திற்காக அவர்கள் செய்த அதிரடி விளம்பரம் அமெரிக்காவை உலுக்கியது.
மேகின்டோஷ் எனப்படும் மேக், நவீன அம்சங்களை நிறையக் கொண்டிருந்தது. ஆனால் நவீன அம்சங்களே அதன் செயல்திறனுக்கு முட்டுக்கட்டை போட்டன.
இதற்கிடையே ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாப்ஸ் அனாவசியத் தலையீடுகளை செய்வதாகப் புகார்கள் எழுந்தன. ஜாப்ஸின் அதிகாரங்களைப் பறிக்க ஸ்கல்லி முடிவு செய்தார். விரிசல் வலுத்தது.
1985இல் மே மாதம் 24ம் தேதி நடந்த போர்டு மீட்டிங்கில் தன் இயக்குநர் குழு தன்னை ஆதரிக்க வில்லை என்று அறிந்து கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.
ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்த கால கட்டத்தில்தான், கம்ப்யூட்டர் துறை, தன் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஆளுமையும் வசீகரமும் ததும்பி வழிந்த ஸ்டீவ் ஜாப்ஸ், எதிரி நிறுவனம் ஒன்றில் தலையெடுக்கத் தொடங்கியிருந்த ஒரு சாதுவான இளைஞனை அலட்சியமாகப் பார்த்தார்.

விடலைப் பருவத்தில், கனத்த கண்ணாடிகளுடன், நடுவீதியில் சிக்கிய மான் போல் கூச்சமும் விலகல் மனோபாவமும் கொண்டு, அதேநேரம் தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனின் பெயர் – பில்கேட்ஸ்!!
அவரை வெகு துச்சமாக மதித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ், அப்போது ஆப்பிளின் வருடாந்திர விற்று வரவு 1.5 பில்லியன் டாலர்கள். மைக்ரோ சாஃப்ட்டுக்கோ வெறும் 98 மில்லியன் டாலர்கள்தான்.
ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறிய பிறகு ஜான் ஸ்கல்லி, நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் பொறுப்பேற்றார். தளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை “மளமள”வென்று வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார் அவர். ஸ்கல்லி ஒரு தேர்ந்த நிர்வாகி. ஆனால் தொழில்நுட்பப் பின்புலம் கிடையாது.
அதேநேரம், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆளுமைமிக்க தலைவராய் வளர்ந்த பில்கேட்ஸ், ஒரு தொழில்நுட்ப நிபுணராகவும் தலைசிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார்.
மிக வேகமாக வளர்ந்து வந்த ஆப்பிளின் தலைவர், தொழில்நுட்பப் பின்புலம் இல்லாதவ ராய் இருந்தார். எனவே, தொலைநோக்கோடு எடுத்திருக்க வேண்டிய ஒரு முக்கிய முடிவை மறந்தார்.
இன்டர்நெட் – இதன் தாக்கம் எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கவில்லை ஆப்பிள். வோஸானியா எடுத்த சில தொழில்நுட்ப முடிவுகளும் தவறாகிப் போயின. நிறுவனத்தில் மீண்டும் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின.
இம்முறை ஜான் ஸ்கல்லி பலியிடப்பட்டார். 1993-இல் ஜூன் மாதத்தில் பல் பிடுங்கப்பட்ட பாம்பானார் ஸ்கல்லி. அதன்பின் அவர் வெளியேற நேர்ந்தது.
ஸ்கல்லியை நகர்த்திவிட்டுத் தலைமை நாற்காலிக்கு வந்தவர் ஸ்பின்ட்வர். ஒரு காலத்தில் ஸ்கல்லியால் நியமிக்கப்பட்டவர். ஆனால், ஸ்பின்ட்வரும் 1996-இல் அகற்றப்பட்டார்.
இன்டர்நெட்டை ஏற்பதில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் பின் தங்கியது. இன்டர்நெட் கலாச்சாரத்தை மையப்படுத்தியே மைக்ரோசாப்ட் முன்னணிக்கு வந்திருந்தது.
அமெரிக்க முன்னணி இதழ்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வீழ்ச்சியைப் பதிவு செய்தன. “ஒவ்வொரு சமூகமும் தத்துவத்தால் வளர்கிறது. தனிமனிதனால் அழிகிறது” என்றார் கவிஞர் வைர முத்து.
தனிமனித மோதல்களாலும் தொலை நோக்கை இழந்ததாலும் வெற்றியின் உச்சத்தி லிருந்து விழுந்தது ஆப்பிள். என்றாலும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு கணினி என்னும் வரத்தை வழங்கிய மூலமூர்த்திகளில் முக்கிய மானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.
2005 ஜுன் 12இல், அவர் ஆற்றிய உரையில், தன் வாழ்வு குறித்தும் வந்திருக்கும் நோய் குறித்தும் பகிரங்கமாகப் பேசினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
பதினேழு வயதிருக்கும்போது வாசகம் ஒன்றை வாசித்தேன். “இன்றுதான் உன் கடைசி நாள் என்பதுபோல் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்திடு” என்பதே அந்த வாசகம். வாழ்வின் முக்கிய முடிவுகள் எடுக்க இந்த வாசகம் எனக்குதவியது.
ஓராண்டுக்கு முன்பு எனக்குப் புற்றுநோய் என்பது உறுதியானது. அதை குணப்படுத்தவே முடியாதென்று மருத்துவர்கள் நினைத்தார்கள்.
மற்றுமொரு சோதனையில் வாழ்க்கை குறிப்பிட்ட காலம்வரைதான். வாழ்கிற நாட்களை வீணே கழிக்காதீர்கள். அடுத்தவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு உள்ளே ஒலிக்கிற குரலை புறக்கணிக்காதீர்கள். “உங்கள் குறிக் கோளுக்கே முதலிடம் கொடுங்கள்” என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
2011 அக்டோபரில் காற்றில் கலந்த அவரின் இறுதி சுவாசம், பூமிப்பந்தின் போக்கை திசை மாற்றிய அமைதியுடன் நிறைவடைந்திருக்கும் என்பதுதான் நம் பிரார்த்தனையும் நம்பிக்கையும்.


- மரபின் மைந்தன் ம. முத்தையா

Tuesday, September 23, 2014

காயத்திரி மந்திரம் - இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும்

காயத்திரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்

அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.

24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும்சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத  எனப்படும்.

இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில்  காயத்ரி க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.

இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களுள்ள காயத்ரி மந்திரமும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன் கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும்.

காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

காயத்ரி மந்திரத்தின் பதவாரியான பொருள் பின்வருமாறு:

யோ                     -எவர்
                           -நம்முடைய
தியோ                 -புத்தியை
தத்                        -அப்படிப்பட்ட
ப்ரசோதயாத்    -தூண்டுகிறாரோ
தேவஸ்ய          -ஒளிமிக்கவராக
ஸவிது               -உலகைப் படைத்த
வரேண்யம்        -மிகவும் உயர்ந்ததான
பர்கோ                  -சக்தியை
தீமஹி                -தியானிக்கிறோம்

நமது புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள். காயத்ரி மந்திரத்தின் சிறப்பை உலகுக்கு உணர்த்தியவர் பிரம்ம ரிஷி விஸ்வாமித்திரர்.