டார்ச்சர் பழகுவோம்.
1.ஒரே டார்ச்சராக போச்சு இவனோட.மனசு ஒரே டார்ச்சரா இருக்கு.எல்லோரும் என்னை டார்ச்சர் செய்கின்றார்கள்.இப்படிப்பட்ட மனநிலையை உணராதவர்கள் யாரும் இருக்க முடியாது.ஜிவ்வென்ற கண்கள் மனதிற்குள் ஒரு இனம் புரியாத வேதனை ,பயம் ,கலக்கம் இப்படி பல உணர்வுகளும் நம்மை ஆக்கிரமித்து நம்மை இயல்பு நிலையில் இருந்து பிறழச் செய்து ஏதாவது ஒன்றின் மேல் மட்டும் நமது கவணத்தை நாம் வேதனையோடு வைத்திருக்கும் மனநிலை எனலாம்.
2.ஏதோ ஒன்றை ஏற்கப் போகின்றோம் இல்லை மறுக்கப் போகின்றோம் இல்லை உதாசீனப்படுத்தப் போகின்றோம் என்பது தான் டார்ச்சர் எனப்படும் மன வேதனையின் முடிவாக இருக்க முடியும்.நான் சிந்திக்கின்றேன் அதனால் எனக்கு உயிர் இருக்கின்றது.என்னைச் சுற்றி உள்ள எல்லா சோதனைகளும் எனக்குத் தெரிகின்றது என்னை வாழ விடு என்னை வாழ விடு என்று ஒவ்வொரு உயிரும் வாழ்ந்து கொண்டிருகின்றது.
3.ஒன்றுமில்லாததில் இருந்து ஒன்றும் வரப் போவதில்லை.இந்த பிரபஞ்சத்தில் எதற்குமே நீங்கள் பொறுப்புக் கிடையாது ஒரு தூசியைக் கூட நகர்த்துவதற்கு நமக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை.எல்லா இயக்கங்களும் ஒரு விதிக்குக் கட்டுப்பட்டு இயங்குகின்றது.அந்த விதிக்குக் கட்டுப்பட்டு இயங்கும் பணி மட்டுமே நம்முடையது.
4.அந்த விதியின் போக்கைப் புரிந்து கொண்டவர்கள் இயற்கையின் வழியாக தங்களது செய்கைகளைப் படைக்கின்றார்கள்.இயற்கையின் செயலாக தங்களது செயலை மாற்றுகின்றார்கள்.இந்த அளவிற்கு மட்டுமே நமது தனிப்பட்ட திறமையினை நாம் செயல் படுத்தலாம்.இதனை உணரும் போது அப்பாடா நமது செயலால் தான் விளைவுகள் ஏற்படுகின்றன என்ற பொறுப்பேற்கும் நிலையால் மனதில் ஆறுதல் ஏற்படும் . ஒரு செயலின் முடிவோ ஒரு நபரின் செயலோ நம்மை எப்படியெல்லாம் பாதிக்கும் என்ற கற்பனையே மன வேதனைக்கும் கலக்கத்திற்கும் அடித்தளமாக இருக்கின்றன.
5.நாம் ஒன்றும் சூரியனைத் தினம் தோறும் காலையில் எழுப்பிவிட்டும் ,காற்றை எங்கும் பரவவிட்டும் ,கடல் அலைகளை கரையை நோக்கித் தவழ விடவும் தேவையில்லை.அப்படிச் செய்ய இயற்கையைத் தவிர யாருக்கும் அதிகாரம் கிடையாது .அப்புறம் எதற்கு நமக்கு எந்த ஒரு செயலிலும் மன வேதனைகள்.நாம் இந்த உலகம் முழுவதும் ஆண்ட மன்னன் அலெக்சான்டர் போல இருந்தாலும் ,நமது செய்கை ஒன்றும் இயற்கையின் காலடிகளில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்படுவதில்லை.சூரியனின் ஜீவாலைகளில் பதிக்கப்படப் போவதில்லை .அப்புறம் எதற்கு நமக்கு இந்த மனவேதனை.

6.யாரும் நம்மை முந்தி உயிரோடு சென்று சொர்க்கத்தின் வாசலில் காத்திருக்கவில்லை.நாம் எல்லோரும் இயற்கையின் ஆக்கினை எனப்படும் அதன் விருப்பத்திற்குட்பட்டு அதனுடைய செயல்களைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம்.அதற்காக இயற்கை ஒன்றும் நம்மை முதலாளி ,வேலைக்காரன் பாணியில் தனது சுயநலத்திற்காக வேலை வாங்கிக் கொண்டிருக்கவில்லை.இயற்கை தன்னைப் போலவே மனிதர்களைப் படைத்தும் இயற்கையாக தன்னைப் போலவே தனது விதிகளின் அடிப்படையில் இயங்க அதிகாரம் கொடுத்துள்ளது.அதனைப் புரிந்து அதன் போக்கில் இயங்குவதே மனிதனுடைய அறிவின் செயல்.
7.மன்னிக்கும் மனப்பாண்மை என்பது எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாண்மை எனலாம்.குறைகளுக்குள்ளும் நிறைகளைக் காண்பவருக்கே தங்களுக்குக் குறைகளாகத் தெரியும் சூழ்நிலைகளையும் மனிதர்களையும் மன்னிக்கும் மனோபாவம் வரும்.அன்பு இருக்கும் இடத்திலேயே மன்னிப்பும் குடி கொண்டிருக்கின்றது .மன்னிப்பு இல்லாமல் அன்பு இல்லை அன்பு இல்லாமல் மன்னிப்புக் கிடையாது.மன்னித்தல் விதியை மறக்காமல் இருப்போம்.அன்பு என்னும் உணர்வின் மேல் நம்பிக்கை உடையவர்களே மன்னித்தல் மூலம் மன வேதனைகளையும் மகிழ்ச்சிகரமானதாக மாற்றுகின்றார்கள்.
8.நமக்கு மனக் கலக்கத்தையோ மன வேதனையோ ஏற்படுத்திய நபரை நமது மனக் கண்ணில் கொண்டு வந்து அவர்களுக்குள் நமது அன்பு என்னும் மனநிலையைப் பரவவிடுவது போல் கற்பனை செய்வோம்.அவர்களுக்கு எதிராக கோபத்தையோ நமது இயலாமையையோ நாம் கற்பனை செய்யக்கூடாது.நமக்கு மனக் கலக்கத்தை ஏற்படுத்திய நபர்கள் நன்றாக இருக்க வேண்டும் அவருக்குள் இயற்கையின் ஆசீர்வாதம் இறங்க வேன்டும் என்று வேண்டிக் கொள்வோம்.இதனால் சூழ்நிலைகள் உடனடியாக மாறத்தொடங்கும் மந்திரம் போல.
9.மன்னித்தல் மூலம் நமக்கு மனக்கலக்கத்தை ஏற்படுத்தியவர்களிடம் இருந்து அவர்களது சக்தியைப் பெறுகின்றோம்.ஆகையால் எப்போது யாரை எந்த சூழ்நிலையில் மன்னிக்க வேண்டும் அவர்க்ளிடம் இருந்து எத்தகைய சக்திகளைப் பெற வேண்டும் என்பதற்கான கைகாட்டி தான் மனக் கலக்கங்களும் மன வேதனைகளும்.நமது வாழ்க்கையில் நாம் ஒருவரிடம் இருந்து சக்தியை எடுக்கின்றோமா அல்லது இழக்கின்றோமா என்பது நமது இந்த மனப்பாண்மையை நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தது.

10.எப்போதெல்லாம் நாம் மனக்கலக்கத்திற்கு உள்ளாகின்றோமோ அப்போதெல்லாம் நமது சக்தியை ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு நபரோ சூழ்நிலையோ கவர்ந்து கொண்டிருக்கின்றது என்று
அர்த்தம்.மன்னிப்பு மற்றும் ஆசிர்வாதம் மூலமாக அந்த நபரை நாம் ஏற்கும் போது அவரிடம் இருந்து அவரது சக்தியை நாம் கவர்ந்து கொண்டிருக்கின்றோம் என்று பொருள்.இதனால் நமது சக்தி விரையம் ஆவது தடுக்கப்பட்டும் மற்றவர்களது சக்தியைப் பெற்றும் நாம் வெற்றியுடையவர்கள் ஆகின்றோம்.
11.மன வேதனை என்னும் டார்ச்சருக்கு இந்தக் கருத்துக்கள் டார்ச்சராகத்தான் இருக்கும். இந்தப் பதிவைப் படிக்கும் உங்களுக்கு அல்ல.இந்தப் பதிவைப் படித்து நீங்கள் மனக்கலக்கத்திற்கு உள்ளானால் நீங்கள் உங்கள் சக்தியை இழக்கின்றீர்கள் மன்னித்து விட்டால் என்னிடம் இருந்து சக்தியை எடுக்கின்றீர்கள்.நானும் தான்.
படங்கள்:நன்றி கூகுள் படங்கள்.

No comments:
Post a Comment