Monday, September 1, 2014

உங்கள் திறமைகளை நிரூபிக்கும் இடங்களை சரியாக தேர்வு செய்யுங்கள்.

ஒரு மரத்தால் ஒரு லட்சம்
தீக்குச்சிகள் தயார் செய்ய முடியும்.
ஒரே தீக்குச்சியால் ஒரு லட்சம்
மரங்களை அழிக்கவும் முடியும்.
ஒரு தீய எண்ணம்
நம்முள் இருக்கும்
அத்தனை நல்ல
எண்ணங்களையும்
எரிக்கக் கூடும்!!
வாழ்க்கை
ஒரு புல்லாங்குழல்!
துளைகளும்,
வெறுமையும் நிறைந்தது!
நீங்கள் திறமையானவர்களாக
இருந்தால்
பல மாய கானங்களைக்
காற்றில் பறப்ப முடியும்.
கடலில் விழுகிற நீர்த்துளிக்கு
எந்த தனித்தன்மையும் இல்லை!!
தாமரை இதழில் விழுந்த
நீர்த்துளிக்கு முத்துபோல் ஒளிரும் தன்மையுண்டு!!
உங்கள் திறமைகளை நிரூபிக்கும்

இடங்களை சரியாக தேர்வு செய்யுங்கள்.

Urs Happily
www.v4all.org

No comments:

Post a Comment