Showing posts with label TAMIL MOTIVATION TRAINER. Show all posts
Showing posts with label TAMIL MOTIVATION TRAINER. Show all posts

Saturday, October 18, 2014

பைரவர் உருவான புராணக்கதை

பைரவர் உருவான புராணக்கதை


அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து,சிவபெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.



தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

1)அசிதாங்க பைரவர் + பிராம்மி

2)ருரு பைரவர் + மகேஸ்வரி

3)உன்மத்த பைரவர் + வாராஹி

4)குரோதன பைரவர் +வைஷ்ணவி

5)சண்டபைரவர் + கவுமாரி

6)கபால பைரவர் + இந்திராணி

7)பீஷண பைரவர் + சாமுண்டி

8)சம்ஹார பைரவர் + சண்டிகா 

ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர்.



இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.



பைரவரை ஜைன சமயத்தில் விஜயபத்திரர்,வீரபத்திரர்,மணிபத்திரர்,ஸ்ரீபைரவர்,அபராஜிதர் என அழைக்கின்றனர்.

ஜைன சமயத்தில் 96 வகையான பைரவர்கள் உள்ளனர்.பௌத்த சமயத்தில் 84 வகையான பைரவர்களும்,வாமம் என்னும் சாக்த மதத்தில் 64 வகையான பைரவர்களும் உண்டு.கிறிஸ்தவ சமயத்தில் “நோவாஸ் ஆர்க்”, “செயிண்ட் மைக்கேல்”, “செயிண்ட் ஜார்ஜ்” ஆகியோர் பைரவ அம்சங்களே.



ஆகமங்கள்,சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் மேலே கூறப்பட்டவை,தெள்ளத்தெளிவாக விளங்கும்.

அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில்,அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள். 

yours Happily 
Dr.Star Anand ram
Money Attraction Consultant
www.v4all.org
9790044225 

Sunday, August 17, 2014

ஆர்வம் வேறு... திறமை வேறு... வெற்றி ரகசியம்! ச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.

ஆர்வம் வேறு... திறமை வேறு... வெற்றி ரகசியம்!



சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம்
சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம்
ஆர்வத்துக்கும் திறமைக்கும் முரண்பாடு வந்தால் என்ன செய்வது என்னும் கேள்வியோடு சென்ற வாரம் முடித்திருந்தோம். இன்று பலருக்கும் உள்ள பிரச்சினை இதுதான் என்பது போகிறபோக்கில் மாணவர்கள் சிலரைக் கேட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும்?
உங்களுக்கு எது நன்றாக வரும்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலைச் சொல்பவர்கள் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். எனக்குப் பாடப் பிடிக்கும், ஆனால் குரல் சரியில்லை, எனக்கு கிரிக்கெட் பிடிக்கும், ஆனால் சீக்கிரமே அவுட் ஆகிவிடுவேன், எனக்கு அறிவியல் பிடிக்கும், ஆனால் சமன்பாடுகளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது…
பிடித்தது கையில் சிக்க மாட்டேன் என்கிறது. இது ஒரு ரகம்.
இன்னொரு ரகம் இருக்கிறது. எதில் திறமை இருக்கிறதோ அது அவ்வளவாகப் பிடிக்க மாட்டேன் என்கிறது என்பவர்கள் இந்த ரகம். நன்றாக ஓவியம் வரையத் தெரியும், ஆனால் ஓவியத்தில் பெரிய ஆர்வம் இல்லை. நன்றாக ஓடுவேன் ஆனால் அதெலெடிக்ஸில் ஈடுபாடு கிடையாது, நிகழ்ச்சிகளை நடத்தச் சொன்னால் கலக்கிவிடுவேன் ஆனால் அதெல்லாம் தேவையில்லாத தொல்லை…
உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆர்வமும் திறமையும் பரஸ்பரம் இணைந்து போகாத நிலைதான் தொழில் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான பிரச்சினை. இப்படிப்பட்ட சிக்கல் வரும்போது என்ன செய்வது?
ஆர்வத்துக்கு முதலிடம்
ஆர்வத்துக்கு முதலிடம் தர வேண்டும் என்றுதான் தொழில் ஆலோசகர்கள் சொல்கிறார்கள். எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்துக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. ஆர்வம் ஆழமாக இருந்தால் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும் அந்த ஆர்வமே தந்துவிடும். பாட்டு, விளையாட்டு, அறிவியல் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். எனக்குப் பிடித்திருக்கிறது, ஆகவே நான் இதைச் செய்கிறேன் என்னும் எண்ணம் ஒருவரது முனைப்பையும் முயற்சியையும் பெருமளவில் பெருக்கிவிடும். எனவே ஆழமான ஆர்வம் உள்ள துறையில் திறமை வந்துவிடும்.
அப்படி வந்துவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் சில விஷயங்களில் ஆர்வம் எத்தனை தீவிரமாக இருந்தாலும் திறமையை ஒரு மட்டத்துக்கு மேல் வளர்த்துக்கொண்டு செல்ல முடியாது. உதாரணம் வாய்ப்பாட்டு. ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் அடிப்படையாக ஓரளவேனும் நல்ல குரல் அமையாவிட்டால் ஒரு அளவுக்கு மேல் திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது. விளையாட்டிலும் அப்படித்தான். கிரிக்கெட்டின் மேல் வெறியாக இருக்கலாம். வெறித்தனமாக உழைக்கலாம். ஆனால் இயல்பாகவே கிரிக்கெட் திறன் இல்லாவிட்டால், அதில் ஒரு மட்டத்துக்கு மேல் போக முடியாது. அப்படிப் போக முடியும் என்றால் இன்று இந்தியாவில் ஆயிரம் சச்சின் டெண்டுல்கர்களும் இரண்டாயிரம் கும்ப்ளேகளும் உருவாகியிருக்க வேண்டும். ஏன் உருவாகவில்லை? ஆர்வம் மட்டும் போதாது என்பதுதான் காரணம்.
ஆர்வத்தை மட்டும் பின்தொடர்வதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. விளையாட்டு, ராணுவம் போன்ற சில துறைகளுக்கு உடல் வலுவும் திறனும் அவசியம். இவை இரண்டும் இல்லாதவர்கள், ஏதேனும் காரணத்தால் உடலில் குறைபாடு உள்ளவர்கள், எவ்வளவு முயன்றாலும் அந்தத் துறையில் பிரகாசிப்பதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது. எனவே, ஆர்வம் என்பதைக் கண்மூடித்தனமாகப் பின்தொரட முடியாது.
சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறன்கள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது வசப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது.
உங்கள் பாதை உங்கள் பயணம்
திறமை இருந்தால்…
ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம்.
அதற்காக ஆர்வத்துக்கு அணை போட்டு இயல்பான ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டியது இல்லை. மனதுக்கு அதிகமாகப் பிடித்த ஒரு விஷயத்தைப் பொழுதுபோக்காகவோ மாற்றுத் துறையாகவோ வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, பாட்டைப் பிரதானத் துறையாகக் கொண்டவர் எழுத்திலும் பிரகாசிக்கலாம். திறமையின் அடிப்படையில் ஆசிரியராக இருக்கும் ஒருவர், ஆர்வத்தின் அடிப்படையில் ஓவியம் அல்லது கைவினைத் தொழிலில் நேரம் கிடைக்கும்போது ஈடுபடலாம். ஆர்வத்துக்கும் தீனி, வருமானத்துக்கும் வழி.
இதுவரை பார்த்த விஷயங்களைத் தொகுத்துக்கொள்வோமா?
தனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம்தான் அடிப்படை. ஆனால் ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்துவிடாது. எனவே திறமையில் சறுக்கும் பட்சத்தில் உஷாராக ஆர்வத்துக்குச் சற்றே அணைபோட்டுவிட வேண்டும். திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்கக்கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதைப் பிரதானத் துறையாக வைத்துக்கொள்ளலாம். ஆர்வம் அதிகமாக உள்ள விஷயத்தை இழந்துவிடாமல் பொழுதுபோக்காகவோ இரண்டாவது துறையாகவோ வைத்துக்கொள்ளலாம்.
ஆர்வம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் திறமை அப்படி அல்ல. தவிர, திறமையைத் தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனவே திறமையைக் கண்டுகொண்டு, அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதில் சிறப்பாக வருவதே சிறந்த வழியாக இருக்க முடியும்.
பொருத்தமான உதாரணத்துடன் இந்தக் கட்டுரையை முடிக்கலாம். ஒரு பையன் கிரிக்கெட் பயிற்சி மையத்துக்குச் சென்றான். வேகப் பந்து வீச்சைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆசை. சில மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் தன் திறமையை வளர்த்துக்கொண்டான்.
பந்துவீச்சுப் பயிற்சியின்போது சில சமயம் மட்டை வீச்சிலும் ஈடுபட வேண்டுமல்லவா? அப்படி அவன் ஆடும்போது தலைமைப் பயிற்சியாளர் அவனைக் கவனித்தார். அவனது மட்டை பேசும் விதத்தைக் கண்டு அசந்துபோனார். அவனைக் கூப்பிட்டு, “உனக்குப் பந்து வீச்சு சரிப்பட்டு வராது, நீ போய் பேட்டிங் பயிற்சி செய்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அந்தப் பையன் ஏமாற்றத்துடன் திரும்பினான். ஆனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். பின்னாளில் உலகிலேயே சிறந்த மட்டையாளர் எனப் பெயர் வாங்கினான். அவன் செய்த சில சாதனைகளை யாராலும் நெருங்கக்கூட முடியாது என்னும் அளவுக்குச் சாதனைகள் புரிந்தான்.
அவன் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.

Urs Happily

Dr.Star Anand Ram
Self motivation Trainer
www.v4all.org
cell-9790044225


Monday, July 21, 2014

ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்!

ருத்ராட்சத்தின் மருத்துவ குணங்கள்!
ருத்ராட்சத்தைக் கழுத்தில் அணிவதால் புற்று நோய் கூட தணியும் என்று சமீபத்தில் வெளியான சில ஆராய்ச்சிக் குறிப்புகள் வெளிப்படுத்துகின்றன. பித்தம், தாகம், விக்கல் போன்வற்றிற்கு இது மிகவும் நல்லது. கபம், வாதம், தலைவலி போன்ற நோய்களுக்கு ருத்ராட்சம் சிறந்த மருந்தாகும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது. ருசியை விருத்தி அடையச் செய்யும். மன நோய்களுக்கு சாந்தம் அளிக்கும். கண்டகாரி, திப்பிலி என்பவற்றுடன் இதைச் சேர்த்து கஷாயம் செய்து அருந்தினால் சுவாச கோசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.
ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை எடுத்து அதில் எலுமிச்சம் சாறு விட்டு இழைத்து, அந்தச் சாற்றை தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி உடனே நீங்கும். இந்த ருத்ராட்சம் துõக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு நல்ல நிவாரணி. இதை பால்விட்டு இழைத்து அந்தச் சாற்றை கண் இமைகள் மீது தடவிக் கொண்டால் நிம்மதியான உறக்கம் வரும். இந்த ருத்ராட்சத்தை துõளாக்கி துளசிச் சாற்றில் கலந்து உட்கொண்டால், பக்கவாத நோயும் குணமாகும். தண்ணீரில் இதைப் போட்டு சில மணி நேரம் ஊற வைத்து, பிறகு ருத்ராட்சத்தை எடுத்துவிட்டு தண்ணீரை உட்கொண்டால் ரத்த அழுத்த <உபாதைகள் நிவாரணம் ஆகும். ஒரு முக ருத்ராட்சம் மிகவும் அரிதாகக் கிடைக்கிறது. ஒரு முக ருத்ராட்சத்தை சன்யாசிகள் மட்டுமே அணிய வேண்டும். பிறர், வீட்டில் உள்ள சாளக்கிராமம் மற்றும் விக்ரகங்களுடன் வைத்துப் பூஜை செய்யலாம். ருத்ராட்சத்தைக் கழுத்தில் மாலையாக 32ம், கை மணிக்கட்டில் 12ம், மேல் கையில் 16ம், மார்பில் 108ம் ஆக தரிக்கலாம்.
ஏக முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பரமசிவன். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
இரண்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை ஸ்ரீகண்ட பரமசிவம். இதை அணிவதால் பசுவைக் கொன்ற பாவம் விலகும். பொருட் செல்வம் பெருகும்.
மூன்று முக ருத்ராட்சத்தின் அதி தேவதை அக்னி தேவன். மும்மூர்த்திகளும் சந்தோஷம் அடைவர். ஸ்திரீகளுக்குச் செய்த தோஷம் விலகும்.
நான்கு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பிரம்மா. மனிதர்களுக்கு இழைத்த பாவம் விலகும்.
ஐந்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை காலாக்னி ருத்ரன். இதை அணிவதால் சதாசிவம் சந்தோஷம் அடைகிறார். செய்யக் கூடாத செயல்களைச் செய்வதால் உண்டாகும் தோஷம் விலகும்.
ஆறு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை சுப்ரமணியர். இதை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிசேஷன். களவு தோஷமும் கோபத்தீயும் விலகும்.
எட்டு முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விநாயகப் பெருமான். பாவங்கள் விலகும்.
ஒன்பது முக ருத்ராட்சத்தின் அதி தேவதை பைரவர். இதை அணிவதால் நவ தீர்த்தங்களில் குளித்தால் என்ன புண்ணியமோ அந்தப் புண்ணியம் கிட்டும். பைசாச உபாதைகளும் துஷ்டப் பிரயோகங்களும் விலகும்.
பத்து முக ருத்ராட்சத்தின் அதி தேவதை விஷ்ணு. நாக தோஷமும், பைசாச தோஷமும் விலகும்.
பதினோரு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை பதினோரு ருத்ரர்களாகச் சொல்லப்பட்டுள்ளது. பல அஸ்வமேத யாகம் செய்த பலன்களும் பல வாஜபேய யாகம் செய்த பலனும் கிட்டும்.
ருத்ராட்சம் அணிவதால் அனைத்து நற்குணங்களும், நன்மைகளும் கிடைக்கும். அத்தகைய ருத்ராட்சத்தை அணிந்து வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் பெற்று உய்வோம்

Thursday, July 17, 2014

பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் உத்திகள்:-

பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் உத்திகள்:-

ஒவ்வொரு நிறுவனத்தின் மேலாளரும் தம்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு தக்க நடவடிக்கையை மேற்கொண்டு செயல்படுத்தினால் மட்டுமே அப்பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் பணித்திறன் தொடர்ந்து வெளிப்படும். அதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் செயல்திறனும் மேம்படும்.

அதனால் ஒவ்வொரு மேலாளரும் தம்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

1. ஒரு நிறுவனம் வெற்றி பெறுவதற்கு பணியாளர்களுக்கு போதுமான பயிற்சியைஅவ்வபோது அளித்தல் என்பது மிக முக்கியமான அடிப்படை நடவடிக்கையாகும். நீண்ட காலம் பணிபுரியும் தொழிலாளர்கள் அந்நிறுவனத்தின் பணியில் சேர்ந்தபோதுஅவர்களுக்கு இருக்கும் தகுதிகளை தற்போதைய நிலைக்கு ஏற்றவாறு மேம்படுத்தவேண்டியது அவசியமாகும். அதனால் வகுப்பறை பயிற்சியாகவோநேரடி பயிற்சியாகவோ இணையத்தின் மூலமான பயிற்சியாகவோ அவ்வபோது அவர்களுக்கு அளித்து பணியாளர்களின் திறனை புத்தாக்கம் (Innovation) செய்து கொள்வது நல்லது.

2.ஒரு மேலாளர் தம்கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஏதாவது ஒருதொழில்நுட்ப அமைப்புகளில் உறுபினராக சேரும் படியான சூழலை ஏற்படுத்தி அதற்கு ஆண்டு சந்தாவை தம்முடைய நிறுவனமே செலுத்தும்போது அந்த தொழிலாளர்கள் மனநிறைஉற்று தம்முடைய தொழில்நுட்ப அமைப்புகளின் மூலம் தமக்கு கிடைக்கும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும், , ஆலோசனைகளையும் தம்முடைய நிறுவனத்தில் செயல்படுத்திடும் நிலை ஏற்படும் அதன்மூலம் அந்நிறுவனத்தின் (Organization) வளர்ச்சி (Growth) உறுதியாக இருக்கும்.

3.பணியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணையச் செய்து கல்வி சுற்றுலாசெல்லுமாறு செய்தல்விளையாட்டு போட்டி நடத்துதல்நாடகம்பாட்டு போட்டி,பேச்சுப் போட்டி நடத்துதல் போன்ற நடவடிக்கைகளை நிறுவனத்தில் செயல்படுத்தவேண்டும். மேலும் இந்த நிகழ்வுகளில் பணியாளர்கள் மட்டுமல்லாது அவர்களின்குடும்ப உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு செய்தல் மறைமுகமாகஅந்நிறுவனத்தின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகும்.

4.பணியாளர்கள் அனைவருக்கும் அவரவர்கள் அடையவேண்டிய இலக்கை குறிப்பிட்டு செயல்படுமாறு அதற்கான சுழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தபின் அவர்களுள் அந்த இலக்கை அடைபவர்களுக்கு மட்டும் அவர்களின் செயலை அங்கீகரித்து ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்கு உற்பத்தி சார்ந்த போனஸ் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் மற்ற பணியாளர்களுக்கு அவ்வாறுசெயல்படுவதற்கான தூண்டுதல் ஏற்பட்டு அந்நிறுவனத்தின் உற்பத்தி திறன் (Productivity) மேம்படுத்துவதற்கான சுழல் ஏற்படுகின்றது.

5.நிறுவனத்திற்கு தேவையானதாக மாறிவரும் புதிய தொழில்நுட்பம் (Technology) , புதிய கண்டுபிடிப்புகள் (Invention) ஆகியவற்றை சார்ந்த புத்தாக்க வகுப்புகளை வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை பணியாளர்களுக்கு நடத்துவதுபணியாளர்களுள் சிறந்த புத்தாக்கம் நிறைந்த பணியாளர்களை இந்த வகுப்புகளில் தம்முடைய கருத்துகளை மற்ற பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறான வாய்ப்பை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒரு நிறுவனத்தின் திறனை மேம்படுத்த முடியும்.

Yours Happily 
Jc.Dr.Star AnandRam
Motivation Trainer 
www.v4all.org 

பணச்சிக்கல் வராமல் இருக்க… (வாழ்வில், தொழிலில்)



கடன் பட்டிருந்தால்
கடனானதற்குப் பிறகு சிலர்இப்படியாகி விட்டதேநான் என்ன பாவம் செய்தேனோ என்று புலம்பிக் கொண்டிருப்பர். இன்னும் சிலர் இப்படி செய்திருக்க வேண்டும் இப்படி செய்திருக்கக் கூடாதுஇப்படி செய்ததால் தான் இப்படி ஆனதுஎன்று பழைய சம்பவ ஆராய்ச்சிகளிலேயே மீண்டும் மீண்டும் மனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பர்.
இன்னும் சிலர் கோபம்டென்சனாகி யார் இவ்வாறு நடக்கக் காரணமாக இருந்தார்களோ அவர்களைத் திட்டிக்கொண்டும்சபித்துக் கொண்டும் இருப்பர். இன்னும் சிலர்கவலைப்பட்டுக் கவலைப்பட்டு கடன் தொல்லையிலிருந்துதப்பிப்பதற்காக வேண்டாத பழக்கங்களில் ஈடுபடுவர்.

நண்பர்களேகடந்தவை கடந்தவைதான்அவற்றிலிருந்து பாடங்களை எடுத்துக் கொள்கஇந்த அனுபவத்தை வைத்துமீண்டும் தொடர்ந்து செயல்பட்டால் கடன்களிலிருந்து மீளமுடியும்செல்வம் குவிக்க முடியும்அந்த ஆற்றல்எல்லோரிடமும் இருக்கிறதுஇதை உணருங்கள்கடனுக்குக் காரணமானவரையும் ஏமாற்றியவரையும் மீண்டும்மீண்டும் எண்ணிக் கொண்டிருந்தால்எதிர்மறைஎண்ணங்கள் அதிகமாகும்மனச்சக்தி வீணாகும்அது உங்கள் ஆக்கஅறிவு செயல்படுவதைத் தடை செய்யும். கடன் நினைவுகள் வரும்பொழுதெல்லாம்அதை ஒரு சவாலாகமாற்றுங்கள்எழுந்து நில்லுங்கள்உங்களால் ஜெயிக்க முடியும்!

(என்னுடைய தோல்வியிலிருந்து வெற்றிக்கு நூலில் இன்னும் பல விளக்கங்கள் உள்ளன)
கடன் அதிகமாய் இருந்தால்வட்டி அதிகம் கட்ட வேண்டியது வந்தால்உங்களது சொத்துக்களை விற்றும் கட்டுங்கள்.சமுதாய அந்தஸ்து என்றபோலி கௌரவம் பார்க்க வேண்டாம்கடன்களைக் கட்டியபிறகு மனச்சிக்கல் இல்லாமல்உற்சாகமாகத் தொழில் செய்து பணம் சம்பாதியுங்கள்பணம் வந்துவிட்டால் எல்லா மதிப்பும் தானே வந்துவிடும்.

கடன் பட்டதற்குப் பிறகு சிலர் கடன் கொடுத்தவர்களை சந்திக்கப் பயந்து கொள்வர்சொன்ன தவணைக்கு கொடுக்கமுடியுமோமுடியாதோஎன்னாகுமோ என்ற மன உளைச்சலில் இருப்பர்.நீங்கள் 5ஆம் தேதி பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று சொல்லி, 5ம் தேதி உங்களால் கொடுக்க முடியாதசூழ்நிலை ஏற்படுமானால், 4ம் தேதியே கடன் கொடுத்தவரைச் சந்தித்து நிலையை விளக்கி விடுங்கள்மீண்டும்திருப்பிக் கொடுக்க சற்று அவகாசம் வாங்கி வாருங்கள்இதனால் கடன் கொடுத்தவர் சற்று சங்கடப் பட்டாலும் அதுபிரச்சனையாகாது.

ஆனால் 5ம் தேதி பணம் இல்லை என்று பிரச்சனையில் போகாவிட்டால்அவர் 6ம் தேதி உங்களை சந்திக்க வந்தால்வரும்போது எப்படி வருவார்அது உங்களுக்கே தெரியும்ஆகவேசிங்கத்தை அதன் குகையிலேயே சென்றுசந்தியுங்கள். மீண்டும்மீண்டும் எண்ணுங்கள்பணத்தை சம்பாதித்துக் கடனைக் கட்டியே தீருவேன் என்றுசெயல்படுங்கள்உங்களால் முடியும்!

கடனிலிருந்து விடுபடும் பயிற்சி
Think Yourself Rich என்றநூலில் டாக்டர் ஜோசப் மர்ஃபி கூறுகிறார்.

அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொள்ளுங்கள்மூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்யுங்கள்பணம் உங்களுக்குநிறையக் கிடைப்பது போலவும்அதை எடுத்துச் சென்று கடன் கொடுத்தவரிடம் கொடுப்பது போலவும்அவர்மகிழ்ச்சியாக பெற்றுக் கொள்வதைப் போலவும்நீங்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டுநிம்மதி சந்தோசத்துடன் வீடுதிரும்புவது போலவும் போன்ற காட்சிகளை மனத்திரையில் பாருங்கள்இப்பொழுது கண்களை விழித்துக்கொள்ளுங்கள்.
இந்தப் பயிற்சியைக் காலையிலும்மாலையிலும் செய்து வரவர இந்தக் காட்சிகள் மேல் மனதிலிருந்து உள் மனத்தில்பதிந்து வெற்றியாக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும்.கடவுள் நம்பிக்கை இருந்தால் பிரார்த்தனைகளைச் செய்து விட்டுத் தொடர்ந்து செயல் புரியுங்கள்.வாழ்த்துக்கள்!
கடனை வசூலிக்கும் முறைகள்
1.    கடன் பெற்றபணத்தை என்றைக்குத் திருப்பித் தருகிறார்கள் என்று கேட்டு நாளைக் குறித்துக் கொள்ளவும்அந்தநாளில் சரியாக அவர்களிடம் கேட்கவும்மாறாகஇந்தப் பணம் வராதுஇவர் திருப்பிக் கொடுக்க மாட்டார்என்றஅனுமானத்தில்கேட்காமல் விடக்கூடாது.
ஒருமுறைT.V. பேட்டியில் ஒரு Finance சொன்னார்நம் முன்னோர்கள் கொடுத்த கடனை திரும்ப வசூலிப்பது பற்றிபழமொழி ஒன்றைக் கூறியுள்ளார்கள்கறக்காத பாலும்கேட்காத கடனும் திரும்ப வராது அதேபோலக் கொடுத்தகடனைக் கேட்பதை நிறுத்தாமல் தொடர்ந்து நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டே இருந்தால் அந்தப் பணம் திரும்பிவரும்.

2.    “இப்படிக் கடனை வாங்கித் திரும்பக் கொடுக்காமல் காலம் கடத்திக் கொண்டிருக் கிறார்களேஇப்படி இருந்துகொண்டிருக் கிறார்களே என்று எரிச்சலடையாமல் அவரை சபிக்காமல் கீழ்க் கண்டவாறு அவர்களை வாழ்த்தவேண்டும்.

நம்மிடம் பணம் வாங்கியவரை மனதில் கொண்டு வந்து அவரிடம் செல்வம் பெருக வேண்டும்அவர் பணத்தைதிருப்பிக் கொடுக்கும் நிலையை அடைய வேண்டும்அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று தினமும்வாழ்த்துங்கள்இந்த வாழ்த்து எண்ண அலைகள் அவருடைய மனதில் பதிந்துபணம் சம்பாதிக்கும் எண்ணங்களைத்தூண்டி செயல்படுத்த வைத்துபணத்தைத் திருப்பிக் கொடுக்க வைக்கும்நல்ல எண்ணங்களுக்கு வலிமை அதிகம்.

இந்தப் பயிற்சி வேதாத்திரி மகரிஷி அவர்கள் மனித குலத்திற்கு அளித்த மாபெரும் பரிசு.வசூல் செய்யும் மனக்காட்சிப் பயிற்சி ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்ட பயிற்சியைச் செய்கஒவ்வொரு முறையும்வசூல் செய்யப் போகும் முன்பும் இந்தப் பயிற்சியைக் செய்துவிட்டுப் போகவும்.
அமைதியாக அமர்ந்து கொள்ளவும்கண்களை மூடிக்கொள்கமூன்றுமுறைஆழ்ந்த சுவாசம் செய்க. 10லிருந்து 1வரை தலைகீழாக எண்ணிக்கொள்கஇப்பொழுது மனக்காட்சியில் உங்களிடம் கடன் வாங்கியவருடைய உருவத்தைக்கொண்டு வருக.

நீங்கள் அவரிடம் செல்வது போலவும்அவரிடம் பணம் கேட்பது போலவும்அவர் சந்தோசமாக பணத்தை எடுத்துக்கொடுத்து விடுவது போலவும்நீங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வாழ்த்துச் சொல்லி திரும்புதல் போலவும்காட்சிகளை மனத்திரையில் பார்க்கவும்பின் மெதுவாகக் கண்களைத் திறந்து கொள்ளவும்.

இந்தப் பயிற்சியைத் திரும்பத் திரும்பச் செய்யும் பொழுதுஆழ்மனத்தில் பதிந்து அது நடைமுறையில் சாத்தியமாகும்சூழ்நிலை உருவாகும். இன்னொன்று எதை எதிர்பார்க் கிறோமோ அதுவே நடக்கிறதுஎதிர்பார்ப்பு விதி (Law of Expectation) அதைத்தான் சொல்லுகிறது. கொடுத்தது திரும்பிவரும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும் பொழுது அந்தப்பணம் திரும்பி வரும்இப்பொழுது செய்த மனக் காட்சிப் பயிற்சி அந்தநம்பிக்கையை பலப்படுத்தும்.

பணத்தைக் கேட்கும் முறை

கொடுத்த பணத்தைக் கேட்கப் போகும் பொழுதுபணம் வசூலாகாத பட்சத்தில் திரும்பி வருவதற்கு முன்பு சிலர்கீழ்க்கண்டவாறு சொல்கின்றனர்.

எனக்கு நல்லா தெரிஞ்சு போச்சுநீ கொடுக்க மாட்டேஇந்தப் பணம் போனது போனதுதான்இனிமேல் எனக்குஉங்கள் மேல் நம்பிக்கை இல்லைநீ அநியாயமா ஏமாத்தறஇப்படியெல்லாம் செய்தால் நீ உருப்படமாட்ட.இவ்வாறு சொல்லக்கூடாதுஆனால் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்.

உங்களை நம்பித்தான் கொடுத்தேன்அடிப்படையில் நீங்கள் ரொம்ப நல்லவர்அடுத்தவர் காசை ஏமாற்றும் எண்ணம்உங்களுக்குக் கிடையாதுஅது எனக்கு நன்றாகத் தெரியும்அப்போதைக்கு உங்கள் தேவைக்கு உதவத்தான்கொடுத்தேன்ஆனால்இப்பொழுது பணம் எனக்கு மிக அவசரத் தேவையாக இருக்கிறதுபணத்தை வாங்கியஉங்களுக்குப் பொறுப்பு இருக்கிறதுநாணயம் காப்பாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறதுஆகவே,இதையெல்லாம் எண்ணிப் பார்த்துப் புரிந்து கொள்ளுங்கள்நீங்கள் நிச்சயம் சீக்கிரம் கொடுத்து விடுவீர்கள் என்று100% நம்பிக்கைக் கொண்டு எதிர்பார்க்கிறேன்நம்புகிறேன்நீங்கள் திருப்பிக் கொடுக்கும் நிலைமைக்கு பணம்உங்களுக்கு வருவதற்கு நல்வாழ்த்துக்கள்!

ஆகவேநண்பர்களேஇவ்வாறு கடனைக் கேட்டுவிட்டுத் திரும்பிவரும் போது சொல்கிறசொற்கள் உடன்பாட்டுச்சொற்களாக நல்ல எதிர்பார்ப்புடன் சொல்லிவிட்டு வரவேண்டும்.

யாரை நாம் எப்படி நடத்துகிறோமோ அதுபோலவே ஆகிறார்கள்நாம் இவ்வாறு பெருந்தன்மையுடன்நடத்தும்பொழுது பணம் அவர்களுக்கு வருகிறகால கட்டத்தில் முதலில் நமக்குக் கொடுப்பார்கள்.

பணம் வசூலாகாவிட்டால்

மேற்கூறிய பணத்தை வசூலிக்கும் முறைகள் அனைத்தையும் உபயோகித்தும் பணம் வசூலாகாவிட்டால் கவலைப்படவேண்டாம்நீங்கள் உழைத்துச் சம்பாதித்து சேர்த்த பணம் வீண் போகாதுவேறொரு ஏதேனும் ஒரு ரூபத்திலோ,தொழில் வாய்ப்பாகவோ திரும்பி விடும்.

ஏனென்றால் சில அடிப்படைப் பிரபஞ்ச நியதிகளின் படி இந்த உலகம் இயங்குகிறதுஒருவர் உழைத்த உழைப்பினால்சேர்த்த பணம் எந்த வகையிலும் வீண் போகாதுபணமாக வராவிட்டாலும்அது வேறு ஏதேனும் நன்மையாகவாவதுமாறும்ஓர் உதாரணத்திற்கு உங்கள் உடல் நலம் அல்லது சந்ததியாருக்கு நன்மை இப்படி ஏதேனும் ஒருவகையில்திரும்பக் கிடைக்கும்ஆகவேஇழந்ததை நினைத்துக் கவலைப்படாமல் அதையே எண்ணி மனம் சோர்வடையாமல்தொடர்ந்து அவர்களுக்குத் திரும்பச் செலுத்த போதிய அவகாசம் கொடுங்கள்.

புதிய முயற்சிகளில் ஈடுபடுங்கள்இழந்தது 5 இலட்சம்ஆனால் 50 இலட்சம் சம்பாதிப்பேன்அது என்னால் முடியும்என்று இழந்த நினைவு வரும்போதெல்லாம்ஏமாற்றப்பட்ட நினைவு வரும் போதெல்லாம் அதைச் சவாலாகமாற்றுங்கள்வெற்றி பெறுங்கள் வாழ்த்துக்கள்