Showing posts with label money making workshop. Show all posts
Showing posts with label money making workshop. Show all posts

Tuesday, July 21, 2015

சாபங்கள் பல வகைப்படும்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்

சாபம்
சாபங்கள் பல வகைப்படும்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.:
பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம் : நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த
குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
சர்ப்ப சாபம்: பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும்., அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்..இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண்குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
கோ சாபம் : பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
பூமி சாபம் : ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டுபண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.
கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், , மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
முனி சாபம்: எல்லை தெய்வங்கள், மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனிசாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒருபோதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்துவிடும்.


Wednesday, July 15, 2015

அகத்தியர் மந்திரம்

அகத்தியர் மந்திரம் (share) செய்யுங்கள்)
தினமும் காலை அல்லது இரவில்
கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.
45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.
இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.
அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.
முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;
Mantric   மாந்திரீகம்'s photo.


Saturday, July 11, 2015

மகிழ்ச்சியாக வாழ

மகிழ்ச்சியாக வாழ - www.v4all.org 

இவ்வுலகில் பிறந்த எல்லோருமே மகிழ்ச்சியாய் வாழவே விரும்புகின்றனர். ஆனால் ஒரு சிலரே உண்மையான மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். மற்றவர் எல்லாம் சோகத்துடனோ அல்லது தற்காலிகமான மகிழ்ச்சியுடன் தான் வாழ்கிறார்கள். மகிழ்ச்சியாய் வாழும் இரகசியங்கள் தான் என்ன? மேலே படியுங்கள்.......
மகிழ்ச்சியாக வாழ நல்ல உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். நீங்கள் மகிழ்ச்சியாக வாழ விரும்பினால் முதலில் உங்கள் உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
எல்லோரிடமும் அன்பாக இருங்கள். அன்பில்லாதவன் மகிழ்ச்சியாக இருக்கவே முடியாது. அன்பில்லாத ஒருவன் மது மற்றும் மாது மூலம் சுகம் பெற முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். அந்த சுகம் தற்காலிகமானதாகத் தான் இருக்கும். மீண்டும் அடுத்த நாள் மதுவும் வேறொரு மங்கையும் இருந்தால் தான் அவன் கவலையை, குற்ற உணர்ச்சியை மறக்க இயலும். இது என்ன பிழைப்பு? குற்ற உணர்ச்சியுடன் இருக்கும் ஒருவன் உண்மையான சந்தோசம் எப்படி அனுபவிக்க இயலும்?
உங்களுக்குப் பிடித்த படிப்பை படியுங்கள். பிடித்த வேலையை செய்யுங்கள். கடினமாக உழையுங்கள். வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெற்றால் தான் மகிழ்ச்சியாக வாழ முடியும். தேவைக்கு அதிகமாக உள்ள செல்வத்தை இல்லாதவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
தோட்டத்தில் உள்ள ஒரு மரம் இனிமையான கனிகளைக் கொடுக்கிறது. இதமான நிழலையும் கொடுக்கிறது. பாலைவனத்தில் உள்ள மரம் யாருக்கும் பயன் படாது. அது போல் தான் கருமியிடம் உள்ள செல்வமும். அன்பில்லாதவன் வாழ்க்கையும் பாலவனத்தில் உள்ள மரம் போல் தான். உண்மையான மகிழ்ச்சி அதில் இருக்க முடியாது.
மற்றவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுங்கள். அவர்கள் செய்த தவறுகளை மன்னியுங்கள். விரோதங்களை மனதில் வளர்க்காதீர்கள்.
எளிமையான, அன்பான வாழ்க்கை வாழுங்கள். யோகா மற்றும் தியானம் தினமும் செய்யுங்கள். இறைவனோடு தொடர்பு கொள்ளும்போது உண்மையான பேரின்பம் கிடைக்கும். அது தான் நிலையான் சந்தோசம் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா என்ன?
வாழ்க வளமுடன்!


Sunday, May 24, 2015

வீட்டில் சிவபூசை செய்வது இப்படி!!!

வீட்டில் சிவபூசை செய்வது இப்படி!!! - www.v4all.org 
உண்மையான அன்புடன் சில பூக்களைத் தூவி ஐந்தெழுத்தை உச்சரித்தாலே போதும். அதுவே மிகச் சிறந்த சிவபூசை தான்!
ஆலயங்களில் செய்யப்படும் இறைவழிபாட்டில் பதினாறு வகை உபசாரங்கள் முக்கிய இடம்பெறும். அதை “சோடச உபசாரம்” என்பார்கள்....
நம் வீட்டுக்கு, புகழ்பெற்ற ஒருவர் வந்தால் என்னென்ன உபசாரம் எல்லாம் செய்து வரவேற்று விடைகொடுத்து அனுப்புவோமோ, அதையே உலகனைத்துக்கும் தலைவனான இறைவன், கோயிலுக்கு எழுந்தருள்வதாக நினைந்து செய்வதுதான் இந்தப் பதினாறு உபசாரங்களும்!
சோடச உபசாரம் பலவாறு சொல்லப்படினும், பின்வருவன பொதுவானவை.
1. ஆவாகனம் – பூசையை ஏற்றுக்கொள்ள எழுந்தருளுமாறு இறைவனை வேண்டுதல்
2. ஆசனம் – இலிங்க மூர்த்தத்தில் அமர்ந்திருந்து அருள்பாலிக்குமாறு இறைவனை வேண்டுதல்
3. பாத்தியம் – திருவடிகளை நீரால் கழுவுதல்.
4. அர்க்கியம் – நீர் தெளித்தல்
5. ஆசமனம் – அருந்த நீர் கொடுத்தல்
6. மதுவர்க்கம் – பால் பழங்களை இறைவன் முன் படைத்தல்
7. அபிடேகம் –இறைவனை நீராட்டுதல்.
8. வத்திரம் – ஆடை அணிவித்தல்
9. யஞ்ஞோபவீதம் – பூணூல் அணிவித்தல்
10. கந்தம் – வாசனைத்திரவியம் தெளித்தல்
11. புட்பம் – மலர் சாத்துதல்
12.தூபம் – சாம்பிராணி காட்டுதல்
13. தீபம் – தீபாராதனை செய்தல்
14. நைவேத்தியம் – இறைவனுக்கு உணவு படைத்தல்
15. தாம்பூலம் – வெற்றிலை பாக்கு வழங்குதல்
16. நீராஞ்சனம் – கற்பூரம் காட்டுதல்
ஒவ்வொரு உபசாரத்தையும் செய்யும் போது, “எம்பெருமானே, என் பூசைக்கு எழுந்தருளுவாய்”, “இந்த இலிங்கத்தில் அமர்ந்து அருள்பாலிப்பாய்”, “உன் திருவடிகளை நீரால் கழுவுகிறேன், அருள்புரிவாய்” , “உன்மீது நீர் தெளிக்கிறேன், குளிர்ந்தருள்வாய்”, “”அருந்த நீர் தருகிறேன், ஏற்றுக்கொள்வாய்” என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே மனதார வேண்டிக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட பொருள் கிடைக்காதபோது, மானசிகமாக அதை வழங்குவதாகக் கற்பனை பண்ணிக்கொள்ளலாம்.
இவ்வாறு பதினாறு உபசாரம் செய்தபின், தெரிந்த தேவாரம், திருமுறை பாடி, மீண்டும் தீபம் காட்டி, உங்கள் வேண்டுதல்களைக் கூறி, இறைவனை மனதார வேண்டி மலர்தூவுங்கள்.
இவ்வாறு பூசைமுடிந்தபின், பூசைக்கு எழுந்தருளியதற்கு நன்றி கூறி “சென்று வருவாய் அப்பா” என்று கடவுளுக்கு விடைகொடுக்கவேண்டும். இதை “அந்தர்த்தானம்” என்போம். அவ்வளவுதான். பூசை ஆயிற்று. படைத்த பிரசாதத்தை எடுத்து, கோயிலில் செய்வதுபோல், உங்கள் வீட்டுக்குழந்தைகளுக்கும் அயலவர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Thursday, May 21, 2015

ஆசீர்வாதம் என்றால் என்ன?

ஆசீர்வாதம் என்றால் என்ன? - www.v4all.org
தமிழர்களின் கலாச்சார வழக்கத்தில் ஒன்று ஆசீர்வாதம்/ வாழ்த்துதல். இது திருமணம், காதுகுத்து, பிறந்தநாள், கோயில்கள், விசேட தினங்கள் போன்ற எதுவாக இருந்தாலும் ‘பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு’ என்று நம்மை கூறுவது வழக்கம்.
ஆசீர்வாதம் என்றால் என்ன? வயதில் பெரியவர்கள் தான் ஆசி வழங்க முடியுமா?
‘எல்லாம் நல்லதே நடக்கட்டும்’ என்று உங்களிடம் யாரேனும் சொன்னால், அது ஆசீர்வாதம் கிடையாது. அது ஒரு விருப்பம், ஒரு நல்ல எண்ணம். அவ்வளவுதான். ‘ஆசி’ என்பது எண்ணங்கள் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி. ஆசி என்பது நல்லதும் அல்ல; கெட்டதும் அல்ல. அது எரிபொருள். உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவும் வஸ்து அது.
உதாரணத்திற்கு, உங்கள் காரில் எரிவாயு இல்லை. காரைத் தள்ளிக் கொண்டு போவது மிகவும் கடினம், அதோடு தாமதம் வேறு ஆகும். இதுவே யாரேனும் எரிபொருள் தந்து உதவினால், வெகு சுலபமாக, வெகு விரைவாக வேண்டிய இடத்திற்குச் சென்று விடலாம். ஆசி என்பது இந்த எரிவாயு போன்றது. அது வெறும் வாழ்த்தோ, எண்ணமோ, உணர்ச்சியோ அல்ல. அது ஒரு சக்தி.
ஆசி பலவிதங்களில் வரும். நீங்கள் விரும்பியவாறு தான் அது வரவேண்டும் என்று அவசியமில்லை. எந்த அளவிற்கு ஏமாற்றம் தருகிறதோ அந்த அளவிற்கு அது உங்களுக்கு நல்லதைத் தரும். இது ‘ஆசி’ என்று நீங்கள் நினைக்காத விதங்களில் கிடைக்கும் ஆசி, உங்களுக்குப் பல நன்மைகளையும் செய்யும். ஆசி என்பது நல்லதும் அல்ல; கெட்டதும் அல்ல. அது எரிபொருள். உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவும் வஸ்து அது.
ஆசீர்வாதத்தில் காலைத்தொட்டு வணங்குவது ஏன்?
காலைத் தொட்டு வணங்குவது, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போன்றவற்றில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு. கலாச்சாரம் என்று பார்த்தால், மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம். பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கே அவர்கள்தான் காரணம். நாம் கடவுளை இன்னும் உணராமல் இருக்கலாம். ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று சொன்னது கூட பெற்றோர்தானே? எனவே நாம் இருப்பதற்கு மூலகாரணமான அவர்களை நாம் வணங்குகிறோம்.
இதன் விஞ்ஞானத்தைச் சொல்வதென்றால், உங்கள் உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று வெறும் உறுப்புகளாகப் பார்க்கலாம். அல்லது உடல் என்பதை சக்தி அடிப்படையிலும் பார்க்கலாம். இந்த சக்திதான் உங்கள் எல்லா உறுப்புகளையும் உருவாக்க அடிப்படையாக இருக்கும் சக்தி. இதை குறிப்பிட்ட வகையில் ஒருங்கிணைத்தால், ஒருவரின் உடலிலிருந்து சக்தி வெளிப்படும் விதமாகச் செய்ய முடியும்.
மேலும் நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதுதான் காலில் விழும் பழக்கம்.
யோக முறைப்படி சொல்லப் போனால், சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது சூரிய நமஸ்காரத்தில் மிக முக்கியமான ஒரு நிலை. சாஷ்டாங்க நமஸ்காரம் என்றால் உடலின் எட்டு அங்கங்கள் மட்டுமே தரையில் பட வேண்டும்.
திருமணத்தின் போது மணமக்களை கிழக்கு முகமாக நிற்க வைத்தக் குருக்கள் பிராத்தனன செய்து மந்திரத்துடன் ஆசீர்வாதம் சொல்லி மணமக்களுக்கு ஆசிர்வாதம்வாதம் சொல்லி மணமக்களுக்கு சிரசில் அட்சதையிட்டு ஆசீர்வதிப்பர். தொடர்ந்து மணமகளின் பெற்றோர் சபையில் ஆசிர்வதிப்பர்.
ஆங்கிலத்தில் ஆசீர்வாதத்தினை BLESSING என்று கூறுவார்கள்.
என்ன சொல்லி வாழ்த்தவேண்டும்?
மனதிற்கு பிடித்தமான எந்தவொரு நல்ல சொல்லையும் கூறி வாழ்த்த முடியும்.
உதாரணமாக பெண்களுக்கு- தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும்
ஆண்களுக்கு - சகல செளபாக்கியங்களும் கிடைக்கவேண்டும்
மணமக்களுக்கு - பதினாறும் பெற்று வாழ்க என்றும் பலவகையாக வாழ்த்தலாம்


Ankhamuthu Kumar's photo.

Tuesday, May 12, 2015

இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம்.. எப்படி அமைய வேண்டும் என்று சிவாகமம் கூறுகிறது

இறைவனுக்கு படைக்கும் நைவேத்தியம்..
எப்படி அமைய வேண்டும் என்று சிவாகமம் கூறுகிறது பாருங்கள்..
11.1வண்டு மலரை முகர்ந்து தேனைப் பருகி, அந்தத் தேனை திருப்பித் தருகிறது; மலரின் மணமோ சுவையோ தண்மையோ நீரோட்டமோ கெடுவதில்தல. அதுபோல இறைவர்க்கு நிவேதித்த பிரசாதங்களின் ரஸம் போவதில்லை. மேகம் சூர்ய கிரகணங்களைக் கொண்டு நீரைக் குடித்து, அதையே பிறகு மழையாகப் பொழிகின்றது, அவ்வாறே, இறைவன் நிவேதனத்தைத் தன் பார்வையால் ஏற்றுக் கொண்டு, கருணை மழை பொழிந்து, நம்மைக் காக்கிறான்.
11.2 அபிஷேகத்தில் நிறைவு, அர்ச்சனையின் முடிவு ஆகிய இரண்டு சமயங்களில் நைவேத்யம் செய்ய வேண்டும்
11.3 மந்த்ராந்நம், நைவேத்யம் : மந்த்ரம் என்பது ரஹஸ்யம். பல்லிலும், உதட்டிலும், முகவாய்க்கட்டிலும் உற்பத்தி ஆவதால் மந்த்ரங்கள் ரஹஸ்யம் எனப்படுகின்றன. எந்த அந்தமானது ரஹஸ்யமாக நிவேதிக்கப்படுகிறதோ அதற்கு மந்த்ராந்நம் என்று பெயர். அத்தகைய மந்த்ராந்தமாகிய மஹாநிவேதனத்தை ஒரு பாத்திரத்தில் முக்காலியின் மேல் வைத்து, அதைச் சுற்றி, பாகம் பண்ணப்பட்ட (சமைக்கப்பட்ட) பதார்த்தங்களைத் தனித் தனிப் பாத்திரங்களில் வரிசையாக வைத்து, அவற்றை ஒன்றொன்றாகச் சோதனை செய்து, ஹ்ருதய மந்திரத்தினால் ப்ரோக்ஷிக்க வேண்டும். அந்த நிவேதனத்தை அம்ருதமயமாகப் பாவித்து, தேனு முத்திரை காட்டி, புஷ்பத்தை வைத்து, நைவேத்யத்தை ஸ்வாமியினுடைய தக்ஷிண ஹஸ்தத்திலே கொடுத்து, தீர்த்த பானத்தையும் கொடுக்க வேண்டும்.
11.4 மயிர், புழு, மணல், உமி இவை கலந்துள்ள அரிசிச்சோறு (அன்னம்) நைவேத்யத்திற்கு ஆகாது ; அரை அரிசிச் சோறு, குழைந்த அன்னம், துர்நாற்றம் உள்ள அன்னம் ஆகியவையும் கூடாது; மிகச் சூடாக நிவேதனம் செய்யக்கூடாது.
11.5 ஈசான முகத்திற்கு சுத்த அன்னமும், தத்புருஷ முகத்திற்கு சர்க்கரைப் பொங்கலும், அகோர முகத்திற்கு எள் அன்னமும், வாமதேவ முகத்திற்கு தயிர் அன்னமும், ஸத்யோஜாத முகத்திற்கு வெண்பொங்கலும் படைப்பது சிறந்தது.
11.6 தாம்பூலத்தின் நுனியில் லக்ஷ்மி, மத்தியில் ஸரஸ்வதீ, பின்பகுதியில் மூதேவி ஆகியோர் உள்ளதாக ஐதீகம். எனவே, பின்பாகத்தை நீக்கிவிட்டு தான் வெற்றியையை நிவேதனம் செய்ய வேண்டும்.
11.7 ஜலம் உள்ள தேங்காயைத்தான் உடைத்து நிவேதனம் செய்ய வேண்டும்; சமமாக இரு பாதியாக உடைப்பதே சிறந்தது; குடுமி இல்லாமல் உடைத்தால் அரசுக்கு கேடு; முழுக் குடுமியும் உள்ளதாக உடைத்தால் நாட்டுக்கு கேடு; எனவே, கொஞ்சம் குடுமி உள்ளதாகச் செய்துகொண்டு உடைக்க வேண்டும்; உடைத்த பின்னர், அந்தச் சிறிதளவு குடுமியையும் நீக்கி விட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.
11.8 நந்திக்கு நிவேதனம் : அரிசியையும், பயத்தம் பருப்பையும், வெல்லத்தையும், திருகின தேங்காயையும் ஒன்றாகக் கலந்து ப்ரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு விசேஷமாக நைவேத்யம் செய்திடல் வேண்டும்
11.9 திரை இடுதல் : பூஜையின் போது, நிவேதன காலத்தில் திரை இடாவிட்டால், பாபிகள் அதைப் பார்க்க நேரிட்டு, அதனால் அந்த நிவேதனமும், அது அங்கமாக உள்ள பூஜையும் பலனற்றதாகப் போய்விடும்


Ankhamuthu Kumar's photo.

Sunday, May 10, 2015

சிறுவாணி நீர்.



அடர்ந்த வனப்பகுதியில் இருந்து ஓடி வரும் சிறுவாணி நீர்.

1929-ம் ஆண்டு ஏப்ரல் 29. இதே நாள். கோயம்புத்தூர் விழாக்கோலம் பூண்டிருந்தது.

வீதிகள் தோறும் தண்ணீர்க் குழாய்களுக்கு மக்கள் பொட்டு வைத்து, பூக்களை சூட்டி இருந்தனர். பெரும்பாலோரின் கண்களில் ஆனந்த கண்ணீர்.

அன்றுதான் முதல்முறையாக நகரத்துக்கு சிறுவாணி குடிநீர் வந்தது. கோயம்புத்தூரின் பெருமைகளில் ஒன்று சிறுவாணி நீர். ஆனால், அந்தப் பெருமைக்கு பின்னால் 40 ஆண்டுகால போராட்டம் இருப்பது இன்று பலரும் அறியாத விஷயம்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டம் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதி. மெட்ராஸ் மாகாண பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் 1927-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், "இந்த மெட்ராஸ் மாகாணத்தின் தண்ணீரில் மிக மோசமான தண்ணீர் எதுவென்றால், அது கோயம்புத்தூரின் தண்ணீர்தான். இந்த மோசமான தண்ணீரால் மக்களுக்கு பொருள் இழப்பும், உடல் நல பாதிப்பும் ஏற்படுகிறது.

மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் கோயம்புத்தூர் நகராட்சி தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத் தப்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

நொய்யல் நதி நகரத்துக்கு அருகில் ஓடினாலும் அதை குடிநீராக கொண்டுவரும் திட்டம் எதுவும் அன்று இல்லை. தவிர, அந்த நதியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரவில்லை. நகரத்துக்குள் இருந்த சில உப்புத் தண்ணீர் கிணறுகள் மட்டுமே மக்களின் நீர் ஆதாரமாக விளங்கின. தண்ணீர் தேவை குறித்து மக்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறை யிட்டார்கள். அன்று தொடங்கியது குடிநீருக்கான போராட்டம்.

1889-ம் ஆண்டில் சிறுவாணி மலைப் பகுதியில் உள்ள முத்தி குளம் அருவி நீரை கொண்டு வரலாம் என்றார் எஸ்.பி.நரசிம்மலு நாயுடு என்கிற பத்திரிகையாளர். மாவட்ட ஆட்சித் தலைவர், ‘அங்கெல்லாம் மனிதர்கள் செல்வது சிரமம். நீங்கள் ஆய்வு செய்து வந்தால் அரசாங்கம் பரிசீலிக்கும்’ என்றார் அலட்சியமாக. ஏனென்றால் அவ்வளவு அடர்ந்த வனம் அது. பலர் தடுத்தும் கேட்காமல் நரசிம்மலு நாயுடு தனது நண்பர்களுடன் கிளம்பிவிட்டார். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரம் மலை ஏறிச் செல்ல வேண்டும்.

யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் ஏராளமாக இருந்தன. பல நாட்கள் பல இடையூறுகளைத் தாண்டி முத்தி குளம் அருவியை அடைந்தார் அவர்.

அங்கு ஏராளமான நீர் இருந்தது. ஆய்வு நடத்தி, ஊர் திரும்பியவர், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து அந்த அருவி நீரை நொய்யலுக்கு திருப்பினால் கோயம்புத்தூரின் தண்ணீர் பிரச்சினை தீரும் என்று அறிக்கை சமர்ப்பித்தார். ஆனால், நிதி ஆதாரம் இல்லை என்று மறுத்தது அரசு. மக்களின் தொடர் போராட்டங்களால் 1892-ம் ஆண்டு ஒரு பொறியாளரை அரசு நியமித்தது. அவர் சிறுவாணி திட்டம் சாத்தியமில்லை என்று சொல்லி, நொய்யல் நீரை பயன்படுத்த திட்டம் தீட்டினார். நதியின் ஒரு பகுதியில் வெள்ளலூர் அணைக்கட்டில் ஓரளவு நீர் இருப்பதால், அங்கிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டம் தந்தார்.

அதற்கும் நிதி இல்லை என்று அரசு கைவிரித்தது. நொய்யலை மையமாக வைத்தே பல திட்டங்கள் தீட்டப்பட்டு, கழிக்கப்பட்டன.

இதற்கிடையில் கோயம்புத் தூரில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. ஒரு சொம்பு தண்ணீரை சும்மா கொடுப்பதற்கே மக்கள் யோசித்தார்கள். பத்தாண்டுகள் ஓடிய நிலையில் சிறுவாணி திட்டம் மீண்டும் எடுக்கப்பட்டது. இதற்கு காரணம் அப்போது இந்தியா முழுவதும் மின் உற்பத்திக்கான ஆய்வுகள் நடந்து வந்தன. சிறுவாணியிலும் ஆய்வு செய்தார்கள். திட்டம் வெற்றி பெற்றால் மின் உற்பத்தி மூலம் திட்டச் செலவை ஈடுகட்டிவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் தென்னிந்திய ரயில்வே நிறுவனம் (அப்போது அது தனியார் நிறுவனம்) சிறுவாணி நீர் மின் திட்டத்துக்கு உதவ முன்வந்தது. ஏனெனில் கோயம்புத்தூரில் தனது தொழிற் சாலை அமைக்கும் எண்ணம் அந்நிறுவனத்துக்கு இருந்தது. ஆனால் ஆய்வில் சிறுவாணியின் மழைப்பொழிவு குறித்து கேள்வி எழுந்தது. மீண்டும் திட்டம் கைவிடப்பட்டது.

1921-ம் ஆண்டு சி.எஸ். இரத்தினசபாபதி என்பவர் நக ராட்சித் தலைவரானார். அவர் ஏற்கெனவே சிறுவாணி ஆய்வு களில் பங்கு பெற்றவர். இந்த முறை அவரது இடைவிடாத முயற்சியால் திட்டத்துக்கு ஒப்புதல் கிடைத்தது. 1924-ம் ஆண்டு சிறுவாணி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பணிகள் தொடங்கின.

சாலை, மின்சாரம், தொழில் நுட்பம் எதுவும் இல்லாத சூழலில் நகராட்சியின் நிதிப் பற்றாக் குறையால் அவ்வப்போது திட்டம் திணறியது. யானைகள், புலிகள், அட்டைக்கடி, மலேரியா என தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். கூடவே, திட்டத்துக்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டன.

மூன்று ஆண்டுகளில் மலை மேலிருந்து குகைப் பாதை மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணிகள் முடிந்தன. அப்போதுதான் அந்த விபரீதம் ஏற்பட்டது. 1927-ம் ஆண்டு கடுமையான மழை. கூடவே பெரும் நிலச்சரிவு. கட்டுமானங்கள், கருவிகள் எல்லாம் மண் மூடிப்போயின. 40 ஆண்டு கால போராட்டம் வீணாகிப்போனதே என்ற மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

ஆனால், அந்த எண்ணமே திட்டத்துக்கு மீண்டும் உத்வேகமூட்டியது. மீண்டும் பணிகள் தொடங்கின. மக்களும் சேர்ந்து உழைத்தார்கள். 1929-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ல் கோயம்புத்தூரின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக இறங்கி வந்தாள் சிறுவாணி. இன்றைக்கு கோயம்புத்தூர் மக்கள் குடிக்கும் சிறுவாணியின் ஒவ்வொரு சொட்டு தண்ணீருக்கும் பின்னால் இவ்வளவு போராட்டங்கள் இருந்திருக்கிறது. தண்ணீரை வீணாக்காதீர்கள்!🕕

Tuesday, April 14, 2015

பட்டுபோல சருமம் மின்ன இயற்கை ஃபேஷியல்..




நம் முகம் ‘பளிச்’ சென்று இருக்க இயற்கையான முறையில்  ‘பிளிச்சிங்’ செய்யும் முறையை பார்த்தோம். இந்த முறை இயற்கையான முறையில் ‘பேஷியல்’ செய்வதை பார்ப்போம்.

இந்த பேஷியல் முறைகள் வறண்ட சருமத்தை மென்மையாகவும், அதீத பொலிவுடனும் வைக்கும். பியூட்டி பார்லர்களுக்கு போகாமலே வீட்டிலேயே நம் விருப்பம் போல செய்து கொள்ளலாம்.
தொடர்ந்து இரு வாரங்களுக்கு செய்து வந்தால் நம் சருமம் மாறுவது நமக்கு நன்கு தெரியும்.



* மஞ்சள் ஃபேஷியல்


மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய்,எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து இந்த கலவையை அகற்றி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் உங்கள் சருமம் பளபளக்கும்.




* தேன் ஃபேஷியல்


ஒரு ஸ்பூன் பால் பவுடர், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் உங்கள் சருமம் பட்டுபோல மிருதுவாக மாறும்.






*  ஓட்ஸ் ஃபேஷியல்


தேவையான அளவு ஓட்ஸ், தயிர், தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நிமிடத்தில் உங்களின் சருமம் வெண்மை நிறமாக மாறும்.






* பாதாம் ஃபேஷியல்


பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள்.இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசி வர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

Monday, March 23, 2015

பைரவர் வரலாறு

ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது.
அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது.
தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.
பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, "காளி’ என பெயர் சூட்டினாள்.
காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, "பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, "காளபைரவர்’ எனப்பட்டு தற்போது, "காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர்.
தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, "வேதஞாளி’ என்ற பெயர் இருக்கிறது.
பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர். சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன.
நவக்கிரக பைரவர்
பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம். மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.
அஷ்டமி செவ்வாய்
தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.
செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.
தேங்காய் மூடி விளக்கு
ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற சனி தோஷங்கள், 7அரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும். போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம். நாளை வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் நாளை திருவாதிரை நட்சத்திரத்துடன் வருவதால் கூடுதல் சிறப்பாகும்.
பைரவ காயத்ரி மந்திரம்
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
பைரவரை மூலவராகக் கொண்ட கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் <உள்ளது. இங்குள்ள பைரவர் முன், ஒரு யந்திரம் உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு பைரவாஷ்டமி விழா சிறப்பாக நடக்கும். தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில், வாயுமேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் ரோட்டில், 2 கி.மீ., சென்றால், தகட்டூரை அடையலாம்.
கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில், கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை மகாதேவ வாஷ்டமி என்ற பெயரில் விமரிசையாக நிகழ்த்துவர். அந்த நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இப்போதே பதிவு செய்தால், சில ஆண்டுகளுக்குப் பின் தானம் செய்ய அனுமதி வழங்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டைக்கோபுரம் அருகில் உள்ள பைரவர் சக்தி வாய்ந்தவர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல் செய்கிறார்.
பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம். கஷ்டங்கள் தீவிரமாகும் போது, காவல் தெய்வமான பைரவரை வணங்குங்கள். அவை காற்றில் பறக்கும் பஞ்சாகி விடும்.
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:
1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்
2.சென்னை அருகே இருக்கும் வானகரம்
3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும் திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது.
4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.
5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(காஞ்சிபுரத்திலிருந்து ஆட்டோவில் 25 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.அடிக்கடி பேருந்து வசதி இல்லை;குண்டும் குழியுமான சாலை வசதி இருக்கிறது.ஆனால்,பழமையான ஸ்ரீசொர்ண பைரவர் ஆவார்)
6.சிதம்பரம் கோவில்
7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்
8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல)
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!)
9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை
10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்
11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)
12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி
13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம். (பூசாரி செல் எண்:92451 69455)
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில், பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.
17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.
18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1.
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம் பஸ் நிறுத்தம்; 1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்) 21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில்,வாலாஜாபேட்டை.
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில்,செட்டியார் அகரம் என்னும் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத் தெருவில் இருக்கும் முருகன் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் இருக்கிறார்.பூசாரி விஜய் குருக்கள் செல் எண்:8754559182(கோயம்பேடு பகுதி மக்களுக்கு இந்த கோவில் மிக அருகில் இருக்கிறது)
***தமிழ்நாட்டின் தெற்கே திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவராக இவர் அருள் பாலித்து வருகிறார்.
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்கு வந்து மனதார நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;
ஒரு காலத்தில், கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார். இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதில், கார்த்திகை அஷ்டமி மிகவும் உயர்ந்தது. அபிதான சிந்தாமணி என்ற நூலில், பைரவர் வரலாறு கூறப்பட்டுள்ளது. தாருகாசுரன் என்பவன், இறவா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார். அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம். பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால விஷத்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது. "காளம்’ (விஷம்) படிந்த அந்த பெண்ணுக்கு, "காளி’ என பெயர் சூட்டினாள். காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, "பைரவர்’ என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, "காளபைரவர்’ எனப்பட்டு தற்போது, "காலபைரவர்’ ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர். தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, "வேதஞாளி’ என்ற பெயர் இருக்கிறது. பைரவரை தினசரி வணங்கினாலும், அஷ்டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர். சித்திரை: ஸ்நாதனாஷ்டமி, வைகாசி: சதாசிவாஷ்டமி, ஆனி: பகவதாஷ்டமி, ஆடி: நீலகண்டாஷ்டமி, ஆவணி: ஸ்தாணு அஷ்டமி, புரட்டாசி: சம்புகாஷ்டமி, ஐப்பசி: ஈசான சிவாஷ்டமி. கார்த்திகை: கால பைரவாஷ்டமி, மார்கழி: சங்கராஷ்டமி, தை: தேவதாஷ்டமி, மாசி: மகேஸ்வராஷ்டமி, பங்குனி: திரியம்பகாஷ்டமி. இப்படி ஒவ்வொரு அஷ்டமி வழிபாடுகளுக்கும் தனிச் சிறப்புக்கள் உள்ளன. நவக்கிரக பைரவர் பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம். மேஷ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. அஷ்டமி செவ்வாய் தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும். செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும். தேங்காய் மூடி விளக்கு ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற சனி தோஷங்கள், 7அரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும். போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோஷம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சேஷ்டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம். நாளை வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் நாளை திருவாதிரை நட்சத்திரத்துடன் வருவதால் கூடுதல் சிறப்பாகும். பைரவ காயத்ரி மந்திரம் ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ பைரவ ப்ரசோதயாத். இந்த காயத்ரியை அஷ்டமி வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம். பைரவரை மூலவராகக் கொண்ட கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் <உள்ளது. இங்குள்ள பைரவர் முன், ஒரு யந்திரம் உள்ளது. இவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இங்கு பைரவாஷ்டமி விழா சிறப்பாக நடக்கும். தஞ்சாவூரில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் வழியில், வாயுமேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் ரோட்டில், 2 கி.மீ., சென்றால், தகட்டூரை அடையலாம். கேரளாவிலுள்ள வைக்கம் மகாதேவர் கோவிலில், கார்த்திகை தேய்பிறை அஷ்டமியை மகாதேவ வாஷ்டமி என்ற பெயரில் விமரிசையாக நிகழ்த்துவர். அந்த நாளில், இங்கு அன்னதானம் செய்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும். இப்போதே பதிவு செய்தால், சில ஆண்டுகளுக்குப் பின் தானம் செய்ய அனுமதி வழங்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மொட்டைக்கோபுரம் அருகில் உள்ள பைரவர் சக்தி வாய்ந்தவர். சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவிலில் உள்ள பைரவர், இரட்டை நாய்களுடன் காவல் செய்கிறார். பைரவருக்கு வடை மாலை, எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம். கஷ்டங்கள் தீவிரமாகும் போது, காவல் தெய்வமான பைரவரை வணங்குங்கள். அவை காற்றில் பறக்கும் பஞ்சாகி விடும். தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு: 1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம் 2.சென்னை அருகே இருக்கும் வானகரம் 3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும் திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது. 4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது. 5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(காஞ்சிபுரத்திலிருந்து ஆட்டோவில் 25 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.அடிக்கடி பேருந்து வசதி இல்லை;குண்டும் குழியுமான சாலை வசதி இருக்கிறது.ஆனால்,பழமையான ஸ்ரீசொர்ண பைரவர் ஆவார்) 6.சிதம்பரம் கோவில் 7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம் 8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!) 9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை 10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில் 11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது) 12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி 13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன. 14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி, ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில், ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில், நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6. 15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில், ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில் புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர் வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம். (பூசாரி செல் எண்:92451 69455) 16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில், பாண்டிச்சேரி. நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர் வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில் இருக்கிறது. இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது. 17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார். 18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில் 19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1. 20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம் பஸ் நிறுத்தம்; 1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்) 21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்) 22.வன்னிவேடு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில்,வாலாஜாபேட்டை. 23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர் 24.சென்னையில்,செட்டியார் அகரம் என்னும் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத் தெருவில் இருக்கும் முருகன் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் இருக்கிறார்.பூசாரி விஜய் குருக்கள் செல் எண்:8754559182(கோயம்பேடு பகுதி மக்களுக்கு இந்த கோவில் மிக அருகில் இருக்கிறது) ***தமிழ்நாட்டின் தெற்கே திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவராக இவர் அருள் பாலித்து வருகிறார். ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்கு வந்து மனதார நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;
Yours
www.v4all.org

கஷ்டம் தீர்க்கும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

கஷ்டம் தீர்க்கும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு

உங்கள் தொழில் உள்ள இறங்குமுகம், வாராக்கடன் மூலம் ஏற்படும் கஷ்டம், பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர அல்லது உயர் பதவியில் அமர இந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு கண்டிப்பாய் உதவிடும். பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் நடக்கும் போது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், 

அஷ்ட லட்சுமிகளின் அருளும் உண்டாகும் தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபடுவதும் அல்லது அன்றைய தினம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து வழிபடுவதும் நன்மையை தரும். 

வேண்டுபவர்களுக்கு வேண்டியவாறு பொன்னையும் பொருளையும் வாரித் தருவார் என்பதால் தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என இவர் அழைக்கப்படுகின்றார். ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம்.

அதற்காக ஒரே ஒரு முறை மட்டும் வழிபட்டால் போதும் என்ற மனநிலை வேண்டாம். சிரத்தையான உண்மையான வழிபாடு மூலம் பலனை உடனே அடையலாம். வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. 

மேலும் ஜீவகனி எலுமிச்சம்பழத்தைப் பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுவது விஷேசம்...குழந்தை இல்லாமல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி திருநாட்களில் செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

Friday, March 20, 2015

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் மகிமைகள்
(share) செய்யுங்கள்)
யார் “ஓம்”, “ஓம்”, “ஓம்” என்று சதா ஜெபிக்கின்றார்களோ அவர்கள் நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகளால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை;
நெருக்கடி காலத்தில் வளைந்து கொடுத்து பின் நிமிர்ந்து கொள்கின்றனர். “ஓம்” ஜெபிக்காதவர்கள் அடியோடு வீழ்கின்றனர்..
ஓம்” என்னும் மந்திரத்திற்குள் சிருஷ்டி கர்த்தாவான பிரம்மாவும்,, காக்கும் கடவுளான விஷ்ணுவும்,சம்ஹார மூர்த்தியாகிய ருத்திரனும் அடக்கம்.இந்த மும்மூர்த்திகளை கிறிஸ்தவர்கள் பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என அழைக்கின்றனர்.ஓம் என்னும் மந்திரம் ஜபிப்பதன் மூலம் உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக்கொள்ள முடியும்.
எடுத்த நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்.எதிர்ப்பு சக்திகள் நீங்கும்.மன சாந்தி ஏற்படும்.உலகத்தோடு ஒட்டி வாழலாம்,வயது முதிர்ந்தோர் இந்த ஏகாட்சரத்தால் ஏகாந்த நிலையை அடையலாம்.
வாய்விட்டு ஜபிக்காமல் மனதிற்குள் “ஒம்”, “ஓம்”, “ஓம்” என ஜபிக்க வேண்டும்.இல்லாவிட்டால் ஓ. . . ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம்.கிழக்குப் பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜெபிப்பது நன்று.மாடி வீட்டில் இருந்து ஜபித்தால் பலன் கூடும்.
மலை மேல் இருந்து ஜெபித்தால் பல மடங்கு சக்தி கிடைக்கும்.எந்த மந்திரம் ஜபிக்க ஆரம்பித்தாலும்,குறைந்தது ஒரு லட்சம் உரு ஏற்றியபின் தான் பலன் கிடைக்க ஆரம்பிக்கும்.உங்கள் உடலின் மின்சக்தி மற்றும் காந்த சக்தி ஏற்படும்.
வியாதியஸ்தர் முன் ஜெபித்தால் அவர்களின் நோய் நீங்கும்.வேப்பங்குச்சியால் குழந்தைகள் நாக்கில் “ஓம்” என எழுத அவர்கள் கல்வி மேம்படும்.
சுத்தமான பசுஞ்சாண விபூதியில் “ஓம்” என எழுதிக்கொடுக்க வயிற்று நோய்கள் நீங்கும்.இளநீரில் ஓதிக்கொடுக்க உடல் காங்கை தணியும்.
பிறரை ஆசிர்வாதிக்கும்போது “ஓம்” என்னும் மின்சக்தி தான்,நம் கைகளில் இருந்து வெளியே பாய்கிறது.பிறருக்குண்டான குறைகள் நீக்குகின்றன.
ஒரு எலக்ட்ரானிக் எலக்ட்ரோ மீட்டர் மூலமாக சாதாரண மனிதனின் மின் சக்தியை அளக்க வேண்டும்.பின் “ஒம்”., “ஓம்”, “ஒம்” என்று ஒரு லட்சம் முறை ஜபித்தவரின் மின்சக்தியை அளக்க வேண்டும்.அப்போது இருவருக்குமுள்ள வேறுபாடு நன்கு தெரியும்.
கர்ப்பமான தாய்மார்கள் “ஒம்” , “ஓம்”, “ஓம்” என சதா காலமும் ஜபித்துவந்தால் தெய்வக்குழந்தைகள் பிறக்கும்.
வாகனம் ஓட்டும்போதும், தெருவில் நடக்கும்போதும் எந்த மந்திரமும் ஜபிக்கக் கூடாது.மீறி ஜபித்தால், உடல் தள்ளாடி விபத்து உண்டாகலாம்.மூச்சை உள்ளே இழுக்கும் போது “ஓம்” “ஓம்” “ஓம்” என ஜெபிக்கலாம்.அப்படி ஜெபிக்கும்போது மூச்சை உள்ளே இழுப்பதும்,வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும்.ஊசியில் மருந்தை ஏற்றிய பின் இறக்குவது மாதிரி அமைய வேண்டும்.எக்காரணம் கொண்டும் மூச்சை அடக்கக் கூடாது.அதாவது கும்பகம் செய்யக்கூடாது.

Thursday, March 19, 2015

ஆன்மீகம் மற்றும் அறிவியல் கூறும் திருமண வயது வித்தியாசம்!

ஆன்மீகம் மற்றும் அறிவியல் கூறும் திருமண வயது வித்தியாசம்!
காலத்தே பயிர் செய் என்பது போல, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் முன்னோர் வகுத்துள்ளனர். அந்தக் காலத்தில் பால்ய விவாகம் இருந்தது. இதை ஏன் அனுமதித்தார்கள் என்றால், குழந்தைகள் ஒழுக்கக்குறைவான பாதைக்கு சென்று விடக்கூடாது என்பதால் தான். காலத்தே கல்யாணம் செய்யாததால் தான் வழுக்கி விழுந்தவள், தடுக்கி விழுந்தவள்... என்ற சொற்களெல்லாம் நம் காதில் விழும் நிலை இருக்கிறது என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.திருமணத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள வயது ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18. பட்டப்படிப்பு முடிக்கும் பெண்ணுக்கு கூட 20 வயது நிறைவடைந்து விடுகிறது. மேற்கல்வி கற்றால் 24 வரை எட்டி விடுகிறார்கள். எப்படியிருப்பினும், திருமணம் முடிப்பவர்கள் ஏறத்தாழ சமவயது உடையவர்களாக இருப்பது நல்லது.
இதிகாச காலத்தில் கூட ஆறு வயதுக்கு மேல் வித்தியாசம் காட்டப்படவில்லை. ராமனுக்கு திருமணம் நடந்த போது அவரது வயது 12. சீதாவின் வயது 6 என்கிறது வால்மீகி ராமாயணம். ஆணுக்கு 26 வயதுக்குள்ளும், பெண்க்கு 24 வயதுக்குள்ளும் திருமணம் முடித்து விடுவது நல்லது. உதாரணமாக, ஒருவருக்கு 30 வயதில் திருமணம் நடக்கிறது என்றால், அவரது 31 வயதில் குழந்தை பிறக்கலாம். அந்தக் குழந்தைக்கு 24 வயது ஆகும்போதே, அவர் 55வயதை எட்டி விடுவார். அந்தக் குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பதற்குள் போதும் போதும் என எண்ணம் வந்துவிடும். தாமதமாக குழந்தை பிறந்தால் கேட்கவே வேண்டாம்.நாம் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்கள். நடக்க வேண்டிய நேரத்தில் அது அது நடந்தால் தான், வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகும்.
ஜோதிடம் பார்க்க அனுக வேண்டிய முகவரி
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399
இல்லறம் எனும் பெரும்பாட்டை, பிள்ளைகள் உறவுகள் என்று வழிவழி யாய்த் தொடரும் ஒரு பந்தத்தை எப்படி விரும்பும்? அதையே விரும்பாதபோது இளமைதான் எதற்கு? இந்த இளமை, பெண்கள் வரையில் சற்று போகமும் மோகமும் சார்ந்தது. நாம் அதைக் கொண்டாடாவிட்டாலும் பிறர் கண்களுக்கு அது விருந்தாகி விடும் ஆபத்தும் அதிகம். தோற்றம் என்பது ஏற்றம் தருவதாக இருக்க வேண்டும்


"ஆன்மீகம் மற்றும் அறிவியல் கூறும் திருமண வயது வித்தியாசம்!

காலத்தே பயிர் செய் என்பது போல, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் முன்னோர் வகுத்துள்ளனர். அந்தக் காலத்தில் பால்ய விவாகம் இருந்தது. இதை ஏன் அனுமதித்தார்கள் என்றால், குழந்தைகள் ஒழுக்கக்குறைவான பாதைக்கு சென்று விடக்கூடாது என்பதால் தான். காலத்தே கல்யாணம் செய்யாததால் தான் வழுக்கி விழுந்தவள், தடுக்கி விழுந்தவள்... என்ற சொற்களெல்லாம் நம் காதில் விழும் நிலை இருக்கிறது என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.திருமணத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள வயது ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18. பட்டப்படிப்பு முடிக்கும் பெண்ணுக்கு கூட 20 வயது நிறைவடைந்து விடுகிறது. மேற்கல்வி கற்றால் 24 வரை எட்டி விடுகிறார்கள். எப்படியிருப்பினும், திருமணம் முடிப்பவர்கள் ஏறத்தாழ சமவயது உடையவர்களாக இருப்பது நல்லது.

இதிகாச காலத்தில் கூட ஆறு வயதுக்கு மேல் வித்தியாசம் காட்டப்படவில்லை. ராமனுக்கு திருமணம் நடந்த போது அவரது வயது 12. சீதாவின் வயது 6 என்கிறது வால்மீகி ராமாயணம். ஆணுக்கு 26 வயதுக்குள்ளும், பெண்க்கு 24 வயதுக்குள்ளும் திருமணம் முடித்து விடுவது நல்லது. உதாரணமாக, ஒருவருக்கு 30 வயதில் திருமணம் நடக்கிறது என்றால், அவரது 31 வயதில் குழந்தை பிறக்கலாம். அந்தக் குழந்தைக்கு 24 வயது ஆகும்போதே, அவர் 55வயதை எட்டி விடுவார். அந்தக் குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பதற்குள் போதும் போதும் என எண்ணம் வந்துவிடும். தாமதமாக குழந்தை பிறந்தால் கேட்கவே வேண்டாம்.நாம் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்கள். நடக்க வேண்டிய நேரத்தில் அது அது நடந்தால் தான், வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகும்.

ஜோதிடம் பார்க்க அனுக வேண்டிய முகவரி
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399

இல்லறம் எனும் பெரும்பாட்டை, பிள்ளைகள் உறவுகள் என்று வழிவழி யாய்த் தொடரும் ஒரு பந்தத்தை எப்படி விரும்பும்? அதையே விரும்பாதபோது இளமைதான் எதற்கு? இந்த இளமை, பெண்கள் வரையில் சற்று போகமும் மோகமும் சார்ந்தது. நாம் அதைக் கொண்டாடாவிட்டாலும் பிறர் கண்களுக்கு அது விருந்தாகி விடும் ஆபத்தும் அதிகம். தோற்றம் என்பது ஏற்றம் தருவதாக இருக்க வேண்டும்"

Wednesday, March 18, 2015

"அஸ்வமேதயாகத்தின் பலன் தரும் வில்வம்"


"அஸ்வமேதயாகத்தின் பலன் தரும் வில்வம்"
நல்ல நேரம், கடவுள் அருள் இருந்தால் மட்டுமே நல்ல விசயங்கள் நம் கண்ணுக்கு தெரியும், நல்ல விசயங்கள் காதில் கேட்க முடியும், நல்லது என்று தெரிந்த ( அல்லது) நல்ல அனுபவம் பெற்ற பெரிய நல்ல உள்ளம் கொண்டவர்கள் எல்லா காலங்களிலும் வாழ்வர், அவர்கள் காட்டும் சிறந்த நல்ல வழி பயணிப்பது எப்போதும் சிறந்தது
அஸ்வமேதயாகத்தின் பலன் தரும் வில்வம்...
இந்துக்களின் வழிபாட்டில் வில்வ இலைக்கு முக்கிய பங்குண்டு. மூன்று பிரிவுகளைக் கொண்ட வில்வ இலை திரிசூலத்தின் குறியீடாக கருதப்படுகிறது. இந்த வில்வம் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என மூன்று சக்திகளின் அம்சமாக போற்றப்படுகிறது.
சைவர்கள் சிவனை வழிபட வில்வத்தை முக்கிய அர்ச்சனைப் பொருளாக பயன்படுத்துவது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்வமரத்தைப் பற்றிய முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம். அஸ்வமேதயாகம் வில்வமரம் வளர்ப்பது என்பது அஸ்வமேத யாகம் செய்வதன் பலனைக் கொடுப்பதாகும். பாற்கடலில் லட்சுமி தோன்றிய போது அவளுடைய கைகளிலிருந்து வில்வம் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
வில்வ மரம் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாகும். வில்வ மரத்தின் கிளைகளே வேதங்கள். இலைகள் யாவும் சிவரூபம். வேர்கள், கோடி கோடி ருத்திரர்கள். தங்கமலர் அர்ச்சனை சிவனிற்கு பிரியமான வில்வத்தை கொண்டு அர்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருளை பெறமுடியும்.
வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். ஒரு வில்வஇலையைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் தங்க மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும்.
வீட்டில் துளசி மாடம் போல் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை. வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் உண்டாகும்.. கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.
வேடனுக்கு மோட்சம்;
ஒரு முறை காட்டில் ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றபோது, புலி ஒன்று அவனை விரட்டிக் கொண்டு வரவே அதனிடமிருந்து தப்பித்து ஓடி உயரமான ஒரு மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். இருள் சூழ்ந்த பின்னும் மரத்தடியில் படுத்துக் கொண்டு புலி நகர்வதாயில்லை. இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருப்பதற்காக மரத்திலுள்ள இலைகளை ஒவ்வொன்றாகக் கீழே பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான் வேடன். விடிந்து நெடுநேரமாகிய பின்னும் கீழே படுத்திருந்த புலியின் மீது வேடன் பறித்துப் போட்ட இலைக் குவியல் மூடியிருந்ததால், புலி இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கீழே இறங்கி வந்து இலைகளை விலக்கிப் பார்த்த வேடனுக்கு ஆச்சர்யம். அங்கு புலிக்கு பதிலாக சிவலிங்கம் இருந்தது. பிறகுதான் அவனுக்கு விளங்கியது. இரவு முழுதும் அவன் அமர்ந்திருந்தது வில்வ மரம். அன்றைய இரவு சிவராத்திரி. அவனையறியாமலே இரவு முழுதும் கண்விழித்திருந்து வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சித்ததால் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்னும் புராணக்கதை இன்றும் சிவராத்திரி அன்று கூறப்படுகிறது.
கற்பக மூலிகையான வில்வம் திருவையாறு, திருவெரும்பூர், ராமேஸ்வரம் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் வில்வம் தல விருட்சமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்யப்படும் வில்வம் ஒரு கற்ப மூலிகையாகும்; இது அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மையுடையது. வில்வத்தில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர்ப்பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயன் உடையது.
திருஇடைச்சுரம் என்ற திருத்தலத்தில் உள்ள வில்வ மரம் எண் கூட்டிலைகளைக் கொண்டமைந்துள்ளது. இவ்வாறு அமைந்தவை மகாவில்வம் என்றும் பிரம்ம வில்வம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவெண்காட்டிலுள்ள வில்வம் போல் முள் இல்லாத மரங்களும் அரிதாய் காணப்படுகின்றன. வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்யும் போது சிவனோடு நாம் இன்னும் நெருங்க முடியும். சிவனின் அருளைப் பெறமுடியும் என்று சொல்லப்படுகிறது.
ஏழரை சனி பீடித்திருப்பவர்களுக்கு சரியான பரிகாரம் வில்வம்தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது பறிக்கக்கூடாது வில்வ இலையை சோமவாரம், சதுர்த்தி, அஷ்டமி, அமாவாசை, பௌர்ணமி தினங்களில் மரத்திலிருந்து பறிக்கக் கூடாது. வில்வ தளம் என்பது மூன்று இலைகள் சேர்ந்தது. அவற்றை தனித்தனியாகக் கிள்ளக் கூடாது என்பது ஐதீகம்.வில்வத்திற்கு கூவிளம், கூவிளை என்ற மற்ற பெயர்களும் உண்டு.
இதனை “சிவமூலிகைகளின் சிகரம்" எனவும் அழைப்பர். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும். ஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில் வளர்த்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோம்.
1. நேர்மயான, நல்ல உள்ளம் கொண்டவர்கள் தற்போதும் வாழ்கிறார்கள், தெரியாமல் கூட அவர்களை மனதளவில் அல்லது உடல் துன்புறுத்தல் செய்ய நேர்ந்தால் மூன்று தலைமுறைக்காண பாவத்தை சுமக்க வேண்டி இருக்கும், எனவே நல்லதுக்கு மட்டுமே துணை போகலாம்...
3. சிறிய நேர்மைக்கும் ( மனது, உடல், செயல் அளவில் நேர்மைக்கு ) பெரிய... பலன் உண்டு எப்போதும்...
2. ஒருவர் நல்லவர் என்று தெரிந்தும் மேலும் மேலும் பரிசிப்பது அவரவர் ஆன்மாவிற்கு செய்யும் துரோகம். நீங்கள் ஒருவரை வீழ்த்த நினைத்து அவர் நல்லவராக இருந்தால் உங்கள் முன்னோர்கள் செய்த புண்ணியமும் நீங்கள் தவறாக சிதரித்தவருக்கு கிடைக்கும். அதன் விளைவு அவரை வஞ்சித்த பாவம் உங்களுக்கு...எனவே நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும் அனைவருக்கும் ...