Showing posts with label Sports motivation trainer. Show all posts
Showing posts with label Sports motivation trainer. Show all posts

Monday, August 4, 2014

தொழிலில் வெற்றி



சமீபத்தில் ஒருவர் மின்னஞ்சலில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் இரண்டு முறை தொழில் தொடங்கியதாகவும் அந்த இரண்டிலும் தோற்று போனதாகவும் தெரிவித்திருந்தார்.

நண்பருக்காகவும் மற்றும் அவரைப் போன்ற வளரும் இளம் தொழில் அதிபர்களுக்காகவும் இந்த தகவலை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
  • வெறுமே யோசித்துக்கொண்டே இருக்காதீர்கள்வெறுமே ஆசைப்பட்டுக் கொண்டே இருக்காதீர்கள்உண்மையிலேயே நீங்கள் தீவிரமாக இருந்தால்களத்தில் குதித்து அதைச் செய்யுங்கள்.
  • ஒரு முறை உள்ளே இறங்கிவிட்டால்அதன் அடி ஆழம் வரை புகுந்துபுறப்படுங்கள்அதை விட்டு வெளியேறுவதை ஒரு வாய்ப்பாக ஒருபோதும் பார்க்காதீர்கள்.
  • நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்… உங்கள் முயற்சி தோற்றால்,தோற்றது உங்கள் ஐடியாதானே தவிரநீங்கள் அல்ல!!! (தாமஸ் ஆல்வா எடிசன் மின்சாரத்தை தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறைவெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்).
  • பெரிய நிறுவனங்கள் பெரிய மனிதர்களால் உருவாக்கப்படுகின்றன. தனி மனிதன் தனியொரு ஆளாகச் சாதிக்க முடிவது மிகக் குறைவே!
  • சரியான குழுவை ஒன்றிணையுங்கள் (அளவுக்கதிகமான திறமைகள்,மதிப்புகளைவிடகோட்பாடுகளும் அணுகுமுறையும்தான் முக்கியம்).
  • திட்டங்களை தீட்டுங்கள்ஆனால்சந்தையில் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளுக்கு ஏற்பஎல்லா வாய்ப்புகளுக்குமே தயாராக இருங்கள்.
  • பெரிதாக நினையுங்கள்உங்களுடைய உயர்வை ஏற்கனவே அடைந்திருந்தால் எப்படி நடந்துகொள்வீர்களோஅப்படி நடந்துகொள்ளுங்கள்.
  • வேலையையும் வாழ்க்கையையும் சமமாக வைத்துக்கொள்ளுங்கள்.
Urs Happily 
Dr.Star Anand Ram
www.v4all.org 

Wednesday, July 23, 2014

மஹாபாரதத்தில் ஒரு நாள் - செய்வனத் திருந்தச் செய்!

மஹாபாரதத்தில் ஒரு நாள் - செய்வனத் திருந்தச் செய்!



மஹாபாரதம் என்ற இந்த இதிகாசம் முழுக்க முழுக்க தர்மத்தின் ஃபார்முலா. ஒவ்வொரு கதாபாத்திரமும் தர்மத்தின் வாழும் விளக்கங்கள். கலியுக மனிதர்களைக் காட்டும் கண்ணாடி. அத்தகைய உயர்ந்த இதிகாசமான மகாபாரதத்தில் அதிதிகளை உபசரிக்கும் உயர்ந்த தர்மத்தை அதன் பாத்திரங்களே வாழ்ந்து காட்டியுள்ளன. உலகத்தில் வேறெந்த மதத்திலும் வாழ்க்கை தர்மத்தை வாழ்ந்து காட்டி உபதேசிப்பதான ஒரு இதிகாசம் கிடையாது.
பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. யுத்தம் தொடங்குவதற்கு முன் பகவான்ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையே நடந்த உரையாடலே ஸ்ரீமத் பகவத் கீதையாகும்.
நமது உறவினர்களையே கொலைபுரியும் இந்தப் போர் தேவைதானாஎன்று அர்ஜுனன் செயலற்ற நிலையில் நின்றிருந்தபோது, "அர்ஜுனாபோர் செய்வதும் தர்மத்தை நிலைநாட்டுவதும் க்ஷத்ரியனான உனது கடமை. உன் கடமையிலிருந்து நீ தவறாதே" என்று எடுத்துரைத்து கடமையாற்றுவதால் அடையக்கூடியதான பூரண நிலையைப் பற்றியும் எடுத்துரைக்கிறார்.

"
அர்ஜுனா! தன்னுடைய கடமையில் பற்றுள்ள ஒவ்வொருவனும் பூரண நிலையை அடைகிறான். தன் கடமையைச் செய்து கொண்டே அவனால் எவ்வாறு பூரண நிலையை அடைய முடிகிறது என்பதைச் சொல்லுகிறேன். கேள்.!"

"
இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் யாரிடமிருந்து தோன்றி உள்ளனவோ,யாரால் இந்த உலகம் எல்லாம் நிறைந்துள்ளதோ அந்த கடவுளை தனக்குரிய கடமையைச் செய்து கொண்டே வழிபடும் மனிதன் மேன்மை அடைகிறான்."

"
பார்த்தா! சிறப்புடையதாக இல்லாவிட்டாலும்தனக்குரிய கடமையைச் செய்வது,சிறப்போடு மற்றவர்களின் கடமையைச் செய்வதை விட சிறப்பானது. தனக்கு என இயல்பாக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் ஒருவன் துன்பம் அடையமாட்டான்."

"
குந்தியின் மகனே! குறை உள்ளது என்றாலும் தனக்கு என இயல்பாய் அமைந்த கர்மத்தை விட்டுவிடக் கூடாது. தீயைப் புகை சூழ்வது போன்று வினைகள் எல்லாம் கேடுகளால் சூழப்பட்டுள்ளன. அவற்றை நீக்கி நீ உன் கர்மத்தை தவறாது செய்வாய்" என்கிறார் ஸ்ரீ க்ருஷ்ணர்.
இவ்வாறு ஒரு குருவின் ஸ்தானத்தில் இருந்து அர்ஜுனனுக்கு போதித்தார் ஸ்ரீ க்ருஷ்ணர். அப்படிப்பட்ட அர்ஜுனன் தன் குருவாக இருந்த ஸ்ரீ க்ருஷ்ணரின் செயல் கண்டு பதறிய நாள் ஒன்று வந்தது.
ஸ்ரீ க்ருஷ்ணர் எதை அர்ஜுனனுக்கு போதித்தாரோ அவ்வாறே அவர் வாழவும் செய்ததாலேயே வாழும் கடவுளாக அர்ஜுனன் கண்ணனைக் கைதொழுதான்.
அந்நாட்களில் இரவில் போர் புரியும் வழக்கமில்லை. போர் வீரர்கள் இரவில் ஓய்வெடுப்பார்கள். தேரோட்டிகள் குதிரைகளை கட்டி வைத்து அவைகளுக்குத் தீனியும் போட்டு மறுநாள் போருக்குத் தயார் செய்துகொண்டிருப்பார்கள்.
பகல் முழுக்கப் போரிட்டகளைப்பால் அர்ஜுனன் அன்று நன்கு உறங்கிக் கொண்டிருந்தான்.
ஆனால் பகல் முழுக்கத் தேரோட்டி களைத்திருந்தாலும் கண்ணன் மட்டும் இரவில் ஓய்வு கொள்ளாமல் குதிரைகள் மேல் கவனம் செலுத்துவான்.
வெந்நீர் வைத்து குதிரைகளை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி விடுவான். கட்டுக் கட்டாக பச்சை புல் வெட்டி வந்து குதிரைகளுக்கு ஊட்டிவிடுவான். கொள்ளை வேக வைத்துஅதைத் தன் பட்டுத் துணியில் எடுத்து ஒவ்வொரு குதிரைக்கும் தருவான். அவை உண்பதைக் கண்டு மகிழ்வான். குதிரைகள் வயிறார உண்டு முடித்த பிறகு சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும். அந்த நேரத்தில் கண்ணன் குதிரைக் கொட்டில் முழுவதையும் சுத்தம் செய்வான். அதற்குள் விடியத் தொடங்கிவிடும். உடனே குதிரைகளைப் பூட்டி போருக்குச் செல்ல தேரைத் தயாராக்கிவிடுவான்.
ஒவ்வொரு நாளும் இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.
ஒரு நாள்அர்ஜுனனுக்கு நள்ளிரவில் உறக்கம் கலைந்தான். எழுந்து கண்ணன்தங்கியிருக்கும் பாசறைக்குச் சென்றான். அங்கு கண்ணன் இல்லை. தூங்கி ஓய்வெடுக்காமல் கண்ணன் எங்கு சென்றிருப்பான் என்று எண்ணியவாறு தேடினான் அர்ஜுனன்.
இறுதியில் கண்ணன் குதிரை லாயத்தில்குதிரைகளுக்குப் பணிவிடைகள் செய்துகொண்டிருப்பதைக் கண்டான்.
உடனே ஓடிச் சென்று கண்ணனின் கைகளைப் பற்றிக் கொண்டு, ""கண்ணா! குதிரைகளுக்கு நீதான் பணிவிடை செய்ய வேண்டுமாவேறு யாரிடமாவது கூறினால் செய்ய மாட்டார்களா?'' என்றான்.

"
அர்ஜுனா! குதிரைகளை நன்கு பராமரிக்காவிட்டால் தேர் விரைந்து ஓடுமா?பகைவரை வெல்ல முடியுமாவேறு யாரை யாவது பராமரிக்கச் சொன்னால் அவர்கள் அக்கறையாகக் கவனிப்பார்களாஅது மட்டுமல்லஇப்போது நடக்கும் போர் முடியும்வரை நாம் மைத்துனன் மார் அல்ல. நீ எஜமானன்நான் உனக்கு சாரதி. ஆதலால் உன் கடமை போர் செய்வதுஎன் கடமை தேர் ஓட்டுவது. குதிரைகளைப் பராமரிப்பது சாரதிக்குரிய தொழில்மறுநாள் போருக்காக நன்கு ஓய்வு எடுத்துக் கொள்வது எஜமானன் தொழில். இருவரின் தொழில்களும் செம்மையாக நடைபெற்றால் தான் போரில் வெற்றி கிட்டும்! அதனால் நீ சென்று ஓய்வெடுத்துக் கொள். என் கடமையைச் செய்யவிடாமல் குறுக்கிடாதே'' என்றான் கண்ணன்.
கீதை உபதேசம் கேட்ட நாளை விட அன்று கண்ணன் செயலாலும் சொல்லாலும் காட்டிய உபதேசம் அர்ஜுனன் நெஞ்சை நெகிழச் செய்தது.
அந்தநாள் முதல் தன் கடமையை சோர்வின்றி மகிழ்வுடன் செய்து வெற்றியைக் குவித்தான் அர்ஜுனன்.

போதனைகளை ஊருக்கெல்லாம் கூறிவிட்டு தான் மட்டும் சொகுசாக வாழும் தலைவர்களைக் கொண்ட இந்த சமூகத்திற்கு ஸ்ரீ க்ருஷ்ணர் ஒரு வாழும் பாடமே! ஆம்மகாபாரதம் வாழும் தர்மம்!

*******************

"பார்த்தா! சிறப்புடையதாக இல்லாவிட்டாலும்தனக்குரிய கடமையைச் செய்வது,சிறப்போடு மற்றவர்களின் கடமையைச் செய்வதை விட சிறப்பானது. தனக்கு என இயல்பாக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் ஒருவன் துன்பம் அடையமாட்டான்." 
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர்

Tuesday, July 22, 2014

Holiday Inn ன் கெமன்ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள இருபது…

1. தினமும் அரை நாள் கடுமையாய் உழையுங்கள்.
2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்பு தான்.
3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்.
4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியில் தான் ஏற வேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு.ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது. மற்றொன்று நாமே ஏறுவது.
6. வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது.
7. பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை னமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
8. “முடியாது” “நடக்காது” போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
10. வெற்றிக்குத் தேவை பாதி அதிர்ஷ்டம்பாதி அறிவு.
11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்.
12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்.
13. மற்றவர்களை உங்களுக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.
14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
15. எதையும் நாளை என்று தள்ளிப் போடக் கூடாது
16. கைக்கடிகாரத்தைக் கொடுத்து விட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்.
17. மற்றவர்கள் நம்மை வழி நடத்த வேண்டும் என்று நினைக்கக் கூடாது.
18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும்  கிடைக்காது.
19. சந்தோசத்தை கொடுப்பது பணம் மட்டும் அல்ல.
20. கடவுளை நம்புங்கள்.

Yours Happily 
Dr.Star Anand Ram
www.v4all.org 

Monday, July 21, 2014

பயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம் - இந்த உலகின் மிகப் பெரிய சக்தி எது

பயிற்சியும், முயற்சியும் ஒவ்வொருவருக்கும் மூலதனம்

இந்த உலகின் மிகப் பெரிய சக்தி எது என்று கேட்டால்அறிஞர்களிலிருந்து,ஞானிகள் வரை பல்வேறு விடைகளை அளிக்கின்றனர். நதிநீர்மின்சாரம்காற்று,நெருப்புகணினிஇயற்கைகடவுள் என்று விடைகள்தான் அவை. இவை அனைத்தும் பெரிய சக்திகள் என்பது மறுக்க இயலாத உண்மைதான். எனினும்,இவை அனைத்தையும்விட மிகப் பிரம்மாண்டமான சக்தி ஒன்று உள்ளது.



 அதுதான் மன ஆற்றல்’ (Mind Power) இதை உருவாக்கிஇயக்குவதுதான்,மனிதமூளை . ஒரு மனிதன் வாழ்வதும்அழிவதும் மூளையின் இயக்கத்தினால்தான். மூளையைச் சரியாகப் பயன்படுத்தியவர்களேவாழ்க்கையில் வெற்றி பெறுகின்றனர். சரியாக பயன்படுத்தாதவர்கள்தோல்வியடைகின்றனர்.

அடிப்படையில் அனைத்து மனிதர்களின் மனங்களும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். பயிற்சியும்,முயற்சியும்தான் பலருடைய மனங்களை ஆற்றல் பெற்ற மனங்களாக உருவாக்குகின்றன. முயற்சியும்பயிற்சியும் இருந்தால் ,ஒருவர் தனது மனத்தையே மூலதனமாக்கலாம். வாழ்க்கையிலும் வெற்றி பெறலாம்.மனதை வளப்படுத்துவதற்கும் மூலதனமாக்குவதற்க்கும் பலவற்றை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

 முதலாவதாக ஒரு இலக்கை நிர்மாணித்துக் (Goal Setting) கொள்ள வேண்டும். பிறகு அந்த இலக்கை அடைவதற்கு (Goal Attaining ) பல்வேறு திட்டங்களை தீட்டிக்கொள்ள வேண்டும்.
 ஒருவர்ஒரு முக்கியமான கட்டத்தில் எடுக்கும் ஒரு முடிவுதான் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும். ஆகவே முடிவெடுக்கும் (Decision Making) திறனை வளர்த்து கொள்ள வேண்டும்.

நேரம் மிகவும் முக்கியமானது .தேவையில்லாதவற்றில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிப்பதைவிடதேவையானதில் கவனம் செலுத்தி நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள ( Time Management ) வேண்டும். அணிகின்ற உடையில் கவனம் செலுத்திஉடல் மொழியை ( Body Language ) வளப்படுத்தி,அனைவரிடமும் பழகும் திறன்களை வளர்த்துக் கொண்டு இவை அனைத்திலும் புதுமைகளைப் புகுத்துவதில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும்.

இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தலைமைப் பண்புகளையும் ( Leadership Skills)மற்றும் ஆளுமைத் திறனையும் ( Personality Development) மிகச் சிறப்பாக அமையும் வண்ணம்தகுதிகளையும்திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒருவரின் மன ஆற்றலால் தான் ( Mind Power) இயலும் மேலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு கட்டங்களில்இன்பம்,சோகம்,பயம்,கோபம் ஆகிய பல்வேறு உணர்ச்சிகள் தோன்றும். பயம்கோபம் ஆகிய உணர்ச்சிகள் ஒருவரின் வெற்றியை வெகு சீக்கிரம் அழித்துவிடும். இந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்குபய மேலாண்மை ( Fear Management), கோப மேலாண்மை (Anger Management) ஆகிய உத்திகள் மிகவும் பயன்படும்.

 இதற்கும் மன ஆற்றல் மிகவும் உதவும். இதைவிட ஒருவருடைய மன அழுத்தம்,மன உளைச்சல் (Mental Stress,Mental Agony) ஆகியவற்றால்தான்தற்போதுள்ள வாழ்க்கைச் சூழலில்ஒரு சாதாரண யு.கே.ஜி வகுப்பில் பயிலும் குழந்தை முதல்,ஒரு பெரிய தொழில் அதிபர் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்கள் அனைவருக்கும்இந்த மன அழுத்தம்மன உளைச்சல் ஆகியவற்றால் பல்வேறு மன வியாதிகளும் அவைகளைத் தொடர்ந்து தீராத உடல் நோய்களும் வருகின்றன. இவைகள் வராமல் தடுக்கப்பட வேண்டுமானால் இவர்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த (Stress Management) முறையான பயிற்சிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் . இதற்கும் மன ஆற்றல் ( Mind Power) தான் மிகவும் உதவும்.

எனவேஒருவர் தனது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால்மன அழுத்தம் இன்றி தொடர்ந்து பணியாற்றிட வேண்டுமானால்அவர்அவரது மன ஆற்றலை(Mind Power ) வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மன ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்கு முயற்சியும்முறையான பயிற்சிகளும்தன்னம்பிக்கையும் இருந்தால்,ஒருவரது மன ஆற்றல் அதிகரித்து,அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வது நிச்சயம்!


Yours Happily 

Jc.Dr.Star Anandram 
www.v4all.org 
cell -9790044225 

Thursday, July 17, 2014

கழுதையிடமும் கற்கலாம் சுயமுன்னேற்றக் கட்டுரை

கழுதையிடமும் கற்கலாம் சுயமுன்னேற்றக் கட்டுரை



டெரெக் லின் என்ற தாவோ அறிஞர் ஒரு கழுதையின் கதையைக் கூறியதை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.
பண்டைய சீன தேசத்தில் ஒரு கிராமத்தில் சக்கரவர்த்திக்குக் கோயில் எழுப்ப தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியின் கவர்னர் மிகக் குறுகிய காலத்தில் கோயிலைக் கட்டி முடிக்க கிராமத்தினருக்குக் கட்டளை இட்டார்.
கோயில் கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத கிணறு ஒன்று இருந்தது. எனவே கட்டிடப் பணி துவங்கும் முன் அக்கிணறை மூட வேண்டி வந்தது.
மண்ணைப் போட்டு மூட முடிவெடுத்த கிராம மக்கள்மண்ணைச் சுமக்க ஒரு கழுதையைப் பயன்படுத்தினர். சிறிது பணி புரிந்த பின் ஒரு முறை கழுதை கிணற்றின் விளிம்பு வரை சென்று சறுக்கி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
கிணற்றுக்குள் விழுந்த கழுதையை மீட்க சில முறை முயற்சித்த மக்கள் அது முடியாமல் போகவே அது உள்ளே இருக்கையிலேயே அந்தக் கிணற்றை மூட முடிவு செய்தனர். கழுதையைக் காப்பாற்ற நேரம் எடுத்துக் கொண்டால் கவர்னர் தந்த காலக் கெடுவுக்குள் கோயில் பணியை முடிக்க முடியாது என்று அவர்கள் எண்ணினர்.
கிராம மக்களே மண்ணைச் சுமந்து வந்து கிணற்றுக்குள் கொட்ட ஆரம்பித்தனர்.கழுதை பரிதாபமாகக் கத்தியது. அதைக் கண்டு கொள்ளாமல் மண்ணைக் கொண்டு வந்து கிணற்றில் கொட்டியபடி இருந்தனர். சிறிது நேரத்தில் கழுதையின் சத்தம் நின்று விட்டது. கழுதை இறந்திருக்கும் என்று எண்ணிய அவர்கள் சிறிது நேரம் கழித்து கிணற்றில் எட்டிப் பார்த்தனர். கழுதை உயிரோடு தான் இருந்தது. தன் மீது விழுந்த மண்ணை உதறி அடியில் தள்ளி அந்த மண் இறுகிக் கெட்டியாகும் வரை கால்களால் வேகமாக மிதித்தபடி இருந்தது.
அப்படி மண்ணால் உறுதியாகி கிணற்றின் அடித்தளம் மேற்பட மேற்பட கழுதையும் மேலே வந்த வண்ணம் இருந்தது. கடைசியில் ஒரே எட்டாகக் குதித்து கிணற்றுக்கு வெளியே வந்து தப்பித்ததைக் கிராம மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
பல சமயங்களில் நாமும் இந்தக் கழுதையின் பரிதாப நிலைக்கு ஆளாகிறோம். நம் மேல் விழ ஆரம்பிக்கும் பிரச்சினைகள் என்ற மண் குவியல் நம் புலம்பலுக்கு செவி சாய்த்து நிறுத்தப்படுவதில்லை.
எலிஸபெத் குப்ளர் ரோஸ் என்ற அறிஞர் சோதனைகள் வரும் போது ஒவ்வொரு மனிதனும் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டி இருப்பதாகக் கூறுகிறார். 
முதல் நிலை அந்த சோதனையை ஒத்துக் கொள்ளவே முடியாத ஒரு வித ஜடநிலை. 

இரண்டாவது நாம் மறுப்பதால் சோதனை நீங்கி விடும் என்று எதிர்பார்க்கும் நிலை. 

மூன்றாவதாக சோதனைகள் நீங்காததைக் கண்டு சோகமடையும் நிலை.

நான்காவதாக நடந்ததை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காண முற்படும் நிலை. 

முதல் மூன்று நிலைகளை எந்த அளவுக்கு சீக்கிரமாகக் கடந்து நான்காம் நிலைக்கு வந்து செயல்பட ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்கு நாம் புத்திசாலிகளாகிறோம்.

இந்தக் கதையின் கழுதை தப்பித்தது தனது கூக்குரலால் அல்லதனது செயல் திறனால் தான். சோதனைகள் வரும் போது வருத்தப்படுவது இயல்பே. ஏன் இப்படி நேர்ந்தது என்ற கேள்வி நமக்குள் எழுவதும் சகஜமே. ஆனால் வருத்தத்தாலும் புலம்பலாலும் எதுவும் மாறப் போவதில்லை என்பதை உணர்வதும் பகுத்தறிவுள்ள மனிதர்களுக்கு சாத்தியமே.
கழுதையின் மேல் மணலைக் கொட்டியவர்களுக்குக் கழுதையின் மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது. அவர்களது சூழ்நிலையும்கட்டாயமுமே அவர்களை அப்படிச் செய்ய வைத்தது.
சோதனைகள் வரும் போது உலகம் நமக்கு எதிராகச் செயல்படுகிறது என்கிறதீர்மானத்திற்கு வருவது தவறு. குற்றம் சொல்லிச் சுட்டிக் காட்டிக் கொண்டு நிற்கும் போது நாம் காப்பாற்றப்படுவதில்லை.
எலிஸபெத் குப்ளர் ரோஸ் கூறுவது போல "ஆனது ஆகி விட்டதுஇதற்குத் தீர்வு என்ன?" என்று சிந்தித்துச் செயல்படத் துவங்கும் போது தான் சோதனைகளில் இருந்து விடுபடுதல் சாத்தியமாகிறது.
மேலே விழுந்த மண் மழையை உதறித் தள்ளிகாலால் தொடர்ந்து மிதித்து உறுதியாக்கித் தான் படிபடியாக உயர்ந்து கழுதை தப்பித்த வழி சிந்திக்கத் தக்கது. 

அது போல சோதனைகளைக் காலடிக்குத் தள்ளி அவற்றின் மூலம் உயரக் கற்றுக் கொள்வதே வெற்றியின் ரகசியம்.
பயன்படுத்தும் வித்தை தெரிந்தால் வாழ்க்கையில் எதுவுமே வீண் அல்ல.எல்லாவற்றில் இருந்தும் நாம் கற்றுக் கொள்ள முடியும். சோதனைகளிலும் நம்சாதனைகளுக்கான விதைகளைக் காண முடியும்
. ஒவ்வொன்றின் மூலமாகவும் நாம் உயரக் கற்றுக் கொண்டால் வானம் கூட நமக்கு எட்டி விடும் தூரம்
தான்.