Tuesday, December 30, 2014

ஒரு மாதம்... ஒரு தானம்!

ஒரு மாதம்... ஒரு தானம்!
(share) செய்யுங்கள்)
தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதனைச் செய்தால் வாழ்வில் யோகம் வந்து சேரும்.
சித்திரை - நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
வைகாசி - பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
ஆனி - தேன்
ஆடி - வெண்ணெய்
ஆவணி - தயிர்
புரட்டாசி - சர்க்கரை
ஐப்பசி - உணவு, ஆடை
கார்த்திகை - பால், விளக்கு
மார்கழி - பொங்கல்
தை - தயிர்
மாசி - நெய்
பங்குனி - தேங்காய்
இதே போல, 7 நாட்களுக்கும் கூட தானம் இருக்கிறது.
ஞாயிறு - பொங்கல், பாயாசம்
திங்கள் - பால்
செவ்வாய் - வாழைப்பழம்
புதன் - வெண்ணெய்
வியாழன் - சர்க்கரை
வெள்ளி - கல்கண்டு
சனி - நெய்


வாழ வேண்டுமென்று முடிவெடுத்த கணம்


அது ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை. ஜனவரி 31,1993. எனது 18ஆவது பிறந்த நாளுக்குச் சில நாட்கள் இருந்தன. எங்கள் முகாமில் உள்ள ஒருவன் முந்தின நாள் இரவில் சுடப்பட்டான்.
பழிக்குப் பழி
என்னுடைய நண்பர்கள் இதற்கு முன்பு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும், இறந்த மனிதனுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது. அவனுடன் மட்டுமின்றி அவனைக் கொன்றவனுடனும் சேர்ந்தேதான் நான் வளர்ந்தேன். அந்த இரண்டு பேரும் எங்கள் பகுதியில் இரண்டு தரப்பினரின் பிரதிநிதிகள். நாங்கள் எல்லாரும் ஒன்றாகப் பள்ளிக்குப் போனோம். நாங்கள் எல்லாரும் ஏழாம் வகுப்பு முதலே ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளத் தொடங்கினோம்.
நான் மிகுந்த கோபம் கொண்டேன். எனது நண்பனின் கொலைக்குப் பழிதீர்க்க அவனது இறுதிச் சடங்கு வரை பொறுத்திருப்பது என்று நாங்கள் முடிவுசெய்தோம். எங்களது துப்பாக்கிகளுடன் தேவாலயத்துக்குச் சென்றோம். எதற்கும் தயாராக இருந்தோம்.
கொல்லப்பட்ட பையனின் அம்மா தனது சக்தியை எல்லாம் ஒன்றுதிரட்டி ஒரு மைக்ரோபோன் மூலம் எங்களிடம் பேசினாள். அவள் தன் மகன் உயிரோடு இருந்தபோது நடத்திய உரையாடலைப் பற்றி எங்களிடம் சொல்லத் தொடங்கினாள். உயிர் பிழைப்பதற்காக ஓடிக்கொண்டே இருப்பதில் களைப்பு ஏற்பட்டுவிட்டதாக அவன் கூறியிருக்கிறான். நேர்மையாக வாழ்வதற்குத் தயார் என்றும் கூறியிருக்கிறான். அத்துடன் தனது அம்மாவிடம் தனது துப்பாக்கியைக் கொடுத்து, இந்த முறை தான் சொன்னபடி உறுதியாக நடப்பேன் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளான்.
தாயின் மன்னிப்பு
அவன் தாயின் கண்களில் கண்ணீரை நான் பார்த்தேன். அவள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வலியை உணர்ந்தேன். அதைவிட தனது மகனைக் கொன்ற அந்த வாலிபனை மன்னித்துவிட்டேன் என்று அவள் சொன்னபோது நான் மேலும் ஆச்சரியம் அடைந்தேன்.
எனக்கு திடீரென்று ஞானோதயம் ஏற்பட்டது! கொல்லப்பட்டவனின் சொந்தத் தாயே கொன்றவனை மன்னிக்கும்போது நண்பனுக்காகப் பழிவாங்கத் துடிக்கும் நான் யார் என்ற கேள்வி எழுந்தது.
அன்று இரவு நான் பாதிரியாரிடம் என் துப்பாக்கியைக் கொடுத்தேன். நான் இனிமேலும் அப்படியான வாழ்க்கையைத் தொடரப் போவதில்லை என்று கூறி உதவி கேட்டேன். மீண்டும் தெருக்களில் அலைந்து வம்பு வளர்க்காமல் இருப்பதற்கு எனக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது.
காதலில்…
அதற்கு அடுத்த நாளே எனது 18 ஆவது பிறந்த நாள் அன்று ஒரு இளம் பெண்ணைப் பார்த்தேன். அவள்தான் பல வருடங்கள் கழித்து எனக்கு மனைவியானாள். இந்தச் சிறு பெண்ணின் கள்ளமற்ற தன்மைக்கும் எனக்கும் நெடுந்தூரம். ஆனால் இருவரும் உடனடியாக ஈர்க்கப்பட்டோம். மிகக் குறுகிய காலத்தில் சிறந்த நண்பர்களாக மாறினோம். அவள் நடுத்தர வர்க்க மனிதர்கள் வாழும் பகுதியில் வாழ்ந்துவந்தாள். அவளுக்கு மிக அழகிய குடும்பம் இருந்தது.
நான் அவளைக் கவர விரும்பியதை நினைவுகூர்கிறேன். அதே நேரம் எனது இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் ஆபத்தான எதிர்காலத்திலிருந்து அவளைப் பாதுகாக்கவும் விரும்பினேன். அதனால் அவளுடன் இருக்கும் போதெல்லாம் வித்தியாசமாக நடக்கவும், பேசவும், உடை உடுத்தவும் தொடங்கினேன். நகரில் நாங்கள் வசிக்கும் பகுதிக்கு அவளை அழைத்துக்கொண்டு சென்றதே இல்லை. அவள் அபாயகரமான சூழநிலைக்குள் சிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அஞ்சினேன்.
எனது எதிர்காலம் குறித்து யோசிக்கத் தொடங்கினேன். நான் எங்கே செல்கிறேன்? இவளுடனான உறவு தீவிரம் அடைந்தால் இவளுக்கு என்னால் எதைத் தர இயலும்? எனது வாழ்க்கை முறையை மாற்றத் தொடங்கும் அளவுக்கு நான் அந்த உறவை மிகவும் மதித்தேன். வாழ்க்கையைக் கூடுதலாக விரும்புவதற்கான காரணத்தை அவள் எனக்குத் தந்தாள்.
என் வழியில் தடை
நான் எதிர்காலம் குறித்துச் சிந்தித்ததேயில்லை. உடனடியாக எனக்கு வியர்க்கத் தொடங்கியது. எனது இதயம் வேகமாகத் துடித்தது. அச்சம் என்னைப் பீடித்தது. பணம் சம்பாதித்து, ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்வதைப் பற்றிய எண்ணம் வந்தபோதெல்லாம் நான் பீதியடைந்தேன். வாழ்க்கை போராட்டம் நிரம்பியது என்று குழந்தைப் பருவத்தில் எனக்கு ஏற்பட்ட முதல் பதிவை எதிர்காலத்தில் என் குழந்தைக்கு ஏற்படுத்த நான் விரும்பவில்லை. நான் வெற்றிகரமானவனாகத் திகழ வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
என்னிடம் புத்தம் புதிய மனப்பாங்கு உருவானது. நான் எனது இறந்த காலம் பற்றி இனியும் கவலைப்படப் போவதில்லை. எனது வழியில் யாரும் தடையாக நிற்க இனிமேல் அனுமதிக்கப்போவதில்லை. என் வழியில் இருந்து வெளியேற்ற வேண்டிய முதல் ஆள் நான்தான்!
கட்டுரையாளர் ஒரு அமெரிக்கர். அவர் எழுதியுள்ள from The Hood to doing Good எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.


இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும்!

இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருளும் அதன் பயனும்!
(share) செய்யுங்கள்)
1.நன்னீர் - தூய்ப்பிக்கும்
2. நல்லெண்ணை - நலம்தரும்
3. பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும்
4. மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும்
5. திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும்
6. பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால்,
தயிர், நீர், சாணம், நெய் கலந்தது)
7. பசும்பால் - நீண்ட ஆயுள் தரும்
8. பசுந்தயிர் - மகப்பேறு வாய்க்கும்
9. பஞ்சாமிருதம் - பலம், வெற்றி தரும்
10. தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி
11. நெய் - முக்தியளிக்கும்
12. சர்க்கரை - எதிரியை ஜெயிக்கும்
13. இளநீர் - நல் சந்ததியளிக்கும்
14. கருப்பஞ்சாறு - ஆரோக்கியமளிக்கும்
15. நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும்
16. சாத்துக்கொடி - துயர் துடைக்கும்
17. எலுமிச்சை - யமபய நாசம், நட்புடை சுற்றம்
18. திராøக்ஷ - திடசரீரம் அளிக்கும்
19. வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
20. மாம்பழம் - செல்வம், வெற்றி தரும்
21. பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி
22. மாதுளை - பகைநீக்கும், கோபம் தவிர்க்கும்
23. தேங்காய்த்துருவல் - அரசுரிமை
24. திருநீறு - சகல நன்மையும் தரும்
25. அன்னம் - அரசுரிமை
26. சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும்
27. பன்னீர் - சருமம் காக்கும்
28. கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும்
29. சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்.

மந்திரங்களும் – பலன்களும்

மந்திரங்களும் – பலன்களும்
1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.

விரல்களைக் கண்களாக மாற்றியவர்


பிரெய்லி எழுத்துக்கள் இல்லை என்றால் பார்வையற்றவர்கள் நிலை என்ன என்று நினைத்துப் பாருங்கள். அவர்களது விரல்களைக் கண்களாக மாற்றியமைத்த ஒரு மொழியை லூயி பிரெய்ல் உருவாக்கினார். அதுவே லட்சக்கணக்கானோருக்கு ஞானப்பார்வை அளித்துக்கொண்டு இருக்கிறது.
லூயி பிரெய்ல் பிரான்ஸ் நாட்டில் குப்ரே என்ற சிறிய கிராமத்தில் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் 1809-ல் ஜனவரி 4-ம் தேதி பிறந்தார். இவருடைய அப்பா சைமன் ரேலே பிரெய்ல் குதிரை லாடம் மற்றும் சேணம் தயாரிக்கும் பட்டறை வைத்திருந்தார். மூன்று வயதே ஆன லூயி தன் அப்பாவின் பட்டறையில் கருவிகள், தோல், மரச்சட்டங்கள், கயிறு, இரும்புத் துண்டு, கத்தி, ஊசி ஆகியவற்றில் விளையாடிக்கொண்டிருப்பான்.
ஒரு நாள், கத்தியால் மரத்துண்டை வெட்டி விளையாடிக் கொண்டிருக்கும்போது, கத்தி அந்தப் பையனின் கண்களில் குத்திவிட்டது. கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது. உள்ளூர் மருத்துவரைக் கொண்டு வைத்தியம் பார்க்கப்பட்டது. குழந்தைதானே சீக்கிரமே தானாகவே குணமாகிவிடும் என்று நினைத்து வீட்டில் அலட்சியமாக விட்டுவிட்டனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல முறையான சிகிச்சை அளிக்காமல் விட்டதால், சிறுவனது இன்னொரு கண்ணும் பாதிக்கப்பட்டுவிட்டது. சிறுவன் எட்டு வயது ஆவதற்குள் முழுமையாகப் பார்வையை இழந்துவிட்டான். வண்ணமயமான அவனது உலகமே இருண்டு போய்விட்டது.
ஆனால், இந்தச் சிறுவன் சாதாரணமானவன் அல்ல. அவனது மனதில் உலகத்தோடு போராடி ஜெயிக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் இருந்தது. பிரான்சின் பிரபல பாதிரியாரான வேலன்டைய்ன் இவனுக்குப் பல உதவிகள் புரிந்தார். அவரது முயற்சிகளின் பலனாக தனது 10-வது வயதில் லூயி ‘ராயல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ப்ளைன்ட்ஸ்” என்ற பார்வையற்றோருக்கான கல்வி நிறுவனத்தில் சேர்ந்தான்.
ராணுவ மொழி
பிரெஞ்ச் ராணுவ கேப்டன் சார்லஸ் பார்பர் ராணுவத்தினருக்காக ஒரு சங்கேத மொழியை இருட்டிலும் தடவிப் பார்த்துப் படித்துத் தெரிந்துகொள்ளும்வகையில் மேம்படுத்தியதை இவன் கேள்விப்பட்டான். இந்த சங்கேத குறியீட்டு மொழியைப் பார்வையற்றவர்களுக்காக ஏன் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்று இந்தச் சிறுவனின் மனம் ஆராய்ந்தது. கேப்டன் சார்லஸ் பார்பரைச் சந்திக்க சிறுவன் முயன்றான். பாதிரியார் வேலன்டைய்ன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.
கேப்டனை சந்தித்தபோது பல திருத்தங்களையும், மேம்பாடுகளையும் இவன் கூறினான். அதைக் கேட்ட கேப்டன் பிரமித்துவிட்டார். மாற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டார். லூயி பிரெய்ல் எட்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்து, இந்த எழுத்துகளில் நிறைய ஆய்வுகளை மேற்கொண்டு பல மாற்றங்களைச் செய்தார். இறுதியில் 1829-ம் ஆண்டில் ஆறு புள்ளிகளின் அடிப்படையில் பிரெய்லி எழுத்துகளை உருவாக்குவதில் வெற்றி கண்டார்.
ஆனால், இதை ராணுவத்தினர் பயன்படுத்திவந்தார்கள் என்பதால், இது வெறும் சங்கேத மொழியாகவே கருதப்பட்டுவந்தது. இதைக் கல்வியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவருக்கு உரிய மரியாதையும் கிடைக்கவில்லை.
ஆனாலும் சற்றும் மனம் தளராமல் தன்னைப் போன்ற பார்வையற்றவர்கள் மத்தியில் இந்த எழுத்தைப் பற்றித் தொடர்ந்து பிரச்சாரம் செய்தவாறே இருந்தார் லூயி. பார்வையற்றவர்களுக்கான மொழியாக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசிடம் கோரினார். அப்போதைய கல்வியாளர்கள் இதை ஒரு மொழியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவருடைய முயற்சிகள் வெற்றிபெறவில்லை. தனது முயற்சிகளுக்கு சமுதாய மற்றும் சட்டபூர்வமான அங்கீகாரம் பெற தொடர்ந்து போராடிய லூயி பிரெய்ல் தனது 43-வது வயதில் காலமானார்.
மரணத்திற்குப் பிறகு கிடைத்த மரியாதை
இவர் மரணத்திற்குப் பிறகு இவர் கண்டுபிடித்த ஆறு புள்ளிகளை ஆதாரமாகக் கொண்ட எழுத்து, படிப்படியாகத் தொடர்ந்து பிரபல மடைந்தது. லூயி பிரெய்ல் இறந்த பிறகுதான் கல்வியாளர்களால், இந்த மொழியின் மகத்துவத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. பார்வையற்றவர்கள் மத்தியில் இது தொடர்ந்து அங்கீகாரம் பெற்றுவந்தது. எனவே, அரசும் அதன் பிறகு விழித்துக்கொண்டது.
இவர் இறந்த 100 வருடங்களுக்குப் பிறகு பிரான்சில் 1952-ம் ஆண்டு ஜுன் மாதம் 20-ம் தேதி இவருக்கு மரியாதை செலுத்த வேண்டிய நாளாகத் தீர்மானிக்கப்பட்டது. இவருடைய கிராமத்தில் நூறு வருடங் களுக்கு முன் புதைக்கப்பட்ட இவரது உடலின் மிச்சம் அரச மரியாதையுடன் வெளியே எடுக்கப்பட்டது. அன்று இவர் புனர்ஜென்மம் எடுத்தாற்போல இருந்தது. அவர் வாழ்ந்துவந்த காலத்தில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும் கேலி செய்யப்பட்டும் வந்த மக்கள்
அவரிடம் மன்னிப்புக் கேட்க இவரது சமாதியின் நான்கு பக்கமும் சூழ்ந்துகொண்டனர். படை வீரர்கள் சோக கீதம் வாசித்தனர், இவருக்கு வாழும் காலத்தில் அங்கீகாரம் அளிக்காமல் இருந்த வரலாற்றுப் பிழைக்காக அவரது எஞ்சியிருந்த பூத உடலுக்கு முன் தேசமே மன்னிப்புக் கேட்டது. தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பிறகு உரிய முறைப்படி அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் மீண்டும் அவர் மரியாதையுடன் புதைக்கப்பட்டார்.
இந்திய அரசும் இவரைக் கவுரவித்தது. 2009-ம் ஆண்டில் இவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலையை வெளியிட்டது. லூயி பிரெய்ல் கண்டறிந்த இந்த மொழி அவர் பிறந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகிலும் இருக்கும் பார்வையற்ற அனைவருக்கும் வரமாக அமைந்துவிட்டது.

Monday, December 29, 2014

கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல :

கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல :
(share) செய்யுங்கள்)
பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு உருண்டைகள் நீரில் வீசும் போதும் " ஓம் ஹ்ரீம் நமஹ" என ஜெபிக்க வேண்டும்.
ஏரி, குளம், கிணறு, ஆறு இவைகளில் உள்ள மீன்களுக்கு மேற்கண்ட பரிகாரம் செய்தால் நலம்.
பிரச்சனைகள் விலகும் வரை வாரம் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து வர பலன்கள் நிச்சயம். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை வேலையில் குளித்து முடித்ததும் சிறிது சர்க்கரை எடுத்து வீடு வாசல் வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மட்டும் எறும்புகள் உண்ண உணவாகும்.
இதை தினசரி செய்து வரலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் செய்தால் நலம். சிறு சிட்டிகை அளவு போதுமானது. இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்களும் சிறிது சிறிதாக விலகுவது கண் கூடாக தெரியும்.
மிக எளிய பரிகாரமாக தோன்றினாலும் மேற்கண்ட இரண்டும் மிக சக்தி வாய்ந்த பரிகாரங்கள் ஆகும்.

செல்வம் பெருக அட்சய திருதியை அன்று ஒவ்வொரு ராசிக்காரர்களும் 27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்

செல்வம் பெருக அட்சய திருதியை அன்று ஒவ்வொரு ராசிக்காரர்களும் 27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்
(share) செய்யுங்கள்)
மேஷம்: விநாயகர், சுப்பிரமணியர்
ரிஷபம்: சாந்தரூப அம்பிகை
மிதுனம்: விஷ்ணு, மகாலட்சுமி
கடகம்: அம்பிகை
சிம்மம்: சிவபெருமான் பைரவர்
கன்னி: விஷ்ணு, மகாலட்சுமி
துலாம்: துர்க்கை, அம்பிகை
விருச்சிகம்: கற்பக விநாயகர், முருகன்
தனுசு: தட்சிணாமூர்த்தி
மகரம்: விநாயகர், அனுமன்
கும்பம்: சனீஸ்வரன், அனுமன்
மீனம்: தென்முகக் கடவுள், நந்தீஸ்வரர்
அட்சய திருதியை தினத்தன்று ஒவ்வொரு நட்சத்திரக்காரர் களும் தங்கள் நட்சத்திரத்துக்கு ஏற்ற கடவுளை வணங்க வேண்டும். இதனால் கடவுள் அருள் கிடைப்பது அதிகரிக்கும். வாழ்க்கையில் வளம் பெருகும். மகிழ்ச்சி உண்டாகும். 27 நட்சத்திரக்காரர்களும் வணங்க வேண்டிய கடவுள் விபரம் வருமாறு:-
1. அஸ்வினி - விநாயகர்
2. பரணி - ஸ்ரீரங்கநாதர்
3. கிருத்திகை - ஆஞ்சநேயர்
4. ரோகிணி - சிவன்
5. மிருகசீரிஷம்-துர்க்கை
6. திருவாதிரை - பைரவர்
7. புனர்பூசம்-ராகவேந்திரர்
8. பூசம் - சிவன்
9. ஆயில்யம் - பெருமாள்
10. மகம் - விநாயகர்
11. பூரம் - ஸ்ரீரங்கநாதர்
12. உத்திரம் - ஸ்ரீஆஞ்சநேயர்
13. அஸ்தம் - சிவன்
14. சித்திரை - துர்க்கை
15. சுவாதி - பைரவர்
16. விசாகம் - ராகவேந்திரர்
17. அனுசம் - சிவன்
18. கேட்டை - திருமால்
19. மூலம் - விநாயகர்
20. பூராடம் - ஸ்ரீரங்கநாதர்
21. உத்திராடம் - ஆஞ்சநேயர்
22. திருவோணம் - சிவன்
23. அவிட்டம் - துர்க்கை
24. சதயம் - பைரவர்
25. பூரட்டாதி - ராகவேந்திரர்
26. உத்திரட்டாதி - சிவன்
27. ரேவதி - பெருமாள்

நெருக்கடியும் வாய்ப்பும் ஒரே வார்த்தைதான்


வாய்ப்பு என்பது ஒரு மறைமுக வரம். ஆனால் பல சமயங்களில் சாபம் போலத் தோன்றும். வேலையிலும் தொழிலும் ஏற்படும் பல சிக்கல்கள் நிஜமாகவே வாய்ப்புகள் என்றால் நீங்கள் நம்புவீர்களா?
நல்ல வாய்ப்பை அது வந்து போன பின் உணர்பவர்கள் தான் இங்கு அதிகம். அதைத் தவறவிட்டவர்கள்தான் அதன் அருமை அறிந்தவர்கள்.
தெரியாம போச்சே
“அப்பவே அந்த கம்ப்யூட்டர் கம்பனியில வேலை கிடைச்சது. இதெல்லாம் நிலைக்காதுன்னு இங்க வந்தேன். எனக்குப் பதிலா சேர்ந்தவரு இப்ப எங்கேயோ போயிட்டாரு. ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருமானம். நாம இன்னமும் இங்கே முப்பதைத் தாண்டலை!” என்று அங்கலாய்த்தார் இருபத்தைந்து வருடங்கள் அனுபவம் கொண்ட ஒரு முதிய மேலாளர்.
“யாரு கண்டாங்க ஐ.டியெல்லாம் இப்படி வளரும்னு?” என்று சொல்லி எழுந்து சென்றார்.
நெருக்கடியில் வாய்ப்பு
“எனக்கு நல்ல பாஸ். அவனுக்கு ஒரு மோசமான பாஸ். நாங்க இரண்டு பேரும் ஒரே கம்பனியில ஒண்ணா ட்ரெய்னியா சேந்தவங்க. புதுசா வந்த எம்.என்.சியில இரண்டு பேருக்கும் வேலை கிடைச்சது. எனக்குப் போகப் பெரிய மனசில்ல. சம்பள உயர்வும் அதிகமில்ல, பாஸ் தொந்தரவு தாங்காம அங்கே போன என் நண்பன் இன்னிக்கு அங்க டிபார்ட்மெண்ட் ஹெட். நான் இங்கே ஒரு புரமோஷன்தான் வாங்கியிருக்கேன். நல்ல பாஸ்னு அந்தப் புது கம்பனிக்கு போகாம விட்டது பெரிய தப்பாப் போச்சு. அது எவ்வளவு பெரிய வாய்ப்புன்னு அப்பத் தெரியாமப் போச்சு!”
உடனடி அனுகூலம் எதிர்பார்ப்பது அல்லது இன்றைய பிரச்சினையிலிருந்து உடனடியாகத் தப்பிப்பது இதுதான் நம் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கும் மன நிலை. இது நாளைய வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வைக்காது!
இன்று பெரிதாகத் தெரிவது வருங்காலத்தில் பெரிதாகத் தெரியாது. அதேபோல இன்று சாதாரணமாகத் தெரிவது வருங்காலத்தில் பெரிதாகத் தெரியலாம். இந்தச் சிந்தனை இடைவெளியில்தான் வாய்ப்புகள் நழுவிப்போய் விடுகின்றன!
ஆனால் ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏதேனும் வாய்ப்பு தென்படுகிறதா என்று பாருங்கள். அது உங்கள் முடிவு எடுக்கும் திறனைக் கூர்மைப்படுத்தும்.
பிரச்சினைகளில் வாய்ப்புகளைத் தேடுபவர்கள்தான் வேலையில் பெரிய வெற்றிகளைப் பெறுகிறார்கள்.
எனது நெருக்கடி
என் ஆரம்பக் காலச் சிக்கல் ஒன்றுதான் என் வாழ்க்கையை மாற்றும் சக்தியாக மாறியது. 1990-ல் நடந்த சம்பவம் அது.
முனைவர் ஆராய்ச்சியும், மருத்துவ உளவியல் ஆலோசனையும் மட்டும்தான் உலகம் என அப்போது நான் இருந்தேன். ஒரு குடியிருப்போர் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குச் சிறப்பு பேச்சாளனாக வர அழைப்பு கிடைத்தது.
முதல் முறை என்பதால் செம கெத்து. புதுச் சட்டை, கூலிங்கிளாஸ் சகிதம் பஸ்ஸில் பாரிமுனை சென்று அங்கிருந்து ஆட்டோ வைத்துக்கொண்டு வண்ணாரப்பேட்டை சென்றேன். உடன் என் உயிர் நண்பர் வேறு. சந்துக்குள் நுழைய முடியாது என்ற ஆட்டோ ஓட்டுனருடன் சண்டை போட்டு உள்ளே செலுத்தி ஒருங்கிணைப்பாளார் வீட்டு வாசலில் கித்தாப்பாய் இறங்கினோம். ஆரத்தி எடுக்க ஆளில்லாவிட்டால் பரவாயில்லை. நிகழ்ச்சிக்கே யாரும் வர ஆரம்பிக்கவில்லை. ஒரு வெயில் நேரத்தில் குழந்தைகள் மட்டும் பவுடர் பூசி நடனத்திற்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி இப்படி ஏழு மணிக்குக் கூட்டம் சேர்ந்தது. என்னைப் பேசச் சொன்னார்கள்.
நான் பெரிதாகச் சொன்ன உளவியல் விஷயங்கள் எடுபடவில்லை. சில சிரிப்புத் துணுக்குகளுக்கு ஆரவாரமாய்க் கை தட்டினார்கள். இறுதியில் பலமாகக் கை தட்டியபோது ‘போதும்’ என்று நினைத்துக் கை தட்டினார்களா என்று சந்தேகம். இருந்தும் பலர் ஆட்டோகிராப் வாங்கினார்கள். விழா முடிவில் “நீங்கள் கண்டிப்பாக இதை வச்சுக்கணும்” என்று ஒரு சின்ன கவரைத் திணித்தார் அந்த ஒருங்கிணைப்பாளர். பையில் போட்டு விட்டு ஆட்டோ ஏறினோம். முனை தாண்டியதும் பிரித்துப் பார்த்தால் ஆட்டோ காசிற்கே பற்றாத ஒரு ஒற்றை நோட்டு நோஞ்சானாகத் தென்பட, ஆட்டோவை நிறுத்தி பஸ் பிடித்தோம். வீடு வரும்வரை அவர்கள் போற்றிய பூத்துவாலையில் எங்கள் ஆனந்தக் கண்ணீரைத் துடைக்கும் அளவு விழுந்து விழுந்து சிரித்தோம்!
எனது வாய்ப்பு
அடுத்த வாரமே வேறு ஒரு காப்புரிமை முகவர்களுக்கான கூட்டத்தில் பேச அழைத்தார்கள். நண்பன் காதைக் கடித்தான். “மீண்டும் தேங்காய் மூடி கச்சேரியா?”
எவ்வளவு கட்டணம் வேண்டும் என்று அவர்களே கேட்டவுடன் ஒரு நல்ல தொகையைச் சொன்னோம். 20 முதல் 70 வயதுவரை இருந்த மக்கள் கூட்டத்தில் பேசினேன். வண்ணாரப்பேட்டை அனுபவம் நிரம்ப கை கொடுத்தது. அன்றைய பேச்சு மிகச் சிறப்பாக அமைந்ததாகச் சொன்னார் அந்த அதிகாரி, தன் சொந்த வங்கி கணக்கில் உள்ள காசோலைப் புத்தகத்திலிருந்து தாள் கிழித்தார்.
“கம்பெனிதான் கொடுக்கிறது என்று பெரிய தொகை கேட்டோம். உங்கள் அக்கவுண்ட் என்றால் கொடுப்பதைக் கொடுங்கள்!” என்றேன். அதற்கு அவர், “உங்கள் பேச்சைக் கேட்ட முகவர்களில் 5% பேர் கூடுதலாக 25% ரிசல்ட் கொடுத்தாலே போதும். இந்த மூலதனம் எனக்கு நூறு பங்காகத் திரும்பி வரும்!” என்றார்.
இரண்டுக்கும் ஒரே சொல்
ஒரு பெரும் வணிகச் சூத்திரத்தை நொடிப் பொழுதில் கற்றுக் கொண்டதோடு, ஒரு தொழில் வாய்ப்பையும் கண்டுகொண்டேன். தனியார் நிறுவனங்களுக்கு உளவியல் பயிற்சி எடுக்கத் தயாரானேன்.
என் வாழ்வின் போக்கையே மாற்றிய தருணம் அது.
முதல் அனுபவத்தை மறக்க வேண்டிய சம்பவமாக அல்லாமல் படிக்க வேண்டிய பாடமாக எடுத்துக் கொண்டேன். பின் வருடங்களில் உலகின் முன்னணி நிறுவனங்களுக்குப் பயிற்சி அளிக்க, அந்தக் கற்றல் ஆதாரமாய்த் தேவைப்பட்டது.
சீன மொழியில் “நெருக்கடி” மற்றும் “வாய்ப்பு” இரண்டிற்கும் ஒரே சொல் தான். அதை இடம் பார்த்துப் பொருள் படுத்திக் கொள்ள வேண்டும்.
உங்கள் வாழ்வில் நிகழும் சம்பவங்களை நெருக்கடியாகப் பார்ப்பதும் வாய்ப்பாகப் பார்ப்பதும் உங்கள் மனநிலையைப் பொறுத்தது.
“வேலை எப்படிச் சார்?” என்றால் உங்களிடமிருந்து வரும் முதல் பதில் உங்களின் இந்த மனநிலையைக் காட்டிக் கொடுத்துவிடும்!

Yours Happily
Dr.Star Anand ram
Sales Skills Trainer 

பணியினை குறித்த மனோபாவம் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது

ஓரிடத்தில் கல் உடைக்கும் பணி வெகு மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. அந்த வேலையில் பலரும் ஈடுபட்டுருந்தார்கள். நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? என்ற கேள்வி, அவர்களில் 3 பேரிடம் கேட்கப்பட்டது
ஒருவன் “ கல் உடைத்து கொண்டிருக்கிறேன் “ என்றான்
இரண்டாமவனோ “ அகலமும் நீளமாக கல்லை உடைத்து கொண்டிருக்கிறேன் ” என்றான்
மூன்றாமவன் ”கோவில் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன். நான் உடைக்கும் கல் ஒரு கோயிலின் இரண்டாம் பராகாரச் சுற்று சுவருக்கானது “ என்றானாம்
3வரும் செய்து கொண்டிருப்பது ஒரே வேலை தான். பணியினை குறித்த மனோபாவம் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது
வேலையினை தன்மையினை புரிந்துகொண்டு அதை நேசத்தோடு செய்தால் நலமே
வேலையின் நோக்கத்தைத் தெளிவாக புரிந்து கொள்ளாத பலர், நம் தேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு அரைகுறையாக எழுப்பட்ட பல கட்டடங்களும் சாலைகளுமே சாட்சி.......

Saturday, December 27, 2014

மாற்றங்கள் - ஏமாற்றங்கள் - வாய்ப்புகள்


வேலை கிடைப்பது, கிடைத்த வேலையை சிறப்பாகச் செய்வது, செய்யும் வேலையை மன நிறைவோடு செய்வது எனப் பல விஷயங்கள் பேசிவருகிறோம். வேலையைச் சிறு அங்கமாகப் பார்த்து அதைக் கையாள உபதேசங்கள் அளிக்காமல், வாழ்க்கையின் அங்கமாக வேலையைக் கருத்தில் கொண்டு, வாழ்வு சிறக்க, வேலையில் என்ன செய்யலாம் என்று பேசுவதில்தான் இந்தத் தொடர் வித்தியாசப்படுகிறது.
விழுங்கும் வேலை
வேலை ஒரு மனிதரின் விழித்திருக்கும் நேரத்தின் பெரும்பான்மையை விழுங்கிக் கொள்கிறது. சிலரின் வாழ்க்கையில் முழுமையையும் விழுங்கிக் கொள்கிறது. எனவே, ஒருவரின் வாழ்க்கையின் சகல கூறுகளையும் வேலை நிர்ணயிக்கிறது.
தனிப்பட்ட வாழ்க்கையின் சுக துக்கங்கள் வேலையைப் பாதிப்பதை விட வேலையின் சுக துக்கங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிப்பது இதனால்தான். ஆகவேதான் வேலை தொடர்பான விஷயங்களை உளவியல் ரீதியாகப் பார்ப்பது முக்கியம்.
வேலையில் சிறக்கும் ஒவ்வொரு மனிதரும் வேலையைப் புரிந்து கொள்வதை விட தன்னைப் புரிந்துகொண்டவராகக் இருக்கிறார்.
தனக்கான வேலை எது என்று தீர்மானிப்பதில் சுய அறிதல் துவங்குகிறது. தன் பலங்கள், பலவீனங்கள், எதிர்பார்ப்புகள் என அனைத்தையும் எடை போட்டுத் தேர்வு செய்யும் போது ஏமாற்றங்கள் அதிகமிருக்காது. தன் இயல்பிற்கு ஏற்ற வேலையைச் செய்யும்பொழுது ஒருவரால் தன் சிறப்பான பங்களிப்பை எளிதாகத் தர இயல்கிறது.
மாறும் வேலைகள்
இருந்தும், மனிதர்களைப் போல வேலைகளும் காலத்திற்கேற்ப மாறுகின்றன. எண்பதுகளில் பணியாற்றிய வங்கி மேலாளர் வேலைக்கும் இன்றைய வங்கி மேலாளர் வேலைக்கும் தான் எத்தனை வேறுபாடு? அதனால் வேலையில் உள்ள மனிதர்கள் தங்கள் சுயத்தில் ஏற்படும் மாறுதல்களைக் கண்டு கொள்வதைப் போல வேலையில் ஏற்படும் மாறுதல்களையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
உலகம் மாற மாறத் தொழில்களும் வேலைகளும் மாறிப்போகின்றன. அதற்கேற்ப மனிதர்கள் மாறுவதில் தான் சிக்கல் இருக்கிறது.
நிகழ் காலம் போலவா எதிர்காலம்?
“நான் உயிரைக் கொடுத்து விற்கிறேன். அவன் ஆன்லைன்ல அள்ளிட்டுப் போறான்!” என்றார் ஒரு புத்தகக் கடைக்காரர்.
“லெக்சரர்னு பேர்.. கிளாஸ் எடுக்கறது மட்டுமில்லாம ஹாஸ்டல் முதல் ஹவுஸ்கீப்பிங் வரை பாக்கறேன் சார். இதெல்லாம் நான் செய்வேன்னு கனவுல கூட எதிர்பார்க்கலை!” என்றார் ஒரு தனியார் கல்லூரி ஆசிரியர்.
“பிராஞ்ச் மேனேஜரா 15 வருஷம் சர்வீஸ் சார் எனக்கு. இப்போ கிட்டத்திட்ட சேல்ஸ்மேன் மாதிரி வங்கியோட ப்ராடெக்ட்ஸ் விக்கறதுதான் வேலை. முன்ன என் கேபினுக்கு வந்து எல்லோரும் பல்ல இளிப்பாங்க. இப்ப எல்லோரையும் கேபினுக்கு கூப்பிட்டு நான் பல்ல இளிக்கறேன்!” என்றார் ஒரு வங்கி மேலாளர்.
“இந்த கம்ப்யூட்டர் எல்லாம் வந்த காலத்தில் எங்க டிபார்ட்மெண்டில் தான் முதல்ல வாங்கினோம். நமக்கெல்லாம் தேவைப்படாதுன்னு கடைசி வரைக்கும் கத்துக்கலை. இன்னிக்கு அது பெரிய குறையா இருக்கு!” என்றார் ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஒரு அதிகாரி.
“டிரான்ஸ்ஃபர் ஆகும்னே ப்ரொமோஷன் வேண்டாம்னு எழுதிக் கொடுத்தேன். குடும்பத்துக் காக தியாகம்னு நினைச்சு எல்லாம் பண்ணினேன். இன்னிக்கு குடும்பத்திலயும் மதிப்பில்லை. ஆஃபீஸ்லயும் மதிப்பில்லை. எப்ப தனியார் மயமாகும்னு தெரியலை. என் கூட வேலைக்கு சேந்தவங்க இன்னிக்கு நிறைய பேர் ஜி.எம்
ஆயிட்டாங்க. நான்தான் தோத்துப் போயிட்டேன்!” என்றார் ஒரு அரசுத் துறை ஊழியர்.
அடிப்படையில் இவர்களுக்கு என்ன பிரச்சினை? நிகழ் காலம் போலவே எதிர்காலம் இருக்கும் என நம்பியது தான்!
மாறும் உலகம்
யோசித்துப் பார்க்கையில் நாம் எல்லாருமே இதைச் செய்கிறோம். நம்மில் சிலர் உடனே விழித்துக் கொண்டு உலகம் மாறுவதை கண்டுகொள்கிறோம். சிலர் விழித்துப் பார்ப்பதற்குள் உலகம் அடையாளம் தெரியாத அளவு மாறிப் போய் விடுகிறது.
இதைச் சரியாக உணர வேண்டும் என்றால் நீங்கள் வாழ்ந்த ஊரை காலம் கடந்து சென்று பாருங்கள். அந்த வலியை உணர்வீர்கள்.
இன்றும் கோயமுத்தூர் செல்கையில் பீளமேட்டைத் தாண்டும் போது மனதில் 80- களின் பிம்பங்கள் வந்து சிதறடிக்கும்.
எங்கள் கல்லூரி எதிரில் சூரிய காந்தி தோட்டம் இருக்கும். விமான நிலையம் போகும் வழியில் ஒவ்வொரு கல்லும் அத்துப்படி. நிஷா பேக்கரியில் காரக்கடலை பிரபலம். சித்ராவி லிருந்து ஹாஸ்டல் செல்லும் வரை “சோலை புஷ்பங்களே...என் சோகம் சொல்லுங்களேன்” பாடல் விட்டு விட்டுக் கேட்கும்.
லுங்கி கட்டிய காளைகள் நாங்கள் ரோட்டில் குறுக்கும் நெடுக்கும் ஓடி விளையாடும் அளவு தான் சாலை போக்குவரத்து. காலேஜ் வாசல் ராஜு கடையில் எல்லா நேரமும் கூட்டம் இருக்கும்.
இன்று விமானத்திலிருந்து வெளியே வந்தால் டிவைடர், டிராஃபிக் சகிதம் அவினாசி சாலை மாறிப்போயிருக்கிறது. வழியெங்கும் கடைகள். சூரிய காந்தி பூக்கள் எல்லாம் காணாமல் போயிருந்தன.
ஆனால் அங்கே வசிக்கும் கோவைவாசிகளுக்கு என்னைப் போல அதிர்ச்சிகள் இருக்காது. மாறுதலை மெல்ல மெல்ல கவனித் தவர்கள் அவர்கள்.
இதே போலத் தான் வேலை மாற்றங்களும். காலம் கடந்து பார்த்தால் புரியாது. தொடர்ந்து கவனித்தால்தான் பிடிபடும்.
மாற்றங்களே வாய்ப்புகளாக
சரி, எப்படி தெரிந்து கொள்வது? உங்கள் தொழில் அல்லது துறை சார்ந்த செய்திகள் வந்தடைகிறதா? இல்லாவிட்டால் தேடிச் செல் கிறீர்களா? உங்கள் தொழில் அல்லது வேலை சார்ந்த வல்லுநர்கள் தொடர்பு உண்டா? உங்கள் வேலை அடுத்த 5 ஆண்டுகளில் எப்படியெல்லாம் ஆகும் என கூகுள் செய்திருக்கிறீர்களா?
என் பயிலரங்குகளில் “உங்களுக்குத் துறை சார்ந்த வாசிப்பு இருக்கிறதா?” என்று கேட்டால் பெரும்பாலோர் உதட்டைச் சுளிப்பார்கள். உங்கள் வாசிப்பையும் தேடலையும் தொடர்புகளையும் உங்கள் வேலைக்கு உதவுவது போலவும் அமைத்துக்கொள்ளுதல் அவசியம்.
மாறுதல்கள் ஏமாற்றங்களாக இருக்க அவசியம் இல்லை. வாய்ப்புகளாகவும் இருக்கலாம்.
வருங்காலம் வருந்துங்காலம் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
அக்கம் பக்கம் பாருங்கள். உலகம் மாறுவது தெரியும்.
கண்ணதாசனின் அமரத்துவம் நிறைந்த பாடல் இதை இன்னமும் அழுத்தமாகச் சொல்கிறது.
“ மாறுவதைப் புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்து விடும்!”

பலவீனத்தை வெளிக்காட்டலாமா?

அஸ்திவாரத்தில் அலட்சியமாக இருந்துவிட்டு ஆடம்பரமாக கட்டிடம் எழுப்பினால் எப்படி? தங்கள் ஊழியர்கள் வேறு பல விஷயங்களில் குறைபாடு கொண்டவர்களாக இருந்தால் அவற்றைப் பயிற்சியின் மூலம் சரி செய்துகொள்ளலாம் என நினைக்கும் நிறுவனங்கள் சில அடிப்படை விஷயங்களில் மட்டும் மிகவும் கண்டிப்பாக இருக்க வாய்ப்பு உண்டு.
அடிப்படை விஷயம் என்றால் என்ன? இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடலாம். என்றாலும் இதை விளக்க சைகோமெட்ரிக் தேர்வில் கேட்கப்பட வாய்ப்புள்ள ஒரு கேள்வியை மனிதவளப் பயிற்சி வகுப்பு ஒன்றில் முன்வைத்தேன்.
நடத்தை
“நீங்கள் ஒரு லீடர். உங்களின் கீழ் பணிபுரியும் ஒருவர் சிறப்பாக வேலை செய்யக் கூடியவர். இப்போது தன் பணியைச் சரியாகவே செய்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடத்தை சரியில்லை என்று உங்கள் டீமிலுள்ள பலரும் உங்களிடம் புகார் கூறுகிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்?’’.
இப்படி ஒரு கேள்வி கேட்ட அடுத்த நிமிடமே பயிற்சி பெற வந்திருந்த பலவித டீம் லீடர்களுக்கிடையே பலவித பதில்கள் வந்தன.
‘’அந்த ஊழியரைக் கூப்பிட்டுக் கடுமையாக எச்சரிப்பேன்’’ என்றார் ஒருவர்.
‘’கடுமை கூடாது. இதமாக எடுத்துச் சொல்வேன். டீமில் பிறர் நடத்தை சரியில்லை என்றால், அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேட்பேன். மனம் திருந்துவார்’’ என்றார் அடுத்தவர்.
‘’இதெல்லாம் வேலைக்கு ஆகாது. பிறருடன் கலந்து பழகத் தேவையில்லாதபடி தனி ஒருவராகவே செய்யக்கூடிய வேலையை அவருக்கு அளித்து விடுவேன். அப்போது அவர் மீதிப் பேருடன் கலந்து பழக அவசியமிருக்காது’’ என்றார் இன்னொருவர்.
நான்காமவர் அதற்கு நேரெதிரான ஒரு கருத்தைக் கூறினார். ‘’பிறருடன் சேர்ந்துதான் செய்ய முடியும் எனும் படியான வேலையை அவருக்குக் கொடுக்கலாம். அப்போது தன் வேலையை முடிக்க வேண்டுமென்றால் அவர் பிறரிடம் ஒழுங்காகப் பழக வேண்டும் என்ற அவசியம் தோன்றிவிடும்’’ என்றார்.
‘’இதையெல்லாம் விடுங்க சார். உங்க பயிற்சி வகுப்புக்கு அவரை அனுப்பினாலே போதும். தானாக மாறிடுவார்’’ என்று என்னைக் குளிர்விக்க முயன்றார் வேறொருவர்.
‘’வேலைகூட அப்புறம்தான் சார். நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நடத்தைதான் முக்கியம்’’ என்று திருவாய் மலர்ந்தார் இன்னொருவர்.
அப்ஜெக்டிவாக
எல்லாமே சிறந்த யோசனைகள்தான் என்பதைக் கூறிவிட்டு, நான் அவர்களை ஒரு கேள்வி கேட்டேன்.
‘’இவை எல்லாவற்றுக்கும் முன்பாக அந்த ஊழியர் மீது மற்றவர்கள் சுமத்தும் புகார் உண்மையானதுதானா என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டாமா?’’.
இப்படி நான் கேட்டதும் ‘அட ஆமாம்’ என்பதுபோல் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டனர் பயிற்சியாளர்கள்.
ஒரு பிரச்சினையை அப்ஜெக்டிவாகவும் அணுக வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியது இந்தச் சம்பவம்.
அப்ஜெக்டிவாக அணுகுவது என்றால் என்ன? சப்ஜெக்டிவாக அணுகுவது என்றால் என்ன? பார்ப்போம்.
அப்ஜெக்டிவ் வகைக் கேள்விகள் உங்களுக்குத் தெரியும். ஒரு கேள்விக்கு மூன்று, நான்கு பதில்களை அளித்திருப்பார்கள். சரியான பதிலைத் தேர்ந்தெடுத்தால் அந்தக் கேள்விக்கான முழு மதிப்பெண் கிடைக்கும். இல்லையேல் பூஜ்ஜியம்தான்.
இருகோணங்களிலுமே
நான் ஒரு கட்டுரையை எழுதி மூன்று பேரிடம் மதிப்பிடச் சொன்னால் ஒவ்வொருவரும் வெவ்வேறான மதிப்பெண்ணைத்தான் அளிப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களுடைய சப்ஜெக்டிவ் அணுகுமுறை. அதாவது அவர்களது கடந்த கால அனுபவம், எதிர்பார்ப்பு, கட்டுரையின் மையப் பொருள் குறித்த அவர்களது தீர்மானம் போன்றவை மாறுபடுகின்றன.
வாழ்க்கையில் சிலவற்றை அப்ஜெக்டிவாகவும், சிலவற்றை சப்ஜெக்டிவாகவும் அணுக வேண்டும். சைகோமெட்ரிக் தேர்வுகளில் இருகோணங்களிலுமே யோசித்துவிட்டுதான் விடை அளிக்க வேண்டும். அதற்கு உதவத்தான் இந்தத் தொடர்.
“உங்கள் சிறப்புகள் அல்லது பலங்கள் என்ன?’’.
இப்படி ஒரு கேள்வி சைகோமெட்ரிக் தேர்வுகளிலும் இடம்பெறலாம். நேர்முகத் தேர்விலும் கேட்கப்படலாம். இந்தக் கேள்விக்கு நீங்கள் உடனடியாக ஒரு சிறு பட்டியலையே அளிக்க வாய்ப்பு உண்டு.
ஆனால் ‘’உங்கள் பலவீனங்கள் என்ன?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டால் நீங்கள் திகைக்கக் கூடாது.
பாதிக்காத பலவீனம்
நம் நடவடிக்கைகளைச் சிறப்பானதாக மாற்றும் நான்கு கட்டங்கள் உண்டு. ஒன்று, குறைகளை அறியாதிருத்தல். இரண்டு, குறைகளை அறிந்தும் அவற்றைச் சரிசெய்யாதிருத்தல். மூன்று, முயற்சிகளின் மூலம் குறைகளைச் சரிசெய்தல். நான்கு, முயற்சிகள் இன்றியே குறைகளின்றி இருத்தல்.
யாருக்குமே சில குறை பாடுகள் இருக்கும். அவற்றை உணர்ந்து கொள்ளவில்லை என்றால், இரண்டாவது கட்டத்தையே அடைய முடியாது. நாம் செய்வதுதான் சரி என்ற அசட்டு எண்ணத்தில் இருப்போம். குறைந்தபட்சம் நம் குறைகளை அறிந்து கொண்டால்தான் அவற்றைக் களைய ஓரளவாவது முயற்சி எடுப்போம்.
எனவே, தனது ஊழியர்கள் தங்கள் குறைபாடுகளை, பலவீனங்களை அறிந்திருக்க வேண்டும் என்றுதான் நிறுவனங்கள் எதிர்பார்க்கும். எனவே, பலவீனங்களை சைகோமெட்ரிக் தேர்வுகளில் தெரியப்படுத்துவதில் தவறில்லை. ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை மறக்கக் கூடாது. எந்தப் பதவியை அடைய நீங்கள் தேர்வு எழுதுகிறீர்களோ, அந்தப் பதவியில் பணிபுரிய உங்கள் பலவீனம் மிகப் பெரும் தடங்கலாக இருந்துவிடக் கூடாது. அப்படி இருந்தால் அதைக் குறிப்பிட்டால் உங்கள் வேலைவாய்ப்பை அது பாதிக்கும்.
வாடிக்கையாளர்களை அடிக்கடி சந்திக்க வேண்டிய ஒரு பதவி என்றால் ’’எனக்கு எதையுமே குறிப்பிட்ட நேரத்தில் செய்து பழக்கமில்லை’’ என்று உங்கள் பலவீனத்தைக் குறிப்பிட்டால் எப்படி? ‘’நினைத் ததை என்னால தெளிவான வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியாது’’ என்பது உங்கள் பலவீனமானால் விற்பனை அதிகாரியாக உங்களை
எப்படித் தேர்ந்தெடுப்பார்கள்? ‘’எளிதில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் ஊசலாடுபவன் நான்’’ என்று தங்கள் பலவீனத்தை ஒத்துக் கொள்பவர்களை உயரதிகாரியாகத் தேர்ந்தெடுக்க நிறுவனங்கள் யோசிக்குமா, இல்லையா?
எனவே, தவறான இடத்தில் பலவீனத்தை வெளிக்காட்டுவதே உங்கள் பெரிய பலவீனமாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆசீர்வாதம் என்பது உண்மையா?

கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள்… எதுவாய் இருந்தால் என்ன, ‘பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு’ என்று நம்மை பல திசைகளில் இருந்தும் கட்டாயப் படுத்துபவர்கள் பலர். ஆசீர்வாதம் என்றால் என்ன? வயதில் பெரியவர்கள் தான் ஆசி வழங்க முடியுமா? சத்குருவின் பதில் இங்கே… கேள்வி சத்குரு, நீங்கள் அன்பர்களின் ருத்திராக்ஷங்களை ஆசிர்வதிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆசிர்வாதம் என்றால், உண்மையில் என்ன? சத்குரு: 
ஆசீர்வாதம் என்பது உண்மையா?, Asirvadam enbathu unmaiya?
‘எல்லாம் நல்லதே நடக்கட்டும்’ என்று உங்களிடம் யாரேனும் சொன்னால், அது ஆசீர்வாதம் கிடையாது. அது ஒரு விருப்பம், ஒரு நல்ல எண்ணம். அவ்வளவுதான். ‘ஆசி’ என்பது எண்ணங்கள் அல்ல. அது ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி. ஆசி என்பது நல்லதும் அல்ல; கெட்டதும் அல்ல. அது எரிபொருள். உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவும் வஸ்து அது. உதாரணத்திற்கு, உங்கள் காரில் எரிவாயு இல்லை. காரைத் தள்ளிக் கொண்டு போவது மிகவும் கடினம், அதோடு தாமதம் வேறு ஆகும். இதுவே யாரேனும் எரிபொருள் தந்து உதவினால், வெகு சுலபமாக, வெகு விரைவாக வேண்டிய இடத்திற்குச் சென்று விடலாம். ஆசி என்பது இந்த எரிவாயு போன்றது. அது வெறும் வாழ்த்தோ, எண்ணமோ, உணர்ச்சியோ அல்ல. அது சக்தி. ஆனால் நீங்கள் எங்கேனும் செல்ல நினைத்தால் தான் உங்களுக்கு எரிபொருள் தேவை. பயணிக்க விருப்பம் இல்லையெனில் எரிபொருள் தேவையில்லையே! பயணிக்க விருப்பம் இல்லாதவர்கள் இருக்கிறார்களா, என்ன? ஆம். ‘பயணம்’ என்றால், கார் நகர வேண்டும். கார் நகர்ந்தால், விபத்து நிகழ வாய்ப்பிருக்கிறதே! அது எப்போதுமே ஆபத்தானது. அப்படிப் பார்த்தால் பயணிக்காமல், நிற்கும் காரிலேயே வாழ்வது பாதுகாப்பனது தானே? பயணம் செய்யவில்லை என்றால் மாற்றமே இருக்காது என்றல்ல. உங்களைச் சுற்றி, காலை இரவாகும். இரவு பகலாகும். மழைக்காலம் மாறி குளிர்காலம் வரும், குளிர்காலம் மாறி கோடை வரும், பின் வசந்தகாலம், இலையுதிர்காலம் என மாறிக் கொண்டே இருக்கும். சுற்றம் மாறுவதால், நீங்களும் எங்கோ பயணிப்பதாய் தோன்றலாம். அந்த எண்ணம் மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் உண்மையில் நீங்கள் பயணிக்கவும் இல்லை, உங்களில் எவ்வித மாற்றமும் இல்லை. நிறுத்தப்பட்டுள்ள காரின் பாதுகாப்பு வேண்டாம். பயணிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தால், இப்போது உங்களுக்கு எரிபொருள் தேவைப்படும். இந்த எரிபொருள் தான் ஆசி. துரதிஷ்டவசமாக ஆசி தேடிவரும்போது பலரும் அதை ஏற்க மறுத்து விடுகிறார்கள். ஆசி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அது அப்படி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இது சென்ற குளிர்காலத்தில், அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி. மிச்சிகன் நகரில் ஒரு சிறிய பறவை பனிப்பொழிவை மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவித்தது. அதனால் அது பருவமாற்றத்துக்கு ஏற்ப, குறிப்பிட்ட காலத்தில், தெற்கு நோக்கி பயணம் செய்வதை மறந்தே போய் விட்டது. பிறகு தாமதத்துடன் கடுங்குளிரில் அங்கிருந்து புறப்பட்டது. ஆனால் வழியில், அது குளிரில் விறைத்துப் போய் கீழே விழுந்துவிட்டது. அவ்வழியே நடந்து போன ஒரு பசு சாணம் போட்டுச் சென்றது. அந்த சாணம் நேராக அந்தப்பறவை மீது விழுந்தது. சாணத்தின் கதகதப்பால் அந்த பறவை கடுங்குளிரில் இருந்து மீண்டது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தது. கீச்கீச்சென்று கத்தத் தொடங்கியது. குளிர்விட்டுப் போன மகிழ்ச்சியில் அது கத்திக்கொண்டிருந்த போது, அங்கு ஒரு பூனை வந்து சேர்ந்தது. பறவையின் சப்தத்தைக் கேட்ட பூனை சுற்றும் முற்றும் பார்த்தது. ஓ! சப்தம் சாணத்துக்குள் இருந்தல்லவா வருகிறது என்று புரிந்து, அதற்குள் இருந்த பறவையை வெளியில் இழுத்து, அதைத் தின்றுவிட்டது. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மீது சாணம் எரிபவர்கள் எல்லாம் உங்கள் எதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமுமில்லை. உங்களை சாணக் குவியலிலிருந்து வெளியே எடுப்பவர்கள் எல்லாம் உங்கள் நண்பராக இருக்கவேண்டும் என்றும் அவசியமில்லை. (சிரிப்பலை). ஆசி பலவிதங்களில் வரும். நீங்கள் விரும்பியவாறு தான் அது வரவேண்டும் என்று அவசியமில்லை. எந்த அளவிற்கு ஏமாற்றம் தருகிறதோ அந்த அளவிற்கு அது உங்களுக்கு நல்லதைத் தரும். இது ‘ஆசி’ என்று நீங்கள் நினைக்காத விதங்களில் கிடைக்கும் ஆசி, உங்களுக்குப் பல நன்மைகளையும் செய்யும். ஆசி என்பது நல்லதும் அல்ல; கெட்டதும் அல்ல. அது எரிபொருள். உங்கள் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உங்களுக்கு உதவும் வஸ்து அது.

Friday, December 26, 2014

“கோபத்திற்கு கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அள்ளி வைப்போம்!”

“கோபத்திற்கு கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அள்ளி வைப்போம்!”

வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடு கிறோம்’என்கிறார் ரால்ப் வால் டோ.
ஆனந்தமும் கோபமும் எதிர் எதி ர் துருவங்களில் வேர்விட்டு அமர் ந்திருப்பதை அவருடைய வார்த் தைகள் சுட்டிக்காட்டுகின்றன.
‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதி
சயப்பிறவியாய் இருக்க வேண்டும்.
கோபம் தும்மலைப்போன்றது. சாதிமத நிற பேதமில்லாமல்எல்லோருக்குமே வரும். சி லரிடம் ‘நீங்க அடிக்கடி கோ பப்படுவீங்களாமே?’ என்று கேட்டால்கூட எவண்டா அப் படிச் சொன்னது?’ என கோப ப்பட ஆரம்பித்து விடுவார்க ள்.
இதில் சமர்த்துக் கோபம் ஒன்றுண்டு. ‘வரையறுக்கப் பட்ட, கட்டுக்குள் இருக்கக்கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல்இல்லாமல்வளர்கிறது எனில் உங்களு க்குக்கோபம் எழும். அந்தகோபம் கத்தலாகவோ, சண்டையாக வோ இல்லாமல் வரையறுக்கப் பட்ட நிலையில் வெளிப்படும் போது வழிகாட்டும் அறிவுரை யாய் மாறி விடு கிறது.
‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன் னிக்கு வேலையை முடிக்கலே ன்னா சிக்கல் பெரிசாயி டும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.
ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பே சும் கோபம் எந்த இடத்திலு ம், எந்தச் சூழ லிலும் கொ ண்டாடப்படுவதில்லை என் பதே உண்மை.
கோபத்தை ஒரு மிகப்பெரி ய கோடு கிழித்து இரண்டு பாக மாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். `நீ எப்படிய்யா என் மனைவி யைப் பற்றி தப்பாப் பேசலா ம்’ எனநரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம். இதை `எக் ஸ்ப்ளோசிவ் ஆங்கர்’ என் பார்கள்.
இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எ திராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல் வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டா மல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்கு ள் வெடித்துச் சிதறும். இதை `இம்ப் ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
எந்த வகைக் கோபமாக இருந்தாலு ம் அது நமது உடலையும் மனதையு ம் ஒருகை பார்க்காமல்விடாது என் பதுதான் உண்மை. சண்டை, அடித டி, பிரிவுகள், தோல்வி, உடல் பல வீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படை யில் இந்த கோபமே பதுங்கிக் கிடக் கிறது.
மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதி கள், வலிப்பு என பல நோய் களுக்கும் கோபமே அடிப்ப டையாய் இருப்பதாய் மருத்து வம் நீட்டும் பட்டியல் எச்சரிக் கிறது.
அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒருபடி மேலே போ ய், நோய்கள், காயங்கள் போ ன்றவை குணம் அடையாமல் இருப்பதன் காரணமும் கோப மே என்கிறது.
கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக்கைதி களின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆ வேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்ப தாய் நினைத்துக் கொண்டோ பலரும்சிறைச்சாலைக்கு வந் துவிடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோப ம் கொண்டு மிச்ச வாழ்க்கை யைக் கண்ணீரின் கரைகளில்வாழ்ந்து முடிக்கிறார்கள்.
இருபத்து ஆறு ஆண்டுகள் சி றையில் வாடிவிட்டு வெளி யே வந்தபோது நெல்சன் மண் டேலாவுக்கு சிறை அதிகாரிக ளின் மீது கடுமையான கோப ம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, `சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்’ என வெளி ச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவ குறிப்புகள் பேசுகின் றன.
உறவுகளுக்கு இடையேவரும் பிள வுகளும் கோபத்தின் குழந்தைக ளே. `கொஞ்சம்அவசரப்பட்டுட்டே ன்’ என்றோ, ‘கொஞ்சம் நிதானமா ய் நடந்திருக்க வேண்டும்’ என்றோ தான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன.
கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளி யாக்குவது, பழி சுமத்துவ து, நான் சொல்வதே சரி யென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது…. என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்.
அலுவலகத்தில் வெற்றி யைத் தட்டிப்பறிப்பதும், புரமோஷனைக்கெடுப்பதும் பல வே ளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமேதான். `கொஞ்சம்கோபப்படாம இருந்திருக்க லாம்… ’, `மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்…’ என்பது போன்ற உரையாடல்கள் அ லுவலக வராண்டாக்களில் உலவித்திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.
மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின்கணக்குகள் எண்ணிலடங்காதவை.
கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண் டு பக்கங்களைப் போன்ற வை. நான் செய்வதும் சொல்வதும்சரியானவை, மற்றவர்கள் செய்வது தவ று எனும் புள்ளியிலிருந் தே பெரும்பாலான கோப ங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வே ண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை. மன்னிக்கு ம் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள்காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்க ளும் போதித்துச் செல்கின்ற னர்.
‘அவரு ‘வள் வள்’ன்னு எரிஞ் சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திரு ப்பார் போல…’ என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கிய மான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எ ங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதி ல்லை. அடுத்தடுத்த இடங்களி ல் அது தொடர்ந்து, அந்த கோப ம் மறையும் வரை நாம் செய்யு ம் செயல்கள் எல்லாவ ற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிற து என்பதே அது!
நான் ஒரு கோபக்காரன் என்ப தைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வத ன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணம டைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொ ண்டால், `இந்தக் கோபத் துக்குக் காரணம் நான் ம ட்டுமே. நான் நினைத்தா ல் இக்கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டு ப்படுத்த முடியும்’ எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.
கோபத்தைக் கட்டுப்படுத்த…
கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வே று வழிகளை பலரும் பரி ந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படை யில் கிடைக்கும் சில பரிந்துரைக ள் இவை…
1. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள ப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட் டத்தின்படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்தஉண்மை நிலையைப் புரி ந்து கொள்வது தேவைய ற்ற கோபங்கள் எழுவதை த் தவிர்க்கும்.
2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். ‘ இன் னா செய்தாரை ஒறுத்தலு ம், நன்னயம் செய்தலும்’ உறவுகளுக்கிடையே நீண் டகால பந்தத்தை உருவாக்கும். `அடுத்தவர்கள் என்ன செய் யவில்லை’ எனும் பார்வையிலிருந்து, `நான் என்ன செய்தே ன்’ என பார்வையை மா ற்றுவதே இதனடிப்படை.
3. கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீ ர்கள். கோபம் உடனுக்கு டன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என் றே ஒவ்வொரு நாளையும் எதிர் கொள்ளுங்கள்.
4. கோபம் வந்தவுடன் அதை உணர் ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற் றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கன வில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன் று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்க ள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.
5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர் களுடன் உங்களின் சக வாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும்.
6. நமக்குப் பிடிக்காதவர்களை ப்பற்றிய சிந்தனைகளைக் கொ ஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்க ள், அவர்கள் செய்த நல்ல வி ஷயங்கள் இவற்றைப் பற்றியு ம் அடிக்கடி அசை போடுங்கள்.
7. சிரிக்கப்பழகுங்கள். நகைச்சு வை நூல்களை வாசியுங்கள் . மற்றவர்களோடு சிரித்து மகிழ் ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வே தியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.
8. இப்போது கோபத்தைத் தூண் டிய இச்செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செ ய்யுமா என யோசியுங்கள். டிரா பிக்கில் கத்துவதும், வரிசையி ல் ஒருவர் புகுந்தால் எரிச்சல டைவதும் தேவையற்றவை என்பது புரியும்.
9. இந்தச் செயல் உங்கள் மீது தி ட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர் கள்? இதே தவறை நீங்கள் செய் தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா எனயோசியுங் கள். பெரும்பாலான கோபங் கள்காணாமல் போய்விடும் .
10. மனதார மன்னியுங்கள். இ ந்த ஒரே ஒரு பண்பு உங்களிட ம் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெ ல்லவும் முடியும் பிளாஸ்டிக் எமன் விழிப்புணர்வு தகவல் !!!