நல்ல எண்ணம் x கெட்ட எண்ணம்...?!!!??!!
நல்ல எண்ணம் உடையதற்கான அடையாளங்கள்
ஒருவருக்கு நல்ல எண்ணம் உள்ளதென்றால் அவரிடம் சொல்கின்ற விஷயங்கள் கூடிவரும்.
இவர் ஒரு வேலையை தொடங்கி வைத்தாரென்றால் அது வளரும். பல மடங்கு பெருகும்.
இவர் ஓர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்திற்கு நல்ல செய்தி வரும்.
அடுத்தவருக்கு ஒரு நல்ல செய்தி வந்தால் தனக்கே நல்லது நடந்தது போல் சந்தோஷப்படுவார்.
நல்ல விஷயம் ஏதேனும் இவர் காதில் விழுந்ததென்றால் நாலு பேரிடம் இவர் அவசியம் அதைச் சொல்வார்.
இவர் மனதில் அன்னை குடியிருப்பார். இவர் வீட்டிற்கு அன்பர்கள் சென்றால் அன்னையின் சூழல் இருப்பதை உணரலாம்.
இவர் குடியிருக்கின்ற இடத்தில் சுற்றி இருக்கின்றவர்களுடைய வாழ்க்கையிலும் வளர்ச்சி இருக்கும். முன்னேற்றம் இருக்கும்.
இவர் ஒருவரோடு இருக்கும் பொழுது அவருக்குத் தப்பான செய்தி அந்த நேரம் வாராது.
அடுத்தவருக்குப் பொறாமையோ, கெட்ட எண்ணமோ இருப்பதே இவருக்குத் தெரியாது.
இவருக்கு ஒருவர் நல்லது செய்தால் பதிலுக்கு திரும்பவும் இவர் அவருக்கு நல்லது செய்வார்.
இவர் மூலம் அடுத்தவருக்கு அறிமுகம் ஆகின்றவர்களால் அடுத்தவருக்கு நல்லதுதான் வரும். தொந்தரவு வாராது.
இவரோடு அடுத்தவர்கள் உறவாடும்பொழுது அந்த நேரம் அவர்களுடைய எனர்ஜி லெவல் அதிகரிக்கும்.
அடுத்தவர்களுடைய நிறைவுகளைப் பற்றித்தான் அதிகம் பேசுவாரே தவிர அடுத்தவருடைய குறைகளை அதிகம் வலியுறுத்தமாட்டார்.
அடுத்தவருக்கு ஆதாயம் ஏதேனும் கிடைத்தால் உரிமை இருந்தாலும் பங்கு கிடைக்குமா என்று, தானே கேட்கமாட்டார். ஆனால் அடுத்தவருக்குப் பிரச்சினை கேட்காமலேயே பிரச்சினையைச் சமாளிக்க தானும் வந்து உதவுவார்.
இவர் போகின்ற இடத்திற்கு மழை வரும். மின்வெட்டு, கலவரம், கலாட்டா, மறியல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழா.
கெட்ட எண்ணம் உடையதற்கான அடையாளங்கள்
கெட்ட எண்ணம் உள்ளவரானால் அவரிடம் சொல்கின்ற விஷயங்கள் கெட்டுப்போகும்.
இவர் தொடங்கி வைத்தால் வளர்ச்சி இராது. பெருக்கம் இராது. ஆரம்பத்திலேயே விஷயம் சுருங்கி மறைந்துவிடும்.
இவர் ஓர் இடத்திற்குச் சென்றால் எதிர்பாராத கெட்ட செய்திகள் வரும்.
அடுத்தவருக்கு நல்ல செய்தி வந்தால் தனக்கு ஏதோ நஷ்டம் வந்ததுபோல சுருங்கிப் போவார்.
தன் காதில் விழுந்த நல்ல செய்தியைத் தானே வைத்துக் கொள்வார். அடுத்தவரோடு பகிர்ந்துகொள்ளமாட்டார்.
இவர் தன்னை அன்னை பக்தர் என்று சொன்னாலும் இவர் மனதில் அன்னை குடியிருக்கமாட்டார். வீட்டில் அன்னையின் திருவுருவப் படங்கள் இருந்தாலும் அவை வெறும் படங்களாகவேதான் இருக்குமே தவிர அன்னையின் சூழல் வீட்டில் இராது.
இவர் குடியிருக்கின்ற இடத்தில் சுற்றி இருக்கிறவர்களுக்குக்கூட வளர்ச்சி இராது. முன்னேற்றமும் இராது.
இவர் ஒருவரோடு இருக்கும் பொழுது அந்த நேரம் அடுத்தவருக்கு நல்ல செய்தியே வாராது.
தனக்குக் கெட்ட எண்ணம் இருப்பதால் யாரைப் பார்த்தாலும் கெட்ட எண்ணம் அவர்களுக்கும் இருப்பதாக இவர் சந்தேகப்பட்டுக் கொண்டேயிருப்பார்.
இவருக்கு யாரேனும் நல்லது செய்தால் பதிலுக்குத் தொந்தரவுதான் செய்வார்.
இவர் மூலம் அடுத்தவருக்கு அறிமுகம் ஆகின்றவர்களால் அடுத்தவருக்கு தொந்தரவுதான் வருமே தவிர நல்லது வாராது.
இவரோடு அடுத்தவர்கள் உறவாடும்பொழுது காரணமில்லாமல் அவர்களுடைய எனர்ஜி லெவல் குறையும்.
அடுத்தவர்களுடைய குறைகளைத்தான் சுட்டிக் காட்டுவதில் ஆர்வமாக இருப்பாரே தவிர நிறைவுகளைப் பற்றி அவ்வளவாகப் பேசமாட்டார் .
அடுத்தவருக்கு ஆதாயம் கிடைத்துள்ளது என்று தெரிந்தால் தனக்கு உரிமையில்லாவிட்டாலும்
உடனே வந்து பங்கு கேட்பார். பிரச்சினை வந்துவிட்டது என்று தெரிந்தால் முதலில் இவர்தான் விலகுவார்.
இவர் போகின்ற இடத்தில் திரண்டு வருகின்ற மேகங்கள்கூட கலைந்து போகும். மின்வெட்டு,
கலவரம், கலாட்டா, மறியல் போன்ற எல்லா அசம்பாவிதங்களும் நிகழும்
.

No comments:
Post a Comment