Sunday, December 21, 2014

விற்பனையை அதிகரிக்கும் உத்திகள்!


விற்பனையை அதிகரிக்கும் உத்திகள்!


‘‘எஸ்எம்இகள் தொழில் ஆரம்பிப்பதில் துவங்கி அதற்கான அனுமதி பெறுவதுவரை அனைத்தையும் சரியாகச் செய்துவிடுகிறார்கள். ஆனால், பொருள்களைத் தயாரித்து அதனை விற்பனைக்குக் கொண்டுவரும்போதுதான் பல பிரச்னையைச் சந்திக்கின்றனர்.
பொருள்களை அதிக அளவில் விற்பனை செய்வதற்கு எஸ்எம்இகள் சில உத்திகளைக் கையாள வேண்டும்.பொதுவாக, பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்யும் எஸ்எம்இகளை இரு வகையாகப் பிரிக்கலாம்.   நுகர்வோர் பொருள்களைத் தயாரிப்ப வர்கள் ஒருவகை; தொழில்துறை சார்ந்த பொருள்களைத் தயாரிப்பவர்கள் இன்னொரு வகை. இந்த இரு பிரிவினரும் விற்பனையை அதிகரிக்க வேறு வேறு உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். முதலில், நுகர்வோர் பொருள்களைத் தயாரிப்பவர்கள் விற்பனையை அதிகரிக்க என்னென்ன  உத்திகளைக் கையாளலாம் என்பதைச் சொல்கிறேன்.
நுகர்வோர் பொருள்கள் என்பவை நேரடியாக மக்களைச் சென்றடைவதால், அதில் தரம் என்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும். பொருளின் தரத்தை முன்னிறுத்தி உங்கள் பொருள்களை விற்பனைக்குக் கொண்டு செல்லும்போது, மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்து விற்பனையை அதிகரிக்க முடியும். அதிலும், நீங்கள் அரசின் தரச்சான்றிதழ்களைப் பெற்று உங்கள் தயாரிப்பை முன்னிறுத்தும்போது, உங்கள் பொருள்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து விற்பனையை அதிகரிக்க முடியும்.
அடுத்த முக்கியமான விஷயம், பொருளுக்கான மார்க்கெட்டைக் கண்டுபிடிப்பது. பெரிய நிறுவனங்கள் மார்க்கெட் ஆராய்ச்சி என்ற விஷயத்தை முக்கியமாகக் கருதி செயல்படுவதனால் தான் அவர்களால் பெரிய சந்தைக்குத் தேவையான பொருள்களைத் தயாரிக்க முடிகிறது. சிறிய தொழில்முனைவோர் களும் அதேபோல் செய்யாவிட்டாலும், அவர்களால் முடிந்த அளவுக்கு எந்த சந்தைக்குத் தேவையான பொருளை அவர்களால் தயாரிக்க முடியும், அதற்குத் தேவையான சூழல் இங்கு உள்ளதா, அந்தத் தயாரிப்பை பயன்படுத்தும் மக்கள் இங்கு எவ்வளவு சதவிகிதம் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அதற்கேற்ப தொழிலையும், தயாரிக்கும் உற்பத்தி அளவையும் அமைத்துக் கொண்டால், சரியான இலக்கை அடைவது மட்டுமின்றி, விற்பனையையும் பெருக்க முடியும்.
உங்கள் பொருள்களை வாடிக்கை யாளர்கள் மீண்டும் மீண்டும் வாங்க வைப்பதுதான் விற்பனையின் முக்கியமான விஷயம். அதற்கு எஸ்எம்இகள் தங்களது பொருள்கள் பற்றிய விழிப்பு உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, எஸ்எம்இகளின் தயாரிப்பு நிச்சயம் விலை குறைவாகவே இருக்கும். அதேசமயம்,  தரமும் சரியானதாக இருந்தால்,  அதனை மக்கள் மனதில் பதியவைப்பது சுலபம். அப்படிச் செய்தால், உங்கள் தயாரிப்புகளை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதுதவிர, விளம்பரம் என்பதும் விற்பனையை அதிகரிக்கும் காரணிகளில் முக்கியமானதொரு அம்சம். ஒரு தொழில்முனைவோர், தான் தயாரிக்கும் ஒரு பொருள் மற்ற காரணிகளால் எவ்வளவு தூரம் மக்களைச் சென்றடை கிறது என்பதைப் பொறுத்து விளம்பரத்துக்குச் செலவு செய்ய வேண்டும்.
உதாரணமாக, தரமானதொரு பொருளை மக்கள் திரும்பத் திரும்ப வாங்குகிற நேரத்தில், அந்தப் பொருளுக்கு புதிதாக அதிக விளம்பரம் தேவையில்லை. எனவே, விளம்பரத்துக்குச் சற்று குறைவாகச் செலவழித்துவிட்டு, அந்தத் தொகையை உற்பத்தி செயல்பாடு களுக்காகச் செலவிடும்போது அதன் மூலம் விற்பனையை அதிகரிக்கலாம்.
அடுத்ததாக, தொழில்துறை பொருள்கள் தயாரிப்பில் விற்பனையை அதிகரிக்கச் செய்யும் உத்திகள் என்னவெனில், இது வாடிக்கையாளரை நேரடியாகத் திருப்திபடுத்தும் வேலை இல்லை என்பதால், விளம்பரத்துக்கான செலவுகள் இதில் கிடையாது. பொருளை சரியாக ஆர்டர் எடுத்து அதற்கேற்ப  செய்து கொடுத்தாலே போதும் என்பதால், மக்கள் மனதில் நிலைத்து நிற்கவேண்டிய கவலை நமக்கு இல்லை.
ஆனாலும், நுகர்வோர் பொருள்களில் உள்ளது போலவே தரம் என்பது பொருளின் விற்பனையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகும். காரணம், ஒரு நிறுவனம் எஸ்எம்இயின் தயாரிப்பை தனது உற்பத்தியில் பயன்படுத்துகிறது எனில், அந்த நிறுவனத்தின் தரத்துக்கு இணையான தரத்திலேயே எதிர்பார்க்கும். எனவே,  நல்ல தரத்தில் பொருள்களைத் தயாரிக்கும்போது அதிக ஆர்டர் கிடைக்கும். அப்போது அந்த எஸ்எம்இ யின் மதிப்பும் உயரும்.
பெரும்பாலும் எஸ்எம்இகள் பெரிய நிறுவனங்களின் ஆர்டரை நம்பியே இருப்பதால், அதிக ஆர்டர் தரும் நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் சரியான தரத்தில் பொருள்களை தயாரித்துத் தருவது அவசியம்.
ஒருமுறை இதை செய்துவிட்டால் போதும், பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆர்டர்களைத் தரத் தொடங்கிவிடும்.
எஸ்எம்இகள் அரசு மற்றும் தொழில் கூட்டமைப்புகளோடு அடிக்கடி தொடர்பில் இருப்பதும் அவசியம். அவர்கள் மூலம் பெரிய நிறுவனங் களுக்குத் தேவையான ஆர்டர்களும் அதன்மூலம் தொழில்முனைவோர் தனது நிறுவனத்தின் பெயரை பெரிய அளவில் வெளிக்கொண்டுவரவும்  உதவியாக இருக்கும்’’ என்றார்.
விற்பனையைப் பெருக்க இவர் சொல்லும் ஆலோசனைகளை  எஸ்எம்இகள் பின்பற்றலாமே!
for more details 

No comments:

Post a Comment