யாகம் செய்வதனால் பயன் உண்டா? என்றும் பஞ்சயெக்கியம் என்பது என்ன? என்றும் பலருக்கு தெரியாது தெரியாததை புரிய வைப்பது தானே நம் வேலை
யாகம் என்ற வார்த்தையின் பொருள் அர்ப்பணித்தல் ஆகும். நம்மிடம் உள்ள
பொருட்களில் புனிதமானவைகள் என கருத கூடியதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே
யாகம் ஆகும். அம்மா சமைத்த உணவை எடுத்து அம்மாவுக்கே குழந்தை ஊட்டினால்
தாய் சந்தோஷப்பட மாட்டாளா? அதே போல் இறைவன் படைத்ததை இறைவனுக்கே
கொடுக்கிறோம். அம்மா கட்டி பிடித்து முத்தம் தருவது போல் கடவுளும் நமது
பிராத்தனைக்கு எதாவது தருவார். அதனால் தான் வேதங்கள் யாகம் செய்வதை
தர்மகாண்டத்தில் பேசுகிறது. பலன் நோக்கும் யாகமாக இருந்தாலும் பலன் நோக்கா
யாகமாக இருந்தாலும் யாகத்தை செய்பவன் நிச்சயம் சிறப்பு அடைகிறான்.
நெருப்பை வளர்த்து நெய்யை விட்டு, பொருட்களை ஆகுதிகளாக போடும்
யாகத்தில் விஞ்ஞான பூர்வமான பலனும் உண்டு. ஒவ்வொரு நாட்டிலும்,
தொழிற்சாலைகளிலும் சிறப்பான யாக குண்டங்களை அமைத்து நியதிப்படி யாகம்
செய்யப்பட்டிருக்குமேயானால் இன்று பூமி பந்து உஷ்ணம் அடைந்திருக்கவும்
முடியாது. சுற்றுபுறச் சூழல் கெட்டுருக்கவும் செய்யாது.
இனி பஞ்சயெக்கியம் பற்றிப் பார்ப்போம்:
தினசரி கடவுளை வழிபடுவது தெய்வயெக்கியமாகும். உடல் தந்த பெற்றோரை
அன்றாடம் வணங்குவது பிதுர்யெக்கியம் ஆகும். நலிந்தோருக்கு தொண்டு செய்வது
மனுஷ யெக்கியமாகும். பச்சை புல்லையும், படர்ந்து நிற்கும் கொடியையும்,
ஓங்கி நிற்கும் மரத்தையும் கள்ளமில்லாத பறவைகளையும், களங்கமில்லாத
விலங்குகளையும் காப்பது பூதயெக்கியமாகும். அறிவை கொடுத்த ஆசானையும் ஞானம்
கொடுத்த ரிஷியையும், தெளிவை கொடுத்த பெரியவர்களையும் மதித்து நடப்பது
பிரம்ம யெக்கியமாகும். இந்த ஐந்து யாகத்தையும் எந்த செலவும் இல்லாது யார்
வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி செய்பவன் மட்டும் தான் மனிதன் ஆவான்.
No comments:
Post a Comment