விஸ்வகர்மாக்கள் யார்?
ஆச்சாரிமார் பூணூல் அணிவது, தங்களுடைய வேதமுத்திரைக்காக. அவர்களுக்கு விஸ்வப்ராம்மணர் என்பதே சரியான பெயர். பௌருஷேய ப்ராம்மணர்கள் என்றும் குறிப்பிடுவார்கள். அவர்களே உண்மையான ப்ராம்மணர்கள் என்பதற்கு வேதங்களில் தேவைக்கும் அதிகமான விளக்கங்கள் உள்ளன. கலியுகத்தில், அவர்களுக்கு கையினால் வேலை செய்யும் கைவினைகளை சிருஷ்டிகர்த்தாவான விஸ்வகர்மா விதித்ததால், கொல்லர், தச்சர், கன்னார், ஸ்தபதி, தட்டார் என்று உலக இயக்கத்திற்கு ஆதாரமான ஐந்து தொழில்களும் செய்து வருகின்றனர். இதை சாதகமாக எடுத்துக்கொண்டு, இன்றைய சூழலில் ப்ராம்மணர்களாக பாலிக்கப்படும் “ஐயர்களும்” “ஐயங்கார்களும்”ஆச்சாரியார்களை மட்டம் தட்டி வருகின்றனர். பல வரலாறுகளையும் கோப்புகளையும் கூட அவர்கள் அழித்து விட்டனர். வியாசர்,வேதத்தைத் தொகுத்தவரே.
ஆனால் அதை இயற்றிய ரிஷிகள்: சானக ரிஷி – ரிக் வேதம், சனாதன ரிஷி – யஜுர் வேதம், அஹபூனச ரிஷி – சாம வேதம், ப்ரத்னச ரிஷி –அதர்வண வேதம், இவை அல்லாது ப்ரணவ வேதம் என்று ஒரு வேதம் இருப்பதையே இவர்கள் அழித்து விட்டார்கள். அதை இயற்றியது,சுபர்னச ரிஷி. இவர்களே உண்மையான ப்ரம்மரிஷிகள். அதாவது ப்ரம்மனுடைய மனசபுத்திரர்களாகிய பஞ்சரிஷிகள். பிற வசிஷ்டாதி முனிவர்களாகிய சப்தரிஷிகளும், தங்கள் கர்மத்தால் சிறந்து, பிராம்மண பதவியினை அடைந்தவர்கள் என்பது எங்கள் சமூகத்தினைத் தவிர ஆங்கிலேய ஆன்மிகவாதிகளுக்கு மட்டுமே தெரியும். பிற கோப்புகளை இவர்கள் அழித்து விட்டார்கள்.
இந்த பஞ்சரிஷி கோத்திரத்தில் பிறந்தவர்களே விஷ்வப்ராம்மணர் அல்லது ஆச்சாரிமார் எனக் குறிப்பிடுகின்றனர். தவறாக, ஆசாரி எனக் குறிப்பிடுகிறோம். ஐந்து ரிஷிகளும் முறையாக, ஐந்து தொழில்களைச் செய்யும் விஷ்வப்ராம்மணர்களின் கோத்திரப் பிரவார ரிஷிகளாவர். இன்றைக்கும் அவரவருடைய பிரவரத்தில், “கோ: ப்ராம்மணேப்ய”என்றும் “தேவ: ப்ராம்மணேப்ய” என்று குறிப்பிடப்பட்டிருக்கும். முதல்உள்ளது, பிற பிராமணர்க்கு, இரண்டாவது உள்ளது விஷ்வப்ராம்மணர்க்கு, அதாவது தேவப்ராம்மணர்கள் ஆவர்.
No comments:
Post a Comment