Thursday, December 4, 2014

வாழ்க்கையில் நிம்மதியே இல்லை குருவே, நிம்மதி கிடைக்க என்ன செய்வது ?

-சீடன்: வாழ்க்கையில் நிம்மதியே இல்லை குருவே, நிம்மதி கிடைக்க என்ன செய்வது ?
-குரு : கையை முன்னால் நீட்டியபடி , கண்ணாடி குவளையை பிடித்துக் கொண்டு நில்.
அரைமணிநேரத்திற்க்கு பிறகு
-குரு : இப்போது எப்படி உண்ர்கிறாய் ?
-சீடன் : லேசாக வலிக்கின்றது குருவே.
-குரு : இப்போது சற்று கையை உயர்த்தி பிடித்தபடி நில்.
10 நிமிடத்திற்கு பிறகு
-சீடன் : குருவே , கை அதிகமாக வலிக்கிறது . 
-குரு : இப்போது தலைக்கு மேல் உயர்த்தி பிடி .
5 நிமிடத்திற்கு பிறகு
-சீடன் : குருவே கை கடுமையாக வலிக்கிறது
-குரு : இப்போது என்ன செய்ய தோன்றுகிறது?
-சீடன் : குவளையை கீழே போட்டுவிடத் தோன்றுகிறது குருவே...
-குரு: பிறகு என்ன சிந்தனை , போட்டு உடை
சீடன் கீழே போட்டு உடைத்தான்.
-குரு: இப்போது எப்படி உணர்கிறாய்?
-சீடன் : வலிகள் மறைந்து நிம்மதியாக உள்ளது குருவே.
-குரு : இது தான் வாழ்க்கை . கவலைகளை மனசுக்குள் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தால் அது மனதில் வலி ஏற்படுத்திவிடும் . கவலைகளை அப்போதே போட்டு உடைத்துவிட்டால் வாழ்வு நிமதியாக இருக்கும்.
சீடன் : தெளிவு பெற்றேன் , நிம்மதியடைந்தேன் குருவே...

No comments:

Post a Comment