சைகாலஜி என்றால் என்ன?
மனோதத்துவம் என்பது அனைவருக்கும் தெரியும். நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்த ஒரு துறை என்றால் இது தான். படித்தவர்கள் படிக்காதவர்கள் என்ற பேதமோ, பெரியவர்கள் சிறியவர்கள் என்ற பேதமோ, ஆண் பெண் என்ற பேதமோ, ஏழை பணக்காரன் என்ற பேதமோ, ஏன் மனிதன் மற்ற உயிரினங்கள் என்ற பேதம் கூட இல்லாதது சைக்காலஜி மட்டுமே.
“எல்லாருக்கும் தெரியும்- ஆனா தெரியாது” – சத்தியமா இது வடிவேலு ஜோக் இல்லை. நிஜம். ஏன் என்றால் அவரவர்களுக்கும் அவரவர்கள் நினைப்பது சரி. ஒரு குட்டிக் கதை பார்க்கலாமா? பிள்ளையாரும் முருகனும் மாம்பழத்துக்கு சண்டை போட்ட கதை எல்லாருக்கும் தெரியும். அந்த கதை சைக்காலஜி கண்ணோட்டத்தில்-
பிள்ளையார் உலகத்தை தாய் தந்தையாக பார்த்தார். முருகன் உலகை உள்ளபடி பார்த்தார். ஆனால் ஒருவரும் தவறாகப் பார்க்கவில்லை. அவரவர் உலகம் அவரவர்க்கு. அதனால் பார்வை மாறியது அவ்வளவே.இதைத் தான் சைக்காலஜியில் PERCEPTION என்கிறோம். தமிழில் இதற்கு என்ன பெயர்? கண்ணோட்டமா?
No comments:
Post a Comment