Wednesday, December 17, 2014

பைரவர் வழிபாடு - கை மேல் பலன்

பைரவர் வழிபாடு - கை மேல் பலன்




என் குருநாதர் சாய் பாபா உபாசகர்( முக்காலமும் அறிந்தவர் )சொன்ன பரிகார தகவல் இது 

பைரவரை வழிபடும் முறை :

நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் / பிரச்சனைகளுக்கும் ஒரே  தீர்வு

http://farm3.staticflickr.com/2686/4091483857_020dbb879f_z.jpg?zz=1

தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து ,துர்மரணம், ஜாதக தோஷங்கள் , மாந்திரீக பாதிப்புகள்  இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

சனி கிழமை காலை 6  மணி முதல்  கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 


திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில்வேண்டுமானாலும் விளக்கு போடலாம் . அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும்  ஒரே சக்திதான் .


இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான  விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் .

தகவல் : என் குருநாதர் சாய் பாபா உபாசகர்
( முக்காலமும் அறிந்தவர் )




என் குருநாதர் சாய்பாபா உபாசகர் சொன்ன பரிகார தகவல் இது 

(என் வாழ்கையில் இதுவரை எல்லாமே என் குருநாதர் வாக்கு படியே நடந்து கொண்டிருக்கிறது )
  
எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள்

எந்த துன்பமாக இருந்தாலும் அதிலிருந்து தப்பிக்க வழி  தெரியாமல் தடுமாறுபவர்கள் ,

பெரிய அளவில் பரிகாரமோ , பூஜையோ , ஹோமமோ செய்ய 

முடியாதவர்கள் அல்லது செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் , வசதி இல்லாதவர்கள் 
 
ஒரே மாத்திரையில் எல்லா வியாதியும் குணமடைய வேண்டும் என 


எதிர்பார்ப்போமே , அதே போல எந்த பிரச்னையாக இருந்தாலும்

ஒரே வழிபாட்டில் தீர்வை எதிர்பார்ப்பவர்கள் 

இந்த பைரவ வழிபாட்டினை செய்யலாம் 


1) வழிபாட்டை ஆரம்பிக்கும் முன் விநாயக பெருமானை வணங்கி ( எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க ) ஒரு விளக்கு ஏற்றி பிறகு பைரவ வழிபாட்டை ஆரம்பிக்கலாம் 



2) தினமும் பைரவருக்கு ஒரு (சாதாரண) விளக்கு போட வேண்டும் அவ்வளவு தான்

3) தினமும் முடியாதவர்கள் வாரத்துக்கு ஒரு நாள் 7 
சாதாரண விளக்கு போட வேண்டும் , அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் உத்தமம் .


4) வெளிநாட்டில்  இருப்பவர்களுக்கு  அவர்கள் சார்பாக ( அவர்களுக்காக ) அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் இந்த வழிபாட்டினை செய்யலாம் 

பைரவரே கால சக்கரத்திற்கு அதிபதி , அனைத்து கோள்களையும் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் ( இயக்கத்திற்குள் ) வைத்திருப்பவர் , 

ஞாயிறு - சூரியன் கோளையும் ,திங்கள் - சந்திரன் கோளையும் , செவ்வாய் - செவ்வாய்கோளையும் , புதன் - புதன் கோளையும் , வியாழன் - குரு கோளையும் , வெள்ளி - சுக்கிரன்கோளையும் , சனி - சனி கோளையும் 

என 7 நாட்களும் ஒவ்வொரு கோளுக்கு உகந்த நாட்கள்  


( ராகு , கேது  கோள்கள் கிடையாது , அதனால் தினமும் ராகு காலம் , எம கண்டம் என அவற்றிக்கென  நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது  )

அனைத்து கிரகங்களையும் வணங்குவதற்கு பதில் அவற்றை இயக்கம் பைரவரை வணக்குவதன் மூலம் அனைத்து ஜாதக தோஷங்களும் நீங்கும் .

ஆகையால் தினமும் விளக்கு போட முடியாதவர்கள் ( தவிர்க்க முடியாத காரணத்தினால்),  வாரத்திற்கு ( 7 நாட்களுக்குள் ஒருமுறை ) ஒரு நாள் 7 விளக்கு போட்டு வர வேண்டும்

 

விளக்கு போட ஆரம்பிச்சதுல இருந்து 2 வது தேய்பிறை 

அஷ்டமிக்குள்ள நிறைய நன்மை ஏற்பட்டிருக்கும் அதுவும் 

வெளிப்படையாகவே நமக்கும் தெரியும் , நம்மை சார்ந்த எல்லாருக்கும் 

தெரியும் .

நாம் வேண்டுவது , பட்டியலிடுவது எதுவுமே நடக்காது , நமக்கு எதெல்லாம் அத்தியாவசிய தேவையோ அதுதான் ஒவ்வொன்றாக கிடைத்து கிட்டே இருக்கும் ( இத்தனை நாள் எல்லாம் கணக்கு கிடையாது , ஆனா கண்டிப்பா கிடைக்கும் )


நாம செய்து கொண்டிருக்கிற தவறை நமக்கு உணர்த்தி , நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வைப்பதற்க்காக ,ஆரம்பத்துல கொஞ்ச நாள் சோதனை ங்கற  பேர் ல ரொம்ப படுத்தி எடுத்துருவார். என்ன நடந்தாலும் பொறுமையாக விடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்ட செய்வதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

 கெட்ட விஷயங்கள், கஷ்டங்கள் - துன்பங்கள்  எல்லாமே  நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும் ,  நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக  கண்டிப்பா நடக்க ஆரம்பிக்கும் . நாம்  எந்த நிலையில் இப்போ இருந்தாலும் , முன்னேற்றத்த நோக்கி போக ஆரம்பிப்போம். அதற்க்கு சில சிக்கல்களும் , அதை தீர்க்கும் வழி முறைகளையும் அவரே கொடுப்பார் , இதுதான் இந்த வழிபாட்டோட முதல் அறிகுறி . இந்த மாற்றம் வெளிப்படையாகவே நமக்கு தெரியும் .







இந்த வழிபாட்டோட பலனுக்கான அறிகுறி 

உங்களுக்குள்ளான ,உங்களுக்கே  தெரியாத  உங்களுக்கு அத்தியாவசிய  தேவையான ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) உங்களுக்குள்ள இருந்து வெளிபடும்  

அந்த ( உந்துதல் / சக்தி/ திறமை / ஆற்றல் / ஏதோ ஒன்று ) தான் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான எல்லாத்தையும் உங்களுக்கு கொடுக்கும் . 

அதற்காக உங்களுக்கு அளவுக்கதிகமான விரக்தியும் , தேவைபட்டால் பெரிய அவமானத்தையும் கொடுப்பார் . கண்டிப்பா உயிருக்கு எந்த பிரச்னையும் வராது . முன்பை விட ரொம்ப தெளிவாகவும் , பக்குவ பட்ட மன நிலையையும் அடைந்து இருப்பீர்கள் .

உதாரணத்துக்கு சொல்லனும்னா  நமக்கு வேண்டியவர்கள் நமக்கு  நீச்சல் கத்து கொடுக்கும் போது  நம்மை கிணத்துல தள்ளி விட்டு கூடவே இருந்து நீச்சல் கத்து கொடுப்பாங்க, நம்மள உள்ள முழுக விடாமலும்  பார்த்துக் கொள்வார்களே  அது போலதான் இருக்கும் பைரவர் ஸ்டைல் .

உங்களால தப்பி தவறி கூட தவறான வழியிலோ , குறுக்கு வழியிலோ  போக முடியாது .

இது தான் வாழ்க்கை , இப்படிதான் வாழணும் ன்னு தீர்க்கமாக  ஒரு நல்ல  முடிவு எடுக்க வைப்பார் , ஆறு மாசத்துக்கு ஒரு முறை அல்லது வருசத்துக்கு ஒரு முறை வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி  கூட்டிட்டு போவார் 

சுருக்கமாக சொல்லனும்னா நம்ம வாழ்க்கையை பைரவர் கையில் எடுத்து கொள்வார் , அவரே நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியையும் தீர்மானிக்க ஆரம்பிப்பார் , பைரவரே  குருவாக இருந்து வழி நடத்த ஆரம்பிப்பார் . சூட்சம வடிவில் எப்போதும் கூடவே இருப்பார் , குருவாகவும் ( சூட்சம வடிவில்)  இருப்பார் , இதை உணர கொஞ்ச  காலம் ஆகும் ,நிச்சயமாக இந்த வழிபாட்டை பின்பற்றும் அனைவராலும் இதை உணர முடியும்.  

நம்முடைய கர்ம வினை நம்மை பைரவரை வழிபட (நிறைவான வாழ்க்கை வாழ ) அனுமதிக்கவே அனுமதிக்காது , நிறைய தடைகளை ஏற்படுத்தும் , சோம்பேறிதனத்த உண்டு பண்ணும் , நாமே எதாவது காரணம் சொல்லிக்கிட்டு கொஞ்சநாளில்  அப்படியே விட்டு விடுவோம் . இந்த மாதிரி தடைகளையெல்லாம்  பொருட்படுத்தாமல் அலட்சியபடுத்தி விட்டு  நாம்தான் விடா முயற்சியாக தொடர்ந்து வழிபாட்டை செய்து வர வேண்டும் . ஆரம்பத்துல கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும் , அப்பறம் சரியாகிவிடும் .



( இது நிறைய பேரோட அனுபவம் ).


ஆரம்பத்துல என் குருநாதர் இந்த தகவல  சொல்லும்போது  இதோட வலிமை தெரியாமல் 

 
ஒரு நிறைவான வாழ்க்கை அமையும் வரை விடாமல் தொடர்ந்து  இந்த வழிபாட்டை செய்து வாருங்கள் . அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்து வாருங்கள் .
தினமும் பசிக்கு சாப்பிடுவோமே அதை போல ஒரு அத்தியாவசிய தேவையாக இந்த வழிபாட்டை வாழ்க்கைக்கு மாற்றி  கொள்ளுங்கள்  

  64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் , எந்த நேரத்தில்
வேண்டுமானாலும் விளக்கு போடலாம் .

 காசியில் இருக்கும் பைரவரில் இருந்து நம்ம வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் சின்ன கோவில்களில் இருக்கிற பைரவர் வரைக்கும் எல்லா பைரவருக்கும்  ஒரே சக்திதான்


 
நிபந்தனை : 


 ஆரம்பிக்கற நாள்  வளர்பிறை  அஷ்டமி , வளர்பிறை நவமி , தேய்பிறை நவமி , பிரதமை திதி ஆக இருக்க கூடாது 

அன்றைய தினம் உங்களுக்கோ , உங்க குடும்ப உருப்பினர்கள் நட்சத்திரத்திறத்திற்கு சந்திராஷ்டமாக இருக்க கூடாது 

மிகவும் பொருத்தமான நாள் தேய்பிறை அஷ்டமி 

ரொம்ப முக்கியமான விசயமே இதுதான் ,வழிபாட்டுல அலட்சியம் கூடாது , ஏன்னா அலட்சியதிற்கு நான் தண்டனை அனுபவிச்சி இருக்கேன் , ரொம்பவே கடுமையாக  இருக்கும் .

 திறந்து இருக்கும் பைரவருக்கு தான் விளக்கு  போடணும் .விளக்கு போடும் பொது பைரவர் சிலை மூடி இருக்க கூடாது 

(எந்த கோவிலும் , அந்த கடவுள் சிலை மூடியிருக்கும் போதோ / திரையிட்டு மூடி இருக்கும் போதோ / எதாவது தடுப்பு வைத்து மறைத்திருந்தாலோ / கோவில் கதவு சாத்தி இருந்தாலோ - வழிபடுவும் கூடாது , விளக்கு போடவும் கூடாது ,அப்படி செய்வதால்  எந்தவித பலனும் இருக்காது -ன்னு குருநாதர் சொல்லியிருக்கார் )

 கண்டிப்பா அசைவம் கூடாது . அசைவத்தோட தொடர்பு இருக்கும்வரை எந்த வழிபாட்டுலயும் பலன் இருக்காது  , பைரவரே  நிறுத்த வைப்பார்   

பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய  குரு),சனிக்கு கிரக அந்தஸ்து கொடுத்தவர்  

உதாரணத்துக்கு சொல்லனும்னா 

சனி பகவான் நேர்மையான , கண்டிப்பான போலீஸ் ஆபீசர் என்றால்  , 

அவருடைய குருநாதர்  பைரவர் (சனி பகவானுக்கு நீதி,நேர்மை,ஒழுக்கம் ,கண்டிப்பு - என எல்லாவற்றையும் கற்று தந்தவர் ) 

 ரொம்பவும் நேர்மையான கண்டிப்பான  ARMY OFFICER போன்றவர் .   



ஒம் ஸ்ரீ கால பைரவ ராய நமஹ:

தினமும் 11முறை பாராயணம் செய்ய சகல நன்மைகளும் கிடைக்கும்
- ஓம் சாய் ராம் 


No comments:

Post a Comment