Showing posts with label DEPRESS MANAGEMENTS. Show all posts
Showing posts with label DEPRESS MANAGEMENTS. Show all posts

Tuesday, March 8, 2016

பெண் கடவுள் சிலை

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்
சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்

உடனே பணக்காரர் ” ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? ” இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே “இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார்

பணக்காரர் ஆச்சரியத்துடன் ” என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே ” எனக்கேட்டார்

“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி

“ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர்

“இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி

பணக்காரர் வியப்புடன் ” நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் ” என்றார்

“அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் ” என்றார் சிற்பி

நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய்.

Monday, November 16, 2015

எட்டு வடிவ நடைப்பயிற்சி

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி !


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை;

எட்டு வடிவ நடைப்பயிற்சி :

தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது.காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.

(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று).

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.
15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.
பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பயன்கள் :

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.

70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.
முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.

அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்.
இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம். 

Friday, July 31, 2015

பூசைக்குரிய புனிதமான மலர்கள்



பூசைக்குரிய புனிதமான மலர்கள்

இறைவன் பூமியின் மீது படைத்துள்ள அத்தனை பொருட்களும் அவனுக்கு உரியவை. அதில் மலர்களும் அடங்கும். ஆயினும் எல்லா மலர்களும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கிடைப்பது அரிது.
ஆகையால் கிடைக்கும் மலர்களையும், அதன் தன்மையையும், பயனையும் உணர்ந்து மனநிறைவோடு மனப்பூர்வமாகப் பயன்படுத்தி பூஜை செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
செந்தாமரை மலர் – செல்வம், தொழில் மேன்மை ஆத்ம பலம் தரும். வெண்தாமரை மலர், வெள்ளை நந்தியாவட்டை, மல்லிகை இருவாட்சி போன்ற வெள்ளை மலர்கள் மனக் குறையைப் போக்கும். மனதில் தைரியம் சேர்க்கும்.
அரளிமலர் – பெண்களுக்கு மாங்கல்ய பிராப்தி உண்டாக்கும். கடன் ஏற்படாமல் தடுக்கும்.
சிவப்பு அரளி, செம்பருத்தி – பெண்களுக்கு, மனதை வாட்டும் கவலை அகற்றி குடும்ப ஒற்றுமையை உருவாக்கும்.
நீலசங்கு புஷ்பம், நீலாம்பரம் ஆகியவை அவப்பெயரைப் போக்கும். தரித்திரம் நீக்கும். மனஅமைதி தரும். சனிபகவான் அருளைப் பெறவும் வழிவகுக்கும்.
மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தி கணவன், மனைவிக்குள் அன்பை பெருக்கும்.
பாரிஜாதம் – அல்லிப்பூ போன்ற சற்று மங்கலான வெள்ளை புஷ்பங்களையும் இறைவனுக்கு சார்த்தக் கூடாது.
விநாயகர் பெருமானுக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய மலர்கள் பூஜைக்கு உகந்தவை.
முருகப் பெருமானுக்கு முல்லை, சம்பங்கி, ரோஜா, செங்காந்தள் போன்றவை உகந்தவை. திருமாலுக்கு தாமரை, பவளமல்லி, துளசி, சாமந்தி, ஆகியவை உகந்தவையாகும்.
லட்சுமிக்குத் தாழம்பூ மிகவும் சிறந்தது.
பொதுவாக பூவிற்கும், பொட்டிற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மலர்கள் இல்லாத மங்கல நிகழ்ச்சிகளே கிடையாது.
பூசைக்குரிய மலர்களைக் கொண்டு வழிபட்டால் பொருளும் பெருகும். புகழும் கூடும்.

Friday, July 17, 2015

இந்து சாஸ்திரம்

இந்து சாஸ்திரம் (share) செய்யுங்கள்)
1.அடிக்கடி புண்ணிய தர்ம காரியங்களைச் செய்யும் போது புத்தி வளரும். புத்தி வளரும் போது புண்ணியதிதைக் தவிர பாவத்தைச் செய்ய மனம் வராது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் மனதை அடக்கி, கோபத்தைக் குறைத்து தெய்வ நம்பிக்கையுடன் தான தர்ம புண்ணியங்களைச் செய்துவர வேண்டும்.
2. ஒருவன் நல்ல வழியில் சம்பாதித்த பணம் தனனைவிட்டுப் போவதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு என்பதை அறிவாளிகள் உணர வேண்டும். அதில் ஒரு காரணம் நல்லவனுக்குக் கொடுக்காமல் இருப்பதும், மற்றொன்று அயோக்கியனுக்கு கொடுப்பதும் ஆகும்.
3.ஈரத்துண்யுடனும், துண்டுடனும், சாப்பிடுவது கூடாது. தெருக்கதவை சாத்தாமனும், சந்திரனின் நிழலிலும், கொள்ளிக் கட்டையின் வெளிச்சத்திலும், நடுநிசியிலும், பிரடதோஷ காலத்திலும், இருட்டிலும், திறந்த மாடியிலும் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் பொளர்ணமியன்று நிலா சாப்பாடு தனியாக சாப்பிடாமல் பலருடன் கூடி சாப்பிடலாம்.
4.உன்னைவிட அதிருஷ்டம் குறைந்தவனிடம் உன் இன்பத்தைப் பற்றிப் பேச வேண்டாம். அது அவனை துன்புறுத்துவதற்கு ஒப்பாகும்.
5.ஸ்தீரிகள் ஆண்களுடனும், ஆண்கள் ஸ்தீரிகளுடனும் அருகருகே அமர்ந்து உண்ண்க் கூடாது. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து உண்ணக் கூடாது. கணவன் சாப்பிட்டு முடிந்த பின்பே மனைவி உல்கொள்ள வேண்டும். விகாக சமயத்திலும், பந்தியிலும், யாத்திரை சமயத்திலும், வழிப்பயணத்திலும், மனைவியுடன் சேர்ந்து உண்ணலாம்.
6.புயல் காற்று அடிக்கும் போது, இது அரசமரம் இதுஆலமரம் என்று அறிய முடியது. அது போல் தான் உண்மை ஞானம் என்னும் புயல் காற்று அடிக்கும் போது ஜாதி வித்தியாசத்தைக் காண முடியது. ஆத்மாஉவுக்கு ஜாதி கிடையது என்பதை அறியவும்.
7.பொய் சொல்லவே கூடாது என்ற போதிலும் மனைவியின் கற்பை காப்பாற்றும் பொழுதும், தன் உயிருக்கும், பிற உயிருக்கும், பொருளுக்கும் ஆபத்து வரும்போதும், பொய் கூறுவதில் தவறு இல்லை இப்படிப்பட்ட சந்தர்ப்ப்த்தில் பொய் சொல்லிவிட்டால், அதற்குப் பரிகாரமாக மீனுக்குப் பொரியும், பசுமாட்டிற்குப் புல்லும், ஏழைக்கு வஸ்திரமும் கொடுலக்க வேண்டும்.அதனால் அப்படிப் பொய் சொன்ன பாவம் நிவர்த்தியாகிவிடுகிறது
8.பல் துலக்கிய உடன் குச்சியை அலம்பி தென்மேற்கு மூலையில் அல்லது ஓடும் தண்ணீரில் விட வேண்டும். பல் துலக்க குச்சி கிடைக்காத சமயம் வாயை பத்து முறை கொப்பளித்தால் பல் துலக்கியதற்குஸச் சமமாகும்.கோவிலில், கொட்டிலில், யாகம், ஹோமம் செய்யுமிடத்தில், ஜலத்திற்குள், இருந்து பல் துலக்கக் கூடாது.
துளசி பத்திரதிதை பழிப்பவனும் துளசிச் செடியை காலால் மிதித்தவனும் விஷ்ணுவின் வருத்தத்துக்கு ஆளாகிறார்கள். துளசிச்
செடி இருக்கும் வீட்டில் விஷ்ணு பகவான் தன் தர்ம பத்தினியான சகல ஐஸ்வர்யங்களையும் கொண்ட் மகாலட்சுமியுடன் வாசம் செய்கிறார்.
9.கோவிலுக்குள் செல்லும் பக்தன், முதலில் கோபுரத்தை வணங்க வேண்டும்.பின்பு கொடி மரத்தை அண்ணார்ந்து பார்த்து வண்ங்க வேண்டும்.அதாவது மனிதனின் எண்ணங்கள் உயர்ந்து இருக்க வேண்டும்.தாழ்ந்த மனப்பான்மை கூடாது. பக்தர்களின் நிலையும் தாழ்ந்து விடாமல் உயர வேண்டும் என்ற தாத்பர்ய்மே கோபுர, கொடி மர தரிசனம் ஆகும்




Saturday, June 13, 2015

வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨

வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு.
காந்தியடிகளும்திருவள்ளுவரும்விவேகானந்தரும்புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.அவரவர்க்கு ஏற்ற வழிகளையும்தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி வேண்டுமா உங்களுக்குஅப்படியானால் இப்படி செய்யுங்கள் என்றுகுழந்தைகளுக்கு விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப்பார்ப்போமா…
அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.
சந்தேகமும்சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.பொறுமையும்விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
குழந்தைகள் மட்டுமல்ல அனைவரும் கடைபிடிக்க வேண்டியவையே.

Thursday, July 17, 2014

தொடுதல் கற்போம்... கற்பிப்போம்!

பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு...
கட்டிப் பசும் பொன்னே - கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு - கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே..


எந்தச் சூழலில் வளரும் குழந்தையையும் பெற்றோர் இப்படித்தானே ஆசையாகக் கொஞ்சுவார்கள்? கண்ணுக்குள் வைத்துக் காக்க நினைக்கும் குழந்தை  கண்ணை கசக்கி வரும் வரை காத்திருப்பானேன்? குழந்தைகளின் சேஃப் ரூல், பாடி ரூல் ஆகியவற்றோடு இன்னும் சில அடிப்படை விஷயங்களையும்  விவாதிக்கலாம். குழந்தைகளுக்கும் ரகசியம், தனிமை, முடிவுகள், தீர்மானங்கள், விருப்பு வெறுப்புகள் எல்லாம் உண்டு. அது பற்றி...

பச்சைக் குழந்தைக்கும் பள்ளி செல்லும் குழந்தைக்கும் என்ன ப்ரைவசி என்கிறீர்களா? தனிமை அல்லது ப்ரைவசி என்பது அனைவருக்கும் அவசியம்.  குழந்தையை பாயிலோ தொட்டிலிலோ விட்டு, அவர்கள் தூங்காத நேரம் கவனியுங்கள். தனக்குத் தானே பேசிக்கொண்டு ஆனந்தமாக மறுத்தும்  சிரித்தும் அழுதும் கோபித்தும் சமாளிக்கும். பார்க்கும்போதே அழகு அள்ளும். அதுபோலவே பள்ளி செல்லும் உங்கள் குழந்தை தனக்குத் தானே  பேசிக்கொள்வதை கவனியுங்கள். அதெல்லாம் அவர்களின் ப்ரைவேட் டைம். இந்தத் தனிமையும் சில நேரம் இனிமையாக இருக்கும். உங்கள்  குழந்தைகளுக்கும் அவர்களின் தனிப்பட்ட நேரங்களை அனுமதியுங்கள். அதை அவர்கள் ரசிக்கும்போதே அவர்களுடைய இன்பமும் துன்பமும்  வெளிவரும்.

தனிமை அவசியம் என்றாலும், எவ்வளவு என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு எல்லாம்  புரிந்துவிடும். அதுவரை உங்கள் கவனிப்பு  மிகவும் அவசியம். டி.வி. பார்க்கிறார்கள்... கம்ப்யூட்டரில் விளையாடுகிறார்கள்... இன்டர்நெட் பார்க்கிறார்கள்  என்றால் சிறிது நேரம் அவர்கள் விருப்பத்துக்கு விடுங்கள். ‘அதிக நேர தனிமை தேவையில்லை... டி.வி., கம்ப்யூட்டரில் அவர்கள் செலவிடும் நேரம்  முடிந்தது’ என்று நீங்கள் நினைக்கும்போது, அதிலிருந்து வெளியில் வர அவர்களை வற்புறுத்தாமல், அவர்களிடம் பேச்சு கொடுங்கள். ‘டி.வி.யில் என்ன  புரோக்ராம்?’, ‘கம்ப்யூட்டரில் அது என்ன டெக்னாலஜி’ போன்ற கேள்விகளைக் கேட்டு மெதுவாக வெளியேற்றி விடுங்கள். ஒன்றை அதிகமாக   தடுக்கும்போது அதை நோக்கி மனம் செல்வது இயற்கையே. ‘டி.வி. பார்க்கலாம்...

உனக்கு விருப்பமான நிகழ்ச்சியை இத்தனை மணி நேரம் பார்த்துவிட்டு அடுத்த வேலைக்கு போய்விட வேண்டும்’ என்று சிறிது அழுத்தமாகச் சொல்லி  புரிய வைத்தல் அவசியம். பெற்றோரின் பிம்பம் அல்லது பிரதிபலிப்புதானே குழந்தைகள்? அவர்களை டி.வி. பார்க்க வேண்டாம் என்று தடுத்துவிட்டு,  நீங்கள் நாள் முழுதும் டி.வி.யில் மூழ்குவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.
ரகசியம்...

இது மிக முக்கியமானது. குழந்தைகள் உங்களிடம் ரகசியம் காக்க தேவையில்லை. குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துபவர்கள், ‘யாருகிட்டயும்  சொல்லக் கூடாது... சொன்னா அடிவிழும்’ என்றோ, வேறுவிதமாகவோ பயமுறுத்தி வைத்திருப்பார்கள். ‘அந்த ரகசியம் தேவையற்றது... அம்மாவிடம்  அல்லது அப்பாவிடம் எது வேண்டுமானாலும் சொல்லலாம்’ என்ற நம்பிக்கையை விதைப்பது நம் கடமை. குழந்தைகள் எங்கு சென்று வந்தாலும்  விசாரியுங்கள். விசாரணை என்பது கடினமாக இல்லாமல் மிக இயல்பாக இருத்தல் அவசியம். இல்லாவிடில், ‘போனதும் விசாரிப்பாங்க’ என எரிச்சல்  அடைந்து உங்களிடம் கண்டிப்பாக மறைப்பார்கள். உதாரணமாக... குழந்தைகள் சண்டையிட்டு லேசாக அடிபட்டிருப்பார்கள்...

அதை நீங்கள் விசாரித்துக் கோபமடைந்து, அடுத்த நாள் பள்ளியில் புகார் வரை சென்றால் அது அந்தக் குழந்தைகளின் மனநலனை பாதிக்கும். இன்று  சண்டையிடுபவர்கள் நாளை சேர்ந்துவிடுவார்கள். தேவையற்ற பதற்ற விசாரணை ஒரு நல்ல மனநிலையை சிதைக்கக் காரணமாகும். அதற்குப் பதில்,  தினப்படி இதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டால் அவர்களே உங்களிடம் சொல்வார்கள். இது போன்ற நேரங்களில், ‘சரிடா கண்ணு... நாளைக்கு  சரியாயிடும்... அவனும் குழந்தைதானே? நீயே மிஸ்கிட்ட சொல்லு...’ என்று ஆறுதலளிப்பதே போதும். அவர்களுக்கு உங்களிடம் என்ன  வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நம்பிக்கை வர வேண்டும். அது மட்டுமே முக்கியம்!

முடிவுகள் அல்லது தீர்மானங்கள் பிறந்த குழந்தைக்கு கூட முடிவுகளும் தீர்மானங்களும் இருக்கும். சின்னக் குழந்தைக்கு விருப்பமில்லாததை  ஊட்டினால் கூட, நம் மீதே துப்புவதும், இஷ்டமில்லாதவர்கள் தூக்கினால் கை காலை உதறி அழுது எதிர்ப்பை தெரிவிப்பதும் அதனுடைய முடிவும்  தீர்மானமும்தான். சிறுவயதில் இப்படி விளையாட்டாக முடிவெடுக்கவும் தீர்மானிக்கவும் பழகுவது பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கைக்கே உதவும். 

‘பள்ளியில் ஒரு விழா...

அதில் கலந்து கொள்ளவேண்டும்’ என்று அடம்பிடிக்கும் குழந்தை எனில், அதிலுள்ள விஷயங்களைத் தெரிந்துகொண்டு, உங்கள் கருத்தையும் சொல்லி,  முடிவை அவர்களையே எடுக்கச் சொல்லலாம். ஏதாவது ஒரு பொருள் தேவைப்படும்போது, அதனுடைய அவசியத் தேவைகளை விவாதித்து புரிய  வைக்கலாம். ஒரு வேளை இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் எனில், இன்னும் கொஞ்சம் விரிவாகவே விவாதித்து சொல்லித் தரலாம். எதுவுமே  ஆரம்பிக்கும்போது மட்டுமே கடினம்... பழகிவிட்டால் தானாகவே அவசியத்தையும் காரண காரியங்களையும் யோசிப்பார்கள். கொஞ்சம் பணம்  கொடுத்து அவர்களையே கடைக்குச் சென்று பழக்கலாம். ‘தேவை - தேவையில்லை’யை தானாகவே புரிய வைப்பது எளிது, சொல்லி புரியவைப்பதை  காட்டிலும்! 

விருப்பு வெறுப்புகள்...

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் சிறிய பிரச்சனை முதல் பெரிய விவாதம் வரை நிகழக் காரணம் இந்த விருப்பு வெறுப்புகளே. நமக்குப் பிடித்தது  குழந்தைகளுக்கும் பிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பினால்தான் பிரச்னையே ஆரம்பிக்கும். நம் குழந்தைகள் நம்முடையவை அல்ல... கலீல் ஜிப்ரான்  கருத்துப்படி, ‘அவர்கள் நம் மூலம் இந்த உலகத்துக்கு வந்தவர்கள்’... தனிமனித உரிமைகளை அவர்கள் இந்த பூமியை தொட்ட நொடியில்  பெறுகிறார்கள்.

ஆகவே, அவர்களுடைய விருப்பு வெறுப்புகளை மதிக்க வேண்டும், குறைந்தபட்சம் காதுகொடுத்தேனும் கேட்கலாம். நம்மால் முடியக்கூடிய விஷயம்  எனில் சந்தோஷமாக அனுமதிக்கலாம். இல்லையெனில், ஏன் முடியாது என்று அவர்களிடம் தெளிவுபடுத்துவதும் நம் கடமைதான். மிகச் சிறிய  வயதிலிருந்தே இப்படி பழக்கினால் பிற்காலத்தில் பெரும் விவாதம் வருவதை தவிர்க்கலாம்.

Thursday, June 19, 2014

எது திட்டம்? A goal without plan is just a wish - so plannnnnnnnn panunga

எது திட்டம்? 

A goal without plan is just a wish - so plannnnnnnnn panunga


எது திட்டம்?

எது - அது?
எவர் - அவர்?
எப்பொருள் - அப்பொருள்?
எவ்விடம் - அவ்விடம்?
எப்பொழுது - அப்பொழுது?
எம்முறை - அம்முறை?
எவ்வளவு - அவ்வளவு?

- என்று தீர்மானித்துக் கொள்வதையே “திட்டம்” என்கிறோம். செய்யவிருக்கும் செயல் எது? அந்தச் செயலை யார்யாரைக் கொண்டு செய்யப் போகிறோம்? அந்தச் செயலைச் செய்து முடிக்க எவ்வளவு பொருள் தேவைப்படுகிறது? அந்தச் செயல் செய்வதற்கு பொருத்தமான இடம் எது? அந்தச் செயலை மேற்கொள்வதற்கு உரிய நேரம் எது? அந்தச் செயலை எந்த முறையில் செய்ய விரும்புகிறோம்? செய்ய விரும்பும் அந்தச் செயலின் அளவு (Size of the project) எவ்வளவு? – என்பதையெல்லாம் தீர்மானிப்பதற்குப் பெயர்தான் திட்டமிடுதல் ஆகும்.



வீட்டின் வரவு செலவுத் திட்டம், ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கான திட்டம், ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்கான திட்டம், ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான திட்டம் – என செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் திட்டமிடமுடியும். அதை காலத்தின் அடிப்படையிலும் வரையறைசெய்யலாம். ஒரு வாரத்திட்டம், ஒரு மாத கால திட்டம், ஓர் ஆண்டுத் திட்டம், மூவாண்டுத் திட்டம், ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம், 20 ஆண்டு காலத் திட்டம் என குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களாகவும் செயலுக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.

Yours Happily

Jc.Dr.Star Anandram
www.v4all.org

Wednesday, June 18, 2014

பெரிதாக குறிவை !! THINK BIG !!!பெரிதாக குறிவை !! THINK BIG !!

பெரிதாக குறிவை !! THINK BIG 


‘பெரிதாக குறிவை’ என்பது ஆரம்பத்தில் மிகக் கடினமானதாகத் தோன்றும். ஏனென்றால் நம் வாழ்நாள் முழுவதும் இதற்கு மாறான முறையில் வேலை செய்தே பழகிவிட்டோம். இன்றைக்கு நம்மிடையே இருக்கும் நடைமுறை விதிகள் எல்லாம் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’, ‘இருப்பதை விட்டு விட்டுப் பறப்பதைப் பிடிக்க நினைக்காதே’, ‘தேன்கூட்டில் கல் எறியாதே’ என்பன போன்றவை. இப்போது இருக்கும் இடத்திலேயே இருந்தால் போதும், மாற்றம் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றன.
நமக்கேற்ற புதிய சவால்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? மலை ஏறும் விளையாட்டு வீரன் டாட் ஸ்கின்னரைக் கேட்டால் சொல்வார். ‘ஒரு மலையைப் பார்த்தவுடன் உங்கள் மனதில் பயம் எழவில்லையா? அப்படியானால் ஏறுவதற்கு மிகவும் சுலபமான மலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டீர்கள். உண்மையான சவால் என்றால் அதை நினைக்கும்போதே மனத்தில் பிரமிப்பான பயம் ஏற்பட வேண்டும். உங்கள் தற்போதைய வலிமைக்கு உட்பட்ட மலையில் ஏறுவது என்றால் அதில் செலவிடும் நேரம், உழைப்பு எல்லாமே வீண். அது மட்டுமல்ல, பெரிய சாதனை ஒன்றைச் செய்யும் வாய்ப்பையும் தவறவிடுகிறீர்கள்!
மற்றவர்களெல்லாம் முடியாத காரியம் என்று கைவிட்டவற்றை எடுத்துக்கொண்டு மோதிப் பார்த்துவிடுகிற மனம்தான் இதற்கு அடிப்படைத் தேவை. சூரத் நகரத்தில் பிளேக் நோய் பரவிவிட்டது. இப்போது ஊரையே சுத்தப்படுத்தியாக வேண்டும். அதிகாரிகள் எல்லோரும் இதில் கை வைக்கப் பயந்தார்கள். பதவிக்கே ஆபத்து வரவழைக்கக் கூடிய விஷயம் இது. அந்த நேரத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டும் ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்தார். அவர்தான் எஸ். ஆர். ராவ். இருபதே மாதங்களில் வெற்றிகரமாக வேலையைச் செய்து முடித்தார். இன்றைக்கு பல வருடம் கடந்துவிட்டது. இன்றும் கூட சூரத் மக்களுக்கு அவர்தான் சூப்பர் ஸ்டார்!
இங்கு எஸ். ஆர். ராவ் மட்டுமல்ல இன்னும் பலர் பெரிதாக குறி வைத்து அவற்றை சாதித்து காட்டுகிறார்கள்.
o வரப்ரசாத் ரெட்டி: இந்தியாவிலிருந்து மஞ்சல் காமாலையை (ஹெபடைடிஸ்-பி) ஒழித்துக்கட்டப் போகிறேன் என்று புறப்பட்டார்.
o ஜி. வெங்கடசுவாமி: உலகம் முழுவதில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் அனைவருக்கும் பார்வை தரப்போகிறேன் என்று கூறியதுதான் இன்று அரவிந்த் கண் மருத்துவமனையாக உருவெடுத்துள்ளது.
o டைட்டான் கைக் கடிகார நிறுவனத்தின் செர்க்லெஸ் தேசாய் உலகிலேயே மெலிய நீர் புகாத கைக் கடிகாரம் தயாரிக்க முனைந்தபோது அவருடைய வல்லுநர்களே ‘அது எங்களால் இயலாத காரியம்’ என்றுதான் சொன்னார்கள்.
இது ‘ஸ்விட்சர்லாந்துகாரர்களாலேயே முடியாத விஷயம். நம்மால் எப்படி முடியும்?’ என்றார்கள். ஆனால் தேசாய் விடவில்லை; அவருடைய அணியும் சளைக்க வில்லை. கடைசியில் அதே எஞ்சினியர்கள், ‘அட! நம்மிடமும் இந்தத் திறமை ஒளிந்திருக்கிறதே!” என்று கண்டுபிடித்தார்கள். நம்மால் என்ன சாதிக்க முடியும் எனபதற்கு அளவுகோலாக, நாம் இதுவரை சாதித்தவற்றையே வைத்துக்கொள்வது கூடாது, அப்போது ஓர் எல்லைக்கு மேல் வளராமல் நின்றுவிடுவோம்.


மாற்றுப்பாதையில் மனம் சிந்திக்க ஆரம்பித்தவுடன் இலக்குகள் மட்டும் பெரிதாவதில்லை; மனிதர்களையும் ஒரேடியாக மாற்றிவிடுகிறது. பழகிய பாதையை மாற்றியாக வேண்டும் என்ற சவால் தோன்றியவுடன், அதைச் சாதிப்பதற்குத் தேவையான திறமைகளும் தானாகவே வளர்ந்துவிடுகின்றன.
தோல்விக்கு ஆயிரம் வழிகள். வெற்றிக்கு மிகக் குறைந்த வழிகள்தான்.
வெற்றிகளில் இருந்து கற்றுக்கொள்வது மனத்தையும் உற்சாகப்படுத்தும்.
வெற்றிகளும் விதிவிலக்குகளும் பல சாத்தியங்களைத் திறந்து காட்டுகின்றன.

YourS Happily 
Jc.Dr.Star Anandram
www.v4all.org 
cell-9790044225 

Tuesday, June 17, 2014

ஒவ்வொரு நொடியும் வாழ்,உன்னுடைய வாழ்க்கையை வாழ்,அது மட்டுமே நிரந்தரம்

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.
கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......."
ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
"மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........."
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
"உன்னுடைய உடைமைகள்........."
"என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?"
"இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........."
"என்னுடைய நினைவுகளா?............."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........"
"என்னுடைய திறமைகளா?..........."
"அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......."
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......"
"மன்னிக்கவும்...........குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........."
"அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?"
"உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............"
"என் உடல்?..........."
"அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........."
"என் ஆன்மா?"
"இல்லை........அது என்னுடையது.........."
மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு..........
கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க,
கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........"



-- ஒவ்வொரு நொடியும் வாழ்
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
-- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே.......அது மட்டுமே நிரந்தரம்.......
-- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது...

Monday, June 16, 2014

"எப்போதும் தோற்காதவர்கள் யாரெனில், எப்போதும் முயற்சி செய்யாதவர்களே"



"எப்போதும் தோற்காதவர்கள் யாரெனில், எப்போதும் முயற்சி செய்யாதவர்களே" - இந்தக் கருத்தைப் பற்றி பார்ப்போம்.
என்னிடம் ஒரு வெற்றியாளரைக் காண்பியுங்கள் 'ஒரே இரவில் வெற்றி' என்பது எவ்வளவு போலியானது என்று நான் காண்பிக்கிறேன். ஒவ்வொரு வெற்றியாளனும் தோற்க துணிந்தால்தான் வெற்றி பெறுகிறான். பின்வரும் சம்பவங்களைக் கவனியுங்கள்.
இரண்டாம் உலகிப்போரின்போது டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனில் பொறியாளர் வேலைக்கு நடந்த இன்டர்வியூவில் சொயிசிரோ தேறவில்லை. ஆனாலும் அவர்நம்பிக்கை இழக்கவில்லை. ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்தார்.
கவர்ச்சியாக இல்லை என்று டிவென்டியெத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தால் அவர் நிராகரிக்கப்படார். பல ஆண்டுகள் கழித்து மர்லின் மன்றோ எல்லோரும் நேசிக்கும் ஹாலிவுட் நடிகையாக விளங்கப்போகிறார் என்று ஃபாக்ஸுக்குத் தெரியவில்லை.
அவருடைய இசை ஆசிரியர் 'இசையமைப்பாளராக நீ ஜெயிக்க முடியாது' என்று கூறினார். பித்தோவனின் இசை இன்றும் வாழ்கிறது.
இவர்கள் அனைவருமே உலகத்துக்கு ஒரு விஷயத்தை நிரூபித்தார்கள். உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், உலகம் என்னதான் சொன்னாலும், உங்களால் முடியும் என்று நம்புகிற விஷயத்தைத் தொடர்ந்துவிடா முயற்சியோடு செய்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். வெற்றிகரமான மனிதர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது பலமில்லாதது அல்ல. அறிவில்லாதது அல்ல, ஆனால் விடாமுயற்சி இன்மைதான்.
உங்களுக்கு நிறைய வேட்கை இருக்கலாம். ஒவ்வொரு முறையும் மிகச் சிறப்பாக செயல்படலாம். ஆனால் நீண்ட காலத்தில் இதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஒவ்வொரு முறையும் முடிந்த அளவுக்கு சின்சியராகச் செயல்படுவதே முக்கியம். அப்போதுதான் நீங்கள் மிக நன்றாகத் தீட்டப்பட்ட வைரமாக இருக்க முடியும். தீட்டப்படுவது என்பதற்கு அர்த்தம், கடின உழைப்பு.

Thursday, November 28, 2013

கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!


கோபத்தை அடக்க சுலபமான வழிகள் !!!


1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not)

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.

2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone)

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents)

தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.
தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts)

பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன.
பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை..

துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்?

எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..!


Yours Happily 

Star Anand
Hr Trainer & Consultant
9790044225  

Wednesday, July 24, 2013

கோபத்தைக் கட்டுப்படுத்த…


கோபத்துக்குக் கொள்ளி வைப்போம்
ஆனந்தத்தை அள்ளி வைப்போம் !


‘கோபமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடமும், அறுபது வினாடி ஆனந்தத்தைத் தொலைத்து விடுகிறோம்’என்கிறார் ரால்ப் வால்டோ.

ஆனந்தமும் கோபமும் எதிர் எதிர் துருவங்களில் வேர்விட்டு அமர்ந்திருப்பதை அவருடைய வார்த்தைகள் சுட்டிக் காட்டுகின்றன.
‘எனக்குக் கோபமே வராதுங்க’ என்று யாராவது சொன்னால் அவர் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அல்லது அதிசயப்பிறவியாய் இருக்க வேண்டும்.
கோபம் தும்மலைப் போன்றது. சாதி மத நிற பேதமில்லாமல் எல்லோருக்குமே வரும். சிலரிடம் ‘நீங்க அடிக்கடி கோபப்படுவீங்களாமே?’ என்று கேட்டால் கூட ‘எவண்டா அப்படிச் சொன்னது?’ என கோபப்பட ஆரம்பித்து விடுவார்கள்.
இதில் சமர்த்துக் கோபம் ஒன்று உண்டு. ‘வரையறுக்கப்பட்ட, கட்டுக்குள் இருக்கக் கூடிய, நிலை தடுமாற வைக்காத’ கோபத்தை அப்படி அழைக்கிறார்கள். உதாரணமாக உங்கள் குழந்தை கீழ்ப்படிதல் இல்லாமல் வளர்கிறது எனில் உங்களுக்குக் கோபம் எழும். அந்த கோபம் கத்தலாகவோ, சண்டையாகவோ இல்லாமல் வரையறுக்கப்பட்ட நிலையில் வெளிப்படும்போது வழிகாட்டும் அறிவுரையாய் மாறி விடுகிறது.
‘மேனேஜர் கோபப்படுறதுலயும் ஒரு நியாயம் இருக்குப்பா. இன்னிக்கு வேலையை முடிக்கலேன்னா சிக்கல் பெரிசாயிடும்’ என பேசிக்கொள்ளும் ஊழியர்கள் மேலதிகாரியின் நியாயமான கோபத்தைப் பேசுகிறார்கள்.
ஆனால் கண்கள் விரிய, கைகளை நீட்டி, குரலை உயர்த்தி ஆவேசமாய்ப் பேசும் கோபம் எந்த இடத்திலும், எந்தச் சூழலிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதே உண்மை.
கோபத்தை ஒரு மிகப்பெரிய கோடு கிழித்து இரண்டு பாகமாக பிரிக்கிறார்கள். ஒன்று வெளிப்படையான கோபம். `நீ… எப்படிய்யா என் மனைவியைப் பற்றி தப்பாப் பேசலாம்’ என நரம்புகள் புடைக்கக் கத்தும் கோபம். இதை `எக்ஸ்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
இரண்டாவது உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம். இதே பிரச்சினையில் எதிராளி உயர் அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ இருக்கும்போது கோபத்தை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கி விடுகிறோம். அது ஒரு கண்ணி வெடிபோல உள்ளுக்குள் வெடித்துச் சிதறும். இதை `இம்ப்ளோசிவ் ஆங்கர்’ என்பார்கள்.
எந்த வகைக் கோபமாக இருந்தாலும் அது நமது உடலையும் மனதையும் ஒரு கை பார்க்காமல் விடாது என்பது தான் உண்மை. சண்டை, அடிதடி, பிரிவுகள், தோல்வி, உடல் பலவீனம் எல்லாவற்றுக்கும் அடிப்படையில் இந்த கோபமே பதுங்கிக் கிடக்கிறது.
மாரடைப்பு, மன அழுத்தம், தலைவலி, வயிற்று வலி, உயர் ரத்த அழுத்தம், தோல் வியாதிகள், வலிப்பு என பல நோய்களுக்கும் கோபமே அடிப்படையாய் இருப்பதாய் மருத்துவம் நீட்டும் பட்டியல் எச்சரிக்கிறது.
அமெரிக்காவின் ஒஹையோ பல்கலைக்கழக ஆய்வு ஒன்று இன்னும் ஒரு படி மேலே போய், நோய்கள், காயங்கள் போன்றவை குணம் அடையாமல் இருப்பதன் காரணமும் கோபமே என்கிறது.
கோபத்தின் கொடுமையான விளைவுகளைச் சிறைக் கைதிகளின் கதைகள் துயரத்துடன் பேசுகின்றன. ஏதோ ஒரு ஆவேசத்தில் தன்னிலை மறந்து யாரையோ தாக்கிவிட்டோ, கொன்று விட்டோ, பழி தீர்ப்பதாய் நினைத்துக் கொண்டோ பலரும் சிறைச்சாலைக்கு வந்து விடுகிறார்கள். பின் தங்களுடைய கோபத்தின் மீதே கோபம் கொண்டு மிச்ச வாழ்க்கையைக் கண்ணீரின் கரைகளில் வாழ்ந்து முடிக்கிறார்கள்.
இருபத்து ஆறு ஆண்டுகள் சிறையில் வாடிவிட்டு வெளியே வந்தபோது நெல்சன் மண்டேலாவுக்கு சிறை அதிகாரிகளின் மீது கடுமையான கோபம் வந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அதை அழித்து விட்டு, `சிறையின் கோபங்கள் சிறையுடனே போகட்டும்’ என வெளிச்சத்தை நோக்கி நடை போட்டாராம். இதை அவருடைய சிறை அனுபவக் குறிப்புகள் பேசுகின்றன.
உறவுகளுக்கு இடையே வரும் பிளவுகளும் கோபத்தின் குழந்தைகளே. `கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்’ என்றோ, ‘கொஞ்சம் நிதானமாய் நடந்திருக்க வேண்டும்’ என்றோதான் விவாகரத்துகளின் சோகக் கதைகள் புலம்பித் திரிகின்றன.
கத்துவது, அவமானப்படுத்துவது, அடுத்தவரை குற்றவாளியாக்குவது, பழி சுமத்துவது, நான் சொல்வதே சரியென பிடிவாதம் செய்வது, நீ எப்பவுமே இப்படித்தான் என பாய்வது…. என மண முறிவுக்கான காரணங்கள் எக்கச்சக்கம்.
அலுவலகத்தில் வெற்றியைத் தட்டிப் பறிப்பதும், புரமோஷனைக் கெடுப்பதும் பல வேளைகளில் இந்த பாழாய்ப் போன கோபமேதான். `கொஞ்சம் கோபப்படாம இருந்திருக்கலாம்…’, `மெயில் அனுப்பித் தொலச்சுட்டேன்…’ என்பது போன்ற உரையாடல்கள் அலுவலக வராண்டாக்களில் உலவித் திரிவதை அடிக்கடிக் கேட்க முடியும்.
மொத்தத்தில் கோபம் எனும் ஒரு கொலைக் கருவி வெட்டிப் புதைத்த வாழ்க்கையின் கணக்குகள் எண்ணிலடங்காதவை.
கோபமும், மன்னிப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவை. நான் செய்வதும் சொல்வதும் சரியானவை, மற்றவர்கள் செய்வது தவறு எனும் புள்ளியிலிருந்தே பெரும்பாலான கோபங்கள் புறப்படுகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில் சுயநலமே கோபத்தின் அடிப்படை. மன்னிக்கும் மனதை வளர்த்துக் கொண்டால் கோபத்தின் தளிர்கள் காய்ந்து விடும். இதையே எல்லா மதங்களும், மகான்களும் போதித்துச் செல்கின்றனர்.
‘அவரு ‘வள் வள்’ன்னு எரிஞ்சு விழறார். காலைல வீட்ல சண்டை போட்டுட்டு வந்திருப்பார் போல…’ என்பது சர்வ சாதாரணமான ஒரு பேச்சு. இது கோபத்தின் மிக முக்கியமான ஒரு பண்பை வெளிப்படுத்துகிறது. கோபம் என்பது எங்கோ ஒரு இடத்தில் உருவாகி அங்கேயே முடிந்து விடுவதில்லை. அடுத்தடுத்த இடங் களில் அது தொடர்ந்து, அந்த கோபம் மறையும் வரை நாம் செய்யும் செயல்கள் எல்லாவற்றிலும் அதன் பாதிப்பு நேர்ந்து விடுகிறது என்பதே அது!
நான் ஒரு கோபக்காரன் என்பதைப் புரிந்து கொள்வது தான் கோபத்தை வெற்றி கொள்வதன் முதல் படி. எனக்கு நோயே இல்லை என்பவர்கள் குணமடைவதில்லை. கோபம் இருப்பதைப் புரிந்து கொண்டால், `இந்தக் கோபத்துக்குக் காரணம் நான் மட்டுமே. நான் நினைத்தால் இந்தக் கோபத்தை எப்படி வேண்டுமானாலும் கட்டுப்படுத்த முடியும்’ எனும் எண்ணத்தையும் மனதில் எழுதிக் கொள்ளுங்கள்.
***********************************************

கோபத்தைக் கட்டுப்படுத்த
கோபத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு வழிகளை பலரும் பரிந்துரை செய்கின்றனர். வல்லுநர்களின் ஒருமித்த பார்வையின் அடிப்படையில் கிடைக்கும் சில பரிந்துரைகள் இவை…
1. யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளப் பழகுங்கள். எல்லாமே நம்முடைய விருப்பப்படியும், திட்டத்தின்படியும் நடக்கப் போவதில்லை. வாழ்க்கையின் இந்த உண்மை நிலையைப் புரிந்து கொள்வது தேவையற்ற கோபங்கள் எழுவதைத் தவிர்க்கும்.
2. கோபத்தை அன்பினால் நிரப்பப் பழகுங்கள். ‘இன்னா செய்தாரை ஒறுத்தலும், நன்னயம் செய்தலும்’ உறவுகளுக்கிடையே நீண்டகால பந்தத்தை உருவாக்கும். `அடுத்தவர்கள் என்ன செய்யவில்லை’ எனும் பார்வையிலிருந்து, `நான் என்ன செய்தேன்’ என பார்வையை மாற்றுவதே இதன் அடிப்படை.
3. கோபத்தை மூட்டை கட்டிக்கொண்டு திரியாதீர்கள். கோபம் உடனுக்குடன் கரைவதே நல்லது. அப்படியே நீடித்தாலும் ஒரு நாளின் கோபம் அடுத்த நாள் வரை போகவே கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். இந்த நாள் புத்தம் புதுசு என்றே ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள்.
4. கோபம் வந்தவுடன் அதை உணர்ந்து கொள்ளுங்கள். மூச்சுப் பயிற்சி, பார்வையை வேறு இடத்துக்கு மாற்றுவது, மகிழ்ச்சியான ஒரு பகல் கனவில் மூழ்குவது, நூறிலிருந்து ஒன்று வரை தலைகீழாய் எண்ணுவது என உங்கள் கவனத்தை மாற்றுங்கள். கோபம் தற்காலிகமாய் தள்ளி நிற்கும்.
5. பாசிடிவ் மனநிலையுள்ள மனிதர்களுடன் உங்களின் சகவாசத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய கோபம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும்.
6. நமக்குப் பிடிக்காதவர்களைப் பற்றிய சிந்தனைகளைக் கொஞ்சம் ஒதுக்கி விட்டு, நமக்குப் பிடித்த நண்பர்கள், உறவினர்கள், அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவற்றைப் பற்றியும் அடிக்கடி அசை போடுங்கள்.
7. சிரிக்கப் பழகுங்கள். நகைச்சுவை நூல்களை வாசியுங்கள். மற்றவர்களோடு சிரித்து மகிழ்ந்து இருப்பவர்களுடைய உடலில் கோபத்தைக் கிளறும் வேதியியல் பொருட்கள் அதிகமாய் சுரக்காது என்பது மருத்துவ உண்மை.
8. இப்போது கோபத்தைத் தூண்டிய இந்தச் செயல் சில ஆண்டுகள் கழித்தும் கோபம் கொள்ளச் செய்யுமா என யோசியுங்கள். டிராபிக்கில் கத்துவதும், வரிசையில் ஒருவர் புகுந்தால் எரிச்சலடைவதும் தேவையற்றவை என்பது புரியும்.
9. இந்தச் செயல் உங்கள் மீது திட்டமிட்டே செய்யப்பட்டதா? அடுத்த நபரின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்? இதே தவறை நீங்கள் செய்தால் உங்கள் மீதே கோபம் கொள்வீர்களா என யோசியுங்கள். பெரும்பாலான கோபங்கள் காணாமல் போய்விடும்.
10. மனதார மன்னியுங்கள். இந்த ஒரே ஒரு பண்பு உங்களிடம் இருந்தால் கோபத்தை மிக எளிதாக வெல்லவும் முடியும், வெற்றியை ஆனந்தமாய் மெல்லவும் முடியும்பிளாஸ்டிக் எமன் விழிப்புணர்வு தகவல் !!!

YOURS HAPPILY
STAR ANAND