பிள்ளைகளை போட்டு பாடாய் படுத்துகிறோம் வீட்டுக் கணக்கு போடு போடு என்று.
நம்மில் எத்தனை பேர் வீட்டு கணக்கு போடுகிறோம். அதங்க பட்ஜட் பட்ஜட் என்று ஒன்று இருக்கிறதே அதுதாங்கோ !
இந்த பட்ஜட் போட்டு குடுமபம் நடத்தும் பாடு நடுத்தர வர்க்கத்திற்கு படாத பாடு.
வாங்கும் சம்பளம் இப்படியும் அப்படியும். இதில் சிலவுகள் சென்னங்குன்னி மீனைப்போல் வந்து நம்மை அரித்து எடுத்துவிடும்
பக்கத்தில் அம்மாவீட்டில்,மாமியார் வீட்டில் உதவிக்கரங்கள் நீட்டினால் நம்பாடு ஜாலித்தான். இவர்களை நம்பாமல் நாமே பாடுப்பட்டு மண்புழு போல இருக்க வேண்டும் என்று நினைத்தால்,…..
இதில் மிக கஷ்டம் இருக்கும்.
மற்றவர் கைகளை எதிர் பார்க்காமல் வாழ்க்கற்றுக்கொள்வதுதான் நல்லது. அதுதான் நகரிகம்.
அப்படி அவர்கள் கைகளை நம்பி வாழ பழகிக்கொண்டோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். நம் பாடு எதிகாலத்தில் அரோக்கராதான்.
அடுதவர்கள் கொடுப்பது எவ்வளவு நாளக்கு அது நிலையான வருமானம் இல்லை. இது இப்போத்து வாங்கி செலவு செய்யும்போது,நம் வருமானத்திற்கு மேல் ஜாலியாக செலவு செய்வோம். அந்த வருமானம் திடீர் என்று நின்று விட்ட்டால்,நம் வருமானத்திற்க்குள் செலவு செய்யும் நிலையில், நாம் நிலைக்குலைத்து போய் விடுவோம்.
நம்மில் எத்தனைப்பேர் வரவு எட்டணா செலவு பத்தனா என்று இருக்கிறோம்!
திட்டமிட்டு செலவுகள் செய்தால், நிம்மதியாக இருக்கலாம். குடும்பத்தில் நிம்மதி வேண்டும். பணத்தால் சண்டை சச்சரவுகள் தேவையா?
காசு,பணம் ,துட்டு மணி மணி….
இதில் நான் சொல்ல வந்தது,எப்படி வரவு செலவு திட்டம் போடலாம் என்றுதான்
முதலில் ஒரு நோட்டையும் போனாவையும், கேல்குலேட்டைரையும் எடுத்துக்கொள்ளுங்கள்
ரெடியா?
உங்கள் வருமானத்தை நோட்டின் முதல் பக்கத்தில் எழுதுங்கள். இதில் வீட்டிற்குள் வரும் எல்லா வருமானங்களும் இருக்க வேண்டும்.
உதாரணத்திற்கு உங்கள் வங்கியிலிருந்து எதோ வருமனம் வரலாம் .. வீட்டை வாடகைக்கு விட்டு அதன் வருமானம் வரலாம்.
இதில் நீங்கள் இருவர் சம்பாதிப்பவர்களாக இருந்தால்,உங்களிருவரின் வருமானத்தையும் எழுதுங்கள்.
சிலர் இருவர் சம்பாதிதாலும் தனித்தனியாக செலவு செய்வர்கள் அப்படி என்றால், இருவரும் வேறு வேறு நோட்டை வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் தனித்தனி வரவு செலவுகள்.
அம்மா அப்பாவிடம் நீங்கள் உங்கள் வருமானத்தை அப்படியே கொடுத்துவிட்டாலும். எல்லா செலவுக்கும் கணக்கு எழுதுவது நல்லது.
கூட்டு குடும்பமாக இருந்தாலும் , எல்லாருடைய வரவையும் எழுதி எல்லோருமாக வரவு செலவு பார்ப்பது நல்லது.
எல்லோரும் எல்லாரையும் நம்பி இருக்கக்கூடாது. வீட்டு நடப்புகள் எல்லாருக்கும் தெரிய வேண்டும்.
ஏன் என்றால் பணத்தால் பகை வரும் குடும்பங்கள் நிறைய உள்ளது.
நல்ல கணக்கு நல்ல சினேகிதம். என்பார்கள். தாயும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயுரும் வேறு என்பார்கள்.
குடுப்பத்தின் கணக்கை எல்லோருமாக பார்த்து செய்வதில் நிறைய நன்மைகள் இருக்கிறது.
ஒருவரே குடும்ப பாரத்தை தூக்கி போட்டுக்கொள்ளாமல், அனைவரும்பகிர்ந்து செய்யலாம்.
வீட்டிலுள்ள அனைவருக்கும் அதில் பங்குப்பெற்றல்தான் ஒரு பொறுப்பும் வரும்.
குறைந்தது, அன்று நடந்த செலவுகளையும் வரவுகளையும் பற்றி சொல்லுங்கள். இது தனியாக குடும்பம் நடத்தும் தம்பதியர்களுக்கு பொருந்தும்.
கூட்டுக்குடும்பாக இருந்தால், ஒரு வாரத்திற்கு ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து வரவு செலவுகளை பார்த்து விடுங்கள்
அட இதுக்கும் நேரம் இல்லை என்றால், மாதம் ஒருமுறை கண்டுப்பாக வரவு செலவுகளை குடும்பமாக உட்கார்ந்து பாருங்கள். இதனை எவ்வேளை எப்படியிருந்தாலும் செய்து விடுங்கள்.
அப்படி பார்த்தால்தான் ஒரு மாததிற்கு வரும் வருமானத்திற்குள் நாம் குடும்பம் நடத்துகிறோமா? இல்லையா என்று தெள்ள தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
வருமானதிற்குள் இல்லாமல் அதை தாண்டி செலவுகள் வந்தது என்றால், எந்த எந்த செலவுகள் அதிகம் என்று பார்த்து அதனைக்குறைத்துக்கொள்ளுங்கள்.
வருமானதிற்குள் இல்லாமல் அதை தாண்டி செலவுகள் வந்தது என்றால், எந்த எந்த செலவுகள் அதிகம் என்று பார்த்து அதனைக்குறைத்துக்கொள்ளுங்கள்.
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். செலவுகள் என்று சொன்னேன் அல்லவா? அதில் நீங்கள் சேமிப்பிற்காக வங்கியில் போடலாம். அல்லது இன்ஷுரன்ஸ் கட்டலாம். இது உங்கள் வருமானமாக இருந்தாலும்
இப்போது அது உங்கள் வரவை விட்டு போகிறது அல்லவா? அதனால் இப்பொதைக்கு அது உங்கள் செலவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் வருமானம் அனைத்தையும் முதல் பக்கத்தில் எழுதி வீட்டீர்களா?
ஒரு மாதத்திற்கு ஆகும் செலவுகள் :
1)கண்டிப்பாக ஆகும் செலவுகள் :
இதை கண்டிப்பாக கட்டியே ஆக வேண்டும் என்ற கட்டயாத்தில் இருக்கும் செலவுகள்
- வாடகை வீட்டில் குடியிருந்தால் வீட்டு வாடகை
- கரண்ட் வரி
- தண்ணீர் வரி
- தொலைபேசி வரி
- கடன் வாங்கியிருந்தால் அதன் கட்டணம்
- இன்ஷுரன்ஸ்
- பிள்ளைகள் தனியார் பள்ளியில் படித்தால் பள்ளிக்கட்டணம்
2)நடைமுறை செலவுகள் :
இந்த செலவுகள் நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும் தான் இருந்தாலும் மிச்சமும் பிடிக்கலாம் அல்லவா?
- சாப்பாட்டு செலவுகள்
- மருந்து செலவுகள்
- கார், மோட்டர் வாகனம் இருந்தால் அதற்கு போடும் எண்ணெய் செலவு
- சோப்பு,பல் விலக்கும் பேஸ்ட்….
3)இதர செலவுகள் :
இந்த செலவு எப்போதோ ஒருமுறை வருவது.
- வீட்டுக்கு அழுகு படுத்தும் பொருட்கள்
- மின்ப்பொருள் சாதனங்கள்
- சமையல் உபகரணங்கள்
- பரிசுப்பொருட்கள்
- சுற்றுலா
- உடைகள்
- ஓட்டல்,சினிமா..
வருடத்திற்கு ஒருமுறை வரும் செலவுகள்
- வீட்டு விஷெங்கள்
- பண்டிகை கால செலவுகள்
- பிள்ளைகளை பள்ளி செலவுகள்
இதில் நான் கொடுத்திருப்பது எனக்கு தெரிந்த சில செலவுகள்தான் செலவுகள் செய்வது குடும்பத்திற்கு குடும்பம் வித்தியாசப்படும்.
நான் கொடுத்திருப்பதிலிருந்து நீங்கள் உங்கள் செலவுகளை கூட்டியோ குறைத்தோ எழுதி செலவுகளை பார்த்துக்கொள்ளுங்கள்
ஒவ்வொரு மாதமும் நீங்கள் உங்கள் வரவு செலவுகளை பார்த்தால், எதனால் உங்கள் பட்ஜெட் மாதக்கடைசியில் இடிக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
வருடம் முடிந்ததும் கடைசியாக கணக்கள் பார்த்து முடித்துவிட்டால். உங்கள் வருட வரவு செலவுகள் அழகாக தெரிந்துக்கொள்ளலாம்.
வருடக்கணக்கினை பார்க்கும் போது, வரவுக்குள் செலவுகள் செய்திருந்தால், உங்கள் மனம் என்ன சொல்கிறது என்று கேட்டு செய்யுங்கள்.
செலவுகளை குறைத்து இன்னும் சேர்க்கலாம் என்றால் செலவுகளை எப்படி குறைக்கலாம் என்று பாருங்கள். இல்லை இன்னும் ஏதாவது செலவுகள் செய்யல்லாம் என்றால் செலவு செய்யுங்கள்.
உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முடியுமா? என்று பாருங்கள்
எப்போதுமே நாம் வரவு செலவுகளை அவ்வப்போது போட்டு பார்த்துக்கொண்டோம் என்றால், ஒவ்வொரு மாதமும் செலவுகளை குறைக்கலாமா? என்று புரிந்துவிடும்.
ஒரு மாதத்திற்கும் அல்லது வருடத்திற்காகன செலவுகள் கூடியிருந்தாலும்,நாம் எதை கூட்டியுள்ளோம். என்பது தெரியும்.. அதற்க்கேற்ப அடுத்தமுறை குறைத்தோ, ஏற்றியோ செலவிடலாம்.
கடனுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்றால் முதலில் அதற்கான காசை செய்துக்கொண்டு வாங்கினால் நல்லது. கடனிலிருந்து தப்பிக்கலாம்.
அடுத்தவர்கள் வைத்திருக்கிறார்கள் என்று காப்பி அடித்து வாங்காமலிருந்தாலும் நம்முடைய் காசுக்கு ஆப்பு இல்லை
அடுத்தவருக்காக வாழவேண்டாம். உங்களுக்காக வாழுங்கள்.
அடுத்தவர்கள் உங்களை பார்த்து,உங்கள் குடும்பத்தை பார்த்து காப்பி அடிக்கும்படி வாழவேண்டும்.
கடன் இருந்தால் ஒன்று அடைந்ததும் இன்னொன்று வாங்குங்கள். ஒரே நேரத்தில் கடன் நிறைய வாங்கினால் அதனால் பாதிக்க படுவது நம் குடும்பம்தான்.
கடன் வாங்கும்போது நமக்கு சந்தோஷமாகத்தான் இருக்கும். கடன் கொடுப்பவர்களுக்கும் சந்தோஷம் தான்.
கடனை திருப்பி கொடுக்க தினரும் போது நமக்கும் தின்ட்டம். கடன் கொடுத்தவர்களும் கஷ்டம்தான்.
கடன் இல்லாத குடுமபங்கள் கிடையாது
யோசித்து பாருங்கள் சில முக்கிய நேரத்திற்க்காக நாம் வாங்கும் கடன் கொஞ்சமாகத்தான் இருக்கும்.
ஆடம்பர செலவுக்காக நாம் வாங்கும் கடன்கள்தான் அதிகமாக இருக்கும்.
கூடுமானவரையில் நம் விரலுக்கு தகுந்த வீக்கமாக வாழ்ந்தால்,நிம்மதியாக இருக்கலாம்.
குடும்பம் நடத்தும் போது நமக்கு ஆயிரம் சுமைகள் சுற்றி வரும்; இதில் கடன்,வரவுக்கு மீறி செலவுகள் செய்து ஆயிரத்தி ஒனறாக கஷ்டங்களை தலயில் தூக்கிப்போட்டு.. தேவையா?
Astrologer Master Rudra Ji is the best astrologer in the USA, who for the past many years been exercising Vedic Astrology and realizing the overtones of its several fields in the different cities.
ReplyDeleteAstrologer in Brooklyn