Showing posts with label sales training company. Show all posts
Showing posts with label sales training company. Show all posts

Thursday, August 14, 2014

தேசியக்கொடி சில விதிகள்

தேசியக்கொடி சில விதிகள்
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை பறக்க செய்து, அதற்கு மரியாதை செலுத்துவோம்தேசியக் கொடியை எங்கெல்லாம் எப்போதெல்லாம் பறக்கவிட வேண்டும் என்பது பற்றி சில விதிகள் இருக்கிறது.

எங்கு, எப்போதெல்லாம் பறக்கவிட வேண்டும்:
சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரைதான் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும்.
முக்கியமாக தலைமைச் செயலகம், ஆட்சியர் அலுவலகம், உயர்நீதிமன்றம், மாநகராட்சிக் கட்டடம், மத்திய, மாநில அரசுக் கட்டடங்கள், சிறைச்சாலை முதலிய கட்டடங்களில் தேசியக் கொடியை பறக்க விடவேண்டும்.
ஊர்வலத்தில் முன்னால் தேசியக்கொடியை வலது தோளில் உயர்த்திப் பிடித்துச் செல்ல வேண்டும்.
தேசியத் திருவிழா நாட்களில் மட்டும் வீடுகளில், கார்களில், தேசியக் கொடியை பறக்கவிடலாம்.
மற்ற தேசியக் கொடிகளுடன் ஒரே வரிசையில் இக்கொடியைப் பறக்கவிட்டால், இந்திய தேசியக்கொடியின் இடது புறத்திலேயே மற்ற கொடிகளை பறக்கவிட வேண்டும்.
அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதர் அலுவகங்களிலும், பயன்படுத்தும் கார்களிலும் கொடி கட்டாயம் பறக்க விடவேண்டும்.
மத்திய, மாநில அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோரது காரிலும் கொடி பறக்க வேண்டும்.
எல்லைப்புறங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொடியை பறக்க விடலாம்.
துக்க நாளில்:
தேசத்தின் பெருந்தலைவர்கள் மறைவு போன்ற தேசிய துக்க சம்பவங்களுக்கு துக்கத்தை அறிவிக்க, கொடிமரத்தின் பாதியில் கொடியை பறக்க விட வேண்டும்.
செய்ய கூடாதது:
கொடியில் எந்த வாசகத்தையும் எழுதக்கூடாது.
ஒருவேளை கொடி கிழிந்துவிட்டால், அதை தூசு துடைக்கவோ, குப்பைத் தொட்டியில் போடவோ கூடாது.

கொடியை ஜன்னல் திரையாகவோ, மேஜை விரிப்பாகவோ பயன்படுத்தக் கூடாது.


Thursday, August 7, 2014

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-



மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...
"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.
அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். "குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது..

Thursday, July 17, 2014

HAPPY SELLING - DONT SELL THE PRODUCT MAKE THEM BUY- SUPER EXAMPLE

சிறிய தூண்டில்
---------------------
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

Friday, July 11, 2014

வாங்க சார்... நாமளும் இலக்கு வைச்சு ஜெயிச்சு காட்டலாம்..! - எழுமின், விழுமின் - குறி சாரும் வரை நில்லாது செல்மின்

வாங்க சார்... நாமளும் இலக்கு வைச்சு ஜெயிச்சு காட்டலாம்..!


 எழுமின், விழுமின் - குறி சாரும் வரை நில்லாது செல்மின் , என்று வீர முழக்கமிட்ட விவேகானந்தர் பிறந்த மண்ணில் தான் நாமும் பிறந்து இருக்கிறோம். ஆனால், நமக்கும் தான் எத்தனை குளறுபடி, குழப்பங்கள்...


 அர்ஜுனன் அம்பு எய்யும்போது , தூரத்தில் இருந்த மரத்திலே உட்கார்ந்து இருந்த கிளியோட கண்ணுதான் தெரிஞ்சதாம். அது , உண்மையோ , பொய்யோ தெரியலை.. ஆனா, சொல்லி குறி வைச்சு அடிக்கிற , ஜெயிக்கிற ஆளுங்க இன்னும் நம்ம கூட இருக்கிறாங்க தானே... 


நமக்கு ஏன் அது புரியவே , இல்லை கைவசப்படவே மாட்டேங்குது.. கீழே கொடுக்கப்பட்டுள கட்டுரையை படிச்சுப் பாருங்க.. பல உண்மைகளை உங்களுக்கு அது புலப்படுத்தலாம்...    
====================================================
ஒரு கால் டாக்சியில் ஏறுகிறீர்கள். டிரைவர் "எங்கே போக வேண்டும்?" என்று கேட்கிறார். நூறு மைல் தூரத்தில் உள்ள ஒரு இடத்தைச் சொல்கிறீர்கள். அது தான் நீங்கள் போக வேண்டிய முக்கியமான இடம். அதற்கு இப்போதுள்ள தெருவிலேயே நேராகப் போக வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

கார் மூன்று மைல் போனதும் உங்களுக்கு வலதுபக்கத் தெருவில் உள்ள வேறொரு இடத்திற்குப் போனால் என்ன என்று தோன்ற டிரைவரிடம் வலதுபக்கம் காரைத் திருப்பச் சொல்கிறீர்கள். அவரும் திருப்புகிறார். அந்தத் தெருவில் அந்த இடத்திற்குப் போக இன்னும் 20 மைல் பயணம் செய்ய வேண்டும். ஐந்து மைல் போனவுடன் ஒரு திருப்பத்தில் நீங்கள் பல காலமாக போக நினைத்திருந்த ஒரு கோயில் 12 மைல் தான் என்று எழுதி இருப்பதைப் பார்க்கிறீர்கள். இத்தனை தூரம் வந்த பின் அந்தக் கோயிலிற்குப் போனால் என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது. டிரைவரை அந்தத் தெருவில் திருப்பச் சொல்கிறீர்கள். டிரைவர் அந்தத் தெருவில் காரைத் திருப்புகிறார்.

கார் ஏழு மைல் போனவுடன் தெருவில் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள். மாற்றுப் பாதையில் போகும்படி ஒரு பலகையில் எழுதியிருக்கிறது. அப்படிப் போனால் நீங்கள் போக நினைத்த கோயிலுக்கு 25 மைல் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்று அறிந்த போது கோயிலுக்குப் போகும் எண்ணத்தைக் கை விடுகிறீர்கள். வண்டியைத் திருப்பச் சொல்கிறீர்கள். கார் வந்த வழியே திரும்புகிறது. வழியில் டீ சாப்பிட காரை நிறுத்தச் சொல்கிறீர்கள். டீக்கடையில் ஒருவர் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் ஏழு மைல் தூரத்தில் இருப்பதாகச் சொல்கிறார். இவ்வளவு தூரம் வந்து விட்டு அங்கு போகாமல் இருப்பதா என்று தோன்ற காரை அவர் சொன்ன பாதையில் விடச் சொல்கிறீர்கள்..........

இப்படி நாள் முழுவதும் பல முறை தங்கள் பயணத்தை திசை திருப்பிக் கொண்டே இருந்தால் நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் நீங்கள் போக நினைத்திருந்த அந்த முக்கியமான இடத்திற்கு நீங்கள் போய்ச் சேர முடியுமா? எத்தனையோ முக்கியமில்லாத இடங்களுக்கு நீங்கள் போய்ப் பார்க்க முடிந்தாலும் நீங்கள் எங்கு போகக் கிளம்பினீர்களோ அந்த இடத்திற்கு தூரத்திலேயே அல்லவா
நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.

போக வேண்டிய முக்கியமான இடத்தை விட்டு பல வழிகளில் சுற்றி மற்ற இடங்களுக்குப் போவது முட்டாள் தனம் என்று சாதாரண அறிவு படைத்தவராலும் சொல்ல முடியும். ஆனால் இந்த முட்டாள்தனத்தை நம்மில் எத்தனை பேர் நம் வாழ்க்கைப் பயணத்தில் செய்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நம் வாழ்க்கைப் பயணமும் இந்த கார் பயணம் போலத்தான். ஒரு முக்கிய காரணத்திற்காக நாம் பிறந்திருக்கிறோம். அது தான் நாம் போய்ச் சேர வேண்டிய அந்த முக்கிய இடம். பிரபஞ்சமே அந்த கார் டிரைவர். நாம் எங்கு போக வேண்டும் என்று எப்படி டிரைவர் தீர்மானிக்க மாட்டாரோ பிரபஞ்சமும் நம் இலக்குகளைத் தீர்மானிப்பதில்லை. ஆனால் நம் விருப்பப்படி நம்மை அது கொண்டு செல்லக் காத்திருக்கிறது. 
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSLfK5wg-wPdqHajebtPrfZZP4MeLyVJbKXOfdhcpy4Us56DAJR
நம் விருப்பம் தெளிவாகவும் நமக்கு உண்மையிலேயே முக்கியமாகவும் இருக்கிற வரையில் நம் நடவடிக்கைகள் அதற்கு எதிர்மாறாக இருப்பதில்லை. எண்ணத்திலும், செயலிலும் தெளிவிருக்கிற போது நமது குறிக்கோளை எட்டுவது நமக்கு எளிதாகிறது. ஆனால் நம் விருப்பங்கள் அடிக்கடி மாறிக் கொண்டு இருந்தால், ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தால் வாழ்க்கையில் குழப்பமே அல்லவா மிஞ்சும்.

கார் பயணத்தில் மேலே குறிப்பிட்ட குழப்பங்கள் இருந்தால் பணமும் காலமும் மட்டுமே அந்த ஒரு நாள் விரயமாகும். ஆனால் அதுவே வாழ்க்கைப் பயணத்தில் குழப்பம் இருக்குமானால் வாழ்க்கையே விரயமாகிறது. இன்னொரு வாழ்க்கையும் சந்தர்ப்பமும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

எனவே நாம் ஒவ்வொருவரும் இது வரை பிரபஞ்சம் என்ற கார் டிரைவருக்கு எப்படியெல்லாம் போகக் கட்டளையிட்டு இருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பது நல்லது. நமக்கு உண்மையில் என்ன வேண்டும், எது முக்கியம் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறோமா? இல்லை முரண்பாடுகளால் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா?

எனக்கு உடல் டிரிம் ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நான் உடற்பயிற்சி செய்வதில் சோம்பலும், உடலுக்கு ஆகாத உணவுப் பதார்த்தங்கள் சாப்பிட ஆவலும் காட்டினால் அது மேலே குறிப்பிட்ட கார் பயணம் மாதிரி தான். முக்கியம் என்று நான் நினைப்பதாக நினைக்கும் ஒரு குறிக்கோளுக்கு எதிர்மாறாக நடவடிக்கைகள் செய்து என் குறிக்கோளுக்கு தொலைவிலேயே நான் நிற்கிறேன் என்று பொருள்.

கிரிக்கெட் சீசனில் பெரிய கிரிக்கெட் வீரராக ஆசை, சில நாட்கள் கழித்து பிரபல பாட்டுப் போட்டி ஒன்றைக் கண்டு சிறந்த பாடகனாக ஆசை, அடுத்த மாதம் இன்னொரு ஆசை என்று வேறு வேறு ஆசைகள் நம்மை ஆட்கொள்ள ஒவ்வொன்றிலும் சில காலம் பெரிய ஈடுப்பாட்டுடன் இருந்து இன்னொன்றிற்குத் தாவிக் கொண்டே இருந்தால் நாம் இதில் எதுவும் ஆகப்போவதில்லை என்பதே யதார்த்த உண்மை. ஏனென்றால் பிரபஞ்சத்திற்கு மாற்றி மாற்றி கட்டளை கொடுத்தபடி இருக்கிறோம்.

அதே போல ஒரு குறிக்கோள் மனதில் இருந்தாலும் அதற்காக எதுவும் செய்ய நாம் தயாராக இல்லாத போதும் எண்ணம் மூலமாக ஒரு கட்டளையும், செயல் மூலமாக நேர் எதிரான கட்டளையும் பிரபஞ்சத்திற்கு தந்து கொண்டு இருக்கிறோம் என்பது பொருள்.

நம்மில் எத்தனை பேர் எங்கு போக வேண்டும், என்ன ஆக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்?
பலரும் தெளிவாக இருப்பதாக சொல்லக்கூடும். ஆனால் தெளிவு என்பது எண்ணத்தோடு ஒருங்கிணைந்த செயல். அது நம்மிடம் உள்ளதா?

மனித வாழ்க்கை ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் நிச்சயமில்லை. நமக்குள்ளே தெளிவான லட்சியம் இருந்தால், அதை அடைய மன உறுதியும் இருந்து நம் செயல்களும் லட்சியத்தை நோக்கியே இருக்குமானால் விளைவைப் பற்றி நாம் கவலையே பட வேண்டாம். பிரபஞ்சம் நம்மை அதை நிச்சயமாக அடையச் செய்யும்.

பிரபஞ்சம் எல்லை இல்லாத சாத்தியக் கூறுகளோடு நமக்கு உதவக் காத்திருக்கிறது. நாம் தெளிவாக அதனிடம் கட்டளையிடத் தயாரா?


பிரச்சினையே நாம் நம் 'காரை' மற்ற 'காரோடு' ஒப்பிட்டுப் பார்ப்பதே. அந்த கார் அப்படி போகிறதே, நாமும் போவோம். அந்த வழி நமக்கேற்ற வழியா என்று பார்க்காமல் செய்வது தவறு. 


Read more:www.v4all.org 

Tuesday, July 1, 2014

விளம்பரம் ! விளம்பரம் ! விளம்பரம் ! - before advertise your product or brand read this & plan ur add.

விளம்பரம் !  - www.v4all.org

* ' நீங்கள் தொட விரும்பும் சருமம் ' ( The skin you love to touch ) என்பதுதான் விளம்பர உலகில் எழுதப்பட்ட முதல் ஸ்லோகன் .

* உலகப் புகழ்பெற்ற நோவா கார் நிறுவனம் தயாரித்த புதிய மாடல் கார் ஸ்பானிஷ் நாட்டில் மட்டும் சரியாக விற்கவில்லை . என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது கிடைத்த
விடை.... அந்த மாடலின் பெயர் . நோவா என்றால் ஸ்பானிஷ் மொழியில் ' இது ஓடாது ' என்று அர்த்தமாம் !

* இப்போது உலகத்துக்கே ஒட்டுமொத்தமான பிரச்னை... புவி வெப்பமயமாதல் . ' மரங்களை வெட்டாதீர்கள் . இயற்கையைப் பாதுகாப்போம் ' என்று பல நாடுகளும் பல வழிகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு இருக்கின்றன . 2050 என்கிற கேள்வியோடு உலக உருண்டை இல்லாமல் வெறும் அச்சை மட்டும் காட்டி அச்சத்தை விளம்பரப்படுத்த
ஆரம்பித்திருக்கிறார்கள் !

* ' மைக்ரோசாஃப்ட் ' நிறுவனம் வின்டோஸ் Xp யை அறிமுகப்படுத்தியபோது , ஓர் ஆண் ஒரு பெண்ணின் உள்ளாடையைக் கழற்ற முயற்சி செய்து , அதில் தோற்பதுபோல் விளம்பரம் செய்தது . " எங்களின் பாஸ்வேர்டு அவ்வளவு பாதுகாப்பானது ' என்பது கான்செப்ட் . மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் தன் விளம்பரத்தை வாபஸ் வாங்கிக் கொண்டது .


* ஒரு பொருளின் அசைவு அல்லது விளைவின் மூலம் மற்றொரு பொருள் இயக்கப்படுவதற்கு டொமினோஸ் எஃபெக்ட் என்று பெயர் . சுருக்கமாகச் சொன்னால் ' அபூர்வ சகோதரர்கள் ' படத்தில் டெல்லி கணேஷை கமல் கோலிக் குண்டைப் பயன்படுத்திக் கொல்வாரே... அதுதான் டொமினோஸ் எஃபெக்ட் .

* ' 57 ஆயிரம் புகைப்படங்கள்.. இரண்டு மைல் நீளத்திற்கு இருக்கும் . பார்க்கக் கட்டணம் 3 அணா ' 1913 -ம் ஆண்டில் வெளியான இந்தியாவின் முதல் படமான ' ராஜா ஹரிச்சந்திரா '- வுக்கு தாதா சாகேப் பால்கே வெளியிட்ட விளம்பரம்தான் இது !

* கிரேக்க காலத்தில் விலை மாதுக்கள் தங்களை விளம்பரப்படுத்த அனுமதி இருந்தது . அம்புக் குறி பொறிக்கப்பட்ட காலணிகளில் சிவப்பு மை பதித்த விலை மாதர்கள் கிரேக்க வீதிகளில் வாடிக்கையாளர்களுக்குக்காகக் காத்திருப்பார்களாம் . அவர்கள் நகரும்போது செருப்புத் தடத்தின் சிவப்பு மையைப் பார்த்து வாடிக்கையாளர்கள் பின் தொடர்ந்ததாக வரலாறு !


* ' கோகோ கோலா , பெப்சி ' விளம்பர உலகின் தவிர்க்க இயலாத பாடங்கள் . 30 பைசா செலவில் ஒரு பானத்தைத் தயாரித்து ஏழு ரூபாய்க்கு விளம்பரம் செய்து 10 ரூபாய்க்கு விற்கும் விற்பனைத் தந்திரத்தை உலகுக்குக் கற்று தந்தது இந்த கோலாக்கள்தான் .


* தேர்தல் சமயத்தில் தலைமுடியை இரட்டை இலைபோல வெட்டிக்கொள்ளும் தொண்டர்கள் நம் ஊரில் உண்டு . உலகம் முழுக்க உடம்பில் விளம்பரம் செய்து கொள்வது ஒரு வியாபாரம் . இவர்களுக்கு Human Billboards enRu peyar .


* ஆல் அவுட் கொசு மருந்தை வாங்கி வைத்துவிட்டு அது எம்பி நாக்கை நீட்டிக் கொசுவைப் பிடிக்கும் என்று காத்திருந்தவர்கள் பலர் . 1990 வரையிலும் ஆணுறை உபயோகம்பற்றி மக்களுக்கு விளக்க இந்தியாவில் சமூக சேவகர்களே கிடைக்கவில்லை . பீஹார் பகுதிகளில் ' விளக்கியே ஆக வேண்டும் ' என்று அரசால் அனுப்பப்பட்டவர்கள் கட்டை விரலில் ஆணுறையை மாட்டிக்கொண்டு ' இப்படி அணிந்துகொண்டால் எய்ட்ஸ் வராது ' என்றார்கள் . விளைவு , மக்களும் ஆளுக்கு ஒன்றை வாங்கி கட்டை விரலில் மாட்டிக்கொண்டார்கள் !

--- from - விளம்பரம் விகடன் 

Monday, June 16, 2014

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்ட (Per Customer is important)

ஒரு நாள் லண்டனுக்கு வருகை தந்த ஜெய் சிங் மகராஜர், அங்குள்ள தெருக்களில் சாதாரண உடையில் உலா வந்தார். 

அங்கே ரோல்ஸ் ராய்ஸ் வாகன விற்பனை கண்காட்சியகத்தை பார்த்தார்.

உள்ளே சென்று அந்த வாகனத்தின் விலை மற்றும் தனித்திறமைகளை அறிந்துகொள்ள விரும்பினார்.

ஆனால் அங்குள்ள நபர், இவர் ஒரு ஏழை இந்தியக் குடிமகன் என்று எண்ணி, வெளியே போக சொல்லிவிட்டார்.

மனமுடைந்த ஜெய் சிங் மகராஜர், தன் விடுதி அறைக்கு வந்து, தன வேலை ஆட்களை காட்சியகத்திற்கு சென்று, ஆழ்வார் நகரத்து ராஜா உங்கள் வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார் என்று கூறி வரச்செய்தார்.

சிறிது நேரம் கழித்து, தன் ராஜ உடையில், கம்பீரமான நடையுடன் ரோல்ஸ் ராய்ஸ் காட்சியகத்திற்கு வந்தார், அங்கே அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் பெரும் மரியாதைய்டன் நடந்தது.

அங்குள்ள அனைவரும் பணிந்து மன்னரை வரவேற்றனர். அங்குள்ள ஆறு கார்களையும் மன்னர் உடனடியாக பணம் செலுத்தி பெற்றுக்கொண்டார்.

மன்னர் பின்பு இந்தியா வந்தடைந்ததும், அந்த ஆறு கார்களையும் மாநகராட்சி துறைக்கு அனுப்பி, இந்த கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறுஉத்தரவிட்டார்.

இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் மதிப்பு குறைய ஆரம்பித்தது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அந்த கார்களை பயன்படுத்துபவர்களை ஏளனமாக பார்க்க ஆரம்பித்தனர்.

"இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுத்தும் காரை தான் நீ வைத்திருக்காயா" என்று கிண்டல் செய்தனர். இதனால் அந்த நிறுவனத்தின் விற்பனை குறையத் தொடங்கியது.

மேலும் அவர்களது வருமானம் பெரிதும் சரிந்தது. உடனே அந்த நிறுவனம், மன்னிப்பு கோரியும், தவறை உணர்ந்ததாகவும், குப்பை அள்ளுவதை நிறுத்தும் படியும், மன்னருக்கு தந்தி அனுப்பப்பட்டது.



அதுமட்டுமில்லாமல், மன்னருக்கு ஆறு கார்கள் பணம் பெற்றுக்கொள்ளாமல் அனுப்பப்பட்டது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பாடம் கற்றுகொண்டதை அறிந்த மன்னர், உடனடியாக அவைகளை நிறுத்தி வேறு விசயத்திற்காக பயன்படுத்திக் கொண்டார்.

Saturday, June 7, 2014

தொழில் செய்பவர்கள் கவனத்துக்கு!

தொழில் செய்பவர்கள் கவனத்துக்கு!
ஒரு தொழில் ஓஹோவென வளர்வதற்கு முக்கியமான தேவை, அந்தத் தொழில் மூலம் கஸ்டமர்களுக்குக் கிடைக்கும் வித்தியாசமான அனுபவம்தான். இந்த அனுபவம் மட்டும் ஒரு கஸ்டமருக்கு பிடித்துப்போய்விட்டால், அந்த கஸ்டமர் அந்த நிறுவனத்தைத் தேடி அடிக்கடி வருவார் என்பதே பிசினஸ் ரகசியம். சென்னையில் வித்தியாசமான சூழலைத் தரும் சில நிறுவனங்களை தேடிப்போய், அந்தச் சூழலை உருவாக்கும் ஐடியா எப்படி பிறந்தது என்று விசாரித்தோம்.







வித்தியாசமான சூழலைத் தருகிறோம் என விளம்பரம் செய்துவிட்டு, அதைப் பார்த்து கஸ்டமர்கள் கடையைத் தேடிவந்தால், அவர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும். அப்போதுதான் சிறிய அளவிலான கடை என்றாலும் அங்கு தனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றி சாதாரணமாக இன்னொருவருடன் பேசும்போதும், சமூக வலைதளங்களிலும் பதிவு செய்வார்கள் கஸ்டமர்கள்.மோசமான அனுபவமாக இருந்தால், அதையும் மறக்காமல் மற்றவர்களிடம் சொல்லி, சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து, வரநினைக்கிற ஒன்றிரண்டு கஸ்டமர்களையும் வராமல் தடுத்துவிடுவார்கள். எனவே, வெறும் வடிவமைப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், கஸ்டமர்களை உபசரிப்பதிலும் கவனம் காட்டினால்தான் உங்கள் ஸ்மார்ட் ஐடியா நிச்சயம் வெற்றி பெறும்''



தொழிலில் ஜெயிக்க நினைப்பவர்கள் இந்த விதத்தில் யோசித்து, வெற்றி பெறலாமே!
Yours Happily
VIvekas Sales Skills Vivekas Sales Training Company
Jc.Dr.Star Anandram
Coimbatore

Wednesday, May 15, 2013

நீங்களே விற்கலாம் - விற்றலின் அடிப்படை (Selling Skills)


நீங்களே விற்கலாம்



நீங்களே விற்கலாம்





11.மற்றவர் அவர்களது இழப்புகளை சொல்லும் பொழுது அமைதியாகவும்ஆறுதலாகவும் இருக்க வேண்டும்
12.   உங்கள் ப்ராஸ்பெக்ட் சொல்வதை கவனமுடன் கேளுங்கள்குருக்கே இடையூறு செய்யாதீர்கள்.
13.   உங்கள் உடல் பாஷைகளை உணர்ந்து செயல்படுங்கள்எவ்வாறான அமைதி குரிகைகளை நேஙள் உங்கள் ப்ராஸ்பெக்டிடம் வெளியிடுகிறீகள் ?
14.   உங்கலது பாடீ லாங்குவேஜை  கற்றுகொள்ள முற்படுங்கள்ஆது உங்களின் விற்பனை உருதி முடிதல்களை மேலுயர்த்தும்.
15.   மறுப்புரைகளுக்கான  பதில்களை முன்னமெ தயார் நிலயில் வைத்துகொள்ளுங்கள்ஆனால் அவர்களிடம் நீங்கள் மனப்பாடம் செய்ததாக காட்ட் கொள்ள வேண்டாம்
16.   தோழமையுடன் இருங்கள்அன்பாக பேசுங்கள்உங்கள் ப்ராஸ்பெக்ட் க்கு உதவும் பொதுவான அக்கரையை கைய்யிலெடுங்கள்.
17.   உங்கள் ப்ராஸ்பெக்ட்க்கு அவர்கள் உங்களுக்கு முக்கியம் என்று உணரவையுங்கள் அதே சமயம் குழையாமல் பார்த்து கொள்ளுங்கள்.
18.   உறுதி முடிக்கும் சமயத்தை வெறும் விற்பனைக்கான உறுதி முடிப்பதாக மட்டும் பார்க்காமல்நீங்கள் எடுக்கும் அடுத்த படிக்கான முயற்சியாக பாருங்கள்
19.   பொருட்களை பற்றிய உங்களின் அறிவுத்திறணை வளர்த்து கொள்ளுங்கள்
20.   உங்களை நம்புங்கள்
21.          உங்கள் தயாரிப்புகளை நம்புங்கள்
22.          உங்கலுடய எதிராளி / போட்டியிடுபவர் என்னவெல்லாம் வழங்குகிறார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்உங்கள் நண்பர்களை உங்களுக்கு அருகாமையில் வையுங்கள்உங்கள் எதிரிகளை உங்களுக்கு மிகவும் அருகாமயில் வையுங்கள்

உங்களது திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்உங்கள் திறமைகளுக்கு பட்டயம் தீட்டுங்கள்.
24.          உங்களது ப்ராஸ்பெக்டுகள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் படங்கள் மற்றும் விளக்க படங்களை வரைந்து காட்டுங்கள்.
25.          ஓவ்வொரு வாங்கும் தீர்மானமும் மனகிளர்ச்சியால் ஏர்படுகின்ற ஒன்றுஅத்தகைய உங்களது ப்ராஸ்பெக்ட்களின் மனக்கிளர்ச்சியை ஈர்ப்பதர்க்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
ஓவ்வொரு வாங்கும் தீர்மானமும் மனகிளர்ச்சியால் ஏர்படுகின்ற ஒன்றுஅத்தகைய உங்களது ப்ராஸ்பெக்ட்களின் மனக்கிளர்ச்சியை ஈர்ப்பதர்க்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?

26.          எந்த வகையில் உங்களின் ப்ராஸ்பெக்டுக்கு நீங்கள் கூடுதல் மதிப்பு அளிக்க முடியும்?

27.          எப்படி உங்கள் ப்ராஸ்பெக்டின் எதிர்ப்பார்ப்புகளை கடக்க முற்படுவீர்கள் ?

28.          உங்களது பொருள் / சேவைக்கான தனித்தன்மையான இயல்பு என்ன ?

29.          நீங்கள் எப்படி உங்களது தற்போதய வாடிக்கயாளர்கள் / தகுதிசான்றுகள் / நிகழ்வாய்வுகளை உங்களது மேன்மைக்காக பயன் படுத்த போகீறீர்கள் ?

30.          “கடின தோளினை” அடைய உங்களது நம்பிக்கையை மேம்படுத்துங்கள்
31.          மனதில் குறிக்கோளுடனும்குறிப்பிட்ட பலனுடனும் ஒவ்வொரு விற்பனை களத்திற்க்கும் செல்லுங்கள்
32.          உங்கள் நிர்வாகத்தில் தலை சிறந்த விற்பனையாளர் யார்நீங்கள் செய்யாத எதை அவர் செய்து கொண்டு இருக்கிறார் ? அதை அவரிடமிருந்து கற்று கொள்ளுங்கள்
33.          விதிமுறைகளையும் மரபொழுங்கலையும் விடுத்து ஒரு நண்பனை போல உங்கள் ப்ராஸ்பெக்டிடம் பேசுங்கள்
34.          உங்களை நீங்களே வற்புறுத்தி கொள்ளமல்ஒவ்வொரு விற்பனை வாய்ப்பையும் ஒரு புதிய சவாலாகவே எதிர்கொள்ளுங்கள்
35.          உங்களது நாட்குறிப்பை சரியாக பயன்படுதுங்கள்இதில் ஏதெனும் சிரமம் இருந்தால் தகுந்த ஆலொசனை பெற்று பயன்படுத்துங்கள்ஓவ்வொரு நாளும் கூடுதலாக 60 நிமிடங்கள் ஆகத்திறனை உருவாக்க உங்களால் என்ன செய்ய முடியும் ?
36.          ப்ராஸ்பெக்டுடனான உங்கள் உரையாடலை தொலைபேசியில் பதிவு செய்து கேளுங்கள்
37.          உங்கள் தொலைபேசி குரல் வளத்தை மிகைப்படுத்துங்கள்
38.          நீங்கள் தொடங்கும் இடத்திர்க்கேற்ப்ப உங்கள் சிகையும் உடையும் இல்லாமல்,செல்ல வேண்டிய இடத்தை பொருத்து உங்கள் உடை நாகரீகமானதாக இருக்க வெண்டுமா அல்லது அலுவல் முரைப்படியான உடையாக இருக்க வேண்டுமா என தேர்வு செய்யுங்கள்.
39.          உங்களை ஒரு விற்பனை ஆலொசகராக எண்ணி புதுமை உத்திகளை உருவாக்குங்கள்
40.          விற்பனை ஆற்றல் தொடர்பான ஊக்குவிக்கும் ஒலிப்பதிவுகளை  நீங்கள் மகிழ்வுந்தில் பிரயாணிக்கும் பொழுது கேளுங்கள்இந்த செயலற்ற நேரத்தை உங்களின் வளர்ச்சிக்காக பயண்படுத்தி கொள்ளுங்கள்

41.          சிறந்த பண்பான தகவலை உங்கள் தொலைபேசியின் ஆன்ஸர் போன் ஆப்ஷனில் பதிவு செய்யுங்கள்அவை உங்களின் ப்ராஸ்பெக்டுகளை உங்களுடன் தொடர்பு கொள்ள வைக்கும்படியான ஆர்வத்தை தூண்ட வெண்டும்
42.          வாங்குதலின் பொழுது ஏதேனும் கூடுதல் பொருட்கள் மற்றும் சேவைகளை உங்களால் தர இயலுமா ?
43.          உங்களின் முதல் கருத்துகளையும் எண்ணங்களையும் நேர்மரையானதாக பதிவு செய்யுங்கள்நீங்கள் சொல்ல நினைக்கும் விஷயம் மற்றும் அதை சொல்ல நினைக்கும் விதம் பற்றி நேரம் ஒதுக்கி சிந்தித்து செயல் படுங்கள்
44.          நீங்கள் இறுதி தீர்மானம் செய்பவரிடம் தான் பேசுகிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
45.          உங்களுடைய ப்ராஸ்பெக்டுகளை விற்பனை செயல்பாடுகளில் முழுமையாக ஈடுபடுத்துங்கள்
46.          உங்கள் ப்ராஸ்பெக்டுகளை குறுக்கு கேள்விகள் கேட்காதீர்கள் / கேள்வி மேல் கேள்வி கேட்டு குறுக்கு விசாரணை செய்யாதீர்கள்
47.          உங்களிடம் இருந்து எளிதான முறையில் வாங்குவதர்க்கு நீங்கள் என்ன செய்ய முடியும் ?
48.          உங்களுடய பொருட்கள் மற்றும் சேவை பற்றி அழுத்தமாக எடுத்து சொல்லுங்கள். “எனக்கானது என்ன இருக்கிறது” என்ற உங்களுடைய ப்ராஸ்பெக்டின் கேள்விக்கு பதில் அளியுங்கள்
49.          உங்களுடய பேச்சு திறணை மேம்படுதுங்கள்சரியான பயிற்சி நிறைவை தரும்
50.          விற்றலின் அடிப்படைகளை ஒருமுறை திரும்ப பார்த்து கொள்ள வேண்டும்இது நீங்கள் நேர் சிந்தனையுடன் சரியான பாதயில் செல்ல வழி வகுக்கும்.
51.          உங்களால் முயன்று அடையகூடிய விற்பனை இலக்கை அடையும்வரை உங்களை நீங்களே சவாலாக எடுத்து கொள்ளுங்கள்
52.          நேர்மரையானதெளிவான மனநிலையை உருவாக்குங்கள்
53.          விலையை முதலில் தெரியபடுதாத்தீர்கள்.பயன்களையும்திறனையும் முதலில் மேம்பட எடுத்துரையுங்கள்
54.          ஓரு பொருள் அல்லது சேவை இரண்டு காரணங்களுக்காக வாங்கபடும். 1. வேதனையை குறைப்பதர்க்காக 2. மகிழ்ச்சியை பெருவதர்க்காகவாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வேதனையை குறைப்பதர்க்காகவே வாங்குவார்களே தவிரமகிழ்ச்சிக்காக அல்ல
55.          உங்களின் இலக்கங்களை அறியுங்கள்மாதத்திற்க்கு வெறும் 3 கூடுதல் விற்பனைகள் உங்கள் நிர்வாகத்தின் அடித்தளத்திர்க்கும் உங்கள் வருமானத்திர்க்கும் எவ்வாறு பொருள்படுகிறது என்பதை ஒரு ஊக்குவித்தலாக கொள்ளுங்கள்
56.          நீங்கள் கடைசியாக எப்பொழுது விற்றலுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டீர்கள்இன்றெ ஒரு பயிற்சி வகுப்பிற்க்கு உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்
57.          உங்கள் பொருள் மற்றும் சேவை தொடர்பாண நவீன தொழில் சார்ந்த புதிய நடைமுறைகளையும்செய்திகளையும் எப்பொழுதும் தெரிந்து வைத்திருங்கள்
58.          உங்களுடைய ப்ராஸ்பெக்டுக்ளை பின் தொடர மறக்காதீர்கள்
59.          பொது நிகழ்ச்சிகள்கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் உங்களுடைய தொடர்பையும் பங்களிப்பையும் மேம்படுத்துங்கள்வெறும் வர்த்தக அட்டையை மட்டும் பரிமாறிக்கொள்ளாமல்உறவுமுறைகளை கட்டமைத்து கொள்ளுங்கள்
60.          உறுதியாக இருங்கள்அதேசமயம் எரிச்சலூட்டும்படியாக நடந்து கொள்ளாதீர்கள்
61.          உங்களது கோல்ட் கால்களை ஒரு விற்பனை செயலாக எண்ணாமல்வாடிக்கையாளருக்கு உங்கள் ப்ரொடுக்ட் மற்றும் சேவை பற்றிய புரிதலை உருவாக்கும் சந்தர்ப்பமாகவே எண்ணுங்கள்
62.          வாடிக்கையாளர் சேவையிண் அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்டு அதனை உங்களது செயலாக்க அளிக்கையின் மூலம் எடுத்துரையுங்கள்
63.          உங்களது மிகைபடுத்தப்பட்ட சொற்களால் வாடிக்கையாளரை குழப்பமடைய செய்யதீர்கள்இதன் மூலம் அவர்கள் உங்களை நேரடியாக காண்பார்கள்
64.          உங்களுடன் இந்த வர்த்தகத்தை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதனால் வரும் விளைவுகளை தாங்களே ஏற்காமல்எப்படி நீங்கள் வருவிளைவுகளை உங்கள் தோளிள் சுமக்க வேண்டும்
65.          உங்களின் விற்பனையை கேட்க மறக்காதீர்கள்
66.          மகிழ்ச்சியாக இருங்கள் !


Yours Happily
Star Anand
Sales Skills Trainer 
Vivekas Sales Training Company 
Coimbatore
website - www.v4all.org
cell -9790044225
mail- star.v4all@gmail.com