Showing posts with label selling skills trainer. Show all posts
Showing posts with label selling skills trainer. Show all posts

Friday, July 10, 2015

பாம்பன் சுவாமிகள் அருளிய துவிதநாக பந்தம்.

பாம்பன் சுவாமிகள் அருளிய துவிதநாக பந்தம்.
(share) செய்யுங்கள்)
நாம் காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும்.
துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும். இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.
நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
அதற்கு பொருள் செலவு அதிகம். செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.
வசதி படைத்தவரகள் வெள்ளியில் நாகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.
அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று.
அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம்.
அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று கண்டிப்பாக உடலுறவு கூடாது.
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
Mantric   மாந்திரீகம்'s photo.

Wednesday, June 3, 2015

ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!

ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!
ஒரு பலவீனம் ஒருவரை அழித்து விடலாம் என்பதைப் போலவே ஒரு பலம் ஒருவரை மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியும் விடலாம். அப்படி உயர்த்தப்பட்ட மனிதரின் பலத்தை மட்டுமே உலகம் பார்த்து சிலாகிக்கிறதே ஒழிய அவருடைய குறைபாடுகளை உலகம் கண்டு கொள்வதில்லை.
விஸ்வநாதன் ஆனந்திற்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்றோ நன்றாகப் பாடத் தெரியுமா என்றோ உலகம் கவலைப்பட்டதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி சமைப்பார் என்பதோ அவருக்கு வரலாறு எந்த அளவுக்குத் தெரியும் என்பதோ எவருக்கும் தேவையில்லாத விவரங்களாக இருக்கின்றன. ஒரு துறையில் ஒருவர் முத்திரை பதித்த பின் அந்த நபரின் மற்ற பலவீனங்கள் அந்தப் பலத்தையே தகர்த்து விடுவதாக இல்லாத வரையில் அலட்சியப் படுத்தத் தக்கவையாகவே இருந்து விடுகின்றன.
எனவே ஒருவனுக்குப் பல பலங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலவீனம் அவனை அழித்து விடலாம் என்பது போலவே, பல பலவீனங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலம் அவனை சிறப்பாக உயர்த்தியும் விடலாம் என்பதும் உண்மை. ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டுமல்ல ஒரு அரசனுக்கே இது பொருந்தும் உண்மை என்பதை ஒரு வரலாற்று உதாரணம் மூலமாகவே விளக்கலாம்.
சத்ரபதி சிவாஜியின் பேரன் ஷாஹூஜி தன் ஏழாம் வயதிலிருந்து இருபத்தைந்தாம் வயது வரை முகலாயர்களின் பிடியில் இருந்தவர். சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜியைக் கொன்ற முகலாயர்கள் அவர் மனைவியையும், மகன் ஷாஹூஜியையும் தங்கள் வசமே சிறைப்படுத்தி வைத்திருந்தனர். கிட்டத்தட்ட தன் விளையாட்டுப் பருவத்தையும், இளமைப்பருவத்தையும் எதிரிகளான முகலாயர்கள் வசத்தில் இருந்து தொலைத்து விட்ட ஷாஹூஜி பின் அவர்களால் விடுவிக்கப்பட்டு மராட்டிய மன்னராக ஆனார். அப்போதும் மராட்டிய மண்ணில் ஒரு பகுதி அவர் சித்தப்பா மனைவி தாராபாய் ஆட்சியில் இருந்தது. ஷாஹூஜியின் தாயையோ முகலாயர்கள் இன்னும் தங்கள் பிடியிலேயே வைத்திருந்தனர். ஷாஹுஜி தங்களுக்கு எதிராக நடந்து கொண்டால் அவருடைய தாயை அழித்து விடுவதாக பயமுறுத்தியும் வைத்திருந்தனர்.
இப்படி பல்வேறு சிக்கல்களில் ஆட்சியில் அமர்ந்த ஷாஹுஜி பெரிய போர்வீரர் அல்ல. முகலாயர் பிடியிலேயே இளமையைக் கழிக்க வேண்டி இருந்ததால் ஒரு இளவரசனாக வளராததால் போர்வீரனாக அவர் பயிற்சிகளால் உருவாக்கப்படவில்லை. ஒரு அரசருக்குத் தேவையான வீரமோ, போர்த்திறமையோ இல்லாத ஷாஹூஜியிற்கு ஒரே ஒரு திறமை இருந்தது. ஒரு மனிதரை எடை போடுவதில் அவர் வல்லவராக இருந்தார். எதிரிகளிடமே வளர்ந்ததால் எவனை எதில் நம்பலாம், எது வரை நம்பலாம், எதில் நம்பக்கூடாது என்கிறதெல்லாம் கணிக்கக் கூடிய திறமையை அவர் இயல்பாகவே பெற்றிருந்தார். அந்த ஒரு திறமை அவருடைய மற்றெல்லா பலவீனங்களையும் ஒரு பொருட்டல்லாதவையாக ஆக்கி விட்டது.
நம்பிக்கைக்குப் பாத்திரமான திறமையான மனிதர்களைத் தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பித்த அவர் சிறிது சிறிதாக தன் அரசைப் பலப்படுத்தினார். மராட்டியத்திலேயே தனக்கு எதிராக ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த தாராபாயை அப்புறப்படுத்தி ஒரே மராட்டிய அரசாக்கித் தானே சக்கரவர்த்தியானார். முகலாயர் பிடியிலிருந்த தாயைத் தன் பக்கம் வரவழைத்துக் கொண்டார். திறமைசாலிகளை சமூகத்தின் எல்லா பாகங்களில் இருந்து கண்டறிந்து அவர்களை ஆட்சிப் பொறுப்பில் முக்கிய இடம் கொடுத்து அதிகாரத்தையும் வழங்கி மாபெரும் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கினார். அவர் காலத்தில் தான் மராட்டிய சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் மிகப்பெரிய விஸ்தீரணத்தைக் கண்டது. அவர் காலத்தில் கல்வி, சட்டம், சமூகநிலை போன்ற எல்லாத் துறைகளும் பெரிய சீர்திருத்தம் கண்டன. திறமையானவர்கள் பெரும் பொறுப்பும் அதிகாரமும் பெற்றனர். அதே சமயத்தில் அவர்கள் சக்கரவர்த்திக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தனர்.
தன்னை விடப் பெரிய திறமைசாலிகளையும், பலசாலிகளையும் உதவியாக வைத்து அரசாண்டதுமல்லாமல் அவர்கள் தன்னிடம் மாறாத விசுவாசத்துடன் எப்போதும் இருக்கும்படி அவர்களைத் தன் இனிய குணத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் வைத்துக் கொண்டது தான் சத்ரபதி ஷாஹுவின் ஒரே பலம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இப்படி ஒரு மிகப்பெரிய பலத்தை வைத்து ஒரு சாம்ராஜ்ஜியத்தையே நடத்த முடியும் போது ஒரு வாழ்க்கையை சிறப்பாக நடத்துவது தானா கஷ்டம்? யோசியுங்கள்.
உங்கள் குறைகளும், பலவீனங்களும் உங்கள் வாழ்க்கையையே சீரழிக்கும் அளவுக்குப் பெரிதாக இல்லாதவரை நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சிலவற்றில் நீங்கள் பூஜ்ஜியமாகக் கூட இருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ள பலரும் அவற்றில் பெரிய திறமையாளர்களாகக் கூட இருக்கலாம். யாராவது அதுபற்றிக் கேட்டால் சொல்ல தர்மசங்கடமாக இருக்கக் கூடும் என்றாலும் உங்கள் வாழ்க்கை அந்த ஒன்றிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை என்பதை உறுதியாக அறிந்திருங்கள். உங்கள் இயல்பிலேயே இல்லாத திறமை, எவ்வளவு முயன்றாலும் புளியங்கொம்பாக இருக்கின்ற திறமை என்றால் அது உங்களுக்கானதல்ல என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டு விடுங்கள். அதற்காக நீண்ட காலம் போராடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
உங்கள் உண்மையான திறமைகளின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். எது உங்களுக்கு மற்றவர்களை விட சுலபமாகவும் இயல்பாகவும் வருகிறதோ எதைச் செய்யும் போது உற்சாகமாகவும் திருப்தியாகவும் உணர்கிறீர்களோ அது உங்கள் உண்மையான பலம். அது ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது ஒன்றை விட அதிகமாகக் கூட இருக்கலாம். அவற்றில் ஏதோ ஒன்று உங்களை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.
விஸ்வநாதன் ஆனந்தை செஸ் அடையாளம் காட்டியது போல, சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் அடையாளம் காட்டியது போல, ஏ.ஆர்.ரஹ்மானையும், இளையராஜாவையும் இசை அடையாளம் காட்டியது போல, சுஜாதாவை எழுத்து அடையாளம் காட்டியது போல, ராமானுஜத்தை கணிதம் அடையாளம் காட்டியது போல உங்களையும் ஒரு திறமை உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.
அப்படி உலகத்திற்கு அடையாளம் காட்டா விட்டாலும் கூட ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அந்த ஒரு திறமை உங்களுக்கு வழி காட்டலாம். கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் மிகத் திறமையான ஒரு ஆசிரியர் ப்ளஸ் டூ மாணவ மாணவியருக்கு சில மணி நேர டியூஷன் எடுப்பதன் மூலமாக வெற்றிகரமான ஒரு சாஃப்ட்வேர் இன்ஜீனியரை விட அதிகமாக சம்பாதிப்பதை நான் பார்த்திருக்கிறேன். வித்தியாசமாகவும், கச்சிதமாகவும் தைக்கத் தெரிந்த ஒரு பெண்மணி பெண்களுக்கு ஜாக்கெட் தைத்துக் கொடுத்தே கைநிறைய சம்பாதிப்பதையும் பார்த்திருக்கிறேன். இதே போல எத்தனையோ தனித் திறமைகளால் வெற்றிகரமாக வாழும் மனிதர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே உங்களுக்கு என்னவெல்லாம் தெரியாது என்று உலகம் கேட்கப் போவதில்லை. அதைப் பற்றி அது கவலைப்படுவதுமில்லை. உங்களுக்கு என்ன தெரியும், எந்த அளவு தெரியும், அதில் கூடுதலான உங்கள் தனித்திறமை என்ன என்று தான் உலகம் பார்க்கிறது. அதை வைத்தே உலகம் உங்களை உபயோகப்படுத்துகிறது. எனவே எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறேன் என்று எல்லாவற்றையும் ஓரளவு தெரிந்து கொள்வதை விட உங்கள் உண்மையான திறமையைக் கண்டு பிடித்து அதை நன்றாக வளர்த்துக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் பலம். அப்படி ஒரு பலம் உங்களுக்கு உறுதியாகக் கிடைத்து விட்டால் உலகிற்கு நீங்கள் கண்டிப்பாகத் தேவைப்படுவீர்கள். அதற்கான விலையாக உங்களுக்கு வேண்டியதை இந்த உலகம் கண்டிப்பாக கொடுத்தே தீரும்.

Wednesday, August 27, 2014

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!

குழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்....!!
பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும்
அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க
வேண்டும்.


2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள்
முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்
தவிர்க்க வேண்டும்.
குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய
கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.
குழந்தை விளையாடப் போகும்போது உங்கள்
பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல்
துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.
உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள்
அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.
சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.
வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும்
அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள்.
இல்லையென்றால், சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்துவிடும்.
குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.
தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற
சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்
செயலிழக்கச் செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள்
அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும்
இதை செய்து வைக்க அறிவுருத்துவது நல்லது.
3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய
கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்
பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால், அவசியமற்ற உதவிகளை செய்யும்
போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது
குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.
மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள்
குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்
திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.
குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே, அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள்
என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.
மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!
நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்

your Happily

Dr.Star Anand Ram
www.v4all.org 

Thursday, August 21, 2014

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற காந்தியவாதி. அவர் புதுக்கோட்டையில் 1866-ம் ஆண்டு ஜூலை 30 அன்று பிறந்தார். அவருடைய அப்பா நாராயணசுவாமி ஐயர். புதுக்கோட்டையிலிருந்த மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்தார். அவர் கண்டிப்பும் ஒழுக்கமும் கொண்டவர். முத்துலட்சுமியின் அம்மா சந்திராம்மாள் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர்.
முத்துலட்சுமி சிறு பிராயத்தில் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டார். பள்ளியில் புத்திக்கூர்மை கொண்ட முத்துலட்சுமி ஆசிரியர்களுக்குப் பிடித்த மாணவியாக இருந்தார். அந்தக் காலத்தில் பெண்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படுவது இல்லை. ஆனால் முத்துலட்சுமி ஆசிரியர்கள் உதவியுடன் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார். முத்துலட்சுமி முதலாம் பாரம் முடித்த பின்னர்தான் அவர் ஆங்கிலம் கற்ற விஷயம் அவருடைய அப்பாவுக்குத் தெரியவந்துள்ளது.
கல்லூரிப் படிப்புக்காக மகாராஜா கல்லூரில் சேர விரும்பிய அவருக்கு அங்கே படிக்க முதலில் இடம் கிடைக்கவில்லை. அவர் பெண் என்பதும், அவருடைய தாய் பிராமணரல்லாதவர் என்பதும் அதற்குக் காரணங்கள். ஆனால் மகாராஜாவின் உதவியுடன் முத்துலட்சுமி கல்லூரியில் சேர்ந்துகொண்டார். கல்வி உதவித் தொகையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
சிறுவயது முதலே அவர் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரர் ஆனார். ஆண்கள் மட்டுமே படித்து வந்த சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்தபோது அவர் மட்டுமே ஒரே பெண் மாணவர். அவர்தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற உறுப்பினர். சென்னை சட்டமன்றத்தின் முதல் துணைத் தலைவர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். (சென்னை) மெட்ராஸ் மாநகராட்சியின் முதல் துணை மேயர். 1912-ல் மருத்துவப் படிப்பை முடித்த அவர் 1914-ல் டாக்டர் சந்தார ரெட்டியை மணமுடித்துக்கொண்டார்.
பெண்கள்மீது ஆழ்ந்த அக்கறை கொண்ட முத்துலட்சுமி ரெட்டி அவர்களுடைய துயரங்களைப் போக்கப் பெரிதும் பாடுபட்டார். தன் உறவுப் பெண் ஒருவர் புற்றுநோயால் மரணமடைந்ததால் புற்றுநோய் மருத்துவத்தைக் கற்க விரும்பியுள்ளார். இதனால் இங்கிலாந்துக்குச் சென்று ராயல் கேன்சர் மருத்துவமனையில் இது தொடர்பான கல்வியைக் கற்றுள்ளார்.
பெண்களுக்கான சமூக நீதி கிடைப்பதற்காக முனைப்புடன் செயல்பட்ட அவர் பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்கவும் போராடியுள்ளார். பள்ளியில் படித்த பெண்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ஏழைப் பெண்களுக்குக் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இந்தியாவில் வழக்கத்தில் இருந்த குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றினார். தேவதாசி வழக்கப்படி பூப்பெய்தாத இளம்பெண்களைக் கோவிலுக்கு நேர்ந்துவிடும் கொடுமைக்கு எதிராக 1930-ல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவந்தார். இந்த மசோதா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டமானது. இந்தச் சட்டம் நிறைவேற ஈ.வே.ரா. பெரியாரும் மூவலூர் ராமாமிருதமும் உறுதுணையாக இருந்துள்ளனர்.
சென்னையிலுள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஆதரவற்ற கைம்பெண்களுக்கு இருப்பிடம் தரும் அவ்வை இல்லம் ஆகியவை தோன்றக் காரணமானவர். சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனை உருவாகக் காரணமும் அவரே. 1952-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அடிக்கல் நாட்டிய அடையாறு புற்று நோய் மருத்துவமனை 1954 ஜூன் 18-ல் செயல்படத் தொடங்கியது. இந்திய அரசு 1956-ல் முத்துலட்சுமி ரெட்டிக்கு பத்மபூஷன் விருதை அளித்து கவுரவித்தது. 1968 ஜூலை 22 அன்று அவர் காலமானார்.


urs
www.v4all.org

Sunday, August 17, 2014

ஆர்வம் வேறு... திறமை வேறு... வெற்றி ரகசியம்! ச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.

ஆர்வம் வேறு... திறமை வேறு... வெற்றி ரகசியம்!



சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம்
சச்சின் டெண்டுல்கர். | கோப்புப் படம்
ஆர்வத்துக்கும் திறமைக்கும் முரண்பாடு வந்தால் என்ன செய்வது என்னும் கேள்வியோடு சென்ற வாரம் முடித்திருந்தோம். இன்று பலருக்கும் உள்ள பிரச்சினை இதுதான் என்பது போகிறபோக்கில் மாணவர்கள் சிலரைக் கேட்டுப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
உங்களுக்கு எது ரொம்பப் பிடிக்கும்?
உங்களுக்கு எது நன்றாக வரும்?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலைச் சொல்பவர்கள் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். எனக்குப் பாடப் பிடிக்கும், ஆனால் குரல் சரியில்லை, எனக்கு கிரிக்கெட் பிடிக்கும், ஆனால் சீக்கிரமே அவுட் ஆகிவிடுவேன், எனக்கு அறிவியல் பிடிக்கும், ஆனால் சமன்பாடுகளைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது…
பிடித்தது கையில் சிக்க மாட்டேன் என்கிறது. இது ஒரு ரகம்.
இன்னொரு ரகம் இருக்கிறது. எதில் திறமை இருக்கிறதோ அது அவ்வளவாகப் பிடிக்க மாட்டேன் என்கிறது என்பவர்கள் இந்த ரகம். நன்றாக ஓவியம் வரையத் தெரியும், ஆனால் ஓவியத்தில் பெரிய ஆர்வம் இல்லை. நன்றாக ஓடுவேன் ஆனால் அதெலெடிக்ஸில் ஈடுபாடு கிடையாது, நிகழ்ச்சிகளை நடத்தச் சொன்னால் கலக்கிவிடுவேன் ஆனால் அதெல்லாம் தேவையில்லாத தொல்லை…
உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆர்வமும் திறமையும் பரஸ்பரம் இணைந்து போகாத நிலைதான் தொழில் வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான பிரச்சினை. இப்படிப்பட்ட சிக்கல் வரும்போது என்ன செய்வது?
ஆர்வத்துக்கு முதலிடம்
ஆர்வத்துக்கு முதலிடம் தர வேண்டும் என்றுதான் தொழில் ஆலோசகர்கள் சொல்கிறார்கள். எதில் ஆர்வம் இருக்கிறதோ அதில் திறமையை வளர்த்துக்கொள்வது ஒப்பீட்டளவில் எளிது. ஆர்வம் ஆழமாக இருந்தால் திறமையை வளர்த்துக்கொள்வதற்கான ஊக்கத்தையும் அந்த ஆர்வமே தந்துவிடும். பாட்டு, விளையாட்டு, அறிவியல் என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். எனக்குப் பிடித்திருக்கிறது, ஆகவே நான் இதைச் செய்கிறேன் என்னும் எண்ணம் ஒருவரது முனைப்பையும் முயற்சியையும் பெருமளவில் பெருக்கிவிடும். எனவே ஆழமான ஆர்வம் உள்ள துறையில் திறமை வந்துவிடும்.
அப்படி வந்துவிட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் சில விஷயங்களில் ஆர்வம் எத்தனை தீவிரமாக இருந்தாலும் திறமையை ஒரு மட்டத்துக்கு மேல் வளர்த்துக்கொண்டு செல்ல முடியாது. உதாரணம் வாய்ப்பாட்டு. ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் அடிப்படையாக ஓரளவேனும் நல்ல குரல் அமையாவிட்டால் ஒரு அளவுக்கு மேல் திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது. விளையாட்டிலும் அப்படித்தான். கிரிக்கெட்டின் மேல் வெறியாக இருக்கலாம். வெறித்தனமாக உழைக்கலாம். ஆனால் இயல்பாகவே கிரிக்கெட் திறன் இல்லாவிட்டால், அதில் ஒரு மட்டத்துக்கு மேல் போக முடியாது. அப்படிப் போக முடியும் என்றால் இன்று இந்தியாவில் ஆயிரம் சச்சின் டெண்டுல்கர்களும் இரண்டாயிரம் கும்ப்ளேகளும் உருவாகியிருக்க வேண்டும். ஏன் உருவாகவில்லை? ஆர்வம் மட்டும் போதாது என்பதுதான் காரணம்.
ஆர்வத்தை மட்டும் பின்தொடர்வதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. விளையாட்டு, ராணுவம் போன்ற சில துறைகளுக்கு உடல் வலுவும் திறனும் அவசியம். இவை இரண்டும் இல்லாதவர்கள், ஏதேனும் காரணத்தால் உடலில் குறைபாடு உள்ளவர்கள், எவ்வளவு முயன்றாலும் அந்தத் துறையில் பிரகாசிப்பதற்கான திறமையை வளர்த்துக்கொள்ள முடியாது. எனவே, ஆர்வம் என்பதைக் கண்மூடித்தனமாகப் பின்தொரட முடியாது.
சிலர் இயல்பாகவே அமைந்த சிறப்பான திறமையால் மிளிர்வார்கள். சிலர் உழைத்துத் தன் திறமையை மேம்படுத்திக்கொள்வார்கள். ஆனால், இருவருக்குமே அடிப்படையான திறன்கள் இயல்பில் ஓரளவேனும் அமைந்திருக்க வேண்டும். அல்லது சிறு வயதிலேயே அது வசப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் எவ்வளவு முயன்றாலும் சிறப்பான திறமையை வளர்த்துக்கொள்ள இயலாது. சிறப்பான திறமை இல்லாதபட்சத்தில், போட்டிகள் நிறைந்த உலகில் அதிக மதிப்பு இருக்காது.
உங்கள் பாதை உங்கள் பயணம்
திறமை இருந்தால்…
ஒரு விஷயத்தில் ஒருவருக்கு இயல்பான திறமை அதிகமாக இருந்தால், அவருக்கு அதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர் அந்தத் துறையில் நுழையலாம். சிறப்பான திறமை இயல்பாக அமைந்திருக்கும் ஒரு விஷயத்தில், ஆர்வம் அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதில் ஆர்வமே இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை. உதாரணமாக, மிக அருமையான குரல் உள்ள ஒரு பையனுக்கு இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ளும் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பாட்டே அவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. பிடிக்காமல் இருந்தால் அவனால் வாயைத் திறந்து பாடவே முடியாது. இப்படிப்பட்டவர்கள் அபரிமிதமான திறமை, ஓரளவு ஆர்வம் ஆகியவற்றை வைத்துக்கொண்டே அந்தத் துறையில் பிரகாசிக்கலாம்.
அதற்காக ஆர்வத்துக்கு அணை போட்டு இயல்பான ஆசையை அடக்கிக்கொள்ள வேண்டியது இல்லை. மனதுக்கு அதிகமாகப் பிடித்த ஒரு விஷயத்தைப் பொழுதுபோக்காகவோ மாற்றுத் துறையாகவோ வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, பாட்டைப் பிரதானத் துறையாகக் கொண்டவர் எழுத்திலும் பிரகாசிக்கலாம். திறமையின் அடிப்படையில் ஆசிரியராக இருக்கும் ஒருவர், ஆர்வத்தின் அடிப்படையில் ஓவியம் அல்லது கைவினைத் தொழிலில் நேரம் கிடைக்கும்போது ஈடுபடலாம். ஆர்வத்துக்கும் தீனி, வருமானத்துக்கும் வழி.
இதுவரை பார்த்த விஷயங்களைத் தொகுத்துக்கொள்வோமா?
தனக்கான துறையைத் தேர்ந்தெடுப்பதில் ஒருவரின் ஆர்வம்தான் அடிப்படை. ஆனால் ஆர்வம் இருக்கிறது என்பதாலேயே திறமை வந்துவிடாது. எனவே திறமையில் சறுக்கும் பட்சத்தில் உஷாராக ஆர்வத்துக்குச் சற்றே அணைபோட்டுவிட வேண்டும். திறமை எதில் இருக்கிறதோ, அதில் ஏற்கனவே இருக்கக்கூடிய சிறிதளவு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதைப் பிரதானத் துறையாக வைத்துக்கொள்ளலாம். ஆர்வம் அதிகமாக உள்ள விஷயத்தை இழந்துவிடாமல் பொழுதுபோக்காகவோ இரண்டாவது துறையாகவோ வைத்துக்கொள்ளலாம்.
ஆர்வம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் திறமை அப்படி அல்ல. தவிர, திறமையைத் தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். எனவே அதற்கு அதிக முயற்சி தேவைப்படும். எனவே திறமையைக் கண்டுகொண்டு, அதில் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு அதில் சிறப்பாக வருவதே சிறந்த வழியாக இருக்க முடியும்.
பொருத்தமான உதாரணத்துடன் இந்தக் கட்டுரையை முடிக்கலாம். ஒரு பையன் கிரிக்கெட் பயிற்சி மையத்துக்குச் சென்றான். வேகப் பந்து வீச்சைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆசை. சில மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் தன் திறமையை வளர்த்துக்கொண்டான்.
பந்துவீச்சுப் பயிற்சியின்போது சில சமயம் மட்டை வீச்சிலும் ஈடுபட வேண்டுமல்லவா? அப்படி அவன் ஆடும்போது தலைமைப் பயிற்சியாளர் அவனைக் கவனித்தார். அவனது மட்டை பேசும் விதத்தைக் கண்டு அசந்துபோனார். அவனைக் கூப்பிட்டு, “உனக்குப் பந்து வீச்சு சரிப்பட்டு வராது, நீ போய் பேட்டிங் பயிற்சி செய்” என்று சொல்லி அனுப்பிவிட்டார். அந்தப் பையன் ஏமாற்றத்துடன் திரும்பினான். ஆனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தான். பின்னாளில் உலகிலேயே சிறந்த மட்டையாளர் எனப் பெயர் வாங்கினான். அவன் செய்த சில சாதனைகளை யாராலும் நெருங்கக்கூட முடியாது என்னும் அளவுக்குச் சாதனைகள் புரிந்தான்.
அவன் பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.

Urs Happily

Dr.Star Anand Ram
Self motivation Trainer
www.v4all.org
cell-9790044225


Saturday, August 16, 2014

எழுதுவதும் கிரிக்கெட் விளையாடுவதும் ஒரே மாதிரிதான்- சென்னையில் சச்சின் டெண்டுல்கர் பேச்சு

எழுதுவதும் கிரிக்கெட் விளையாடுவதும் ஒரே மாதிரிதான்- சென்னையில் சச்சின் டெண்டுல்கர் பேச்சு




‘ரைட்விஸ்’என்ற கையெழுத்து திட்டத்தை தொடங்கி வைக்கிறார் சச்சின்.
‘ரைட்விஸ்’என்ற கையெழுத்து திட்டத்தை தொடங்கி வைக்கிறார் சச்சின்.
எழுதுவதும் கிரிக்கெட் விளையாட்டும் ஒரே மாதிரியானதுதான் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.
சென்னையில் ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் ‘ரைட்விஸ்’என்ற கையெழுத்து வளர்க்கும் திட்டத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து சச்சின் கூறியதாவது:
நான் சிறு வயதில் வெளியூரில் தங்கியிருந்த காலங்களில் எனது பெற்றோருக்கு கடிதம் எழுதுவேன். எனது மனைவி அஞ்சலிக்கும் கடிதங்களை எழுதியிருக்கிறேன். அது மிகவும் சுவாரசியமான அனுபவம். எழுதுவதும் கிரிக்கெட் விளையாடுவதும் ஒரே மாதிரிதான். இரண்டுக்கும் முறையான பயிற்சி தேவை, சரியான நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். இரண்டிலும் போதிய பயிற்சி இருந்தால்தான் தன்னம்பிக்கையுடன் செயலில் இறங்க முடியும். கணினி பயன்படுத்துவதை விட எழுதும் போது நிறைய தகவல்கள் ஆழ் மனதில் பதியும் என்றார்.
ரைட்விஸ் என்ற ரெனால்ட்ஸ் திட்டத்தைப் பற்றி அந்நிறுவன விற்பனை பிரிவின் துணைப் பொது மேலாளர் பி.கார்த்திக் கூறுகையில், “தற்போது பலர் கணினியை பயன்படுத்தினாலும் கையெழுத்து அழகாக இருப்பது மிக முக்கியம். விருப்பமுள்ள பள்ளிகள் முன் வந்தால் அங்கு எங்கள் நிபுணர்கள் மூலம் கையெழுத்து பயிற்சி வகுப்புகளை நடத்துவோம். வாரம் இரு முறை இந்த வகுப்புகள் நடத்தப்படும். இதற்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படும்” என்றார்.

Thursday, August 14, 2014

தேசியக்கொடி சில விதிகள்

தேசியக்கொடி சில விதிகள்
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை பறக்க செய்து, அதற்கு மரியாதை செலுத்துவோம்தேசியக் கொடியை எங்கெல்லாம் எப்போதெல்லாம் பறக்கவிட வேண்டும் என்பது பற்றி சில விதிகள் இருக்கிறது.

எங்கு, எப்போதெல்லாம் பறக்கவிட வேண்டும்:
சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரைதான் தேசியக்கொடியை பறக்கவிட வேண்டும்.
முக்கியமாக தலைமைச் செயலகம், ஆட்சியர் அலுவலகம், உயர்நீதிமன்றம், மாநகராட்சிக் கட்டடம், மத்திய, மாநில அரசுக் கட்டடங்கள், சிறைச்சாலை முதலிய கட்டடங்களில் தேசியக் கொடியை பறக்க விடவேண்டும்.
ஊர்வலத்தில் முன்னால் தேசியக்கொடியை வலது தோளில் உயர்த்திப் பிடித்துச் செல்ல வேண்டும்.
தேசியத் திருவிழா நாட்களில் மட்டும் வீடுகளில், கார்களில், தேசியக் கொடியை பறக்கவிடலாம்.
மற்ற தேசியக் கொடிகளுடன் ஒரே வரிசையில் இக்கொடியைப் பறக்கவிட்டால், இந்திய தேசியக்கொடியின் இடது புறத்திலேயே மற்ற கொடிகளை பறக்கவிட வேண்டும்.
அயல்நாடுகளில் உள்ள இந்தியத் தூதர் அலுவகங்களிலும், பயன்படுத்தும் கார்களிலும் கொடி கட்டாயம் பறக்க விடவேண்டும்.
மத்திய, மாநில அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோரது காரிலும் கொடி பறக்க வேண்டும்.
எல்லைப்புறங்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கொடியை பறக்க விடலாம்.
துக்க நாளில்:
தேசத்தின் பெருந்தலைவர்கள் மறைவு போன்ற தேசிய துக்க சம்பவங்களுக்கு துக்கத்தை அறிவிக்க, கொடிமரத்தின் பாதியில் கொடியை பறக்க விட வேண்டும்.
செய்ய கூடாதது:
கொடியில் எந்த வாசகத்தையும் எழுதக்கூடாது.
ஒருவேளை கொடி கிழிந்துவிட்டால், அதை தூசு துடைக்கவோ, குப்பைத் தொட்டியில் போடவோ கூடாது.

கொடியை ஜன்னல் திரையாகவோ, மேஜை விரிப்பாகவோ பயன்படுத்தக் கூடாது.


Thursday, August 7, 2014

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டியது !
சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருடைய மூன்று வயது குழந்தை, பிரிஜ்ஜிலிருந்து இரண்டு லிட்டர் கோக் பாட்டிலை எடுக்க முயன்ற போது, கை தவறி, கீழே விழுந்து, அதிலிருந்த கோக் முழுவதும் கொட்டி விட்டது. நண்பரின் மனைவி, தன் குழந்தையை கண்டித்து அடிக்கப் போகிறார் என்று நினைத்து, நான் பயந்து கொண்டிருந்தேன்; ஆனால், நடந்ததோ வேறு...
"பளுவை தூக்கறதுக்கு அப்படி தான் முயற்சி பண்ணணும். கொட்டினது பரவாயில்லை. அதில கொஞ்ச நேரம் உன் இஷ்டத்துக்கு விளையாடிக்கோ...' என்றார். குழந்தையும் அதில் கைகளை அலசி விளையாட ஆரம்பித்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, "இதை கொட்டினது யாரோ, அவங்க தான் துடைக்கணும். இந்த சின்ன டவலால கவனமா துடைச்சுடு...' என்று, குழந்தையிடம் டவலை கொடுத்தாள். தன்னிடம் முழுப் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்ட பெருமை முகத்தில் ததும்ப, அந்த குழந்தை தரையை சுத்தமாக துடைத்து, பெருமிதத்துடன் அம்மாவைப் பார்த்தது. அதோடு, "இதே பாட்டில்ல குழாயிலிருந்து முழுதும் தண்ணி பிடிச்சு, கொட்டாம பிரிஜ்ஜில கொண்டு வைக்க இப்ப பழகிக்கோ...' என்று சொல்லி, குழந்தையை குழாயின் அருகில் அழைத்துப் போனார்.
அந்த தாயை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். "குழந்தைகளை வளர்க்கும் முறைகளை விளக்கும் ஒரு புத்தகத்தில் படித்ததை, நான் நடைமுறையில் பயன்படுத்துகிறேன். இந்த முறைகளை பின்பற்றுவதால், குழந்தை, தான் செய்த தவறை உணர்கிறது. தவறு செய்தால், துடைப்பது போன்ற தண்டனையை தான் அனுபவிக்க வேண்டும் என்று மென்மையாக குழந்தையை உணர வைக்க முடிகிறது. மீண்டும், அதே தவறை செய்யாமலிருக்க, பெற்றோராகிய நாம் தான் குழந்தையை பழக்க வேண்டும். அதற்கு தான் குழாயில் தண்ணீர் பிடித்து பழகச் சொன்னேன்...' என்று, அவர் விளக்கிய போது, ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் வளர்ப்பில் இம்மாதிரி மென்மையான முறைகளை பின்பற்றலாமே என்று தோன்றியது..

Tuesday, July 22, 2014

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவது எப்படி?

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவது எப்படி?



இன்றைய நவீன காலத்தில்எந்த வியாபாரத்தையும் தொடர்ந்து இலாபகரமாக நடத்துவது என்பது மிகக் கடினமான ஒன்றாக உள்ளது. வாடிக்கையாளர்களை சரியான விதத்தில் திருப்திபடுத்தாத எந்த ஒரு வியாபாரமும் அதிக காலம் நீடிப்பதில்லை.

சேவையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறமுதலில் மற்றவர்களிடம்நல்லமுறையில் பணிவாக நடக்கக்கூடியவராக இருக்க வேண்டும்அனைவரிடமும் நல்ல முறையில் பணிவாக நடந்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. போட்டிகள் நிறைந்த உலகச் சந்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதத்தில் சிறந்த வாடிக்கையாளர் சேவையாளராக மாற என்னென்ன யுக்திகளைக் கையாள வேண்டும் என்பதை பார்ப்போம்.

கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை பயனுள்ள விதத்தில் செலவழிப்பதற்கு நம் ஸ்தாபனத்திற்கு வந்துள்ளார்கள் என்ற நல்ல எண்ணத்துடன் வாடிக்கையாளர்களை பார்க்கவேண்டும். நாம் எவ்வாறு ஒரு பொருளை வாங்கும் முன் பலமுறை சிந்தித்து அது பயனுள்ளதா அல்லது பயனற்றதா என்று பார்த்த பிறகுதான் வாங்குவோமோ,அதைப்போல்தான் நம் வாடிக்கையாளர்களும். எனவேஅவர்களின் தேவையை சரியாக புரிந்து அவர்களிடம் நல்லமுறையில் நடந்துக் கொள்ளவேண்டும். இவ்வாறுவாடிக்கையாளர்களிடம் நல்லெண்ணம் கொண்டு நடப்பதால் அவர்களை எளிதில்கவர்ந்துவிடலாம்.

முகபாவனையும்கண்கள் தொடர்பும் வாடிக்கையாளர் சர்வீஸில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்புகள் கடைசிவரை நிலவ முதல் சந்திப்பு மிக முக்கியமானது. இந்த முதல் சந்திப்பின் முதல் சில வினாடிகளே 55%கவர்தலுக்கு காரணமாகிறது. இந்த 55% எதைப் பொறுத்தது என்றால் முகபாவனையும்,கண்களின் தொடர்பும்சொல்லுக்கேற்ற உடலசைவும் உங்களின் ஆடையுமாகும். மீதமுள்ள45% கவர்தல் உங்களின் பேச்சாகும்அதிலும் 38% உங்கள் குரலின் ஒலியேநிர்ணயித்துவிடுகிறது.

எந்த ஒரு கஸ்டமரும் முதல் சில வினாடிகளில் உங்களிடம் கவரப்பட்டுவிட்டால்மற்ற வியாபாரப் பேச்சுக்கள் மிக எளிதாக அமைந்துவிடும்அதனால் எப்பொழுதும் புன்னகை பூத்த முகமாக அவர்களின் கண்களை பார்த்தவாறு அவர்களை வரவேற்றுப் பேசவும். (கண்களை பார்த்தவாறு என்றால் அவர்களின் முகத்தை உற்று முறைத்தவாறு அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

வாடிக்கையாளர்களின் பெயரை தெரிந்துக் கொள்ளுங்கள்

சில வினாடி சந்திப்புகளில் அவர்களின் பெயரை தெரிந்துக் கொள்ளுங்கள்இதனால்வாடிக்கையாளர்களுக்கு அவர்களை அறியாமலேயே ஓர் ஈர்ப்பு-தொடர்பு ஏற்படுகிறது. அதே போன்று உரையாடலின் தொடக்கத்திலேயே உங்கள் பெயரையும் தெரியப்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்களின் பெயர்களை மட்டுமில்லாமல் அவர்களின் அடுத்தடுத்த சந்திப்பின்போது மற்ற அவசியமான-தேவையான விபரங்களை அறிந்து அதற்கேற்றவாறு அவர்களை திருப்பதிபடுத்தலாம்.

உங்கள் வாடிக்கையாளரை அவர்கள் எதிர்பார்த்து வந்ததைவிட சிறப்பான முறையில்நடத்துவதன் மூலம் நிரந்தர வாடிக்கையாளராக்கலாம். ஒவ்வொரு மனிதனும் மற்றவரிடம்ஒரு கட்டத்தில் மரியாதையும்நன்மதிப்பையும் எதிர்பார்க்கிறார்கள்வாடிக்கையாளராக வருபவரும் அதே உணர்ச்சியைப் பெற்றவர்தான்அவ்வாறு வரும் வாடிக்கையாளரை சாதாரண முறையில் நடத்துவதைவிட உங்கள் முதலாளியுடன் எப்படி நடந்துக் கொள்வீர்களோ அல்லது ஓர் நாட்டின் அதிபரிடம் எப்படி நடந்துக் கொள்வீர்களோஅவ்வாறு நல்ல மரியாதையுடனும் மதிப்புடனும் நடந்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் தற்பொழுது எந்த வியாபாரமும் செய்யாவிட்டாலும்பிற்காலத்தில் அவர்கள் உங்கள்வாடிக்கையாளராக மாறலாம் அல்லது மற்றவரிடம் உங்கள் வியாபாரத்தைவிளம்பரப்படுத்தலாம்.

வாடிக்கையாளரிடம் அவர்கள் எதிர்பார்த்து வந்ததைவிட சில அதிகமான சலுகைகளுடன் கவனிக்கவும்இதனால் அவர்களுக்கு உங்களிடம் ஏற்படுத்திக் கொண்ட வியாபாரத்தின் மதிப்பு கூடுகிறது இதனை ஆங்கிலத்தில் VALUE ADDED SERVICE என்று சொல்லப்படுகிறது.

வாடிக்கையாளரிடம் அன்பு காட்டக் கற்றுக் கொள்ளுங்கள். கிரேக்க மொழியில் அன்புச் செலுத்துவதை மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது அதாவது "அகேப்", "பிலியோ", "இராஸ்"என்பதாகும். இதில் "அகேப்தாய்-பிள்ளை பாசத்தை குறிக்கிறது. "இராஸ்கணவன்-மனைவியின் காதலை குறிக்கிறது. "பிலியோசகோதரப் பாசத்தை குறிக்கிறது. உங்கள் வாடிக்கையாளரிடம் "பிலியோ"-வுடன் நடந்துக் கொள்ளுங்கள் அதாவது அவர்களிடம் சகோதரதனமான அன்பை வெளிப்படுத்துங்கள்அவர்கள் புதியவர்கள் என்று பாராமல்,வெட்கப்படாமல் பழகுங்கள். நாம் அடுத்தவரிடம் அன்புடனும்உதவிகரமாகவும் நடக்கும்பொழுது ஓர் இனம் தெரியாக ஆனந்தம் மனதில் உண்டாகிறது.

உங்கள் தொழிலில் வெற்றிப் பெற முக்கிய பண்புகள் தேவைப்படுகிறது.

தொழிலில் நேர்மையாகவும்பொறுமையாளராகவும்கடின உழைப்பை கொண்டவராகவும் மாறிக் கொள்ளுங்கள்வெற்றி உங்களை தேடிவரும். உங்கள் கம்பெனியிலோதொழிலிலோ நீங்கள் ஓர் உதாரணப் புருஷராகவோ அல்லது சிறந்த ஊழியராகவோ மாற முயற்சி மேற்கொள்ளுங்கள். அடுத்தவர் சொல்லிச் செய்பவராக இல்லாமல் தானாக முன்வந்து உங்களுக்கு தரப்பட்ட வேலையை திறம்பட செய்யுங்கள். வருமான உயர்வை நீங்கள் யாரிடமும் கேட்கத் தேவையில்லைஅது உங்களை தேடிவரும். நீங்கள் நல்ல எண்ணங்களுடன் வியாபாரத்தை முன்னேற்றுவதற்காகவும்நேர்மையாகவும்,பொறுமையாகவும்கடின உழைப்பவராகவும் இருந்து சிறந்த வாடிக்கையாளர் சர்வீஸராகதிகழ்வதுடன் உங்கள் வருமானமும் வியாபாரமும் முன்னேறும்.

வாடிக்கையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது பின்வரும்செயல்களில் கவனம் செலுத்தவும்:

• 
குறைந்தது மூன்று ரிங்கிங் ஒலிக்குள் தொலைபேசியை எடுத்துவிடுங்கள்.
• வாடிக்கையாளருக்கு முகமன்/வாழ்த்து தெரிவித்துவிட்டு உங்கள் ஸ்தாபனத்தின் பெயரையும்உங்கள் பெயரையும் தெரிவியுங்கள்.
• தெளிவாகவும்நிதானமாகவும்பொறுமையாகவும் பேசுங்கள்.
• 
வாடிக்கையாளருடன் பேசும்பொழுது மன உறுதியுடனும்உற்சாகத்துடனும்,சந்தோஷத்துடனும் பேசுங்கள்.
• 
வாடிக்கையாளர் குறிப்பிடும் தகவல்களை உடனே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
• 
கஸ்டமரின் தேவைகளை அறிய தக்க கேள்விகளை கேட்டுக் கொள்ளவும்.
• 
வாடிக்கையாளர் தெரிவித்த குறிப்புகளை சரிபார்க்கும் விதமாக நீங்கள் ஒரு முறை மீண்டும் அவர்களிடம் கூறவும்.
• 
தொலைப்பேசியில் வாடிக்கையாளருடன் பேசும்பொழுது ஏதேனும் குடித்துக் கொண்டோ,சாப்பிட்டுக் கொண்டோ பேசாதீர்கள்.
• 
வாடிக்கையாளருடன் தொலைபேசியில் பேசும்பொழுது அடுத்த தொலைப்பேசி அழைப்புவந்தாலோ அல்லது வேறு அவசர வேலை இருந்தாலோ வாடிக்கையாளரிடம் அனுமதி கேட்டபின் உரையாடலை சிறிது நேரம் நிறுத்தலாம்.
• 
உரையாடலின் முடிவில் நன்றி சொல்லுங்கள்.
• 
வாடிக்கையாளர் தொலைபேசி தொடர்பை துண்டிக்கும்முன் நீங்கள் துண்டித்துவிடாதீர்கள்.
• 
வாடிக்கையாளரிடம் நேரிலோதொலைபேசியிலோ பேசும்பொழுது சரியான வார்த்தைகோர்வையோடு பேசுங்கள். உங்கள் குரலின் தொனி 38% பங்கினை வகிக்கிறது என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்சரியானநேர்த்தியான சூழ்நிலைக்கேற்ற வார்த்தைகளை பயன்படுத்தவும். வார்த்தைகளுக்கேற்ற உச்சரிப்பும்அழுத்தமும் மிக முக்கியமானது.

உதாரணமாக உங்கள் வாடிக்கையாளருடன் சோம்பலானசரத்தில்லாத வார்த்தைகளைஉபயோகிக்கும்பொழுது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படலாம். எனவேவார்த்தைகளைபயன்படுத்தும்பொழுது பார்த்து பயன்படுத்துங்கள். இது பயிற்சி மற்றும் அனுபவத்தில் மூலம் வந்துவிடும்.

• 
வாடிக்கையாளரை திருப்திபடுத்தி வெற்றிகரமான வியாபாரம் நடத்த உங்கள்ஸ்தாபனத்தின் அனைத்து சகதொழிலாளியின் பங்கும் கூட்டு முயற்சியும் மிகமுக்கியமாகும். ஒவ்வொரு தொழிலாளியும் தத்தம் பணிகளை கடமையுடனும்,ஒற்றுமையுடனும் செய்யும்பொழுது வியாபார வெற்றி எளிதாகிறது. தொழிலில் வெற்றிபெற சகதொழிலாளர்களுடன் ஒற்றுமையாகவும்நேர்மையாகவும்நல்லவிதமாகவும் நடந்துக் கொள்ளுங்கள்.

அதிருப்தியடைந்த வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது எப்படி?

வாடிக்கையாளருக்கு குறை அல்லது பிரச்சினை ஏற்பட்டு உங்களிடம் கோபமாக வரும்பொழுது அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பார்ப்போம். முதலில் இவ்வாறு வரும் குற்றச்சாட்டுக்கள் உங்களையோஉங்கள் ஸ்தாபனத்தையோ குறைகூறும்குற்றச்சாட்டு என்று எண்ணாமல் அவை ஒருவிதத்தில் மேன்மைப்படுத்த வந்ததாகஎண்ணுங்கள். உங்களிடம் தவறு வெளிப்பட்டிருந்தால் ஸ்தாபனத்தின் முன்னேற்றத்திற்காக திருத்திக் கொள்ளலாம்அது மட்டுமில்லாமல் அப்படி கோபப்பட்டு வரும் வாடிக்கையாளரை தவறாக எண்ணிவிடவும் கூடாதுஅப்படி எண்ணிவிட்டால் அவரிடம் மேற்கொண்டு திருப்தி அளிக்கும் விதத்தில் கையாளுவதில் மிகவும் கடினமாகிவிடும்.

வாடிக்கையாளருடைய கோப-தாபங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளுங்கள் எந்ததருணத்திலும் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டுவிடாதீர்கள் அவர்களின் பிரச்சினையை முழுமையாக பொறுமையுடன் கேளுங்கள். என்ன பிரச்சினை என்று சரிவர தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப கேள்விகளை கேளுங்கள். அந்த பிரச்சினை சரிசெய்யும் விதமாக ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளை வாடிக்கையாளரிடம் முன் வையுங்கள். அவர்களிடம் பேச்சை துவங்கும்முன் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக மன்னிப்பு கேளுங்கள்.

இதனால் அவர்கள் சற்று மென்மையும் சாந்தமும் அடைய வாய்ப்புண்டு. அதோடு உங்களுக்கும் அவர்களை மேற்கொண்டு கையாளுவதில் எளிதாகிவிடுகிறது. இச்சந்தர்ப்பங்களில் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் மிக கவனம் தேவை. இவ்வாறாக கோபத்துடன் வந்த வாடிக்கையாளரிடம் உணர்ச்சிவசப்படாமல் சரியான முறையில் கையாண்டால் அவர்களை நீங்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றிவிடலாம்.

Yours Happily 
Dr.Star Anand Ram 
www.v4all.org 
cell- 9790044225