Showing posts with label Sales Trainer. Show all posts
Showing posts with label Sales Trainer. Show all posts

Friday, May 20, 2016

தமிழ்க்கடவுள் தோன்றிய நாள்.

தமிழ்க்கடவுள் தோன்றிய நாள்.

இன்று வைகாசி விசாகம் . தமிழ்க்கடவுள் முருகப் பெருமான் தோன்றிய நாள்.

பௌர்ணமியும் கூடிவரும் அன்றைய தினம் எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், காவடி என்று கோலாகலமாகக் கொண்டாடப்படும்.  

"அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்
ப்ரம்மமாய் நின்ற ஜோதிப்பிழம் பதுவோர் மேனியாகி
கருணைகூர் முகங்கள் ஆறும் கரமது பன்னிரண்டும் கொண்டே 
ஒருதிரு முருகன் அங்கு உதித்தனன் உலகம் உய்ய.'

கச்சியப்ப சிவாச்சாரியார்

வியாசர் தனது ஸ்காந்த புராணத்தின் ஆரம்பத்திலேயே சம்பவ காண்டத்தில் முருகப்பெருமானின் 16 பெயர்களைக் கூறுகிறார்.

ஞானசக்த்யாத்மா- ஞானவேலை உடையவன்; ஞானஸ்வரூபன்.

ஸ்கந்தன்- ஒன்று சேர்ந்தவன்; ஆதாரமானவன்; எதிரிகளை அழிப்பவன்.

அக்னிபூர்- நெருப்புப் பிழம்பு.

பாஹுலேயன்- வீரம் மிகுந்த கைகளை உடையவன்.

காங்கேயன்- கங்கையின் புதல்வன்.

சரவணோத்பவன்- சரவணப் பொய்கையில் உதித்தவன்.

கார்த்திகேயன்- கார்த்திகைப் பெண்களால் பாலூட்டப்பட்டவன்.

குமாரன்- குழந்தையாயிருப்பவன்.

ஷண்முகன்- ஆறு முகங்களை உடையவன்.

குக்குடத்வஜன்- சேவல் கொடியோன்.

சக்திதரன்- சக்திவேலை ஏந்தியவன்.

குஹன்- சித்தக் குகையில் இருப்பவன்.

பிரம்மச்சாரி- பிரம்மத்தில் லயிப்பவன்; சுப்பிரமணியன்.

ஷாண்மாதூரன்- ஆறு மாதர்களைத் தாயாகப் பெற்றவன்.

க்ரௌஞ்சபித்- கிரௌஞ்ச மலையை அழித்தவன்.

சிகிவாகனன்- மயில்வாகனன்.

மேற்கண்ட நாமங்களைத் துதிப்பவர்க்கு தாமதமின்றித் திருமணம் நடைபெறும்; செல்லும் வழியில் தடையிருக்காது; எக்காலத்திலும் வெற்றி கிட்டும்; கவி புனைதல், சாஸ்திர ஞானம், நுணுக்க விஞ்ஞான அறிவு பெருகும்; பிள்ளைப் பேறும் செல்வச் சேர்க்கையும் சிறப்பாக விளங்கும் என்று கூறுகிறார் வியாசர்.

இதே சம்பவ காண்டம் 25-ஆவது அத்தி யாயத்தில் சிவ- பார்வதி உரையாடலாகவும் முருகன் பெருமை பேசப்படுகிறது.

"சரவணபவ' என்னும் சடாட்சரத்தில் "வ' இருமுறை வருவதால் "சரஹணபவ' என்று உச்சரிக்கவேண்டும் என்பர்.

ச- லட்சுமி கடாட்சம்.

ர- சரஸ்வதி கடாட்சம்.

வ (ஹ)- போகம், மோட்சம்.

ண- சத்ரு ஜெயம்.

ப- மிருத்யு ஜெயம்.

வ- நோயற்ற வாழ்வு.

எனவே நாம் வைகாசி விசாகப் புனித நாளில், முருகனது சிறந்த நாமங்களை நினைத்து, சச்சிதானந்தப் பெருங்கடலில் ஆழ்ந்து மகிழ்வோம்;

Urs
JC. Star Anand ram 
Money attraction coach 

Thursday, August 7, 2014

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-



மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-
01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

Tuesday, July 22, 2014

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவது எப்படி?

வாடிக்கையாளர்களை அதிகப்படுத்துவது எப்படி?



இன்றைய நவீன காலத்தில்எந்த வியாபாரத்தையும் தொடர்ந்து இலாபகரமாக நடத்துவது என்பது மிகக் கடினமான ஒன்றாக உள்ளது. வாடிக்கையாளர்களை சரியான விதத்தில் திருப்திபடுத்தாத எந்த ஒரு வியாபாரமும் அதிக காலம் நீடிப்பதில்லை.

சேவையில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறமுதலில் மற்றவர்களிடம்நல்லமுறையில் பணிவாக நடக்கக்கூடியவராக இருக்க வேண்டும்அனைவரிடமும் நல்ல முறையில் பணிவாக நடந்துக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. போட்டிகள் நிறைந்த உலகச் சந்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதத்தில் சிறந்த வாடிக்கையாளர் சேவையாளராக மாற என்னென்ன யுக்திகளைக் கையாள வேண்டும் என்பதை பார்ப்போம்.

கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை பயனுள்ள விதத்தில் செலவழிப்பதற்கு நம் ஸ்தாபனத்திற்கு வந்துள்ளார்கள் என்ற நல்ல எண்ணத்துடன் வாடிக்கையாளர்களை பார்க்கவேண்டும். நாம் எவ்வாறு ஒரு பொருளை வாங்கும் முன் பலமுறை சிந்தித்து அது பயனுள்ளதா அல்லது பயனற்றதா என்று பார்த்த பிறகுதான் வாங்குவோமோ,அதைப்போல்தான் நம் வாடிக்கையாளர்களும். எனவேஅவர்களின் தேவையை சரியாக புரிந்து அவர்களிடம் நல்லமுறையில் நடந்துக் கொள்ளவேண்டும். இவ்வாறுவாடிக்கையாளர்களிடம் நல்லெண்ணம் கொண்டு நடப்பதால் அவர்களை எளிதில்கவர்ந்துவிடலாம்.

முகபாவனையும்கண்கள் தொடர்பும் வாடிக்கையாளர் சர்வீஸில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கும் நமக்கும் உள்ள தொடர்புகள் கடைசிவரை நிலவ முதல் சந்திப்பு மிக முக்கியமானது. இந்த முதல் சந்திப்பின் முதல் சில வினாடிகளே 55%கவர்தலுக்கு காரணமாகிறது. இந்த 55% எதைப் பொறுத்தது என்றால் முகபாவனையும்,கண்களின் தொடர்பும்சொல்லுக்கேற்ற உடலசைவும் உங்களின் ஆடையுமாகும். மீதமுள்ள45% கவர்தல் உங்களின் பேச்சாகும்அதிலும் 38% உங்கள் குரலின் ஒலியேநிர்ணயித்துவிடுகிறது.

எந்த ஒரு கஸ்டமரும் முதல் சில வினாடிகளில் உங்களிடம் கவரப்பட்டுவிட்டால்மற்ற வியாபாரப் பேச்சுக்கள் மிக எளிதாக அமைந்துவிடும்அதனால் எப்பொழுதும் புன்னகை பூத்த முகமாக அவர்களின் கண்களை பார்த்தவாறு அவர்களை வரவேற்றுப் பேசவும். (கண்களை பார்த்தவாறு என்றால் அவர்களின் முகத்தை உற்று முறைத்தவாறு அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.)

வாடிக்கையாளர்களின் பெயரை தெரிந்துக் கொள்ளுங்கள்

சில வினாடி சந்திப்புகளில் அவர்களின் பெயரை தெரிந்துக் கொள்ளுங்கள்இதனால்வாடிக்கையாளர்களுக்கு அவர்களை அறியாமலேயே ஓர் ஈர்ப்பு-தொடர்பு ஏற்படுகிறது. அதே போன்று உரையாடலின் தொடக்கத்திலேயே உங்கள் பெயரையும் தெரியப்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்களின் பெயர்களை மட்டுமில்லாமல் அவர்களின் அடுத்தடுத்த சந்திப்பின்போது மற்ற அவசியமான-தேவையான விபரங்களை அறிந்து அதற்கேற்றவாறு அவர்களை திருப்பதிபடுத்தலாம்.

உங்கள் வாடிக்கையாளரை அவர்கள் எதிர்பார்த்து வந்ததைவிட சிறப்பான முறையில்நடத்துவதன் மூலம் நிரந்தர வாடிக்கையாளராக்கலாம். ஒவ்வொரு மனிதனும் மற்றவரிடம்ஒரு கட்டத்தில் மரியாதையும்நன்மதிப்பையும் எதிர்பார்க்கிறார்கள்வாடிக்கையாளராக வருபவரும் அதே உணர்ச்சியைப் பெற்றவர்தான்அவ்வாறு வரும் வாடிக்கையாளரை சாதாரண முறையில் நடத்துவதைவிட உங்கள் முதலாளியுடன் எப்படி நடந்துக் கொள்வீர்களோ அல்லது ஓர் நாட்டின் அதிபரிடம் எப்படி நடந்துக் கொள்வீர்களோஅவ்வாறு நல்ல மரியாதையுடனும் மதிப்புடனும் நடந்துக் கொள்ளுங்கள். ஒருவேளை அவர்கள் தற்பொழுது எந்த வியாபாரமும் செய்யாவிட்டாலும்பிற்காலத்தில் அவர்கள் உங்கள்வாடிக்கையாளராக மாறலாம் அல்லது மற்றவரிடம் உங்கள் வியாபாரத்தைவிளம்பரப்படுத்தலாம்.

வாடிக்கையாளரிடம் அவர்கள் எதிர்பார்த்து வந்ததைவிட சில அதிகமான சலுகைகளுடன் கவனிக்கவும்இதனால் அவர்களுக்கு உங்களிடம் ஏற்படுத்திக் கொண்ட வியாபாரத்தின் மதிப்பு கூடுகிறது இதனை ஆங்கிலத்தில் VALUE ADDED SERVICE என்று சொல்லப்படுகிறது.

வாடிக்கையாளரிடம் அன்பு காட்டக் கற்றுக் கொள்ளுங்கள். கிரேக்க மொழியில் அன்புச் செலுத்துவதை மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது அதாவது "அகேப்", "பிலியோ", "இராஸ்"என்பதாகும். இதில் "அகேப்தாய்-பிள்ளை பாசத்தை குறிக்கிறது. "இராஸ்கணவன்-மனைவியின் காதலை குறிக்கிறது. "பிலியோசகோதரப் பாசத்தை குறிக்கிறது. உங்கள் வாடிக்கையாளரிடம் "பிலியோ"-வுடன் நடந்துக் கொள்ளுங்கள் அதாவது அவர்களிடம் சகோதரதனமான அன்பை வெளிப்படுத்துங்கள்அவர்கள் புதியவர்கள் என்று பாராமல்,வெட்கப்படாமல் பழகுங்கள். நாம் அடுத்தவரிடம் அன்புடனும்உதவிகரமாகவும் நடக்கும்பொழுது ஓர் இனம் தெரியாக ஆனந்தம் மனதில் உண்டாகிறது.

உங்கள் தொழிலில் வெற்றிப் பெற முக்கிய பண்புகள் தேவைப்படுகிறது.

தொழிலில் நேர்மையாகவும்பொறுமையாளராகவும்கடின உழைப்பை கொண்டவராகவும் மாறிக் கொள்ளுங்கள்வெற்றி உங்களை தேடிவரும். உங்கள் கம்பெனியிலோதொழிலிலோ நீங்கள் ஓர் உதாரணப் புருஷராகவோ அல்லது சிறந்த ஊழியராகவோ மாற முயற்சி மேற்கொள்ளுங்கள். அடுத்தவர் சொல்லிச் செய்பவராக இல்லாமல் தானாக முன்வந்து உங்களுக்கு தரப்பட்ட வேலையை திறம்பட செய்யுங்கள். வருமான உயர்வை நீங்கள் யாரிடமும் கேட்கத் தேவையில்லைஅது உங்களை தேடிவரும். நீங்கள் நல்ல எண்ணங்களுடன் வியாபாரத்தை முன்னேற்றுவதற்காகவும்நேர்மையாகவும்,பொறுமையாகவும்கடின உழைப்பவராகவும் இருந்து சிறந்த வாடிக்கையாளர் சர்வீஸராகதிகழ்வதுடன் உங்கள் வருமானமும் வியாபாரமும் முன்னேறும்.

வாடிக்கையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது பின்வரும்செயல்களில் கவனம் செலுத்தவும்:

• 
குறைந்தது மூன்று ரிங்கிங் ஒலிக்குள் தொலைபேசியை எடுத்துவிடுங்கள்.
• வாடிக்கையாளருக்கு முகமன்/வாழ்த்து தெரிவித்துவிட்டு உங்கள் ஸ்தாபனத்தின் பெயரையும்உங்கள் பெயரையும் தெரிவியுங்கள்.
• தெளிவாகவும்நிதானமாகவும்பொறுமையாகவும் பேசுங்கள்.
• 
வாடிக்கையாளருடன் பேசும்பொழுது மன உறுதியுடனும்உற்சாகத்துடனும்,சந்தோஷத்துடனும் பேசுங்கள்.
• 
வாடிக்கையாளர் குறிப்பிடும் தகவல்களை உடனே குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
• 
கஸ்டமரின் தேவைகளை அறிய தக்க கேள்விகளை கேட்டுக் கொள்ளவும்.
• 
வாடிக்கையாளர் தெரிவித்த குறிப்புகளை சரிபார்க்கும் விதமாக நீங்கள் ஒரு முறை மீண்டும் அவர்களிடம் கூறவும்.
• 
தொலைப்பேசியில் வாடிக்கையாளருடன் பேசும்பொழுது ஏதேனும் குடித்துக் கொண்டோ,சாப்பிட்டுக் கொண்டோ பேசாதீர்கள்.
• 
வாடிக்கையாளருடன் தொலைபேசியில் பேசும்பொழுது அடுத்த தொலைப்பேசி அழைப்புவந்தாலோ அல்லது வேறு அவசர வேலை இருந்தாலோ வாடிக்கையாளரிடம் அனுமதி கேட்டபின் உரையாடலை சிறிது நேரம் நிறுத்தலாம்.
• 
உரையாடலின் முடிவில் நன்றி சொல்லுங்கள்.
• 
வாடிக்கையாளர் தொலைபேசி தொடர்பை துண்டிக்கும்முன் நீங்கள் துண்டித்துவிடாதீர்கள்.
• 
வாடிக்கையாளரிடம் நேரிலோதொலைபேசியிலோ பேசும்பொழுது சரியான வார்த்தைகோர்வையோடு பேசுங்கள். உங்கள் குரலின் தொனி 38% பங்கினை வகிக்கிறது என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்சரியானநேர்த்தியான சூழ்நிலைக்கேற்ற வார்த்தைகளை பயன்படுத்தவும். வார்த்தைகளுக்கேற்ற உச்சரிப்பும்அழுத்தமும் மிக முக்கியமானது.

உதாரணமாக உங்கள் வாடிக்கையாளருடன் சோம்பலானசரத்தில்லாத வார்த்தைகளைஉபயோகிக்கும்பொழுது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படலாம். எனவேவார்த்தைகளைபயன்படுத்தும்பொழுது பார்த்து பயன்படுத்துங்கள். இது பயிற்சி மற்றும் அனுபவத்தில் மூலம் வந்துவிடும்.

• 
வாடிக்கையாளரை திருப்திபடுத்தி வெற்றிகரமான வியாபாரம் நடத்த உங்கள்ஸ்தாபனத்தின் அனைத்து சகதொழிலாளியின் பங்கும் கூட்டு முயற்சியும் மிகமுக்கியமாகும். ஒவ்வொரு தொழிலாளியும் தத்தம் பணிகளை கடமையுடனும்,ஒற்றுமையுடனும் செய்யும்பொழுது வியாபார வெற்றி எளிதாகிறது. தொழிலில் வெற்றிபெற சகதொழிலாளர்களுடன் ஒற்றுமையாகவும்நேர்மையாகவும்நல்லவிதமாகவும் நடந்துக் கொள்ளுங்கள்.

அதிருப்தியடைந்த வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது எப்படி?

வாடிக்கையாளருக்கு குறை அல்லது பிரச்சினை ஏற்பட்டு உங்களிடம் கோபமாக வரும்பொழுது அவர்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதைப் பார்ப்போம். முதலில் இவ்வாறு வரும் குற்றச்சாட்டுக்கள் உங்களையோஉங்கள் ஸ்தாபனத்தையோ குறைகூறும்குற்றச்சாட்டு என்று எண்ணாமல் அவை ஒருவிதத்தில் மேன்மைப்படுத்த வந்ததாகஎண்ணுங்கள். உங்களிடம் தவறு வெளிப்பட்டிருந்தால் ஸ்தாபனத்தின் முன்னேற்றத்திற்காக திருத்திக் கொள்ளலாம்அது மட்டுமில்லாமல் அப்படி கோபப்பட்டு வரும் வாடிக்கையாளரை தவறாக எண்ணிவிடவும் கூடாதுஅப்படி எண்ணிவிட்டால் அவரிடம் மேற்கொண்டு திருப்தி அளிக்கும் விதத்தில் கையாளுவதில் மிகவும் கடினமாகிவிடும்.

வாடிக்கையாளருடைய கோப-தாபங்களை பொறுமையுடன் எதிர்கொள்ளுங்கள் எந்ததருணத்திலும் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டுவிடாதீர்கள் அவர்களின் பிரச்சினையை முழுமையாக பொறுமையுடன் கேளுங்கள். என்ன பிரச்சினை என்று சரிவர தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப கேள்விகளை கேளுங்கள். அந்த பிரச்சினை சரிசெய்யும் விதமாக ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளை வாடிக்கையாளரிடம் முன் வையுங்கள். அவர்களிடம் பேச்சை துவங்கும்முன் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக மன்னிப்பு கேளுங்கள்.

இதனால் அவர்கள் சற்று மென்மையும் சாந்தமும் அடைய வாய்ப்புண்டு. அதோடு உங்களுக்கும் அவர்களை மேற்கொண்டு கையாளுவதில் எளிதாகிவிடுகிறது. இச்சந்தர்ப்பங்களில் நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் மிக கவனம் தேவை. இவ்வாறாக கோபத்துடன் வந்த வாடிக்கையாளரிடம் உணர்ச்சிவசப்படாமல் சரியான முறையில் கையாண்டால் அவர்களை நீங்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக மாற்றிவிடலாம்.

Yours Happily 
Dr.Star Anand Ram 
www.v4all.org 
cell- 9790044225 

Thursday, July 17, 2014

HAPPY SELLING - DONT SELL THE PRODUCT MAKE THEM BUY- SUPER EXAMPLE

சிறிய தூண்டில்
---------------------
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....

"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

தோல்வியே வெற்றிக்கு முதல் படி !

பெரிய பணக்காரர்தன் மகன் தன்னோட பணத்தை புது வியாபாரத்துல முயற்சி செய்யறேன்னு நஷ்டம் பண்ணிட்டானேன்னு ஏக கவலையோட குருஜியைப் பாக்க வந்தார்…! குருஜி அந்தப் பையனிடம் பேசியப் பின் பணக்காரரிடம் கேட்டார், ”நீ அந்த காலத்துல வியாபாரம் பண்ண பணம் குடுத்தாரா உங்க அப்பா?”
பணக்காரர், ”இல்ல குருஜிஎன்னோட கடும் உழைப்புல நான் சம்பாரிச்சதுநான் முதலீடு உருவாக்கினது..!

குருஜி, ”உன்னை நம்பி உன் உற்றார் நண்பர்கள் குடுத்தார்கள் அல்லவா?”

பணக்காரர், ”அப்பவும் என் உழைப்பை பல வருடங்கள் பார்த்த பின்பே..!

குருஜி, ”அன்பனே! நீ பட்ட கஷ்டத்தை உன் மகனும் படணும். அப்பதான் அனுபவம் வருமென்ற பிற்போக்கு எண்ணத்தை விடு. ரிசல்ட்டை வைத்தோ நஷ்டத்தை வைத்தோ எதையும் முடிவு செய்யாதே…! உன் தந்தை உனக்கு பணம் கொடுத்திருந்தால் முன்பே நீ வெற்றி பெற்றிருப்பாயல்லவாநீ பணம் கொடுத்ததோடு விட்டுவிட்டாய்..! அவன் வியாபாரத்தில் நீயும் போய் கவனி..! அவசியமில்லாத போது தலையிடாதே..! அவசியாமான போது கண்டிப்பாய் தலையிடு..! உன் மகன் வெல்வான்..!” பணக்காரர் தெளிந்தார்.

ரிசல்டை வச்சி முடிவு செய்யக்கூடாதுன்னு அழுத்தி  சுவாமி அமுதானந்தா சொல்றார்.

நீதி : தோல்வியே வெற்றிக்கு முதல் படி !

Tuesday, July 15, 2014

தெளிவாக பேசக்கூடியவர்கள் என்றும் வெற்றிபெற்றவர்கள் - பேசும் கலை - ஜெயிக்கலாம் வாங்க...!

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.. இது அடிக்கடி என்னுடைய பாட்டி எனக்குச் சொல்லிக்கொடுத்த மந்திர வார்த்தை..


நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை, நம் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக புரிந்தகொள்ளும்பொருட்டு வார்த்தைகளாக வெளிப்படுத்துவது என்பது ஒரு கலை. வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளாக தெளிவாக இருக்குமானால், எதிரில் இருப்பவர்கள் நம்முடைய எண்ணங்களைப் புரிந்துகொள்வார்கள்.

அதுமட்டுமா? நம்முடைய எண்ணங்களை தெளிவான வார்த்தைகளில் கூறுவதன் மூலம் கேட்பவர் மனதிலும் அந்த வார்த்தைகள் அப்படியே பதிந்துவிடும். அந்த வார்த்தைகளை சொல்லக்கூடிய தருணம், முகபாவம் ஆகியவை முக்கியம்.

நம்மைவிட பெரியவர்களிடத்தில் எப்படி பேச வேண்டும். சக தோழர்களிடம் எப்படி பேச வேண்டும். சபையோர்களிடத்தில் எப்படி பேச வேண்டும் என ஒரு வரைமுறையே, வரையறையே இருக்கிறது.

பொதுவாக நம்முடைய கருத்தை ஒருவரிடத்தில் சொல்லும்போது தெளிவாக, புன்முறுவல் கலந்து, இயல்பான முகபாவனையுடன் சொல்வோமானால் நிச்சயம் அந்த கருத்தை அவர் ஏற்றுக்கொள்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

ஏளனத்துடன், கேலியும் கிண்டலும் கலந்து நீங்கள் உண்மையையே பேசினால் கூட அதை நம்ப மறுப்பார்கள். இந்த முறையாலும் நீங்கள் மற்றவர்களைக் கவர முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், எதிரில் இருப்பவர் தன்னை அவமானப் படுத்திவிட்டதாக எண்ணிவிடும் அபாயமும் உண்டு.

கடுகடு முகத்துடன், சிடு சிடு வெனப் பேசி, ஒரு கருத்தைச் மற்றவர்களிடம் சேர்க்க நினைக்கும்போது, அந்த கருத்தால் எதிரில் இருப்பவர் மனம் பாதிப்பதோடு, சொல்லுகிற கருத்தையும் ஏற்றுக்கொள்கிற மனநிலையை நாம் இழக்க வைத்துவிடுகிறோம். இதனால் மேலும் பிரச்னைகள் கூடுமே தவிர, குறையவே குறையாது. இவ்வாறு பேசுவதால் உங்களுடைய கருத்துகளையும் பிறர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது மட்டுமல்ல.. உங்களுடைய கருத்திற்கு மதிப்பும் இருக்காது.

எனவே எளிமையாக, இனிமையாக, இயல்பாக மனதில் மகிழ்ச்சி பொங்க சொல்ல வந்த கருத்தை தெளிவாக கூறுங்கள்.

அவ்வாறு தெளிவாகவார்த்தைகளை உச்சரித்து பேசுவதால், கேட்பவர்களின் மனதில் உங்களுடைய கருத்து ஆழ பதியும். இதற்கு எடுத்துக்காட்டாக நமது ஆன்மீக சொற்பொழிவாளர் திரு. சுகி சிவம் ஐயா அவர்களைக் கூறலாம். மேடையில் அவர் பேசும்போது உச்சரிக்கும் விதம், வெளிவரும் சொற்களில் ஓசைநயம், அழுத்தம் ஆகியற்றை உன்னிப்பாக கவனித்தால் இக்கலை உங்களுக்கும் கைகூடும்.

உரையாடல் தெளிவாக அமைந்துவிட்டால், அதன் மூலம் நாம் சொல்லக்கூடிய கருத்துகள் மற்றவர்களை அடைவதோடு மட்டுமல்லமால், நல்லதொரு நட்பையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என என் பாட்டி சொன்னதிற்கான சரியான அர்த்தம் இப்போதுதான் எனக்கு புரிபட ஆரம்பித்திருக்கிறது? ஆரம்ப கால பள்ளி நாட்களில் "வாயுள்ள பிள்ளைப் பிழைக்கும் என்று சொல்கிறீர்களே... அது என்ன வாயு பாட்டி" என்று என் பாட்டியிடம் திருப்பிக் கேட்டிருக்கிறேன்.

"சுவாசத்திற்கு தேவையான வாயு ஆக்சிஜனா என்றெல்லாம் கேட்டு கேலியும் கிண்டலும் செய்திருக்கிறேன்." தற்போதுதான் அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

வாயுள்ள பிள்ளை - நன்றாக பேசி, தெளிவான வார்த்தைகளை வெளிப்படுத்தி பிறர்மனதில் பதியவைப்பது என்பது தான் இதனுடைய சரியான அர்த்தம் என்பது இப்போதுதான் என்னால் உணர முடிகிறது. புரிந்துகொள்ள முடிகிறது.

உங்களுடைய எண்ணங்களை எதிரில் இருப்பவரிடம் தெளிவான வார்த்தைகளால் வெளிப்படுத்தி, தான் சொல்ல வந்ததை சரியாக எடுத்துச்சொல்லி, கருத்தைப் பதிந்தாலே போதும். நீங்களும் ஒரு வெற்றியாளர்தான். இதுதான் பேசும் கலை.. இதுவே ஜெயிக்கும் கலை..!

அலுவலகம் ஆனாலும் சரி, பொது இடமானாலும் சரி, வியாபாரத் தொடர்பான உரையாடல் ஆனாலும் சரி.. வேறு தொடர்பு உரையாடல்களானாலும் சரி...

இவ்வாறு தெளிவாக பேசக்கூடியவர்கள் என்றும் வெற்றிபெற்றவர்களாகவே, வெற்றியை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொண்டிருப்பவர்களாகவே வலம் வருகிறார்கள்.. உங்கள் கருத்துகளை சொல்வதில் நீங்கள் எப்படி ? நீங்களும் வாயுள்ள பிள்ளைதானே...

Yours 

Dr.Star Anand Ram
www.v4all.org 

Monday, July 7, 2014

தோற்கலாம் வாங்க - சின்ன சின்ன தோல்விகள் எல்லாம் பிரமாண்ட வெற்றிகளுக்கே - அமிதாப் பச்சன்

தோற்கலாம் வாங்க - 2 

சின்ன சின்ன தோல்விகள் அமிதாப் பச்சன்



கொல்கத்தா தொடரூர்தி நிலையத்தினுள் ஒரு தொடரூர்தி நுளைகின்றது.
மனது முழுவதும் ஏக்கம் கலந்த எதிர்பார்ப்புடன் அந்த தொடரூர்தியில் இருந்து இறங்கினான் ஒரு இளைஞன்.
அடுத்த முறை ஊருக்குத்திரும்புவதற்காக இந்த நிலையத்திற்;கு வரும்போது ஒரு நிரந்தரமான வேலையில் சேர்ந்திருக்கவேண்டும் என மனதிற்குள் சபதம் எடுத்திருந்தான்.

கல்கத்தாவில் சிறு சிறு கூலித்தொழில் புரிந்த தனது நண்பர்கள் தங்கியிருந்த ஒரு சிறிய அறையிலே தங்கிக்கொண்டான் அந்; இளைஞன். ஏற்கனவே அந்த அறையில் நான்கு பேர்! இவன் ஐந்தாம் நபராக. அந்த சின்னஞ்சிறிய அறையில் ஆறு அடி மூன்று அங்குலம் உயரமுடைய இவனால் கால்களை நீட்டி முழுமையாக படுக்கக்கூட முடியவில்லை.

வேலை தேடும் படலத்தை தொடக்கினான். மூன்று மாதங்கள் ஒடியது தான் மிச்சம். நிறுவனங்களின் வெளியே நிற்கும் பாதுகாப்பு நபரை தாண்டி போவதே பெரிய பாடாக இருந்தது. எல்லா இடங்களிலும் களுத்தை பிடித்து வெளியே தள்ளாத குறைதான்.
ஏத்தனை நாள்தான் நண்பர்;களின் உழைப்பில் வயிற்றை கழுவுவது அவர்களே பெரிய கஸ்டத்தின் மத்தியில் சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பவர்கள்.
ஊருக்கே திரும்பிவிடலாம், நான் ஒரு அதிஸ்டம் கெட்டவன், இது எவ்வளவு பெரிய நகரம்! இங்கெல்லாம் நம்மளையா கவனிக்கப்போகிறார்கள்? என பெரும் கவலைகளுடன் கண்ணீர் சொரிய பல இராத்திரிகளில் அழுதிருக்கின்றான் அவன்.
இருந்தபோதிலும் இத்தனை பேருக்கு வாழ்வு கொடுத்த இந்த நகரம் எனக்கு ஒரு வேலை கொடுக்காமலா போகப்போகிறது என எண்ணி நம்பிக்கையுடன் இருந்தான்;.

ஒரு நாள் ஓல் இந்தியா ரேடியோ அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள்; தேவை! என்ற விளம்பரத்;தைப்பார்த்து உடனடியாக அதற்கு விண்ணப்பம் செய்தார்;.
இன்று வந்;துவிடுமா? நாளை வந்துவிடுமா? என்று தபால்காரர் வரும் திசையை பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டு வாரங்கள் கழித்து நேர்முகத்தேர்வுக்கான அழைப்பு வந்திருந்தது.

அன்று அந்த அறையில் உற்சாகம் பொங்கி வழிந்தது. நேர்முக அழைப்பு வந்ததற்கே நண்பர்கள் தேனீர் உபசாரம் கொடுத்து கொண்டாடினார்கள்.
அவனது நண்பர்கள் தம் நண்பன் வானொலியில் செய்தி வாசிப்பதை கற்பனை செய்து மகிழ்ந்தார்கள் 
நேர்முகத்தேர்வு, தன் முறை வருவருவதற்காக காத்திருந்தார். ஓவ்வொருவராக உள்ளே சென்று கொண்டிருந்தனர். சேய்திகளை மனதினுள்ளே வாசித்துப்பார்த்தார், பல வினோதமான விளம்பரங்களை பல வகைகளில் சொல்லிப்பார்த்துக்கொண்;டார்.
அடிக்கடி தொண்டையை செருமிக்கொண்டார்.

அமிதாப் பச்சன்…….

தனது பெயர் கூப்பிடப்படவே நம்பிக்கையுடன் உள்ளே போனார். பிரவாகம் கட்டவிழ்த்ததுபோல அங்கே நடந்த குரல்தேர்வில் கர்ஜித்தார். விதவிதமான நிகழ்சிகளை தொகுத்துக்காட்டினார். 

நல்லது வெளியில் காத்திருங்கள் முடிவை சொல்கின்றோம் என்றனர் நிலையத்தினர். காத்திருந்தார் காலையில் இருந்து இரவு ஆகியபின்னும்
தற்;செயலாக உள்ளே இருந்து வெளியே வந்த பெண் ஒருவர், ஏன் இருக்கின்றீர்கள் என வினாவினார். விடயத்தை சொன்னதும், உள்ளே சென்று மீண்டும் வந்தவர், 
உங்கள் குரல் சரியில்லை, வானொலிக்கு பொருத்தமாக இருக்காது என்றார்.
அமிதாப்பின் காதில்; அந்த வார்த்தைகள் அமிலமாகவே பாய்ந்தது.

நேரக கடற்கரை சென்று குலுங்க குலுங்க அழுதார்…….

அதன் பின்னர், நடிக்கத்தொடங்கி ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சுப்பர் ஸ்ரார் ஆனதெல்லாம் உங்களுக்கு தெரியும்.

பின்னர் அந்த சிம்மக்குரலுக்கு ஸ்ரார் ரீ.வி வழங்கிய கௌரவம், குரோர்பதியில் கலக்கியது அமிதாப்பிற்கு சொந்தமாக இன்று எத்தனை ரோடியோ சனல்கள் உள்;ளன என்பதும் உங்களுக்கு தெரியும்
அமிதாப் பச்சனின் விருப்பப்படி அந்த சின்ன அறிவிப்பாளர் வேலை கிடைத்திருந்தால் உலகத்திற்கு ஒரு பெரிய சுப்பர் ஸ்ரார் கிடைத்திருப்பாரா?

சின்ன சின்ன தோல்விகள் எல்லாம் பிரமாண்ட வெற்றிகளுக்கே.

Urs - Dr.Star Anand Ram - www.v4all.org - 9790044225