Showing posts with label parenting. Show all posts
Showing posts with label parenting. Show all posts

Monday, July 13, 2015

சித்தர் மயம்

சித்தர் மயம்
உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!


260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.
தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.
கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.
மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.
தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.
நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.
அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.
செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்.

Saturday, February 14, 2015

“எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!”

“எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” 

எழுவதும், வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே! 


பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரி னங்கள் இப்பூவுலகில் உயிர் பெற்று, உணவு, உடை, இரு ப்பிடம் போன்ற அத்தியாவசி யத் தேவைகளுக்காக அன்றாடம் போராடி வருகிறான். இவனது போராட்ட‍ங்கள் எங்கிருந்து ஆரம் பிக்கிறதென்றால், தாயின் கருவறையிலிருந்து நிலவறைக்கு வருகிறானே! அப்போது ஆரம்பிக்கும் இந்த போராட்ட‍ம் அவன் மரணப்படுக்கையில் படுக்கும்போதுதான் ஓய்ந்து போகும்.
ஒரு குழந்தை, தனது தாயின் கருவரையில் இருந்து வெளியேறியபிறகு அந்த‌ தாயின் மடியிலும், தந்தையின் மார்பிலும் படுத் துறங்கி, விளையாடி மகிழ்ந்த காலத்தி லிருந்து மெல்ல‍ மெல்ல‍ விடுபட்டு, பள்ளிப் பருவம் அடைகிறது. இந்த பள்ளிப் பருவத்தில், குழந்தை கள் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொள்ள‍ அல்ல‍து தெரிந் து கொள்ள‍ அதீத ஆர்வமாக இருப்பார்கள்.
அக்குழந்தையின் பெற்றோரோ! மாநிலத்திலேயே சிறந்த ஒரு தனியார் பள்ளியை தேர்ந்தெடுத்து, அதில் தனது குழந்தைக்கு இடம் கிடைக்க‍ தவமாய் தவமிருந்து கடன்பட்டு, அல்ல‍ல்பட்டு, ஒரு பெருந்தொகையை செலுத் தி, அக்குழந்தையை பள்ளியில் சேர்த்து விடுவர். அப்ப‍டி சேர்த்து விடப்படும் குழந்தை, விளையா ட்டிலோ, அல்ல‍து கலையிலோ, அல்ல‍து இசையிலோ ஆர்வம் கொண்டு கற்க விரும்புவர். இன் னும் சொல்ல‍ப் போனால், சிறு சிறு கண்டு பிடிப்புகளை அவர்களே சுயமாக சிந்தித்து, இளம் விஞ்ஞானிகளாக கூட இருப்ப‍ர். அத்த‍கைய குழந்தைகள் தனது திறமைகளை, முதலில் தனது பெற்றோரிடம் தான் காட்டுவர். அப்போது அவர்களது ஆர்வத்தை புரிந்து கொண்டு, அவர்களை மென்மேலும் ஊக்கு விக்க‍ வேண்டும். அதை விடுத்து, “இதை யெல்லாம் உன்னை யார் செய்ய‍ சொன்ன‍து. போன் எக்ஸாமில் நீ 80 மார்க் எடுத்த, வர்ர எக்ஸாம்ல நீ 100 எடுக்க‍ வேண்டாமா? நீ இப்ப‍டி படிக்காம கண்டதை செய்து கொண்டு இருந்தால் எப்படி மார்க் எடுப்பாய்? இதற்காகவா உன்னை ஊரிலேயே சிறந்த அந்த தனியார் பளியில் சேர்த்து, ஆயிரமாயி ரமாய் கொட்டி அழுதேன்!” என்று அவர்க ளை கடிந்து கொண்டு, அவர்களது கண்டு பிடிப்பு க்களை அல்ல‍து திறமைகளை ஏளனம் செய்வ‌தும், அவர்களை உதாசீனம் செய்வதும் எந்த விததில் நியாயம்?
குழந்தைகளை ஒரு வியாபாரப் பொருளாக, பெற்றோர்கள் பார் க்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிக்க‍ வேண்டும். கல்வி என்பது இன்றைய உலகில் அவசியமான ஒன்றுதான்! அதற் காக அந்த குழந்தையை எந்நேரமும், நீ இதைப்படி, அதைப் படி நச்சரித்துக் கொண் டே இருந்தால், அவர்களது மனதில் அந்த கல்வியின் மீது ஒருவித வெறுப்புணர்ச்சி ஏற்பட்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மையும் உருவாகி, பிற்காலத்தில் தனக்கு விருப்ப‍ம் இல்லாத துறையில் பணியாற்றிக் கொண் டு ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்கிறோம் என்ற ஒரு அலட்சியப்போக்கு ஏற்பட்டு, வாழ்க்கையில் சாதிக்க‍ வேண்டும் என்ற முனைப்பின்றியும், தனது சிறுவயதில் தனது திறமைகள் அத்த‍னையும் ஒடுக்க‍ப்பட் டுவிட்டதே! என்ற ஏக்க‍மும் அதனால் உண்டாகும் மன அழுதத்திற்கும் ஆட்பட்டு நடை பிணமாக‌ வாழ வேண்டிய நிலைக்கு தள்ள‍ப்படுவார் கள். இவ்வ‍ளவு ஏன்? சிறு வயதில் தனது திறமைகளை அங்கீகரிக்காத அவனது பெற்றோர் களான உங்கள் மீது அவன் மனதில் ஆழ பதிந்து போன ஏக்க‍ங்களும் துயரங்களும், கோவமாக வெளிப்பட்டு உங்களையே கூட அவன் வெறுக்க‍ வாய்ப்பு ஏற்படும்.
கல்வியை ஆர்வமாக எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு இதில் எந்தவிதமான சங்கடமுமில்லை. ஆனால், கல்வியை தவிர இதர பிரிவுகளில் தங்களது தனித்திறமையை காட்டும் மாணவர்களுக் கு, அவர்கள் விருப்ப பிரிவை, முத ன்மையாக கொண்டும், கல்வியை இரண்டாம் பட்சமாக ஏற்று, அவர் களது தனித்திறமையுடன் கல்வி யிலும் சிறந்து விளங்கச்செய்ய‍ லாம்.
கூடுகட்டி முட்டை இட்டு, குஞ்சு பொறிக்கும் பறவைகள் கூட, தனது குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைக்கும் வரைதான் எங்கிருந் தோ தான்கொண்டு வந்த உணவை தனது அலகால் தனது குஞ்சு களுக்கு ஊட்டிவிடும்.அந்த குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்து விட்டால், தான் உணவூட்டுவதை நிறுத்திவிட்டு, அந்த குஞ்சுப் பறவைகளை கூட்டிலிருந்து கீழே தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்குமாம். கீழே விழுந்த குஞ்சுப்பறவை யோ தான் எங்கே கீழே விழு ந்து பல அடிபட்டுவிடுமோ என்ற பயத்தில் தனது சிறகுகளை படபட விரித்து பரந்து விரிந்து கிடக்கும் வானில் பறந்து செல் லுமாம்.
ஏனோ இந்த மனிதன் மட்டும்தான்! தனது குழந்தைகள், தனக் கென ஒரு துறையை தேர்வுசெய்து அதில் முன் னேற விரும்பி தனது சிறகுகளை விரி த்து, வானில் பறக்க‍ முற்படும்போது, பெற்றோர்கள் அந்தக் குழந் தையின் சிறகுகளை ஒடித்துவிட்டு, தனது சிறுகுகளை விரி த்து அடைகாத்து வருவதுதான் வேடிக்கையி லும் விநோதம்.
குழந்தைகள், தாங்கள் முன்னேற, ஒரு துறையை தேர்ந்தெடுக் கும்போது, அந்தக்குழந்தைகளை ஊக்கு வித்து, அவர்களுடன் நட்பு பாராட்டி, அத்துறையிலேயே அவர்க ளுக்கு தகுந்த பயிற்சி கொடுத்து, ஒரு நல்ல‍ சாதனையாளனாக உருவாக‌ பெற் றோர் தங்களது முழு ஒத்துழை ப்பை வழங்க வேண்டும். அப்போது தான் குழந்தைகள், பிற்காலத்தில் தங்களது வாழ்க்கையில்  வெற்றிகள் பல குவித் து, முழு மன நிறைவுடன் சாதனை கள் பல படைப்பது திண்ண‍ம்!.
-விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி

Friday, July 11, 2014

வாங்க சார்... நாமளும் இலக்கு வைச்சு ஜெயிச்சு காட்டலாம்..! - எழுமின், விழுமின் - குறி சாரும் வரை நில்லாது செல்மின்

வாங்க சார்... நாமளும் இலக்கு வைச்சு ஜெயிச்சு காட்டலாம்..!


 எழுமின், விழுமின் - குறி சாரும் வரை நில்லாது செல்மின் , என்று வீர முழக்கமிட்ட விவேகானந்தர் பிறந்த மண்ணில் தான் நாமும் பிறந்து இருக்கிறோம். ஆனால், நமக்கும் தான் எத்தனை குளறுபடி, குழப்பங்கள்...


 அர்ஜுனன் அம்பு எய்யும்போது , தூரத்தில் இருந்த மரத்திலே உட்கார்ந்து இருந்த கிளியோட கண்ணுதான் தெரிஞ்சதாம். அது , உண்மையோ , பொய்யோ தெரியலை.. ஆனா, சொல்லி குறி வைச்சு அடிக்கிற , ஜெயிக்கிற ஆளுங்க இன்னும் நம்ம கூட இருக்கிறாங்க தானே... 


நமக்கு ஏன் அது புரியவே , இல்லை கைவசப்படவே மாட்டேங்குது.. கீழே கொடுக்கப்பட்டுள கட்டுரையை படிச்சுப் பாருங்க.. பல உண்மைகளை உங்களுக்கு அது புலப்படுத்தலாம்...    
====================================================
ஒரு கால் டாக்சியில் ஏறுகிறீர்கள். டிரைவர் "எங்கே போக வேண்டும்?" என்று கேட்கிறார். நூறு மைல் தூரத்தில் உள்ள ஒரு இடத்தைச் சொல்கிறீர்கள். அது தான் நீங்கள் போக வேண்டிய முக்கியமான இடம். அதற்கு இப்போதுள்ள தெருவிலேயே நேராகப் போக வேண்டும் என்று வைத்துக் கொள்வோம்.

கார் மூன்று மைல் போனதும் உங்களுக்கு வலதுபக்கத் தெருவில் உள்ள வேறொரு இடத்திற்குப் போனால் என்ன என்று தோன்ற டிரைவரிடம் வலதுபக்கம் காரைத் திருப்பச் சொல்கிறீர்கள். அவரும் திருப்புகிறார். அந்தத் தெருவில் அந்த இடத்திற்குப் போக இன்னும் 20 மைல் பயணம் செய்ய வேண்டும். ஐந்து மைல் போனவுடன் ஒரு திருப்பத்தில் நீங்கள் பல காலமாக போக நினைத்திருந்த ஒரு கோயில் 12 மைல் தான் என்று எழுதி இருப்பதைப் பார்க்கிறீர்கள். இத்தனை தூரம் வந்த பின் அந்தக் கோயிலிற்குப் போனால் என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது. டிரைவரை அந்தத் தெருவில் திருப்பச் சொல்கிறீர்கள். டிரைவர் அந்தத் தெருவில் காரைத் திருப்புகிறார்.

கார் ஏழு மைல் போனவுடன் தெருவில் பழுது பார்க்கும் பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள். மாற்றுப் பாதையில் போகும்படி ஒரு பலகையில் எழுதியிருக்கிறது. அப்படிப் போனால் நீங்கள் போக நினைத்த கோயிலுக்கு 25 மைல் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்று அறிந்த போது கோயிலுக்குப் போகும் எண்ணத்தைக் கை விடுகிறீர்கள். வண்டியைத் திருப்பச் சொல்கிறீர்கள். கார் வந்த வழியே திரும்புகிறது. வழியில் டீ சாப்பிட காரை நிறுத்தச் சொல்கிறீர்கள். டீக்கடையில் ஒருவர் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க இடம் ஏழு மைல் தூரத்தில் இருப்பதாகச் சொல்கிறார். இவ்வளவு தூரம் வந்து விட்டு அங்கு போகாமல் இருப்பதா என்று தோன்ற காரை அவர் சொன்ன பாதையில் விடச் சொல்கிறீர்கள்..........

இப்படி நாள் முழுவதும் பல முறை தங்கள் பயணத்தை திசை திருப்பிக் கொண்டே இருந்தால் நாள் முழுவதும் பயணம் செய்து கொண்டு இருந்தாலும் நீங்கள் போக நினைத்திருந்த அந்த முக்கியமான இடத்திற்கு நீங்கள் போய்ச் சேர முடியுமா? எத்தனையோ முக்கியமில்லாத இடங்களுக்கு நீங்கள் போய்ப் பார்க்க முடிந்தாலும் நீங்கள் எங்கு போகக் கிளம்பினீர்களோ அந்த இடத்திற்கு தூரத்திலேயே அல்லவா
நீங்கள் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.

போக வேண்டிய முக்கியமான இடத்தை விட்டு பல வழிகளில் சுற்றி மற்ற இடங்களுக்குப் போவது முட்டாள் தனம் என்று சாதாரண அறிவு படைத்தவராலும் சொல்ல முடியும். ஆனால் இந்த முட்டாள்தனத்தை நம்மில் எத்தனை பேர் நம் வாழ்க்கைப் பயணத்தில் செய்து கொண்டிருக்கிறோம்.

உண்மையில் நம் வாழ்க்கைப் பயணமும் இந்த கார் பயணம் போலத்தான். ஒரு முக்கிய காரணத்திற்காக நாம் பிறந்திருக்கிறோம். அது தான் நாம் போய்ச் சேர வேண்டிய அந்த முக்கிய இடம். பிரபஞ்சமே அந்த கார் டிரைவர். நாம் எங்கு போக வேண்டும் என்று எப்படி டிரைவர் தீர்மானிக்க மாட்டாரோ பிரபஞ்சமும் நம் இலக்குகளைத் தீர்மானிப்பதில்லை. ஆனால் நம் விருப்பப்படி நம்மை அது கொண்டு செல்லக் காத்திருக்கிறது. 
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSLfK5wg-wPdqHajebtPrfZZP4MeLyVJbKXOfdhcpy4Us56DAJR
நம் விருப்பம் தெளிவாகவும் நமக்கு உண்மையிலேயே முக்கியமாகவும் இருக்கிற வரையில் நம் நடவடிக்கைகள் அதற்கு எதிர்மாறாக இருப்பதில்லை. எண்ணத்திலும், செயலிலும் தெளிவிருக்கிற போது நமது குறிக்கோளை எட்டுவது நமக்கு எளிதாகிறது. ஆனால் நம் விருப்பங்கள் அடிக்கடி மாறிக் கொண்டு இருந்தால், ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்தால் வாழ்க்கையில் குழப்பமே அல்லவா மிஞ்சும்.

கார் பயணத்தில் மேலே குறிப்பிட்ட குழப்பங்கள் இருந்தால் பணமும் காலமும் மட்டுமே அந்த ஒரு நாள் விரயமாகும். ஆனால் அதுவே வாழ்க்கைப் பயணத்தில் குழப்பம் இருக்குமானால் வாழ்க்கையே விரயமாகிறது. இன்னொரு வாழ்க்கையும் சந்தர்ப்பமும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

எனவே நாம் ஒவ்வொருவரும் இது வரை பிரபஞ்சம் என்ற கார் டிரைவருக்கு எப்படியெல்லாம் போகக் கட்டளையிட்டு இருக்கிறோம் என்று எண்ணிப் பார்ப்பது நல்லது. நமக்கு உண்மையில் என்ன வேண்டும், எது முக்கியம் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறோமா? இல்லை முரண்பாடுகளால் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா?

எனக்கு உடல் டிரிம் ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால் நான் உடற்பயிற்சி செய்வதில் சோம்பலும், உடலுக்கு ஆகாத உணவுப் பதார்த்தங்கள் சாப்பிட ஆவலும் காட்டினால் அது மேலே குறிப்பிட்ட கார் பயணம் மாதிரி தான். முக்கியம் என்று நான் நினைப்பதாக நினைக்கும் ஒரு குறிக்கோளுக்கு எதிர்மாறாக நடவடிக்கைகள் செய்து என் குறிக்கோளுக்கு தொலைவிலேயே நான் நிற்கிறேன் என்று பொருள்.

கிரிக்கெட் சீசனில் பெரிய கிரிக்கெட் வீரராக ஆசை, சில நாட்கள் கழித்து பிரபல பாட்டுப் போட்டி ஒன்றைக் கண்டு சிறந்த பாடகனாக ஆசை, அடுத்த மாதம் இன்னொரு ஆசை என்று வேறு வேறு ஆசைகள் நம்மை ஆட்கொள்ள ஒவ்வொன்றிலும் சில காலம் பெரிய ஈடுப்பாட்டுடன் இருந்து இன்னொன்றிற்குத் தாவிக் கொண்டே இருந்தால் நாம் இதில் எதுவும் ஆகப்போவதில்லை என்பதே யதார்த்த உண்மை. ஏனென்றால் பிரபஞ்சத்திற்கு மாற்றி மாற்றி கட்டளை கொடுத்தபடி இருக்கிறோம்.

அதே போல ஒரு குறிக்கோள் மனதில் இருந்தாலும் அதற்காக எதுவும் செய்ய நாம் தயாராக இல்லாத போதும் எண்ணம் மூலமாக ஒரு கட்டளையும், செயல் மூலமாக நேர் எதிரான கட்டளையும் பிரபஞ்சத்திற்கு தந்து கொண்டு இருக்கிறோம் என்பது பொருள்.

நம்மில் எத்தனை பேர் எங்கு போக வேண்டும், என்ன ஆக வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்?
பலரும் தெளிவாக இருப்பதாக சொல்லக்கூடும். ஆனால் தெளிவு என்பது எண்ணத்தோடு ஒருங்கிணைந்த செயல். அது நம்மிடம் உள்ளதா?

மனித வாழ்க்கை ஒரு நல்ல சந்தர்ப்பம். இதை நழுவ விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் நிச்சயமில்லை. நமக்குள்ளே தெளிவான லட்சியம் இருந்தால், அதை அடைய மன உறுதியும் இருந்து நம் செயல்களும் லட்சியத்தை நோக்கியே இருக்குமானால் விளைவைப் பற்றி நாம் கவலையே பட வேண்டாம். பிரபஞ்சம் நம்மை அதை நிச்சயமாக அடையச் செய்யும்.

பிரபஞ்சம் எல்லை இல்லாத சாத்தியக் கூறுகளோடு நமக்கு உதவக் காத்திருக்கிறது. நாம் தெளிவாக அதனிடம் கட்டளையிடத் தயாரா?


பிரச்சினையே நாம் நம் 'காரை' மற்ற 'காரோடு' ஒப்பிட்டுப் பார்ப்பதே. அந்த கார் அப்படி போகிறதே, நாமும் போவோம். அந்த வழி நமக்கேற்ற வழியா என்று பார்க்காமல் செய்வது தவறு. 


Read more:www.v4all.org 

ஞாபகசக்தி,அதிகரிக்க விஸ்வநாதன் ஆனந்த் தரும் டிப்ஸ்:

ஞாபகசக்தி,அதிகரிக்க விஸ்வநாதன் ஆனந்த் தரும் டிப்ஸ்:
மனதில் எந்த விஷயம் தோன்றுகிறதோ, அதை உடனே ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பும், பரிட்சை எழுதப் போவதற்கு முன்பும் எழுதி வைத்த விஷயங்களை திரும்பத் திரும்பப் படித்து பாருங்கள்.
ஒரு பேப்பரைப் படிக்கிறோம். அதில் உள்ள செய்திகள் நம் மனதில் பதிந்துவிடுகிறது. திரும்ப அதை நினைத்துப் பார்க்கும்போது பேப்பரின் இடப்பக்கம் வலப்பக்கம், பக்க எண் உட்பட நம்மால் சொல்ல முடிகிறது. அதுபோல்தான் ஆர்வத்துடன் படித்து, உடனே குறித்து வைத்துக் கொள்வதுகூட ஆழமாய் மனதில் பதிந்துவிடும்.
கம்ப்யூட்டர் போன் மெமரியில் பதிந்து, பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் அலர்ட் சவுண்ட் வைத்துக் கொள்ளலாம்.
செஸ் விளையாடுவது குழந்தைகளுக்குப் பொழுது போக்கு மட்டுமல்ல. அவர்களது மூளையில் யோசிக்கும் திறனையும், கிரகிக்கும் திறனையும் நிச்சயம் அதிகரிக்கும்.

urs - www.v4all.org 

Friday, January 10, 2014

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள் ! ! ! !

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள் ! ! ! !

1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ,பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

23. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள் ! ! ! !

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விஷயங்கள் ! ! ! !

1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ,பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

23. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!