Showing posts with label law attraction. Show all posts
Showing posts with label law attraction. Show all posts

Saturday, June 18, 2016

ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை

ழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனத்தில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை :
* அவநம்பிக்கை
* அவசரம்
* அமைதியின்மை
அவநம்பிக்கை
அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது.
இந்த அவநம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப்பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.
மேலும், இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.
என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பார்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.
இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரமாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.
ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்புக்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).
அவசரம்
அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் "தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?" என்று தோண்டிப் பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.
ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால், நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.
அமைதியின்மை
மனத்தை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்துக்காவது மனத்தை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது.
நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.
நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனத்தை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மன சக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்.
இனி அவற்றைப் பெறும் வழிமுறைகளையும் காண்போமா?




Friday, June 17, 2016

பிரபஞ்சப் பாதையிலே....ஆழ்மனத் தொடர்பு

பிரபஞ்சப் பாதையிலே....ஆழ்மனத் தொடர்பு



நம்மில் பெரும்பாலோர், மேற்கத்திய பானியின் தாக்கத்தால் இன்று இந்நவீன உலகில் சிக்குண்டு இருக்கின்றோம். தெரிந்தோ தெரியாமலோ ஒருவகை
மனப்பாதிப்புக்கும், சில சமயம் உளைச்சலுக்கும் ஆளாகிறோம். சில சமயம் என்ன இது செக்கு மாட்டு வாழ்க்கை ? என்று நொந்துகொள்கிறோம். ஏன் ?


நமக்குப் பல கடமைகள். நம் பணி, நம் குடும்பம், நம் நண்பர்கள் வட்டம், நம் சமூகக்கடப்பாடு மற்றும் அரசியல் என்று தொடர்பு ஏற்படுத்தி
விரிவுபடுத்திக் கொண்டு இருக்கிறோம். சாதாரண பொழுது போக்குக் காரியங்களில் கூட நம் செயல்பாடும் சக்தியும் மிகுதியாகத் தேவைபடுகிறது.


ஏன் இந்நிலை ? ஏனெனில், நாம் அளவுக்கு அதிகமாக வெளிநோக்கிய விசயங்களில் மூழ்கியுள்ளோம். வெளிநோக்கிய பயணக் களைப்பை ஈடுசெய்ய உள்நோக்கியப் பயணம் (inner journey) தேவைப்படுகிறது.
உடனடி நிவாரணம் ஒன்று இருக்கிறது. நம் ஆதாரத்துடம் தொடர்பு கொண்டு உயர் உணர்வுகளின் சக்திகளைப் பெறுவதைத் தவிர வேறொன்றுமில்லை!
நம் ஒவ்வொருவரின் மனமும் மகத்தான சக்தி படைத்தது என்பதை மனோவியல் அறிஞர்கள் மற்றுமன்றி ஆன்மீக குருமார்களும் நிரூபித்து
வருகிறார்கள். 


வாழ்க்கைப் பாதையில் எல்லாமே மகிழ்ச்சி நிறைந்தவையாக இருப்பதில்லை! சில இடர்பாடுகளும் சோதனைகளும் இருக்கத்தான் செய்கிறது. பார்க்கின்ற கோணதில் அந்தந்த சமயத்தில் நம் மனநிலை எப்படி இருக்கிறதோ அவ்வாறே பிரதிபலிக்கின்றோம். 

சில சம்யங்களில் அளவுக்கு அதிகமாக வெளி விசயங்களில் சுழன்றுக் கொண்டிருப்பதால் ஆழ்மனத் தொடர்பு தடைபடுகிறது. தற்காலிகமாக பிரபஞ்சப் பேருணர்வின் தொடர்பிலிருந்து விடுபட்டுள்ளோம். ஆழ்மனதிற்கும்( subconscious mind ) பிரபஞ்ச மனதிற்கும் ( cosmic conscious mind ) உள்ள தொடர்பு, அது சம்பந்தமான அறிவு எல்லாம் நம் பள்ளிகளில் இன்னும் போதிக்கப்படவில்லை. வருங்காலங்களில் அவை முக்கியத்துவம் பெறலாம்! நமக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது.

ஆழ்மனதுடன் தொடர்பு கொள்வதற்கும் நமக்குப் பொறுமையும் நிதானமும் தேவைப்படுகிறது. உள் மன உயர் உணர்வுடன் கலக்க சிறிது காலம் நம்மையே சுய சோதனைக்கு ஆளாக்க வேண்டியுள்ளது.நமக்கும் புற சூழ்நிலையில் ஏற்படுகின்ற மாற்றஙகளையும் கூர்ந்து கவனிக்க விழிப்புணர்வும் அவசியம்.


ஆழ்மனதையும் பிரபஞ்ச அறிவையும் திறக்கும் நல்ல திறவுகொல் - தியானம் மட்டுமே! பிரார்த்தனை, தியானம், யோகம் இவையெல்லாம் பத்திரமான திறவுகோல்கள். இவற்றுடன் மனதைப்பற்றியும்,எண்ணங்களைப் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மிகுந்த பயிற்சியும்,பொறுமையும்,
ஆதரவும் தேவைப்படுகிறது. 


உண்மையிலேயே இது இயற்கையான ஒன்று. நம் சமூகத்தினர் "அர்ப்பணிப்பு"எனும் வார்த்தைக்கு செயல் வடிவம் கொடுத்தவகள். முயற்சிக்கு, வெற்றி - தோல்வி என்ற இரண்டு முடிவுகள் உண்டு. "அர்ப்பணிப்புக்கு" வெற்றி என்ற ஒரு முடிவுதான் இருக்க முடியும். அத்தகைய மனநிலை வாய்க்க, அல்லது பழக்கப்படுத்திக்கொள்ள விழைவது நன்மை பயக்கும். ஆழ்மனத் தொடர்பும், பிரபஞ்சத் தொடர்பும் கிட்ட வேண்டும் என்ற மனதைக் கடந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் காரியங்கள் ஆற்றும் போது,இயற்கை அந்தப் பிரபஞ்ச பேராற்றல் நமக்குப் பலனை வாரி வழங்கும்! அதன் பிறகு, அப்பேராற்றலோடு தொடர்ந்து பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் அவா கூடுவதை மெய்யாக உணரலாம். உங்களைச் சுற்றியிருக்கும் எல்லாமே பேசும். 

'நாம்தான் இந்தப் பிரபஞ்சம்; இப்பிரபஞ்சம்தான் நாம்' - அண்டத்திலுள்ளதே பிண்டம்; பிண்டத்திலுள்ளதே அண்டம்! என்பதைப் போல உயர் சிந்தனை-
உயர் எண்ன அலைகள் நம்மைச் சுழ்ந்திருக்கும்.


Thursday, October 23, 2014

ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர்

ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர் ஆகிய மூவரும் மது அருந்திய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.
மூவருக்கும் தலா 50 சவுக்கடிகள் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் அவர்கள் கேட்கும் ஏதாவது 2 கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
முதலில் வந்த ரஷ்யர், தனது சவுக்கடிகளை 25 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார்.
இதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது.
இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்ட வேண்டும் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது.
ஆனால் பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவர்.. பலமான காயத்துக்கு ஆளானார்.
அடுத்து சீனர்.
“எனக்கும் 50 சவுக்கடிகளை பாதியாகக் குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றார்.
ஒப்புக்கொள்ளப்பட்டது.
இரண்டாவதாக தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்டச் சொன் னார்.
அவ்வாறே செய்யப்பட்டது.
15 சவுக்கடிகளில் தலையணை கள் கிழிந்து அவரது முதுகு பிளந்தது.
அடுத்து இந்தியர்.
“எனக்கு வழங்கப்பட்ட 50 சவுக்கடிகளை 75 ஆக உயர்த் துங்கள்..!” என்றார்.
அங்கிருந்த அனைவரும் அதிர்ச் சியுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
இரண்டாவது கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டது.
“எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்” என்றார்.

urs - www.v4all.org 

Tuesday, July 15, 2014

தமிழ் பேசத் தெரிந்த ஒவ்வொருவரும் செல்வச் செழிப்போடும்,வறுமையின்றியும் கர்மவினையின்றியும் ,நிம்மதியோடும் வாழ வேண்டும்.அதற்காகவே இந்தப் பதிவு!!!

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் 




மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள்.இவர்கள் நமக்கு செல்வ வளத்தைத் தந்துகொண்டே இருப்பதால்,இவர்களின் சக்தி குறையும்.இந்த சக்திக்குறைபாட்டை சரிசெய்ய இந்த அஷ்ட லட்சுமிகளும் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.இதே தேய்பிறை அஷ்டமி நாளில் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவிலுக்குச் சென்று,ராகு காலம் முழுவதும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் காயத்ரி மந்திரம் அல்லது மூலமந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.இந்த தெய்வீக ரகசியம் கடந்த 20 நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டிருந்தது.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்குத் தந்தருளியவர் புளியங்குடி சகஸ்ரவடுகர் அவர்கள்!!!

1.நமது முன் ஜன்ம வினைகள் நமது பிறந்த ஜாதகத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.அந்த கடுமையான கர்மவினைகளே திருமணத் தாமதம்,படிப்புக்கேற்ற/திறமைக்கேற்ற/அனுபவத்திற்கேற்ற சம்பளம் கிடைக்காமை,குடும்ப ஒற்றுமையின்மை என ஏதாவது ஒரு குறையிருக்கும்.இந்தக் குறை நீங்கத்துவங்கும்.அதாவது ஒரே நேரத்தில் நமது கஷ்டங்கள் குறையும்;அப்படி குறையக் குறைய வருமானம் அதிகரிக்கும்.

2.நமக்கு வர வேண்டிய பணம் தானாகவே வரத்துவங்கும்.

3.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பித் தருமளவுக்கு நமக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

4. இதுவரையில்லாத அளவுக்கு ஒரு ஆழ்ந்த மன நிம்மதி அல்லது தொழில் வளர்ச்சி அல்லது வியாபார முன்னேற்றம் அல்லது குடும்ப ஒற்றுமை(எது நமது ஏக்கமோ அந்த ஏக்கம் தீரத்துவங்கும்) ஏற்படும்.


தமிழ்நாட்டில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கும் கோவில்களின் பட்டியல்

1.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் 10 வது கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.

2.தேவக்கோட்டை அருகில் தபசு மலையில் இருக்கிறார்.

3.காரைக்குடி அருகே இலுப்பைக்குடியில் இருக்கிறார்.

4.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜாரில் தனி கோவிலில் அருள் பாலித்துவருகிறார்.

5.சிதம்பரத்தில் இருக்கிறார்.

6.காஞ்சிபுரம் அருகே அழிபடைதாங்கி என்னும் ஊரில் இருக்கிறார்.

7.சென்னை தாம்பரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் இருக்கும் படப்பையில் ஸ்ரீஜெயதுர்கா பீடத்தில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.

தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு இந்தக் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தால்,செல்வச் செழிப்பின் உச்சத்தை அடைய முடியும்.

ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமிக்குச் சென்று வந்தாலே,அடுத்த ஒரு மாதத்திற்குள் எதிர்பாராத (நியாயமான)வருமானம் கிடைக்கிறது அல்லது நீண்டகாலக் கடன் தீர்ந்துவிடுகிறது.டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா?

பின்குறிப்பு:தமிழ் பேசத் தெரிந்த ஒவ்வொருவரும் செல்வச் செழிப்போடும்,வறுமையின்றியும் கர்மவினையின்றியும் ,நிம்மதியோடும் வாழ வேண்டும்.அதற்காகவே இந்தப் பதிவு!!!

பசியோடு தினமும் போராடுபவனுக்கு ஆன்மீகத்தைப் போதிப்பதால் என்ன பயன்?


ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ