Showing posts with label interview skills training. Show all posts
Showing posts with label interview skills training. Show all posts

Saturday, June 18, 2016

ஆழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை

ழ்மன சக்திகளை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனத்தில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை ஆழ்மன சக்திகள் கைகூட வாய்ப்பேயில்லை. அவை :
* அவநம்பிக்கை
* அவசரம்
* அமைதியின்மை
அவநம்பிக்கை
அவநம்பிக்கையிலும் இரு வகைகள் உண்டு. ஒன்று ஆழ்மன சக்திகள் இருப்பது உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகத்தால் ஏற்படுவது. மாயாஜாலக் கதைகளில் வருவது போலல்லவா இருக்கிறது, இது நிஜமாக இருக்க சாத்தியமில்லையே என்ற எண்ணத்தால் ஏற்படுவது.
இந்த அவநம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பல அற்புத சக்தியாளர்களைப் பற்றியும், அவர்களை வைத்தும், தனித்தும் செய்த ஆராய்ச்சிகள் பற்றியும் இவ்வளவு விவரமாகக் குறிப்பிடப்பட்டன. குறிப்பாக எட்கார் கேஸ், நினா குலாகினா, லியனாரோ பைப்பர் போன்றவர்கள் எல்லாம் எவ்வித பரிசோதனைக்கும் தயாராக இருந்தவர்கள் என்பதைக் கண்டோம். அமெரிக்கா, ரஷியா உட்படப் பலநாடுகளில் ஆராய்ச்சிக் கூடங்களில் பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.
மேலும், இத்தொடரில் சொல்லப்படாத எத்தனையோ ஆழ்மன சக்தியாளர்கள் எல்லாக் காலத்திலும் உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்திருக்கிறார்கள். உலகில் பல நாடுகளிலும், பல காலமாக, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத பல மனிதர்கள் சேர்ந்து கூட்டு சதி செய்திருக்கிறார்கள் என்று சொல்வது வடிகட்டிய முட்டாள்தனமாக இருக்கும்.
என்ன தான் சொன்னாலும் அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றவில்லையே என்று சிலர் சொல்லலாம். நாம் இருக்கும் பூமி சுற்றுவது போல நமக்குத் தோன்றுகிறதா? இல்லையே. பூமியில் வசிக்கும் நமக்கு பூமி சுற்றுவது சிறிதளவாவது தெரியவேண்டாமா? பூமி ஸ்திரமாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. நம் பார்வைக்கு சூரியன் அல்லவா பூமியைச் சுற்றுவதாகத் தெரிகிறது. கிழக்கிலிருந்து மேற்கில் போன சூரியன் சுற்றி வந்து மறுபடியும் கிழக்கில் அல்லவா எட்டிப்பார்க்கிறான். பள்ளிக் கூடத்திற்கே செல்லாதவன், எந்த விஞ்ஞானமும் அறியாதவன் அப்படி அடித்து அல்லவா சொல்லுவான். படித்ததை மறந்து விட்டுப் பார்த்தால் அவன் சொல்வது சரி என்றல்லவா நமக்கும் தோன்றும். எனவே புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் ஆழ்மன சக்திகள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.
இரண்டாவது வகை அவநம்பிக்கை நம் மீதே ஏற்படலாம். இதெல்லாம் பிரமாண்டமான சக்திகளாகத் தெரிகிறது. நம்மைப் போன்ற சாதாரணமான மனிதர்களுக்கு இதெல்லாம் வருமா? என்று தோன்றலாம். ஏகப்பட்ட பிரச்னைகள், பலவீனங்கள் எல்லாம் நம்மிடம் நிறைந்திருந்திருக்கிறது நமக்கல்லவா தெரியும். எத்தனையோ பலவீனங்களை அடுத்தவர் அறியாமல் நமக்குள் மறைத்து வைத்திருந்து அவற்றுடன் போராடி வரும் அவஸ்தையை நாமல்லவா அறிவோம். அப்படியிருக்கையில் ஆழ்மன சக்திகள் எல்லாம் நமக்கு கைகூடுமா என்ற அவநம்பிக்கை நமக்குள் எழலாம்.
ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். படைப்பாளியின் விசேஷ குணங்களை அவன் படைப்பில் பார்க்காமல் வேறெங்கே பார்க்க முடியும்? நம் எல்லா பிரச்னைகளும் நமது இயல்பான தெய்வாம்சத்தை மறந்து சில்லறை ஆசைகளுடனும், விஷயங்களுடனும் நம்மை இணைத்து அவற்றையே நம் அடையாளமாகக் காண்பது தான். மேல் மனக் குழப்பங்களை வைத்து எடை போடாமல் ஆழமாகச் சென்றால் தான் நம் உண்மையான சக்திகளை உணர முடியும். அடிக்கடி ஆழமாக நமக்குள் போக முடிந்தால், அந்த சக்திகளை ஒரு வினாடியாவது தரிசித்தால் நமக்கு ஒரு போதும் சந்தேகம் வராது. (இது குறித்து பல நூறு பக்கங்கள் எழுதலாம் என்றாலும் தற்போதைய தலைப்புக்கு இந்த அவநம்பிக்கை தேவையில்லை என்பது உணர்ந்தால் போதுமானது என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்).
அவசரம்
அடுத்த பெரும் தடை அவசரம். இது இன்றைய காலத்தில் மிக நியாயமானது என்று நாம் நினைக்கும் சாபக்கேடு. இயற்கையைப் பொறுத்த வரை எதிலும் எப்போதும் அவசரம் கிடையாது. அவசரப்படுத்தினால் நல்ல இயற்கையான விளைவுகள் கிடைக்காது. ஒரு விதையை விதைத்தால் அது பூமியில் இருந்து மண்ணைத் தாண்டி வெளியே ஒரு தளிராக எட்டிப் பார்க்க தேவையான கால அவகாசத்தை நாம் அதற்குத் தர வேண்டும். விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் "தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?" என்று தோண்டிப் பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் ஆழ்மன சக்தி வளர்த்தலும்.
ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால், நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.
அமைதியின்மை
மனத்தை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்துக்காவது மனத்தை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஆழ்மனதில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது.
நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் ஆழ்மன செய்திகளை அறிந்து கொள்ள முடியாது. ஆழ்மன சக்திகளை பயன்படுத்தவும் முடியும்.
நல்ல இசை, நல்ல இலக்கியம், நல்ல புத்தகங்கள், ஆன்மீகம், தியானம், இயற்கைக் காட்சிகள் போன்றவை மனத்தை ஓரளவு அமைதிப்படுத்த உதவலாம். அவரவர் தன்மைக்கு எது உதவுகிறதோ அதை உபயோகித்து மன அமைதி கொள்ளலாம். பயிற்சிகளின் போதும் சரி, ஆழ்மன சக்திகளின் போதும் சரி மனம் அமைதியாக இருப்பது மிக முக்கியம். பல ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆழ்மன சக்தி பெற்றவர்கள் கூட வெற்றிகரமான முடிவுகளைத் தரத் தவறும் தருணங்கள் அவர்கள் அமைதியிழந்த தருணங்களாக இருந்திருக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் ஆழ்மன சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்.
இனி அவற்றைப் பெறும் வழிமுறைகளையும் காண்போமா?




Friday, August 21, 2015

சிறந்த வியாபாரக் காட்சிகள் திட்டமிடல்

சிறந்த வியாபாரக் காட்சிகள் திட்டமிடல்

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.

வியாபார காட்சிகள், அரங்குகள், கூட்டங்கள் மற்றும் பிற பொருட்காட்சிகளில் வெளிக்காட்டுவது உங்களுக்கு தனிப்பட்ட விற்பனை வாய்ப்புகளை அளிக்கும், மேலும் இவற்றால் புதிய முதலீடுகள், விநியோகத்தர்கள் ஆகியவற்றை உருவாக்கவும், உங்களுக்கான போட்டியை அறிந்து கொள்ளவும், நெட்வொர்க்கிங் செய்வது போன்றவற்றால் விளம்பரம் பெற முடியும். சுருக்கமாக சொல்வதானால், பல வாரங்கள் அல்லது மாதங்கள் வீட்டிலிருந்து நீங்கள் செய்யக்கூடியவைகளை ஒரே வியாபாரக் காட்சியில் நீங்கள் செய்து முடிக்க முடியும். மேலும் அது உங்கள் பணத்தையும் சேமிக்கும் -- Center for Exhibit Industry Research –இன் ஆய்வின்படி நேரடியாக களச் செயற்பாட்டில் முதலீடு பெற செலவாவதை விட 62% குறைவாக வியாபாரக் காட்சிகளில் செலவாகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், மேலே குறிப்பிடப்பட்ட அனைத்தையும் பெறுவதற்கு நீங்கள் கவனமாக திட்டமிட வேண்டும். அதாவது சரியான வியாபாரக் காட்சியைத் தேர்ந்தெடுப்பது, தெளிவான இலக்குகளை அமைப்பது, செயல்திறமிக்க காட்சியை உருவாக்குவது மற்றும் உங்கள் இருப்பை விளம்பரப்படுத்துவது போன்றவையாகும். இவை அனைத்துமே நீங்கள் வியாபாரக் காட்சிக்கு செல்வதற்கு முன்பே செய்யப்பட வேண்டும். உங்கள் வியாபாரக் காட்சியிலிருந்து அதிகமான பயன்களைப் பெறுவது பற்றி அறிய பின்வரும் படங்களை கிளிக் செய்யவும்.
ஆயிரக்கணக்கான வியாபாரக் காட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடாத்தப்படுகின்றன, அதில் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து உங்கள் முதலீடு, நேரம் மற்றும் பணத்துக்கு சிறந்தப் பயனைப் பெறுதல் மிகவும் கடினமான ஒன்றாகும்.
உங்கள் உற்பத்திப் பொருளுக்கு அல்லது சேவைக்கு பொருந்தும் வியாபாரக் காட்சிகளைத் தெரிவு செய்ய தொடங்குங்கள். இணையத்தளத்தில், பின்வருவதில் ஒன்றைப் போன்ற வியாபாரக் காட்சி தேடல் தளங்களை முயற்சிக்கவும்:
வியாபாரக் காட்சிகளைப் பற்றி அறிவதற்கான மற்றொரு வழி, உங்களுடைய தொழிற்துறையின் வியாபாரச் சங்களாகும், ஏனெனில் பெரும்பாலான காட்சிகள், கூட்டங்கள் தொழிற்துறை குழுக்களால்தான் நடாத்தப்படுகின்றன.
சரியானதைத் தேர்ந்தெடுக்க இதோ மேலும் சில தகவல் குறிப்புகள்:

எண்களின் அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்காதீர்கள்

உங்கள் உற்பத்தி அல்லது வாடிக்கையாளர்களைச் சேர்க்காத வரை, பெரிய வியாபாரக் க்காட்சிகளுக்கு வரும் மக்கள் உங்கள் வியாபாரத்திற்கு நேர விரயமாக இருக்க வாய்ப்புண்டு. கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களை உன்னிப்பாக நோக்கி, அங்கு வரும் நபர்கள் உங்கள் வாடிக்கையாளர்களாக இருக்க முடியுமா என்பதை மதிப்பிடுங்கள். காட்சி முகாமையாளர் உங்களுக்கு இந்த தரவுகளைத் தரக்கூடும்.

உங்கள் வாடிக்கையாளர்களை உதவும்படி கோருங்கள்

உங்கள் வாடிக்கையாளர்களிடம் கேட்டு அவர்கள் எந்த வியாபாரக் காட்சிகளில் பங்கேற்கிறார்கள் என்று அறியுங்கள். ஏனெனில் அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வியாபாரக் க்காட்சிகளில் பிற வாய்ப்புடைய வாடிக்கையாளர்களும் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது. உங்கள் போட்டியாளர்களிடமும் பேசி அவர்களுக்கு எந்தெந்த வியாபாரக் காட்சிகள் அதிக பயன் தந்தது என்று அறியவும்.

அதிக நேரத்துக்கு முன்பே இவற்றை செய்து முடியுங்கள்

ஒரு வியாபாரக் காட்சியை மதிப்பிடுவதற்கான சிறந்த வழி, நேரடியாக சென்று பார்ப்பதுதான். நீங்கள் பதிவு செய்வதற்கு முன்பு வியாபாரக் காட்சிக்கு ஒரு பார்வையாளாராக செல்லுங்கள். வியாபாரக் காட்சி செயல்திறமிக்கதாகவும் சிறப்பாகவும் இருக்கிறதா? வியாபாரக் காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் வாடிக்கையாளர்களாகும் வாய்ப்புள்ளவர்களா? பிற வியாபாரக் காட்சி பங்கேற்பாளர்கள் யார், மேலும் உங்கள் உற்பத்திகள்/சேவை இதில் எங்கு பொருந்தும்? அங்குள்ள மக்களை அணுகி நுணுக்கமாக கண்காணியுங்கள்.

கவனமாக மதிப்பிடுங்கள்

வியாபாரக் காட்சியின் சாத்தியங்களைப் பட்டியலிட்ட பின்னர், உங்கள் நோக்கங்களுக்கு இந்த வியாபாரக் காட்சி சரியானதா என்பதைத் தீர்மானிக்க பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்:
  • அனைத்து வகையான வாய்ப்புகளையுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை கவரும் அளவுக்கு இது பெரிதான வியாபாரக் காட்சியா – ஆனால் அதே நேரம் உங்கள் தொழிலின் பெரிய நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய அளவுக்கு பெரிதாக இல்லையா?
  • உங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புவியியல் ரீதியாக சரியான இடத்தில்தான் அமைந்துள்ளதா – அவர்கள் உள்ளூரா, வட்டாரம் சார்ந்தவர்களா, தேசிய அளவில் உள்ளவர்களா, அல்லது சர்வதேச அளவில் உள்ளவர்களா?
  • புதிய வியாபாரத்தை ஈர்க்கக்கூடிய மற்றும் புதிய முதலீடுகளைப் பின் தொடரக் கூடிய காலத்தில்தான் அது திட்டமிடப்பட்டுள்ளதா?
  • வியாபாரக் காட்சியின் விளம்பரதாரர்கள் நம்பகமானவர்களா மற்றும் நிர்வாகத்துக்கு வெற்றிகரமான முன்னைய நிகழ்வுகள் உள்ளனவா?
கடைசி நிமிடம் வரை காத்திருக்காதீர்கள்

சில பிரபலமான வியாபாரக் காட்சிகள் விரைவில் பூர்த்தியாகிவிடும் நீண்ட நேரம் காத்திருந்தால், காத்திருப்பு பட்டியலில் நீங்கள் இடம்பெறும் வாய்ப்பு அதிகம். மேலும், விரைவில் வியாபாரக் காட்சிக்காகப் பதிவு செய்தால், உங்கள் அரங்கில் நல்ல சிறந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பும் அதிகம்.
தெளிவான இலக்குகளை அமைத்தல்

நீங்கள் முதலீடு செய்யும் நேரம், பணம் மற்றும் திறனுக்கான அதிகமான பயனைப் பெற, அங்கு இருப்பதற்கு உங்களுக்கான நோக்கம் மற்றும் அளவிடக்கூடிய இலக்குகள் ஆகியவற்றைத் தீர்மானிப்பதே ஆகும். வியாபாரக் காட்சிக்கு முன்னர், அது நிகழும்போது மற்றும் அதற்கு பின்பு நீங்கள் செய்யும் அனைத்தும் இந்த இலக்குகளை அடைவதற்கு எவ்வகையில் பயன்படும் என்ற அடிப்படையில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

வியாபாரக் காட்சிககு சாத்தியமான இலக்குகள்

வியாபாரங்கள் வியாபாரக் காட்சியில் பங்கேற்பதற்கான சில காரணங்கள் பற்றி இங்கு விவரிக்கப்படுகின்றன. இவற்றில் பலவற்றை உங்கள் இலக்குகள் உள்ளடக்கியிருக்கலாம், அல்லது உங்கள் சிறுவியாபாரத்திற்கு முக்கியமான பிறவற்றைக் கொண்டிருக்கலாம்:
  • விற்பனை கட்டளைகளைப் பதியுங்கள்
  • போட்டி பற்றி ஆராயுங்கள்
  • இட மாதிரிகளைக் கண்டறியுங்கள்
  • எதிர்கால விற்பனைக்கான முன்னேற்பாடுகளை உருவாக்குங்கள்
  • சரியான நபர்களின் பெயர்களுடன் மெயிலிங் லிஸ்ட்டை உருவாக்குங்கள்
  • சிறந்த அல்லது மலிவான விநியோகத்தர்களைக் கண்டறியுங்கள்
  • நடைமுறை வாடிக்கையாளர்களுடன் உறவை மேம்படுத்தி கொள்ளுங்கள்
  • ஊடகச் செய்திகளைப் பெறுங்கள்
  • புதிய உற்பத்திப் பொருளை நோக்கிய ஆர்வத்தை உருவாக்குங்கள்
  • தொழிற்துறையில் உங்கள் நிறுவனத்தைப் பிரபல்லியப்படுத்துங்கள்
உங்கள் அரங்கின் பணியாளர்கள் போதுமான அளவுக்கும் நேர்த்தியானவர்களாகவும் இருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்

இதை தனியாக செய்ய முடியாது. உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும், நீங்கள் அரங்கை விட்டு வெளியேறும்போது, இடைவேளைக்கு வெளியே செல்லும்போது, அல்லது போட்டியை அவதானிக்க வெளியே செல்லும்போது குறைந்தது ஒரு நபராவது உங்கள் "இடத்தை" நிரப்ப இருக்க வேண்டும். ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் ஒரு நபரை வைத்திருப்பது சிறந்த வழியாகும். சிறந்த தோற்றத்தில், சிறந்த பயிற்சியுடன், சிநேகிதபூர்வமாகவும் அறிவுடனும் உங்கள் பணியாளர்கள் இருக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அவற்றை அடைவதற்கான அவர்களின் பங்கை அறிந்திருக்க வேண்டும். சம்பளம் பெறும் பணியாளர்களாக உங்களிடம் பணியாளர்கள் இல்லையென்றால், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பகுதி நேர ஊழியர்கள் போன்றோரை நாடலாம்.

உங்கள் செய்தியைத் துல்லியமாக வெளிப்படுத்துங்கள்

இரண்டு அல்லது மூன்று முக்கிய யோசனைகளை தேர்ந்தெடுத்து, அவற்றில் நீங்களும் உங்கள் பணியாளர்களும் அதிகமான பயிற்சிகளைக் கொண்டிருங்கள், இதனால் "செய்தியில் குறிப்பாக இருக்கலாம்". கிராஃபிக்ஸ், காட்சிக்கு முன்பான விளம்பரம், மற்றும் விபரக்கொத்து விளம்பரம் போன்றவற்றை உங்கள் செய்திச் சுருக்கத்தில் திட்டமிடுங்கள்.

பாதீட்டைத் தயாரியுங்கள்

எந்த வியாபாரக் காட்சியில் கலந்து கொள்ளப் போகிறீர்கள் மற்றும் உங்கள் இலக்கு ஆகியவற்றைத் தீர்மானித்த பின்னர் ஒரு பாதீட்டைத் தயாரியுங்கள். ஒரு பாதீடு இல்லையெனில் செலவுகள் எளிதாக கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடும் (உதாரணமாக, கடைசி நேர நெருக்கடியான கொள்வனவு செய்யும் கூட்டம்). மேலும் இவை உங்களுடைய சிறந்த திட்டங்களை அழிக்கக் கூடும். உங்களுடைய மொத்த பாதீட்டில் நான்கிலொரு பங்கு இடத்துக்கான செலவில் உள்ளபடி திட்டமிடுவது சிறந்ததாகும். எனவே இடத்துக்கான வாடகையாக நீங்கள் என்ன செலவழிக்கிறீர்கள் என்று தெரியும்போது, அதனை நான்கால் பெருக்கி உங்கள் செலவுகளைப் பற்றி தூர சிந்தனையைப் பெறுங்கள். இதில் உங்கள் தனிப்பட்ட செலவுகளைச் சேர்க்காதீர்கள்.
உங்கள் அரங்கு எங்கு அமைந்துள்ளது என்பதும் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதும் உங்கள் வியாபாரக் காட்சியின் வெற்றியைப் பாதிக்கும். பின்வரும் தகவல் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்.

அதிக மக்கள் வரும் அமைவிடத்தைக் கண்டறியுங்கள்

உங்களுக்கான இடத்தைத் தரிவு செய்யும் முன்னர் நடைபாதை வழியை கவனிக்கத் தவறாதீர்கள். பொதுவான ஒரு வியாபாரக் காட்சி தளத்தில் சில இடங்களில் அதிக அளவிலான நபர்கள் வருவார்கள். நுழைவாயில்கள். உணவகங்கள், ஓய்வகங்கள், அல்லது பெரிய நிறுவனங்கள் போன்றவற்றுக்கு அருகில் உள்ள இடங்களில் அரங்கினை அமைக்க முயற்சியுங்கள். வழிமுடியும் இடங்கள், சரக்கு ஏற்றி இறக்குமிடம், முறையற்ற வழிகள், அல்லது பிற குறைவாக மக்கள் வரக்கூடிய இடங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு அரங்கினைப் பகிர்ந்து கொள்வதை கருத்தில் கொள்ளுங்கள்

புதிதாக வியாபாரக் காட்சியில் பங்கேற்போர் அதிகம் விரும்பாத இடங்களைத்தான் நாடுவார்கள். இதனைத் தவிர்க்க நல்லதொரு வழி இடத்தில் உள்ள ஒரு அரங்கினை தொடர்புடைய ஒரு தொழிலில் இயங்கும் சக நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொள்ளுவதாகும். உங்கள் விற்பனை பிரதிநிதிகள், அல்லது உங்கள் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகளைப் போல விரிவாக நிலைப்பெற்ற வியாபாரக் காட்சியாளர் ஆகியோரிடம் கதைக்க முயற்சியுங்கள்.

உணர்வுப்பூர்வமாக ஊக்கப்படுத்துங்கள்

உங்கள் அரங்குக்கு வரும் மக்கள் உங்கள் உற்பத்திப் பொருளை அல்லது சேவையை அனுபவித்து பார்க்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அவர்கள் தொட்டு, கண்டு, உணர்ந்து, கேட்டு அல்லது சுவைத்துப் பார்க்க அனுமதியுங்கள். அலங்காரமான தலையணிகளை விற்கிறீர்களா? அதனை முறையான அமைப்பில் காட்சிப்படுத்துங்கள், மேலும் வாங்குபவர்கள் தொட்டு பார்ப்பதற்கான மாதிரிகளையும் வைத்திருங்கள். ஒரு புது மென்பொருள் தொகுப்பை உருவாக்கியிருக்கிறீர்களா? அந்த மென்பொருளை சோதித்து பார்க்க பல கணனிகளை வைத்திருங்கள்.

எளிமையாக வைத்திருங்கள்

அரங்கு அலங்காரத்தில் மிகவும் பகட்டாக காண்பித்து கொள்ளாதீர்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் தெரியக்கூடிய ஒரு பெரிய படமானது பல சிறிய படங்களை விட சிறந்தது. பெரிய உரைகளை விடவும், உங்கள் வியாபாரத்தை விவரிக்கும் ஒரு வாசகம் சிறந்ததாகும்.

தந்திரங்கள்

தந்திரங்கள் மற்றும் சிறு பரிசுகள் தந்து உங்கள் அரங்குக்கு மக்களை வரவழைக்கலாம். ஒரு நேர்காணலை நடாத்துங்கள், சத்தமாக உற்பத்திப் பொருளின் விளக்கக்காட்சிகளை மேற்கொள்ளுங்கள், மிட்டாய்களைத் தாருங்கள். இந்த தந்திரம் உங்கள் நிறுவனத்தின் மதிப்பையும், உங்கள் வாடிக்கையாளர்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறதா என்பதை மட்டும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்பதை யாருக்கும் தெரிவிக்காவிட்டால் சிறந்த வியாபாரக் காட்சி திட்டமிடல் பயனளிக்காது போகலாம். ஏறத்தாழ மூன்றிலொரு வியாபாரக் காட்சி பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் என்ன பார்க்க வேண்டும் என்பது, வியாபாரக் காட்சிக்கு அவர்கள் வருவதற்கு முன்பே தெரிந்திருக்கிறது என்று CEIR அவதானிக்கப்பட்டுள்ளது. உறுதியாக முன்னரே காண்பிக்கப்படும் விளம்பரங்கள் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புகளையுடைய வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் என்ன காண்பிக்க விரும்புகிறீர்கள் என்பது பற்றி தெரிவிக்கிறன. இந்த தகவல் குறிப்புகள் உதவக்கூடும்.

தொலைபேசிகளைத் தொழிற்படச் செய்யுங்கள்

வியாபாரக் காட்சிக்கு 6 வாரங்கள் அல்லது ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே, உங்களுடைய முதன்மை வாடிக்கையாளர்கள் மற்றும் வாய்ப்புடைய வாடிக்கையாளர்கள் போன்றோரை அழைத்து சந்திப்புகளைத் திட்டமிடுங்கள். பெரும்பாலான நபர்கள் காட்சிக்கு அதிகமான வேலைகளுக்கு மத்தியில் வருவார்கள், பிற அரங்குகளை காண்பதற்கு அவர்களுக்கு மிக குறைவான நேரம் அல்லது நேரமே இல்லாமல் இருக்கும். அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் ஒரு வாரம் அல்லது காட்சிக்கு முன்பாகவே நிச்சயப்படுத்திக் கொள்ள மறக்காதீர்கள்.

அஞ்சல்களை அனுப்புங்கள்

முன்கூட்டியே பதிவு செய்த பங்கேற்பாளர்களின் அஞ்சல் பட்டியலை வாங்கி வியாபாரக் காட்சியின் நிர்வாகம் வழங்கக்கூடும். உங்கள் அரங்குக்கு வருவதால் உண்டாகக்கூடிய நன்மைகள் இரண்டை விவரிக்கும் எளிமையான அஞ்சலைப் பயன்படுத்த முயற்சியுங்கள். உங்களுடைய அரங்கு இலக்கத்தையும் சேர்த்து சில தொடர்பு விவரங்களும் அதில் இருக்கிறதா என்று உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

பத்திரிகைகளைப் பயன்படுத்துங்கள்

வியாபாரப் பத்திரிகைகள் மற்றும் உள்ளூர் செய்திப் பத்திரிகைகள் போன்றவற்றில் வியாபாரக் காட்சியை உள்ள்டக்கிய செய்திக்கட்டுரைகளை பிரசுரியுங்கள். உங்கள் செய்திக்குறிப்புகளில் உங்கள் அரங்கைப் பற்றிய மதிப்புடைய செய்திகள் இருக்கலாம் – ஒரு புதிய உற்பத்திப் பொருள் அறிமுகம் அல்லது விசேட விளக்கக்காட்சி போன்றவை. வியாபாரக் காட்சிக்காக பல ஊடகவியலாளர் தொகுப்புகளையும் தயார் செய்து கொள்ள வேண்டும், மேலும் ஊடகவியலாளர்களின் அறைகளுக்கு அனுப்பி வையுங்கள், இதனால் ஊடகவியலாளர்களிடம் அவை எளிதில் சென்றடையும்.

வியாபாரக் காட்சிக்கான வெளியீடுகளை தேடுங்கள்

வியாபாரக் காட்சி மட்டுமே பிரசுரிக்கப்படும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது அதிக செலவாகக்கூடியதாகவும், செயல்திறமற்றதாகவும் இருக்க கூடும். இந்த வெளியீடுகள் குறைவான கவனத்தையே பெறும், மேலும் வியாபாரக் காட்சிக்கு வருகைதரும் மக்கள் வீணாக்கும் காகிதங்களின் அளவில் எளிதில் தொலைந்து போய்விடும்.
உங்கள் பின் தொடர் திறமுறைத் திட்டத்தைத் திட்டமிடுவதற்கான உகந்த நேரம் வியாபாரக் காட்சி தொடங்குவதற்கு முன்புள்ள நேரமாகும். இம்முறையில், உங்களுடைய வாய்ப்புடைய வாடிக்கையாளர்களுக்கு வியாபாரக் காட்சி மறப்பதற்கு முன்பே உங்கள் பின்னூட்டல் செய்தி அவா்களை சென்றடையலாம். பின் தொடருதல் பற்றி நீங்கள் அறியவேண்டிய விடயங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.

பின் தொடருதலை முதன்மையானதாகக் கருதுங்கள்

Center for Exhibition Industry Research –இன் கருத்துப்படி 80% காட்சி வருகைகள் பின் தொடரப்படுவதில்லை. வருகை தந்தவர்களை பின் தொடருவது வியாபாரக் காட்சிக்கு பின் உங்களுடைய முதல் பணியாக இருக்கும். – நீங்கள் அலுவலகத்துக்கு வராத நாட்களில் என்னென்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்வது போன்ற வேறு எந்த பணியை விடவும் இதை முதன்மையானதாக கருதுங்கள்.

பின் தொடருதல் அஞ்சலை வியாபாரக் காட்சிக்கு முன்பாகவே பதியுங்கள்

வியாபாரக் காட்சிக்கு பின்னருள்ள அஞ்சலானது ஒரு நன்றி குறிப்பு அல்லது அட்டைக்குறிப்புடன் கூடிய ஒரு கைந்நூல் போன்றவையாகவும் இருக்கலாம். வியாபாரக் காட்சிக்கு புறப்பட முன்னர் இதனை பதிந்து அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரக் காட்சியிலிருந்து திரும்பிய உடனே அதனை அனுப்பி வைக்க முடியும்.

வியாபாரக் காட்சியின் போதே முதன்மை வாடிக்கையாளர்களை தகுதிப்படுத்துங்கள்

முக்கியத்துவம் மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் வருகை தந்தவர்களை வரிசைப்படுத்துங்கள், இந்த முக்கியத்துவங்களை காட்சிக்கு பின்னரான செயல்பாடுகளின் அடிப்படையில் நோக்குங்கள் வியாபாரக் காட்சி முடிந்து ஒரு வாரத்துக்குள் உங்களுடைய முதன்மையான வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களை தொலைபேசியில் அழையுங்கள் – நீண்ட காலம் கடத்தினால் அவர்கள் வாடிக்கையாளர்களாக மாறும் வாய்ப்புகள் அரிதாக்கூடும். அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையான பின் தொடர் அஞ்சலை அனுப்புங்கள்.

உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்

அரங்கில் நீங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் காப்பாற்றுங்கள். போதுமான அளவு கைந்நூல்களையும், உற்பத்திப் பொருட்கள் பற்றிய தாள்களையும் வைத்திருங்கள், இதன் மூலம் கோரப்படும் தகவல்களை கூறியது போலவே நீங்கள் அனுப்பலாம்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Monday, July 27, 2015

ஏழை அப்பா… பணக்கார அப்பா!


ஏழை அப்பா… பணக்கார அப்பா! - 

WWW.HAPPY4ALL.ORG

‘‘பணக்காரர்கள் மட்டுமே பணக்காரர்களாகிறார்கள். ஏழைகளும், மிடில் கிளாஸ் மக்களும் தொடர்ந்து அப்படியேதான் இருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா?’ என்று ராபர்ட் சொல்ல ஆரம்பித்தார்…
‘‘பணத்தை எப்படிக் கையாள்வது… அதை எப்படிப் பெருக்குவது? என்றெல்லாம் எந்தப் பள்ளிக்கூடத்திலுமே சொல்லிக் கொடுப்பதில்லை. இதையெல்லாம் பிள்ளைகள், தங்களின் பெற்றோரைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதனால்தான் பணக்காரர்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் படிக்கிறார்களோ இல்லையோ… மீன் குஞ்சுக்குத் தானாகவே நீச்சல் வருவது மாதிரி அவர்களுக்குச் செல்வத்தைப் பெருக்கும் கலை தானாகவே வந்துவிடுகிறது. ஆனால் மிடில் கிளாஸ் வீட்டுப் பிள்ளைகள், என்னதான் நன்றாகப் படித்தாலும் அவர்களால் பணக்காரர்களாக முடிவதில்லை!’’ என்றார் ராபர்ட்.
‘‘பள்ளிக்கூடம் போகப் போவதில்லை. பணக்காரனாகப் போகிறேன் என்று சொன்ன உனது மகன் மாதிரிதான் சிறுவனாக இருந்தபோது நானும் என் அப்பாவிடம் சொன்னேன். அது இருக்கட்டும்… உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு இரண்டு அப்பாக்கள். ஒரு அப்பா ஏழை! இன்னொரு அப்பா பணக்காரர்!’’ என்று எடுத்த எடுப்பிலேயே புதிர் போட்டார் ராபர்ட்.
அவரே அதை அவிழ்க்க ஆரம்பித்தார்… ‘‘பேப்பர் படித்துக் கொண்டிருந்த என் ஏழை அப்பாவிடம், ‘பணக்காரனாக வேண்டும். அதற்கு என்ன வழி?’ என்று ஒருநாள் கேட்டேன். ‘ஏன் இப்படிக் கேட்கிறாய்?’ என்று என்னிடம் கேட்டார் அப்பா. ‘இன்று என் நண்பன் ஒரு பார்ட்டிக்காக வகுப்பில் படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்தான். ஆனால், என்னையும் என் இன்னொரு நண்பனான மைக்கையும் மட்டும் அவன் அழைக்கவில்லை’ என்றேன்.
‘ஏன் அழைக்கவில்லை?’ என்று கேட்டார் அப்பா. ‘காரணம், நாங்கள் இருவரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இல்லை. அதனால்தான் கேட்கிறேன்… நான் பணக்காரனாக என்ன வழி?’
இந்தக் கேள்விக்கு என் அப்பா பதிலேதும் சொல்லவில்லை. அப்போது எனக்கு வயது ஒன்பது. அடுத்த நாள் என்னைப் போலவே பார்ட்டிக்கு அழைப்பு கிடைக்காத என் நண்பன் மைக்கைச் சந்தித்தேன்.
‘பணக்காரன் ஆவது எப்படி?’ என்ற கேள்வி என்னைப் போலவே மைக்கின் மனதிலும் ஒரு உறுத்தலாக உட்கார்ந்து இருந்தது. அப்போது மைக்கின் அப்பாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என் அப்பா மாதிரி அதிகம் படித்தவர் இல்லை. ஆனால், என் அப்பாவைவிட அதிகமாகச் சம்பாதிப்பவர். பெரிய பணக்காரர் இல்லை. ஆனால், பணக்காராக ஆகிக் கொண்டிருப்பவர். கட்டட காண்ட்ராக்டராக இருக்கிறார். ஒரு மளிகைக் கடையும் நடத்துகிறார். அடுத்த ஊரில் புதிதாக ஒரு ஓட்டல்கூட ஆரம்பித்திருப்பதாக மைக் சொன்னான். என் அப்பாவிடம் கேட்ட அதே கேள்வியை மைக்கின் அப்பாவிடமும் கேட்டேன். ‘உன் கேள்வி எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால், பணக்காரனாவது எப்படி என்பதை, நான் வகுப்பறையில் உட்காரவைத்து உனக்குப் பாடம் எடுப்பது மாதிரி சொல்லிக்கொடுக்க மாட்டேன். விடுமுறை நாட்களில் எனது மளிகைக் கடைக்கு வா. இருவரும் வந்து வேலை பழகுங்கள். அப்படி வந்தால், பணக்காரனாவது எப்படி என்று நான் கற்றுத்தருகிறேன்’ என்றார்.
ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் கற்றுக்கொடுத்த பாடம்தான் அவரை நான் ‘என் பணக்கார அப்பா’ என்று இப்போதும் பெருமையோடு சொல்லிக்கொள்ளக் காரணம்’’ என்றார் ராபர்ட்

Sunday, July 26, 2015

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம்

நன்றி கூறுவது எவ்வளவு முக்கியம் - www.v4all.org

01. உற்சாகப்படுத்துங்கள், அதைரியப்படுத்தாதீர்கள். மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைப்பதால் நாம் அடையப்போகும் இலாபம் எதுவும் இல்லை. உற்சாகப்படுத்தினால் மற்றவர் உள்ளத்தில் இருப்பதை அறிய முடியும்.

02. வாழ்க்கையின் எல்லாக் கடமைகளையும் வைத்துப் பார்க்கும்போது நன்றி, நன்மை ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான் என்பதை உணரலாம்.

03. நன்றி சூரிய வெளிச்சத்தைப் போன்றது, அது இருந்தால் வாழ்க்கை ஒளி பெறுவதை உணர்வீர்கள். 04. நமது உள்ளத்தில் எப்போதும் நன்றியுணர்வு ஒலிக்க வேண்டும். நன்றி கூறுவது ஒருபோதும் உங்கள் கௌரவத்தை தாழ்த்திவிடாது.

05. ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் நன்றியுணர்வு அவனிடம் இல்லாமல் போனால் அவன் மதிக்கத்தக்கவனாக மாட்டான்.

 06. நமக்கு ஒரு கிறிஸ்மஸ் பரிசு தந்தவனுக்கு பெரிதாக நன்றி கூறுகிறோம், ஆனால் இந்த வாழ்க்கையை நமக்கு தந்த இறைவனுக்கு என்றாவது நன்றி கூறியிருக்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 07. நன்றியுள்ள ஆத்மாக்களுக்குத்தான் இறைவன் மேலும் மேலும் வெகுமதியளித்து உதவுகிறான்.

 08. கடவுளின் எல்லையற்ற அன்புக்கு நன்றி கூறுவோம். நம்மை நேசிக்கின்ற இதயங்களுக்காக கடவுளுக்கு நன்றி கூறுவோம். கடவுள் நமக்களித்திருக்கும் நம்பிக்கைகளுக்காக அவருக்கு நன்றி கூறுவோம்.

 09. கீழ்வரும் வார்த்தைகளை எப்போதும் கூறுங்கள் வாழ்க்கை செழிக்கும் : அ. உன்னைப் பார்த்து பெருமைப்படுகிறோம். ஆ. நீ எவ்வளவு அன்புடன் இருக்கிறாய். இ. உன் உதவி எனக்கு தேவை. ஈ. நீ என்னுடன் இருந்தால் எனக்கு உற்சாகமாக இருக்கும்.

10. நன்றி எப்படிப்பட்டது என்றது முக்கியமில்லை அது உங்கள் இதயத்தில் இருந்து வருகிறதா என்பதுதான் முக்கியம். 11. மக்கள் எப்போதுமே அரசை குறை சொல்வார்கள் அவர்கள் அரசால் அனுபவிக்கும் இலவசக்கல்வி, இலவச மருத்துவம் போன்ற நல்ல காரியங்களுக்காக அரசுக்கு நன்றி கூறுவதில்லை.

12. வேலை செய்யும்போதும் வேலை வாங்கும் போதும் பரஸ்பரம் நன்றி கூற வேண்டும்.

 13. சம்பளம் கொடுப்பது மட்டும் முக்கியமில்லை செய்த வேலைகளை பாராட்டுவதும், நன்றி கூறுவதும் முக்கியம்.

14. நான் என்னைச் சுற்றி துதிபாடுகின்ற கூட்டத்தை மட்டும் உருவாக்கிக் கொண்டேன், நண்பர்களை நான் உருவாக்க முயற்சிக்கவில்லை என்று நெப்போலியன் சொன்னான். இறக்கும்போது அவன் தனி மனிதனாகவே இறந்தான்.

15. ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஆபிரகாம் இலிங்கனுக்கு அதிக நண்பர்கள் இருந்தார்கள் வேறெதுவும் அவரிடமிருக்கவில்லை. அவர் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது கோட் சூட் தைக்க பணம் இல்லாமல் கடன் வாங்கினார்.

16. நண்பர்கள் இருக்கும்வரை எவரும் பயனில்லாதவர் ஆகிவிடுவதில்லை.

17. பயன் கருதி நட்பைத் தேடுவது வான வீதியில் இருந்து தங்கத்தைப் பெறச் செய்கின்ற முயற்சி போன்றது.

18. நட்புடன் இருப்பவனைப் போல நல்ல வேலையாள் உலகில் கிடையாது. நல்ல நட்புடன் இருப்பவன் வாழ்க்கையில் பெரிய முதலீடு போன்றவன்.

19. மற்றவர்களின் புன்முறுவலுடன் பழகுங்கள். முகத்தைச் சுளிப்பதற்கு 72 தசைகள் வேண்டியிருக்கிறது, புன்முறுவல் செய்ய 14 தசைகளே போதுமானவை.

 20. தனி நபராக உங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கென்றே கடவுள் சில பொறுப்புக்களை ஒப்படைத்துள்ளார். உங்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றவருக்கு இல்லை என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை சிறப்பாக்க உங்கள் பங்கும் இருக்கிறது. அந்தக் காரியத்தை உங்களைவிட மற்ற எவராலும் செய்ய முடியாது.

 21. கடவுளிடமும், மனிதனிடமும் நீங்கள் காட்டுகிற அன்பு மேலோங்கட்டும். எந்த வேறுபாடும் இன்றி அனைவரையும் நேசிக்கவே நீங்கள் படைக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை விட தாழ்ந்தவர்கள் உங்களிடமிருந்து அதிகமான அன்பை பெறும் தகுதி உடையவர். அன்பை கொடுக்கிறவர்களுக்கே அது கிடைக்கும்.

22. பேசுவதிலும், குறை கூறுவதிலும் நேரத்தை செலவிடாது செயலில் இறங்குங்கள். தவறுகளைப்பற்றி வருந்திக் கொண்டிருக்காமல் தவறுகளை திருத்தும் முயற்சிகளில் ஈடுபடுங்கள்.

23. மகிழ்ச்சியுடன் செயற்படுங்கள் எது தவறு என்று எண்ணி பயப்படாமல், எது நல்லதோ அதை நேசித்து, உங்கள் கடமையை செய்யுங்கள். வாழ்வது சந்தோஷமான விடயம் ஆகிவிடும்.

 24. ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்க்காமல் உள்ளே புகுந்து வேலை செய்யுங்கள். செயல்களை உங்களாலும் நல்ல வழியில் திருப்ப முடியும்.

25. கணக்குப் பார்க்கும்போது வெற்றி பெற்றீர்களா தோற்றீர்களா என்பது முக்கியமில்லை. எப்படி வாழ்ந்தீர்கள் என்பதே முக்கியம்.

Thursday, July 9, 2015

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள்



           ந்த ஆண்டு ஆவணி மாதம் 6-ஆம் தேதியுடன் (22-8-2013) ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்து 342 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. அந்த மகான் இன்றைக்கும் நம்மோடு வாழ்ந்து வருகிறார் என்பதற்கு சாட்சியாக பல அற்புதங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவருடைய புண்ணிய தினத்தில் அவரை வணங்கி, அவருடைய அருளாசியைப் பெற்று அனைவரும் வாழ்வாங்கு வாழவேண்டுகிறோம்.

தர்மபுரியிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பாப்பாரப்பட்டி எனும் சிற்றூரில், ஸ்ரீராகவேந்திர சுவாமி பிரத்யட்சமாய் காட்சியளித்தார் என்கிற செய்தியைப் படிக்க நேர்ந்தது. அன்று முதல் எனக்கும் பாப்பாரப்பட்டி ஸ்ரீராயர் மடத்தை தரிசிக்கவேண்டும் என்கிற அவா பல்லாண்டுகளாக இருந்துவந்தது. ஆனால் அந்த  பாக்கியம் கிட்டவில்லை. விமானத்தில் ஹைதராபாத் செல்லமுடிகிறது; சதாப்தியில் அடிக்கடி பெங்களூர், மைசூர் என்று போகமுடிகிறது. ஆனால் பாப்பாரப்பட்டி மட்டும் பல்லாண்டுகளாக வாஷிங்டனாகவே எனக்கு இருந்தது. திடீரென்று உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்காக குடும்பத்தோடு தர்மபுரி செல்ல நேர்ந்தது. அன்று மாலையே நான் பாப்பாரப்பட்டி சென்றுவிட்டேன். 

பாப்பாரப்பட்டி ஊரின் உள்ளே நுழைந்து, கடைத் தெருவைத் தாண்டி பாப்பாரப்பட்டி அக்கிரகாரம் என்னுமிடத்தில் அமைந்திருந்தது ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனம். ஊரிலிருந்து தனிமைப்பட்டுக் காட்சியளித்தது அந்த இடம். நான்கைந்து மெலிதான வீதிகள்; சுத்தமான சிமெண்ட் சாலைகள்; குட்டை குட்டையான ஓட்டு வீடுகள்; நடுவில் ஓரிரு மச்சு வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு பக்கமும் சுகமான திண்ணைகள். மொத்தம் அறுபது வீடுகள்; அனைத்தும் ஒரே மாதிரியாக பளிச்சென்று இருந்தன. அந்த அறுபது வீடுகளிலும் மாத்வ பிராமணர்களே வசித்துவந்தனர்.

என்னுடைய கார் பிருந்தாவனம் அருகே நின்றது. திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மக்கள் சிலர் என்னைப் பார்த்தார்கள். பல ஆண்களின் உடம்பில் கோபிசந்தன நாமம் அவர்களின் பக்திப் பெருக்கைக் காட்டியது.

என்னோடு பலரும் ஆர்வமாகப் பேச ஆரம்பித்தார்கள். 

சுமார் எண்பது வருஷத்து பிருந்தாவனம் இது. 

பாப்பாரப்பட்டியில்- மைசூர் சமஸ்தானத்தில் பணிபுரிந்து புகழ்பெற்ற ஒரு குடும்பத்தில், அண்ணன்- தம்பியாகப் பிறந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீனிவாசன் ஆகியோர். திருமணமாகி நீண்டகாலமாகியும் மக்கட்பேறு இல்லாததால், அண்ணனும் தம்பியும் மந்திராலயம் போய் ஸ்ரீராக வேந்திரரை தரிசித்து, 

அவரிடம் மக்கட்பேறுக்காக வேண்டிக்கொள்ள முடிவு செய்தனர். கடைசியில் தம்பி சீனிவாசனும் அவர் குடும்பமும் மந்திராலயம் சென்று சுவாமிகளை வழிபட்டனர். எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், தன் அண்ணனான கிருஷ்ணமூர்த்தியை உடனே மந்திராலய சேவையில் கலந்துகொள்ள வரச்சொல்லி கடிதம் எழுதினார் தம்பி ஸ்ரீனிவாசன். கிருஷ்ணமூர்த்தி மறுநாள் மந்திராலயம் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.  அன்றிரவு அவருக்கு ஒரு கனவு தோன்றியது.

"கிருஷ்ணமூர்த்தி... நீ மந்திராலயம் வரவேண்டாம். நானே பாப்பாரப்பட்டிக்கு வருகிறேன்' என்று கனவில் ராயர் சொல்ல, புளகாங்கிதம் அடைந்தார் அவர். இதை தன் மூத்த சகோதரரான அச்சுதனிடம் சொல்ல, 1933-ஆம் ஆண்டு அச்சுதன் மந்திராலயம் சென்றார். அப்போது பட்டத்தில் இருந்த ஸ்ரீசுவாமிகளிடம் நிகழ்ந்ததைச் சொல்ல, பாப்பாரப்பட்டியில் பிருந்தாவனம் அமைக்க மகிழ்வுடன் இசைந்த ஸ்ரீசுவாமிகள், தன் திருக்கரத்தாலேயே புனித மண்ணை (மிருத்திகை) மூல பிருந்தாவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார். என்ன அதிசயம்! புனித மண்ணோடு ஒரு சிறிய சாளக்கிராமமும் அதிலிருந்தது. உடனே அச்சுதன்மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து, ஸ்ரீசுவாமிகளிடம் அந்த அற்புதத்தைக் காட்டினார்.

சுவாமிகளும் அகமகிழ்ந்து, ""ஸ்ரீராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்தபோது (1671-ஆம் ஆண்டு), பிருந்தாவனத்தில் எழுநூறு சாளக்கிராமங்களைக் கொட்டி அதை மூடினார்கள். அதிலொன்று உனக்குக் கிடைத்திருக்கிறது. பாப்பாரப் பட்டியில் இதை வைத்து பிருந்தாவனம் பிரதிஷ்டை செய். எதிர்காலத்தில் உங்கள் ஊர் "தக்ஷிண மந்திராலயம்' என்று புகழ்பெறும்'' என்றார்.

23-5-1935, வியாழக்கிழமை, வைசாக சுத்த சப்தமி அன்று பாப்பாரப்பட்டி முள்பாகல் ஸ்ரீ தயாநிதி தீர்த்தர் என்கிற மகானின் திருக்கரங்களால் பிருந்தாவனம் வெகுவிமரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்றிலிருந்து ஸ்ரீராகவேந்திரர் இந்த பிருந்தாவனத்தில் வாசம் செய்கிறார் என்பது பல அற்புத நிகழ்வுகளால் தெரியவந்தது. ஒரு சிறிய கிராமம்மந்திராலயத்தைப்போலவே திகழ ஆரம்பித்தது.

பாப்பாரப்பட்டி ஸ்ரீராயரின் பக்தர்களோடு பேசியபோது, அவர்களுடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்ததை கண்களில் நீர்மல்க விவரித்தார்கள். 


சுமார் 60 வயதுள்ள ஒருவரின் மனைவிக்கு கை கால்கள் விளங்காமல் போய்விட்டது. உட்காரவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் தவித்த தன் மனைவியை பல பெரிய மருத்துவமனைகளில் சேர்த்தும் குணமாக்க முடியவில்லை. இறுதியாக பாப்பாரப்பட்டி பிருந்தாவனத்திற்கு வெகு கஷ்டப்பட்டு அழைத்து வந்தாராம். மனைவியை ஒரு மூலையில் படுக்க வைத்துவிட்டு அவர் பிருந்தாவன தரிசனம் செய்து கொண்டிருந்தாராம். பெரிய கோவில் மணி, ஜாங்கடை, பூஜை மணி ஒலிக்க, ராயருக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பக்தியோடு வேண்டிக்கொண்டே மனைவி கிடந்த மூலையைப் பார்த்தாராம். அடுத்த நொடி "ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ' என்று அலறிக்கொண்டே ஓடினாராம் அவர். காரணம், அவர் மனைவி மற்றவர்களைப்போலவே நின்றுகொண்டு, மங்கள ஆரத்தியை கைகூப்பிய வண்ணம் தரிசித்துக் கொண்டிருந்தார்! எல்லாம் ராயரின் அனுக்கிரகம்.

""இங்கே முத்தூர் வெங்கட்ராவ் என்கிற பக்தருக்கு ராயர் காட்சி தந்தாராமே? அவர் வீடு எது?'' என்று கேட்டேன்.

""இப்போது அவர் இல்லை. அவரது மகன் கோபாலகிருஷ்ணன் இருக்கிறார். என்னோடு வாருங்கள்'' என்றார் ஒருவர்.

ஒரு சிறிய தாழ்வான ஓட்டு வீடு. வாசல் திண்ணையில் இருவர் பேசிக்கொண்டிருந்தனர். 

என்னை கோபாலகிருஷ்ணனிடம் அறிமுகப் படுத்தினர். 80 வயதுக்குமேல் ஆனவர் அவர்.

""உள்ளே வாங்கோ...'' என்றழைத்துப் போனார். ஸ்ரீராகவேந்திரரை நேரில் தரிசித்த தன் தந்தை ஸ்ரீமுத்தூர் வெங்கட்ராவின் படத்தைக் காட்டினார். மனைவியோடு அவர் இருந்த புகைப்படம் அது. கண்களில் ஒற்றிக் கொண்டேன். என்ன புண்ணியம் செய்த ஆத்மா அது!

வெங்கட்ராவ் அந்த மடத்தின் சமையல் கலைஞர். ஓர் ஏகாதசி அன்று மடத்தினுள்ளே போய், மறுநாள் காலை துவாதசி என்பதால், ஏழு மணிக்குள் ராயருக்கு நைவேத்தியம் படைக்க வேண்டுமே என்று இரவே அங்கு படுத்துக்கொண்டார்.

""வெங்கிட்டு... கார்த்தால நாலு மணிக்கு வீட்டிலேர்ந்து ஸ்னானம் செஞ்சுட்டுப் போயேன்... பக்கத்துலயே பாம்பு, புழு, பூச்சின்னு எல்லாம் இருக்கு... ஏதாவது ஏடாகூடமாயிடக் கூடாதே?'' என்று நண்பர்கள் தடுத்தார்களாம்.

வெங்கட்ராவ் சிரித்துக்கொண்டே  ""பாம்பா? எல்லாம் ராயர் இருக்கார். பாத்துப்பார்...'' என்று சொல்லிச் சென்றிருக்கிறார்.

ஓர் லாந்தர் விளக்கோடு படுத்த வெங்கட்ராவ், இருள் விலகாத அதிகாலையில் கண்விழித்தபோது, எதிரிலிருந்த கிணற்றருகேயிருந்து காவி வஸ்திரங்களோடு ஈரம் சொட்டச் சொட்ட நடந்துபோன ஸ்ரீராகவேந்திரரை அந்த லாந்தர் விளக்கொளியில் பார்த்து பிரமித்துப் போனாராம்!

""இதோ... இதுதான் அப்பா கொண்டுபோன லாந்தர் விளக்கு'' என்றார் கோபாலகிருஷ்ணன்.

அவரோடு பேசிவிட்டு விடைபெற்றபோது, ஓர் மாநிறமான இளம்பெண் என்னை வணங்கினாள்.

""இவள் என் மருமகள்'' என்றார் கோபால கிருஷ்ணன்.

""நீ ஏனம்மா என்னை வணங்குகிறாய். ராயரை நேரில் பார்த்த குடும்பத்தைச் சேர்ந்த வள் நீ. ஏழு தலைமுறைக்கும் அந்தப் புண்ணியம் உன்னைக் காப்பாற்றும்'' என்று வாழ்த்தினேன்.

""பல வருஷங்கள் மந்திராலயம் போனதாகவும், 1962-லிருந்து பல புத்தகங்களில் ராய ரைப் பற்றி எழுதி வருவதாகவும் மாமாவிடம் நீங்கள் சொன்னதைக் கேட்டேன். அதனால் உங்களை வணங்கத் தோன்றியது...'' என்றாள்.

எல்லாம் அவரின் அருள்.

ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ!

Saturday, May 16, 2015

நேர்முகத் தேர்வு முறைகள் - how to get success in Interview

நேர்முகத் தேர்வு முறைகள்


நேர்முகத் தேர்வு முறைகள் மூன்று வகைப்படும்.அவை

  • நேர்முகத் தேர்வுக்கு முன்பு
  • நேர்முகத் தேர்வின் போது
  • நேர்முகத் தேர்வுக்கு பின்பு

நேர்முகத் தேர்வுக்கு முன்பு

நேர்முகத் தேர்வுக்கு முன்பு முடிந்த அளவுக்கு நாம் செல்லும் கம்பெனியின் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

சில உதாரணங்கள்

  • நேர்முகத் தேர்வு செய்பவரின் பெயர் ?
  • நிறுவணத்தின் அமைப்பு முறை ?
  • நமக்கு எந்த பிரிவில் ஆர்வம் ?
  • அந்த கம்பெனியின் வெளியீடுகள்/வேலை/உதவிகள் ?
  • பயிர்ச்சி முகாம்கள் ?
  • கம்பெனியின் எதிர்காலத் திட்டங்கள் ?
  • எவ்வளவு காலமாக அந்த தொழிலில் உள்ளனர் ?
  • வாடிக்கையாளர் விபரங்கள் ?
  • நேர்முகத் தேர்விற்கான சில கேள்வி முறைகள்
  • உங்களைப் பற்றிய அறிமுகம்
  • உங்களின் குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் என்ன?அவற்றை அடையும் முறைகள்?
  • வேலையில் சேர்ந்த பின் நீங்கள் அடைய நினைக்கும் இடம்?
  • அடுத்த 10வருடத்தில் அடைந்து விடுவீர்களா?
  • இப்பொழுதிலிருந்து வரும் 5வருடத்தில் உங்களை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
  • என்ன பெரிதாக சாதிக்க நினைக்கிறீர்கள்?
  • 5வருடத்தில் எவ்வளவு சம்பாதிக்க நினைக்கிறீர்கள்?
  • உங்களின் பெரிய பலம் மற்றும் பலகீன்ம்?
  • நாங்கள் உங்களை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
  • இந்த தொழிலைத் தேர்ந்தெடுத்ததின் காரணம்?
  • இதில் சாதிப்பதற்கான தனிச்சிறப்பு?
  • உங்களின் வெற்றியை எவ்வாறு வரையறுப்பீர்கள்?
  • எங்கள் நிறுவணம் பற்றி தெரிந்த்தது என்ன?
  • எங்கள் நிறுவணத்தில் நீங்கள் இந்த இடத்தை,தேர்ந்தெடுத்ததின் நோக்கம்?
  • எங்கள் நிறுவணத்தின் வளர்ச்சியில் உங்களின் பங்கு எவ்வாறு இருக்கும்?
  • மேலாளரிடம் இருக்க வேண்டிய தகுதிகள்?
  • மேற்பார்வையாளருக்கும்,அவருக்குக் கீழ் உள்ளவருக்கும் இடையேயான உறவு எவ்வாறு இருக்க வேண்டும்.?
  • வேலையில் ஏதேனும் முன் அனுபவம் உண்டா?அங்கிருந்து வெளியேறியதன் காரணம்?
  • பணி மாற்றத்திற்கு சம்மதமா?இல்லையா?பயணம் செய்யும் ஆர்வம் உண்டா?
  • குறைந்தது 6மாதம் பயிற்சி பெறுபவராக இருக்க முடியுமா?
  • ஏதாவது புதிய முயற்சிகள் எடுத்ததுண்டா?
  • ஏதாவது பிரச்சனைகளை சந்தித்ததுண்டா?அதனை எப்படி தீர்த்து வைத்தீர்கள்?அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம்?

கம்பெனி எதிர்பார்ப்புகள்

ஒவ்வொரு கம்பெனியும் வேலைத் தேடி வருபவர்களிடம் சில எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும்.வேலை தேடி செல்பவர்கள் அதனை பூர்த்தி செய்வது போல் பதில் சொல்ல வேண்டும்.

ஆடை அணியும் முறை

நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது எப்பொழுதும் அவரவருகுப் பொருத்தமான ஆடைகளையே அணிய வேண்டும்.ஏனெனில் முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஆகிவிடக்கூடாது.பொதுவாக பெண் எனில் புடவை அல்லது சரியான சுடிதார் மற்றும் குறைவான உயரம் உள்ள காலணிகளை அணிய வேண்டும்.ஆண் எனில் முழுக்கை சட்டையும்,நெக் டை மற்றும் நல்ல காலணிகளை அணியவேண்டும்.மேலும் ஆடை அணியும் போது நாம் செல்லும் கம்பெனியைப் பொருத்தும் அணியவேண்டும்.(உ.ம்) ஒரு விளம்பர நிறுவணத்திற்கு செல்லும் போது அதற்கு ஏற்ப நல்ல புதுமையான உடைகளை அணிய வேண்டும்.ஆடைகளை நன்கு துவைத்து,தேய்த்து உடுத்தவும்.தலையை நன்றாக வாரிச் செல்லவும்.காலணிகளை நன்றாக பூச்சி செய்து அணியவும்.கைக் கடிகாரம் கட்டாயம் அணியவும்.பேனா,பேப்பர்,பேடு போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.

நேர்முகத் தேர்வின் போது நேர்முகத் தேர்வில் பேசத் துவங்கும் முன் கவணிக்க வேண்டிய சில விஷயங்கள்

கைக்கொடுப்பது

நேராக நிற்கவும்,நிமிர்ந்து உட்காரவும் வேண்டும்

பதற்றதில் வேண்டாத அங்க அசைவுகளைக் கொடுக்கக் கூடாது.உ.ம் முடியைக் கோதுவது,பேனா மூடியை திறந்து மூடுவது,கால் தேய்ப்பது போன்றவை

நேருக்கு நேராகப் பார்க்க வேண்டும்

கை அசைத்துப் பேசுவது இயற்கையாக இருக்க வேண்டும்

அமரும் இருக்கையில் தேர்வு செய்பருக்கு எதிரில் செளகர்யமாக அமரவும்.

அவருக்கு நேருக்கு நேராக அமர்ந்து,அவர் கேட்கும் கேள்விகளை நன்கு கவணித்து பதிலலிக்கவும்

பதற்றத்தினால் ஏற்படும் சில சுபாவங்களைத் தவிர்க்க வேண்டும்

தெளிவாகப் பேச வேண்டும்.நல்ல இலக்கண முறையோடும்,தோழமையானக் குரலோடும் பேச வேண்டும்.ஆம்,இல்லை என்று ஒரே வார்த்தையில் பதிலலிக்காமல்,முடிந்த வரை விளக்கமாக பதில் கூறவும்

ஆர்வத்தோடும்,நேர்மறையான எண்ணங்களோடும் பதிலலிக்கவும்

நாம் ஏதாவது கேள்வி கேட்பதாக இருந்தால்,அந்த இடத்திற்கு ஏற்றதாகக் கேட்க வேண்டும்.கேட்பவரின் நேர்த்தை வீணடிக்கக் கூடாது

பதில் கொடுக்கும் போது,நன்குத் தெளிவாகவும்,கவனமாகவும் கூறவும்.தேவைக்கேற்ப சில உதாரணங்களையும் கொடுக்கலாம்.நேர்மையாக பதிலலிக்கவும்.தெரியவில்லை என்றால், தெரியவில்லை என்று கூறுவதே சிறந்தது

நேர்முகத் தேர்வின் போது எப்பொழுதும் முழு பனித்திறன் உடையவராகவே இருக்க வேண்டும்.நம்முடைய சொந்த விஷியங்களைப் பற்றி எதுவும் பேச்க் கூடாது.பேசும் போது ஓரளவிற்கு வடிகட்டியே பேச வேண்டும

நேர்முகத் தேர்வுக்கு பின்பு

நேர்முகத் தேர்வுக்கு முடிந்த உடன் எப்பொழுதும் நன்றி சொல்லவும் நேர்முகத் தேர்வு முடிந்த அடுத்த நாள் முறையாக ஒரு கடிதம் எழுதலாம்.அதில் நேர்முகத் தேர்வு நடத்தியவரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதலாம்.நம்முடைய் ஆர்வத்தையும் தெரியப்படுத்தலாம் ஒரு வேளை நீங்கள் தேர்வாகவில்லை என்றாலும்,உங்களுக்கு அந்த கம்பெனியில் சேரும் ஆர்வம் இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து நேர்முகத் தேர்வாளரிடம் தொடர்பு வைத்துக் கொள்ளவும் வேலைக் கிடைக்க வில்லையெனில் வருத்தப்பட்டு ஓரிடத்தில் நின்று விடாமல்,தொடர்ந்து அடுத்த முயர்ச்சியை எடுக்கவும்.தோல்வியே வெற்றிக்கு வழி.

தொலைப் பேசி மூலமாக நேர்முகத் தேர்வு

இந்த முறை நேர்முகத் தேர்வானது தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு புதிய சாதனையாகும்.இந்த முறையில் நேர்காணலுக்கு செல்லும் முன் சில திறமைகளை நன்றாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தகவல்களைப் பறிமாறிக் கொள்ளும் முறை(பேசும் திறன்)

விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட பொருளில்/விஷயத்தில் கூர்மையான அறிவினைக் கொண்டிருத்தல் அந்த நேரத்திற்கான புத்திசாலித்தனம் தொலைப் பேசி மூலமாக நேர்முகத் தேர்வுக்குத் தயாராகும் முறை பேச ஆரம்பிக்கும் முன்பு கம்பெணி பற்றிய அடிப்படை விஷியங்களையும்,தேர்வு செய்பவரின் பெயர்,பதவி போன்றவற்றை தெளிவாகக் கேட்டுக் கொள்ள வேண்டும்

உங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைக் கொடுக்கவும்

பதில் கொடுக்கும் முன் உங்களின் கவணம் சிதறாமல் பார்த்துக் கொள்ளவும் பதற்றப் படக் கூடாது.ஏனெனில் பதற்றமானல் குரலில் தடுமாற்றம் ஏற்படும் தெளிவாகவும்,சுருக்கமாகவும் பேச வேண்டும் கேட்கப்படும் கேள்வி சரியாகப் புரியவில்லையெனில் மீண்டும் தெளிவாகக் கேட்டு பதிலலிக்க வேண்டும் உங்களின் பதிலை யோசித்து வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாகக் கூறலாம் இது போன்று நேர்முகத் தேர்விற்கு செல்லும் முன் வீட்டிலேயே அடிக்கடி பேசிப் பார்க்கலாம்

urs
Dr.Star Anand ram
Personality development trainer
9790044225
www.v4all.org