Showing posts with label counseling center in coimbatore. Show all posts
Showing posts with label counseling center in coimbatore. Show all posts

Tuesday, March 8, 2016

பெண் கடவுள் சிலை

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க , ஒரு சிற்பியை அணுகி சென்றார் . அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்
சிற்பி செதுக்கிய இரண்டு சிலைகளும் ஒரே மாதிரி இருப்பதை கவனித்தார்

உடனே பணக்காரர் ” ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள் ? ” இல்லை இந்த இரண்டு சிலைகளும் வேறு வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே “இல்ல ஐயா கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது” என்றார்

பணக்காரர் ஆச்சரியத்துடன் ” என்ன சொல்றீங்க மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை… எந்த பாகமும் உடையக்கூட இல்லையே ” எனக்கேட்டார்

“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது பாருங்கள்” என்றார் சிற்பி

“ஆமாம் ….அது சரி ..இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள் ? ” என்று கேட்டார் பணக்காரர்

“இது கோவில் கோபுரத்தில் நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை ” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி

பணக்காரர் வியப்புடன் ” நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள் ? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய் முட்டாள் ” என்றார்

“அந்த சிலையில் கீறல் இருப்பது எனக்கு தெரியுமே ..எப்போது அந்த கோவில் வழி சென்றாலும் எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே ..அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன் ” என்றார் சிற்பி

நீதி : அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே உன் மனத்திருப்திகாக வேலை செய்.

Friday, March 4, 2016

நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்




நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்


எண்நட்சத்திரங்களதெய்வங்கள்
01 அஸ்வினி  ஸ்ரீ சரஸ்வதி தேவி
02 பரணி  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03 கார்த்திகை  ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04 ரோகிணி  ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05 மிருகசீரிடம்  ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06 திருவாதிரை  ஸ்ரீ சிவபெருமான்
07 புனர்பூசம்  ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08 பூசம்  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09 ஆயில்யம்  ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10 மகம்  ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11 பூரம்  ஸ்ரீ ஆண்டாள் தேவி
12 உத்திரம்  ஸ்ரீ மகாலக்மி தேவி
13 அத்தம்  ஸ்ரீ காயத்திரி தேவி
14 சித்திரை  ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15 சுவாதி  ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16 விசாகம்  ஸ்ரீ முருகப் பெருமான்.
17 அனுசம்  ஸ்ரீ லக்மி நாரயணர்.
18 கேட்டை  ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19 மூலம்  ஸ்ரீ ஆஞ்சனேயர்
20 பூராடம்  ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21 உத்திராடம்  ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22 திருவோணம்  ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23 அவிட்டம்  ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24 சதயம்  ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25 பூரட்டாதி  ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26 உத்திரட்டாதி  ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27 ரேவதி
ஸ்ரீ அரங்கநாதன்.

பெண்கள் உடல் நலம்சரியில்லாத பொது கணவனிடம் விரும்பும் சில எதிர்பார்ப்புகள் என்ன...?

பெண்கள் உடல் நலம்சரியில்லாத பொது கணவனிடம் விரும்பும் சில எதிர்பார்ப்புகள் என்ன...?
சில ஓர் வீட்டில் ஆண்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பெண்கள் ஒற்றை ஆளாக நின்று அவரது உடல்நலம் மற்றும் வீட்டு வேலைகளை சரி செய்துவிடுவார்கள். ஆனால், ஓர் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அந்த வீடே ஒன்றிணைந்து செயல்பட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், பெண்களின் அளவுக்கு ஆண்களால் செயல்பட முடியாது என்பது தான் உண்மை.
பெண்கள் தங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், ஆண்கள் விழுந்து விழுந்து கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் சில வீட்டு வேலைகள், தங்கள் மீது அக்கறை அரவணைப்பு காட்டினாலே போதும் என்று தான் எதிர்பார்கிறார்கள்.....
அரவணைப்பு..!
மனதளவிலான அரவணைப்பு ஓர் பெண்ணுக்கு மிகவும் அவசியம். மாத்திரை, மருந்துகளை விட நோய்வாய்ப்பட்டு இருப்பவருக்கு உறுதுணையாக இருக்க கூடிய ஓர் நபர் தான் தேவை. இந்த அரவணைப்பு மனதளவில் பெரும் பலத்தை கொடுத்து விரைவாக மீண்டுவர உதவும்.
அக்கறை...!
அவர்களது உடல் ரீதியாக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களால் வேலைகள் செய்ய முடியாத போது உடனிருந்து உதவ வேண்டும். பெண்கள் பெரும்பாலும் அனைத்து உதவிகளும் செய்வார்கள், ஆனால், ஆண்கள் அவ்வாறு செய்வது இல்லை. அவர்களை கழிவறைக்கு கூட்டி செல்வதில் இருந்து, குளிப்பாட்டி, உடை மாற்றுவது வரை உறுதுணையாக இருந்து உதவி அக்கறையாக இருக்க வேண்டும்.
உணவு ..!
உணவு சார்ந்து பெண்கள் தான் ஆண்களுக்கு அறிவுரை கூறுவார்கள். ஆனால், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது அவர்களே அதை மறந்துவிடுவார்கள். எனவே, அந்த தருணத்தில் தான் நாம் அதை அவர்களுக்கு மீண்டும் எடுத்துரைக்க வேண்டும். கண்டிப்பாக சரியாக உணவருந்த மாட்டார்கள், நீங்கள் தான் அவர்களை கட்டாயப்படுத்தி உணவருந்த கூற வேண்டும்.
மருத்துவம்
பெரும்பாலும் அனைவரின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளும் பெண்கள், அவர்களுக்கு ஏதேனும் என்றால், மருத்துவம் எல்லாம் தேவை இல்லை அதுவாக சரியாகிவிடும் என்று கூறிவிடுவார்கள். எனவே, சரியான நேரத்தில் சிகிச்சைக்கு அழைத்து செல்ல வேண்டும், மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள கூற வேண்டும்.
வீட்டு வேலைகள்
பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத போது, ஆண்கள் வீட்டு வேலைகள் செய்வது எந்த தவறும் இல்லை. ஆனால், பெரும்பாலும் ஆண்கள் பெண்களுக்கு உடல்நிலை சரியில்லை எனில், வீட்டு வேலைகளை அப்படியே விட்டுவிடுவார்கள். மீண்டும் உடல்நலம் சரியாகி வந்து பெண்கள் தான் அதை செய்ய வேண்டியிருக்கும். இப்படிபட்ட சூழலில் கணவனுக்கு தெரிந்த வேலைகளை ஈடுபாடுடன் விரும்பி செய்தால் மனைவி ஆனந்தம் கொள்வாள்.

Saturday, December 12, 2015

இயற்கையின் சிறப்பு பெண்

தாய் - கருவில் சுமப்பவள்!
தாரம் - கழுத்தில் சுமப்பவள்!!

தாய் - பெத்தெடுப்பவள்!
தாரம் - தத்தெடுப்பவள்!!

தாய் - இதயத் துடிப்பு தந்தவள்!!
தாரம் - இயக்கத்தில் துடிப்பு தருபவள்!!

தாய் - அனைவருக்கும் முதல் தொட்டில்!
தாரம் - இரண்டாவது தொட்டில்!!

தாய் - உலகில் முதல் தெய்வம்!
தாரம் - தாய்க்கு நிகரான தெய்வம்!!

தாய் - பந்தய களம்வரை அழைத்து வருபவள்!
தாரம் - பந்தயத்தில் பங்கு பெறுபவள்!!

தாய் - உயிர்!
தாரம் - உடலும் உயிரும்!!

தாய் - நேற்று இன்று!
தாரம் - இன்று நாளை!!

தாய் - உலகின் தோற்றம்!
தாரம் - உலகின் வளர்ச்சி!!

தாரம் - இல்லாமல் அமையாது சிறந்த தாய்மை!!!
தாய்மை - இல்லாமல் அமையாது சிறந்த பெண்மை!!!

இயற்கையின் சிறப்பு பெண்மையின் படைப்பு!!!
பெண்மையின் சிறப்பு தாய்மையில் இருக்கு !!!

Monday, November 2, 2015

தேர்ச்சியையும், வளர்ச்சியையும் தரும் சகல கலா வல்லி மாலை

தேர்ச்சியையும், வளர்ச்சியையும் தரும் சகல கலா வல்லி மாலை 

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் முன்டாசு கவி பாரதி. உழவுக்கு வந்தனை செய்யும் நாள் தை திருநாள். தொழிலுக்கு வந்தனை செய்யும் திருநாளே ஆயுத பூஜை. 

சொற்ப்போர், மற்போர், விற் போர், ஒப்பனை அலங்காரம் முதலான அணைத்து கலைகளுக்கும் அதிபதி அன்னை கலைவாணியே. 

அகஸ்திய முனி அருளிய சரஸ்வதி த்வாதச நாம ஸ்தோத்ரத்தில். 

அணுரூபே மஹாரூபே விச்வரூபே நமோ நம:
அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:

என்கிறார். அக்காலத்திலேயே அணுத்துகள் இருந்து இருக்கிறது. அனுவிற்கு அணுவாகி என்கிறார் மாணிக்க வாசக பெருமான். ஔவையார், கம்பர் என அக்கால கவிங்கர்கள் பலர். உடல் அணு, அணுத்துகள் பற்றி குறிப்பிட்டு உள்ளார்கள். 

ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:

அக்காலத்திலேயே விஞ்ஞானம் இருந்து இருக்கிறது. விஞ்ஞானம் என்கிற சொல்லும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது சித்தர்களையும், ரிஷிகளையும் விட பெரிய விஞ்ஞானிகள் உண்டோ?

எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே. நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும்.

குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்ப்புதங்களும் செய்தவர். அவர் இயற்றிய சகல கலா வல்லி மாலையை சொன்னால். உங்களுக்கு சகலமும் நடக்கும், சர்வமும் கிடைக்கும் என்றெல்லாம் அடியேன் ஓவரா பில்ட் அப் செய்ய விரும்பவில்லை. 

ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒன்றில் தனி தன்மை, திறமை இருக்கும். அதை சிலர் உணர்வதில்லை. சிலர் உணர்ந்தும் அதை வெளிபடுத்த. அதன் மூலம் பணம், புகழ் பெறும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. 

இந்த சகல கலா வல்லி மாலையை நீங்கள் சொல்ல, சொல்ல. உங்களுக்கு இயற்க்கையாக எதில் திறமை உள்ளதோ. அந்த திறமையை நீங்கள் உணர்வீர்கள். உங்களின் திறமைக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் உங்களுக்குள் உள்ள கலை திறமை நீங்கள் சகல கலா வல்லி மாலையை சொல்ல, சொல்ல அது மேலும் வளரும். உங்களின் உள்ளொளி பெருகி. உங்கள் முகத்தினிலே ஒரு வித தேஜஸ் வரும். உங்களின் விதி கூட. இதனால் சற்று மாறும். மாபெரும் சபைகளில் நீங்கள் நடந்தால் உங்களுக்கு மாலைகள் விழும். கலைவாணியின் அருளோடு. கடுமையான பயிற்ச்சியின் மூலம். உங்களுக்கு வராத சில கலைகளை கூட கற்று அதில் திறமையை வளர்த்து கொள்ளலாம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சகல கலா வல்லி மாலையை ஓதி. நீங்கள் விஜயம் பெற அதை இங்கே தருகிறேன். 

விஜய தசமி அன்று தான் இதை நீங்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இன்றிலிருந்தே கூட ஆரம்பிக்கலாம். 

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? ஜகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1 

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால் 
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2 

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3 

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5 

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6 

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7 

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8 

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9 

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!
urs




Friday, October 16, 2015

வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெற முடியாத உன்னதமான விஷயங்களில் ஒன்று

வாழ்க்கையில் இழந்தால் திரும்பப் பெற முடியாத உன்னதமான விஷயங்களில் ஒன்று காலம். வாழ்க்கை என்ற பெயரில் எவ்வளவு காலம் நமக்கு எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிய மாட்டோம். செயல்படுகிறோமோ, வீணடிக்கிறோமோ காலம் இரண்டிலும் செலவாகிக் கொண்டே தான் போகின்றது. காலம் செல்லச் செல்ல நாம் மரணத்தினை நெருங்கிக் கொண்டே போகிறோம். அது எத்தனை நெருக்கம் என்பதை அறியாததால் அதற்கு இன்னமும் நிறைய தூரம் இருக்கிறது என்ற பிரமையில் இருந்து விடுகிறோம்.
காலத்தின் மதிப்பைக் குறிப்பிடும் போது ஒரு நிமிடத்தின் மதிப்பை அறிய புறப்பட்டுப்போன ரயிலைத் தவற விட்டவரைக் கேட்க வேண்டும,. ஒரு நொடியின் மதிப்பை அறிய விபத்திலிருந்து தப்பியவரைக் கேட்கவேண்டும், ஒரு மில்லிசெகண்டின் மதிப்பை அறிய ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவரைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள்.
பணத்திற்கு தரும் முக்கியத்துவத்தை நாம் அதை விடப் பல மடங்கு மதிப்புள்ள காலத்திற்குத் தருவதில்லை. இழந்த செல்வத்தை ஒருவன் மீண்டும் சம்பாதிக்க முடியும். ஆனால் இழந்த காலம் இழந்தது தான்.
ஜனனம் முதல் மரணம் வரை நமக்கு அளக்கப்பட்ட அளவான காலத்தை பெரும்பாலான சமயங்களில் நாம் செலவு செய்வதில்லை. மாறாக அந்த காலப் பொக்கிஷம் நம்மிடமிருந்து நிறையவே திருடப்படுகிறது என்ற உண்மை நமக்கு புலப்படாமலேயே போய் விடுகிறது. நம்மிடமிருந்து பணமோ, சொத்தோ திருடப்பட்டால் கொதித்தெழுகிற நாம் நம் காலம் திருடப்படுவதில் கொதித்தெழுவதில்லை என்பது மட்டுமல்ல அப்படி திருட்டுப் போக நாம் முட்டாள்தனமாக உதவியும் செய்கிறோம்.
காலப் பொக்கிஷம் நம்மிடம் இருந்து எப்படியெல்லாம் திருட்டுப் போகிறது, அதைத் தடுத்து நிறுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பார்ப்போமா?
1) தொலைக்காட்சி – டெலிவிஷன் என்று சொல்லப்படும் தொலைக் காட்சிப் பெட்டியை முட்டாள் பெட்டி என்று பலரும் கூறுவதுண்டு. மூளையை மழுங்கடிப்பதில் அதற்கு இணை வேறு எதுவும் இல்லை என்பதால் அப்படி அழைக்கப்படுகிறது. அதை காலத் திருட்டுப் பெட்டி என்று அழைப்பது மேலும் பொருத்தமாக இருக்கும். நேரம் போவதே தெரியாமல் அதன் முன்னால் அமர்ந்து கொண்டு நாம் வீணாக்கும் காலத்திற்கு அளவே இல்லை. அதை முழுமையாக நாம் ரசித்து மகிழ்கிறோமா என்றால் அப்படியும் சொல்ல முடியாது. பிடிக்கிறதோ இல்லையோ சேனல்களை மாற்றிக் கொண்டே எதிலாவது ஒரு நல்ல சுவாரசியமான நிகழ்ச்சி எதிலாவது போட மாட்டார்களா என்ற எதிர்பார்த்து காலத்தை வீணாக்குகிற வேலையை நம்மில் பலரும் செய்கிறோம். பிடித்த நிகழ்ச்சி என்றாலும் கூட இடையிடையே நிகழ்ச்சி நேரத்தை விட அதிகமாக விளம்பரங்கள் ஒளிபரப்பாவதை வேறு வழியில்லாமல் (?) பார்க்க நேரிடுகிறது. பல சமயங்களில் ஐந்து நிமிடங்கள் பார்க்கிறேன் என்று அமர்ந்து அதை மணிக்கணிக்கில் பார்த்து விட நேர்ந்து விடுகிறது. சில தொடர் நிகழ்ச்சிகளோ தினம் தினம் கண்டிப்பாக பார்க்கக் கட்டாயப்படுத்தும் பழக்கமாகி விடுகிறது.
தொலைக்காட்சியில் வீணாக்கும் நேரத்தை எத்தனையோ வழிகளில் நம் நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்த முடியும். இந்த உண்மையை மனதில் ஆழமாக உணர்கையில் இந்த வகைக் காலத் திருட்டை நாம் தவிர்க்க முடியும். முக்கியமாக குறிப்பிட்ட ஒருசில நல்ல நிகழ்ச்சிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பார்ப்பது என்று முடிவு செய்து கொண்டு அதை மட்டுமே பார்த்து மற்ற நேரங்களில் தொலைக்காட்சி பெட்டியை அணைத்து வையுங்கள். பிடித்த நிகழ்ச்சிகள் பார்க்கும் போதும் இடையிடையே விளம்பரங்கள் வரும் போது வேறு சேனலில் என்ன இருக்கிறது என்று வெறுமனே பார்க்கப் போகாமல் அந்த இடைவெளி நேரங்களில் வேறு சிறு சிறு வேலைகளைப் பாருங்கள். இந்த விதத்தில் நீங்கள் காலத் திருட்டை பெருமளவு தடுத்து விடலாம்.
2) அலை பேசி – செல் போன் என்றழைக்கப்படும் அலைபேசி அடுத்த பெரிய காலக் களவாணி என்று சொல்லலாம். அலை பேசியில் மணிக்கணக்கில் பேசி காலத்தை வீணாக்குவது இக்காலத்தில் இளைய தலைமுறையிடம் நிறையவே நாம் பார்க்க முடிகிறது. அலைபேசியில் பேசக் கட்டணத்தைக் குறைத்தும், அடியோடு விலக்கியும் சலுகை செய்யப்படுவதால் அதை முழுமையாகப் பயன்படுத்துகிறேன் பேர்வழி என்று சொல்லி காலத்தை முழுமையாக வீணாக்குகிற முட்டாள்தனத்தை பலரும் செய்கிறோம்.
அலைபேசியில் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்து விட்டு உடனடியாக அணைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்படிச் செய்வதன் மூலம் உங்கள் நேரத்தை மட்டுமல்ல அடுத்தவர் நேரத்தையும் நீங்கள் வீணாக்காமல் தவிர்க்கிறீர்கள்.
3) ஒழுங்கின்மை – நமது வாழ்க்கை முறையில் ஒழுங்கின்மை இருக்கும் போது காலம் பெருமளவில் வீணாகிறது. உதாரணமாக ஏதாவது ஒரு பொருளை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் எல்லா இடங்களிலும் தேடி காலத்தை வீணாக்குகிற வேலையைப் பலரும் செய்வதுண்டு. அது போல செய்கிற வேலையில் ஒழுங்குமுறை இல்லாத போது அது தவறாகப் போக வழி இருக்கிறது. அந்த வேலையை இரண்டாவது முறையாகச் செய்தாலும், திருத்தம் செய்ய முனைந்தாலும் அதனால் காலம் தேவை இல்லாமல் வீணாகிறது.
வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்கப் பழகுங்கள். உபயோகப்படுத்திய பிறகும் அதனதன் இடத்திலேயே வைக்க நீங்கள் பழகிக் கொண்டால் “தேடுதல்” என்ற பெயரில் நீங்கள் காலத்தை வீணாக்க நேரிடாது. அது போல வேலை செய்யும் போதும் ஒரு ஒழுங்குமுறையோடு நீங்கள் செய்தீர்களானால் குறைவான நேரத்தில் நிறைவான வேலையை உங்களால் முதல் முறையிலேயே செய்ய முடியும். காலத்தையும் சேமிக்க முடியும்.
4) தேவையற்ற செயல்கள், பேச்சுகள் – நமக்கு சம்பந்தமில்லாத வேலைகளை நாமாகவே இழுத்துப் போட்டுக் கொண்டு அவற்றில் ஈடுபடுவதும் காலத்தை நம்மிடம் இருந்து திருடிக் கொள்கிறது. பல நேரங்களில் நாம் அடுத்தவர் வேலையைக் கூட செய்து கொண்டிருக்க நேரிடலாம். ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அடுத்தவருக்கு உதவ முனைவது வேறு, தேவையே இல்லாமல் அடுத்தவர் வேலையை நாம் செய்வது வேறு. இந்த இரண்டிற்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கிறது. அது போல ஊர்வம்பு பேசுவதிலும் காலம் நிறைய வீணாகிறது.
எனவே தேவையில்லாமல் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத, உங்கள் முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் உதவாத செயல்களை செய்யப் போகாதீர்கள். எந்த வேலையில் ஈடுபடும் முன்னும், அடுத்தவர் பற்றி பேசும் முன்னும் அது உங்கள் வேலை தானா, அதற்கு அவசியம் உள்ளதா என்ற ஒரு சிறிய கேள்வியைக் கேட்டுக் கொண்டால் அது அந்த வகைக் காலத் திருட்டைத் தவிர்க்கும்.
உங்கள் காலம் திருடப்படுகிறதா?
5) திட்டமிடத் தவறுதல் – முன் கூட்டியே நம் காலத்தைத் திட்டமிடத் தவறும் போது காலம் நம்மிடமிருந்து அர்த்தமில்லாத வழிகளில் திருட்டுப் போவதை நாம் தடுக்க முடிவதில்லை. ஒரு நாளில் என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று முன்பே திட்டமிட்டு வைத்திருந்தால் உங்கள் கவனம் எல்லாம் அந்த நாளில் செய்ய வேண்டிய வேலைகளில் தான் இருக்குமே ஒழிய மற்ற அனாவசிய வேலைகளில் கவனம் செலுத்த தங்களுக்கு நேரமிராது.
உங்கள் வாழ்க்கையில் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் லட்சியங்களை நீண்ட கால லட்சியம், குறுகிய கால லட்சியங்கள் என்று திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நாட்களைத் திட்டமிடும் போது இருவகை லட்சியங்களை அடைவதற்கும் செய்ய வேண்டிய செயல்களுக்கு கண்டிப்பாக இடமிருக்கட்டும். எப்போதும் அப்படிக் ஒழுங்காகத் திட்டமிட்டு லட்சியங்களில் எப்போதும் கவனமாக இருந்தால் காலம் கண்டிப்பாக உங்களிடமிருந்து திருட்டுப் போகாது.
காலம் இந்த வகைகளில் மட்டும் தான் என்றில்லை இன்னும் பல வகைகளிலும் நம்மிடம் இருந்து திருடப்படுகிறது என்றாலும் இவை ஐந்தும் காலத் திருட்டில் பெரும் பங்கு வகிப்பவை. இந்த ஐந்து வகைத் திருட்டுகளை நீங்கள் தடுத்தால் நீங்கள் விரும்பியதை எல்லாம் செய்ய உங்களுக்குத் தேவையான காலம் கண்டிப்பாகக் கிடைக்கும். ’எனக்கு நேரமில்லை’ என்ற சப்பைக்கட்டு கட்டி செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருக்க நேரிடாது. செய்ய வேண்டியவற்றை செய்ய முடிந்த எந்த மனிதனும் தன் முன்னேற்றம் உறுதியானது என்பதில் சந்தேகப்படவும் அவசியமில்லை. எனவே குறுகிய வாழ்வில் மிகுதியாய் சாதிக்க காலத்தை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்துங்கள்!

Wednesday, September 16, 2015

ஈசனை ஏன் வணங்கவேண்டும் ?

ஈசனை ஏன் வணங்கவேண்டும் ?
நமச்சிவாய
சிவத்தை ஜீவனாக உணர்வோர் பாதம் பணிகிறேன்
எத்தனையோ தெய்வம், எத்தனையோ முறைகள், எத்தனையோ வழிகள் என்று சிறுவயது முதல் வழிபட்டு வந்த என்னை, எல்ல இடத்திற்கும் அலையவிட்டு, மெய்யை உணர்த்தி ஈசன் தான் முழுமுதற்கடவுள் என்றுணர்த்தி நின்னை பற்ற வைத்த நின் கருணையால் விளைந்ததே இப்பதிவு
# எம் தேவையை கேட்டு அழுது புலம்பி பெறாமல், எம் தேவையை எனக்கு முன் அறிந்து அருளும் கருணை,
# அந்த பூஜை, இந்த நேரம், அந்த வேண்டுதல் என்று எதையும் செய்யாமல் தூய அன்புடன் வணங்கினால் அகிலத்தையே அருளும் கருணை.
# அங்கு சென்று கேட்க வேண்டும், இங்கு சென்று பணியவேண்டும், என்று இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைத்து அருளும் கருணை.
# நான் எதை பெற்றாலும் நின் மூலம் தான் பெற்றேன் என்று தன்னை வெளிக்காடமல் அருளும் கருணை.
# நான் எங்கு சென்றாலும், எதைசெய்தாலும் என்னுடன் இருந்து காக்கும் கருணை.
# நீ பொய், நீ இல்லை என்று உன்னை விட்டு விலகிசென்றாலும் ஈர்த்து ஆண்டு அருளும் கருணை.
# உன் இடம் பெற்றதை கொண்டு தெய்வமான பலர் இருக்கு, நீ தான் மெய்தெய்வம் என்று வெளிக்காடமல் அவர்கள் மூலமாகவே அருளும் கருணை.
# ஆயிரம் மந்திரம் கூறி வணங்க வேண்டாம், “ நமசிவய “ என்று ஐந்து எழுத்து மந்திரம் மூலம் எதையும் பெறவைக்கும் கருணை.
# உற்றார் உறவினர் என்று அனைவரும் விடுசெல்லும் மயானதில்கூட இருந்து யமக்கு அருளும் கருணை.
# எவராலும் அருளமுடியாத பிறவிப்பிணி அறுத்து என்னை உன்னையாகும் மாபெரும் கருணை.
இன்னும் எதனை எத்தனையோ நின் கருணையை சொல்ல இப்பிறவி போதாது பெருமானே.
உணர்ந்ததை கூட பதியமுடியாமல் இருக்கவைக்கும் நின்கருனையுடன் திருச்சிற்றம்பலம்
அடியேன்
அங்கமுத்து குமார்

Friday, September 11, 2015

நூறாவது குரங்கு - மன அலைகள் மூலமாகவே

எந்தப் புதிய பழக்கத்தையும், வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒரு
கணிசமான எண்ணிக்கையை எட்டியவுடன் மன அலைகள்
மூலமாகவே வெகுதூரம் அந்தப் புதிய பழக்கம் அல்லது
வழிமுறை உடனடியாகவும் தானாகவும் பரவுகிறது என்று
கண்டுபிடித்தனர். அந்தக் கணிசமான எண் என்ன என்று
துல்லியமாகச் சொல்லா விட்டாலும்
உதாரணத்திற்கு "நூறு" என்ற எண்ணைக் குறியீடாகச்
சொன்னார்கள்.
நூறாவது குரங்கு
**********************************
1952 ஆம் ஆண்டு சில ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள்
கோஷிமா என்ற தீவில் ஒரு வகைக் குரங்கினத்தின் இயல்புகளை
ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். அந்தக்
குரங்குகளுக்கு உணவாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு தந்து
வந்தார்கள். அவர்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெட்ட
வெளியில் போட குரங்குகள் அவற்றை எடுத்து சாப்பிட்டு
வந்தன. பெரும்பாலும் ஈர சகதியில் விழுந்திருந்த கிழங்கை
எடுத்து சாப்பிட்ட குரங்குகள் அந்த சகதியின் சுவையும் கிழங்கோடு
சேரவே, அதை சிரமத்துடன் சாப்பிட்டன. அதில் பதினெட்டு
மாதப் பெண் குரங்கு ஒன்று மட்டும் அந்தக் கிழங்கை
பக்கத்தில் இருந்த ஓடையில் அந்த சகதியை நீக்கி சாப்பிட்டது. அது
சுவை குறையாததாக இருக்கவே அப்படிக் கழுவி சாப்பிடும்
வித்தையை தன் தாயிற்குக் கற்றுத் தந்தது. அதைப் பார்த்த மற்ற
சில குரங்குகளும் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி சாப்பிட
ஆரம்பித்தன. ஆனால் வயதான குரங்குகள் மட்டும்
பழையபடி சகதியுடன் இருந்த கிழங்குகளையே சாப்பிட்டன
என்றாலும் இளைய குரங்குகள் கிழங்குகளைக் கழுவி சாப்பிடும்
வழக்கத்தை மேற்கொள்ள ஆரம்பித்தன.
கிட்டத்தட்ட 1958 ஆம் ஆண்டு ஒரு கணிசமான
எண்ணிக்கையுடைய குரங்கினம் சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கழுவி
சாப்பிட ஆரம்பித்தவுடன் கிழங்கைக் கழுவாமல் சாப்பிடும்
குரங்கே இல்லை என்கிற நிலை வந்தது. அந்தக் குறிப்பிட்ட
சமயத்தில் அந்தத் தீவில் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட
எல்லா தீவுகளிலும் உள்ள குரங்குகளும் உடனடியாக இந்தப்
புதிய முறையைக் கடைபிடிக்க ஆரம்பித்தது தான் அதிசயம்.
அந்த ஆராய்ச்சியாளர்கள் எந்தப் புதிய பழக்கத்தையும்,
வழிமுறையையும் பயன்படுத்துவோர் ஒரு கணிசமான எண்ணிக்கையை
எட்டியவுடன் மன அலைகள் மூலமாகவே வெகுதூரம் அந்தப்
புதிய பழக்கம் அல்லது வழிமுறை உடனடியாகவும்
தானாகவும் பரவுகிறது என்று கண்டுபிடித்தனர். அந்தக்
கணிசமான எண் என்ன என்று துல்லியமாகச்
சொல்லா விட்டாலும் உதாரணத்திற்கு "நூறு"
என்ற எண்ணைக் குறியீடாகச் சொன்னார்கள்.
இந்த தத்துவத்தை "நூறாவது குரங்கின் விளைவு" (Hundredth
Monkey Effect) என்ற புத்தகத்தை கென் கேயஸ் (Ken Keyes)
என்பவர் எழுதி பிரபலமாக்கினார். அவரும் அவருக்குப் பின்
வந்த ஆராய்ச்சியாளர்கள், மற்றும் சிந்தனையாளர்களும்
இதே தத்துவம் மனிதர்களுக்கும் பொருந்தும் என்று
கருதினர். அந்த ஆரம்பக் கணிசமான தொகையை
எட்டுவது தான் கடினமான விஷயம். அந்தக் கணிசமான
தொகையை எட்டியபின் அந்த சிந்தனைகளும்,
செயல்களும் உலகின் பல்வேறு பாகங்களில் உள்ள
மனிதர்களிடையே தானாக ஏற்பட்டு பரவும் என்பது அவர்கள்
கருத்தாக இருந்தது.
இதே கருத்தை வாழ்க்கை அலை (Lifetide) என்ற புத்தகத்தில்
லயால் வாட்சன் (Lyall Watson) என்ற எழுத்தாளரும்
உதாரணங்களுடன் கூறுகிறார். இப்போது இந்தக் கருத்து
பரவலாகப் பலம் பெற்று வருகிறது.
எந்தப் புதிய நன்மையையும் சிந்திப்பதும், கடைப்பிடிப்பதும்
ஆரம்பத்தில் கடினம். அப்படி ஆரம்பத்தில் கடைபிடிப்பவர்களை
யாரும் ஆரம்பத்தில் உற்சாகப்படுத்துவதில்லை. மாறாக
சந்தேகப் பார்வையுடனேயே பார்க்கிறார்கள். பரிகசிக்கிறார்க
ள். ஆனாலும் தாக்குப்பிடித்து மனபலத்துடன் புதிய நல்ல
விஷயங்களை சிந்தித்துப் பின்பற்றுவோர் இருக்கத்தான்
செய்கிறார்கள். உண்மையில் சரித்திரம் அவர்களாலேயே
எழுதப்படுகிறது என்று கூட சொல்லலாம்.
அவர்களுடன் ஒரு கணிசமான ஒத்த சிந்தனையுள்ளவர்கள்
சேர்ந்து செயல்படும் போது பெரிய மாற்றங்கள்
தானாக ஏற்பட ஆரம்பிக்கின்றன.
நூறாவது குரங்கு ஒன்றைப் பின்பற்ற ஆரம்பித்தவுடன் அதிசயம்
நிகழ்ந்து பல இடங்களில் அதே வழக்கம் பின்பற்றப்படுகிறது
என்ற கோட்பாடு சிந்தனைக்குரியது. எத்தனையோ நன்மைகள் நிகழ,
எத்தனையோ பெரும் மாற்றங்கள் ஏற்பட இன்னும் ஒரு
நபரின் உதவி அல்லது பங்கு மட்டுமே கூட தேவைப்படலாம். ஏன்
அந்த ஒரு நபராக, நூறாவது குரங்காக, நீங்கள்
இருக்ககூடாது? உங்கள் பங்கும் சேர்ந்து அற்புதங்கள்
நிகழுமானால் அது மிகப்பெரிய பாக்கியம்
அல்லவா?
ஒவ்வொரு புதிய நல்ல சிந்தனை நடைமுறைப்படுத்தப்
படுவதை நீங்கள் காணும் போதும், ஒவ்வொரு நல்ல
மாற்றத்திற்காக சில முயற்சிகள் நடைபெறுவதை நீங்கள்
பார்க்கும் போது இந்த நூறாவது குரங்குத் தத்துவத்தை
நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ஏதாவது நல்ல
மாற்றங்களுக்கான வழிமுறைகள் புதியதாய் உங்கள்
மனதில் உருவாகுமானால் அதற்குப் பிள்ளையார் சுழி போட்டு
ஆரம்பியுங்கள். அது சரியா, நடைமுறைக்கு ஒத்து வருமா,
யாராவது பரிகசிப்பார்களோ என்ற தயக்கம் வேண்டாம்.
அதில் குறைகள் இருக்குமானால் அதைப் போகப் போக சரி
செய்து கொள்ளலாம். ஏனென்றால்
இன்று நாம் பயன்படுத்தும் எல்லாமே உருவான விதத்திலேயே
இருப்பனவல்ல. காலப்போக்கில் மெருகூட்டப் பட்டவை
தான். மேம்படுத்தப்பட்டவை தான்.
அதே போல் மற்றவர்கள் ஆரம்பித்த நல்ல மாற்றங்களிலும்
உற்சாகமாகப் பங்கு பெறுங்கள். அதற்கு
வலுவூட்டுங்கள். முதல் நூறில் ஒருவராக இருந்து பெரிய
மாற்றங்களுக்கு வித்தாக இருக்க முடிந்தால் அதல்லவா
அர்த்தமுள்ள வெற்றிகரமான வாழ்க்கை? இன்று நாம்
அனுபவிக்கும் எத்தனையோ நன்மைகள் இது போன்ற ஒரு சிலரால்
ஆரம்பிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டவையே அல்லவா? நம்
பங்கிற்கு நாமும் ஏதாவது நன்மையை இந்த உலகில் ஏற்படுத்தி
விட்டுச் செல்வதல்லவா நியாயம்?

Monday, August 10, 2015

அட்டமா சித்திக்கள்:

அட்டமா சித்திக்கள்:www.happy4all.org 

1. அணிமா
2. மஹிமா
3. லஹிமா
4. கரிமா
5. பிராத்தி
6. பிரகாமியம்
7. ஈசத்துவம்
8. வசித்துவம்

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.

அணிமா:
பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.
பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.

மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.

கரிமா:
இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.

பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.

பிரகாமியம்:
வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.

Wednesday, July 8, 2015

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன்இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும். பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பாட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப்பென்னிற்கும்மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர். இதை சில நாடுகளும்தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல்காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில்வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவுஇடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன. பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா ? முறையான பராமரிப்புஅற்ற காரனங்களுக்ககவே
அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது. முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட
பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை. சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத
ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று ? இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக்கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்

urs
www.v4all.org 

Saturday, June 13, 2015

- ‘ஆவினன் குடி’யாகிய பழநி

முருகப்பெருமானின் அறுபடை வீடு களுள் மூன்றாவது திருத்தலம்- ‘ஆவினன் குடி’யாகிய பழநி. இந்தத் தலம், உடலின் உயிர்நாடியான மணிபூரகத்தை (இதயம்) குறிப்பது என்பர். குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது.
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 55 கி.மீ. தூரத்திலும், மதுரையில் இருந்து 115 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது பழநி.
வையாபுரி’ என்றும் பழநிக்கு ஒரு பெயர் உண்டு.
பழநியில் மலைக்கோயில் தவிர ஆவினன்குடி கோயில், பெருவுடையார்- பெரியநாயகி கோயில், மாரியம்மன், அங்காளம்மன், படிப்பாறைக் காளியம் மன் ஆகிய அம்மன் கோயில்களுடன், விநாயகர் கோயில்கள் ஐந்து மற்றும் வேணுகோபாலர், லட்சுமி நாராயணர், சங்கிலி பரமேஸ்வரர், அகோபில வரத ராஜ பெருமாள் ஆகிய கோயில்களும் உள்ளன.
கொடைக்கானல் மலைக்கும் மேற்கு மலைத் தொடர்ச்சியில் இடம்பெற்றுள்ள வராக மலைக்கும் நடுவே அமைந்துள்ளது பழநி மலை. இது கடல் மட் டத்தில் இருந்து சுமார் 1,500 அடி உயரம் கொண்டது. பூமி மட்டத்திலிருந்து உயரம் 450 அடி.
Pazhani
‘அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று சிறப்பிக்கிறார் அருணகிரியார். இவர், பழநித் திருத்தலம் பற்றி திருப்புகழில் 90 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவற்றில்
பழநியை ‘ஆவினன்குடி’ என்றே குறிப்பிடுகிறார். மேலும் அவர், பழநி முருகனை ஞானமூர்த்தி, ஞானநாதா, ஞானாசிரியன், ஞானசொரூபன் என்றெல்லாம் அழைத்து மகிழ்கிறார். அருணகிரிநாதர் பழநி தண்டாயுதபாணியிடமிருந்து ஜப மாலை பெற்றார். இதை, ‘ஜப மாலை தந்த சற்குருநாதா திரு ஆவினன்குடி பெருமாளே’ என்ற திருப்புகழ் சொற்றொடரில் இருந்து அறியலாம்.
மலையடிவாரத்தில் மலையைச் சுற்றியுள்ள நகர்- ‘ஆவினன்குடி’ என்றும், மலை- பழநி மலை என்றும் அழைக்கப் பட்டன. தற்போது நகரம் மற்றும் மலையையும் சேர்த்தே ‘பழநி’ என்கின்றனர். ஒரு தலத்தில் இரு ஆலயங்கள் கொண்ட படை வீடு பழநி மட்டுமே.
அடிவாரக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார் முருகன். இதை ‘ஆதிகோயில்’ என்கிறார்கள்.
‘பழனங்கள்’ (வயல்கள்) சூழ்ந்ததால், இந்தத் தலம் ‘பழநி’ எனப்பட்டது. ‘சித்தன் வாழ்வென்று சொல்கிற ஊர் முன் காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றிருந்தது!’ என்று திருமுருகாற்றுப்படை உரையில், நச்சினார்க்கினியர் குறிப்பிடுவதால், ‘சித்தன் வாழ்வு’ என்ற பெயரிலும் பழநி அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சேரன் செங்குட்டுவனின் தாத்தா வேளாவிக்கோமான் ஆட்சி செய்த பகுதி பழநி. இவன் வழியில் வந்தவன் வையாவி கோப்பெரும் பேகன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆவியர் குல தலைவனான இவனது தலைநகராகத் திகழ்ந்ததால், பழநிக்கு ‘ஆவினன்குடி’ என்ற பெயர் வந்ததாம்.
ஒரு முறை கோபம் கொண்ட திருமால், திருமகளை புறக்கணித்தார். தனது பதியை அடைய திருமகள், இங்கு தவம் இருந்து பலன் பெற்றாள். விஸ்வாமித்திரர்- வசிஷ்டர் ஆகியோருக்கு இடையே நடந்த போரில் விஸ்வாமித்திரரது ஆயுதத்தை வென்றதால் அகம்பாவம் கொண்டது காமதேனு. இதனால் ஏற்பட்ட பாவம் தீர காமதேனு வழிபட்ட தலம் இது. ‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானை சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன்.
சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் ஈசனிடம் தண்டனை பெற்ற அக்னியும், வாயு பகவானும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இப்படி திரு= லட்சுமி, ஆ= காமதேனு, இனன்= சூரியன், கு= பூமி, டி= அக்கினி- வாயுபகவான் ஆகியோர் தவமிருந்து பலன் பெற்றதால் பழநி திருஆவினன்குடி என்று ஆனது.
அகத்தியர், ஒளவையார், நக்கீரர், சிகண்டி முனிவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக் கூத்தர், சாது சாமிகள், பாம்பன் சாமிகள், வள்ளிமலை சுவாமிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பாடிய திருத்தலம் இது.
Pazhani
ஒரு முறை நாரதரை வாழ்த்தி அபூர்வ மாங்கனி ஒன்றைக் கொடுத்தார் பிரம்மன். அந்த ஞானப் பழத்துடன் ஈசனை தரிசிக்கச் சென்றார் நாரதர். அதை தம் மைந்தர்களுக்குத் தர விரும்பினார் ஈசன். ஆனால், பழத்தை ஒருவருக்கே வழங்க முடியும். இதற்காக கணபதிக்கும் கந்தனுக்கும் போட்டி வைக்கப்பட்டது. ‘யார் முதலில் உலகை வலம் வருகிறார்களோ அவருக்கே கனி!’’ என்றார் சிவ பெருமான்.
‘பெற்றோரே உலகம்’ என்று தாய்- தந்தையரை வலம் வந்து விநாயகர் பழத்தைப் பெற்றுக் கொண்டார். மயில் வாகனத்தில் பயணித்து தாமதமாக வந்து சேர்ந்த முருகன், பழம் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு, கோவணத்துடன் தண்டாயுதபாணியாக தென்திசையில் வந்து சேர்ந்த இடம் சிவகிரி. சிவபெருமானும் உமையவளும் அங்கு வந்து, ‘அடியாருக்கு ஞானம் அருளும் ஞானப்பழம் நீ’ என்று முருகனை சமாதானப் படுத்தினர். அதனால் முருகன் வசிக்கும் மலை, ‘பழம் நீ’ என்று ஆகி, பிறகு ‘பழநி’ என்று மருவியது என்பர்.
பழநியின் கிரிவலப் பாதை சுமார் இரண்டேகால் கி.மீ. தூரம் உள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கப்பட் டுள்ளது. மலையின் நான்கு திசைகளிலும் மயில் மண்டபமும், அவற்றில் கல்லால் ஆன பெரிய மயில் உருவங்களும் உள்ளன.
கிரிவலப் பாதையில் மதுரைவீரன் சுவாமி, ஐம்முக விநாயகர் கோயில், சந்நியாசியப்பன் கோயில், அழகு நாச்சியப்பன் ஆலயம் ஆகியன உள்ளன. தவிர நந்தவனங்கள், திருக்கோயிலின் ஏழை மாணவர் இல்லம், நாகஸ்வர- தவில் இசைப்பள்ளி, சண்முக விலாசம் (அன்னதான சமாஜம்), நந்தனார் விடுதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
697 படிகள் கொண்டது பழநி மலை. மலைக்கோயிலை அடைய நான்கு தடங்கள் உண்டு. அவை: படிக்கட்டுப் பாதை, யானைப் பாதை, இழுவை ரயில் பாதை மற்றும் ரோப் கார் பாதை.
யானைப் பாதையின் தொடக்கத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. முருகனின் காவல் தெய்வமான இவரை வணங்கி விட்டே பக்தர்கள் மலையேறத் தொடங்குவர். வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் இவரை வணங்கிச் சிறப்பித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன் முதலாக பழநி ஆலயத்தில் இழுவை ரயில் அறிமுகமானது. ஆண்டு 1966. இதற்குக் காரணமானவர் காமராஜரது அமைச் சரவையில் அமைச்சராக இருந்த பக்தவச்சலம். இரண்டாம் வழித்தடம் 1981-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் இரு பெட்டிகளில் 32 பேர் பயணிக்கலாம். மலைக்குச் செல்ல சுமார் 8 நிமிடங்கள் ஆகின்றன. இந்த இழுவை ரயில்கள் காலை 5 முதல் இரவு 9 மணி வரை இயங்குகின்றன. விசேஷ காலங்களில் காலை 4 மணி முதல் இயங்கும்.
முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர் மற்றும் பூஜைப் பொருட்கள் எடுத்து வருவதற்காக ‘திரு மஞ்சனப் பாதை’ என்பது மலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை.
பழநி அடிவாரத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று. அவை: வையாபுரிக் குளம், சண்முக நதி, சரவணப் பொய்கை. சரவணப் பொய்கை ஒரு காலத்தில் கல் கிணறாக இருந்ததாம். சட்டிசாமி எனும் துறவி பிச்சை எடுத்த பணத்தால் அதைப் புதுப்பித்தாராம்.
புனித நீராடியபின் பாத விநாயகர், குழந்தை வேலாயுத சுவாமி, பெரிய நாயகி அம்மன்- பெரு வுடையார் கோயில்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கோயில்களை வழிபட்ட பின்னர் மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை வணங்க வேண்டும் என்பது மரபு.
மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் சூரசம்ஹாரம், சுப்ரமண்யர்- தேவசேனை திருமணக் காட்சிகள், காளத்திநாதருக்கு கண்களை அப்பும் கண்ணப்பன் மற்றும் வீரபாகு தேவர் ஆகியோரது சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் அருகே உள்ள மயில் மண்ட பத்திலிருந்து படியேற வேண்டும். வழியில் களைப்பாற மண்டபங்களும், விநாயகர், வள்ளி, இடும்பன் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. யானைப் பாதையில் தல வரலாற்றுச் சிற்பங்களுடன் வள்ளியைச் சோதிக்க வேடனாக வந்த முருகனின் திருவுருவங்களும், வள்ளியம்மன் சுனையும் உள்ளன.
மயில் மண்டபத்தில் கூத்தாடும் பிள்ளையாரை வணங்கி தொட்டியில் சிதறு தேங்காய் அடிக்கலாம். தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது, தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்.
மலைக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பிரதான கோயிலை, சேர மன்னன் சேரமான் பெருமாள் கட்டியதுடன், தினசரி பூஜை மற்றும் விழாக்கள் கொண்டாட மானியங்களும் அளித்துள்ளான். முருகன் சந்நிதி தெற்குச் சுவரின் வெளிப் புறம் குதிரை மீது கம்பீரமாகக் காட்சியளிக்கும் சேரமானின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.
பழநி திருக்கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மலைப் பாதை வழியாக வருவோர், 2- வது பிராகாரத்தை அடைவர். இங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம் உள்ளது. இங்கு வல்லப விநாயகர் சந்நிதி, கொடிமரம், அக்னி குண்டம், தங்க ரத மண்டபம் ஆகியவை உள்ளன.
முதல் பிராகாரம், பாரவேல் மண்டபத்திலிருந்து கோயிலைச் சுற்றிச் செல்கிறது. இதன் வட பாகத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர், நவவீரர் ஆகியோர் சந்நிதி. மலைக்கொழுந்தீஸ்வரர் சந்நிதியின் முன்புறத் தூண் இரண்டும் ரத வடிவில் அமைந்துள்ளன.
Pazhani
இதன் தென்கிழக்கில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு அவரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன் மற்றும் மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. இங்குள்ள சுரங்கப் பாதை, ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவடி வரை செல்கிறது என்றும், போகர் இறுதியாக இதில் நுழைந்து தண்டாயுதபாணியின் திருவடியில் ஐக்கியமானார் என்றும் கூறப்படுகிறது.
நவரங்க மண்டபம் அருகே உலோகத்தாலான சேவற்கொடி உள்ளது. இதன் மீது ஒரு சேவல் அடிக்கடி வந்து அமர்ந்து கூவுவது பழநியின் சிறப்புகளுள் ஒன்று. இதன் நிழலில் அமர்ந்து தியானிப்பது பக்தர்களது வழக்கம். இந்த மண்டபத்தில் சண்முகருக்கும், ஞான தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தியான சின்னக் குமாரருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இதை அடுத்து அர்த்த மண்டபம்; கர்ப்பக்கிரகம். கர்ப்பக் கிரகச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன.
பழநியாண்டவர் முன்பாக ‘மாக்கல்’ எனப்படும் பெரிய கல் ஒன்று உள்ளது. இது, பள்ளியறைக்கு எழுந்தருளும் முருகனின் திருவடியை (ஸ்ரீபாதம்) தாங்கும் மேடையாகக் கருதப்படுகிறது.
கருவறையின் கிழக்குப் பகுதி மாடத்தில் ஊது வத்தி தூபம் காட்டி, இஸ்லாமியரும் ‘பழநி பாபா’ என ஓதி வழிபடுகின்றனர்.
காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர், மாலையில் ராஜ அலங்காரத்தையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும்.
இங்குள்ள மற்றொரு சிறப்பு பிரம்மன் விக்கிரகம். இந்த பிரம்மன் அம்பு- வில்லோடு வேடுவ வடிவத்தில் காணப்படுகிறார்.
ஒரு முறை பிரம்மா, தானே முதன்மையானவர் என ஆணவம் கொண்டார். இதனால் சினம் கொண்ட ஸ்ரீருத்ரன், வேடுவனாக பிறக்கும்படி பிரம் மனுக்கு சாபமிட்டார். தன் தந்தை பிரம்மனுக்கு சாப விமோசனம் தரும்படி முருகனை பிரார்த்தித்துக் கொண்டார் நாரதர். பிரம்மன் தவறை உணர்ந்து இங்கு வந்து முருகனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார்.
திருநள்ளாறு சனி பகவானைப் போன்றே இங்குள்ள சனீஸ்வர பகவானும் சிறப்பானவர். திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனி யால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். எனவே, சனி தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது பழநி. அங்காரகனான செவ்வாயும், பழநி முருகனை வழிபட்டு நலம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம் .
தண்டாயுதபாணிக்கு கடம்ப மரமும் திரு ஆவினன்குடி முருகனுக்கு நெல்லி மரமும் ஸ்தல விருட்சங்கள்.
மலைக்கோயில் கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தி இடக் கையை இடையில் அமர்த்தி, ஞான தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி கோவணக் கோலத்தில் காட்சி தருகிறார் முருகன். ஸ்கந்த வடிவமான இது, போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. பாதரசம், மதார்சிஸ், தானகம், லிங்கம், கந்தகம், வீரம், பூரம், வெள்ளை, மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள்.
திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், இலவண பாஷாணம், பவளப் புற்று பாஷாணம், கௌரி பாஷாணம், ரத்த பாஷாணம், அஞ்சன பாஷாணம் ஆகியவையே நவபாஷாணங்கள் என்றும் கூறுவதுண்டு.
சாதி லிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரச கற்பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகியவையும் நவபாஷாணங்கள் எனப்படுகின்றன.
Pazhani
நவபாஷாணக் கலவையைக் கல்லாக்குவது, சித்து வேலை. இதை அறிந்தவர் அகத்தியர். அவரிடம் இருந்து கற்றவர் போகர்
இந்த விக்கிரகம் காற்று, நீர், எண்ணெய், தேன், நெய் ஆகியவற்றால் கரையாது. நெருப்பால் பாதிப் படையாது. தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவபாஷாணத்துக்கு உண்டு.
போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியை பராமரித்து வந்தனர்.
போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரி யின் அறிவுரைப்படி போகர், பழநி மலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னை பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லி மறைந்தார். அதன்படி தண்டபாணி வடிவை உருவாக்கி ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர்.
போகருக்கு பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலிப் பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவர் சந்ததியினருக்கு கோயில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் உள்ளது.
ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரது சமாதி உள்ளது. அதில் அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகத லிங்கமும் உள்ளன. இவற்றுக்கு தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.
நவபாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். ஏனெனில், இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே காரணம். மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும்.
தினமும் இரவில் முருகப்பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் காலையில் இது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சந்தனத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பின், மறு நாள் காலையில் பார்க்கும்போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதை துணியால் ஒற்றி எடுத்து தீர்த்தமாக வழங்குகின்றனர்.
தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத்தின்போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.
காலை பூஜையின்போது தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள். காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம். உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம். சாயரட்சையில் ராஜ அலங்காரம். ராக்காலத்தில் முதிய வடிவம்.
மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பாலசுப்பிரமணியர், விபூதி அதாவது ஆண்டிக் கோலம். ஒரு காலத்தில் செய்து வந்த பெண் அலங்காரம் தற்போது செய்யப்படுவது இல்லை.
மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் சாளக்கிராம ஸ்படிக லிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். இவர்களை தண்டாயுத பாணி பூஜிப்பதாக ஐதீகம்.
இங்கு பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது. ஓதுவார்களும், கட்டியக் காரர்களும் இறைவனின் புகழ் பாட மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது. (வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்) அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும். அங்கு பாதுகைகள், பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன. கடைசியாக அன்றைய வரவு-செலவு கணக்குகளை படித்துக் காட்டுவர். இறுதியில் நடை சாத்தப்படுகிறது.
மூலவர் சந்நிதி வழக்கமாக காலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும், கார்த்திகை மற்றும் திரு விழா நாட்களில் காலை 4 முதல் இரவு ராக்கால பூஜை முடியும் வரையில் திறந்திருக்கும். இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
பழநியில் பக்தர்களது காவடி பிரார்த்தனை பிரசித் தம். கயிலாயத்தில் இருந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை அகத்தியருக்குத் தந்தருளினார் இறைவன். அகத்தியரின் கட்டளைப்படி இந்த மலைகளை இடும்பன் என்பவன் பொதிகைக்குத் தூக்கிச் சென் றான். ஓய்வுக்காக ஓரிடத்தில் அவற்றை இறக்கி வைத்து விட்டு மீண்டும் எடுக்க முற்பட்டபோது, முடியவில்லை. காரணம் சிவகிரி மீது ஏறி நின்ற ஒரு சிறுவன். அவனுடன் போரிட்டு மாண்டான் இடும்பன். சிறுவனே முருகப் பெருமான் என்று உணர்ந்த இடும்பனின் மனைவி தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு முருகனிடம் வேண்டினாள்.
முருகன் அவ்வாறே அருளியதுடன் இடும்பனை தன் காவல் தெய்வமாக்கினார். அவனது விருப்பத்தின் படி பழநிக்குக் காவடி தூக்கி வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக வரமும் தந்தார். திருவிழா காலங்களில் பக்தர்கள்- தங்கக் காவடி, வெள்ளிக் காவடி, பால் காவடி, சந்தனக் காவடி உட்பட பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
பழநியின் தனிச்சிறப்பு பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது. இதை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும்போது பாஷாண சக்தியால் மருத்துவ குணம் பெறுகிறது.
பழநி மலையில் ஆசிமுகத் தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த் தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
கொடைக்கானல்- குறிஞ்சி ஆண்டவர் கோயி லும், பழநி கோயிலும் நேர்க் கோட்டில் அமைந்து உள்ளன. குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து பழநி மலையைக் காண முடியும்!
15- ஆம் நூற்றாண்டில் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம். அப்போது ராமப்ப ஐயர் என்பவர் தளவாயாக இருந்தார். இவர் பழநி கோயிலுக்கு வந்தபோது, புலிப்பாணியின் வழி வந்த பாத்திரசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். ஐயர் அல்லாத அவரிடம் இருந்து பிரசாதம் வாங்க வேண்டாம் எனக் கருதி, கொடுமுடியிலிருந்து சரசுவதி ஐயரை குருக்களாகவும், அவருக்குத் துணையாக மருதூர் தம்பா ஐயன், நாட்டார் அப்பன் கோயில் அகிலாண்ட ஐயன் ஆகியோரை பரிசாரகர் மற்றும் நம்பிமார்களாகவும் நியமித்தார் தளவாய் ராமப்ப ஐயர். இந்த தகவல்களை செப்பேட்டில் குறித்து, ராமப்ப ஐயர் செப்பேடு கொடுத்த காலம் கி.பி. 1477-ஆம் ஆண்டு (தமிழ் ஸ்ரீமுக வருஷம் தை மாதம் 15-ஆம் தேதி திங்கட்கிழமை, ரோஹிணி நட்சத்திரம்).
1960- ஆம் ஆண்டு கருவறைக்குத் தங்க விமானம் அமைக்கப்பட்டது.
இங்கு வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் உலா வருவது தனிச் சிறப்பு. கார்த்திகை, விசாகம், சஷ்டி, மாதப் பிறப்பு, அமாவாசை ஆகிய நாட்களிலும், விசேஷ விழாக்களிலும் மலை மீது உற்சவர் சின்னக் குமாரர் பவனி வருகிறார்.
பழநியின் பங்குனி உத்திர விழாவை ‘நாட்டுப் புறத் திருவிழா’ என்பர். வருடம்தோறும் சூலமங்கலம் சகோதரிகளது கச்சேரி அன்று நடை பெறும். ‘பழநி எனும் ஊரிலே, பவனி வந்தான் தேரிலே’ என்ற பாட்டை அவர்கள் பாடுவதற்கும் முருகனின் தங்கத் தேர் அங்கு வருவதற்கும் சரியாக இருக்குமாம்!
தமிழகத்தில் முதன் முதலாக பழநி தண்டாயுத பாணி திருக்கோயிலில்தான் முருகேச முதலியார் என்ற பக்தரின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தங்க ரதம் ஓடத் துவங்கியது.
தங்க ரதம் இழுக்க, மலைக்கோயில் அலு வலகத்தில் பணம் செலுத்தி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கட்ட ணம் 2,000 ரூபாய். 8.4.07 தேதியன்று அதிகபட்சமாக 162 பேர் தங்க ரதம் இழுத்துள்ளனர்.
கொடைக்கானல் மலைவாழ் மக்கள் புதிய செருப்பு தைத்து, தலையில் சுமந்தபடி பாத யாத்திரையாகப் பழநி மலைக்கு வந்து முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கின்றனர். அன்றிரவு அவற்றை அணிந்து கொண்டு பழநி முருகன் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வேட்டையாட வருவதாக ஐதீகம். மறு நாள் காலையில் காட்டுப் பகுதியில் அந்தச் செருப்புகள் காணப்படுமாம்.
முடி காணிக்கை செலுத்த திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகமாக வரும் இடம் பழநி என்கிறார்கள்.
அபிஷேகத்தின்போது மூலவருக்கு அணிவிக்கப் படும் கோவணத்தை ஏலம் விடுகிறார்கள். இதை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டால் நன்மை கள் சேரும் என்பது நம்பிக்கை.
கேரள பக்தர்கள் பலர், தங்கள் குழந்தைகளின் சோறூட்டு விழாவை இங்கு நிறைவேற்றுகின்றனர்.
இங்கு, நாளன்றுக்கு குறைந்தபட்சம் 100 அபிஷேகங்களும், அதிகபட்சமாக சுமார் 1000 அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
தைப்பூசம், பங்குனி உத்திரம், அக்னி நட்சத்திர திரு விழா, விசாக விழா, கந்த சஷ்டி விழா ஆகியவை இங்கு நடைபெறும் முக்கியத் திருவிழாக்கள்.
பங்குனி உத்திரத் திருவிழாவின்போது பத்து நாள் உற்சவத்தில் முருகப் பெருமான், வள்ளி- தெய்வானையுடன் பற்பல வாகனங்களில் கிரிவலம் வருவார்.
Pazhani
கந்தசஷ்டியின்போது சூரபத்மனை வதம் செய்வதற்காக மலையிலிருந்து கீழே இறங்கி வருவார் முருகப்பெருமான். அவர், மலையின் நான்கு புறங்களிலும் கஜமுகாசுரன், தாரகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்து வெற்றி வீரராக கோயிலுக்குத் திரும்புவார்.
பத்து நாள் நடைபெறும் விசாகப் பெருவிழாவின் ஏழாம் நாளன்று திருத்தேர் வடம் பிடிப்பார்கள்.
தைப்பூசத் திருவிழாவின் 10-ஆம் நாள் மண்டகப் படியாக பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் பழநி முருகன், வள்ளி- தெய்வானையுடன் தெப்பத்தேரில் மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தைப்பூச விழாவின்போது நடைபெறும், முருகனுக்கு அம்பாள் வெற்றி வேல் வழங்கும் காட்சி குறிப்பிடத் தக்கது. ஏழாம் நாள் பூச நட்சத்திரத்தன்று தேரோட்டம். அன்று இடும்பன் குளம், சண்முக நதி, பழநி அடிவாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.
‘போகர் வடித்த தெய்வச் சிலை முருகப் பெருமான் அல்ல; தண்டாயுத பாணிதான். தேவ ஸ்தானத்தின் பெயரும் ரசீதுகள், விடுதிகள் மற்றும் கோயில் சொத்துகள் எல்லாவற்றிலும் உள்ள பெயர் தண்டாயுதபாணியே என்றும் சொல்கிறார்கள்.


காவலிபாளையம் கெந்த வங்குருவா்'s photo.

வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨

வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் கொண்ட பலரும் தனக்கு வழிகாட்ட யாரும் இல்ல¨ என்று வேதனைப் படுவார்கள். அப்படி தனக்கு வழிகாட்ட யாரும் இல்லை என்று அவர்கள் நினைப்பதுதான் முதல் தவறு.
காந்தியடிகளும்திருவள்ளுவரும்விவேகானந்தரும்புத்தரும் என பலரும் தங்களது ஆலோசனைகளை நமக்கு அள்ளித் தந்துள்ளனர்.அவரவர்க்கு ஏற்ற வழிகளையும்தலைவர்களையும் நாம்தான் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
வெற்றி வேண்டுமா உங்களுக்குஅப்படியானால் இப்படி செய்யுங்கள் என்றுகுழந்தைகளுக்கு விவேகானந்தர் இங்கு நமக்கு கூறியுள்ள ஆலோசனைகளைப்பார்ப்போமா…
அளவுக்கு அதிகமாக உண்ணாதீர்கள். அதற்காக பட்டினியும் கிடக்க வேண்டாம்.
அதிக நேரம் தூங்காதீர்கள். அதற்காக மிகக் குறைவாகவும் தூங்க வேண்டாம்.
பொறாமை குணம் இருந்தால் விரட்டி விடுங்கள்.
சந்தேகமும்சஞ்சலபமும்தான் உங்கள் முதல் எதிரிகள். அவற்றை துரத்தியடியுங்கள்.
சோம்பல் உங்களிடம் இருந்தால் முதலில் அதை ஒழித்துக் கட்டுங்கள்.
எந்த சூழ்நிலையிலும் பேராசை கொள்ளாதீர்கள்.
உடல் தூய்மை முக்கியமானது. அதனால் தினமும் குளியுங்கள்.
எப்போதும் நல்லதை மட்டுமே மனதால் நினையுங்கள். அப்போது நல்லவை மாத்திரமே நடக்கும். நினைக்கும் பொருளாகவே ஆகும் தன்மை நம்மிடமே இருக்கிறது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். தைரியமாகவும் இருக்க பழகிடுங்கள்.பொறுமையும்விடா முயற்சியும் நமது நல்ல நண்பர்கள். எப்போதும் இவற்றுடனேயே இணைந்திருக்கப் பழகுங்கள்.
இதையெல்லாம் நீங்கள் செய்தால் உங்கள் வெற்றி உறுதி என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
குழந்தைகள் மட்டுமல்ல அனைவரும் கடைபிடிக்க வேண்டியவையே.