Monday, June 6, 2016

திருஷ்டி போக்கும் மந்திரம்

திருஷ்டி போக்கும் மந்திரம்.

மனிதர்களுக்கோ அல்லது வீடு, வியாபார ஸ்தலங்கள் போன்றவற்றுக்கோ திருஷ்டி கழிப்பதற்கு சிவனுக்கு ஒப்பாக கருதப்படும் முக்கண்ணனாகிய தேங்காய் முன்னிலை வகிக்கின்றது.
                          இந்த தேங்காய்மூலம் திருஷ்டியை போக்குவதற்கும் ஒரு மந்திர முறை உண்டு. இம்முறை மூலம் திருஷ்டி கழிப்பதால் சகலவிதமான திருஷ்டிகளும் அகல்வதோடு செய்யும் காரியங்களிலும் சித்தி உண்டாகும்.

மந்திரம் :- ஓம் முக்கண்ணனே உகந்தநாதா சோலைபுரி ஸ்தூலபூபா சடைநிறைந்த மட்டைமன்னா திருஷ்டிக்கு முதன்மையான மைந்தனே சிரசுடையமுகம் கொண்டோனே வாவாவா ஓம் ரீம் சுவாகா.
முறை :- இம்மந்திரத்தை 1008 முறை உருச்செய்ய மந்திரம் சித்தியாகும். பின்னர் பிரயோகத்தின் போது திருஷ்டி கழிக்கவேண்டியவரை வடகிழக்கு திசை நோக்கியவாறு நிறுத்தி மந்திரத்தை 21 தடவைகள் உச்சரித்தவாறு திருஷ்டி கழிக்கவும். வீடு, வியாபார ஸ்தலம் போன்றவற்றுக்கு திசை அவசியமில்லை. 21 முறை கூறி திருஷ்டி கழித்த பின் தேங்காயை உடைக்கவும்.

No comments:

Post a Comment