Showing posts with label sales executive training. Show all posts
Showing posts with label sales executive training. Show all posts

Thursday, March 17, 2016

வியாபார மற்றும் பண பிரச்சனைகள் தீர்க்கும்

வியாபார மற்றும் பண பிரச்சனைகள் தீர்க்கும் எட்டு முக ருத்திராட்சம் 



17 முக ருத்திராக்ஷும்

தன்னை அணிந்தவரை குறைந்த காலத்தில் செல்வந்தர் ஆக்கும் தன்மை கொண்டது.கைவினை மற்றும் படைப்பாற்றலுக்குரிய கடவுள் விஸ்வகர்மாவுக்குரியது இந்த ருத்திராக்ஷும்.இதை அணிபவருக்கு திடீர் செல்வம் மட்டுமல்ல, ஆன்மீக சக்திகளும் வந்து அடையும். இது அணியும் பெண்களுக்கு மன வாழ்க்கை, குழந்தை செல்வம், நல்ல கணவர், நல்ல தாம்பத்யம், நீண்ட ஆயுள் போன்ற அனைத்து நன்மைகளும் ஏற்படும். இதை அணிந்து 'காத்யாயினி' யை வழிபட திருமணமாகாத பெண்களுக்கு உடனடி வரன் அமையும். பல்வேறு வகையில் திடீர் செல்வம், அதிர்ஷ்டம் தர வல்லது இந்த ருத்திராக்ஷும்.

மேற்கண்ட நமது பதிவை கண்டு பலர் தொடர்ந்து தொலைபேசியில் இது வேண்டும் என்று கேட்டு வந்தனர்-ஆனால் சாமானியர்கள் வாங்கும் விலையில் இல்லை இந்த ருத்திராட்சம்-ரூ.90,000 முதல் 1,50,000 வரை விற்கபடுகிறது. ஆகையால் இதை விசாரிப்போரிடம் நாம் நமது அனுபவத்தில் கண்ட உண்மையை சொல்வதுண்டு-ஆம், இது கொடுக்க கூடிய அதே பலனை தரவல்லது 7 மற்றும் 8 முக ருத்திராட்சங்கள். சேர்த்து அணிய வேண்டும். லக்ஷ்மி மற்றும் கணபதியின் ஆகர்ஷன சக்தியை கொண்ட இவ்விரண்டும்- பண பிரச்சனைக்கு மட்டுமின்றி ஜாதகத்தில் அஷ்டமத்தில் சனி அல்லது ராகு இருப்பினும், ஏழரை, அஷ்டம, கண்டக சனி மற்றும் கர்ம சனி காலங்களிலும் அணிந்து நிவாரணம் பெறலாம். மேலும் தற்போது காம்புடன் கூடிய அதிக நபர்கள் கைபடாத அதிவீரிய காய்கள் கிடைப்பது அரிது. ஒரு சில அன்பர்களுக்காக தற்போது நேபாளத்தில் இருந்து நமக்கு வந்திருந்த ருத்திராட்ச காய்களில் அதிசியமாக இரண்டு 8 முக காய்கள் காம்புடன் !! இப்படி பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது !!  

Monday, August 10, 2015

பஞ்சகவ்யம்

பஞ்சகவ்யம் - www.happy4all.org

பஞ்சகவ்யம்

பாலில் எடுக்கப்படுகின்ற தயிர் முதலிய ஒவ்வொன்றும் வெவ்வேறு சுவையுடையன. குணமுடையன இவற்றின் கலவை சிறந்த சத்துணவு . கோசலமும்(கோமியம்) , கோமலமும்(பசுஞ்சாணம்) மருத்துவக் குணமுடையன.

பஞ்சகவ்யம் - பஞ்ச என்றால் ஐந்து மற்றும் கவ்யம் என்றால் பசுவிடமிருந்து என பொருள்படும். பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்கள் - 1)சாணம் 2) கோமியம் 3) பால் 4) நெய் 5) தயிர்
இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கப்படுவதே பஞ்சகவ்யம். இது இந்து சமய இறை வழிபாட்டின்போது முக்கியபூசை பொருளாகவும், ஆயுர் வேத வைத்தியம், வேளாண்மை பயிர் பாதுகாப்பிலும் பயன்படுகிறது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறையைப் பயிற்றுவிப்பதும், விற்பனை செய்வதும் மெல்ல மெல்ல புகழடைந்து வருகிறது.

பஞ்ச கவ்யத்தால் அபிஷேகம் செய்கின்ற போது கிடைக்கின்ற பயன்கள் வருமாறு.

பசும்பால் :ஆரோக்கியம் ,ஆயுள் விருத்தி
பசுந்தயிர்:பாரம்பரிய விருத்தி
பசும்நெய்:மோட்சம்
கோசலம் :தீட்டு நீக்கம்
கோமலம்:கிருமி ஒழிப்பு

பொதுவாக பாவங்கள் குறைய புண்ணியங்கள் நிறையும்.கருவறைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் எப்போதும் குளிர்ச்சியில் இருக்கின்றன .பெரும்பாலான கருவறைகளில் சூரிய ஒழி புகுந்து படிவதில்லை எனவே மிக குளிர்ச்சி,மிக்க இருட்டின் காரணமாககருவறைகள் , சிலைகள், இடுக்குகள்,பிளவுகள் முதலான இடங்களில் கிருமிகளும் , பாசிகளும், பூச்சிகளும் வளர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ,அவற்றை அறவே அழிக்கின்ற ஆற்றல் பஞ்சகவ்யத்திற்கு அதிகமாக உண்டு.

புனிதம் என்ற ஒரே காரணத்திற்காகப் பஞ்சகவ்யம் ஒரு சிறந்த அபிஷேக பொருளாக மதிக்கபடுகிறது.

பல திறம்பட அருமையான பொருள்களால் சிலைகளுக்கு அபிஷேகம் செய்த பிறகு அந்த சிலைகளின் இயற்கையான நுண்ணிய ஆற்றல் சற்று கூடுதலாகின்றது என்பது அறிவியல் அடிப்படையில் நிருபிக்கப்பட்டுள்ளது.

பஞ்சகவ்யதால் அபிஷேகம் செய்த பிறகு அச்சிலைகளின் அற்புத அதிசய தெய்வீக ஆற்றல்
அதிகமாகின்றது என்பதும் உண்மையாகும் .

பஞ்சகவ்வியப் பெருமை :

பசுவும்.பசு தரும் பஞ்சகவ்வியமும் தெய்வத் தன்மை கொண்டவை, என்றென்றும் புனிதமானவை. ஆகவே இந்து சமயத்தில் இவை முக்கியமான நிலைத்த இடத்தை பெற்று விளங்குகின்றன.

பஞ்சகவ்வியம் இந்துக்களின் பல்வேறு சடங்குகள், பூஜைகளில் இதற்கெனத் தனி இடம் உண்டு. இந்த பஞ்ச கவ்வியத்தில் பல்வேறு தேவர்கள் வாசம் செய்கின்றனர். பசுவின் பால்,தயிர், நெய். கோமயம், சாணம் னும் இவ்வைந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்வியம் எனப்படும்
இது இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிலஊட்டப் பொருள்(உரம்) ஆகும்.

அபிஷேகத்திற்கான பஞ்ச கவ்வியம் செய்ய சில அளவு வரைமுறைகள் உள்ளன.

பசும்பால் :1 அளவு
பசுந்தயிர் :2 அளவு
பசும்நெய்  அளவு
கோசலம் :1 அளவு
கோமயம் : 1 அளவு
தர்ப்பை கலந்த நீர் 3 அளவு

பசும் பால் தான் ஏற்றது.எருமைப்பால் முதலியவற்றை பயன்படுத்தக்கூடாது .
பசுக்களில் பல்வேறு நிறங்களைக் கொண்ட பசுக்கள் உள்ளன .பசுக்களின் நிறத்திற்கும் அவை தரும் பாலின் தன்மைக்கும் இடையில் தொடர்வு உண்டு.
பொன்னிறப் பசுவிடமிருந்து பாலும்
நீலநிறப் பசுவிடமிருந்து தயிரும்,
கருநிறப் பசுவிடமிறந்து நெயும் ,
செந்நிற பசுவிடமிருந்து கோசலமும்,
தனித்தனியே எடுத்து பஞ்சக்கவியம் தயாரிக்க வேண்டும். சிவனுக்குரிய அபிஷேகப் பொருட்கலில் பஞ்ச கவ்வியமே சிறந்தது .

இவ்வாறு சிறந்த பஞ்சகவ்வியத்தை தமிழில் "ஆனைந்த "என்பர் .

பசும் பாலில் சந்திரனும் ,
பசுவின் தயிரில் வாயு பகவானும்,
கோமயத்தில் வருண பகவானும்,
பசும் சாணத்தில் அக்னிதேவனும் ,
நெய்யில் சூரிய பகவானும் வாசம் செய்கின்றனர் .


வேளாண்மையில் பயன்பாடு
1. பஞ்சகவ்யத்தை பயன்படுத்தி விதைநேர்த்தி செய்வதால் விதையின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை மேம்படுகிறது.
2. பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும்
பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது.
தயாரிப்பு முறை
தேவையான பொருட்கள்
1. பசுஞ்சாணம்-5 கிலோ,
2. பசுவின் கோமியம்-3 லிட்டர்,
3. பசும்பால்-2 லிட்டர்,
4. பசு தயிர்-2 லிட்டர்,
5. பசு நெய்-1 லிட்டர்,
6. கரும்புச்சாறு-1 லிட்டர்,
7. தென்னை இளநீர்-1 லிட்டர்,
8. வாழைப்பழம்-1 கிலோ.
பசுஞ்சாணம் 5 கிலோவுடன் பசுமாட்டு நெய் 1லிட்டர் கலந்து பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் 3 நாட்கள் வைத்து தினமும் ஒரு முறை பிசைந்துவிட வேண்டும்.
• 4வது நாள் மற்ற பொருட்களுடன் இவைகளை ஒரு வாயகன்ற மண்பானை அல்லது சிமென்ட் தொட்டி அல்லது பிளாஸ்டிக் தொட்டியில் இட்டு கையால் நன்கு கரைத்து கம்பிவலையால் மூடி நிழலில் வைக்க வேண்டும்.
• ஒரு நாளைக்கு 2 முறை வீதம் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்கள் நன்றாக கலக்கிவிட வேண்டும். இது பிராண வாயுவை பயன்படுத்தி வாழும் நுண்ணுயிர்களின் செயல்திறனை ஊக்குவிக்கிறது. இந்த முறையில் 15 நாட்களில் பஞ்சகவ்யம் தயாராகிவிடும்.

Saturday, July 18, 2015

கோமாதா பற்றிய அரிய ஆன்மிக தகவல்கள்

கோமாதா பற்றிய அரிய ஆன்மிக தகவல்கள்
(share) செய்யுங்கள்)
1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
2. நேபாளம் நாட்டில் பசுவை கவுரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர்.
3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக பிடித்தது பசுதான். எனவேதான் அவர் தன்னை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கும்படி கூறினார்.
4. கோபூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.
5. பசுவின் வாயில் கலிதேவதை இருப்பதால்தான் பசு முன் பகுதியில் பூஜை செய்யப்படுவது இல்லை.
6. சஷ்டியப்பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களில் பசு
தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் கிடைக்கும்.
7. ஒரு பசு முதல் கன்று பிரசவித்ததும், அதை தேனு என்பார்கள். இரண்டாவது கன்று பிரசவித்ததும் அதற்கு ``கோ'' என்றழைப்பார்கள். எனவே இரண்டாவது கன்று பிரசவித்த பசுவைத்தான் கோ பூஜைக்கு பயன்படுத்துவார்கள்.
8. காமதேனு பசு மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.
9. பசுவின் கால் தூசி நம் மீது படுவது கங்கையில் புனித நீராடலுக்கு சமம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
10. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.
11. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் ஆட்சி செய்கின்றனர்.
12. கோபூஜை செய்வதால் கிடைக்கும் உடனடி நன்மை என்ன தெரியுமா? பணக் கஷ்டம் நீங்கும்.
13. பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால் பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.
14. வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.
15. பசுவுக்கு அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால் வாழைப்பழம் வாங்கிக் கொடுக்கலாம்.
16. பசுக்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்க முடியாது. எனவே குறிப்பறிந்து பசுக்களுக்கு உதவ வேண்டும்.
17. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.
18. அதிகப்பால் கறப்பதற்காக பசுக்களுக்கு அதிகப
19. உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை அடி மாடாக விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் சேர்த்து விடுவது நல்லது.
20. பசுக்கள் இறந்தால், அவற்றுக்கு உரிய முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்.
21. பசுவையும் கன்றையும் பிரிக்கும் பாவத்தை ஒரு போதும் செய்யக் கூடாது.
22. பசுவானது பால் கறக்கும் நிலையில் இருக்கும் போது தானம் செய்வதுதான் மிக சிறந்த தானமாகும். பால் கறக்கும் பாத்திரமும் கொடுப்பது இன்னும் சிறப்பானது.
23. சிலர் பசுவுடன் காளையையும் சேர்த்து தானம் அளிப்பார்கள். இந்த தானம் கூடுதல் பலன் தருவதாகும்.
24. ஒரு காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்களாப அதற்காக கோ தானம் செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உண்டாகும்.
25. பசு தானம் வாங்குபவர்கள் லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் சுமை குறையும்.
26. ஏதாவது மங்கல நிகழ்ச்சி நடக்கும்போது பசுதானம் செய்தால், அதற்குரிய நன்மை கிடைக்கும்.
27. பசு தானம் கொடுக்கும் போது ஜெர்சி இன பசுக்களை தானம் வழங்கக் கூடாது. நாட்டு பசுவையே தானமாக கொடுக்க வேண்டும்.
28. சனீஸ்வரனுக்கு காராம்பசு தானம் கொடுப்பது நல்லது.
29. சூரிய பலம் பெற விரும்புபவர்கள் சிவப்பு நிற பசுவை தானமாக கொடுக்க வேண்டும்.
30. பசுவை மாடு என்று அழைக்காமல் பசுத்தாய், கோமாதா என்று அழைத்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்.
31. நன்றாக பால் கறக்கும் பசுக்களை காசியில் தானம் செய்தால், அவர்களது 7 தலைமுறை பலன் அடையும்.
32. ராமேசுவரத்தில் காராம் பசு தானம் செய்தால் ஆண் வாரிசு கிடைக்க வாய்ப்புள்ளது.
33. ஒரு பசுவை ஒருவருக்கு மட்டுமே தானமாக கொடுக்க வேண்டும்.
34. மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர், அவரது பாவங்கள் நீங்கி நற்கதி அடைய பசு தானம் செய்வதை நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருந்தனர்.
35. பித்ருபூஜை செய்யும் போது பசு தானம் கொடுப்பது மிகுந்த நன்மை தரும்.
36. ஒரு பெண் ருதுவானதும் தோஷங்கள் நீங்க பசுக்களை தானம் செய்யலாம்.
37. கோவில்களில் விளக்கேற்ற பசுக்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் தானம் செய்வதை ஆதி தமிழர் கள் வழக்கத்தில் வைத்திருந்த னர்.
38. பசு தானம் அடிக்கடி செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது.
39. பசுவையும் கன்றையும் யார் ஒருவர் நன்கு பராமரிப்பு செய்கிறாரோ, அவரது இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி உண்டாகும்.
40. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்தால் பரிகாரம் உண்டாகும்.
41. திருவண்ணாமலை கிரிவல பாதையில் நிறைய பேர் பசுவுக்கு அகத்திகீரை வாங்கிக் கொடுப்பதை பார்த்து இருப்பீர்கள். பசுவுக்கு ஒரு தடவை அகத்தி கீரை கொடுத்தாலே, பிறவி பாவம் விலகும் என்பது ஐதீகம்.
42. நம் வீட்டில் பசு வளர்க்க வாய்ப்பு இல்லை யெனில் பசு வைத்திருப் பவர்களுக்கு நாமாக உதவ வேண் டும்.
43. வீட்டில் பசு இல்லாதவர்கள் அன்றாடம் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒருபிடி அறுகம் புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக் கீரையோ, பிறதீவனமோ கொடுக்க வேண்டும்.
44. வெளிப்புறம் மேயும் பசுக்களுக்கு நம் வீட்டின் அல்லது தோட்டத்தின் வெளிப்புறம் தண்ணீர் தொட்டி அமைக்கலாம்.
45. பசுக்கள் தொழுவத்தில் கட்டிப் போடப்பட்டிருக்கும் வரை சாணத்தையும், கோசலத்தையும் அவ்வப்போது அப்புறப்படுத்தி தொழுவத்தைக் கழுவிவிட வேண் டும்.
46. விளை நிலங்களில் சிறு பகுதியையாவது வருடந்தோறும் மாறி மாறித் தரிசாக விடுவது நிலங்களுக்கு நல்லது. மாடுகளுக்கும் புல் மேய்விடம் கிடைக்கும்.
47. வசதியுள்ளவர்கள் வழிப்போக்கு மாடுகளுக்காக சிறிதளவு வைக்ககோல் போட்டு வைக்க வேண்டும்.
48. பசுங்கன்று பால் மணம் மாறும் முன்பே சினைப்படுத்தி, கன்று ஈனச் செய்து பால் கறப்பது முறையல்ல.
49. நமக்கு வருவாய் அளிக்க இயலாத நலிந்த பசு மாடுகளை, பசுக்களை பராமரிக்கும் பசு மடங்களிலும் தொழுவங்களிலும் சேர்ப்பிக்க வேண்டும்.
50. பசுக்களை அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரித்துக் காக்க வேண்டும்.
Mantric   மாந்திரீகம்'s photo.

DrStar Anand

Sunday, July 12, 2015

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள் !!!

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள் !!!

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் பலமுறை சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இநத் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். கண்ட கண்ட உணவுகளின் மீது ஆசைப்பட்டு அவற்றை வாங்கி நன்கு வயிறு நிறைய சாப்பிட்டு, பின் அது வெளிவராமல் அவஸ்தைப்படுவோம். ஏனெனில் அந்த உணவுகள் செரிமான மண்டலத்தில் எளிதில் செரிமானமாகாதது மற்றும் செரிமானத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள தினமும் போதிய உடற்பயிற்சிகளை செய்து வராததே காரணம் ஆகும். 

ஆகவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமெனில், கண்ட கண்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து, தினமும் ஒருசில யோகாக்களை செய்து வாருங்கள். ஆனால் பலரும் யோகா என்ன செய்யும் என்று அதனை செய்வதில்லை. இருப்பினும் மற்ற செயல்களை விட, உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா பெரிதும் உதவியாக இருக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதனை தவறாமல் செய்து வர வேண்டும். 

இங்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கவும், அந்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கவும் செய்ய வேண்டிய யோகா நிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம் (Pawanmuktasana) பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்து,க் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும். இந்த ஆசனம் செய்து வருவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, சீரற்ற மாதவிடாய் சுழற்சி நீக்கி, இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஹலாசனம் (Halasana) 

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் மேலே தூக்கி, கைகளால் உடலைப் பிடித்துக் கொண்டு, பின் மெதுவாக கால்களை தலைக்கு பின்புறம் உள்ள தரையை தொட வேண்டும். பின் கைகளை மெதுவாக தரையில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்க வேண்டும். இதேப்போன்று 3 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் செரிமானம், பசி, இரத்த ஓட்டம் மற்றும் மன நிலை போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.

திரிகோணாசனம் (Trikonasana) 

முதலில் நேராக நின்று கொண்டு, வலது காலை சற்று பக்கவாட்டில் தள்ளி வைத்து, பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டி, வலது கையால் வலது காலைத் தொட்டுக் கொண்டு, இடது கை மேல் நோக்கி நீட்டியிருக்க வேண்டும். இதேப்போன்று மற்றொரு காலிலும் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை என ஆறு முறை செய்ய வேண்டும்.

பாலாசனம் (Balasana) 


பாலாசனம் என்பது தரையில் உட்கார்ந்து கொண்டு, கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் மலச்சிக்கல் மட்டுமின்றி, மன அழுத்தம், சோர்வு, நீங்கி, இடுப்பு, தொடை போன்றவை வலிமையடையும். முக்கியமாக இதனை தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலி இருந்தாலும் குணமாகிவிடும்.

சாவாசனம் (Savasana) 

ஆசனங்களிலேயே மிகவும் சிம்பிளானது என்றால் அது சாவாசனம் தான். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கைகளை உடலை ஒட்டியோ அல்லது பக்கவாட்டிலோ வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 15-20 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மலச்சிக்கல் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் குணமாகும்.

Wednesday, June 10, 2015

திறமைமட்டுமே போதுமானதல்ல, அது வெறும் ஆரம்பம் மட்டுமே

நமது அன்றாட வாழ்க்கையில் பல துறைகளில் பல திறமையாளர்களைப் பார்க்கிறோம். நாளடைவில் அவர்களில் மிகச் சிலரே அந்தந்த துறைகளில் வெற்றி அடைகிறார்கள் என்பதையும் பெரும்பாலோனோர் நாம் எதிர்பார்த்த அளவு சாதனைகள் புரியாமல், இருந்த சுவடே தெரியாதபடி காணாமல் போவதையும் பார்க்கிறோம்.
அப்போதெல்லாம் நம்மால் வியப்படையாமல் இருக்க முடிவதில்லை. அதுவும் வெற்றியடைந்தவர்களை விட அதிகத் திறமை கொண்டவர்கள் என்று நாம் கணித்தவர்கள் சாதிக்காமல் போய் விடும் போது அது ஏன் என்ற ஒரு மிகப் பெரிய கேள்வி நமக்குள் எழாமல் இருப்பதில்லை. அதற்கு ‘விதி’ என்ற மிக வசதியான பதிலை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அபூர்வமாய் ஒருசில விதிவிலக்குகள் தவிர அந்த விதி அவரவர்களால் எழுதப்படுவது அல்லது ஏற்படுத்திக் கொள்வது என்பதே நிதர்சனமான உண்மை.ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தோல்வி அடையும் அனைவருக்கும் பொதுவாக மூன்று குணாதிசயங்கள் இருப்பதை நம்மால் காண முடியும். அதில் முதலாவது,அவர்களுக்குள்ளே சாதனை புரிந்தே ஆக வேண்டும் என்ற அக்னி இருப்பதில்லை. இது இல்லாத வரை எத்தனை திறமை இருந்தாலும் அது பிரகாசிப்பதில்லை.
இரண்டாவது, அவர்கள் ஈடுபாடுகள் சீராகவும், தொடர்ச்சியாகவும் ஒரே விஷயத்தில்இருப்பதில்லை. இன்று ஒன்றில் ஈடுபாடு, நாளை வேறு ஒன்றில் தீவிர ஈடுபாடு, சில நாட்களில் புதிதாக ஒன்றில் பேராவல் என்று மாறிக் கொண்டே போகிறார்கள்.அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல ஆரம்பங்கள் இருக்கின்றன, திறமைக்கும்குறைவில்லை என்றாலும் எதிலும் முழுமை இருப்பதில்லை.
மூன்றாவது, அவர்கள் வெற்றி வரும் வரை பொறுமையாக தாக்குப் பிடித்து நிற்பதில்லை. தற்காலிகத் தோல்விகளிலேயே பின்வாங்கி விடுகிறார்கள். தற்காலிக தடங்கல்களும், நிராகரிப்புகளும், தோல்விகளும் முயற்சிகளைக் கைவிடப் போதுமானவையாக இருக்கின்றன. இந்த மூன்று தவறுகளையும் வெற்றியாளர்கள் செய்வதில்லை. இதை தங்கள் துறையில் சிகரத்தை எட்டிய இருவர் வாழ்க்கை அனுபவங்களைப் படித்தால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.பாஸ்கல் (Pascal) என்கிற கணித மேதையை அறியாதவர் இருக்க முடியாது. அவர்பிற்காலத்தில் தத்துவஞானியாகவும் விளங்கினார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில்சட்டம் மட்டுமே மேல்நிலை மக்களின் கௌரவமான தொழிலாகக் கருதப்பட்டது.எனவே அவர் தந்தை மகன் சட்டப் பேரறிஞனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். பாஸ்கலோ கணிதத்தில் தான் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தார்.எத்தனை அறிவுரை கூறியும் மகன் மாறாததைக் கண்ட தந்தை கடைசியில் மகனை சட்ட புத்தகங்கள் மட்டுமே நிறைந்த அறையில் வைத்துப் பூட்டி வைக்கத் துவங்கினார். உள்ளே கணிதக் கோட்பாடுகளை மகன் எழுதிக் கொண்டு இருப்பதை பின்னர் கண்டு பிடித்து அங்கிருந்து எழுத்துக் கருவிகள், தாள்கள் அனைத்தையும் அப்புறப்படுத்திப் பார்த்தார்.
ஆனால் பாஸ்கலோ கரித்துண்டில் தரையில் எழுதிப் பார்க்கத் துவங்கினார்.கடைசியில் தந்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர் ஆவலுடன் தன் கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் பிற கணித மேதைகள் இவருடையவித்தியாசமான, புதிய கோட்பாடுகளை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். தடங்கல்களைக் கண்டு தளராமல் தொடர்ந்தஇத்தகைய ஈடுபாட்டிற்குப் பின் வராத வெற்றியும் உண்டா? வெற்றியும், புகழும்கடைசியில் அவருக்கு உலக அளவில் கிடைத்தன.பெர்னார்டு ஷா (Bernard Shaw) எழுதுவதில் காட்டிய ஈடுபாடு மகத்தானது. இளம் வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு வேலை செய்து கொண்டிருந்தாலும், தினமும்குறைந்தது ஐந்து பக்கங்களாவது எழுதுவது என்று உறுதியுடன் ஓய்வு நேரங்களில்தொடர்ந்து எழுதி வந்தார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கும், பிரசுரங்களுக்கும் அனுப்பியும் வந்தார். எழுதி அனுப்பிய முதல் ஒன்பதாண்டுகளில் அவருக்குத் தாள்,பேனா மை, தபால் செலவுகளுக்கான பணம் கூடக் கிடைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. ஓரிரு தோல்விகளைக் குறுகிய காலத்தில் சந்தித்தாலே மனம் ஒடிந்து போகும் மனிதர்கள் மத்தியில் ஒன்பதாண்டு காலம் தொடர்ந்து சந்தித்த தோல்விகளையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து எழுதி பிற்காலத்தில் பிரபலமாகி மிகப்பெரிய செல்வந்தரானார். அவர் எழுத்து இன்றளவும் பேசப்பட்டும், மேற்கோள் காட்டப்பட்டும் வருகிறது என்பது வரலாறு.
இவர்கள் எல்லாம் துவக்கத்தில் சந்தித்த எதிர்ப்புகளும் தோல்விகளும் கொஞ்சநஞ்சமல்ல. வெற்றி சுலபமாக வந்து விடவில்லை. இடைக்காலத்தில் விதி என்றுதீர்மானித்துக் கொண்டு தங்கள் பாதைகளில் இவர்கள் திரும்பிப் போய் விடவில்லை. தங்கள் பார்வைகளையும், ஈடுபாடுகளையும் வேறிடத்திற்குத் திருப்பிக் கொள்ளவில்லை. உலகம் தோல்வி என்ற சான்றிதழைத் திருப்பித் திருப்பித் தந்தாலும் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களுக்கு உள்ளே இருந்த அக்னி வெளியே இருந்த இருண்ட சூழ்நிலைகளிலும் ஒளி கொடுத்து வழி காட்டியது. வெற்றி வரும் வரை காத்திருந்தார்கள். தங்கள் விதியைத் தீர்மானிக்க மற்றவர்களுக்கு அவர்கள் அனுமதி தரவில்லை.
எனவே திறமை இருப்பவர்களே, ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். திறமைமட்டுமே போதுமானதல்ல, அது வெறும் ஆரம்பம் மட்டுமே என்பதை மனதில் வையுங்கள். உடனடி லாட்டரி போல வெற்றி வந்து மடியில் விழும் என்று எண்ணாதீர்கள்.
தடங்கல்கள் சகஜம் என்று எதிர்பார்த்துத் தயாராக இருங்கள். உங்கள் சக்திகளைஎதிர்மாறான பல துறைகளில் அடிக்கடித் தாவி சிதறடிக்காதீர்கள். தொடர்ந்து ஈடுபாடு குறையாமல் செயல்படுங்கள். தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். துவண்டு விடாதீர்கள். நீங்களாக ஏற்றுக் கொள்ளாத வரை தோல்வி சாசுவதமல்ல. அது வெற்றிக்கு முந்தைய இடைநிலையே. பொய்யான விதியை ஏற்றுக் கொண்டு முயற்சியைக் கை விட்டு விடாதீர்கள். விதியின் நாயகனான இறைவன் திறமையை உங்களுக்குத் தந்திருக்கிறார் என்றால் அது நீங்கள் வெற்றி பெறவே என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.