Showing posts with label Coimbatore Corporate Training Compay in chennai. Show all posts
Showing posts with label Coimbatore Corporate Training Compay in chennai. Show all posts

Friday, August 14, 2015

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா… இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !

ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா… இது ஜப்பானில் நடந்த உண்மை கதை !
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலானசுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும்வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில்இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 10 வருடம் ஆகிஇருக்கும். எப்படி இந்த பல்லி 10 ஆண்டுகள் உயிருடன் இருந்தது இதை நாம் கண்டுபிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியைகண்கானித்து கொண்டு இருந்தார்
சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்.அவருக்கு தூக்கி வாரிப்போடது 10 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.
ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 10 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது.

Thursday, August 13, 2015

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்..




உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…
வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.
இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.
எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.
மல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.
மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

Wednesday, August 12, 2015

Life and enjoy healthy life

As we grow older, and hence wiser, we slowly realize that wearing a $300. or $30.00 watch, 

they both tell the same time...


Whether we carry a $300 or $30.00 wallet/handbag, the amount of money inside is the same;
  
Whether we drink a bottle of $30 or $3.00 wine, the vomiting is the same;
Whether the house we live in is 300 or 3000 sq.ft. the loneliness is the same.


Hopefully, one day you will realize, your true inner happiness does not come

from the material things of this world.


Whether you fly first or economy class, if the plane goes down, 

you go down with it...


Therefore..I hope you realize, when you have mates, buddies and old friends, 

brothers and sisters, who you chat with, laugh with,  talk with, have sing songs with,

talk about north-south-east-west or heaven & earth, .... That is true happiness!!


   Five Undeniable Facts of Life :


1. Don't educate your children to be rich.
    Educate them to be Happy.
    So when they grow up they will know
    the value of things not the price.
  
2. Best awarded words in London ...
   "Eat your food as your medicines.
    Otherwise you have to
    eat medicines as your food."
  
3. The One who loves you will never leave you
     because even if there are 100 reasons
     to give up he or she will find one reason to hold on.


4. There is a big difference between
   a human being and being human.
    Only a few really understand it.
  
5. You are loved when you are born.
    You will be loved when you die.
    In between, You have to manage!
  
   If you just want to Walk Fast, Walk Alone!
   But if you want to Walk Far, Walk Together!



  Six Best Doctors in the World
    1. Sunlight
    2. Rest
    3. Exercise
    4. Diet
    5. Self Confidence and
    6. Friends
  
    Maintain them in all stages of Life and enjoy healthy life.

    

Sent with smiles and affection.- www.happy4all.org 

Monday, August 3, 2015

அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்!

அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்!


அ-
+
Temple images

அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்களை வாங்குவது இவற்றை விட முக்கியமானது, தானமளிப்பதும், முன்னோர் கடன்களைச் செய்வதும்தான். இல்லாதோருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுவது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.
தூவுங்க சாணம்! சூடுங்க மாலை: சித்திரையில் வரும் அட்சயதிரிதியை, புரட்டாசியில் வரும் விஜயதசமி ஆகிய இருநாட்களிலும் பாவ கிரகங்களின் ஆதிக்கமே கிடையாது. இந்த நாட்கள் சுபம் நடத்துவதற்கேற்ற முகூர்த்தநாட்கள். எந்த சுபவிஷயத்தையும் இந்நாளில் தொடங்கலாம். கன்னிப்பெண்கள் இந்தநாளில் நல்லகணவர் அமைய வேண்டி எருவை(காய்ந்த மாட்டுச்சாணம்) சந்திரனை நோக்கி தூவி மூன்றாம்பிறையை தரிசிக்க வேண்டும்.  வழிபாட்டை முடித்ததும், சிவன்கோயிலில் இருக்கும் அம்மன் சந்நிதியில் தீபமேற்றி வணங்க வேண்டும்.
பிற மாநிலங்களில் அட்சய திரிதியை: ஒடிசாவில் அட்சயதிரிதியை அன்று நிலத்தை உழுது விவசாயப்பணியை தொடங்குகின்றனர். பூரி ஜெகந்நாதர்  கோயிலில் அட்சயதிரிதியை ரதயாத்திரை சிறப்பாக நடக்கும். வங்காளத்தில் வியாபாரிகள் காலத்தில் புதுக்கணக்குகளை இந்த நாளிலேயே தொடங்கி வந்தனர் (தற்போது லட்சுமி பூஜை மட்டும் செய்கின்றனர்) மத்தியபிரதேசம், உஜ்ஜயினியில் இந்நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்து மதம் மட்டுமில்லாமல், சமண (ஜெயின்) மதத்தினரும் இந்நாளில் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவரை வணங்கி  தானம் செய்கின்றனர்.
அட்சயதிருதியை நன்னாளில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சுவர்ண கவுரி விரதம் அனுஷ்டிக்கின்றனர். இந்த நாளில் கவுரி எனப்படும் பார்வதி தேவி தன் பிறந்த வீட்டிற்கு வருவதாகவும் அடுத்த நாள் விநாயகர் வருவதாகவும் ஐதிகம். அன்றைய தினம் குழந்தை பேறு, சுமங்கலி பாக்யம் உடல்நலம் ஆகியவற்றின் பொருட்டு சுமங்கலிப் பெண்கள் பல வகை தான தர்மங்கள் செய்கின்றனர். அட்சயத் திருதியை அன்று மஹா லக்ஷ்மியை தரிசிப்பதும் வழிபடுவதும் மிகவும் விசேஷமாகும். கேரளா மாநிலம் அடுவாச்சேரி என்ற இடத்தில் வாசுதேவ புரம், மஹா விஷ்ணு கோயிலில் அருள்பாலிக்கும் மஹாலக்ஷ்மியை அட்சய திருதியை முதல் தொடர்ந்து எட்டு நாட்கள் மட்டுமே தரிசிக்க முடியும் மற்ற நாட்களில் இந்த தேவி மஹா விஷ்ணுவுக்கு பணிவிடை செய்வதாக ஐதீகம்.
புத்தமதத்தில் குபேரன்: சீனா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் குபேரனை சிரிக்கும் சிருஷ்டியாக வணங்குகின்றனர். குள்ளமான, கள்ளமில்லாத, சிரித்த முகமாக கனத்த தொப்பையும், கையில் கலசமும், பொன்மூட்டை, ஆபரணங்கள் என ஸ்வர்ண நிறமாக பல்வேறு அமைப்புகளில் ஆராதிக்கின்றனர். மதங்கள் மாறுபட்டாலும் குபேர அம்சம் ஒன்றுதான். புத்தமதத்திலும் குபேர வழிபாடு இருப்பதால், சீனர்களும் குபேர வழிபாடு செய்கின்றனர்.
அத்தனை பேருக்கும் படியளப்பவள்: உலக உயிர்களுக்கு படியளிக்கும் அம்பிகை அன்னபூரணியாக  விளங்குகிறாள். அன்னபூரணி தன்னுடைய பாத்திரத்திலிந்து உலகிற்கு அன்னம் வழங்கிய நாள்  என்பதால், தயிர்ச்சாதம் தானம் செய்வது புண்ணியமானது ஆகும். அவள் வைத்திருக்கும் அன்னபாத்திரம் அள்ள அள்ளக் குறையாது. இந்நாளில் செய்யும் தானம், தர்மம், யாகம் இவற்றுக்கு மிகுந்த புண்ணியம் உண்டு. அன்னதானம் அளித்தல், கோடையின்  வெப்பம் தணிக்க தண்ணீர் பந்தல், நீர்மோர், பானகம் கொடுத்தல், குடை, காலணி வழங்குதல் ஆகியவையும் தானதர்மத்தில் அடங்கும்.
அட்சய திரிதியை சுபநிகழ்ச்சிகள்: புதுவீடு குடியேறுதல்,  வியாபாரம் தொடங்குதல், கல்வி,கலை பயில ஆரம்பித்தல் போன்ற சுபநிகழ்ச்சிகள்  செய்வதும் அட்சயதிரிதியையில் மேற்கொள்வது சிறப்பு. அட்சய திரிதியை நாளுக்கு எந்த கிரக தோஷமும் கிடையாது. எனவே, இந்த நாள் அக்னி நட்சத்திர காலத்தில்  வந்தாலும் கூட, சுபநிகழ்ச்சிகளை தடையின்றி செய்யலாம்
லட்சுமி காசு வாங்குவோமா!
வைகுண்ட வாசனான விஷ்ணுவை மகாலட்சுமி தங்கக்காசுகளால் பூஜிக்கும் நாள் அட்சயதிரிதியை. இந்நாளில் லட்சுமி படம் பொறித்த தங்க காசுகளை வாங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும். பெருமாள் கோயிலில் தாயார் சந்நிதியில் நெய் தீபமேற்றி வழிபட வாழ்வு சிறக்கும்.
பரசுராமர்  பிறந்தநாள்: பரசுராமர் பிறந்த நாள் தந்தை சொல்லே மந்திரம் என்று வாழ்ந்து காட்டிய பரசுராமர் அவதரித்த நன்னாள், பலராமர் தோன்றிய பொன்னாள் அட்சய திருதியையே!
மூன்றாம் நிலவே!
அமாவாசையில் இருந்து மூன்றாம்நாள் வரும் திதி திரிதியை. இவற்றில் மிக உயர்ந்தது அட்சய திரிதியை. மூன்றாம் பிறை பார்த்தால் செல்வவளம் பெருகும். மூன்றாம் பிறை என்றால் என்ன தெரியுமா?  சந்திரனுக்கு தட்சன் தன் 27 மகள்களையும் திருமணம் செய்து கொடுத்தார். அவர்களில் ரோகிணி, கார்த்திகை ஆகிய மனைவிகள் மீது மட்டும் அதிக பாசம் கொண்டார். இதனால், மனம் வருந்திய மற்ற மனைவிகள் தங்கள் தந்தையிடம் புகார் செய்தனர். நீ அழகாய் இருப்பதால் தானே ஆட்டம் போடுகிறாய். உன் முகப் பிரகாசம் மறையட்டும், என்று சாபமிட்டார். இதையறிந்த ரோகிணியும், கார்த்திகையும் தட்சனிடம் சென்று அவரது சாபத்தை திரும்பப்பெற வலியுறுத்தினர். தட்சனுக்கு அப்போது தவவலிமை குறைந்திருந்ததால் அவனால் சாபத்தை திரும்பப் பெற முடியவில்லை. உடனே அந்தப் பெண்கள் சிவனை நினைத்து கடும் தவத்தில் ஈடுபட்டனர். மகிழ்ந்த சிவன் அவர்களுக்கு காட்சியளித்தார். சந்திரனை தன் சிரசில் மூன்றாம் பிறையாக அமரும் பாக்கியத்தை அருளினார்.  திரிதியை அன்று சந்திரப்பிறையை வணங்கினால், சிவனின் சிரசையே நேரில் கண்டதாக அர்த்தம். இதைப் பார்ப்பவர்கள் சகல செல்வமும் கிடைக்கும்.

தாகூர்-நற் சிந்தனைகள்

தாகூர்-நற் சிந்தனைகள் - www.v4all.org 

* கடினமான நிலத்தைப் பண்படுத்தும் உழவனிடமும், சாலை அமைக்கும் போது கல்லுடைக்கும் தொழிலாளியிடத்தும் இறைவன் இருக்கின்றான். ஆனால், இறைவன் சாமானியர்களான நம் கண்ணுக்குத் தெரிவதில்லை.

* மனிதன் மெய்யறிவு பெற்று விட்டால்,மீண்டும் குழந்தை நிலையை அடைகின்றான்.
அந்நிலையை எதிர்பார்த்து இறைவன் நமக்காக காத்து நிற்கிறான்.

* தன்னம்பிக்கை என்னும் ஒளியோடு இருப்பவர்கள் வாழ்க்கைப் பாதையில் வெற்றிநடை போடுவார்கள்.அவர்களால் மற்றவர்களுக்கும் வழிகாட்ட முடியும்.

* நாமோ கல்நெஞ்சம் கொண்டவர்களாக இருக்கிறோம். ஆனால், நம்மை எல்லாம் படைத்த இறைவன் கருணைஉள்ளம் கொண்டவனாக விளங்குகிறான்.

* பெண்கள் மகிழ்ச்சியோடு இருப்பதில் தான் ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியே அடங்கி இருக்கிறது.வாழ்வின் இசை என்பதே பெண்களின் சிரிப்பில் தான் புதைந்து கிடக்கிறது.

* இறைவன் தனக்கான நண்பர்கள் கிடைப்பார்களா என்று தேடுகின்றான்.மனித மனங்களில் அன்பு இருக்கிறதா என்று எதிர்பார்க்கிறான்.

* மனித உறவுகள் அன்பினாலே பிணைக்கப்பட்டுள்ளன. அன்பு என்னும் பாலத்தின் வழியாகப் பயணம் செய்தால் தான்,நம் வாழ்க்கை சுவையானதாகவும், பொருளுடையதாகவும், சுகமானதாகவும் இருக்கும்.

Saturday, July 18, 2015

விபூதி தாரண பலன்

இரவு உறங்க செல்லும் முன்விபூதி தாரணம்செயய்து விட்டு தான் உறங்க வேண்டும் காலையில்எழுந்த உடன் விபூதி தரிக்க வேண்டும் தலை மாட்டில் விபூதி பையை வைத்துஇருப்பது உத்தமம்
விபூதி தாரண பலன்
விபூதியை யணிந்தவர் எவ்விடத்திற் போசனஞ் செய்கின்றாரோ அவ்விடத்திற் பார்வதி சமேதராகிய பரமசிவனும் உண்கின்றனர். உடம்பு முழுதுந் திருநீற்றை யணிந்தவரை எவர் பின்செல்கின்றனரோ அவர்கள் மகாபாதகராயினும் பரிசுத்தராகின்றனர் எனச் சூரசங்கிதை கூறுகின்றது. காலை, உச்சி, மாலையென்னு முக்காலங்களினுந் தரிக்கின்ற மெய்யன்பர் எக்குலத்தவராயினும் அவரைச் சிவபெருமான் என்றே பாவிக்கக்கடவர் என மானவ சங்கிதையிற் சொல்லப்பட்டிருக்கின்றது. மெய்யன்புடன் விபூதிதரிப்பவரைச் சிவபெருமான் நீங்காது நிற்பர். அதனால் சர்ப்பம், சூரியன் முதலிய கிரகங்கள், நட்சத்திரங்கள், திசைத் தெய்வம், யமன், காலன், யமதூதர், அக்கினி, கொடுநோய்கள், அவுணர், இடி, பூதங்கள், சிங்கம், புலி, கரடி முதலிய கொடியனவற்றால் வருந் துன்பங்கள் அவரை யணுக மாட்டா வாம். அவர் இருவினைகளையும் வென்று சிவஞானம் பெற்று முத்தியடைவார் என்பது சத்தியம், முக்காலுஞ் சத்தியமே யாம்.
பகைபிணி மண்ணைபன் மந்தி ரத்தினாமிகையறன் கடையுள வெருட்சி பித்திடர்வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்குந்தகைநல மளிப்பது தவள நீறரோ.
- தணிகைப் புராணம்


Ankhamuthu Kumar's photo.

Monday, July 6, 2015

உலக பழமை வாய்ந்த கல்லணை அணை பற்றிய தகவல்

உலக பழமை வாய்ந்த கல்லணை அணை பற்றிய தகவல் - www.v4all.org

சோழ மன்னர்களில் மாவீரனாக போற்றப்படும் கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது தான் கல்லணை என்பது நாம் யாவரும் அறிந்ததே. அனால் இந்த கல்லணை எதற்காக கட்டப்பட்டது, கட்டும் போது ஏற்பட்ட இடையூறுகள் என்ன? அதை எப்படி சரி செய்தார்கள் என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா? 

கல்லணை, இந்தியாவில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இது காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. கல்லணை திருச்சி நகருக்கு மிக அருகில் உள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என கூறப்படும் முக்கொம்பில் உள்ள மேலணையில் காவேரி மற்றும் கொள்ளிடம் இங்கு தான் இரண்டாக பிரிந்து செல்கிறது. 

ஏறத்தாழ இது கட்டப்பட்டு 1900 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால், இன்றளவும் சோழர்களின் கட்டிட புகழை தன மீது தாங்கி வான்கண்டு நிற்கிறது கல்லணை. இனி, கல்லணையின் கட்டமைப்பு மற்றும் வரலாறு குறித்து காணலாம்...

இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

உலகின் பழமையான அனை 

தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், உலகில் உள்ள பழமையான அணைகளில் இப்போது வரை புழக்கத்தில் உள்ள அணையும் இதுதான் என்றும் அறியப்படுகிறது.

பழமையான நீர் பாசன திட்டம் 
உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் கொண்டது கல்லணை என்று குறிப்பிடப்படுகிறது.

தொழில்நுட்பம் 
கல்லணையின் அடித்தளம் மணலில் அமைக்கப்பட்டது ஆகும். இந்த பழந்தமிழர் தொழில்நுட்பத்தை இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

கல்லனையின் அதிசயம் 
கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.

விவசாயிகளின் துயரம் 
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து விவசாயம் பாதிக்கப்படுவதையும், மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் .
அனைக் கட்டுவது கடினம் 
காவிரியின் மேல் அனைக் கட்டுவது சாதாரன காரியம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள்.

சூத்திரம்
 நாம் கடல் தண்ணீரில் நிற்கும் போது, அலை நமது கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே மணல் அரிப்பு ஏற்பட்டு, நம் கால்கள் மண்ணுக்குள்ளே புதையும். இதைத் தான் சூத்திரமாக மாற்றினார்கள் பழந்தமிழர்கள்.

பெரிய, பெரிய பாறைகள் 
காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதையும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். 

கல்லனைக் கட்டப்பட்டது 
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இதனால், இரண்டு பாறைகளும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

சர் ஆர்தர் காட்டன் 

ஆய்வு இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்துள்ளார்.

மணல் மேடான கல்லனை 
கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குறைந்துக் காணப்பட்டது.

மணல் மேடுகளுக்கு தீர்வு 
இந்த சூழலில் 1829-இல் காவிரி பாசன பகுதியின் தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால், சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில், தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார்.

உலகம் வியந்த கல்லனை 
கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த ஆர்தர் காட்டன், பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார்.

மகத்தான அனை 
சர். ஆர்தர் காட்டன், கரிகாலன் கட்டிய இக்கல்லணையை "மகத்தான அணை" (Grand Anicut) என்ற பெயர் சூட்டி அழைத்தார்.

விவசாயத்தைக் காக்கிறது 
பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு ) திருப்பி விடப்படும். எனவே டெல்டா மாவட்டத்தின்பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.

கல்லைனை மேல் பாலம் 
1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

Saturday, June 20, 2015

பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம். ? பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது ?

பூணுல் ஏன் இடது தோளில் அணிகிறோம். ? பூணுல் ஏன் மூன்று பிரியாக இருக்கிறது ?
இடது தோளில பூணுல்அணியவேண்டும் என்பது வேதத்தின் கட்டளை. எப்பொதும் பூணுல் இடது தோளின் இருக்க வேண்டும். இடது தோளின் பூணுல் இருக்கும்போது அதற்கு உபவீதி என்று சிறப்புப் பெயர்.
உபவீதியாக எப்பொதும் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் (ஸதோப வீதினா பாவ்யம்) சொல்கிறது. தேவர்களுக்கு பணிவிடை செய்யும் வேளையில் பூணுல் இடதுதோளில் இருக்க வேண்டும். அதாவது உபவீதியாக இருக்க வேண்டும.
நம் முன்னோர்களை ஆராதிக்கும்போது பூணுல் வலது தோளில் இருக்க வேண்டும். ரிஷிகளை வழிபடும் வேளையில் இரு தோளிலுமாக தொங்க வேண்டும். அதாவது மாலை போல அணிய வேண்டும். முத்தொழிலின் வெளிப்பாடு முப்பிரி.
மூன்று ஆச்ரமங்களுக்கும் அது தேவை. காலம் மூன்று. முர்த்திகள் மூன்று. வேதம் மூன்று. பூணுலின் பிரிவுகளும் மூன்று. மூன்று எண்ணிக்கை முற்று பெற்றதாக கூறும். ஏலத்தில் மூன்று முறை அழைப்பார்கள். நீதி மன்றத்திலும் மூன்று முறை அழைப்பார்கள். அது முற்று பெற்றதாக கருதுகிறோம்.
பூணுல் பரமாத்மா வடிவம் (யஞஜாக்ய பரமாத்மாய). பரமாத்மா மூன்று கால்களோடு எழும்பினார் (த்ரீபாத் ஊர்தவ) மூன்று அடி அளந்தவர். அப்போது முற்றுப் பெற்றது. தேவர்கள், ரிஷிகள், முன்னோர்கள் இம்மூவருக்கும் தினமும் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு ஆதாரமான பூணுலும் மூன்று பிரியாக இருப்பது பொருந்தும்.
அவன் ஆராதிக்கும் காயத்ரீ மூன்றடிகளோடு விளங்குபவள். அவளை மூன்று வேளையும் வழிபட வேண்டும். அதற்கு காரணமாக பூணுலும் மூன்று பிரியாக வந்தது சிறப்பு.சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

Tuesday, June 16, 2015

'தேடி வரும் தெய்வம் ''

'தேடி வரும் தெய்வம் ''
பசுமாடு ஒன்றை கன்றுடன் விலைக்கு வாங்கிய ஒருவன், தன் ஊருக்கு அவற்றைஓட்டிச்சென்றான். பசுவின் பின்னால் கன்று வந்து கொண்டிருந்தது. திடீரென்றுபசு முரண்டு பிடித்து நின்று விட்டது. அவன் எவ்வளவோ முயற்சி செய்தும் நகரமறுத்தது. அங்கு வந்த பெரியவர் என்னவென்று விசாரிக்க அவனும் விவரத்தைசொன்னான். அதற்கு அவர், "கவலைப்படாதே, நீ கன்றை ஓட்டிக்கொண்டு முன்னால்செல், தாய்ப்பசு தானாகவே உன் பின்னால் வந்துவிடும்", என்றார். அவனும்அவ்வாறே செய்தான். உடனே தாய்ப்பசுவிரைவாக அவனைப் பின் தொடர்ந்து நடக்கஆரம்பித்தது.
இறைவனும் அப்படித்தான். அவன் பிள்ளைகளே எல்லோரும் என்பதால்,பிறருக்கு நாம் உதவினால், நம்மைத் தேடி வந்து அவன் அருள்வான்
ஈசன் திருவடி போற்றி
நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய - www.v4all.org 


Ankhamuthu Kumar's photo.

உன்னை தவிர உன் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர்.சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும்,நல்ல வேளை அவன் இறந்துவிட்டான் என்று நினைத்தபடியே முன்னோக்கி சென்றனர்.
சவப்பெட்டியினுள் எட்டி பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது.சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.
கண்ணாடி அருகில் ஒரு வாசகம் எழுதி இருந்தது…”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமேகாரணம்,நீங்கள் வளர வேண்டும் என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது ,உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.
உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது,உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது,நீ நினைத்தால் மட்டுமே உன் வாழ்வை மாற்ற முடியும்.
”The world is like a mirror”, it gives back to anyone the reflection of the thoughts in which one has strongly believed.
ஒவ்வொருவர் முன்னேற்றத்துக்கும் அவர்கள் தன்னம்பிக்கையே காரணம்…உன்னை தவிர உன் முன்னேற்றத்தை தடுக்க யாராலும் முடியாது..

urs
www.v4all.org 

Monday, June 15, 2015

சூர்ய நமஸ்காரம் பற்றிய முழுமையான பார்வையும் அதனால் நமக்கு கிடைக்கும் மிக பெரிய பலன்களும்

சூர்ய நமஸ்காரம் பற்றிய முழுமையான பார்வையும் அதனால் நமக்கு கிடைக்கும் மிக பெரிய பலன்களும்
----------------------------------------------------------------------------------
சூரியனை முழுமுதற்கடவுளாகப் போற்றி வணங்கும் வழக்கம் பண்டைய காலம் தொட்டே இருந்துவருகிறது. சூரியனின் ஆற்றலையும், பயனையும் நம் முன்னோர்கள் மட்டுமின்றி, அன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப உலகத்தில் மின்சக்தி பற்றாக்குறையை நீக்க சூரிய சக்தியை சரியான முறையில் பயன்படுத்த நமது அறிவியல் அறிஞர்கள் முன்வந்துள்ளனர். காலம் செல்லச் செல்ல சூரிய நமஸ்காரம் மட்டுமல்லாது அனைத்து சக்திகளும் சூரியனிடமிருந்து நேரடியாகப் பெறும் வாய்ப்பு உருவாகும்.
சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிச்ய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும். தொன்று தொட்டே பாரத மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம்.
உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.
அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.
சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன. தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.
சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விசயங்களை பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணியவேண்டும். தேனிர், காபி, கொக்கோ, புகையிலை, மதுபானம் முதலியவை அருந்த வேண்டாம், இப்படி அநேக விஷயங்கள் கவனித்து சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உடலுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதால், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சியின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும் வகையில் சுத்தமான காற்று இருக்கக்கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.
சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும். ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.
சூரிய நமஸ்காரம் (செய்முறை ).
------------------------------------------------------
முதல் நிலை
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உடல் அளவு நீளத்துணியினை தரையில்
விரித்துக் கொள்ளவும் .குறைந்த பட்ச நீளம் இரண்டடியும் அதிகபட்சம்
மூன்றடியும் குறைந்த பட்ச அகலம் ஒன்றரை அடி முதல் அதிகபட்சம்
இரண்டடியும் கொண்ட பருத்தியாலான துணியோ அல்லது தரையோடு
தரையாக பதிக்கப்பட்ட காட்டு மரப்பலகைகளையோ அல்லது கருங்கல்
பலகையையோ அல்லது அரச மர உதிர்ந்த சமமாக பரப்பட்ட இலைச்
சருகுகளின் மேலோ செய்யலாம்.
இவ்வாறான ஏதாகிலும்
ஒன்றில் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில்
அமர்ந்து குரு தியானம் , சிறிதளவு நாடி சுத்தி செய்த பின் மெதுவாக
எழுந்து . இரண்டு பாதங்களை உள்வசம் ஒட்டியவாறு நிமிர்ந்து நிற்க
வேண்டும் . முழங்கால்களை சேர்த்து வைக்க வேண்டும்
1. கால்களை ஒன்றாக வைத்தபடி நிற்கவும். கைகளை தலைக்கு மேல் தூக்கவும். கைகளை ஒன்றாக இணைத்து உங்களது மார்புக்கு நேராகக் கொண்டு வரவும். கைகளை வணங்குவது போல் கொண்டு வரவும். மீண்டும் கைகளை மேலாகத் தூக்கியபடி கீழே இறக்கவும்.
2. மூச்சை உள் இழுத்தபடி, கைகளை மேலேத் தூக்கவும். கைகள் உங்கள் காதுகளை உராய்ந்தபடி இருக்க வேண்டும். மெதுவாக கைகளை பின்புறமாக வளைக்கவும். கைகளுக்கு இணையாக தலையும் கவிழ வேண்டும்.
3. மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும். கைகளை கால்களுக்கு இணையாக தரையைத் தொடவும். தலை கால்களின் முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்க வேண்டும். இது பாத பஷ்சிமோடாசனம்.
4. மூச்சை உள் இழுத்தபடி உங்களது வலது காலை பின்னோக்கி வைக்கவும். அதே சமயம் இரண்டு கைகளையும் இடது காலுக்கு இணையாக ஊன்றவும். தலையை மேல் நோக்கியவாறு பார்க்கவும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்கவும்.
5. மூச்சை வெளியே விட்டபடி பின்னோக்கி செலுத்திய வலது காலுக்கு இணையாக இடது காலையும் எடுத்துச் செல்லவும். கைகளை நன்கு நீட்டி ஊன்றவும். இடுப்புப் பகுதி நன்று உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது வளைவு தூண் போன்று உங்கள் உடல் அமைப்பு இருக்க வேண்டும்.
6. மீண்டும் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை தரையில் படுக்க வைக்கவும். கால்கள், முட்டி, கைகள், மார்பு மற்றும் நெற்றி ஆகியவை தரையை தொட வேண்டும். இடுப்புப் பகுதி மட்டும் சற்று உயர்ந்து இருக்க வேண்டும். இப்போது மூச்சை வெளியே விடவும்.
7. மூச்சை உள்ளிழுத்தபடி தலையை பின்புறமாக நீட்டவும். உங்கள் முதுகை எவ்வளவு முடியும் அவ்வளவிற்கு பின் பக்கமாக வளைக்கவும். இதைத்தான் புஜங்காசனம் என்று அழைப்பர்.
8. மூச்சை வெளியே விட்டபடி, மெதுவாக கைகளை உயர்த்தவும். அதற்கேற்ப இடுப்பு மற்றும் தலையையும் உயர்த்தி மீண்டும் வளைவுத் தூண் அமைப்பை ஏற்படுத்தவும்.
9. மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தபடி, வலது காலை ஒரு அடிக்கு முன்னாடி முட்டியை மடக்கியபடி கொண்டு வந்து வைக்கவும். தலையை மேலாகத் தூக்கி கைகளை நேராக வைக்கவும்.
10. வெளியே மூச்சை விட்டபடி, வலது காலுக்கு இணையாக இடது காலையும் மடக்கியபடி கொண்டு வரவும். தலை முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும்.
11. மூச்சை உள்ளே இழுத்தபடி மெதுவாக கைகளை உயர்த்தவும். பின்புறமாக வளைந்து கைகளைப் பார்த்தபடி தலை இருக்க வேண்டும்.
12. மீண்டும் வணக்கம் செய்யும் நிலைக்கு வர வேண்டும்.பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுதான் சூரிய நமஸ்காரத்தின் முழுமையாகும். இதே முறையை அடுத்த காலுக்கு மாற்றி செய்யவும்.
எச்சரிக்கை.
சூரியனின் 12 திருப்பெயர்கள்.
--------------------------------------------------
சூரியனுக்கு 12 முக்கிய திருநாமங்கள் உண்டு. அவற்றின்
அடிப்படையாகவே சூரியநமஸ்காரம் 12 நிலையில் இருப்பதென
கூறப்படுகிறது.
சூரியன்
ரவி
பாஸ்கரன்
ஆதித்யன்
அருணண்
கர்ப்பன்
மருட்சயன்
அர்க்கன்
சரித்திரன்
மித்ரன்
சிவன்
பூசன்
சூரிய நமஸ்காரங்களில் கையாளப்படும் பன்னிரெண்டு நிலைக்கும்
மற்றும் நமஸ்காரங்களுக்கும்.
{ முதுகுப் புறத்தில் பிரச்சினை இருந்தாலோ, இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும்.


Monday, June 8, 2015

பெண்கள் வெறுக்கும் ஆண்களின் சில செயல்கள்

மது, புகையைத் தவிர்த்து பல விஷயங்கள் ஆண்களிடம் பிடிக்காது என்று முகம் சுளிக்கின்றனர் பெண்கள். இனி ஆண்களிடம் பெண்கள் அதிகம் வெறுக்கும் செயல்கள் பார்க்கலாம். 

• ஞாயிறு அன்று அலுவலகத்திற்கு மட்டும் அல்ல, குளிப்பதற்கும் விடுமுறை என்ற நடைமுறையை பின்பற்றி வாழ்ந்து வருபவர்கள் ஆண்கள். ஆண்களிடம் பிடிக்காத விஷயங்களில் இது தான் முதலும் முக்கியமானதுமாக பெண்கள் கூறுகின்றனர். 

• பெண்கள் 24 மணி நேரம் சீரியல் பார்த்தால் தவறில்லை. மேலும் 24 மணிநேரம் டிவி பார்ப்பதால் போர் அடிப்பது. ஆனால், ஆண்கள் கிரிக்கெட், புட்பால், ஐ.பி. எல் பார்த்தல் தங்களுக்கு பிடிக்காது என்கின்றனர். 

• பொதுவாகவே ஆண்களிடம் அதிகமாக வியர்வை நாற்றம் வீசும். கோடை காலத்தில் கேட்கவே வேண்டாம். இது பெண்களுக்குப் சுத்தமாக பிடிக்காது என்று முகம் சுளிக்கின்றனர். 

• குறட்டை விடும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. குறட்டை விடுவது தூக்கத்தைக் கெடுப்பதாகவும், எரிச்சல் அடைய வைப்பதாகவும் கூறுகின்றனர். 

• தன்னை தவிர மற்ற பெண்களை பார்த்து ஜொல் விடும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. 

வெற்றி-தோல்வி

வெற்றி-தோல்வி

நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே; தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும், அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.
உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
எந்தத் துறையையும் சார்ந்த, ஒவ்வொரு வெற்றியாளரும், சாதனையாளரும் இந்த வர்த்தைகளில் பொதிந்திருக்கும் மந்திரத்தை அறிந்திருப்பார்கள்: “வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு இடர்பாட்டிலும், மிகப் பெரிய அநுகூலத்திற்கான விதை ஒளிந்திருக்கிறது.”
– W. Clement Stone
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. – அடால்ஃப் ஹிட்லர்
துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.
– Albert Einstein
எல்லாவற்றையும் இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது, ஒன்றை மறக்காதீர்கள்.எதிர்காலம் என்ற ஒன்று உண்டு -கிளப்டைன்
இரவு எனும் காராக்கிரகம் நம்மைச் சூழ்ந்திடும்போதெல்லாம், காலைப் பகலவனின் அற்புத வெளிச்சம் நம்மை நெருங்கிவிட்டது என்பதே அர்த்தம்!’ – நேதாஜி
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய். – சுவாமி விவேகானந்தர்
வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றி பெற்றாய் என்றால் உன் செயல்பாடு சென்ற முறையை விட இம்முறை சிறப்பாக அமைந்துள்ளது என்று பொருள். – பான்னி ப்ளேயர் எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது – பிரவுனிங்
கீழே விழாமல் இருப்பதில் பெருமையில்லை. விழுந்த பொழுதெல்லாம் எழுந்திருப்பதே பெருமை! – ஹ்யூம்
துக்கத்தால் தற்கொலை செய்து கொள்பவன் தைரியசாலி என்றால், அந்தத் துக்கத்தைத் தாங்கிக் கொள்கிறவனோ பெரும் வீரன் – மாஸிங்கர்

பயம்

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவனால், சிறிய குட்டையைக் கூட கடக்க முடியாது – சாணக்கியன்
கடவுள் நம்பிக்கை உள்ளவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. உனக்குப் பயம் ஏற்பட்டால், அது கடவுள் மேல் உனக்கிருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது.

பார்வை

நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே.
உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு. சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர்.
– Mark Twain.
சராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே. நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்; நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்; நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது.
– Robert Allen.
நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும். நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது.

Yours Happily


Saturday, June 6, 2015

நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன்.

நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன்.
நிற்காத கடிகாரமாயிருப்போமா
காட்டுக்கு தவமிருக்க போய்விட்டான். அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. “”இது என்ன வாழ்க்கை! காலை முதல் மாலை வரை கண்மூடிக்கொண்டே இருப்பது!
இரவானாலும் தூங்குவது! அதிகாலையில் கொட்டும் பனியில் குளத்திற்குப் போய் நீராடுவது! பூ பறிப்பது! சுவாமியை வணங்குவது! போதாக்குறைக்கு தனிமை வேறு! பேச்சுத்துணைக்கு ஆளில்லையே! ஏன் இங்கு வந்தோம்! இது வேண்டாமென்று ஊருக்குத் திரும்பிப் போனால் “இவ்வளவுதானா உன் வைராக்கியம்?’ என ஊரே கேலி பேசுமே! என்ன செய்வது?” என யோசித்தபடியே உறங்கி விட்டான்.
அன்று கனவில் ஒரு தேவன் வந்தான்.
“”அன்பனே! நாளை முதல் இந்த தவத்தையெல்லாம் விட்டு விடு. பக்கத்து ஊருக்குப் போ. அங்கே உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. அங்கு வசிக்கும் பண்ணையாரின் நிலத்தில் வேலை செய். நிம்மதி உன்னைத் தேடி வரும்,” என்றான்.
இவனும் மறுநாள் பக்கத்து ஊருக்குப் போனான். பண்ணையாரும் வேலை கொடுத்தார்.
உழுதான், உரமிட்டான், நாற்று நட்டான், களையெடுத்தான், அறுவடைப் பணிக்குச் சென்றான். அந்த உழைப்பின் பலன் இரவில் நிம்மதியாகத் தூக்கம் வந்தது. கையில் போதுமான அளவு பணம்…சிறிது காலத்தில் அவனே நிலம் வாங்கினான். கடுமையாக உழைத்தான். துறவு வாழ்வை விட உழைத்து வாழும் வாழ்வே உயர்தரமானது என்பதைப் புரிந்து கொண்டான். அது மட்டுமல்ல! தன் நிலத்தில் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களது குடும்பமும் வாழ வழி செய்தான்.
வேலை செய்யும்போது மனம் பக்குவப்படுகிறது. பணமும் கிடைக்கிறது. உடலுக்கு வலிமையும், ஆத்மாவுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்தால் துருப்பிடிக்காது. அதுபோல், உழைத்துக்கொண்டே இருந்தால் தான் சலிப்பு ஏற்படாது.
கடிகாரத்தின் முள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால் தான் அது சரியான நேரத்தைக் காட்டும். நீங்களும் நிற்காத கடிகாரமாயிருங்கள்.

Friday, June 5, 2015

தோல்வி உங்களைத் துரத்தட்டும்..பரவாயில்லை. ஆனால் தோல்வியைதுரத்திக்கொண்டு நீங்கள் ஓடாதீர்கள்

சந்தோசம் எனும் சவாரி போவோம்…
சந்தோசத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்க மாட்டான். அதற்காக அவன் அலையப்போவதுமில்லை.
சந்தோசம், சந்தோசமாக இருக்கவேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் இருக்கிறது. கவலைப் படுவதற்கான காரணிகளைத்  தேடித்தேடி கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிற நீங்கள்தான் அங்கிருக்கும் சந்தோசத்திற்கான வெளியை மறைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.
கேவலம் டிபன் பாக்ஸில் இருக்கிற உப்புமாவிற்கு ..உங்கள் சந்தோசத்தைக் கெடுக்கும் வல்லமை இருக்குமென்றால் உங்களின் சந்தோஷ உணர்வு எவ்வளவு பலவீனமானதாக இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்.
ஏன் இப்படித் தேடித்தேடிக் கவலையை அனுபவிக்க நீங்கள் உங்கள் சக்தியை செலவிடுகிறீர்கள். காரணம் உங்கள் சந்தோசத்தை நீங்கள் தீர்மானிப்பதில்லை… அதுதான் நிதர்சனமான உண்மை.
சந்தோசத்தை உங்களுக்குள் வைத்திருங்கள்..அப்படி வைத்திருந்தால்  யாராலும் அதை தொந்தரவு செய்ய முடியாது. நீங்களும் சந்தோசத்தை நிறையப் பேருக்குக் கொடுக்கலாம்.
நம் அக்கறை சிரிக்கக் கூடாது என்பதில்இல்லை…உண்மையில் பார்த்தால் அதுஅழக்கூடாது என்கிற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது.
சிரிப்பு வந்தால் சிரியுங்கள். நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம். கொஞ்சமாகச் சிரித்து கொஞ்சமாக அழுவதை விட… நிறையச் சிரித்து நிறைய அழுங்களேன்
நாம் மகிழ்வோடு இருப்பதற்காக படைக்கப்பட்டவர்களா… இல்லை அழுது  கொண்டுதிரியட்டும் என்று சொல்லி படைக்கப்பட்டவர்களா? நிச்சயமாக அழுது புலம்புவதற்காக மட்டும் படைக்கப் பட்டிருக்க மாட்டோம்.
இங்கே சந்தோசங்கள் நிறைய இருக்கின்றன. அனுபவிக்கத் தான் ஆள் இல்லைஎன்கிறது ஒரு சீனப் பழமொழி.
நாளை உலகம் இல்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? அநேகமாய்.. நாளைக்குஉலகம் இருக்காதா ? அய்யய்யோ அப்படி உலகம் இல்லையானால் என்ன செய்வது என்று இப்போதே கவலைப்பட ஆரம்பித்துவிடுவீர்கள்.
நாளை குறித்த எல்லாக் கவலைகளுக்கும் பின்னால் இருப்பது.. தோல்வி குறித்த பயம்தான் ஜெயித்துக்கொண்டு இருக்கவேண்டுமானால் நீங்கள் வெற்றியை பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும்..
தோல்வியைப் பற்றியல்ல. தோற்காமல் இருக்க வேண்டுமே என்பதற்காக நீங்கள் ஜெயிக்கப் பார்த்தால், தோல்விதான் உங்களுக்குமிஞ்சும்.
எதையும் செய்யாமல் தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது அவனுடைய அதைரியமும்அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான்.
தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியக்கூடாதுஎன்று அவன் விரும்பினான். கட்டடத்தைச் சுற்றி சுற்றி ஓடி இயற்கையான மாரடைப்பை உண்டாக்கி மரணம் அடைய வேண்டும் என்று எண்ணினான்.
ஆகவே ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான். அதிகமாக ஓட ஓட அவனுடைய களைப்பும் அதிகமாயிற்று. களைப்பு மிகுதியாகவே களைப்பைத் தவிர வேறு எதையும் அவனால் உணர முடியிவில்லை. படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அவனால் எண்ண முடிந்தது. படுக்கையில் படுத்து உறங்கிப் போனான்.
பன்னிரண்டு மணி நேரம் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கழித்தான். எழுந்த போது புத்துணர்ச்சியுடன் இருந்தான். எந்தப் பிரச்சனையும் சந்திக்க முடியும் என்கிற ஆர்வம் தன்னுள் தோன்றி இருப்பதையும் உணர்ந்தான்.
வெற்றியை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு ஓடுங்கள்… அதிவேகமாக.
தோல்வி உங்களைத் துரத்தட்டும்..பரவாயில்லை. ஆனால் தோல்வியைதுரத்திக்கொண்டு நீங்கள் ஓடாதீர்கள்….www.v4all.org