ஒலியின் ஆற்றல்
காத்தல், அழித்தல் இரண்டையும் செய்யும் சக்தி எந்த ஆயுதங்களுக்கும் இல்லாத சக்தி ஒலிக்கு உண்டு. ரஷ்ய நாட்டு பால் பண்ணைகளில் இன்னிசை மூலம் பசு அதிகம் பால் சுரப்பதை நிரூபித்து இருக்கிறார்கள். பூப்பதற்கு அதிக காலம் பிடிக்கும் தாவரங்கள் சிலவகை ஒலிகளால் விரைவாக பூக்கின்றன என்று கண்டறிந்துள்ளார்கள். விதை முளைக்கும் சோதனை சாலைகளில் பாப் இசையை ஒரு பகுதியிலும் தூய ஹிந்துஸ்தானி இசையை இன்னொரு பகுதியிலும் ஒலிக்க செய்த பொழுது பாப் ம்யூஸிக் பாய்ந்த பகுதியில் சில விதைகள் முளைக்கவில்லை. சில தாறுமாறாக இருந்தன. மாறாக மறு பகுதியில் விதைகள் நல்ல அளவில் முளை விட்டிருந்தன. எலியை கொல்ல என்னெனவோ மருந்துகள் விற்கிறார்கள் அதை சாப்பிட்டால் எலி வெளியே வந்து சாகும் என்று விளம்பரங்களில் ரீல் விடுகிறார்கள். ஆனால் ஜெப்பானியர்கள் எலியை எப்படி கொல்கிறார்கள் தெரியுமா?
எலி வலைக்குள் மிக மோசமான ஒரு அபஸ்வர ஒலியை எழுப்புகிறார்கள். அதை கேக்க முடியாமல் எலி முட்டி மோதி செத்து போகிறது. ஒரு இரும்பு டேபிளை மண் தூசி படிந்த சிமெண்ட் தரையில் இழுத்தால் நமது உடலில் கூர்மையான ஏதோ ஒன்றை வைத்து கிழிப்பதை போன்ற ஒரு உணர்வு நமக்கு வரும். ரம்பம் வைத்து அறுக்கும் ஓசை கேட்கும் அனைவருக்குமே ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் தலை நகர் வாஷிங்டனில் Tacomanarrows Bridge 2800 அடி நீளம் உடையது. 7/11/1940 அன்று ஒரு பெரிய புயல் காற்று வீசி அது எழுப்பிய ஒலி அதிர்வலைகளால் அந்த பாலம் உடைந்து போனது.
The Resonance Between Vibrations Produced by The Wind and Those of the Structure itself brought down a Powerfull Bridge in 1940 என்று கூறும் Resonance பற்றிய கட்டுரை சன்றாகிறது. புயல் காற்றின் வேகத்தால் பாலம் உடையவில்லை. காற்றின் அதிர்வலையும் பாலத்தின் அதிர்வலையும் ஒருமித்த தன்மையில் இருந்ததே பாலம் உடைய காரணம் என ஒலி விஞ்ஞானம் சொல்கிறது. ஒலி உண்டாக்கும் அதிர்வலைகள் என்ன செய்ய முடியும் என்று புரிகிறதா?
மனிதனின் உடல் நலத்தையும், மன நலத்தையும் ஒலி பேன முடியும் என்பதே ஒலி விஞ்ஞானத்தின் முடிவு. நல்ல ஒலி மனிதனின் உடல் நலத்தை, மன நலத்தை பேணும். மோசமான ஒலி?
வெளிநாடுகளில் ஊளையிடுவதை போல் கத்தும் பாப், ராப் பாடல்கள் மிக பிரபலம். வெளிநாடுகளை விட இந்தியாவில் இன்று அது போன்ற இசைகளுக்கு மௌஸ் அதிகம். ஆனால் தொடர்ந்து அது போன்ற சுருதி சுத்தம் இல்லாமல் வெறும் இரைச்சலை இசை என்னும் பெயரில் நாம் கேட்டு கொண்டிருந்தால். அதனால் நமக்கு உடல் சம்பந்தப்பட்ட, மனம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் அதிகம் வர வாய்ப்பு உண்டு. மேலும் வெளிநாடுகளை சேர்ந்த பாப், ராப் பாடகர்கள் அனைவருக்குமே உடல், மனம் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு பெரிய பாதிப்பு இருப்பது சத்தியமான உண்மை. மைக்கல் ஜாக்சனுக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக இருந்த பல பிரச்சனைகள் உங்களுக்கே தெரியும்.
Music கில் உள்ள M என்பதன் அர்த்தம் மெலடி. அந்த மெலடி இல்லா இசை. Sic [ நோய் ] என்று சொல்கிறார் பிரபல பாடகர் SPB அவர்கள். இன்று வெளிநாடுகளில் பாப் இசையை விட. நமது கர்நாடக, ஹிந்துஸ்தானி இசைக்கு மௌஸ் அதகரித்து கொண்டு வருகிறது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று சும்மாவா சொன்னார்கள். பீத்தோவன் இசையில் மென்மை , மேன்மை இரண்டுமே இருந்தது. அன்று மேற்கத்திய இசை கூட நல்ல தரமான இசையாக தான் இருந்தது.
கொலைவெறி தனமான பாடல்கள் தான் இன்று இளவட்டங்கள் அனைவருக்கும் பிடிக்கிறது என்பது உண்மை. அதே சமயம். அது போன்ற கொலைவெறி தனமான பாடல்களை தொடர்ந்து நீங்கள் ரசித்தால் அதனால் உங்கள் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டுமே கெட வாய்ப்பு அதிகம். சுத்த ஹிந்துஸ்தானி இசை,, கர்நாடக இசை உங்களுக்கு கேட்க புரியாமல் இருக்கலாம். ஆனால் அது உங்களது உடல் வளம், மன வளம் இரண்டையுமே மேம்படுத்தும்.
ஆனந்த யாழை மீட்டுகிறாய் போல் ஆனந்தமான பாடல்கள் இன்று ஆயிரத்தில் ஒன்று தானே தமிழ் சினிமாவில் வருகிறது.
From -FB - Krishnaprasad
No comments:
Post a Comment