Wednesday, June 1, 2016

வாக்கு பலித சித்தி உண்டாகும்.

முதலில் "அம்" என்று செபம்
செய்து ,பிறகு "ஆம்"
என்றும் ,"இம்", "ஈம்" ,"உம்",
"ஊம்","எம்",
"ஏம்","ஐம்", "ஓம்", "ஔம்" என்றும்
பதினோரு வகையான
உயிர் பீசங்களை
தனித் தனியாக
செபம் செய்யவேண்டும் .
மனதிற்குள் செபித்தால்
தான் மந்திரத்திருக்கு பலன்
அதிகம் .
இவ்வாறு ஒவ்வொரு
மந்திரத்தையும் மனதிற்குள்
ஒரு லட்சம் முறை
கூறவேண்டும் என
கூறுகிறார்.
பிறகு மெய்
எழுத்துகளுடன் "ங்" பீஜத்தை
சேர்த்து கொண்டு
செபிக்கவேண்டும் எனவும்
கூறுகிறார். முதலில் "கங்"
என்றும்,
பிறகு தொடர்ச்சியாக
எல்லா மெய்
எழுத்துகளுடன் இந்த
பீஜத்தை சேர்த்து லட்சம்
முறை செபிக்க வேண்டும்
என கூறுகிறார்.
உதாரணமாக :
முதலில் "ஓம்" பிறகு "அம்"
இறுதியில் "நம:" என்று
உச்சரிக்கலாம் .
"ம்" பீஜத்தை சேர்த்து மந்திரம்
கூறும் முறை ..
"ஓம் அம் நம: "-
என்று உச்சரித்தால் சித்தி கிடைக்கும்.
"ங்"
பீஜத்தை சேர்த்து  மந்திரம்
கூறும் முறை ..
"ஓம் அங் நம: "
என்று உச்சரித்தால் முக்தி
கிடைக்கும்.
நமக்கு சித்திகள் வேண்டும்
என்றால் "ம்" பீஜத்தையும்
முக்தி வேண்டுமென்றால்
"ங்" பீஜத்தையும் சேர்த்து
உச்சரித்து பலன்களை
பெறலாம் என்று
கூறுகிறார்.
இவ்வாறு பீசங்களை
செபிக்கும்போது
மைவிழியாள் போகத்தை
நிறுத்த வேண்டும் என
கூறுகிறார் இவ்வாறு
செய்தால் அறுபத்து
நான்கு வகையான
சித்திகளும் நிச்சயம்
கிடைக்கும் என
கூறுகிறார்.
சில முக்கிய தமிழ்
மந்திரங்கள்
உங்களுக்காக....
ஓம் அம் நம: -சித்து
விளையாடும் தன்மை
கிடைக்கும்,மரணத்தை வெல்லலாம் .
ஓம் அங் நம: -முக்தி வழியான
ஞானம் கிடைக்கும்
ஓம் ஆம் நம:- நினைத்தை
வரவழைக்கும் ஆகர்ஷண
தொழில் சித்தியாகும்.
ஓம் இம் நம: -உடல் புஷ்டி
ஆகும்.
ஓம் ஈம் நம: -சரஸ்வதியின்
கடாட்சம் கிடைக்கும் .
ஓம் உம் நம: -சகல
தொழிலுக்கும்
பலமுண்டாகும்.
ஓம் ஊம் நம:-உச்சாடன
தொழில் சித்தியாகும்.
ஓம் எம் நம: சத்வ குணம்
உண்டாகும்.
ஓம் ஏம் நம:-சர்வமும்
வசியமாகும்.
ஓம் ஐம் நம:- ஆண்களை
வசியபடுத்தும்.
ஓம் ஓம் நம: வாக்கு பலித
சித்தி உண்டாகும்.
ஓம் ஔம் நம: - வாக்கில் ஒளி
உண்டாகும்.

No comments:

Post a Comment